ஸ்ருதிஹாசனின் பிறந்தநாள் பரிசு- பிரபாஸின் ‘சலார்’ படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியீடு நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘சலார்’ படத்தில் பிரபாஸுடன் அவர் இணைந்து நடித்து வரும் சிறப்பு போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், இசைத்துறையில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். தமிழில் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சூர்யா, தனுஷ், விஷால் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துள்ளார். இதேபோல் தெலுங்கிலும் மகேஷ் பாபு, பவன் கல்யாண், அல்லு அர்ஜுன், ராம்சரண் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துள்ள நிலையில், தற்போது பிரபாஸின் ‘சலார்’ படத்தில் நாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ‘கே.ஜி.எஃப்.’ மூலம் இந்திய அளவில் பிரபலமான பிரசாந்த் நீல், பிரமாண்டமாக ஆக்ஷன் நிறைந்த காட்சிகளுடன் ‘சலார்’ படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், ஸ்ருதிஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘சலார்’ படத்தில், அவர் ஆத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்ற அறிவிப்புடன், போஸ்டர் ஒன்றை இயக்குநர் பிரசாந்த் நீல் தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதேபோல் நடிகர் பிரபாஸும் ஸ்ருதிஹாசனுக்கு தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டே ‘சலார்’ திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்த்தநிலையில், ‘கே.ஜி.எஃப் 2’ ஆல் இந்தப் படம் தாமதமாகி வருகிறது. ஸ்ருதிஹாசனின் ‘சலார்’ போஸ்டர் தற்போது வைரல் ஆகி வருகிறது. Happy birthday @shrutihaasan. Thank u for being a part of #Salaar, and bringing in a tad bit of color to the sets !#HBDShrutiHaasan #Prabhas @VKiragandur @hombalefilms @HombaleGroup @IamJagguBhai@RaviBasrur @bhuvangowda84 pic.twitter.com/vkpwUd2f3j — Prashanth Neel (@prashanth_neel) January 28, 2022 Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘சலார்’ படத்தில் பிரபாஸுடன் அவர் இணைந்து நடித்து வரும் சிறப்பு போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், இசைத்துறையில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். தமிழில் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சூர்யா, தனுஷ், விஷால் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துள்ளார். இதேபோல் தெலுங்கிலும் மகேஷ் பாபு, பவன் கல்யாண், அல்லு அர்ஜுன், ராம்சரண் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துள்ள நிலையில், தற்போது பிரபாஸின் ‘சலார்’ படத்தில் நாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தை ‘கே.ஜி.எஃப்.’ மூலம் இந்திய அளவில் பிரபலமான பிரசாந்த் நீல், பிரமாண்டமாக ஆக்ஷன் நிறைந்த காட்சிகளுடன் ‘சலார்’ படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், ஸ்ருதிஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘சலார்’ படத்தில், அவர் ஆத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்ற அறிவிப்புடன், போஸ்டர் ஒன்றை இயக்குநர் பிரசாந்த் நீல் தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதேபோல் நடிகர் பிரபாஸும் ஸ்ருதிஹாசனுக்கு தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டே ‘சலார்’ திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்த்தநிலையில், ‘கே.ஜி.எஃப் 2’ ஆல் இந்தப் படம் தாமதமாகி வருகிறது. ஸ்ருதிஹாசனின் ‘சலார்’ போஸ்டர் தற்போது வைரல் ஆகி வருகிறது.
Happy birthday @shrutihaasan.
— Prashanth Neel (@prashanth_neel) January 28, 2022
Thank u for being a part of #Salaar, and bringing in a tad bit of color to the sets !#HBDShrutiHaasan #Prabhas @VKiragandur @hombalefilms @HombaleGroup @IamJagguBhai@RaviBasrur @bhuvangowda84 pic.twitter.com/vkpwUd2f3j
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/34hcrlH
via IFTTT
Comments
Post a Comment