Posts

Showing posts from August, 2021

'அமேசான் பிரைமில் அதிகம் பார்க்கப்பட்ட படம்!' - தமிழ் இயக்குநரின் இந்தி சாதனை தமிழ் இயக்குநர் விஷ்ணு வர்தன் இயக்கிய இந்தி திரைப்படமான 'ஷெர்ஷா' அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் புதிய சாதனையை படைத்திருக்கிறது. கார்கில் போரின்போது வீர மரணம் அடைந்த கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கையை மையப்படுத்தி சமீபத்தில் ஓடிடி மூலம் வெளியான பாலிவுட் திரைப்படம் 'ஷெர்ஷா'. விக்ரம் பத்ரா கதாப்பாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை கியாரா அத்வானி நடிக்க, தமிழில் அஜித்தின் 'பில்லா', 'ஆரம்பம்' படங்களை இயக்கிய விஷ்ணு வர்தனே இந்தப் படத்தையும் இயக்கியிருந்தார். கொரோனா அச்சுறுத்தலால் காரணமாக திரையரங்குகள் திறக்காமல் இருந்ததால், படம் தயாராகி கிட்டத்தட்ட ஒரு வருட காலத்துக்கு பின்பு கடந்த 12-ஆம் தேதி நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்தது படக்குழு. அமேசான் பிரைமில் வெளியான 'ஷெர்ஷா' விமர்சன ரீதியாகவும், பார்வையாளர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்றது. நடிகர் கமல்ஹாசன் உட்பட பலர் படத்துக்கான வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். என்றாலும், 'ஷெர்ஷா'வின் டிஜிட்டல் வெளியீடு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள ரசிகர்கள் பலரும், படம் பெரிய திரையில் பார்ப்பதற்கு ஏற்ற பிரமாண்ட தயாரிப்பாக உருவாகி இருக்கிறது. இந்தப் படம் தியேட்டரில் வெளியாகி இருந்தால் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருந்திருக்கும். எனவே, தயாரிப்பாளர்கள் இன்னும் சில மாதங்கள் காத்திருந்து பெரிய திரையில் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனிடையே, 'ஷெர்ஷா' அமேசான் பிரைம் வீடியோவில் அதிகம் பார்க்கப்பட்ட படம் என்ற சிறப்பை பெற்றுள்ளது. இந்த தகவலை இன்று அமேசான் பிரைம் பகிர்ந்திருக்கிறது. ''இந்தியாவின் 4100 சிட்டி மற்றும் டவுன்களில் இருந்தும் மற்றும் உலகம் முழுவதும் 210 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருந்து அதிகமான பார்வையாளர்கள் 'ஷெர்ஷா' படத்தை பார்த்திருக்கின்றனர்" என்று தெரிவித்திருக்கிறது. மேலும், ஐஎம்டிபியில் 8.9 மதிப்பீடு பெற்று மிகவும் பிரபலமான இந்திப் படம் என்ற சிறப்பையும் 'ஷெர்ஷா' பெற்றிருக்கிறது. இதையடுத்து படத்தின் நாயகன் சித்தார்த் மல்ஹோத்ரா, "உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி" என்று இந்த தகவலை பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார். இதேபோல் கியாரா அத்வானி '' 'ஷெர்ஷா' படத்துக்காக நீங்கள் எங்கள் மீது பொழிந்த அன்பு, மரியாதை மற்றும் பாராட்டுக்கு நன்றி" என பதிவிட்டு இருக்கிறார். இதேபோல் படக்குழு ஒவ்வொருவரும் ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக நாயகன் சித்தார்த் மல்ஹோத்ரா காஷ்மீர் பகுதிகளில் படப்பிடிப்பு தொடர்பான காட்சிகளை பதிவிட்டு நீண்ட பதிவை வெளியிட்டு இருந்தார். அது தற்போது வைரலாகி வருகிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
தமிழ் இயக்குநர் விஷ்ணு வர்தன் இயக்கிய இந்தி திரைப்படமான 'ஷெர்ஷா' அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் புதிய சாதனையை படைத்திருக்கிறது. கார்கில் போரின்போது வீர மரணம் அடைந்த கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கையை மையப்படுத்தி சமீபத்தில் ஓடிடி மூலம் வெளியான பாலிவுட் திரைப்படம் 'ஷெர்ஷா'. விக்ரம் பத்ரா கதாப்பாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை கியாரா அத்வானி நடிக்க, தமிழில் அஜித்தின் 'பில்லா', 'ஆரம்பம்' படங்களை இயக்கிய விஷ்ணு வர்தனே இந்தப் படத்தையும் இயக்கியிருந்தார். கொரோனா அச்சுறுத்தலால் காரணமாக திரையரங்குகள் திறக்காமல் இருந்ததால், படம் தயாராகி கிட்டத்தட்ட ஒரு வருட காலத்துக்கு பின்பு கடந்த 12-ஆம் தேதி நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்தது படக்குழு. அமேசான் பிரைமில் வெளியான 'ஷெர்ஷா' விமர்சன ரீதியாகவும், பார்வையாளர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்றது. நடிகர் கமல்ஹாசன் உட்பட பலர் படத்துக்கான வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். என்றாலும், 'ஷெர்ஷா'வின் டிஜிட்டல் வெளியீடு குறித்து அதிருப்தி தெரிவித்துள்...

