Posts

Showing posts from January, 2022

’வீரமே வாகை சூடும்’ கதையை அழுதுகொண்டே எழுதினேன்: இயக்குநர் து.ப சரவணன் சிறப்புப் பேட்டி ‘வீரமே வாகை சூடும்’ கற்பனை கதைதான். ஆனால், உண்மைக்கு நெருக்கமான கதை. இப்படியெல்லாம்கூட வாழ்க்கையில் நடக்குமா என்று யோசித்தால், கண்டிப்பாக நம் சமூகத்தில் நடக்கும் என்றுதான் சொல்வேன்” படத்தின் ட்ரெய்லரைப் போலவே அதிரடியாக பேசுகிறார், இயக்குநர் து.ப சரவணன். விஷால் நடிப்பில் வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாகவிருக்கும் ‘வீரமே வாகை சூடும்’ அடி-உதை காட்சிகளால் மட்டுமல்ல, “ஒரு குற்றத்தை கண்டுபிடிக்கிறதைவிட, அதை எந்த கண்ணோட்டத்தோட பார்க்குறோம்ங்குறதுதான் ஒரு நல்ல போலீஸ்காரனோட முக்கியமான தகுதி”... ”எலிய துரத்துற பாம்பு ஆபத்தானதா? பாம்பு துரத்துற எலி ஆபத்தானதா? பாம்போட பசி ஒரே ஒரு எலி, எலியோட பசி ஒட்டுமொத்த வயல்” என ட்ரெய்லரிலேயே ’டெர்ரர்’ வசனங்களால் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளார் து.ப சரவணன். வெற்றி வாகை சூட இருக்கும் நிலையில், இயக்குநர் து.ப. சரவணனிடம் பேசினேன். 'வீரமே வாகை சூடும்’ ஆக்‌ஷன் படம் என்பதாலேயே இப்படியொரு தலைப்பா? “கதை சொல்லும்போதே ’இது ஹீரோ கதை இல்லை. சாமானியனின் கதை’ என்றுதான் விஷால் சாரிடம் சொன்னேன். கதையின் அடிநாதமே சாமானியர்களைப் பற்றியது. அதனால், முதலில் படத்திற்கு ‘சாமானியன்’ என்றே பெயர் வைத்தோம். ஆனால், அந்தத் தலைப்பை வேறொருவர் பதிவு செய்திருந்ததால், வைக்க முடியாமல் போனது. இப்படி எந்தத் தலைப்பை வைத்தாலும் ஏதாவது ஒரு பிரச்சனை வந்துகொண்டே இருந்தது. பாதி படப்பிடிப்பு முடிந்து ஃபர்ஸ்ட் லுக் வருவதற்கு முன்புவரை தலைப்பை முடிவாகவில்லை. நீதியின் பக்கம் நின்று யார் வெற்றி பெற்றாலும் உண்மை ஜெயிக்கும் என்போம் இல்லையா?. அப்படி, யோசிக்கும்போதுதான் ‘வீரமே வாகை சூடும்’தலைப்பு கடைசியில் மாட்டியது. எந்தத் தலைப்பும் கிடைக்காமல் போய்தான் இது கிடைத்தது. ஆனால், விஷால் சாருக்கும் ரொம்பப் பிடித்து விட்டது. ஒரு படத்தின் வெற்றியை தலைப்பே 20 சதவீதம் உறுதி செய்துவிடும். அப்படியான தலைப்பு இது”. பொதுவாவே விஷால் ஆக்‌ஷன் படத்துலதான் நடிப்பார். இது ஆக்‌ஷன் படமா இருந்தாலும் டிரெய்லரே வித்தியாசமா இருக்கே? ”நான் லீனியர் படமாகத்தான் ‘வீரமே வாகை சூடும்’ படத்தினை எடுத்துள்ளேன். விஷால் சாருக்கு திரைக்கதை ரொம்பவே பிடித்திருந்தது. தொடர்பற்ற மூன்று கதைகள் ஒரு இடத்தில் ஒன்றாக ஒரு சிக்கலில் இணைகிறது. அந்த சிக்கலை உடைத்து ஹீரோ எப்படி வெளியில் வருகிறார் என்பதுதான் கதை. நம் வாழ்வியல் முறை சின்னது. நமக்குள் இருக்கும் உறவுமுறைகள், காதல், அரசியல், வன்முறை இதைத்தாண்டிச் செல்ல முடியாத சூழல் எப்போதும் உள்ளது. தங்களுடன் ஒன்றுகிற மாதிரி கதையாக இருந்தால்தான் ரசிகர்கள் படத்துடன் ஒன்றிக்கொள்கிறார்கள். இந்தப் படத்திலும் கமர்ஷியல் இருக்கும். ஆனால், இது எளிய மனிதர்களின் கதை. ஆக்‌ஷன் கதையாக இருந்தாலும் கதைக்கு சம்பந்தப்பட்டுத்தான் இருக்கும்”. குறிப்பாக, வசனங்கள் கவனம் ஈர்த்திருக்கிறதே? ”வசனங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க நான்தான் எழுதினேன். நம் வாழ்வின் நிஜத்திலிருந்து எடுத்தது. ஸ்கிரிப்ட் முழுக்க எழுதிவிட்டு வசனங்களுடன்தான் விஷால் சாரிடம் கதையே சொன்னேன். இதுதான் ஒன்லைன் என்று கதை சொல்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஒரு சினிமாவுக்கு மிகப்பெரிய உந்து சக்தி வசனங்கள்தான். அதுதான் ரசிகர்களையும் ஈர்க்கும். நான் வசனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களின் மீது பற்றுள்ள ஆள். உதாரணமா, மணிரத்னம் சாரின் ’தளபதி’ உள்ளிட்ட, அவரின் எல்லா படங்களும் எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன். என் அடுத்தப் படங்களுக்கும் அப்படித்தான் எழுதுவேன். ”ஒரு குற்றவாளி எங்கருந்து உருவாகிறான்? நம்மை காப்பாத்துறதுக்கு ஒருத்தன் இருக்கான் என்று நினைக்கும்போதுதான்’ அந்த வசனத்திலிருந்துதான் கதையே எழுத ஆரம்பித்தேன். கடைசியில் பொன் பார்த்திபன் வசனதுக்கு கரெக்‌ஷன் பண்ணுறதுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணார்” படம் முழுக்க சிகப்பு பின்னணி வருகிறதே? இதன்,பின்னணி என்ன? “படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்னரே, ‘எனக்கு தயவு செஞ்சி கலர்ஃபுல்லா கொடுத்துடாதீங்க. படத்தோட நிறம் ரசிகர்களுடன் கனெக்ட் பண்ணனும். ஒரு ராவான படமா ஆடியன்ஸுக்கு ஃபீல் ஆகணும். படத்தின் வண்ணத்துக்கும் கதைக்கும் ரசிகர்களின் மனநிலைக்கும் ஒன்றாக இருக்கவேண்டும் என்று ஒளிப்பதிவாளரிடம் முன்னரே சொல்லிவிட்டேன். ’வீரமே வாகை சூடும்’ ஒரு கோபம் நிறைந்த படம். அதனால், சிகப்பு நிறத்தைக் கொண்டுவந்தோம்”. சில காட்சிகளில் விஷால் வெய்ட் போட்டமாதிரி தனித்து தெரிகிறாரே? “உண்மைதான். ஆனால், அதுக்குக் காரணம், விஷால் சார் இல்லை. கொரோனா ஊரடங்குதான். நடிகர்களின் ஒவ்வொரு நாளும் மிக முக்கியமானது. இந்த நாளிலிருந்து, இந்தநாள் வரை ஒரு படத்தை முடிக்கவேண்டும் என்று திட்டத்துடன் உடம்பைக் கட்டுக்குள் வைத்திருப்பார்கள். ஆனால், கொரோனாவால் எங்கள் படப்பிடிப்பு தள்ளிப் போனது. அதற்குள், விஷால் சார் ஏற்கனவே ஒப்பந்தம் ஆகியிருந்த ’லத்தி’ படத்திற்கு தேதிகள் ஒதுக்கியிருந்ததால், அதில் நடிக்கவேண்டிய சூழல் வந்துவிட்டது. அந்தப் படப்பிடிப்பு சூழலுக்கும் கதைக்காகவும் உடம்பு கொஞ்சம் ஏற்றியிருந்தார். அந்தப் படத்திற்கு அவர் ஒதுக்கியிருந்த தேதிகளை வீணாக்க விரும்பவில்லை. அப்படி வீணாக்கினால் பலரும் பாதிக்கப்படுவார்கள். அதனால், அந்தப் படத்தில் நடித்துவிட்டு ’வீரமே வாகை சூடும்’ பாடல் காட்சிக்கு வந்து வந்து நடித்துக்கொடுத்தார். இப்படி கால சூழலில் நடந்த விஷயம் அது. அதில்தான், சின்ன சேஞ்ச் ஓவர்”. விஷாலுடன் பணியாற்றிய அனுபவம்? ”விஷால் சாரோட எனர்ஜி ரொம்பப் பிடிக்கும். முதல்நாளே சண்டைக்காட்சிதான் ஷூட்டிங் பண்ணோம். ஃபைட்டிங் என்றால் ரிகர்சல் எல்லாம் பார்க்கமாட்டார். வந்து கைத்கட்டி நிற்பார் முடிச்சிட்டு போய்ட்டே இருப்பார். அவ்ளோ எனர்ஜி. ரொம்ப நேர்மையானவர். உண்மையாக இருப்பார். எல்லோருக்கும் உதவுவார். மனிதர்கள் என்றில்லை வாயில்லா ஜீவன்கள் மீதும் அன்பு கொண்டவர். கேரவனில் இருக்கும்போது நாய்யை பார்த்தால் உடனடியாக கேரவனிலிருந்து இறங்கி உணவு கொடுப்பார். இந்தக் கதையை எழுதும்போதே அழுதுகொண்டே எழுதினேன். படத்துல முக்கியமான எமோஷனல் காட்சி ஒன்று உள்ளது. க்ளைமேக்ஸுக்கு முந்தைய காட்சி அது. எழுதும்போதே எனக்கு அழுகை வந்துடுச்சி. சார்கிட்ட சொல்லும்போதே அவரும் அழுதார். இந்தக் கதைக்கு, அவர் ஓகே சொல்ல அந்தக் காட்சிதான் பெரிய காரணம். நடிக்கும்போதும் உண்மையாக அழுதே நடித்தார். அவர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த யூனிட்டுமே, அந்தக் காட்சிக்கு அழுதது. நடித்தப்பிறகு ’மூன்று நாள் அந்தக் காட்சியில் இருந்து என்னால் வெளியில் வரமுடியவில்லை’ என்று, அவர் சொன்னது எனக்குப் பெருமையான தருணம்”. யுவன் இசை குறித்து? “நான் யுவனின் வெறித்தனமான ஃபேன். அவரின் ’ராம்’, ’கற்றது தமிழ்’ எல்லாம் மனதுக்கு நெருக்கமானவை. தமிழ் சினிமா கடந்துவிட முடியாதவை. யுவன் சாருக்கும் விஷால் சாருக்கும் நெருக்கமான நட்பு உள்ளது. பள்ளிக் காலத்திலிருந்தே நண்பர்கள். விஷால் சார் யுவனை செண்டிமெண்ட்டும் பார்க்கிறார். ’இந்தக் கதைக்கு யுவன் பண்ணாதான் செம்மயா வரும்’ என்றுக்கூறி அனுப்பிவிட்டார் விஷால் சார். யுவன் நாங்க நினைச்சதைவிட பலமடங்கு கொண்டுப்போய்ட்டார். திரையில் பார்த்து பிரமிப்பீர்கள்”. படத்தில் சே குவேரா பின்னணியில் விஷால் வருகிறாரே? “சேகுவேராவை பிடிக்காமால் யாராவது இருப்பார்களா? அடக்குமுறை இல்லாத இடத்தில் புரட்சி வெடிக்கவேண்டிய அவசியம் கிடையாது. அடக்குமுறை எங்கு உள்ளதோ அங்கிருந்து ஒருவன் வெகுண்டெழுவான். அதுதான் நிஜம். அதனால், எனக்கு சேகுவேரா பின்னணி தேவைப்பட்டது. ’இங்கு வாழ்ந்தால் புத்தனுக்கே கோவம் வரும். நான் சாதாரண ஒரு மனுஷன். கோவப்படலைன்னா நம்மையும் கொன்னுடுவாங்க’ என்ற வசனமும் உள்ளது. இதற்கு காரணம், சேகுவேராதான். எல்லா புரட்சியாளர்களும் எளிய மனிதர்கள்தான். எல்லா புரட்சிகளும் எளியவர்களுக்காக உருவானது”. (இயக்குநர் து.ப சரவணன்) உங்களைப் பற்றி? ”என்னோட சொந்த ஊர் விருதாச்சலம். அப்பா பன்னீர் செல்வம் தீவிர திராவிட, மார்க்சிய கொள்கையாளர். முற்போக்காளர். நேர்மை, உண்மை என்று உழைக்கக்கூடியவர். என்னையும் அப்படியே வளர்த்துவிட்டார். மிசாவில் கைதான ரொட்டிக்கடை ராசுவுக்கு அப்பா நெருக்கமானவர். என்னுடைய வசனங்கள் அப்பாவிடம் இருந்துக்கூட வந்திருக்கலாம். பி.ஏ தமிழ் இலக்கியம் படித்துவிட்டு சினிமா ஆர்வத்தில் சென்னை வந்துவிட்டேன். சினிமா மேல, படிப்பை விட காதல் வந்ததுக்கு ‘தளபதி’ படமே காரணம். அதோட, ’உலக சினிமா’ தொடர் எழுதிய செழியனின் எழுத்துக்களும் சினிமா மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தியது. ‘குள்ளநரிக்கூட்டம்’ இயக்குநர் ஸ்ரீ பாலாஜி, ‘தகறாறு’, ‘வீரசிவாஜி’ இயக்குநர் கணேஷ் விநாயக்கிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்திருக்கிறேன். அதன்பின்னர்,‘எது தேவையோ அதுவே தர்மம்’ என்ற குறும்படத்தினை இயக்கினேன். பலருக்கும் அந்தக் குறும்படம் பிடித்தது. அதில் ,விஷால் சாரும் ஒருவர். அதனைப் பார்த்துவிட்டுதான் வாய்ப்பு கொடுத்தார். விஷால் சார் பெரிய ஹீரோ. அவருக்கு படம் பண்ணுவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. கதையை சொன்னவுடனே எல்லா வேலையும் தொடங்கிடுச்சி. இப்போ ரிலீஸ்ல வந்து நிக்குது”. காவல்துறை வசனங்களாக உள்ளதே? உங்களுக்குப் பிடித்த காவல்துறை அதிகாரி யார்? “எனக்கு சைலேந்திர பாபு சார் ரொம்பப் பிடிக்கும். அவரின் மிகப்பெரிய ஃபாலோயர் நான். காவல்துறையை மட்டும் ஆரோக்கியமாக வைத்திருக்கவேண்டும் என்று நினைக்கவில்லை. மக்களையும் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சி, உணவு முறை என்றும் சொல்லிப் பதிவிடுவார். அவர் மாதிரி பலப்பேரைப் பிடிக்கும்”. ’தேவி 2’, ‘அத்ரங்கி ரே’ டிம்பிள் ஹயாதியை எப்படி கொண்டு வந்தீர்கள்? ”ஒரு ஹீரோயின் மெட்டிரியல்ல நாங்கள் அவரை தேர்வு செய்யவில்லை. நல்லா வெள்ளையா மார்டன் ட்ரெஸ் போட்டு இருக்கவேண்டும் என்றும் விரும்பவில்லை. இந்தக் கதை எளியவர்களுடன் கனெக்ட் ஆகணும் என்று யோசித்தே முடிவு செய்தோம்”. உங்களுக்குப் பிடித்த இயக்குநர்கள்? ”ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் ஒவ்வொருவரைப் பிடிக்கும். சினிமாவுக்கு வரும்போது மணிரத்னம் சார் பெரிய இன்ஸ்பிரேஷன். அதன்பிறகு, தேடுதல், பார்வைகள் அதிகமாகுமில்லையா? எனக்கு வெற்றிமாறன் சார் பிடிக்கும். அவர் சினிமாக்கள் பெரிய பலம். நான் பார்த்த சிறந்த திரைக்கதைப் படம் ‘ஆடுகளம்’. அதன்பிறகு, பா.ரஞ்சித் சார் பிடிக்கும். அவருடைய ‘மெட்ராஸ்’ ஒரு இன்ஸ்பிரேஷன். கதை, இசை, ஒளிப்பதிவு என்று எனக்குள் ஒரு தாக்கத்தை உண்டு செய்த படம். மற்றபடி ராம் சார், பாலுமகேந்திரா சார் எல்லோருடைய படங்களும் பிடிக்கும். டிரெய்லரைப் பார்த்தால் பெண்களுக்கு நிகழும் பாலியல் வன்புணர்வு தொடர்பான கதைபோல் உள்ளதே? பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் குறித்து உங்கள் பார்வை என்ன? “சமூகம் தன்னை மாற்றிகொள்ளக்கூடிய காலக்கட்டத்தில்தான் இருக்கிறது. என்ன சட்டங்கள் உத்தரவுகள் இருந்தாலும் முதலில் தனிமனித ஒழுக்கம் முக்கியம். இதுதான், உடனடியாக சரிசெய்யவேண்டிய விஷயம் என்று நினைக்கிறேன். அதேசமயம், இது பாலியல் வன்புணர்வு சார்ந்த கதை இல்லை. அதை மையப்படுத்தியும் காட்டவில்லை. ஒரு சிறு விஷயமாக இருக்கும் அவ்வளவுதான்”. -வினி சர்பனா Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
‘வீரமே வாகை சூடும்’ கற்பனை கதைதான். ஆனால், உண்மைக்கு நெருக்கமான கதை. இப்படியெல்லாம்கூட வாழ்க்கையில் நடக்குமா என்று யோசித்தால், கண்டிப்பாக நம் சமூகத்தில் நடக்கும் என்றுதான் சொல்வேன்” படத்தின் ட்ரெய்லரைப் போலவே அதிரடியாக பேசுகிறார், இயக்குநர் து.ப சரவணன். விஷால் நடிப்பில் வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாகவிருக்கும் ‘வீரமே வாகை சூடும்’ அடி-உதை காட்சிகளால் மட்டுமல்ல, “ஒரு குற்றத்தை கண்டுபிடிக்கிறதைவிட, அதை எந்த கண்ணோட்டத்தோட பார்க்குறோம்ங்குறதுதான் ஒரு நல்ல போலீஸ்காரனோட முக்கியமான தகுதி”... ”எலிய துரத்துற பாம்பு ஆபத்தானதா? பாம்பு துரத்துற எலி ஆபத்தானதா? பாம்போட பசி ஒரே ஒரு எலி, எலியோட பசி ஒட்டுமொத்த வயல்” என ட்ரெய்லரிலேயே ’டெர்ரர்’ வசனங்களால் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளார் து.ப சரவணன். வெற்றி வாகை சூட இருக்கும் நிலையில், இயக்குநர் து.ப. சரவணனிடம் பேசினேன். 'வீரமே வாகை சூடும்’ ஆக்‌ஷன் படம் என்பதாலேயே இப்படியொரு தலைப்பா? “கதை சொல்லும்போதே ’இது ஹீரோ கதை இல்லை. சாமானியனின் கதை’ என்றுதான் விஷால் சாரிடம் சொன்னேன். கதையின் அடிநாதமே சாமானியர்களைப் பற்றியது. அதனால், முதலில் படத்திற்கு ...

ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படம் மார்ச் 25-ம் தேதி வெளியீடு- படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம், வரும் மார்ச் மாதம் 25-ம் தேதி வெளியீடுவதாக, படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் எஸ்.எஸ்.ராஜமௌலி பிரமாண்ட பொருட்செலவில் இயக்கியுள்ள படம் 'ஆர்.ஆர்.ஆர்'. இந்தப் படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது. பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாகுபலி இயக்குநரின் அடுத்தப் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதற்கிடையில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம், கடந்த ஜனவரி 7-ஆம் தேதி உலகம் முழுக்க திரையரங்குகளில் வெளியாகவிருந்த நிலையில், கொரோனா மூன்றாவது அலை பரவலால் படத்தின் வெளியீட்டை தள்ளிவைத்தது படக்குழு. மேலும், இரண்டு புதிய வெளியீட்டுத் தேதிகளையும் கடந்த 21-ம் தேதி படக்குழு அறிவித்தது. அதன்படி, “நாட்டில் தொற்றுநோய் நிலைமை சரியாகி தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கும் அனுமதி கிடைத்தால் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தினை வரும் மார்ச் 18-ம் தேதி வெளியிடுகிறோம். ஒருவேளை அப்போதும் வெளியிட முடியவில்லையென்றால் ஏப்ரல் 28-ம் தேதி வெளியிடுகிறோம்” என்று இந்நிலையில், வரும் மார்ச் 25-ம் தேதி உலகம் முழுவதும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக படக்குழு   அறிவித்துள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம், வரும் மார்ச் மாதம் 25-ம் தேதி வெளியீடுவதாக, படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் எஸ்.எஸ்.ராஜமௌலி பிரமாண்ட பொருட்செலவில் இயக்கியுள்ள படம் 'ஆர்.ஆர்.ஆர்'. இந்தப் படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது. பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாகுபலி இயக்குநரின் அடுத்தப் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதற்கிடையில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம், கடந்த ஜனவரி 7-ஆம் தேதி உலகம் முழுக்க திரையரங்குகளில் வெளியாகவிருந்த நிலையில், கொரோனா மூன்றாவது அலை பரவலால் படத்தின் வெளியீட்டை தள்ளிவைத்தது படக்குழு. மேலும், இரண்டு புதிய வெளியீட்டுத் தேதிகளையும் கடந்த 21-ம் தேதி படக்குழு அறிவித்தது. அதன்படி, “நாட்டில் தொற்றுநோய் நிலைமை சரியாகி தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கும் அனுமதி கிடைத்தால் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தினை வரும் மார்ச் 18-ம் தேதி வெளியிடுகிறோம். ஒருவேளை அப்போது...

வீரமே வாகை சூடும் முதல் பீஸ்ட் வரை: திரையரங்குகளை முற்றுகையிட வரிசை கட்டும் திரைப்படங்கள்! இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், பொங்கலை முன்னிட்டு ஒத்திவைக்கப்பட்ட தமிழ் படங்களை, அடுத்தடுத்து ரிலீஸ் செய்யும் முயற்சியில் தயாரிப்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் என்ற புதியவகை கொரோனா வைரஸ், இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் 2-ம் தேதி 2 பேருக்கு கண்டறியப்பட்டது. இதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், மறுபுறம் ஒமிக்ரான் மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதனால் தினசரி பாதிப்பு 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவாகி, 3-வது அலை உருவானது. தமிழகத்திலும் ஆயிரத்திற்கும் குறைவாக இருந்த கொரோனா தினசரி பாதிப்பு, திடீரென 30 ஆயிரத்தை தாண்டியது. கொரோனா பாதிப்பு உயர்வால், கடந்த ஜனவரி 7-ம் தேதி, இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநேர ஊரடங்கும் பிறப்பித்தது. எனினும், முதல் இரண்டு அலைகளில் திரையரங்குகள் மூடப்பட்டதுபோல் இல்லாமல், 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. இந்தக் கட்டுப்பாடுகளால் வசூல் பாதிக்கும் என்பதால், பொங்கலை முன்னிட்டு வெளியிடும் நிலையில் இருந்த, அஜித்தின் ‘வலிமை’ திரைப்படம் உள்ளிட்ட பெரும்பாலான படங்கள் தள்ளிவைக்கப்பட்டன. இந்நிலையில், தற்போது 3 வாரங்களுக்குப் பிறகு இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் தயாராகி வருகின்றனர். அந்தவகையில், விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டு, பின்னர் ஜனவரி 26-ம் தேதி குடியரசுத் தினவிழாவிற்கு வெளியிட படக்குழு தயாராகினர். ஆனால் அப்போதும் கொரோனா பரவலால், மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு தற்போது பிப்ரவரி 4-ம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இதேபோல், விஜய்சேதுபதியின் ‘கடைசி விவசாயி’, விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்.’ உள்ளிட்ட படங்கள் பிப்ரவரி 11-ம் தேதி வெளியாகிறது. சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் ‘டான்’ திரைப்படம் மார்ச் 25-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மிகவும் எதிர்பார்ப்புகள் நிறைந்த நடிகர் அஜித்தின் நடிப்பில், வினோத் இயக்கத்தில் பொங்கல் தினத்தில் ஒத்திவைக்கப்பட்ட ‘வலிமை’ திரைப்படம் பிப்ரவரி 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் நடிகர் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ மார்ச் 11 அல்லது மார்ச் 18-ல் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. எஸ்.எஸ். ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் மார்ச் 18 அல்லது 25-ல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகி வரும் மாஸ் திரைப்படமான ‘பீஸ்ட்’, யாஷின் ‘கே.ஜி.எஃப் 2’ஆகிய படங்கள் ஏப்ரல் 14 சித்திரை வருடப் பிறப்பை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. கார்த்தியின் விருமன் திரைப்படம் மே அல்லது ஜூனில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. மாஸ் பட்ஜெட் படங்கள் முதல் சிறு பட்ஜெட் படங்கள் வரை அடுத்தடுத்து வெளியாவதால் ரசிகர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், பொங்கலை முன்னிட்டு ஒத்திவைக்கப்பட்ட தமிழ் படங்களை, அடுத்தடுத்து ரிலீஸ் செய்யும் முயற்சியில் தயாரிப்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் என்ற புதியவகை கொரோனா வைரஸ், இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் 2-ம் தேதி 2 பேருக்கு கண்டறியப்பட்டது. இதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், மறுபுறம் ஒமிக்ரான் மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதனால் தினசரி பாதிப்பு 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவாகி, 3-வது அலை உருவானது. தமிழகத்திலும் ஆயிரத்திற்கும் குறைவாக இருந்த கொரோனா தினசரி பாதிப்பு, திடீரென 30 ஆயிரத்தை தாண்டியது. கொரோனா பாதிப்பு உயர்வால், கடந்த ஜனவரி 7-ம் தேதி, இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநேர ஊரடங்கும் பிறப்பித்தது. எனினும், முதல் இரண்டு அலைகளில் திரையரங்குகள் மூடப்பட்டதுபோல் இல்லாமல், 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. இந்தக் கட்டுப்பாடுகளால் வசூல் பாதிக்கும் என...

