பி.வி சிந்துவை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்த நடிகர் சிரஞ்சீவி ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி சிந்துவை தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி, அவரது வீட்டிற்கு அழைத்துப் பாராட்டினார். சமீபத்தில் நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாறு படைத்தார் பி.வி.சிந்து. ஏற்கனவே, கடந்த 2016 இல் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார் பிவி சிந்து. இந்த நிலையில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி பி.வி சிந்துவையும் அவரது குடும்பத்தினரையும் தனது வீட்டிற்கு நேரில் அழைத்து விருந்து வைத்துப் பாராட்டினார். அவருடன், அவரது மகன் ராம் சரண், மகள்கள் மற்றும் குடும்பத்தினர், நடிகர்கள் நாகர்ஜுனா, வருண் தேஜ், ராணா, அகில் அக்கேனி, நடிகைகள் ராதிகா சரத்குமார், சுஹாசினி மணிரத்னம் உள்ளிட்டோரும் விழாவில் கலந்துகொண்டு உடனிருந்து வாழ்த்து தெரிவித்தனர். இந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. நடிகர் சிரஞ்சீவியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி சிந்துவை தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி, அவரது வீட்டிற்கு அழைத்துப் பாராட்டினார்.
சமீபத்தில் நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாறு படைத்தார் பி.வி.சிந்து.

ஏற்கனவே, கடந்த 2016 இல் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார் பிவி சிந்து. இந்த நிலையில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி பி.வி சிந்துவையும் அவரது குடும்பத்தினரையும் தனது வீட்டிற்கு நேரில் அழைத்து விருந்து வைத்துப் பாராட்டினார்.

அவருடன், அவரது மகன் ராம் சரண், மகள்கள் மற்றும் குடும்பத்தினர், நடிகர்கள் நாகர்ஜுனா, வருண் தேஜ், ராணா, அகில் அக்கேனி, நடிகைகள் ராதிகா சரத்குமார், சுஹாசினி மணிரத்னம் உள்ளிட்டோரும் விழாவில் கலந்துகொண்டு உடனிருந்து வாழ்த்து தெரிவித்தனர். இந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. நடிகர் சிரஞ்சீவியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3Dph2zw
via IFTTT
Comments
Post a Comment