புதுச்சேரியில் தொடங்கும் தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தனுஷ் நடிக்கும் 'திருச்சிற்றம்பலம்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் 3 ஆம் தேதி புதுச்சேரியில் தொடங்குகிறது. மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'. இதற்கான படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கியது. அதில் படத்திற்கு தேவையான முக்கிய காட்சிகளை படமாக்கினர். இதையடுத்து தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு புதுச்சேரியில் வரும் 3ஆம் தேதி தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தை விரைவில் முடிக்க தனுஷ் திட்டமிட்டிருக்கிறார். மேலும் ’திருச்சிற்றம்பலம்’ படத்தை முடித்துவிட்டு ’மாறன்’ இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

தனுஷ் நடிக்கும் 'திருச்சிற்றம்பலம்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் 3 ஆம் தேதி புதுச்சேரியில் தொடங்குகிறது.
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'. இதற்கான படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கியது. அதில் படத்திற்கு தேவையான முக்கிய காட்சிகளை படமாக்கினர். இதையடுத்து தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு புதுச்சேரியில் வரும் 3ஆம் தேதி தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.
அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தை விரைவில் முடிக்க தனுஷ் திட்டமிட்டிருக்கிறார். மேலும் ’திருச்சிற்றம்பலம்’ படத்தை முடித்துவிட்டு ’மாறன்’ இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3DFmb6O
via IFTTT
Comments
Post a Comment