’காந்தி மாதிரி வாழுவியா காந்தி மகான்?’: கவனம் ஈர்க்கும் விக்ரமின் ‘மகான்’ டீசர் நடிகர் விக்ரமின் ‘மகான்’ டீசர் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் - துருவ் விக்ரம்  இணைந்து நடித்துள்ள ‘மகான்’ வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாவதையொட்டி தற்போது டீசரை வெளியிட்டுள்ளது படக்குழு. டீசரில் காந்தி பின்னணியோடு ”தமிழகத்தில் கள்ளுக்கடை ஒழிப்பு போராட்டுத்துல முக்கியமான பங்கு இருக்குடா உன் தாத்தனுக்கு. நம்ம பரம்பரையோட கனவை நிறைவேத்துவியாடா?” என்று ஆடுகளம் நரேன் ஃப்ளாஷ்பேக் காட்சியில் விக்ரமிடம் சத்தியம் கேட்கும்போதே, தற்கால அரசியலையும் ப்ளஸ் அக்கறையையும் சேர்த்து கார்த்திக் சுப்பராஜ் ‘மகான்’ படத்தினை உருவாக்கியுள்ளார் என்பதை உணர்த்துகிறது டீசர். அந்த சத்தியத்திற்கு கட்டுப்படாதவராய் வாழும் அடுத்தடுத்து வரும் விக்ரமின் காட்சிகள் மட்டுமல்ல, காஸ்டியூமும் ஸ்டைலிஷ் லுக்கில் கவனம் ஈர்த்து ரசிக்க வைக்கின்றன. ’காந்தி மாதிரி வாழுவியா காந்தி மகான்?’, ‘காந்தியின் கொள்கைகளை பின்பற்றி வாழுவதே நம் பிறப்பின் அர்த்தமாகும்’ போன்ற வசனங்கள், சமீபத்திய ‘ஒய் ஐ கில்டு காந்தி’ பட சர்ச்சை, தமிழகத்தில் கோவையில் நடந்த நேற்றைய நடப்புகள் போன்றவற்றை நினைவுக்குக் கொண்டுவந்து காந்தியை நம் மனதில் இன்னும் கம்பீரமாக அமர வைத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது. விக்ரமுடன் இப்படத்தில் துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிடோர் நடித்துள்ளனர்.  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
நடிகர் விக்ரமின் ‘மகான்’ டீசர் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் - துருவ் விக்ரம்  இணைந்து நடித்துள்ள ‘மகான்’ வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாவதையொட்டி தற்போது டீசரை வெளியிட்டுள்ளது படக்குழு. டீசரில் காந்தி பின்னணியோடு ”தமிழகத்தில் கள்ளுக்கடை ஒழிப்பு போராட்டுத்துல முக்கியமான பங்கு இருக்குடா உன் தாத்தனுக்கு. நம்ம பரம்பரையோட கனவை நிறைவேத்துவியாடா?” என்று ஆடுகளம் நரேன் ஃப்ளாஷ்பேக் காட்சியில் விக்ரமிடம் சத்தியம் கேட்கும்போதே, தற்கால அரசியலையும் ப்ளஸ் அக்கறையையும் சேர்த்து கார்த்திக் சுப்பராஜ் ‘மகான்’ படத்தினை உருவாக்கியுள்ளார் என்பதை உணர்த்துகிறது டீசர். அந்த சத்தியத்திற்கு கட்டுப்படாதவராய் வாழும் அடுத்தடுத்து வரும் விக்ரமின் காட்சிகள் மட்டுமல்ல, காஸ்டியூமும் ஸ்டைலிஷ் லுக்கில் கவனம் ஈர்த்து ரசிக்க வைக்கின்றன. ’காந்தி மாதிரி வாழுவியா காந்தி மகான்?’, ‘காந்தியின் கொள்கைகளை பின்பற்றி வாழுவதே நம் பிறப்பின் அர்த்தமாகும்’ போன்ற வசனங்கள், சமீபத்திய ‘ஒய் ஐ கில்டு காந்தி’ பட சர்ச்சை, தமிழகத்தில் கோவையில் நடந்த நேற்றைய நடப்புகள் போன்றவற்றை...

சிவகார்த்திகேயனுடன் இணையும் சாய் பல்லவி ’சிவகார்த்திகேயன் 21’ படத்தில் நடிகை சாய் பல்லவி இணைகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 25 ஆம் தேதி சிவகார்த்திகேயனின் ‘டான்’ தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது. இதனைத்தொடர்ந்து, தெலுங்கில் வெற்றிபெற்ற ‘ஜதிரத்னலு’ படத்தின் இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் பை-லிங்குவல் படம், நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மூலம் தயாரிக்கும் ‘சிவகார்த்திகேயன் 21’ உள்ளிட்டப் படங்களில் நடிக்கிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தில் நாயகியாக சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான ‘ஷ்யாம் சிங்கா ராய்’ படத்தில் சாய் பல்லவின் நடிப்பும் கவனம் ஈர்த்து பாராட்டுக்களைக் குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ’சிவகார்த்திகேயன் 21’ படத்தில் சாய் பல்லவி இணைவது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் தெரிவிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சாய் பல்லவி தமிழில் கடைசியாக ‘பாவகதைகள்’ ஆந்தாலஜி படத்தில் நடித்திருந்தார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
’சிவகார்த்திகேயன் 21’ படத்தில் நடிகை சாய் பல்லவி இணைகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 25 ஆம் தேதி சிவகார்த்திகேயனின் ‘டான்’ தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது. இதனைத்தொடர்ந்து, தெலுங்கில் வெற்றிபெற்ற ‘ஜதிரத்னலு’ படத்தின் இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் பை-லிங்குவல் படம், நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மூலம் தயாரிக்கும் ‘சிவகார்த்திகேயன் 21’ உள்ளிட்டப் படங்களில் நடிக்கிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தில் நாயகியாக சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான ‘ஷ்யாம் சிங்கா ராய்’ படத்தில் சாய் பல்லவின் நடிப்பும் கவனம் ஈர்த்து பாராட்டுக்களைக் குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ’சிவகார்த்திகேயன் 21’ படத்தில் சாய் பல்லவி இணைவது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் தெரிவிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சாய் பல்லவி தமிழில் கடைசியாக ‘பாவகதைகள்’ ஆந்தாலஜி படத்தில் நடித்திருந்தார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | ...

மார்ச்சில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் ‘டான்’ நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டான்’ வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு. சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டாக்டர்’ திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி வசூலைக் குவித்தது. அடுத்ததாக அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் ’டான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரிக்கிறார்.‘டாக்டர்’ படத்தில் நடித்த பிரியங்கா அருள் மோகன் மீண்டும் இப்படத்தில் ஹீரோயினாக இணைந்திருக்கிறார். இவர்களுடன் காளி வெங்கட்,‘குக் வித் கோமாளி’ சிவாங்கி, எஸ்.ஜே சூர்யா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இந்த நிலையில், ‘டான்’ வரும் மார்ச் மாதம் 25 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டான்’ வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு. சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டாக்டர்’ திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி வசூலைக் குவித்தது. அடுத்ததாக அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் ’டான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரிக்கிறார்.‘டாக்டர்’ படத்தில் நடித்த பிரியங்கா அருள் மோகன் மீண்டும் இப்படத்தில் ஹீரோயினாக இணைந்திருக்கிறார். இவர்களுடன் காளி வெங்கட்,‘குக் வித் கோமாளி’ சிவாங்கி, எஸ்.ஜே சூர்யா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இந்த நிலையில், ‘டான்’ வரும் மார்ச் மாதம் 25 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/uxcF6jes8 via IFTTT

‘புஷ்பா’ படத்தின் ‘ஸ்ரீ வள்ளி’ பாடலுக்கு தனது பாட்டியுடன் நடனமாடி தெறிக்கவிட்ட பாண்ட்யா இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்பட பாடலுக்கு தனது பாட்டியுடன் சேர்ந்து நடன அசைவுகளை செய்திருந்தார். அதை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். நான்கு நாட்களுக்கு முன்னர் ஷேர் செய்யப்பட்ட இந்த வீடியோவுக்கு 49 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்திருந்தனர்.  View this post on Instagram A post shared by Hardik Himanshu Pandya (@hardikpandya93)   ‘ஸ்ரீ வள்ளி’ பாடலுக்கு ஹர்திக் பாண்ட்யா நடனமாடி இருந்தார். அந்த பாடலில் வருவது போலவே டேன்ஸ் ஸ்டெப்களை அவர் போட்டிருந்தார்.  இந்த நிலையில் அந்த வீடியோவை பார்த்த நடிகர் அல்லு அர்ஜுன், “மிகவும் அழகாக உள்ளது. இதற்கு என் அன்பும், மரியாதையையும் தெரிவித்துக் கொள்கிறேன். மனதைக் கவரும் வகையில் இந்த வீடியோ உள்ளது” என தெரிவித்துள்ளார். இந்த படம் இந்திய அளவில் ஹிட் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்பட பாடலுக்கு தனது பாட்டியுடன் சேர்ந்து நடன அசைவுகளை செய்திருந்தார். அதை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். நான்கு நாட்களுக்கு முன்னர் ஷேர் செய்யப்பட்ட இந்த வீடியோவுக்கு 49 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்திருந்தனர்.  View this post on Instagram A post shared by Hardik Himanshu Pandya (@hardikpandya93)   ‘ஸ்ரீ வள்ளி’ பாடலுக்கு ஹர்திக் பாண்ட்யா நடனமாடி இருந்தார். அந்த பாடலில் வருவது போலவே டேன்ஸ் ஸ்டெப்களை அவர் போட்டிருந்தார்.  இந்த நிலையில் அந்த வீடியோவை பார்த்த நடிகர் அல்லு அர்ஜுன், “மிகவும் அழகாக உள்ளது. இதற்கு என் அன்பும், மரியாதையையும் தெரிவித்துக் கொள்கிறேன். மனதைக் கவரும் வகையில் இந்த வீடியோ உள்ளது” என தெரிவித்துள்ளார். இந்த படம் இந்திய அளவில் ஹிட் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Onl...

