கவனம் ஈர்க்கும் பிரபாஸ் - பூஜா ஹெக்டேவின் ‘ராதே ஷ்யாம்’ போஸ்டர் பிரபாஸ் நடிக்கும் ’ராதே ஷ்யாம்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘சாஹோ’ படத்திற்குப் பிறகு பிரபாஸ் ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில்‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். முழுக்க முழுக்க காதல் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் பாக்யஸ்ரீ, சச்சின் கடேகர், முரளி சர்மா என பலரும் நடித்துள்ளனர்.1970-களில் ஐரோப்பாவில் நடக்கும் காதல் கதையாக உருவாக்கப்படும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. சமீபத்தில், இப்படத்தின் பிரபாஸ் - பூஜா ஹெக்டே காதல் காட்சி புகைப்படங்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்த நிலையில், இன்று கிருஷ்ண ஜெயந்தியையொட்டி பிரபாஸ் - பூஜா ஹெக்டேவின் புதிய படத்தை வெளியிட்டுள்ளது படக்குழு. புகைப்படத்தில் மயில் இறகுடன் கொண்ட கவனம் ஈர்க்கும் காஸ்டியூமில் பூஜா ஹெக்டே பியானோ வாசிக்க, அவர் வாசிக்கும் அழகை பிரபாஸ் காதலுடன் ரசிக்கும் புதிய புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை, ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள். இதையும் படிக்கலாமே: யூடியூபில் 250 மில்லியன் பார்வைகளைக் கடந்த ’வாத்தி கம்மிங்’ Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

பிரபாஸ் நடிக்கும் ’ராதே ஷ்யாம்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.
கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘சாஹோ’ படத்திற்குப் பிறகு பிரபாஸ் ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில்‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். முழுக்க முழுக்க காதல் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் பாக்யஸ்ரீ, சச்சின் கடேகர், முரளி சர்மா என பலரும் நடித்துள்ளனர்.1970-களில் ஐரோப்பாவில் நடக்கும் காதல் கதையாக உருவாக்கப்படும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

சமீபத்தில், இப்படத்தின் பிரபாஸ் - பூஜா ஹெக்டே காதல் காட்சி புகைப்படங்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்த நிலையில், இன்று கிருஷ்ண ஜெயந்தியையொட்டி பிரபாஸ் - பூஜா ஹெக்டேவின் புதிய படத்தை வெளியிட்டுள்ளது படக்குழு. புகைப்படத்தில் மயில் இறகுடன் கொண்ட கவனம் ஈர்க்கும் காஸ்டியூமில் பூஜா ஹெக்டே பியானோ வாசிக்க, அவர் வாசிக்கும் அழகை பிரபாஸ் காதலுடன் ரசிக்கும் புதிய புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை, ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.
இதையும் படிக்கலாமே: யூடியூபில் 250 மில்லியன் பார்வைகளைக் கடந்த ’வாத்தி கம்மிங்’
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3gMv2JQ
via IFTTT
Comments
Post a Comment