மரேடுமல்லி வனப்பகுதியில் தொடங்கும் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ படத்தின் அடுத்தக்கப்பட்ட படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 2 தேதி முதல் தொடங்கவுள்ளது. ’அலா வைகுந்தபுரம் லோ’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன், பிரபல இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் ‘புஷ்பா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். செம்மரக்கட்டை கடத்தல் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தில் கடத்தல்கார லாரி டிரைவராக அல்லு அர்ஜுன் நடிக்கிறார். ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்க தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். வில்லனாக மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் நடிக்கிறார் என்பதால் ’புஷ்பா’ படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இரண்டு பாகங்களாக வெளியாகும் ’புஷ்பா’ படத்தின் முதல் பாகம் வரும் டிசம்பர் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில், புஷ்பா படத்தின் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மரேடுமல்லி வனப்பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ படத்தின் அடுத்தக்கப்பட்ட படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 2 தேதி முதல் தொடங்கவுள்ளது. ’அலா வைகுந்தபுரம் லோ’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன், பிரபல இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் ‘புஷ்பா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். செம்மரக்கட்டை கடத்தல் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தில் கடத்தல்கார லாரி டிரைவராக அல்லு அர்ஜுன் நடிக்கிறார். ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்க தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். வில்லனாக மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் நடிக்கிறார் என்பதால் ’புஷ்பா’ படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இரண்டு பாகங்களாக வெளியாகும் ’புஷ்பா’ படத்தின் முதல் பாகம் வரும் டிசம்பர் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில், புஷ்பா படத்தின் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மரேடுமல்லி வனப்பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil...

அக்டோபரில் தொடங்கும் பிக்பாஸ் சீசன் 5: இன்று மாலை அறிவிப்பு? தமிழில் பெரும் வரவேற்பு பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5 வரும் அக்டோபர் மாதம் முதல் ஒளிபரப்பவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் என்று வெளியான எல்லா மொழிகளிலும் சூப்பர் ஹிட் அடித்த நிகழ்ச்சி என்றால், அது ‘பிக்பாஸ்’தான். தமிழில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். 'பிக்பாஸ் சீசன் 4' கடந்த வருடம் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் ஒளிபரப்பானது. இந்த நிலையில், தற்போது 5 வது சீசன் வரும் அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக்கவுள்ளதாகவும், இதற்கான அதிகாரபூர்வ அறிவிக்கு இன்று மாலை வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சரவணன் மீனாட்சி புகழ் ரட்சிதா, ‘குக் வித் கோமாளி’ கனி, சுனிதா உள்ளிட்டவர்களும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்யும் தனியார் தொலைக்காட்சியும் மியூட் செய்யப்பட்ட வீடியோவை பகிர்ந்து இன்று மாலை 5.30 மணிக்கு புதிய அறிவிப்பு வெளியாகும் என்று பதிவிட்டுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
தமிழில் பெரும் வரவேற்பு பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5 வரும் அக்டோபர் மாதம் முதல் ஒளிபரப்பவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் என்று வெளியான எல்லா மொழிகளிலும் சூப்பர் ஹிட் அடித்த நிகழ்ச்சி என்றால், அது ‘பிக்பாஸ்’தான். தமிழில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். 'பிக்பாஸ் சீசன் 4' கடந்த வருடம் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் ஒளிபரப்பானது. இந்த நிலையில், தற்போது 5 வது சீசன் வரும் அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக்கவுள்ளதாகவும், இதற்கான அதிகாரபூர்வ அறிவிக்கு இன்று மாலை வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சரவணன் மீனாட்சி புகழ் ரட்சிதா, ‘குக் வித் கோமாளி’ கனி, சுனிதா உள்ளிட்டவர்களும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்யும் தனியார் தொலைக்காட்சியும் மியூட் செய்யப்பட்ட வீடியோவை பகிர்ந்து இன்று மாலை 5.30 மணிக்கு புதிய அறிவிப்பு வெளியாகும் என்று பதிவிட்டுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Ta...