”காட்சிகள் எல்லாமே நிஜம்” : கவனம் ஈர்க்கும் சமுத்திரக்கனியின் ‘பப்ளிக்’ ஸ்னீக் பீக் சமுத்திரக்கனி மற்றும் காளி வெங்கட் நடித்துள்ள ‘பப்ளிக்’ ஸ்னீக் பீக் வெளியாகியுள்ளது. சமுத்திரக்கனி - காளி வெங்கட் இணைந்து நடித்துள்ள ‘பப்ளிக்’ படத்தினை அறிமுக இயக்குநர் ரா.பரமன் இயக்கியுள்ளார். இமான் இசையமைத்துள்ள, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி சினிமா ரசிகர்களை மட்டுமல்லாமல் அறிவுஜீவிகளையும் உற்றுநோக்க வைத்தது. படத்தின் நாயகர்களுக்குப் பதிலாக மக்களுக்காக உழைத்த சிங்காரவேலர், பாரதிதாசன், கக்கன், அயோத்திதாச பண்டிதர், ஜீவானந்தம், நெடுஞ்செழியன், இரட்டைமலை சீனிவாசன்,காயிதே மில்லத், அன்னி பெசண்ட் உள்ளிட்ட நிஜ நாயகர்களை போஸ்டரில் இடம்பெறச் செய்து முதல் படத்திலேயே ‘தெறம’ன் என்று சொல்ல வைத்துவிட்டார் இயக்குநர் ரா.பரமன். கே.கே.ஆர் சினிமாஸ் தயாரித்துள்ள 'பப்ளிக்’ ஸ்னீக் பீக் தற்போது வெளியாகியுள்ளது. ஆரம்பத்திலேயே, ”இந்தப் படத்துல வர்றக் காட்சிகள் சம்பவங்கள் முழுக்க முழுக்க கற்பனையா எடுக்கப்பட்டது. யார் மனதையும் புண்படுத்தணும்ங்கிற நோக்கம் இல்லை” என்று ஒலிக்கும் காளி வெங்கட்டின் குரல், அவர் பேசுவதை மறுத்து “இருங்க... இருங்கண்ணே. ஏன் அவசரம்? இந்தப் படத்துல வர்ற காட்சிகள் சம்பவங்கள் எல்லாமே நிஜம். இங்க நடந்ததைத்தான் சொல்லிருக்கோம். யார் மனசாவது புண்பட்டா நாங்க பொறுப்பு கிடையாது” என்று வரும் அழுத்தமான வசனப்  பின்னணியும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இப்போதே நமக்குள் கடத்திவிடுகிறது. அதற்கடுத்தாக, பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து நையாண்டியுடன் வரும் போராட்டக் காட்சிகளும் கச்சா எண்ணெய் விலைக் குறைந்தாலும் விலையை மட்டும் ஏற்றிக்கொண்டே இருக்கும் அரசுகளை பெ‘ட்ரோல்’ செய்து கவனத்தை ஈர்த்து விடுகின்றன. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
சமுத்திரக்கனி மற்றும் காளி வெங்கட் நடித்துள்ள ‘பப்ளிக்’ ஸ்னீக் பீக் வெளியாகியுள்ளது. சமுத்திரக்கனி - காளி வெங்கட் இணைந்து நடித்துள்ள ‘பப்ளிக்’ படத்தினை அறிமுக இயக்குநர் ரா.பரமன் இயக்கியுள்ளார். இமான் இசையமைத்துள்ள, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி சினிமா ரசிகர்களை மட்டுமல்லாமல் அறிவுஜீவிகளையும் உற்றுநோக்க வைத்தது. படத்தின் நாயகர்களுக்குப் பதிலாக மக்களுக்காக உழைத்த சிங்காரவேலர், பாரதிதாசன், கக்கன், அயோத்திதாச பண்டிதர், ஜீவானந்தம், நெடுஞ்செழியன், இரட்டைமலை சீனிவாசன்,காயிதே மில்லத், அன்னி பெசண்ட் உள்ளிட்ட நிஜ நாயகர்களை போஸ்டரில் இடம்பெறச் செய்து முதல் படத்திலேயே ‘தெறம’ன் என்று சொல்ல வைத்துவிட்டார் இயக்குநர் ரா.பரமன். கே.கே.ஆர் சினிமாஸ் தயாரித்துள்ள 'பப்ளிக்’ ஸ்னீக் பீக் தற்போது வெளியாகியுள்ளது. ஆரம்பத்திலேயே, ”இந்தப் படத்துல வர்றக் காட்சிகள் சம்பவங்கள் முழுக்க முழுக்க கற்பனையா எடுக்கப்பட்டது. யார் மனதையும் புண்படுத்தணும்ங்கிற நோக்கம் இல்லை” என்று ஒலிக்கும் காளி வெங்கட்டின் குரல், அவர் பேசுவதை மறுத்து “இருங்க... இருங்கண்ணே. ஏன் அவசரம்? இந்தப் படத்துல வர்ற காட்ச...

’வஞ்சம் தீர்த்தாயடா’ படத்திற்கு ரியாலிட்டி ஷோ மூலம் நாயகர்களை தேர்வு செய்யும் சுசி கணேசன் ’வஞ்சம் தீர்த்தாயடா' திரைப்படத்திற்கு ரியாலிட்டி ஷோ மூலம் நாயகர்களை தேர்வு செய்யவிருப்பதாக இயக்குனர் சுசி கணேசன் கூறியுள்ளார். இந்தியில் ‘தி ஹே ஹிரே’ படத்தை இயக்கி முடித்துள்ள சுசி கணேசன் , தமிழில் அடுத்ததாக ‘வஞ்சம் தீர்த்தாயடா’ படத்தினை இயக்குவதாக அறிவித்திருக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் இயக்குனர் சுசி கணேசன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய சுசிகணேசன், ”‘வஞ்சம் தீர்த்தாயடா’ படத்தில் புதுமுகங்களை நடிக்க வைக்க இருக்கிறேன். அதற்கு நடிப்பில் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் 20 வயது முதல் 40 வயது உள்ளவர்கள் தங்களுடைய வீடியோக்களை V4MaxTV.com என்ற இணையதளத்தில் பதிவிடவேண்டும். நடிப்பு ஆர்வம் உள்ளவர்கள் தங்களுக்கு பிடித்த திரைப்படத்தில் உள்ள காட்சிகளை இரண்டு நிமிடத்தில் படமாக்கி அதை பதிவேற்றம் செய்யவேண்டும். அதில், சிறப்பாக நடித்தவர்களை தேர்வு செய்து ’வஞ்சம் தீர்த்தாயடா’ படத்தில் நாயகர்களாக நடிக்க வைக்க இருக்கிறேன். சினிமாவில் ஹீரோக்களுக்கு பஞ்சம் உள்ளது. தற்போது சினிமாவில் ஒரே சூப்பர் ஸ்டார் தான். வருங்காலத்திலும் ஏராளமான சூப்பர் ஸ்டார்கள் வரவேண்டும். எனவேதான், புதுமுகங்களை தேடி நடிக்க வைக்கிறேன். மேலும், இந்தத் திரைப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா உடன் பணியாற்றுவது எனக்குக் கிடைத்த பெருமை” என்று பெருமையுடன் கூறினார். அதனையடுத்து, அவர், ‘வஞ்சம் தீர்த்தாயடா’ படத்தை தொடர்ந்து வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க திட்டமிட்டிருப்பதாகவும், ஆனால், ’அது திரைப்படமாகவோ அல்லது வெப் சீரிஸ் ஆகவோ உருவாக்கப்படலாம்’ எனவும் கூறினார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
’வஞ்சம் தீர்த்தாயடா' திரைப்படத்திற்கு ரியாலிட்டி ஷோ மூலம் நாயகர்களை தேர்வு செய்யவிருப்பதாக இயக்குனர் சுசி கணேசன் கூறியுள்ளார். இந்தியில் ‘தி ஹே ஹிரே’ படத்தை இயக்கி முடித்துள்ள சுசி கணேசன் , தமிழில் அடுத்ததாக ‘வஞ்சம் தீர்த்தாயடா’ படத்தினை இயக்குவதாக அறிவித்திருக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் இயக்குனர் சுசி கணேசன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய சுசிகணேசன், ”‘வஞ்சம் தீர்த்தாயடா’ படத்தில் புதுமுகங்களை நடிக்க வைக்க இருக்கிறேன். அதற்கு நடிப்பில் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் 20 வயது முதல் 40 வயது உள்ளவர்கள் தங்களுடைய வீடியோக்களை V4MaxTV.com என்ற இணையதளத்தில் பதிவிடவேண்டும். நடிப்பு ஆர்வம் உள்ளவர்கள் தங்களுக்கு பிடித்த திரைப்படத்தில் உள்ள காட்சிகளை இரண்டு நிமிடத்தில் படமாக்கி அதை பதிவேற்றம் செய்யவேண்டும். அதில், சிறப்பாக நடித்தவர்களை தேர்வு செய்து ’வஞ்சம் தீர்த்தாயடா’ படத்தில் நாயகர்களாக நடிக்க வைக்க இருக்கிறேன். சினிமாவில் ஹீரோக்களுக்கு பஞ்சம் உள்ளது. தற்போது சினிமாவில் ஒரே ...

”புஷ்பான்னா ஃபளவர்னு நினைச்சீங்களா? ஃபயரு”: மகளுடன் இன்ஸ்டாவை தெறிக்கவிடும் டேவிட் வார்னர் தனது மகளுடன் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் ‘புஷ்பா’ படத்தின் டயலாக்கை டப்ஸ்மாஷ் செய்து வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி வெளியாகி வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. அல்லு அர்ஜுனுடன் ஃபகத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான ‘புஷ்பா’ உலகம் முழுக்க 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. குறிப்பாக, ‘புஷ்பா’ மூலம் பாலிவுட்டில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ரசிகர்கள் அதிகரித்துள்ளார்கள். இதனாலேயே, ‘அலா வைகுந்தபுரம்லோ’ படத்தினை இந்தியில் டப்பிங் செய்து சமீபத்தில் வெளியிட திட்டமிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ‘புஷ்பா’ பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்ததால் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இன்ஸ்டா ரீல்ஸிலும் டப்ஸ்மாஷ் செய்தும் வீடியோக்கள் செய்து வெளியிட்டு வருகிறார்கள். சமீபத்தில், ஹர்திக் பாண்டியா ‘ஸ்ரீவள்ளி’ பாடலுக்கு தனது பாட்டியுடன் நடனமாடியிருந்தது செம்ம வைரல் ஆனது. View this post on Instagram A post shared by David Warner (@davidwarner31) அதேபோல, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரும் சமீபத்தில் அல்லு அர்ஜுன் புஷ்பா கெட்டப்பில் வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவும் வைரலான நிலையில், தற்போது மீண்டும் அவரது மகளுடன் ‘புஷ்பா’ ஃபேமஸ் டயலாக்கான ‘புஷ்பான்னா ஃப்ளவர்னு நினைச்சீங்களா? ஃபயரு” என்று ஆக்‌ஷனுடன் பேசும் டப்ஸ்மாஷ் வீடியோவை மகளுடன் செய்து வெளியிட்டிருக்கிறார். அதற்கு, அல்லு அர்ஜுனும் ‘ஃபயர்’ சிம்பளை கமெண்ட்டாகப் போட்டு தெறிக்கவிட்டிருக்கிறார். இந்த வீடியோவுக்கு 5 லட்சம் பேருக்குமேல் லைக்குகளைக் குவித்துள்ளார்கள். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
தனது மகளுடன் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் ‘புஷ்பா’ படத்தின் டயலாக்கை டப்ஸ்மாஷ் செய்து வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி வெளியாகி வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. அல்லு அர்ஜுனுடன் ஃபகத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான ‘புஷ்பா’ உலகம் முழுக்க 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. குறிப்பாக, ‘புஷ்பா’ மூலம் பாலிவுட்டில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ரசிகர்கள் அதிகரித்துள்ளார்கள். இதனாலேயே, ‘அலா வைகுந்தபுரம்லோ’ படத்தினை இந்தியில் டப்பிங் செய்து சமீபத்தில் வெளியிட திட்டமிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ‘புஷ்பா’ பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்ததால் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இன்ஸ்டா ரீல்ஸிலும் டப்ஸ்மாஷ் செய்தும் வீடியோக்கள் செய்து வெளியிட்டு வருகிறார்கள். சமீபத்தில், ஹர்திக் பாண்டியா ‘ஸ்ரீவள்ளி’ பாடலுக்கு தனது பாட்டியுடன் நடனமாடியிருந்தது செம்ம வைர...

’நாச்சி’ ஆக கவனம் ஈர்க்கும் சிம்ரன்: ‘மகான்’ கேரக்டர் போஸ்டர் வெளியீடு விக்ரமின் ‘மகான்’ படத்தின் சிம்ரன் கதாபாத்திரப் போஸ்டர் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் - துருவ் விக்ரம் 'மகான்' படத்தில் இணைந்து நடித்து முடித்துள்ளனர். சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ‘மகான்’ வரும் பிப்ரவரி 10 ஆம் வெளியாகவுள்ள நிலையில், கதாபாத்திரங்களின் போஸ்டர்களை வெளியிட்டு வருகிறது படக்குழு. நேற்று பாபி சிம்ஹாவின் போஸ்டர் வெளியான நிலையில், விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் சிம்ரன் கதாபாத்திரப் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. நாச்சியாக நடிக்கும் சிம்ரன் வித்தியாசமான தோற்றத்தில் கவனம் ஈர்க்கிறார். ‘பிதாமகன்’ படத்திற்குப் பிறகு விக்ரமும் சிம்ரனும் இணைந்து நடிக்கிறார்கள். விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ படத்திலும் சிம்ரன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முனீஸ்காந்த் ஞானமாகவும், சனந்த் ராக்கியாகவும் நடிக்கிறார்கள். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
விக்ரமின் ‘மகான்’ படத்தின் சிம்ரன் கதாபாத்திரப் போஸ்டர் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் - துருவ் விக்ரம் 'மகான்' படத்தில் இணைந்து நடித்து முடித்துள்ளனர். சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ‘மகான்’ வரும் பிப்ரவரி 10 ஆம் வெளியாகவுள்ள நிலையில், கதாபாத்திரங்களின் போஸ்டர்களை வெளியிட்டு வருகிறது படக்குழு. நேற்று பாபி சிம்ஹாவின் போஸ்டர் வெளியான நிலையில், விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் சிம்ரன் கதாபாத்திரப் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. நாச்சியாக நடிக்கும் சிம்ரன் வித்தியாசமான தோற்றத்தில் கவனம் ஈர்க்கிறார். ‘பிதாமகன்’ படத்திற்குப் பிறகு விக்ரமும் சிம்ரனும் இணைந்து நடிக்கிறார்கள். விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ படத்திலும் சிம்ரன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முனீஸ்காந்த் ஞானமாகவும், சனந்த் ராக்கியாகவும் நடிக்கிறார்கள். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Onl...

