தனது நாய் ருத்ராவின் பிறந்தநாளை குழந்தைகளுடன் கேக் வெட்டிக் கொண்டாடிய அருண் விஜய் தனது நாய் ருத்ராவின் பிறந்தநாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார் நடிகர் அருண் விஜய். அருண் விஜய் நடிப்பில் விரைவில் ‘பார்டர்’, ‘யானை’, ‘அக்னிச் சிறகுகள்’ உள்ளிட்டப் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. அருண் விஜய்யின் மகன் அர்னவ் விஜய்யும் சூர்யா தயாரிப்பில் ‘ஓ மை டாக்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதில், அருண் விஜய்யும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ள இப்படம் நாய் மீதான அன்பை மையப்படுத்தி உருவாகியுள்ளது. படத்தில் மட்டுமல்லாமல் வீட்டிலும் அருண் விஜய் நாயின் மீது மதிப்பும் அன்பும் கொண்டுள்ளார் என்பது தனது நாய்க்கு உற்சாகமுடன் பிறந்தநாளைக் கொண்டாடியதிலேயே உணரமுடிகிறது. தங்கள் வீட்டில் வளர்க்கும் செல்ல நாய் ருத்ராவின் நான்காவது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார். மகன் அர்னவ், மகள் பூர்வியுடன் நாய்க்கு கேக் வெட்டி ஊட்டும் புகைப்படங்கள் நமக்கும் புன்னகையைக் கடத்தி நெகிழ்ச்சியூட்டுகின்றன. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

தனது நாய் ருத்ராவின் பிறந்தநாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார் நடிகர் அருண் விஜய்.
அருண் விஜய் நடிப்பில் விரைவில் ‘பார்டர்’, ‘யானை’, ‘அக்னிச் சிறகுகள்’ உள்ளிட்டப் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. அருண் விஜய்யின் மகன் அர்னவ் விஜய்யும் சூர்யா தயாரிப்பில் ‘ஓ மை டாக்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதில், அருண் விஜய்யும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ள இப்படம் நாய் மீதான அன்பை மையப்படுத்தி உருவாகியுள்ளது. படத்தில் மட்டுமல்லாமல் வீட்டிலும் அருண் விஜய் நாயின் மீது மதிப்பும் அன்பும் கொண்டுள்ளார் என்பது தனது நாய்க்கு உற்சாகமுடன் பிறந்தநாளைக் கொண்டாடியதிலேயே உணரமுடிகிறது.





தங்கள் வீட்டில் வளர்க்கும் செல்ல நாய் ருத்ராவின் நான்காவது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார். மகன் அர்னவ், மகள் பூர்வியுடன் நாய்க்கு கேக் வெட்டி ஊட்டும் புகைப்படங்கள் நமக்கும் புன்னகையைக் கடத்தி நெகிழ்ச்சியூட்டுகின்றன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3r3epix
via IFTTT
Comments
Post a Comment