இன்ஸ்டாவில் இணைந்த ஜோதிகா: 2 மணி நேரத்திலேயே 1 மில்லியன் ஃபாலோயர்ஸ்கள் இன்ஸ்டாகிராமில் இணைந்த முதல் நாளிலேயே நடிகை ஜோதிகாவை 1 மில்லியனுக்கும் மேலான ஃபாலோயர்ஸ் பின்தொடர்கிறார்கள். தமிழின் முன்னணி நடிகையாக இருந்த ஜோதிகா திருமணத்திற்குப் பின்பும் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார். ’36 வயதினிலே’, ‘நாச்சியார்’, ‘ராட்சசி’, ‘ஜாக்பாட்’படங்களில் நடித்தவர் இயக்குநர் ரா.சரவணன் இயக்கத்தில் தற்போது ‘உடன்பிறப்பே’ படத்தில் நடித்து முடித்துள்ளார். நடித்துக்கொண்டே சூர்யாவைப் போன்றே பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டு புருவம் உயர்த்த வைத்து வருகிறார். இந்த நிலையில், ஜோதிகா இன்றுதான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்தார். இதனை சூர்யாவும் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பெருமையுடன் பகிர்ந்திருக்கிறார். இன்ஸ்டாவில் தேசியக்கொடியுடன் ஜோதிகா இமயமலையில் ட்ரெக்கிங் செல்லும்  புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். இரண்டு லட்சம் பேருக்குமேல் லைக்ஸ்களை குவித்துள்ளனர். ஜோதிகா இணைந்து சில மணி நேரங்கள்தான் ஆகிறது அதற்குள். 1.3 மில்லியன் ஃபாலோயர்ஸ்கள் பின்தொடர்கிறார்கள். இன்னும் சில நாட்களில் 20 மில்லியன் ஃபாலோயர்ஸ்கள் பெற்று முதலிடத்தில் உள்ள ராஷ்மிகா மந்தனாவையே ஜோதிகா முந்திவிடுவார் போல. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
இன்ஸ்டாகிராமில் இணைந்த முதல் நாளிலேயே நடிகை ஜோதிகாவை 1 மில்லியனுக்கும் மேலான ஃபாலோயர்ஸ் பின்தொடர்கிறார்கள். தமிழின் முன்னணி நடிகையாக இருந்த ஜோதிகா திருமணத்திற்குப் பின்பும் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார். ’36 வயதினிலே’, ‘நாச்சியார்’, ‘ராட்சசி’, ‘ஜாக்பாட்’படங்களில் நடித்தவர் இயக்குநர் ரா.சரவணன் இயக்கத்தில் தற்போது ‘உடன்பிறப்பே’ படத்தில் நடித்து முடித்துள்ளார். நடித்துக்கொண்டே சூர்யாவைப் போன்றே பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டு புருவம் உயர்த்த வைத்து வருகிறார். இந்த நிலையில், ஜோதிகா இன்றுதான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்தார். இதனை சூர்யாவும் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பெருமையுடன் பகிர்ந்திருக்கிறார். இன்ஸ்டாவில் தேசியக்கொடியுடன் ஜோதிகா இமயமலையில் ட்ரெக்கிங் செல்லும்  புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். இரண்டு லட்சம் பேருக்குமேல் லைக்ஸ்களை குவித்துள்ளனர். ஜோதிகா இணைந்து சில மணி நேரங்கள்தான் ஆகிறது அதற்குள். 1.3 மில்லியன் ஃபாலோயர்ஸ்கள் பின்தொடர்கிறார்கள். இன்னும் சில நாட்களில் 20 மில்லியன் ஃபாலோயர்ஸ்கள் பெற்று முதலிடத்தில் உள்ள ராஷ்மிகா மந்தனாவை...

’கசட தபற’ வெற்றியை கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழுவினர் இயக்குநர் சிம்பு தேவனின் ’கசட தபற’ ஆந்தாலஜி திரைப்படத்தின் வெற்றியையொட்டி படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். கடந்த 2015 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘புலி’ படத்திற்குப் பிறகு இயக்குநர் சிம்புதேவன் ‘கசட தபற’ ஆந்தாலஜி படத்தை இயக்கியுள்ளார். இயக்குநர் வெங்கட் பிரபுவும், டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவிச்சந்திரனும் இப்படத்தை இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ’கசட தபற’ வில் இடம்பெறும் ஆறு கதைகளையும் சிம்புதேவனே இயக்கி இருக்கிறார். இதற்குமுன், ஓடிடி தளங்களில் வெளியான ‘புத்தம் புது காலை’, ‘பாவக்கதைகள்’, ‘நவரசா’ ஆந்தாலஜி படங்களில் இடம்பெற்ற ஒவ்வொரு கதைகளையும் வெவ்வேறு இயக்குநர்கள் இயக்கியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்,‘கசட தபற’ நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி வெளியாகி பாராட்டுகளையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. படம் பார்த்தவர்கள் அனைவருமே குறிப்பாக, ‘சிம்புதேவன் இஸ் பேக்’ என்று பாராட்டிவரும் நிலையில், வெங்கட் பிரபு, சிம்புதேவன், ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டி வெற்றியை கொண்டாடியுள்ளனர். வெங்கட் பிரபு அந்தப் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இதையும் படிக்கலாமே: திருச்சி, விருதாச்சலத்தில் ’விஜய் விலையில்லா விருந்தகம்’ துவக்கிய விஜய் மக்கள் இயக்கம் Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
இயக்குநர் சிம்பு தேவனின் ’கசட தபற’ ஆந்தாலஜி திரைப்படத்தின் வெற்றியையொட்டி படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். கடந்த 2015 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘புலி’ படத்திற்குப் பிறகு இயக்குநர் சிம்புதேவன் ‘கசட தபற’ ஆந்தாலஜி படத்தை இயக்கியுள்ளார். இயக்குநர் வெங்கட் பிரபுவும், டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவிச்சந்திரனும் இப்படத்தை இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ’கசட தபற’ வில் இடம்பெறும் ஆறு கதைகளையும் சிம்புதேவனே இயக்கி இருக்கிறார். இதற்குமுன், ஓடிடி தளங்களில் வெளியான ‘புத்தம் புது காலை’, ‘பாவக்கதைகள்’, ‘நவரசா’ ஆந்தாலஜி படங்களில் இடம்பெற்ற ஒவ்வொரு கதைகளையும் வெவ்வேறு இயக்குநர்கள் இயக்கியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்,‘கசட தபற’ நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி வெளியாகி பாராட்டுகளையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. படம் பார்த்தவர்கள் அனைவருமே குறிப்பாக, ‘சிம்புதேவன் இஸ் பேக்’ என்று பாராட்டிவரும் நிலையில், வெங்கட் பிரபு, சிம்புதேவன், ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டி வெற்றியை கொண்டாடியுள்ளனர். வெங்கட் பிரபு...

