சமந்தா- நாக சைதன்யா விவாகரத்து குறித்து வெளியான செய்தி - நாகார்ஜுனா காட்டம் சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து குறித்து வெளியான வதந்திக்கு நடிகர் நாகார்ஜுனா காட்டமாக தனது ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவும், தெலுங்கு திரைப்பட நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாகசைதன்யாவும் காதலித்து, கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகும் தமிழ், தெலுங்கில் பிஸியாக நடித்து வந்த சமந்தா, பல வெற்றிப்படங்களைக் கொடுத்து வந்தார். இதற்கிடையில் சுமார் 4 ஆண்டுகள் வரை ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த இருவரும், திடீரென ‘இனி நாங்கள் கணவன்- மனைவி அல்ல. பிரிகிறோம்’ என்று கடந்த ஆண்டு அக்டோபரில் தனித்தனியாக சமூக வலைதளம் மூலம் அறிவித்தனர். இந்தச் செய்தி தென்னிந்திய திரையுலகம் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இவர்களது பிரிவுக்கு பல காரணங்கள் கூறப்பட்டு வந்தாலும், எதனால் இவர்கள் பிரிந்தனர் என இருவரும் இதுவரை தெரிவிக்கவில்லை. இதுகுறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பலர், அவரவர்களுக்கு தெரிந்த, தகவல்களைக் கூறி வந்தனர். மேலும், சமீபத்தில் நாகசைதன்யா அளித்த பேட்டி ஒன்றில், திரையில் தனக்கு ஏற்ற ரீல் ஜோடி சமந்தாதான் என்று கூறியிருந்தார். அதேசமயத்தில், நடிகை சமந்தா தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்த விவாகரத்து தொடர்பான பதிவை நீக்கினார். இதையடுத்து மீண்டும் இருவரும் இணைய இருப்பதாக வதந்திகள் பரவியது. இந்நிலையில் நாக சைதன்யா - சமந்தா பிரிவு குறித்து நாகார்ஜுனா கூறியதாக ஊடகங்களில் செய்தி ஒன்று வெளியானது. அதில், “சமந்தாதான் முதலில் விவாகரத்து கோரினார். அதனை நாகசைதன்யா ஒத்துக்கொண்டார்” என்று நாகார்ஜுனா கூறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது இதுதொடர்பாக நாகார்ஜுனா தனது ட்விட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார். தனது பதிவில் அவர் கூறியுள்ளதாவது, “சமந்தா மற்றும் நாகசைதன்யா பற்றிய எனது அறிக்கையை மேற்கோள்காட்டி சமூக ஊடகங்கள் மற்றும் மின்னணு ஊடகங்களில் வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை மற்றும் முற்றிலும் முட்டாள்தனம்!! வதந்திகளை செய்தியாக வெளியிடுவதைத் தவிர்க்குமாறு ஊடக நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு நாகார்ஜுனா கூறியுள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து குறித்து வெளியான வதந்திக்கு நடிகர் நாகார்ஜுனா காட்டமாக தனது ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவும், தெலுங்கு திரைப்பட நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாகசைதன்யாவும் காதலித்து, கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகும் தமிழ், தெலுங்கில் பிஸியாக நடித்து வந்த சமந்தா, பல வெற்றிப்படங்களைக் கொடுத்து வந்தார்.
இதற்கிடையில் சுமார் 4 ஆண்டுகள் வரை ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த இருவரும், திடீரென ‘இனி நாங்கள் கணவன்- மனைவி அல்ல. பிரிகிறோம்’ என்று கடந்த ஆண்டு அக்டோபரில் தனித்தனியாக சமூக வலைதளம் மூலம் அறிவித்தனர். இந்தச் செய்தி தென்னிந்திய திரையுலகம் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இவர்களது பிரிவுக்கு பல காரணங்கள் கூறப்பட்டு வந்தாலும், எதனால் இவர்கள் பிரிந்தனர் என இருவரும் இதுவரை தெரிவிக்கவில்லை. இதுகுறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பலர், அவரவர்களுக்கு தெரிந்த, தகவல்களைக் கூறி வந்தனர். மேலும், சமீபத்தில் நாகசைதன்யா அளித்த பேட்டி ஒன்றில், திரையில் தனக்கு ஏற்ற ரீல் ஜோடி சமந்தாதான் என்று கூறியிருந்தார். அதேசமயத்தில், நடிகை சமந்தா தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்த விவாகரத்து தொடர்பான பதிவை நீக்கினார். இதையடுத்து மீண்டும் இருவரும் இணைய இருப்பதாக வதந்திகள் பரவியது.
இந்நிலையில் நாக சைதன்யா - சமந்தா பிரிவு குறித்து நாகார்ஜுனா கூறியதாக ஊடகங்களில் செய்தி ஒன்று வெளியானது. அதில், “சமந்தாதான் முதலில் விவாகரத்து கோரினார். அதனை நாகசைதன்யா ஒத்துக்கொண்டார்” என்று நாகார்ஜுனா கூறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வைரலானது.
தற்போது இதுதொடர்பாக நாகார்ஜுனா தனது ட்விட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார். தனது பதிவில் அவர் கூறியுள்ளதாவது, “சமந்தா மற்றும் நாகசைதன்யா பற்றிய எனது அறிக்கையை மேற்கோள்காட்டி சமூக ஊடகங்கள் மற்றும் மின்னணு ஊடகங்களில் வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை மற்றும் முற்றிலும் முட்டாள்தனம்!! வதந்திகளை செய்தியாக வெளியிடுவதைத் தவிர்க்குமாறு ஊடக நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு நாகார்ஜுனா கூறியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3r73RyW
via IFTTT
Comments
Post a Comment