”காட்சிகள் எல்லாமே நிஜம்” : கவனம் ஈர்க்கும் சமுத்திரக்கனியின் ‘பப்ளிக்’ ஸ்னீக் பீக் சமுத்திரக்கனி மற்றும் காளி வெங்கட் நடித்துள்ள ‘பப்ளிக்’ ஸ்னீக் பீக் வெளியாகியுள்ளது. சமுத்திரக்கனி - காளி வெங்கட் இணைந்து நடித்துள்ள ‘பப்ளிக்’ படத்தினை அறிமுக இயக்குநர் ரா.பரமன் இயக்கியுள்ளார். இமான் இசையமைத்துள்ள, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி சினிமா ரசிகர்களை மட்டுமல்லாமல் அறிவுஜீவிகளையும் உற்றுநோக்க வைத்தது. படத்தின் நாயகர்களுக்குப் பதிலாக மக்களுக்காக உழைத்த சிங்காரவேலர், பாரதிதாசன், கக்கன், அயோத்திதாச பண்டிதர், ஜீவானந்தம், நெடுஞ்செழியன், இரட்டைமலை சீனிவாசன்,காயிதே மில்லத், அன்னி பெசண்ட் உள்ளிட்ட நிஜ நாயகர்களை போஸ்டரில் இடம்பெறச் செய்து முதல் படத்திலேயே ‘தெறம’ன் என்று சொல்ல வைத்துவிட்டார் இயக்குநர் ரா.பரமன். கே.கே.ஆர் சினிமாஸ் தயாரித்துள்ள 'பப்ளிக்’ ஸ்னீக் பீக் தற்போது வெளியாகியுள்ளது. ஆரம்பத்திலேயே, ”இந்தப் படத்துல வர்றக் காட்சிகள் சம்பவங்கள் முழுக்க முழுக்க கற்பனையா எடுக்கப்பட்டது. யார் மனதையும் புண்படுத்தணும்ங்கிற நோக்கம் இல்லை” என்று ஒலிக்கும் காளி வெங்கட்டின் குரல், அவர் பேசுவதை மறுத்து “இருங்க... இருங்கண்ணே. ஏன் அவசரம்? இந்தப் படத்துல வர்ற காட்சிகள் சம்பவங்கள் எல்லாமே நிஜம். இங்க நடந்ததைத்தான் சொல்லிருக்கோம். யார் மனசாவது புண்பட்டா நாங்க பொறுப்பு கிடையாது” என்று வரும் அழுத்தமான வசனப் பின்னணியும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இப்போதே நமக்குள் கடத்திவிடுகிறது. அதற்கடுத்தாக, பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து நையாண்டியுடன் வரும் போராட்டக் காட்சிகளும் கச்சா எண்ணெய் விலைக் குறைந்தாலும் விலையை மட்டும் ஏற்றிக்கொண்டே இருக்கும் அரசுகளை பெ‘ட்ரோல்’ செய்து கவனத்தை ஈர்த்து விடுகின்றன. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

சமுத்திரக்கனி மற்றும் காளி வெங்கட் நடித்துள்ள ‘பப்ளிக்’ ஸ்னீக் பீக் வெளியாகியுள்ளது.
சமுத்திரக்கனி - காளி வெங்கட் இணைந்து நடித்துள்ள ‘பப்ளிக்’ படத்தினை அறிமுக இயக்குநர் ரா.பரமன் இயக்கியுள்ளார். இமான் இசையமைத்துள்ள, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி சினிமா ரசிகர்களை மட்டுமல்லாமல் அறிவுஜீவிகளையும் உற்றுநோக்க வைத்தது. படத்தின் நாயகர்களுக்குப் பதிலாக மக்களுக்காக உழைத்த சிங்காரவேலர், பாரதிதாசன், கக்கன், அயோத்திதாச பண்டிதர், ஜீவானந்தம், நெடுஞ்செழியன், இரட்டைமலை சீனிவாசன்,காயிதே மில்லத், அன்னி பெசண்ட் உள்ளிட்ட நிஜ நாயகர்களை போஸ்டரில் இடம்பெறச் செய்து முதல் படத்திலேயே ‘தெறம’ன் என்று சொல்ல வைத்துவிட்டார் இயக்குநர் ரா.பரமன்.

கே.கே.ஆர் சினிமாஸ் தயாரித்துள்ள 'பப்ளிக்’ ஸ்னீக் பீக் தற்போது வெளியாகியுள்ளது. ஆரம்பத்திலேயே, ”இந்தப் படத்துல வர்றக் காட்சிகள் சம்பவங்கள் முழுக்க முழுக்க கற்பனையா எடுக்கப்பட்டது. யார் மனதையும் புண்படுத்தணும்ங்கிற நோக்கம் இல்லை” என்று ஒலிக்கும் காளி வெங்கட்டின் குரல், அவர் பேசுவதை மறுத்து “இருங்க... இருங்கண்ணே. ஏன் அவசரம்? இந்தப் படத்துல வர்ற காட்சிகள் சம்பவங்கள் எல்லாமே நிஜம். இங்க நடந்ததைத்தான் சொல்லிருக்கோம். யார் மனசாவது புண்பட்டா நாங்க பொறுப்பு கிடையாது” என்று வரும் அழுத்தமான வசனப் பின்னணியும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இப்போதே நமக்குள் கடத்திவிடுகிறது.
அதற்கடுத்தாக, பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து நையாண்டியுடன் வரும் போராட்டக் காட்சிகளும் கச்சா எண்ணெய் விலைக் குறைந்தாலும் விலையை மட்டும் ஏற்றிக்கொண்டே இருக்கும் அரசுகளை பெ‘ட்ரோல்’ செய்து கவனத்தை ஈர்த்து விடுகின்றன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://bit.ly/3AFt2fr
via IFTTT
Comments
Post a Comment