புதுச்சேரியில் தொடங்கும் தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தனுஷ் நடிக்கும் 'திருச்சிற்றம்பலம்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் 3 ஆம் தேதி புதுச்சேரியில் தொடங்குகிறது.  மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'.  இதற்கான படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கியது. அதில் படத்திற்கு தேவையான முக்கிய காட்சிகளை படமாக்கினர். இதையடுத்து தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு புதுச்சேரியில் வரும் 3ஆம் தேதி தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.  அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தை விரைவில் முடிக்க தனுஷ் திட்டமிட்டிருக்கிறார்.  மேலும் ’திருச்சிற்றம்பலம்’ படத்தை முடித்துவிட்டு ’மாறன்’ இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
தனுஷ் நடிக்கும் 'திருச்சிற்றம்பலம்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் 3 ஆம் தேதி புதுச்சேரியில் தொடங்குகிறது.  மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'.  இதற்கான படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கியது. அதில் படத்திற்கு தேவையான முக்கிய காட்சிகளை படமாக்கினர். இதையடுத்து தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு புதுச்சேரியில் வரும் 3ஆம் தேதி தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.  அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தை விரைவில் முடிக்க தனுஷ் திட்டமிட்டிருக்கிறார்.  மேலும் ’திருச்சிற்றம்பலம்’ படத்தை முடித்துவிட்டு ’மாறன்’ இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3DFmb6O via IFTTT

'புதுசா யாருமா கத சொல்றா’ - காமெடி, த்ரில்லரில் மிரட்டும் அனபெல சேதுபதி டிரைலர்! விஜய்சேதுபதி, டாப்ஸி நடிக்கும் அனபெல சேதுபதி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் அனபெல சேதுபதி. டாப்ஸி, ராதிகா, யோகிபாபு ஆகியோர் நடிக்கும் இந்த படத்தை பேஸன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில், ராதிகா, தேவதர்ஷினி, மதுமிதா, சேத்தன், சுப்பு பஞ்சு, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு டாப்ஸி தமிழில் நடிக்கிறார். இதனால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. சமீப காலங்களில் உருவான ட்ரெண்ட் ஆன பேய் படங்களுக்கான டெம்பிளேட்டாக உள்ள ஒரு அரண்மனையில் பேய் இருக்கு என்பதே இந்தப் படத்திலும் இருக்கிறது. வித்தியாசமான என்ன செய்திருக்கிறார்கள் என்பதே சவாலாக இருக்கும். படத்தில் டாப்ஸி தான் முக்கியமான கதாபாத்திரம் போல் உள்ளது. யோகி பாபுவின் காமெடி ட்ராக் ட்ரெய்லர் முழுவதும் வருகிறது. இந்தப் படம் காமெடி மற்றும் த்ரில்லர் வகையில் இருக்கும் என்றே தெரிகிறது. இதையும் படிக்கலாமே : புல்லாங்குழலுடன் கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடிய நடிகை காஜல் அகர்வால் - புகைப்பட ஆல்பம் Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
விஜய்சேதுபதி, டாப்ஸி நடிக்கும் அனபெல சேதுபதி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் அனபெல சேதுபதி . டாப்ஸி, ராதிகா, யோகிபாபு ஆகியோர் நடிக்கும் இந்த படத்தை பேஸன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில், ராதிகா, தேவதர்ஷினி, மதுமிதா, சேத்தன், சுப்பு பஞ்சு, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு டாப்ஸி தமிழில் நடிக்கிறார். இதனால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. சமீப காலங்களில் உருவான ட்ரெண்ட் ஆன பேய் படங்களுக்கான டெம்பிளேட்டாக உள்ள ஒரு அரண்மனையில் பேய் இருக்கு என்பதே இந்தப் படத்திலும் இருக்கிறது. வித்தியாசமான என்ன செய்திருக்கிறார்கள் என்பதே சவாலாக இருக்கும். படத்தில் டாப்ஸி தான் முக்கியமான கதாபாத்திரம் போல் உள்ளது. யோகி பாபுவின் காமெடி ட்ராக் ட்ரெய்லர் முழுவதும் வருகிறது. இந்தப் படம் காமெடி மற்றும் த்ரில்லர் வகையில் இருக்கும் என்றே தெரிகிறது. இதையும் படிக்கலாமே : புல்லாங்குழலுடன் கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடிய நடிகை காஜல் அகர்வால் - புகைப்பட ஆல்பம் Sour...

புல்லாங்குழலுடன் கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடிய நடிகை காஜல் அகர்வால் - புகைப்பட ஆல்பம் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நடிகை காஜல் அகர்வால் கையில் புல்லாங்குழலுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். நாடு முழுவதும் கிருஷ்ணரின் பிறந்தநாளாக இன்று கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடி வருகிறார்கள் மக்கள். அந்த வகையில், நடிகை காஜல் அகர்வாலும் உற்சாகமுடன் கொண்டாடியுள்ளார். திருமணத்திற்குப் பிறகு தற்போது தமிழிலும் தெலுங்கிலும் சிரஞ்சீவியின் ’ஆச்சார்யா’, ‘கோஷ்டி’, ‘கருங்காப்பியம்’ உள்ளிட்டப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் காஜல் அகர்வால். அதேசமயம், வெப் சீரிஸ்களிலும் கவனம் செலுத்துகிறார். இந்த நிலையில், இன்று கிருஷ்ண ஜெயந்தியையொட்டி குங்குமப்பூ மற்றும் வெள்ளை நிற உடையில் கையில் புல்லாங்குழலுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் புன்னகையுடன் காஜல் அகர்வால் வெளியிட்டுள்ள புகைப்படங்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கிருஷ்ணர் சிலையுடன் புல்லாங்குழல், மயில் இறகுடன் கலர்ஃபுல்லாக கவனம் ஈர்க்கின்றன காஜல் அகர்வாலின் புகைப்ப்டங்கள். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நடிகை காஜல் அகர்வால் கையில் புல்லாங்குழலுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். நாடு முழுவதும் கிருஷ்ணரின் பிறந்தநாளாக இன்று கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடி வருகிறார்கள் மக்கள். அந்த வகையில், நடிகை காஜல் அகர்வாலும் உற்சாகமுடன் கொண்டாடியுள்ளார். திருமணத்திற்குப் பிறகு தற்போது தமிழிலும் தெலுங்கிலும் சிரஞ்சீவியின் ’ஆச்சார்யா’, ‘கோஷ்டி’, ‘கருங்காப்பியம்’ உள்ளிட்டப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் காஜல் அகர்வால். அதேசமயம், வெப் சீரிஸ்களிலும் கவனம் செலுத்துகிறார். இந்த நிலையில், இன்று கிருஷ்ண ஜெயந்தியையொட்டி குங்குமப்பூ மற்றும் வெள்ளை நிற உடையில் கையில் புல்லாங்குழலுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் புன்னகையுடன் காஜல் அகர்வால் வெளியிட்டுள்ள புகைப்படங்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கிருஷ்ணர் சிலையுடன் புல்லாங்குழல், மயில் இறகுடன் கலர்ஃபுல்லாக கவனம் ஈர்க்கின்றன காஜல் அகர்வாலின் புகைப்ப்டங்கள். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3kAeHsP via I...

