”புஷ்பான்னா ஃபளவர்னு நினைச்சீங்களா? ஃபயரு”: மகளுடன் இன்ஸ்டாவை தெறிக்கவிடும் டேவிட் வார்னர் தனது மகளுடன் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் ‘புஷ்பா’ படத்தின் டயலாக்கை டப்ஸ்மாஷ் செய்து வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி வெளியாகி வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. அல்லு அர்ஜுனுடன் ஃபகத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான ‘புஷ்பா’ உலகம் முழுக்க 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. குறிப்பாக, ‘புஷ்பா’ மூலம் பாலிவுட்டில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ரசிகர்கள் அதிகரித்துள்ளார்கள். இதனாலேயே, ‘அலா வைகுந்தபுரம்லோ’ படத்தினை இந்தியில் டப்பிங் செய்து சமீபத்தில் வெளியிட திட்டமிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ‘புஷ்பா’ பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்ததால் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இன்ஸ்டா ரீல்ஸிலும் டப்ஸ்மாஷ் செய்தும் வீடியோக்கள் செய்து வெளியிட்டு வருகிறார்கள். சமீபத்தில், ஹர்திக் பாண்டியா ‘ஸ்ரீவள்ளி’ பாடலுக்கு தனது பாட்டியுடன் நடனமாடியிருந்தது செம்ம வைரல் ஆனது. View this post on Instagram A post shared by David Warner (@davidwarner31) அதேபோல, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரும் சமீபத்தில் அல்லு அர்ஜுன் புஷ்பா கெட்டப்பில் வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவும் வைரலான நிலையில், தற்போது மீண்டும் அவரது மகளுடன் ‘புஷ்பா’ ஃபேமஸ் டயலாக்கான ‘புஷ்பான்னா ஃப்ளவர்னு நினைச்சீங்களா? ஃபயரு” என்று ஆக்ஷனுடன் பேசும் டப்ஸ்மாஷ் வீடியோவை மகளுடன் செய்து வெளியிட்டிருக்கிறார். அதற்கு, அல்லு அர்ஜுனும் ‘ஃபயர்’ சிம்பளை கமெண்ட்டாகப் போட்டு தெறிக்கவிட்டிருக்கிறார். இந்த வீடியோவுக்கு 5 லட்சம் பேருக்குமேல் லைக்குகளைக் குவித்துள்ளார்கள். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

தனது மகளுடன் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் ‘புஷ்பா’ படத்தின் டயலாக்கை டப்ஸ்மாஷ் செய்து வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி வெளியாகி வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. அல்லு அர்ஜுனுடன் ஃபகத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான ‘புஷ்பா’ உலகம் முழுக்க 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது.
குறிப்பாக, ‘புஷ்பா’ மூலம் பாலிவுட்டில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ரசிகர்கள் அதிகரித்துள்ளார்கள். இதனாலேயே, ‘அலா வைகுந்தபுரம்லோ’ படத்தினை இந்தியில் டப்பிங் செய்து சமீபத்தில் வெளியிட திட்டமிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ‘புஷ்பா’ பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்ததால் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இன்ஸ்டா ரீல்ஸிலும் டப்ஸ்மாஷ் செய்தும் வீடியோக்கள் செய்து வெளியிட்டு வருகிறார்கள். சமீபத்தில், ஹர்திக் பாண்டியா ‘ஸ்ரீவள்ளி’ பாடலுக்கு தனது பாட்டியுடன் நடனமாடியிருந்தது செம்ம வைரல் ஆனது.
View this post on Instagram
அதேபோல, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரும் சமீபத்தில் அல்லு அர்ஜுன் புஷ்பா கெட்டப்பில் வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவும் வைரலான நிலையில், தற்போது மீண்டும் அவரது மகளுடன் ‘புஷ்பா’ ஃபேமஸ் டயலாக்கான ‘புஷ்பான்னா ஃப்ளவர்னு நினைச்சீங்களா? ஃபயரு” என்று ஆக்ஷனுடன் பேசும் டப்ஸ்மாஷ் வீடியோவை மகளுடன் செய்து வெளியிட்டிருக்கிறார். அதற்கு, அல்லு அர்ஜுனும் ‘ஃபயர்’ சிம்பளை கமெண்ட்டாகப் போட்டு தெறிக்கவிட்டிருக்கிறார். இந்த வீடியோவுக்கு 5 லட்சம் பேருக்குமேல் லைக்குகளைக் குவித்துள்ளார்கள்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://bit.ly/3raD30P
via IFTTT
Comments
Post a Comment