’கசட தபற’ வெற்றியை கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழுவினர் இயக்குநர் சிம்பு தேவனின் ’கசட தபற’ ஆந்தாலஜி திரைப்படத்தின் வெற்றியையொட்டி படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். கடந்த 2015 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘புலி’ படத்திற்குப் பிறகு இயக்குநர் சிம்புதேவன் ‘கசட தபற’ ஆந்தாலஜி படத்தை இயக்கியுள்ளார். இயக்குநர் வெங்கட் பிரபுவும், டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவிச்சந்திரனும் இப்படத்தை இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ’கசட தபற’ வில் இடம்பெறும் ஆறு கதைகளையும் சிம்புதேவனே இயக்கி இருக்கிறார். இதற்குமுன், ஓடிடி தளங்களில் வெளியான ‘புத்தம் புது காலை’, ‘பாவக்கதைகள்’, ‘நவரசா’ ஆந்தாலஜி படங்களில் இடம்பெற்ற ஒவ்வொரு கதைகளையும் வெவ்வேறு இயக்குநர்கள் இயக்கியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்,‘கசட தபற’ நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி வெளியாகி பாராட்டுகளையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. படம் பார்த்தவர்கள் அனைவருமே குறிப்பாக, ‘சிம்புதேவன் இஸ் பேக்’ என்று பாராட்டிவரும் நிலையில், வெங்கட் பிரபு, சிம்புதேவன், ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டி வெற்றியை கொண்டாடியுள்ளனர். வெங்கட் பிரபு அந்தப் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இதையும் படிக்கலாமே: திருச்சி, விருதாச்சலத்தில் ’விஜய் விலையில்லா விருந்தகம்’ துவக்கிய விஜய் மக்கள் இயக்கம் Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

இயக்குநர் சிம்பு தேவனின் ’கசட தபற’ ஆந்தாலஜி திரைப்படத்தின் வெற்றியையொட்டி படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘புலி’ படத்திற்குப் பிறகு இயக்குநர் சிம்புதேவன் ‘கசட தபற’ ஆந்தாலஜி படத்தை இயக்கியுள்ளார். இயக்குநர் வெங்கட் பிரபுவும், டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவிச்சந்திரனும் இப்படத்தை இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ’கசட தபற’ வில் இடம்பெறும் ஆறு கதைகளையும் சிம்புதேவனே இயக்கி இருக்கிறார். இதற்குமுன், ஓடிடி தளங்களில் வெளியான ‘புத்தம் புது காலை’, ‘பாவக்கதைகள்’, ‘நவரசா’ ஆந்தாலஜி படங்களில் இடம்பெற்ற ஒவ்வொரு கதைகளையும் வெவ்வேறு இயக்குநர்கள் இயக்கியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்,‘கசட தபற’ நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி வெளியாகி பாராட்டுகளையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

படம் பார்த்தவர்கள் அனைவருமே குறிப்பாக, ‘சிம்புதேவன் இஸ் பேக்’ என்று பாராட்டிவரும் நிலையில், வெங்கட் பிரபு, சிம்புதேவன், ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டி வெற்றியை கொண்டாடியுள்ளனர். வெங்கட் பிரபு அந்தப் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
இதையும் படிக்கலாமே: திருச்சி, விருதாச்சலத்தில் ’விஜய் விலையில்லா விருந்தகம்’ துவக்கிய விஜய் மக்கள் இயக்கம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3mJoVK6
via IFTTT
Comments
Post a Comment