செப்டம்பர்: புனேயில் தொடங்கும் அட்லீ - ஷாருக்கான் படப்பிடிப்பு ஷாருக்கான் - அட்லீ இணையும் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் புனேயில் தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் ‘பிகில்’ வெற்றிக்குப்பிறகு இயக்குநர் அட்லீ பாலிவுட் பக்கம் கவனம் செலுத்தியுள்ளார். பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கானை வைத்து புதிய படத்தை இயக்கும் அட்லீ கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்படத்திற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இரட்டைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா, ‘தங்கல்’ புகழ் சான்யா மல்ஹோத்ரா நடிக்கிறார்கள். இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையும் படிக்கலாமே: கவனம் ஈர்க்கும் பிரபாஸ் - பூஜா ஹெக்டேவின் ‘ராதே ஷ்யாம்’ போஸ்டர் Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
ஷாருக்கான் - அட்லீ இணையும் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் புனேயில் தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் ‘பிகில்’ வெற்றிக்குப்பிறகு இயக்குநர் அட்லீ பாலிவுட் பக்கம் கவனம் செலுத்தியுள்ளார். பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கானை வைத்து புதிய படத்தை இயக்கும் அட்லீ கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்படத்திற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இரட்டைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா, ‘தங்கல்’ புகழ் சான்யா மல்ஹோத்ரா நடிக்கிறார்கள். இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் மஹாராஷ்டிர மாநிலம் புனேயில் தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையும் படிக்கலாமே: கவனம் ஈர்க்கும் பிரபாஸ் - பூஜா ஹெக்டேவின் ‘ராதே ஷ்யாம்’ போஸ்டர் Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3kFAWxJ via IFTTT

கவனம் ஈர்க்கும் பிரபாஸ் - பூஜா ஹெக்டேவின் ‘ராதே ஷ்யாம்’ போஸ்டர் பிரபாஸ் நடிக்கும் ’ராதே ஷ்யாம்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘சாஹோ’ படத்திற்குப் பிறகு பிரபாஸ் ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில்‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். முழுக்க முழுக்க காதல் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் பாக்யஸ்ரீ, சச்சின் கடேகர், முரளி சர்மா என பலரும் நடித்துள்ளனர்.1970-களில் ஐரோப்பாவில் நடக்கும் காதல் கதையாக உருவாக்கப்படும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. சமீபத்தில், இப்படத்தின் பிரபாஸ் - பூஜா ஹெக்டே காதல் காட்சி புகைப்படங்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்த நிலையில், இன்று கிருஷ்ண ஜெயந்தியையொட்டி பிரபாஸ் - பூஜா ஹெக்டேவின் புதிய படத்தை வெளியிட்டுள்ளது படக்குழு. புகைப்படத்தில் மயில் இறகுடன் கொண்ட கவனம் ஈர்க்கும் காஸ்டியூமில் பூஜா ஹெக்டே பியானோ வாசிக்க, அவர் வாசிக்கும் அழகை பிரபாஸ் காதலுடன் ரசிக்கும் புதிய புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை, ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள். இதையும் படிக்கலாமே: யூடியூபில் 250 மில்லியன் பார்வைகளைக் கடந்த ’வாத்தி கம்மிங்’ Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
பிரபாஸ் நடிக்கும் ’ராதே ஷ்யாம்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘சாஹோ’ படத்திற்குப் பிறகு பிரபாஸ் ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில்‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். முழுக்க முழுக்க காதல் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் பாக்யஸ்ரீ, சச்சின் கடேகர், முரளி சர்மா என பலரும் நடித்துள்ளனர்.1970-களில் ஐரோப்பாவில் நடக்கும் காதல் கதையாக உருவாக்கப்படும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. சமீபத்தில், இப்படத்தின் பிரபாஸ் - பூஜா ஹெக்டே காதல் காட்சி புகைப்படங்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்த நிலையில், இன்று கிருஷ்ண ஜெயந்தியையொட்டி பிரபாஸ் - பூஜா ஹெக்டேவின் புதிய படத்தை வெளியிட்டுள்ளது படக்குழு. புகைப்படத்தில் மயில் இறகுடன் கொண்ட கவனம் ஈர்க்கும் காஸ்டியூமில் பூஜா ஹெக்டே பியானோ வாசிக்க, அவர் வாசிக்கும் அழகை பிரபாஸ் காதலுடன் ரசிக்கும் புதிய புகைப்படம் வெளியாகியுள்ளது. இத...