'அம்மா.. அடுத்த பிறவியிலும்..!' - தாயின் பிறந்த நாளுக்கு சிரஞ்சீவியின் உருக்கமான வாழ்த்து தனது தாயின் பிறந்த நாளுக்கு நடிகர் சிரஞ்சீவி தெரிவித்த வாழ்த்து, சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் சிரஞ்சீவி தன்னை தனிமைபடுத்திக்கொண்டுள்ளார். இந்நிலையில் தனது தாயின் பிறந்த நாளையொட்டி, அழகான வாழ்த்தையும், புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். 'குவாரன்டையினில் இருப்பதால் உங்களை மிஸ் செய்கிறேன் அம்மா' என உருக்குமாக பதிவிட்டுள்ளார். மேலும், தனது மனைவி மற்றும் தாயுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக பதிவிட்டுள்ள சிரஞ்சீவி, ''பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா!. நான் குவாரன்டைனில் இருப்பதால் உங்களிடம் நேரடியாக என்னால் ஆசீர்வாதம் வாங்க முடியவில்லை. அதனால் என்னுடைய வாழ்த்துகளை இங்கே பகிர்ந்துகொள்கிறேன். எனது இந்த பிறவியில் மட்டுமல்லாமல், அடுத்த பிறவியிலும் உங்கள் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும் என நான் இறைவனிடம் கேட்டுக்கொள்கிறேன். அன்புடன் உங்கள் சங்கர் பாபு'' என பதிவிட்டுள்ளார். ஒவ்வொரு வருடமும், பவன் கல்யாண், நாக பாபு உள்ளிட்ட ஒட்டுமொத்த குடும்பமும் சிரஞ்சீவி அம்மாவின் பிறந்தநாளைக் கொண்டாடுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு சிரஞ்சீவி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், கொண்டாட்டங்கள் நடைபெறுமா இல்லையா என்பது இன்னும் தெரியவில்லை. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
தனது தாயின் பிறந்த நாளுக்கு நடிகர் சிரஞ்சீவி தெரிவித்த வாழ்த்து, சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் சிரஞ்சீவி தன்னை தனிமைபடுத்திக்கொண்டுள்ளார். இந்நிலையில் தனது தாயின் பிறந்த நாளையொட்டி, அழகான வாழ்த்தையும், புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். 'குவாரன்டையினில் இருப்பதால் உங்களை மிஸ் செய்கிறேன் அம்மா' என உருக்குமாக பதிவிட்டுள்ளார். மேலும், தனது மனைவி மற்றும் தாயுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக பதிவிட்டுள்ள சிரஞ்சீவி, ''பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா!. நான் குவாரன்டைனில் இருப்பதால் உங்களிடம் நேரடியாக என்னால் ஆசீர்வாதம் வாங்க முடியவில்லை. அதனால் என்னுடைய வாழ்த்துகளை இங்கே பகிர்ந்துகொள்கிறேன். எனது இந்த பிறவியில் மட்டுமல்லாமல், அடுத்த பிறவியிலும் உங்கள் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும் என நான் இறைவனிடம் கேட்டுக்கொள்கிறேன். அன்புடன் உங்கள் சங்கர் பாபு'' என பதிவிட்டுள்ளார். ஒவ்வொரு வருடமும், பவன் கல்யாண், நாக பாபு உள்ளிட்ட ஒட்டுமொத்த குடும்பமும் சிரஞ்சீவி அம்மாவின் பிறந்...

பிப்ரவரி 7-ல் துவங்கும் சிம்புவின் ’வெந்து தணிந்தது காடு’ இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சிம்பு - கெளதம் மேனனின் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி துவங்கவுள்ளது. 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' படங்களுக்குப் பிறகு சிம்பு - கெளதம் மேனன் கூட்டணி 'வெந்து தணிந்தது காடு' படத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். சிம்புவின் 47-வது படமாக உருவாகும் இப்படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதை எழுதியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தாமரை பாடல்கள் எழுதுகிறார். ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளியான நிலையில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி மும்பையில் துவங்குகிறது. ஏற்கனவே, இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. அதன் தொடர்ச்சியாக மீண்டும் 15 நாட்கள் நடைபெறவுள்ளது. வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி சிம்புவின் பிறந்தநாளையொட்டி முதல் பாடலை வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
சிம்பு - கெளதம் மேனனின் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி துவங்கவுள்ளது. 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' படங்களுக்குப் பிறகு சிம்பு - கெளதம் மேனன் கூட்டணி 'வெந்து தணிந்தது காடு' படத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். சிம்புவின் 47-வது படமாக உருவாகும் இப்படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதை எழுதியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தாமரை பாடல்கள் எழுதுகிறார். ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளியான நிலையில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி மும்பையில் துவங்குகிறது. ஏற்கனவே, இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. அதன் தொடர்ச்சியாக மீண்டும் 15 நாட்கள் நடைபெறவுள்ளது. வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி சிம்புவின் பிறந்தநாளையொட்டி முதல் பாடலை வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https:/...

வித்தியாசமாக வரவேற்ற மகள் - அல்லு அர்ஜூனின் நெகிழ்ச்சியான பதிவு 16 நாட்கள் கழித்து வீடு திரும்பும்போது, மகள் அளித்த வரவேற்பு குறித்த புகைப்படத்தை பகிர்ந்து, நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் அல்லு அர்ஜூன். தென்னிந்திய சூப்பர் ஸ்டாரான அல்லு அர்ஜூன் நடித்து கடந்த 17-ம் தேதி வெளியான திரைப்படம் ‘புஷ்பா’. இந்தப் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்தியாவில் மட்டுமல்ல, குறிப்பாக வட இந்தியாவில் மாபெரும் வரவேற்பு பெற்றது. முக்கியமாக இந்தப் படத்தில் ஸ்ரீவள்ளி பாடலுக்கு அல்லு அர்ஜூனின் வித்தியாசமான நடன அசைவுகளை, ரெய்னா, டேவிட் வார்னர், பிராவோ, நஸ்முல் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் இமிடேட் செய்து தங்களது சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். வித்தியாசமான கதாபாத்திரத்தால் வட இந்தியாவில் அல்லு அர்ஜூனுக்கு தனி மார்க்கெட் உருவாகியுள்ளது. இதனால், ‘புஷ்பா’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள், பிரபலங்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்பதால், அதற்கான பணிகளில் இயக்குநர் சுகுமார் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், துபாய் சென்றுவிட்டு 16 நாட்களுக்குப் பின்னர் அல்லு அர்ஜூன் வீடு திரும்பியுள்ளார். அவருக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் வகையில், அவரது மகள் ஆர்கா, வீட்டுத் தரையில் இலைகள் மற்றும் பூக்களால் ‘வெல்கம் நானா’ என்று எழுதப்பட்ட வாசகத்துடன் வரவேற்றுள்ளார். இதனைக் கண்டு நெகிழ்ந்த அல்லு அர்ஜூன், இதனை புகைப்படமாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘16 நாட்கள் கழித்து இனிமையான வரவேற்பு’ என்று பதிவிட்டு வெளியிட்டுள்ளார். எப்போதுமே மகள் மற்றும் தந்தைக்கான பாசம் என்பது புரிந்துகொள்ள முடியாத ஒன்று. அந்தவகையில், அல்லு அர்ஜூன் மற்றும் அவரது மகளின் அன்பைக் கண்டு ரசிகர்கள் நெகிழ்ந்து போயுள்ளனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
16 நாட்கள் கழித்து வீடு திரும்பும்போது, மகள் அளித்த வரவேற்பு குறித்த புகைப்படத்தை பகிர்ந்து, நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் அல்லு அர்ஜூன். தென்னிந்திய சூப்பர் ஸ்டாரான அல்லு அர்ஜூன் நடித்து கடந்த 17-ம் தேதி வெளியான திரைப்படம் ‘புஷ்பா’. இந்தப் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்தியாவில் மட்டுமல்ல, குறிப்பாக வட இந்தியாவில் மாபெரும் வரவேற்பு பெற்றது. முக்கியமாக இந்தப் படத்தில் ஸ்ரீவள்ளி பாடலுக்கு அல்லு அர்ஜூனின் வித்தியாசமான நடன அசைவுகளை, ரெய்னா, டேவிட் வார்னர், பிராவோ, நஸ்முல் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் இமிடேட் செய்து தங்களது சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். வித்தியாசமான கதாபாத்திரத்தால் வட இந்தியாவில் அல்லு அர்ஜூனுக்கு தனி மார்க்கெட் உருவாகியுள்ளது. இதனால், ‘புஷ்பா’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள், பிரபலங்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்பதால், அதற்கான பணிகளில் இயக்குநர் சுகுமார் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், துபாய் சென்றுவ...

