ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படம் மார்ச் 25-ம் தேதி வெளியீடு- படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம், வரும் மார்ச் மாதம் 25-ம் தேதி வெளியீடுவதாக, படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் எஸ்.எஸ்.ராஜமௌலி பிரமாண்ட பொருட்செலவில் இயக்கியுள்ள படம் 'ஆர்.ஆர்.ஆர்'. இந்தப் படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது. பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாகுபலி இயக்குநரின் அடுத்தப் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதற்கிடையில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம், கடந்த ஜனவரி 7-ஆம் தேதி உலகம் முழுக்க திரையரங்குகளில் வெளியாகவிருந்த நிலையில், கொரோனா மூன்றாவது அலை பரவலால் படத்தின் வெளியீட்டை தள்ளிவைத்தது படக்குழு. மேலும், இரண்டு புதிய வெளியீட்டுத் தேதிகளையும் கடந்த 21-ம் தேதி படக்குழு அறிவித்தது. அதன்படி, “நாட்டில் தொற்றுநோய் நிலைமை சரியாகி தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கும் அனுமதி கிடைத்தால் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தினை வரும் மார்ச் 18-ம் தேதி வெளியிடுகிறோம். ஒருவேளை அப்போதும் வெளியிட முடியவில்லையென்றால் ஏப்ரல் 28-ம் தேதி வெளியிடுகிறோம்” என்று இந்நிலையில், வரும் மார்ச் 25-ம் தேதி உலகம் முழுவதும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம், வரும் மார்ச் மாதம் 25-ம் தேதி வெளியீடுவதாக, படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் எஸ்.எஸ்.ராஜமௌலி பிரமாண்ட பொருட்செலவில் இயக்கியுள்ள படம் 'ஆர்.ஆர்.ஆர்'. இந்தப் படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது. பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாகுபலி இயக்குநரின் அடுத்தப் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதற்கிடையில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம், கடந்த ஜனவரி 7-ஆம் தேதி உலகம் முழுக்க திரையரங்குகளில் வெளியாகவிருந்த நிலையில், கொரோனா மூன்றாவது அலை பரவலால் படத்தின் வெளியீட்டை தள்ளிவைத்தது படக்குழு. மேலும், இரண்டு புதிய வெளியீட்டுத் தேதிகளையும் கடந்த 21-ம் தேதி படக்குழு அறிவித்தது.
அதன்படி, “நாட்டில் தொற்றுநோய் நிலைமை சரியாகி தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுக்கும் அனுமதி கிடைத்தால் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தினை வரும் மார்ச் 18-ம் தேதி வெளியிடுகிறோம். ஒருவேளை அப்போதும் வெளியிட முடியவில்லையென்றால் ஏப்ரல் 28-ம் தேதி வெளியிடுகிறோம்” என்று இந்நிலையில், வரும் மார்ச் 25-ம் தேதி உலகம் முழுவதும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/QitbAFERu
via IFTTT
Comments
Post a Comment