இன்ஸ்டாவில் 13 மில்லியன் ஃபாலோயர்ஸ்: தென்னிந்திய நடிகர்களில் முதலிடத்தில் அல்லு அர்ஜுன் இன்ஸ்டாகிராமில் தென்னிந்திய நடிகர்களில் அதிக ஃபாலோயர்ஸ் கொண்ட நடிகர்கள் பட்டியலில் 13 மில்லியன் ஃபாலோயர்ஸ்களைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளார் நடிகர் அல்லு அர்ஜுன். தெலுங்கின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். தனது மகள் அல்லு அர்ஹாவை அள்ளிக்கொஞ்சும் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிடுவார். அதோடு, தனது காதல் மனைவி சினேகா ரெட்டியுடனான புதுப்புது போட்டோஷூட்களையும் பகிர்ந்து ‘இவ்வளவு காதலுடன் இருக்கிறார்களே’ என்று காதல் மீதான நம்பிக்கையை ஏற்படுத்துவார். சமீபத்தில், இவர்களின் 10 ஆம் ஆண்டு திருமண தினத்தையொட்டி தாஜ்மஹாலில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார். முன்னணி நடிகர் என்பதோடு, இவர் பகிரும் புகைப்படங்களுக்கும் இன்ஸ்டாவில் ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள். இந்த நிலையில், தென்னிந்திய நடிகர்களில் 13 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை பெற்று முதலிடம் பிடித்துள்ளார் அல்லு அர்ஜுன். நடிகைகளில் ராஷ்மிகா மந்தனா 20 மில்லியன் ஃபாலோயர்ஸ்களைப் பெற்று முதலிடத்தில் இருக்கிறார். அல்லு அர்ஜுனுக்கு அடுத்தப்படியாக விஜய் தேவாரகொண்டா 12 மில்லியன் ஃபாலோயர்ஸ்களையும், மகேஷ்பாபு 7 மில்லியன் ஃபாலோயர்ஸ்களையும் கொண்டுள்ளனர். இதையும் படிக்கலாமே: ’வீரமே வாகை சூடும்’: கவனம் ஈர்க்கும் ‘விஷால் 31’ படத்தின் தலைப்பு Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
இன்ஸ்டாகிராமில் தென்னிந்திய நடிகர்களில் அதிக ஃபாலோயர்ஸ் கொண்ட நடிகர்கள் பட்டியலில் 13 மில்லியன் ஃபாலோயர்ஸ்களைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளார் நடிகர் அல்லு அர்ஜுன். தெலுங்கின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். தனது மகள் அல்லு அர்ஹாவை அள்ளிக்கொஞ்சும் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிடுவார். அதோடு, தனது காதல் மனைவி சினேகா ரெட்டியுடனான புதுப்புது போட்டோஷூட்களையும் பகிர்ந்து ‘இவ்வளவு காதலுடன் இருக்கிறார்களே’ என்று காதல் மீதான நம்பிக்கையை ஏற்படுத்துவார். சமீபத்தில், இவர்களின் 10 ஆம் ஆண்டு திருமண தினத்தையொட்டி தாஜ்மஹாலில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார். முன்னணி நடிகர் என்பதோடு, இவர் பகிரும் புகைப்படங்களுக்கும் இன்ஸ்டாவில் ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள். இந்த நிலையில், தென்னிந்திய நடிகர்களில் 13 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை பெற்று முதலிடம் பிடித்துள்ளார் அல்லு அர்ஜுன். நடிகைகளில் ராஷ்மிகா மந்தனா 20 மில்லியன் ஃபாலோயர்ஸ்களைப் பெற்று முதலிடத்தில் இருக்கிறார். அல்லு அர்ஜுனுக்கு அடுத்தப்படியாக விஜய் தேவாரகொண்டா 12 மில்லியன் ஃபாலோயர்ஸ...

’பியார் பிரேமா காதல்’ இளன் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்? தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தை இளன் இயக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹரிஷ் கல்யாண் நடிப்பில் இளன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'பியார் பிரேமா காதல்'. இந்த திரைப்படம் வசூல் ரீதியில் வெற்றியடைந்தது.  இதையடுத்து ஹரீஷ் கல்யாண் நடிப்பில் மீண்டும் ’ஸ்டார்’ என்ற திரைப்படத்தை இயக்க இளன் ஒப்பந்தமானார்.  ஆனால், அந்த திரைப்படம் தற்போது கைவிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  மேலும் நடிகர் தனுஷ் நடிப்பில் புதிய படத்தை இயக்க இளன் புதிய கதை எழுதி உள்ளதாகவும்,  அதை சத்யஜோதி நிறுவனத்திடம் அவர் கூறி இருப்பதாகவும் கூறப்படுகிறது.  ஆனால், அந்த திரைப்படம் உருவாக்குவது பற்றி இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. இதையும் படிக்கலாமே: பி.வி சிந்துவை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்த நடிகர் சிரஞ்சீவி Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தை இளன் இயக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹரிஷ் கல்யாண் நடிப்பில் இளன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'பியார் பிரேமா காதல்'. இந்த திரைப்படம் வசூல் ரீதியில் வெற்றியடைந்தது.  இதையடுத்து ஹரீஷ் கல்யாண் நடிப்பில் மீண்டும் ’ஸ்டார்’ என்ற திரைப்படத்தை இயக்க இளன் ஒப்பந்தமானார்.  ஆனால், அந்த திரைப்படம் தற்போது கைவிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  மேலும் நடிகர் தனுஷ் நடிப்பில் புதிய படத்தை இயக்க இளன் புதிய கதை எழுதி உள்ளதாகவும்,  அதை சத்யஜோதி நிறுவனத்திடம் அவர் கூறி இருப்பதாகவும் கூறப்படுகிறது.  ஆனால், அந்த திரைப்படம் உருவாக்குவது பற்றி இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. இதையும் படிக்கலாமே: பி.வி சிந்துவை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்த நடிகர் சிரஞ்சீவி Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3yyYkC4 via IFTTT