என்னை ஆன்டி இந்து என்கிறார்கள்- ‘ஷ்யாம் சிங்கா ராய்’ இயக்குநர் ராகுல் சங்க்ரித்யன் பேட்டி ”‘ஷ்யாம் சிங்கா ராய்’ தெலுங்கில் கமர்ஷியல் ஹிட் அடிக்கும் என்பது தெரியும். ஆனால், தமிழகத்தில் இந்தளவுக்கு படத்தை கொண்டாடுவாங்கன்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கல. தமிழ் மக்கள் பாராட்டுறது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாவும் பிரமிப்பாவும் இருக்கு. தியேட்டர்ல ரிலீஸானதைவிட ஓடிடியில் வெளியான பிறகு படத்தை இன்னும் அதிகம் பேர் பாராட்டுகிறார்கள்” என்று உற்சாகப் பூரிப்புடன் பேசுகிறார், ’ஷ்யாம் சிங்கா ராய்’ படத்தின் இயக்குநர் ராகுல் சங்க்ரித்யன். ஒரு தெலுங்கு சினிமாவுக்கு, இந்தளவுக்கு நெகிழ்ச்சியான பாராட்டுகளை தமிழக மக்கள் வாரி வழங்கியதில்லை. சமூக வலைதளங்கள் மூலம் பார்வையாளர்கள் தினந்தினம் கொண்டாடித் தீர்க்கிறார்கள். இந்த நிலையில், சமூக ஒடுக்குமுறைகளை காட்டிய நிஜ ஷ்யாம் சிங்கா ராயான இயக்குநர் ராகுல் சங்க்ரித்யனைத் தொடர்புகொண்டு பேசினோம். புதிய தலைமுறை டிஜிட்டலுக்காக பிரத்யேகமாகப் பேசினார். ’ஷ்யாம் சிங்கா ராய்’ கதை ஆந்திராவிலோ தென்னிந்திய மாநிலங்களிலோ நடைபெறுவதுபோல் காட்டியிருக்கலாமே? ஏன் மறு ஜென்மம், கொல்கத்தா பின்னணி என்றெல்லாம் சுற்றி வளைத்துள்ளீர்கள்? ”இப்படத்தை முதலில் மறுஜென்மக் காதல் கதையாக எடுக்கவேண்டும் என்பதே எனது எண்ணமாக இருந்தது. சமூகம் சார்ந்தப் படமாக உருவாக்க நினைக்கவில்லை. கொல்கத்தா கதைக்களத்தை யோசிக்கவுமில்லை. இந்த ஐடியா கதாசிரியர் சத்யதேவ் சொன்னது. அது சரியாகப்பட்டதால் படத்தின் இரண்டாம் பாதியை கொல்கத்தா பின்னணியில் உருவாக்கினோம். எனக்கும் தனிப்பட்ட முறையில் வங்கத்தின் கலை, இலக்கியம், கலாச்சாரம், மனிதர்களைப் பிடிக்கும். வங்கத்தின் மீது பெரிய மரியாதையே வைத்துள்ளேன். அதனால், வங்க நிலப்பரப்பில் ஒரு எழுத்தாளர் இருந்தால் எப்படி இருக்கும்? என்று யோசித்து கதையை மேம்படுத்தினோம். வங்கப் பின்னணி என்பதால் கம்யூனிசம் தானாகவே கதைக்குள் வந்துவிட்டது. 1970 ஆம் ஆண்டுகளில் மேற்கு வங்கத்தில்தான் கம்யூனிச செல்பாடுகள் வீரியமா நடந்துக்கிட்டிருந்துச்சி. ஒருபக்கம் சாரு மஜீம்தார் நக்சல்பாரி இயக்கத்தை கட்டமைத்துக்கொண்டு இருந்தார். இன்னொரு பக்கம் நெருக்கடி நிலை, காங்கிரஸ் கட்சியுடன் மோதல் என கம்யூனிஸ்ட் கட்சிகளின் செயல்பாடுகள் அதிகம். இப்படி பல்வேறு காரணங்களாலும் கம்யூனிசத்தை நாங்கள் ஓரளவாவது கொண்டாட நினைத்தோம். மேலும், ’ஷ்யாம் சிங்கா ராய்’யை சமூக கருத்துள்ளப் படமாகவே பார்க்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு காதல் கதை சமூகம் சார்ந்தப் பிரச்சனைகளைப் பேசியுள்ளது என்றும் எடுத்துக்கொள்ளலாம்”. இந்தக் கதையில் சாதிய பிரச்சனை, தேவதாசி முறை குறித்து கொண்டுவரவேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது? “இது ஒரு பீரியட் படம். 50 ஆண்டுகளுக்கு முன்னால் நடக்கும் காதல் கதை. அந்தக் காலகட்டத்தில் இருவருக்கு காதல் நிகழும்போது சமூகத்தில் என்ன மாதிரியான பிரச்சனைகளைக் கடந்து வருவார்கள் என்பதை யோசித்தோம். ஷ்யாம் சிங்கா ராய் கதாபாத்திர வடிவமைப்பும் முக்கியமானது. அதனால், சாதிய பிரச்சனைகளையும் தேவதாசி முறையையும் கதைக்குள் கொண்டுவந்தோம். 50 ஆண்டுகள் கடந்தாலும் இன்னும் இந்தப் பிரச்சனைகள் சமூகத்தில் இருந்துகொண்டேதான் இருக்கிறது. குறிப்பாக, சாதியப் பிரச்னைகள் தினமும் நிகழத்தானே செய்கிறது?”. தேவதாசி ஒழிப்புச் சட்டம் இயற்றியதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலம். இந்தக் கதைக்காக தமிழகத்திலிருந்து தகவல்கள் எடுத்தீர்களா? ”ஆமாம். தேவதாசி முறையை தமிழ்நாடு ஒழித்திருந்தாலும் ஆந்திரா,கர்நாடகா,ஒடிசா, மேற்குவங்கம், குஜராத் என பல மாநிலங்களில் இந்தப் பிரச்னை இருந்தது. படத்திற்காக தேவதாசி முறைக் குறித்து நிறையப் படித்தேன். தேவதாசி முறை ஒழிப்புக்காக போராடிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி உள்ளிட்டப் பல தமிழகப் போராளிகள் குறித்தும் படித்தேன். என் நாயகன் ஷ்யாம் சிங்கா ராய் ஒரு கம்யூனிஸ்ட் பின்புலத்தைக் கொண்ட எழுத்தாளர். அதனால், அப்போது உண்மையாக வாழ்ந்த தெலுங்கு எழுத்தாளர் ஸ்ரீ ஸ்ரீ, தமிழகத்தின் பெரியார் உள்ளிட்ட சமூக சீர்த்திருத்தவாதிகளுடனும் எழுத்தாளர்களுடனும் ஷ்யாம் சிங்கா ராய் கடிதத்தொடர்பு வைத்திருப்பதாகக் காட்டினேன். அதுமட்டுமட்டுமல்ல, அம்பேத்கர் குறித்தும் நிறைய படித்ததாலேயே சாதிய பிரச்னைக் குறித்து படத்தில் அழுத்தமாகக் காட்டினோம்”. ஆனால், தேவதாசி முறை ஒழிப்புக்காக போராடிய மூவலூர் ராமாமிர்தம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி குறித்து படத்தில் இடம்பெறவில்லை என்ற விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கிறதே? ”இந்தப் படம் நடக்குற காலக்கட்டம் ரொம்பப் பின்னாடி இருக்கு. அதனால்தான், அவர்களைப் படத்துக்குள் கொண்டுவராமல் போய்விட்டது. மற்றபடி காட்டக்கூடாது என்ற எந்த நோக்கமும் இல்லை”. தெலுங்கு சினிமாவில் நேரடியாக சாதி குறித்துப் பேசும் படங்கள் குறைவாக இருக்கும்போது, சாதியப் பிரச்சனையைக் காட்டினால் வொர்க் அவுட் ஆகும் என்று நினைத்தீர்களா? ”படத்தில் பேசியுள்ள சாதிய பிரச்னைகள் அனைத்தும் உண்மையானது. நாம் சொல்லும் விஷயம் உண்மையாக இருந்தால் மக்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள். இந்தியாவில் சாதிதான் நீண்டகாலம் இருக்கக்கூடியப் பிரச்சனை. அந்த உண்மையை பேசும்போது மக்கள் கண்டிப்பா தங்களை படத்தோட ஈஸியா கனெக்ட் பண்ணிப்பாங்க என்பதில் உறுதியா இருந்தேன். மேலும், என் அப்பா பிரசாத் ஒரு சமூக செயற்பாட்டாளர். தன்னோட இளம் வயதில் நிறைய சீர்த்திருத்த நடவடிக்கைகளைச் செய்திருக்கார். சாதியப் பிரச்சனைகளின்போது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக, அவர்களின் பாத்திரங்களை கிணற்றில் எடுத்து வீசியுள்ளார். அதனையும்தான், நான் கதையில் சேர்த்து மேம்படுத்தினேன். என் நாயகன் ஷ்யாம் சிங்கா ராய் இன்ஸ்பிரேஷனை என் அப்பாவிடம் இருந்துதான் எடுத்துக்கொண்டேன்”. படத்தின் காட்சியமைப்புக்கும் வசனங்களுக்காகவும் எதிர்ப்புகள் வந்ததா? “கண்டிப்பா. படம் தியேட்டரில் வெளியானதிலிருந்தே நிறைய எதிர்ப்புகளும் மிரட்டல்களும் வந்துகொண்டே இருக்கிறது. பலர் வெறுப்பைக் காட்டுறாங்க. குறிப்பா, பிராமண சமூகத்தினர் என்மேலக் கோவமா இருக்காங்க. ‘ஆண்டி இந்து’, நான் ஒரு கம்யூனிஸ்ட், எனக்கு கிறிஸ்தவ மிஷனரிகளிடமிருந்து பணம் வருகிறது என்றெல்லாம் விமர்சிக்கிறார்கள். என்னை திட்டுவது மட்டுமல்லாமல் என் அப்பாவையும் சேர்த்து திட்டுகிறார்கள். ஆனால், இதற்கெல்லாம் நான் முக்கியத்துவம் கொடுப்பதில்லை”. ’ஷ்யாம் சிங்கா ராய்’ வெளியான அனைத்து மொழிகளிலுமே பாராட்டப்பட்டுக்களைக் குவித்துக் கொண்டிருக்கிறது. பைலிங்குவல் - பான் இந்தியா படங்களும் அதிகம் வரத்துவங்கிவிட்டன என்பதால் கேட்கிறேன். தமிழில் படம் இயக்க விருப்பம் இருக்கிறதா? “எனக்கு தமிழ் படம் இயக்கணும்னு ரொம்பவே ஆசை. ஆனால், தமிழ் மொழியை எழுதப் படிக்கத் தெரியாது. தெரியாத மொழியில் படம் இயக்குவதற்குமுன்பு, முதலில் அந்த மொழியைக் கற்றுக்கொள்ளவேண்டும். மொழி குறித்த அறிவும் புரிதலும் இருக்கவேண்டும். அப்படி தெரியவில்லை என்றால் என்னால் நேரடியாக எடுக்க முடியாது. கதையோட கனெக்ட் ஆகிக்கவும் முடியாது. அதுதான் எனது பிரச்னை. ஆனால், நான் தமிழ் படங்களுக்கும் தமிழ் நடிகர்களுக்கும் மிகப்பெரிய ஃபேன்”. உங்களுடைய ஃபேவரிட் நடிகர்கள்? “நான் விஜய் சேதுபதி சாரோட பெரிய ஃபேன். சூர்யா சாரையும் ரொம்பப் பிடிக்கும்”. இந்தக் கதைக்கு சாய் பல்லவியை தேர்ந்தெடுத்தது நடிப்புக்காகவா நடனத்திற்காகவா? ”இரண்டும்தான். படத்தில் தேவதாசி முறையும் வருகிறது என்பதால் நாயகிக்கு கண்டிப்பாக நமது பாரம்பரிய நடனம் தெரிந்திருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அந்தக் கதாபாத்திரத்துக்கு நடன நளிவுகளை சிறப்பா செய்யக்கூடியவங்களா சாய் பல்லவிதான் என் கண்ணுக்குத் தெரிஞ்சாங்க. பல்லவி கிரேட் டான்ஸர். அவங்களுக்கு இன்னும் முறையா பயிற்சி கொடுத்தால் எல்லா விதமான நடனத்தையும் பண்ணிடுவாங்க. நடனம் மட்டுமில்லாம நல்லா நடிக்கவும் செய்றாங்க. நடிப்புத் திறமை அவங்கக்கிட்ட கொட்டிக்கிடக்கு. அதனால், சாய் பல்லவியைத் தவிர்த்து வேற ஆப்ஷனே எனக்குத் தேவைப்படலை”. புரட்சிகர எழுத்தாளர் ஷ்யாம் சிங்கா ராய் காதல் கவிதையும் சொல்கிறாரே? நீங்கள் கவிதை எழுதுவீங்களா? ”எனக்கு கவிதை எழுதுவதில் ஆர்வம் அதிகம். நிறைய எழுதியுள்ளேன்”. உங்கள் பெயர் நிஜப்பெயரா? ஏற்கனவே, புகழ்பெற்ற எழுத்தாளர் ‘ராகுல் சாங்கிருத்தியாயன்’ இருக்கிறாரே?  “இது என் உண்மையானப் பெயர்தான். ஆனால், என் அப்பாவுக்கு எழுத்தாளர் ராகுல் சாங்கிருத்தியாயனைப் பிடிக்கும். அதனால்தான், எனக்கு இந்தப் பெயரை வைத்தார். இதனை அப்பா என்னிடம் அடிக்கடி சொல்வார். ராகுல் சாங்கிருத்தியானின் புத்தகங்களையும் அறிமுகப்படுதினார். நானும் வாசகனாகிவிட்டேன். அவர் மீது பெரிய மரியாதையே ஏற்பட்டதால் எனது பெயருக்குப் பின்னால் இருந்த சாதி குடும்பப் பெயரான தம்மினேனியையே நீக்கிவிட்டேன்”. இப்போதும், இந்தியாவில் இட ஒதுக்கீட்டுக்காக போராடிகொண்டிருக்கிறோம். சாதிய வன்முறைகள் நிகழ்ந்துகொண்டே இருக்கிறதே. சாதி குறித்து உங்கள் பார்வை என்ன? ”முதலில் வேலையின் அடிப்படையில் சாதி இருந்தது. அது ஒருசில விஷயங்களுக்காக இருந்திருக்கலாம். ஆனால், இன்றைய சூழலில் சாதியை தொடர்வது மிகப்பெரிய தவறு. அனைவரும் சாதிப்பெயரை நீக்கிவிடவேண்டும். அனைவருக்கும் கல்வி கிடைத்தால் சாதியப் பிரச்சனைகளும் குறையும். இங்கு சாதி என்றில்லை. மதம், மொழி, இனம், மாநிலம், நாடு போன்றவற்றின் அடிப்படையிலும் மனிதர்களைப் பிரித்துப் பார்ப்பது பெரிய தவறு. இந்த வித்தியாசங்களைப் பெரிதுப்படுத்தி நமக்குள்ள பிரச்னைப் பண்ணிக்கொண்டிருக்கிறோம்”. (இயக்குநர் ராகுல் சங்க்ரித்யன்) உங்களோட ரோல் மாடல்? “என்னுடைய இன்ஸ்பிரேஷன், ரோல்மாடல் எல்லாமே எழுத்தாளர் ஸ்ரீ ஸ்ரீதான். அவரை அறிமுகப்படுத்திய என் அப்பாவுக்குத்தான் நான் நன்றி சொல்வேன்”. பயோபிக் எடுக்க திட்டம் இருக்கிறதா? “இருக்கு. இதுவரை யாரும் தொடாத போராளிகள் பற்றி நான் பேசணும்னு நினைக்கிறேன்”. உங்கள் அடுத்தப்படம்? “டைம் ட்ராவலை மையப்படுத்தி உருவாக்கவுள்ளேன். என் படங்களில் அதிகமாக மனித மனங்களும் உணர்வுகள் குறித்தும்தான் பேசியிருக்கிறேன். அதேபோல, ‘ஷ்யாம் சிங்கா ராய்’ மாதிரி சமூகத்தில் அதிக விழிப்புணர்வு கொண்டப் படங்களும் பண்ணனும்னு நினைக்கிறேன். நாம ஏன் பிறந்தோம், நாம ஏன் வாழுறோம், ஏன் இறக்கிறோம்னு இன்னும் மக்கள் குறித்து ஆழமாக சிந்தித்துப் படம் பண்ணனும்னு நினைக்கிறேன்”. -வினி சர்பனா Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
”‘ஷ்யாம் சிங்கா ராய்’ தெலுங்கில் கமர்ஷியல் ஹிட் அடிக்கும் என்பது தெரியும். ஆனால், தமிழகத்தில் இந்தளவுக்கு படத்தை கொண்டாடுவாங்கன்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கல. தமிழ் மக்கள் பாராட்டுறது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாவும் பிரமிப்பாவும் இருக்கு. தியேட்டர்ல ரிலீஸானதைவிட ஓடிடியில் வெளியான பிறகு படத்தை இன்னும் அதிகம் பேர் பாராட்டுகிறார்கள்” என்று உற்சாகப் பூரிப்புடன் பேசுகிறார், ’ஷ்யாம் சிங்கா ராய்’ படத்தின் இயக்குநர் ராகுல் சங்க்ரித்யன். ஒரு தெலுங்கு சினிமாவுக்கு, இந்தளவுக்கு நெகிழ்ச்சியான பாராட்டுகளை தமிழக மக்கள் வாரி வழங்கியதில்லை. சமூக வலைதளங்கள் மூலம் பார்வையாளர்கள் தினந்தினம் கொண்டாடித் தீர்க்கிறார்கள். இந்த நிலையில், சமூக ஒடுக்குமுறைகளை காட்டிய நிஜ ஷ்யாம் சிங்கா ராயான இயக்குநர் ராகுல் சங்க்ரித்யனைத் தொடர்புகொண்டு பேசினோம். புதிய தலைமுறை டிஜிட்டலுக்காக பிரத்யேகமாகப் பேசினார். ’ஷ்யாம் சிங்கா ராய்’ கதை ஆந்திராவிலோ தென்னிந்திய மாநிலங்களிலோ நடைபெறுவதுபோல் காட்டியிருக்கலாமே? ஏன் மறு ஜென்மம், கொல்கத்தா பின்னணி என்றெல்லாம் சுற்றி வளைத்துள்ளீர்கள்? ”இப்படத்தை முதலில் மறுஜென்மக் காதல் கதையாக எடு...

ஸ்ருதிஹாசனின் பிறந்தநாள் பரிசு- பிரபாஸின் ‘சலார்’ படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியீடு நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘சலார்’ படத்தில் பிரபாஸுடன் அவர் இணைந்து நடித்து வரும் சிறப்பு போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், இசைத்துறையில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். தமிழில் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சூர்யா, தனுஷ், விஷால் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துள்ளார். இதேபோல் தெலுங்கிலும் மகேஷ் பாபு, பவன் கல்யாண், அல்லு அர்ஜுன், ராம்சரண் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துள்ள நிலையில், தற்போது பிரபாஸின் ‘சலார்’ படத்தில் நாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ‘கே.ஜி.எஃப்.’ மூலம் இந்திய அளவில் பிரபலமான பிரசாந்த் நீல், பிரமாண்டமாக ஆக்ஷன் நிறைந்த காட்சிகளுடன் ‘சலார்’ படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், ஸ்ருதிஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘சலார்’ படத்தில், அவர் ஆத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்ற அறிவிப்புடன், போஸ்டர் ஒன்றை இயக்குநர் பிரசாந்த் நீல் தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதேபோல் நடிகர் பிரபாஸும் ஸ்ருதிஹாசனுக்கு தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டே ‘சலார்’ திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்த்தநிலையில், ‘கே.ஜி.எஃப் 2’ ஆல் இந்தப் படம் தாமதமாகி வருகிறது. ஸ்ருதிஹாசனின் ‘சலார்’ போஸ்டர் தற்போது வைரல் ஆகி வருகிறது. Happy birthday @shrutihaasan. Thank u for being a part of #Salaar, and bringing in a tad bit of color to the sets !#HBDShrutiHaasan #Prabhas @VKiragandur @hombalefilms @HombaleGroup @IamJagguBhai@RaviBasrur @bhuvangowda84 pic.twitter.com/vkpwUd2f3j — Prashanth Neel (@prashanth_neel) January 28, 2022 Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘சலார்’ படத்தில் பிரபாஸுடன் அவர் இணைந்து நடித்து வரும் சிறப்பு போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், இசைத்துறையில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். தமிழில் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சூர்யா, தனுஷ், விஷால் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துள்ளார். இதேபோல் தெலுங்கிலும் மகேஷ் பாபு, பவன் கல்யாண், அல்லு அர்ஜுன், ராம்சரண் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துள்ள நிலையில், தற்போது பிரபாஸின் ‘சலார்’ படத்தில் நாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ‘கே.ஜி.எஃப்.’ மூலம் இந்திய அளவில் பிரபலமான பிரசாந்த் நீல், பிரமாண்டமாக ஆக்ஷன் நிறைந்த காட்சிகளுடன் ‘சலார்’ படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், ஸ்ருதிஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘சலார்’ படத்தில், அவர் ஆத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்ற அறிவிப்புடன், போஸ்டர் ஒன்றை இயக்குநர் பிரசாந்த் நீல் தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதேபோல் நடிகர் பிரபாஸும் ஸ்ருதிஹாச...

நடிகர் விஜய் சொகுசு கார் வழக்கில் அபராதம் நிறுத்திவைப்பு - சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் விஜய் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்த பி.எம்.டபிள்யூ சொகுசு காருக்கு, எந்த அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறித்த ஆவணங்களை தாக்கல் செய்யும்படி, தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், கடந்த 2005-ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து ரூ. 63 லட்சம் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ எக்ஸ் 5 என்ற சொகுசுக் காரை இறக்குமதி செய்திருந்தார். முறையாக சுங்கவரி செலுத்தி இந்தக் காரை இறக்குமதி செய்த நிலையில், இந்தக் கார் தமிழகத்திற்குள் நுழைவதற்கான நுழைவு வரியை செலுத்த உத்தரவிடப்பட்டது.  இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் நுழைவு வரியை வசூலிப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என உத்தரவிட்டது. அதன்படி நடிகர் விஜய், பி.எம்.டபிள்யூ எக்ஸ் 5 சொகுசுக் காருக்கு ரூ. 7.98 லட்சம் நுழைவு வரி செலுத்தியிருந்தார். எனினும், நுழைவுவரி செலுத்தாமல் தாமதமான காலத்திற்காக, 400 சதவீதம் அபராதம் விதித்து, அதாவது ரூ. 30 லட்சத்து 23 ஆயிரம் வணிகவரித்துறை அபராதம் விதித்தது. இந்த அபராதத்தை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, “எந்த அடிப்படையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் உத்தரவு எப்போது பிறப்பிக்கப்பட்டது உள்ளிட்ட விவரங்களை தமிழ்நாடு வணிகவரித்துறை தாக்கல் செய்ய வேண்டும்” என்று தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.  மேலும், இந்த வழக்கை பிப்ரவரி ஒன்றாம் தேதி ஒத்திவைத்து, அதுவரை நடிகர் விஜயின் பி.எம்.டபிள்யூ சொகுசுக் கார் வழக்கில், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும், அபராதத்தை வசூலிக்க எந்தவிதமான கட்டாய நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதை வணிக வரித்துறை உறுதி செய்யவேண்டும் என்றும், சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
நடிகர் விஜய் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்த பி.எம்.டபிள்யூ சொகுசு காருக்கு, எந்த அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறித்த ஆவணங்களை தாக்கல் செய்யும்படி, தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், கடந்த 2005-ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து ரூ. 63 லட்சம் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ எக்ஸ் 5 என்ற சொகுசுக் காரை இறக்குமதி செய்திருந்தார். முறையாக சுங்கவரி செலுத்தி இந்தக் காரை இறக்குமதி செய்த நிலையில், இந்தக் கார் தமிழகத்திற்குள் நுழைவதற்கான நுழைவு வரியை செலுத்த உத்தரவிடப்பட்டது.  இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் நுழைவு வரியை வசூலிப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என உத்தரவிட்டது. அதன்படி நடிகர் விஜய், பி.எம்.டபிள்யூ எக்ஸ் 5 சொகுசுக் காருக்கு  ரூ. 7.98 லட்சம் நுழைவு வரி செலுத்தியிருந்தார். எனினும், நுழைவுவரி செலுத்தாமல் தாமதமான காலத்திற்காக, 400 சதவீதம் அபராதம் விதித்து, அதாவது ரூ. 30 லட்சத்து 23 ஆயிரம் வணிகவரித்துறை அபராதம் விதித்தது. இந்த அபராதத்தை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர்நீதி...

சமந்தா- நாக சைதன்யா விவாகரத்து குறித்து வெளியான செய்தி - நாகார்ஜுனா காட்டம் சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து குறித்து வெளியான வதந்திக்கு நடிகர் நாகார்ஜுனா காட்டமாக தனது ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவும், தெலுங்கு திரைப்பட நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாகசைதன்யாவும் காதலித்து, கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகும் தமிழ், தெலுங்கில் பிஸியாக நடித்து வந்த சமந்தா, பல வெற்றிப்படங்களைக் கொடுத்து வந்தார். இதற்கிடையில் சுமார் 4 ஆண்டுகள் வரை ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த இருவரும், திடீரென ‘இனி நாங்கள் கணவன்- மனைவி அல்ல. பிரிகிறோம்’ என்று கடந்த ஆண்டு அக்டோபரில் தனித்தனியாக சமூக வலைதளம் மூலம் அறிவித்தனர். இந்தச் செய்தி தென்னிந்திய திரையுலகம் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இவர்களது பிரிவுக்கு பல காரணங்கள் கூறப்பட்டு வந்தாலும், எதனால் இவர்கள் பிரிந்தனர் என இருவரும் இதுவரை தெரிவிக்கவில்லை. இதுகுறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பலர், அவரவர்களுக்கு தெரிந்த, தகவல்களைக் கூறி வந்தனர். மேலும், சமீபத்தில் நாகசைதன்யா அளித்த பேட்டி ஒன்றில், திரையில் தனக்கு ஏற்ற ரீல் ஜோடி சமந்தாதான் என்று கூறியிருந்தார். அதேசமயத்தில், நடிகை சமந்தா தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்த விவாகரத்து தொடர்பான பதிவை நீக்கினார். இதையடுத்து மீண்டும் இருவரும் இணைய இருப்பதாக வதந்திகள் பரவியது. இந்நிலையில் நாக சைதன்யா - சமந்தா பிரிவு குறித்து நாகார்ஜுனா கூறியதாக ஊடகங்களில் செய்தி ஒன்று வெளியானது. அதில், “சமந்தாதான் முதலில் விவாகரத்து கோரினார். அதனை நாகசைதன்யா ஒத்துக்கொண்டார்” என்று நாகார்ஜுனா கூறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது இதுதொடர்பாக நாகார்ஜுனா தனது ட்விட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார். தனது பதிவில் அவர் கூறியுள்ளதாவது, “சமந்தா மற்றும் நாகசைதன்யா பற்றிய எனது அறிக்கையை மேற்கோள்காட்டி சமூக ஊடகங்கள் மற்றும் மின்னணு ஊடகங்களில் வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை மற்றும் முற்றிலும் முட்டாள்தனம்!! வதந்திகளை செய்தியாக வெளியிடுவதைத் தவிர்க்குமாறு ஊடக நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு நாகார்ஜுனா கூறியுள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து குறித்து வெளியான வதந்திக்கு நடிகர் நாகார்ஜுனா காட்டமாக தனது ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவும், தெலுங்கு திரைப்பட நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாகசைதன்யாவும் காதலித்து, கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகும் தமிழ், தெலுங்கில் பிஸியாக நடித்து வந்த சமந்தா, பல வெற்றிப்படங்களைக் கொடுத்து வந்தார். இதற்கிடையில் சுமார் 4 ஆண்டுகள் வரை ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த இருவரும், திடீரென ‘இனி நாங்கள் கணவன்- மனைவி அல்ல. பிரிகிறோம்’ என்று கடந்த ஆண்டு அக்டோபரில் தனித்தனியாக சமூக வலைதளம் மூலம் அறிவித்தனர். இந்தச் செய்தி தென்னிந்திய திரையுலகம் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இவர்களது பிரிவுக்கு பல காரணங்கள் கூறப்பட்டு வந்தாலும், எதனால் இவர்கள் பிரிந்தனர் என இருவரும் இதுவரை தெரிவிக்கவில்லை. இதுகுறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பலர், அவரவர்களுக்கு தெரிந்த, தகவல்களைக் கூறி வந்தனர். மேலும், சமீபத்தில் நாகசைதன்யா அளித்த பேட்டி ஒன...

‘100 முறை விழுந்து ஒவ்வொரு முறையும் எழுந்தேன்’ - சமந்தா பகிர்ந்த பனிச்சறுக்கு அனுபவம் இன்ஸ்டாகிராமில், நடிகை சமந்தா தனது பனிச்சறுக்கு பயிற்சியாளருடன் இருக்கும் படத்தை பகிர்ந்து கொண்டு அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள சமந்தா, “நான் சிறு குழந்தைகளுடன் என் பனிச்சறுக்கு பயணத்தை பன்னி ஸ்லோப்பில் தொடங்கினேன். 100 முறை விழுந்து ஒவ்வொரு முறையும் எழுந்தேன். நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது அனுபவத்தை உற்சாகமாகவும் அச்சுறுத்தலாகவும் மாற்றியதற்கு நன்றி. என்னைப் பயிற்றுவித்ததற்காக அன்பான கேத்க்கு ஒரு பெரிய கூக்குரல்” தெரிவித்துள்ளார். https://www.instagram.com/p/CZOlEkqriXY/?utm_source=ig_web_copy_link சமந்தா தற்போது சுவிட்சர்லாந்திற்கு பயணம் சென்றுள்ளதோடு, தனது பயணத்தின் போது பனிச்சறுக்கு விளையாட்டையும் விளையாடிவருகிறார். மேலும், பனிச்சறுக்கு பயிற்சியின் போது கீழே விழும் வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார் Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
இன்ஸ்டாகிராமில், நடிகை சமந்தா தனது பனிச்சறுக்கு பயிற்சியாளருடன் இருக்கும் படத்தை பகிர்ந்து கொண்டு அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள சமந்தா, “நான் சிறு குழந்தைகளுடன் என் பனிச்சறுக்கு பயணத்தை பன்னி ஸ்லோப்பில் தொடங்கினேன். 100 முறை விழுந்து ஒவ்வொரு முறையும் எழுந்தேன். நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது அனுபவத்தை உற்சாகமாகவும் அச்சுறுத்தலாகவும் மாற்றியதற்கு நன்றி. என்னைப் பயிற்றுவித்ததற்காக அன்பான கேத்க்கு ஒரு பெரிய கூக்குரல்” தெரிவித்துள்ளார். https://www.instagram.com/p/CZOlEkqriXY/?utm_source=ig_web_copy_link சமந்தா தற்போது சுவிட்சர்லாந்திற்கு பயணம் சென்றுள்ளதோடு, தனது பயணத்தின் போது பனிச்சறுக்கு விளையாட்டையும் விளையாடிவருகிறார். மேலும், பனிச்சறுக்கு பயிற்சியின் போது கீழே விழும் வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார் Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3o4x4c2 via IFTTT

பிரதீப் குமாரின் பிரமாதமான குரலில் கவனம் ஈர்க்கும் துல்கரின் ‘ஹே சினாமிகா’ பாடல் துல்கர் சல்மானின் ‘ஹே சினாமிகா’ படத்தின் ’தோழி’ பாடல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் முன்னணி நடன இயக்குநரான பிருந்தா மாஸ்டர் ’ஹே சினாமிகா’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகியுள்ளார். துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஹே சினாமிகா’ வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு சூப்பர் ஹிட் அடித்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்திற்குப் பிறகு துல்கர் நடிக்கும் தமிழ் படம் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. ரிலையன்ஸ் நிறுவனம் முதன்முறையாக தமிழில் தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் துல்கர் குரலில் ‘அச்சமில்லை’ பாடல் வெளியான நிலையில், தற்போது ’தோழி’  பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு. கோவிந்த் வசந்தா இசையில் மென்மையாக ஒலிக்கும் பிரதீப் குமாரின் பிரமாதமான குரல் ரிப்பீட் மோடில் காதுகளிலும் மனதிலும் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கின்றன. மழை பின்னணியில் ’யாரோடும் காணாத தூய்மையை உன்னில் நான் காண்கிறேன்’ என்று துவங்கும் பாடல் துல்கர்-காஜல் அகர்வாலுக்கான நட்பு மழை போன்று தூய்மையானது என்று உணர்த்த மழையை குறியீடாய் வைத்து உருவாக்கி ரசிகக் வைத்துள்ளார்கள். பாடல் நடுவில் ’தோழி.. தோழி.. என்ன தோழி... சொல்லடி’ என்று வரும் பிரதீப் குரல் இன்னும் ‘டீப்’பாய் மனதில் பதிந்து கவனம் ஈர்த்துவிடுகிறது. பிரதீப் குமார் குரலில் சமீபத்தில் ஜோஜு ஜார்ஜின் ‘மதுரம்’ படத்தின் ‘பரிமித நேரம்’, டொவினோ தாமஸின் ‘மின்னல் முரளி’ படத்தில் குரு சோமசுந்தரத்திற்கு வரும் ‘ரவில்’ பாடல்கள் மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்தன. இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘அட்டக்கத்தி’ படத்தின் பலரின் சூப்பர் ஹிட் அடித்து இப்போதும்கூட பலரின் காலர் ட்யூனாக ஒலிக்கும் ‘ஆசை ஓர் புல்வெளி, ’மெட்ராஸ்’ படத்தின் ‘ஆகாயம் தீப்பிடிச்சா’, ’குக்கூ’ படத்தின் ‘ஆகாசத்த நான் பாக்குறேன்’, ‘மெஹந்தி சர்கஸ்’ படத்தின் ‘கோடி அருவி கொட்டுதே’ உள்ளிட்ட பாடல்களை பிரதீப் குமார்தான் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில், ’ஹே சினாமிகா’ படத்தின் ‘தோழி’ பாடலும் ஆண்டுகள் கடந்தாலும் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் இப்பாடலை வெளியிட்டுள்ளார்கள்.  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
துல்கர் சல்மானின் ‘ஹே சினாமிகா’ படத்தின் ’தோழி’ பாடல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் முன்னணி நடன இயக்குநரான பிருந்தா மாஸ்டர் ’ஹே சினாமிகா’ படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகியுள்ளார். துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஹே சினாமிகா’ வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு சூப்பர் ஹிட் அடித்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்திற்குப் பிறகு துல்கர் நடிக்கும் தமிழ் படம் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. ரிலையன்ஸ் நிறுவனம் முதன்முறையாக தமிழில் தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் துல்கர் குரலில் ‘அச்சமில்லை’ பாடல் வெளியான நிலையில், தற்போது ’தோழி’  பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு. கோவிந்த் வசந்தா இசையில் மென்மையாக ஒலிக்கும் பிரதீப் குமாரின் பிரமாதமான குரல் ரிப்பீட் மோடில் காதுகளிலும் மனதிலும் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கின்றன. மழை பின்னணியில் ’யாரோடும் காணாத தூய்மையை உன்னில் நான் காண்கிறேன்’ என்று துவங்கும் பாடல் துல்கர...

தனது நாய் ருத்ராவின் பிறந்தநாளை குழந்தைகளுடன் கேக் வெட்டிக் கொண்டாடிய அருண் விஜய் தனது நாய் ருத்ராவின் பிறந்தநாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார் நடிகர் அருண் விஜய். அருண் விஜய் நடிப்பில் விரைவில் ‘பார்டர்’, ‘யானை’, ‘அக்னிச் சிறகுகள்’ உள்ளிட்டப் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. அருண் விஜய்யின் மகன் அர்னவ் விஜய்யும் சூர்யா தயாரிப்பில் ‘ஓ மை டாக்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதில், அருண் விஜய்யும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ள இப்படம் நாய் மீதான அன்பை மையப்படுத்தி உருவாகியுள்ளது. படத்தில் மட்டுமல்லாமல் வீட்டிலும் அருண் விஜய் நாயின் மீது மதிப்பும் அன்பும் கொண்டுள்ளார் என்பது தனது நாய்க்கு உற்சாகமுடன் பிறந்தநாளைக் கொண்டாடியதிலேயே உணரமுடிகிறது. தங்கள் வீட்டில் வளர்க்கும் செல்ல நாய் ருத்ராவின் நான்காவது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார். மகன் அர்னவ், மகள் பூர்வியுடன் நாய்க்கு கேக் வெட்டி ஊட்டும் புகைப்படங்கள் நமக்கும் புன்னகையைக் கடத்தி நெகிழ்ச்சியூட்டுகின்றன. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
தனது நாய் ருத்ராவின் பிறந்தநாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார் நடிகர் அருண் விஜய். அருண் விஜய் நடிப்பில் விரைவில் ‘பார்டர்’, ‘யானை’, ‘அக்னிச் சிறகுகள்’ உள்ளிட்டப் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. அருண் விஜய்யின் மகன் அர்னவ் விஜய்யும் சூர்யா தயாரிப்பில் ‘ஓ மை டாக்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதில், அருண் விஜய்யும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ள இப்படம் நாய் மீதான அன்பை மையப்படுத்தி உருவாகியுள்ளது. படத்தில் மட்டுமல்லாமல் வீட்டிலும் அருண் விஜய் நாயின் மீது மதிப்பும் அன்பும் கொண்டுள்ளார் என்பது தனது நாய்க்கு உற்சாகமுடன் பிறந்தநாளைக் கொண்டாடியதிலேயே உணரமுடிகிறது. தங்கள் வீட்டில் வளர்க்கும் செல்ல நாய் ருத்ராவின் நான்காவது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார். மகன் அர்னவ், மகள் பூர்வியுடன் நாய்க்கு கேக் வெட்டி ஊட்டும் புகைப்படங்கள் நமக்கும் புன்னகையைக் கடத்தி நெகிழ்ச்சியூட்டுகின்றன. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News...

மலையாள முறைப்படித் திருமணம்: காதலரை மணந்தார் ‘நாகினி’ சீரியல் நடிகை மெளனி ராய் ‘நாகினி’ சீரியல் நடிகை மெளனி ராய் - சுரேஷ் நம்பியார் திருமணம் இன்று கோவாவில் நடைபெற்றது கடந்த 2015 ஆம் ஆண்டு இந்தியில் ஒளிபரப்பான ‘நாகினி’ சீரியல் மூலம் கவனம் பெற்றார் நடிகை மெளனி ராய். இந்தியில் சூப்பர் ஹிட் அடித்ததால் தமிழிலும் தனியார் ஊடகம் ஒன்று டப்பிங் செய்து வெளியிட்டது. அப்போது, தமிழில் வந்துகொண்டிருந்த சீரியல்களையே பின்னுக்குத் தள்ளி ‘நாகினி’ டிஆர்பியில் முதலிடம் பிடித்து ஆச்சர்யப்படுத்தியது. இதன், வெற்றியால் மெளனி ராய் நடிப்பிலேயே ‘நாகினி 2’ சீரியலும் தமிழில் ஒளிபரப்பானது. அந்தளவுக்கு கவர்ச்சியான நடிப்பால் கவனம் ஈர்த்திருந்தார் மெளனி ராய். இந்தி சீரியலில் முன்னணி நடிகையாக இருக்கும் மெளனி ராய்யின் திருமணத்தை இந்தி ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். தமிழிலும் இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட தொழிலதிபர் சுரேஷ் நம்பியாரை மெளனி ராய் காதலித்து வந்தார். அவருடன் இருக்கும் புகைப்படங்களும் கடந்த இரண்டு வருடங்களாக வைரலாகி வந்தன. இந்த நிலையில், மெளனி ராய் - சுரேஷ் நம்பியார் திருமணம் பெற்றோர்கள் சம்மதத்துடன் இன்று காலை மலையாள முறைப்படி கோவாவில் நடைபெற்றது. கேரள பாரம்பரிய சேலையை அணிந்துள்ள மெளனி ராய்யின் புகைப்படங்கள் ரசிக்க வைக்கின்றன. 36 வயதாகும் மெளனி ராய் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர். அதனால், பெங்காலி முறைப்படியும் இவர்களின் திருமணம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது திருமணத்தில் நடிகை மந்த்ரா பேடி, இந்தி சீரியல் நடிகர்கள் பலர் கலந்துகொண்டனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
‘நாகினி’ சீரியல் நடிகை மெளனி ராய் - சுரேஷ் நம்பியார் திருமணம் இன்று கோவாவில் நடைபெற்றது கடந்த 2015 ஆம் ஆண்டு இந்தியில் ஒளிபரப்பான ‘நாகினி’ சீரியல் மூலம் கவனம் பெற்றார் நடிகை மெளனி ராய். இந்தியில் சூப்பர் ஹிட் அடித்ததால் தமிழிலும் தனியார் ஊடகம் ஒன்று டப்பிங் செய்து வெளியிட்டது. அப்போது, தமிழில் வந்துகொண்டிருந்த சீரியல்களையே பின்னுக்குத் தள்ளி ‘நாகினி’ டிஆர்பியில் முதலிடம் பிடித்து ஆச்சர்யப்படுத்தியது. இதன், வெற்றியால் மெளனி ராய் நடிப்பிலேயே ‘நாகினி 2’ சீரியலும் தமிழில் ஒளிபரப்பானது. அந்தளவுக்கு கவர்ச்சியான நடிப்பால் கவனம் ஈர்த்திருந்தார் மெளனி ராய். இந்தி சீரியலில் முன்னணி நடிகையாக இருக்கும் மெளனி ராய்யின் திருமணத்தை இந்தி ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். தமிழிலும் இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட தொழிலதிபர் சுரேஷ் நம்பியாரை மெளனி ராய் காதலித்து வந்தார். அவருடன் இருக்கும் புகைப்படங்களும் கடந்த இரண்டு வருடங்களாக வைரலாகி வந்தன. இந்த நிலையில், மெளனி ராய் - சுரேஷ் நம்பியார் திருமணம் பெற்றோர்கள...