2022 ஜனவரி 7-ல் வெளியாகும் ராஜமெளலியின் ’ஆர்ஆர்ஆர்’? ராஜமெளலியின் ’ஆர்ஆர்ஆர்’ படம் வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ராஜமௌலி இயக்கியுள்ள 'ஆர்ஆர்ஆர்' படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட் நடிப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதையும் படிக்கலாமே: விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை சமந்தா வரும் அக்டோபர் 13-ஆம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது படக்குழு. ஆனால், படம் வெளியாக இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், கடந்த வாரம்தான் படப்பிடிப்பை முடித்தது படக்குழு. இதனால், ஏற்கனவே அறிவித்த அக்டோபர் 13 ஆம் தேதிக்குப் பதில் புதிய தேதியை படக்குழு அறிவிக்கவுள்ளதாகவும், வரும் ஜனவரி 7 ஆம் தேதி வெளியிட தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
ராஜமெளலியின் ’ஆர்ஆர்ஆர்’ படம் வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ராஜமௌலி இயக்கியுள்ள 'ஆர்ஆர்ஆர்' படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட் நடிப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதையும் படிக்கலாமே: விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை சமந்தா வரும் அக்டோபர் 13-ஆம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது படக்குழு. ஆனால், படம் வெளியாக இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், கடந்த வாரம்தான் படப்பிடிப்பை முடித்தது படக்குழு. இதனால், ஏற்கனவே அறிவித்த அக்டோபர் 13 ஆம் தேதிக்குப் பதில் புதிய தேதியை படக்குழு அறிவிக்கவுள்ளதாகவும், வரும் ஜனவரி 7 ஆம் தேதி வெளியிட தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https:...

”ஒரு ரசிகனாக வடிவேலு நிறைய படங்கள் நடிக்கவேண்டும் என விரும்புகிறேன்” - விஷால் ”ஒரு ரசிகனாக வடிவேல் மீண்டும் நடிக்க வருவதை வரவேற்கிறேன். அவர், நிறைய படங்கள் நடிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார் நடிகர் விஷால். இன்று தனது 44 வது பிறந்த நாளை கீழ்ப்பாக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் கொண்டாடிய நடிகர் விஷால் செய்தியாளர்களிடம் பேசியபோது ”பிறந்த நாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் உதயநிதி அவர்களால் சினிமா துறைக்கு நல்லது நடக்கும் என நம்புகிறேன். மு.க ஸ்டாலின் நன்றாக ஆட்சி செய்வார் என்பதால்தான் மக்கள் அவரை தேர்ந்தெடுத்திருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று கூறினார். நடிகர் வடிவேலுவுக்கு ரெட் கார்டு நீக்கப்பட்டதுக் குறித்து கேட்டபோது, “”ஒரு ரசிகனாக வடிவேல் மீண்டும் நடிக்க வருவதை வரவேற்கிறேன். அவர், நிறைய படங்கள் நடிக்க வேண்டும்” என்றுக் கூறினார். முன்னதாக, சிம்புதேவன் வடிவேலு கூட்டணியில் வெளியான இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி திரைப்படம் வசூல் ரீதியில் பெரும் வெற்றியடைந்தது. மேலும் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வெளியான அந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து 10 ஆண்டுகள் கழித்து இம்சை அரசன் படத்தின் இரண்டாம் பாகத்தை, இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்ற தலைப்பில் உருவாக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அந்தப் படத்தை இயக்குனர் ஷங்கர், லைகா நிறுவத்திற்கு முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து கொடுப்பதாக ஒப்பந்தம் கையெழுத்தானது. அதையடுத்து இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால் சில நாட்களிலேயே நடிகர் வடிவேலுக்கு படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படப்பிடிப்பிற்கு அவர் செல்லவில்லை. இதனால் பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்ட அரங்கால் தயாரிப்பாளர் ஷங்கருக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தில் வடிவேலு மீது இயக்குனர் ஷங்கர் புகார் அளித்திருந்தார். இதற்கான பேச்சுவார்த்தை நான்கு ஆண்டுகளாக நடைபெற்றது. வடிவேலு நஷ்டத்தை ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் அவருக்கு தயாரிப்பாளர் சங்கம் மறைமுக தடை விதித்திருந்தது. இதனால் நடிகர் வடிவேலு புதிய திரைப்படங்களில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்திற்கு பதிலாக புதிய திரைப்படத்தில் லைகா நிறுவனத்திற்கு நடித்துக் கொடுப்பதாக வடிவேலு ஒப்புக்கொண்டார். இதன் காரணமாக இயக்குனர் ஷங்கர் தன்னுடைய புகாரை வாபஸ் பெற்றார். இதனால் இம்சை அரசன் 24-ம் புலிகேசி பட பிரச்சனை 4 ஆண்டுகளுக்கு பிறகு முடிவுக்கு வந்துள்ளது. மேலும் விரைவில் நடிகர் வடிவேலு புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தை தலைநகரம், மருதமலை, படிக்காதவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய சுராஜ் இயக்கவுள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
”ஒரு ரசிகனாக வடிவேல் மீண்டும் நடிக்க வருவதை வரவேற்கிறேன். அவர், நிறைய படங்கள் நடிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார் நடிகர் விஷால். இன்று தனது 44 வது பிறந்த நாளை கீழ்ப்பாக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் கொண்டாடிய நடிகர் விஷால் செய்தியாளர்களிடம் பேசியபோது ”பிறந்த நாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் உதயநிதி அவர்களால் சினிமா துறைக்கு நல்லது நடக்கும் என நம்புகிறேன். மு.க ஸ்டாலின் நன்றாக ஆட்சி செய்வார் என்பதால்தான் மக்கள் அவரை தேர்ந்தெடுத்திருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று கூறினார். நடிகர் வடிவேலுவுக்கு ரெட் கார்டு நீக்கப்பட்டதுக் குறித்து கேட்டபோது, “”ஒரு ரசிகனாக வடிவேல் மீண்டும் நடிக்க வருவதை வரவேற்கிறேன். அவர், நிறைய படங்கள் நடிக்க வேண்டும்” என்றுக் கூறினார். முன்னதாக, சிம்புதேவன் வடிவேலு கூட்டணியில் வெளியான இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி திரைப்படம் வசூல் ரீதியில் பெரும் வெற்றியடைந்தது. மேலும் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வெளியான அந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. ...

’சாணிக்காயிதம்’ படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த செல்வராகவன் ‘சாணிக்காயிதம்’ படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார் செல்வராகவன். இயக்குநர் செல்வராகவன் அருண் மாதேஸ்வரனின் ’சாணிக்காயிதம்’ படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். செல்வராகவனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ’சாணிக்காயிதம்’ படத்தை இயக்கும் அருண் மாதேஸ்வரன் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தயாரித்துள்ள ‘ராக்கி’ படத்தையும் இயக்கி முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், ‘சாணிக்காயிதம்’ படம் நிறைவடைந்ததாக அறிவித்தது படக்குழு. அதனைத்தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் டப்பிங் பணிகளை துவக்கிய செல்வராகவன், தற்போது டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார். இயக்குநர் அருண் மாதேஸ்வரனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு டப்பிங் பணிகள் நிறைவடைந்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் செல்வராகவன். ‘சாணிக்காயிதம்’ விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது என்று தகவல்கள் தெவிக்கின்றன. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
‘சாணிக்காயிதம்’ படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார் செல்வராகவன். இயக்குநர் செல்வராகவன் அருண் மாதேஸ்வரனின் ’சாணிக்காயிதம்’ படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். செல்வராகவனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ’சாணிக்காயிதம்’ படத்தை இயக்கும் அருண் மாதேஸ்வரன் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தயாரித்துள்ள ‘ராக்கி’ படத்தையும் இயக்கி முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், ‘சாணிக்காயிதம்’ படம் நிறைவடைந்ததாக அறிவித்தது படக்குழு. அதனைத்தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் டப்பிங் பணிகளை துவக்கிய செல்வராகவன், தற்போது டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார். இயக்குநர் அருண் மாதேஸ்வரனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு டப்பிங் பணிகள் நிறைவடைந்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் செல்வராகவன். ‘சாணிக்காயிதம்’ விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது என்று தகவல்கள் தெவிக்கின்றன. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3jqsjaV via IFTTT

பி.வி சிந்துவை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்த நடிகர் சிரஞ்சீவி ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி சிந்துவை தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி, அவரது வீட்டிற்கு அழைத்துப் பாராட்டினார். சமீபத்தில் நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாறு படைத்தார் பி.வி.சிந்து. ஏற்கனவே, கடந்த 2016 இல் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார் பிவி சிந்து. இந்த நிலையில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி பி.வி சிந்துவையும் அவரது குடும்பத்தினரையும் தனது வீட்டிற்கு நேரில் அழைத்து விருந்து வைத்துப் பாராட்டினார். அவருடன், அவரது மகன் ராம் சரண், மகள்கள் மற்றும் குடும்பத்தினர், நடிகர்கள் நாகர்ஜுனா, வருண் தேஜ், ராணா, அகில் அக்கேனி, நடிகைகள் ராதிகா சரத்குமார், சுஹாசினி மணிரத்னம் உள்ளிட்டோரும் விழாவில் கலந்துகொண்டு உடனிருந்து வாழ்த்து தெரிவித்தனர். இந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. நடிகர் சிரஞ்சீவியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி சிந்துவை தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி, அவரது வீட்டிற்கு அழைத்துப் பாராட்டினார். சமீபத்தில் நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாறு படைத்தார் பி.வி.சிந்து. ஏற்கனவே, கடந்த 2016 இல் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார் பிவி சிந்து. இந்த நிலையில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி பி.வி சிந்துவையும் அவரது குடும்பத்தினரையும் தனது வீட்டிற்கு நேரில் அழைத்து விருந்து வைத்துப் பாராட்டினார். அவருடன், அவரது மகன் ராம் சரண், மகள்கள் மற்றும் குடும்பத்தினர், நடிகர்கள் நாகர்ஜுனா, வருண் தேஜ், ராணா, அகில் அக்கேனி, நடிகைகள் ராதிகா சரத்குமார், சுஹாசினி மணிரத்னம் உள்ளிட்டோரும் விழாவில் கலந்துகொண்டு உடனிருந்து வாழ்த்து தெரிவித்தனர். இந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. நடிகர் சிரஞ்சீவியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ...