Posts

Showing posts from December, 2022

விக்ரம், பீஸ்ட், KGF கலந்த கலவையா அஜித்தின் துணிவு படம்? - ட்ரெய்லர் சொல்லும் சேதி என்ன? 2023ம் ஆண்டு பிறக்கப் போகும் நேரத்தில் அஜித்தின் துணிவு படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டு ரசிகர்களின் மிகப்பெரிய ஆவலை தீர்த்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் #ThunivuTrailer ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. துணிவு ட்ரெய்லர் வெளியான சில நிமிடங்களிலேயே 1 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருக்கிறது. ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டிருக்கும் துணிவு படத்தின் தற்போதைய ட்ரெய்லரில் அஜித் வில்லனை போன்றே காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறார். அதன்படி சென்னை சிட்டியின் பிரபல வங்கி ஒன்றில் பட்டப்பகலில் தடாலடியாக புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளையை அரங்கேற்றும் வகையில் காட்சிகள் அமைந்திருக்கிறது. அதில், மக்கள் பணத்தை கொள்ளையடிக்குறியே வெக்கமா இல்ல என கேட்கும் போது மாஸ்கை கழற்றி இல்லைனு சிரிச்ச முகத்தோடு சொல்லும் வசனத்தோடு தொடங்குகிறது அஜித்தின் அறிமுகம். அதன் பின்னர், “Dont act like a hero. அந்த வேலைய நான் பாத்துக்குறேன்” , “என்ன மாதிரி ஒரு அயோக்கியப்பய மேல கைய வெக்கலாமா” ஆகிய வசனங்கள் அஜித் பேசுவது போல அமைந்திருக்கிறது. இதுபோக ட்ரெய்லரின் முடிவில் அஜித் போலிஸ் உடையில் துப்பாக்கி பயிற்சி செய்வதும் போலவும் காட்சிகள் இருக்கின்றன. படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டாலும் எந்த தேதியில் ரிலீசாகும் என்ற அறிவிப்பு வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் பலரும் விஜ்ஜயின் பீஸ்ட் படத்தின் இரண்டாம் பாகமா? அஜித்தின் அறிமுகம் விக்ரம் படத்தின் கமல் வரும் காட்சிய போல இருக்கிறதே? என்றெல்லாம் ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள். மேலும், கே.ஜி.எஃப் பட பாணியிலும் சில காட்சிகள் இருப்பதால் “நீங்க நல்லவரா கெட்டவரா?” என்றும் துணிவு ட்ரெய்லருக்கு பதிவுகள் சமூக வலைதளங்களில் பறந்து வருகிறது Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
2023ம் ஆண்டு பிறக்கப் போகும் நேரத்தில் அஜித்தின் துணிவு படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டு ரசிகர்களின் மிகப்பெரிய ஆவலை தீர்த்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் #ThunivuTrailer ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. துணிவு ட்ரெய்லர் வெளியான சில நிமிடங்களிலேயே 1 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருக்கிறது. ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டிருக்கும் துணிவு படத்தின் தற்போதைய ட்ரெய்லரில் அஜித் வில்லனை போன்றே காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறார். அதன்படி சென்னை சிட்டியின் பிரபல வங்கி ஒன்றில் பட்டப்பகலில் தடாலடியாக புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளையை அரங்கேற்றும் வகையில் காட்சிகள் அமைந்திருக்கிறது. அதில், மக்கள் பணத்தை கொள்ளையடிக்குறியே வெக்கமா இல்ல என கேட்கும் போது மாஸ்கை கழற்றி இல்லைனு சிரிச்ச முகத்தோடு சொல்லும் வசனத்தோடு தொடங்குகிறது அஜித்தின் அறிமுகம். அதன் பின்னர், “Dont act like a hero. அந்த வேலைய நான் பாத்துக்குறேன்” , “என்ன மாதிரி ஒரு அயோக்கியப்பய மேல கைய வெக்கலாமா” ஆகிய வசனங்கள் அஜித் பேசுவது போல அமைந்திருக்கிறது. இதுபோக ட்ரெய்லரின் முட...

”ஹீரோ மாதிரி நடிக்க வேண்டாம்.. அந்த வேலைய நான் பாத்துக்குறேன்” - துணிவு ட்ரெய்லர் இதோ! அஜித்தின் 61வது படமான துணிவு ட்ரெய்லரை வெளியிட்டது படக்குழு. ஹெச்.வினோத்தின் இயக்கத்தில், போனி கபூரின் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு இந்த கூட்டணியில் அஜித் மீண்டும் இணைந்திருக்கிறார். ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகிக் கொண்டிருக்கும் துணிவு படத்தில் ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். படத்தில் மஞ்சுவாரியர், ஜான் கொக்கேன் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். 2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி படம் ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டாலும் இதுவரை தேதி அறிவிக்கப்படவில்லை. இதனிடையே சில்லா சில்லா, காசேதான் கடவுளடா மற்றும் கேங்ஸ்டா ஆகிய மூன்று பாடல்கள் வெளியிடப்பட்டு அஜித் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. Just saw something. Buy extra crackers. Lots of extra crackers. — NIRAV SHAH (@nirav_dop) December 29, 2022 இப்படி இருக்கையில், படத்தின் ஒளிப்பதிவாளரான நீரவ் ஷா கடந்த இரு நாட்களுக்கு முன்பு, “அதிக அளவிலான பட்டாசுகளை வாங்கி வைத்திருங்கள்.” என பூடகமாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த துணிவு படத்தின் ட்ரெய்லரை 2023ன் ஆங்கில புத்தாண்டையொட்டி இன்று (டிச.,31) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டதும் ட்விட்டரில் #ThunivuTrailer என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கிலேயே இருந்து வருகிறது. இந்த நிலையில் துணிவு படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டது. முன்னதாக துணிவு படத்தின் மொத்த ரன்னிங் நேரம் 2 மணிநேரம் 23 நிமிடமாக இருக்கும் என தகவல் வெளியாகியிருந்தது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
அஜித்தின் 61வது படமான துணிவு ட்ரெய்லரை வெளியிட்டது படக்குழு. ஹெச்.வினோத்தின் இயக்கத்தில், போனி கபூரின் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு இந்த கூட்டணியில் அஜித் மீண்டும் இணைந்திருக்கிறார். ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகிக் கொண்டிருக்கும் துணிவு படத்தில் ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். படத்தில் மஞ்சுவாரியர், ஜான் கொக்கேன் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். 2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி படம் ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டாலும் இதுவரை தேதி அறிவிக்கப்படவில்லை. இதனிடையே சில்லா சில்லா, காசேதான் கடவுளடா மற்றும் கேங்ஸ்டா ஆகிய மூன்று பாடல்கள் வெளியிடப்பட்டு அஜித் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. Just saw something. Buy extra crackers. Lots of extra crackers. — NIRAV SHAH (@nirav_dop) December 29, 2022 இப்படி இருக்கையில், படத்தின் ஒளிப்பதிவாளரான நீரவ் ஷா கடந்த இரு நாட்களுக்கு முன்பு, “அதிக அளவிலான பட்டாசுகளை வாங்கி வைத்திருங்கள்.” என பூடகமாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத...

”நான் தப்பான ரிலேஷன்ஷிப்ல இருந்துட்டேன்” - மனம் திறந்த நடிகை அஞ்சலி! தமிழ் சினிமாவின் துருத்துருப்பான நடிகைகளில் ஒருவராக இருக்கக் கூடியவர் அஞ்சலி. தெலுங்கில் அறிமுகமாகியிருந்தாலும் கற்றது தமிழ், அங்காடி தெரு, வத்திக்குச்சி, எங்கேயும் எப்போதும், இறைவி, பேரன்பு போன்ற பல தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்திருக்கிறார் அஞ்சலி. இதனையடுத்து பல தனிப்பட்ட பிரச்னை காரணமாக சிறிது காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். அவ்வப்போது பாடல்களில் மட்டும் தலைக்காட்டி வந்த அஞ்சலி கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் மட்டும் நடித்து வந்தவர் தற்போது வெப் சீரிஸ் பக்கமும் எட்டிப்பார்த்திருக்கிறார். அதன்படி நெட்ஃப்ளிக்ஸில் வந்த anthology-யான பாவக் கதைகளில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஞ்சலி நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஹாட்ஸ்டாரில் வெளியான Fall என்ற சஸ்பென்ஸ் த்ரில்லர் வெப் சீரிஸில் நடித்திருக்கிறார் அஞ்சலி. இந்த வெப் சீரிஸின் புரோமோஷனுக்கான பல நேர்காணல்களில் பங்கேற்று வருகிறார் அஞ்சலி. அதில் ஒன்றில் தன்னுடைய ரிலேஷன்ஷிப்பில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. அதில், “தவறான ரிலேஷன்ஷிப்பில் இருந்ததால் என்னுடைய சினிமா வாழ்க்கையை கவனிக்க முடியாமல் போய்விட்டது. அது தவறான உறவு என்பதை உணர்ந்து அதிலிருந்து வெளியேறி இப்போது எனக்கான திரை வாய்ப்பில் முழு வீச்சில் இறங்கியிருக்கிறேன். ஏனெனில் அந்த உறவைவிட என்னுடைய கெரியர்தான் சிறந்தது என்ற முடிவில் இருக்கிறேன்.” இவ்வாறு அஞ்சலி கூறியிருக்கிறார். முன்னதாக எங்கேயும் எப்போதும் படத்துக்கு பிறகு நடிகர் ஜெய் உடன் பலூன் படத்திலும் நடித்ததை அடுத்து கோலிவுட்டின் அடுத்த நட்சத்திர couple என்றெல்லாம் ஜெய்-அஞ்சலி ஜோடி சிலாகிக்கப்பட்டது. அதுபோக தயாரிப்பாளர் ஒருவரது கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததால் இரண்டு ஆண்டுகளுக்கு சினிமாவில் இருந்து விலகி இருந்தார் என்ற செய்திகளும் பரவியது குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
தமிழ் சினிமாவின் துருத்துருப்பான நடிகைகளில் ஒருவராக இருக்கக் கூடியவர் அஞ்சலி. தெலுங்கில் அறிமுகமாகியிருந்தாலும் கற்றது தமிழ், அங்காடி தெரு, வத்திக்குச்சி, எங்கேயும் எப்போதும், இறைவி, பேரன்பு போன்ற பல தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்திருக்கிறார் அஞ்சலி. இதனையடுத்து பல தனிப்பட்ட பிரச்னை காரணமாக சிறிது காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். அவ்வப்போது பாடல்களில் மட்டும் தலைக்காட்டி வந்த அஞ்சலி கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் மட்டும் நடித்து வந்தவர் தற்போது வெப் சீரிஸ் பக்கமும் எட்டிப்பார்த்திருக்கிறார். அதன்படி நெட்ஃப்ளிக்ஸில் வந்த anthology-யான பாவக் கதைகளில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஞ்சலி நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஹாட்ஸ்டாரில் வெளியான Fall என்ற சஸ்பென்ஸ் த்ரில்லர் வெப் சீரிஸில் நடித்திருக்கிறார் அஞ்சலி. இந்த வெப் சீரிஸின் புரோமோஷனுக்கான பல நேர்காணல்களில் பங்கேற்று வருகிறார் அஞ்சலி. அதில் ஒன்றில் தன்னுடைய ரிலேஷன்ஷிப்பில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்திருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. ...

சிம்புவின் ‘பத்து தல’ திரைப்படம் ரிலீஸ் எப்போது? - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு! சிம்புவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்து தல’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீ முரளி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘மஃப்டி’ படத்தின் ரீமேக்தான் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்து தல’ திரைப்படம். இந்தப் படத்தை ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ ஆகியப் படங்களின் இயக்குநர் கிருஷ்ணா இயக்கியுள்ளார். பத்து தல படத்தில் சிம்புவுடன் கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சிம்புவின் பிறந்தநாளையொட்டி வெளியான இப்படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகள் வரவேற்பைப் பெற்ற நிலையில், டிசம்பர் 14-ம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ளதாக முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால், இடையில் நடிகர் சிம்பு தனது தந்தையின் உடல்நலக்குறைவு சிகிச்சை காரணமாக, அமெரிக்காவில் சில நாட்கள் இருந்ததால் படப்பிடிப்புகள் தடைப்பட்டது. மேலும் சில காரணங்களால் இந்தப் படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு நிறைவடைய தாமதமானது. இதனால், படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கன்னியாகுமரி, பெல்லாரி, விசாகாப்பட்டினம் போன்ற இடங்களில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தநிலையில், கடந்த மாதம் சென்னை விஜிபி கோல்டன் பீச்சில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்நிலையில், சிம்புவின் ‘பத்து தல’ திரைப்படம் அடுத்தாண்டு மார்ச் மாதம் 30-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் வெளியிட முதலில் முடிவு செய்யப்பட்ட நிலையில், தனுஷின் ‘வாத்தி’ உள்பட பலப் படங்கள் அந்த மாதத்தில் வெளியிடப்பட உள்ளதால், திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் நிலவியது. இதையடுத்து, மார்ச் மாதம் கடைசி வாரத்தில் இந்தப் படம் வெளியிடப்பட உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்நிலையில், தற்போது படக்குழு புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. இதன்படி படம் மார்ச் 20, 2023-ல் திரைக்கு வர உள்ளது. #PathuThala#PathuThalaFromMarch30 https://t.co/Fl8HC7Yp9r — Studio Green (@StudioGreen2) December 31, 2022 Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
சிம்புவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்து தல’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீ முரளி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘மஃப்டி’ படத்தின் ரீமேக்தான் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்து தல’ திரைப்படம். இந்தப் படத்தை ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ ஆகியப் படங்களின் இயக்குநர் கிருஷ்ணா இயக்கியுள்ளார். பத்து தல படத்தில் சிம்புவுடன் கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சிம்புவின் பிறந்தநாளையொட்டி வெளியான இப்படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகள் வரவேற்பைப் பெற்ற நிலையில், டிசம்பர் 14-ம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ளதாக முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால், இடையில் நடிகர் சிம்பு தனது தந்தையின் உடல்நலக்குறைவு சிகிச்சை காரணமாக, அமெரிக்காவில் சில நாட்கள் இருந்ததால் படப்பிடிப்புகள் தடைப்பட்டது. மேலும் சில காரணங்களால் இந்தப் படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு நிறைவடைய தாமதமானது. இதனால், படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவத...

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தின் அப்டேட் - படக்குழு பகிர்ந்த புகைப்படம்! வெற்றிமாறனின் ‘விடுதலை’ திரைப்படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய சிறுகதையான ‘துணைவன்’ என்றக் கதையை தழுவி ‘விடுதலை’ திரைப்படம் எடுக்கப்பட்டு வந்தது. தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்தப் படத்தை வெளியிட உள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வெகுநாட்களாக சத்தியமங்கலம், சிறுமலை, கொடைக்கானல், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துவந்த நிலையில், தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 'விடுதலை' படபிடிப்பு நிறைவு#Viduthalai shooting wrapped #VetriMaaran Annan@ilaiyaraaja Sir@elredkumar Sir@VijaySethuOffl mama@VelrajR Annan@PeterHeinOffl @BhavaniSre@mani_rsinfo @rsinfotainment @RedGiantMovies_ Thanks for all technicians & team  pic.twitter.com/TZKARRdH92 — Actor Soori (@sooriofficial) December 30, 2022 ‘அசுரன்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியுள்ள திரைப்படம் ‘விடுதலை’. விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘கோ’, ‘நீ தானே என் பொன்வசந்தம்’ உட்பட பல படங்களை தயாரித்த எல்ரெட் குமாரின் ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சூரி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைக்கும் இந்தப் படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏற்கனவே இந்தப் படத்தின் முதல் பாகம் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளில் இருப்பதால், விரைவில் படத்தின் வெளியீடு குறித்த தகவல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
வெற்றிமாறனின் ‘விடுதலை’ திரைப்படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய சிறுகதையான ‘துணைவன்’ என்றக் கதையை தழுவி ‘விடுதலை’ திரைப்படம் எடுக்கப்பட்டு வந்தது. தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்தப் படத்தை வெளியிட உள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வெகுநாட்களாக சத்தியமங்கலம், சிறுமலை, கொடைக்கானல், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துவந்த நிலையில், தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 'விடுதலை' படபிடிப்பு நிறைவு #Viduthalai shooting wrapped #VetriMaaran Annan @ilaiyaraaja Sir @elredkumar Sir @VijaySethuOffl mama @VelrajR Annan @PeterHeinOffl @BhavaniSre @mani_rsinfo @rsinfotainment @RedGiantMovies_ Thanks for all technicians & team  pic.twitter.com/TZKARRdH92 — Actor Soori (@sooriofficial) December 30, 2022 ‘அசுரன்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வெற்...

ஃபேஸ்புக் முதல் உலக அரசியல் வரை.. துணிச்சலாக களமிறங்கும் ’த்ரிஷா’ - ராங்கியாக ஜொலித்தாரா? தன் அண்ணன் மகளுக்கு நேரும் ஒரு சிக்கலுக்காக இணையதளத்துக்குள் குதிக்கும் பத்திரிகையாளருக்கு என்னென்ன சிக்கல்கள் உண்டாகிறது என்பதைச் சொல்கிறது இந்த ‘ராங்கி’. ஆன்லைன் ஊடகத்தில் வேலைப் பார்க்கும் ’தையல்நாயகி’ அசாத்திய துணிச்சல்காரர். ரோந்தில் ஈடுபடும் காவல்துறை அதிகாரி பேசும் தகாத வார்த்தைகளை வீடியோவாக்கி தன் துணிச்சலை மீண்டும் சென்னைக்கு எடுத்துரைக்கிறார். வீர தீர செயல்கள் செய்யும் தையல்நாயகிக்கு, எதிர்பார்த்ததைப் போலவே வீட்டில் சுத்தமாய் மரியாதை இல்லை. அண்ணி திட்டித் தீர்க்க, அண்ணன் மகள் மட்டுமே ஒரே ஆதரவு. அப்படிப்பட்ட அண்ணன் மகளுக்கு ஒரு சிக்கல் வர, அந்த சிக்கலுக்காக ஃபேஸ்புக்கில் தையல்நாயகியே சாட் செய்ய நேர்கிறது. சின்னப் பிரச்னை தான் என நம்பி உள்ளே நுழையும் தையல்நாயகி பெரிய லெவல் தீவிரவாத கும்பலுக்குள் சிக்கிக்கொள்கிறார். ஓர் இரவில் உள்ளூர் போலீஸ் டூ எஃப்.பி.ஐ. வரை தையல்நாயகி புகழ் பரவுகிறது. யார் அந்த தீவிரவாத கும்பல், தையல்நாயகியின் குடும்பத்துக்கு என்ன ஆனது, உண்மையில் அவர்கள் தீவிரவாதிகள் தானா போன்ற கேள்விகளுடன் முடிகிறது ‘ராங்கி’. தையல்நாயகியாக த்ரிஷா. உண்மையில் இப்போது யாருமே இங்கு நிஜமான பத்திரிகையாளர்கள் இல்லை, எல்லோரும் வெறுமனே ஏதோவொரு பாதுகாப்பான செய்திக்குள் தங்களை புகுத்திக்கொள்கிறார்கள் என நம்பும் கதாபாத்திரம். கௌரி லங்கேஷ் முதல் ஆண் - பெண் சிக்கல்கள் வரை புரிந்து வைத்திருக்கும் திறமைசாலி. அண்ணன் மகளுக்கு நேரும் ஒரு பாலியல் சார்ந்த பிரச்னையை அவர் டீல் செய்யும் விதம் நன்று. த்ரிஷாவின் அண்ணன் மகளாக அனஸ்வர ராஜன், அண்ணியாக லிஸி, காவல்துறை அதிகாரியாக இயக்குநர் ஜான் மகேந்திரன் என சின்ன சின்ன கதாபாத்திரங்களில் வருபவர்களும் தங்களுக்கு கொடுத்தப் பணியை செய்திருக்கிறார்கள். அறிமுகம் இல்லாத நபருடனான ஃபேஸ்புக் சாட் நம்மை எங்கு வேண்டுமானாலும் இட்டுச் செல்லலாம் என்கிற திடுக்கிட வைக்கும் விஷயத்தை வைத்து உலக அரசியலை பேசியிருக்கிறார் ‘ராங்கி’யை எழுதிய இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ். க்ளைமேக்ஸில் வரும் துப்பாக்கிகள் சூழ் சண்டைக்காட்சியில் ராஜசேகரின் உழைப்பு தெரிகிறது. ஷக்திவேலின் ஒளிப்பதிவும், சுபாரக்கின் படத்தொகுப்பும் பக்கா. ஒன்லைனாக சுவாரஸ்யமாக இருக்கும் ‘ராங்கி’, திரைக்கதையாகவும், எடுக்கப்பட்ட விதத்திலும் சோதனைக்களமாக மாறியிருப்பதுதான் வேதனை. ஒரு சிறுமியின் புகைப்படத்தை வைத்து ஃபேஸ்புக் அக்கௌண்ட் பயன்படுத்துவது எவ்வளவு அபத்தம் என கிளாஸ் எடுத்துவிட்டு, படம் நெடுக அதையே செய்வது; கௌரி லங்கேஷ் தெரியும், ஆனால் டுனிஷியாவில் என்ன பிரச்னை என தெரியாது; அத்தனை பேர் கொல்லப்பட்ட பின்பும் சீரியஸாகாமல் ரொமாண்டிக் மோடிலேயே சுற்றுவது; எல்லோரையும் பணயம் வைக்கும் அளவுக்கு வந்த பின்னும் வாய்ஸ் ஓவரில் சமூக அக்கறை பேசுவது என முரண்பாடுகளின் மூட்டையாக குவிந்துகிடக்கிறது தையல்நாயகியின் கதாபாத்திரம். வெளிப்படையாக சிக்கிக்கொண்ட அமைச்சர் விபத்தில் இறந்தால் சந்தேகம் வருவதில் ஆரம்பித்து, ஆலிம் எப்படி இந்தியா வந்து சென்றார் வரை அத்தனை லாஜிக் அத்துமீறல்கள். வம்படியாக சிக்கிக்கொண்ட பின்பும், மீண்டும் மீண்டும் மாட்டிக்கொள்வதற்காகவே எழுதப்பட்ட ஜான் மகேந்திரன் கதாபாத்திரம் என சுவாரஸ்ய ஒன்லைனரில் ரோடு லோரைவிட்டு ஏற்றியிருக்கிறார்கள். ரொம்பவே ராங்காக இருக்கிறது இந்த ராங்கி. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
தன் அண்ணன் மகளுக்கு நேரும் ஒரு சிக்கலுக்காக இணையதளத்துக்குள் குதிக்கும் பத்திரிகையாளருக்கு என்னென்ன சிக்கல்கள் உண்டாகிறது என்பதைச் சொல்கிறது இந்த ‘ராங்கி’. ஆன்லைன் ஊடகத்தில் வேலைப் பார்க்கும் ’ தையல்நாயகி’ அசாத்திய துணிச்சல்காரர். ரோந்தில் ஈடுபடும் காவல்துறை அதிகாரி பேசும் தகாத வார்த்தைகளை வீடியோவாக்கி தன் துணிச்சலை மீண்டும் சென்னைக்கு எடுத்துரைக்கிறார். வீர தீர செயல்கள் செய்யும் தையல்நாயகிக்கு, எதிர்பார்த்ததைப் போலவே வீட்டில் சுத்தமாய் மரியாதை இல்லை. அண்ணி திட்டித் தீர்க்க, அண்ணன் மகள் மட்டுமே ஒரே ஆதரவு. அப்படிப்பட்ட அண்ணன் மகளுக்கு ஒரு சிக்கல் வர, அந்த சிக்கலுக்காக ஃபேஸ்புக்கில் தையல்நாயகியே சாட் செய்ய நேர்கிறது. சின்னப் பிரச்னை தான் என நம்பி உள்ளே நுழையும் தையல்நாயகி பெரிய லெவல் தீவிரவாத கும்பலுக்குள் சிக்கிக்கொள்கிறார். ஓர் இரவில் உள்ளூர் போலீஸ் டூ எஃப்.பி.ஐ. வரை தையல்நாயகி புகழ் பரவுகிறது. யார் அந்த தீவிரவாத கும்பல், தையல்நாயகியின் குடும்பத்துக்கு என்ன ஆனது, உண்மையில் அவர்கள் தீவிரவாதிகள் தானா போன்ற கேள்விகளுடன் முடிகிறது ‘ராங்கி’. தையல்நாயகியாக த்ரிஷா. உண்மையில் இப்போது யா...

”பேத்திக்காக பாட்டி நடத்தும் போராட்டம்” - ரசிகர்களை கவர்ந்ததா ‘செம்பி’? - திரைப்பார்வை பேத்திக்காக ஒரு பாட்டி நடத்தும் போராட்டம் தான் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியிருக்கும்`செம்பி’ படத்தின் ஒன்லைன். கொடைக்கானல், புலியூரில் வசிக்கும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் வீரத்தாயி (கோவை சரளா). அவரது பத்து வயது பேத்தி செம்பி (நிலா). மலையில் கிடைக்கும் தேன், கிழங்கு போன்றவற்றை எடுத்து சந்தையில் விற்று வாழ்க்கையை நடத்துகிறார்கள். தன்னுடைய மகள், மருமகனை இழந்தப்பின் பேத்திக்கு இருக்கும் ஒரே ஆதரவு தான் மட்டுமே, அவளை எப்படியாவது படிக்க வைத்து மருத்துவர் ஆக்க வேண்டும் என்ற கனவில் இருக்கிறார் பாட்டி வீரத்தாயி. ஆனால் அந்தக் கனவை சிதைப்பது போல, ஒரு அசம்பாவிதம் நடக்கிறது. மூன்று பேரால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுகிறாள் சிறுமி செம்பி. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யார் எனக் கண்டுபிடித்து, அவர்களுக்கு சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என நினைக்கிறார் வீரத்தாயி. ஆனால், ஒரு கொலை கேஸில் குற்றவாளியாக வீரத்தாயியையே போலீஸ் தேடுகிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டார்களா, வீரத்தாயியை போலீஸ் தேடுவது ஏன்? இந்தக் கதையில் அஷ்வின் குமாரின் பங்கு என்ன? என்பதை எல்லாம் சொல்கிறது `செம்பி’. படத்தின் நிறைகள் எனப் பார்த்தால் பிரபு சாலமன் வழக்கம் போல மிக எளிமையான கதையை எடுத்துக் கொண்டு அதை அழுத்தமாக சொல்ல முயன்றிருக்கிறார். குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல், பழங்குடி இன மக்கள் நடத்தப்படும் விதம், பெண்கள் மேல் ஒழுக்கம் என்ற பெயரில் சுமத்தப்படும் பிற்போக்குத்தனங்கள் எனப் பலவற்றை கேள்வி கேட்பது படத்தின் ஹைலைட் என சொல்லலாம். நடிகர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் வரும் கோவை சரளா, அஷ்வின் குமார், தம்பி ராமையா என அனைவரும் சரியான பங்களிப்பை செய்திருக்கிறார்கள். சில இடங்களில் கோவை சரளா நடிப்பு பொருந்தவில்லை என்றாலும், எமோஷனலான காட்சிகளில் மிக அருமையாக நடித்திருக்கிறார். செம்பி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலா நல்ல அறிமுகம். இவர்களுடன் சேர்த்து இன்னொரு கதாபாத்திரமும் பார்வையாளர்களை கவர்கிறது. பேருந்தில் இருக்கும் அனைவரையும் வாடா, போடவென அழைத்து அந்தக் கதாபாத்திரம் செய்யும் காமெடி படத்தில் நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. மலை சார்ந்தப் பகுதிகளை அதன் ஈரத்தோடு பதிவு செய்திருப்பது, ஒரே பேருந்துக்குள் சுவாரஸ்யமான கோணங்கள் பிடித்தது, சேசிங் காட்சிகளில் த்ரில் கொடுப்பது என ஒளிப்பதிவாளர் ஜீவன் அபாரமாக உழைத்திருக்கிறார். நிவேஸ் கே பிரசன்னா இசையில் ‘ஆத்தி என் மேல’ பாடல் மிக சிறப்பாக இருந்தது. சில எமோஷனல் காட்சிகளில் பின்னணி இசையால் வலு சேர்த்திருக்கிறார். இதைத் தாண்டி ஒரு ப்ளஸ், சமீபகாலமாக பல, பாலியல் குற்றங்களைப் பற்றிய படங்களில் சொல்லப்படும் அதே கருத்தை செம்பியும் வலியுறுத்தி இருப்பது. பாலியல் குற்றவாளிகளுக்கான தண்டனையை எமோஷனலாக கையாளாமல், அவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை பதிவு செய்திருக்கிறது படம். ‘செம்பி’ படத்தின் குறைகள் எனப் பார்த்தால், உணர்வு ரீதியாக முடிந்த வரை அழுத்தமாக கதையை பிரபு சாலமன் சொல்லியிருந்தாலும், லாஜிக்காக யோசித்தால் பல சிக்கல்கள் வருகிறது. ஒரு குறிப்பிட்ட காட்சியில், ஒரு பஸ்ஸுக்குள் மினி சைபர் க்ரைம் டீமே இருப்பது போன்று, விறுவிறுப்பாக நடக்கும் விஷயங்கள் எதுவும் நம்பும்படியாக இல்லை. அது கதையை தன் வசதிக்கு ஏற்ப இயக்குநர் எழுதிக் கொள்ள மட்டுமே உதவியிருக்கிறதே தவிர, கதையின் போக்கில் நிகழ்ந்த மாதிரி இல்லை. சில எமோஷனலான காட்சிகள் கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகி, அதிகப்படியாக காட்சிகள் நீட்டபட்ட உணர்வும் எழுகிறது. வில்லன்களாக காட்டப்பட்டிருக்கும் அந்த மூவரின் நடிப்பும் மிக செயற்கையாக துருத்திக் கொண்டு தெரிந்தது. இதையும் மீறி, அஷ்வின் குமார் நடித்திருக்கும் கதாபாத்திரம் சட்டத்தை பிரதிபலிப்பதாக வருகிறதா? அல்லது கடவுளைப் பிரதிபலிப்பதாக வருகிறதா என்ற குழப்பம் ஏன் என்ற கேள்வியும் எழுகிறது. இது போன்று நிறைகளும், குறைகளும் சேர்ந்தே தான் உருவாகியிருக்கிறது படம். இவற்றை சரி செய்திருந்தால், இந்த வருடத்தில் பாலியல் குற்றங்கள் பற்றிப் பேசிய, ‘கார்கி’, ‘அனல் மேலே பனித்துளி’ போன்ற படங்கள் போல குறிப்பிட்டு சொல்லும்படியான சினிமாவாக மாறியிருக்கும் இந்த ‘செம்பி’. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
பேத்திக்காக ஒரு பாட்டி நடத்தும் போராட்டம் தான் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியிருக்கும்`செம்பி’ படத்தின் ஒன்லைன். கொடைக்கானல், புலியூரில் வசிக்கும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் வீரத்தாயி (கோவை சரளா). அவரது பத்து வயது பேத்தி செம்பி (நிலா). மலையில் கிடைக்கும் தேன், கிழங்கு போன்றவற்றை எடுத்து சந்தையில் விற்று வாழ்க்கையை நடத்துகிறார்கள். தன்னுடைய மகள், மருமகனை இழந்தப்பின் பேத்திக்கு இருக்கும் ஒரே ஆதரவு தான் மட்டுமே, அவளை எப்படியாவது படிக்க வைத்து மருத்துவர் ஆக்க வேண்டும் என்ற கனவில் இருக்கிறார் பாட்டி வீரத்தாயி. ஆனால் அந்தக் கனவை சிதைப்பது போல, ஒரு அசம்பாவிதம் நடக்கிறது. மூன்று பேரால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுகிறாள் சிறுமி செம்பி. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யார் எனக் கண்டுபிடித்து, அவர்களுக்கு சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என நினைக்கிறார் வீரத்தாயி. ஆனால், ஒரு கொலை கேஸில் குற்றவாளியாக வீரத்தாயியையே போலீஸ் தேடுகிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டார்களா, வீரத்தாயியை போலீஸ் தேடுவது ஏன்? இந்தக் கதையில் அஷ்வின் குமாரின் பங்கு என்ன? என்பதை எல்லாம் சொல்கிறது `செம்பி...

‘செம்பி’ படம் உணர்வுகளின் கோர்வை’ - இயக்குநர் பிரபு சாலமன் பகிர்ந்த சுவாரஸ்யம் ‘மைனா’, ‘கும்கி’ உள்ளிட்ட படங்களின் மூலம் தனிக் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரபு சாலமன், தற்போது ‘செம்பி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ‘மைனா’ படத்தில் பேருந்துப் பயணத்தை வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட நிலையில், அதேபோன்றதொரு பேருந்துப் பயணத்தை வைத்து மீண்டும் த்ரில்லிங்கான கதைக்களத்தை கையாண்டுள்ளார் ‘செம்பி’ படத்தின் மூலம் இயக்குநர் பிரபு சாலமன். மூத்த நகைச்சுவை நடிகையான கோவை சரளா இந்தப் படத்தில் 70 வயது பெண் பயணியாக சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘என்ன சொல்லப் போகிறாய்’ படத்தில் அறிமுகமான ‘குக் வித் கோமாளி’ புகழ் அஸ்வின் குமார் மற்றும் தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசைமையத்துள்ளார். ஜீவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரெயிலர் அண்மையில் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில், ‘செம்பி’ படத்தின் இயக்குநர் பிரபு சாலமன், மூத்த நடிகை கோவை சரளா, அஸ்வின் ஆகியோர் புதிய தலைமுறை சேனலுக்கு சிறப்பு நேர்காணல் அளித்துள்ளனர். அதில், ‘செம்பி’ படம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த இயக்குநர் பிரபு சாலமன், “ ‘செம்பி’ படம் உணர்வுகளின் கோர்வை. மலைக்காட்டில் வாழுகிற ஒரு பாட்டியும், பேத்தியும், தரைக்காட்டில் வாழுகிற சில ஜனங்களும் இவர்கள் எல்லாம் இணைந்து பயணம் செய்யும்போது நடக்கும் விஷயங்கள் தான் படத்தின் கதை. அதாவது ஒருநாள் நடக்கிற பயணம்தான் கதை. இந்தக் கதைக்கு மறைந்த மனோரமா ஆச்சி போன்று ஒருவர் தேவைப்பட்டபோது, கோவை சரளா தான் எனக்கு சரியென்று பட்டார்” என்று தெரிவித்தார். மேலும் மலைக் கிராமங்கள் மக்களிடம் நிறைய கதைகள் இருக்கிறது, அவர்களுக்கு என ஒரு உலகம், ஆச்சரியமான விஷயங்கள் நிறைய இருக்கும், அவர்களைப் போன்றவர்கள் தான் இந்த ‘செம்பி’ படத்தில் வரும் வீரத் தாய் என்ற கதாபாத்திரமும், பேத்தியும் என்று கூறியுள்ளார். சொல்லப்போனால் ‘மலைக்கிராம மக்கள் தான் வாழுறாங்க, நாம பொழச்சிட்டு இருக்கோம்’ என்றும் இயக்குநர் பிரபு சாலமன் தெரிவித்துள்ளார். படம் பார்க்கும் ரசிகர்களுக்கு கண்டிப்பாக, அவர்களும் இந்தப் படத்தின் பயணிகளில் ஒருவராக தங்களை நினைப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
‘மைனா’, ‘கும்கி’ உள்ளிட்ட படங்களின் மூலம் தனிக் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரபு சாலமன், தற்போது ‘செம்பி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ‘மைனா’ படத்தில் பேருந்துப் பயணத்தை வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட நிலையில், அதேபோன்றதொரு பேருந்துப் பயணத்தை வைத்து மீண்டும் த்ரில்லிங்கான கதைக்களத்தை கையாண்டுள்ளார் ‘செம்பி’ படத்தின் மூலம் இயக்குநர் பிரபு சாலமன். மூத்த நகைச்சுவை நடிகையான கோவை சரளா இந்தப் படத்தில் 70 வயது பெண் பயணியாக சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘என்ன சொல்லப் போகிறாய்’ படத்தில் அறிமுகமான ‘குக் வித் கோமாளி’ புகழ் அஸ்வின் குமார் மற்றும் தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசைமையத்துள்ளார். ஜீவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரெயிலர் அண்மையில் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில், ‘செம்பி’ படத்தின் இயக்குநர் பிரபு சாலமன், மூத்த நடிகை கோவை சரளா, அஸ்வின் ஆகியோர் புதிய தலைமுறை சேனலுக்கு சிறப்பு நேர்காணல் அளித்துள்ளனர். அதில்,  ‘செம்பி’ படம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த இயக்குநர் பி...

"சம்ஜா... புரிஞ்சுச்சா?"- விமான நிறுவனங்களை டேக் செய்து கோபப்பட்ட பாடகர் பென்னி தயாள்! பிரபல பாடகர் பென்னி தயாள், விமான நிறுவனங்கள் எதுவும் இசைக்கருவிகளை சரியாக கையாள்வதில்லை என்றும், அதன்மீது குறைந்தபட்ச பராமரிப்பு கூட விமான ஊழியர்களால் காட்டப்படுவதில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் Vistara, Air India, Indigo, Air Asia India, Spice jet airlines, Akasa Air என அனைத்து விமான நிறுவனங்களையும் டேக் செய்து வீடியோ பகிர்ந்துள்ளார் பாடகர் பென்னி தயாள். அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளவை பின்வருமாறு: “இந்தியாவின் அனைத்து விமான சேவைகளுக்கும் ஒரு சின்ன விஷயம் சொல்ல விரும்புகிறேன். ஒவ்வொரு இசைக்கலைஞரும், பணம் சம்பாதிக்க மிகக்கடுமையாக உழைக்கின்றார். அப்படியான அவர்களின் சம்பளத்துக்கு வித்திடுவது, நீங்கள் அவர்களின் இசைக்கருவிகளை எப்படி கையாள்கின்றீர்கள் என்பதை பொறுத்துதான் அமையும். ஒவ்வொரு முறையும் கான்செர்ட், இசை நிகழ்ச்சிகள் என பல்வேறு நாடுகளுக்கு இசைக்கலைஞர்கள் இந்தியாவுக்கும் உள்ளேயேயும், இந்தியாவிலிருந்தும் பயணிக்கின்றனர். அப்படி பயணிக்கும் அவர்களின் இசைக்கருவிகளை பாதுகாப்பாக கையாள வேண்டும் என்ற அக்கறை, இந்தியாவில் இண்டிகோ, விஸ்தாரா, ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட் போன்ற எந்த விமான நிறுவனத்துக்குமே கொஞ்சம் கூட இருப்பதில்லை (இதை Zero Love or Zero Care என்று தன் வீடியோவில் குறிப்பிடுகிறார்). இதுபற்றி ஏராளமான இசைக்கலைஞர்கள் வீடியோக்கள் வழியாக குறையாக பகிர்ந்துள்ளனர். நானே அப்படிப்பட்ட பல வீடியோக்களை பார்த்துள்ளேன். இதுபோன்ற நிகழ்வுகள் எனக்கும்கூட நேரடியாக நடந்துள்ளது. விஸ்தாரா நிறுவன விமானத்தில் நான் பயணிக்கையில், என்னுடைய இரண்டு பைகளில் இருந்த அனைத்து கருவிகளும் 7 நாள் இடைவெளிக்குள் உடைந்த நிலையில் எனக்கு கிடைக்கப்பட்டன. அந்த உடைந்த பொருள்களுக்கு, நீங்கள்தான் பொறுப்பு. எனக்கு என்னுடைய பொருட்கள் வேண்டும். விஸ்தாராவின் பயணிகள் சேவை, மிக மிக மிக மோசமாக உள்ளது. இதேபோலதான் இண்டிகோவும். உங்களுக்கு இசைக்கலைஞர்கள் மீதும், அவர்களின் உணர்வுகள் மீதும் ஜீரோ என்ற அளவில்தான் அக்கறை உள்ளது. லக்கேஜை ஹேண்டில் செய்ய நீங்கள் நியமித்திருக்கும் நபர்களிடம், எதை எப்படி கையாள வேண்டும் என்றுகூட நீங்கள் சொல்லிக்கொடுப்பதில்லை. அப்படி நீங்கள் செய்யும் தவறுகளினால், மீண்டும் மீண்டும் எங்களுடைய கருவிகள் உடைந்த நிலையிலேயே எங்களுக்கு கிடைக்கிறது. உங்கள் போக்குவரத்தை பயன்படுத்தி ஒவ்வொரு முறை ஒவ்வொருவர் தங்கள் கருவிகளை கொண்டு செல்லும்போதும், அது உங்களால் ஏதாவதொரு வகையில் உடைக்கப்பட்டு விடுவதை காணமுடிகிறது. ஆனால் நீங்களோ, அதற்கு கொஞ்சம் கூட பொறுப்பெடுத்துக்கொள்ள மாட்டேன் என உள்ளீர்கள். இப்படியான மனப்போக்கை, நிச்சயமாக ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு உங்கள் விமானத்தில் பயணிப்பவர்கள், இறுதியில் தங்கள் பொருள் உடைந்திருப்பதை பார்க்கவா விரும்புவார்கள்? தயவுசெய்து இப்படி செய்யாதீர்கள். உங்களை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்… தயவுசெய்து எங்கள் கருவிகளை உடைக்காதீர்கள். அவற்றை கொஞ்சமாவது அக்கறையுடன் கையாளுங்கள். அந்தக் கருவிகள் தான் எங்களுக்கு சாப்பாடு போடுகிறது. அதை இவ்வளவு அலட்சியமாகவும் மோசமாகவும் கையாளாதீர்கள். நான் சொல்வது உங்களுக்கு புரிகிறதா? (தமிழிலும் இந்தியிலும் புரிகிறதா என சற்று கோபத்துடன் வீடியோவில் கேட்டுள்ளார் பென்னி தயாள்) ஒவ்வொரு முறையும் நாங்கள் (இசைக்கலைஞர்கள்) அனைத்து லக்கேஜூக்கும் உரிய வகையில் கட்டணம் செலுத்துகிறோம். அவற்றை ஒழுங்காக அடுக்கி, மிக மிக பாதுகாப்பாக அடுக்கி தருகிறோம். அதனால்… தயவு செய்து… தயவுசெய்து… கெஞ்சி கேட்கிறேன்... பொறுப்புடன் எங்கள் கருவிகளை கையாளுங்கள். கொஞ்சமாவது பொறுப்புடன் இருங்கள்” என கடுமையான குரலில் வேண்டுகோளாக முன்வைத்துள்ளார். பென்னி தயாலின் வீடியோவை இங்கு காணலாம்:   View this post on Instagram A post shared by BENNY DAYAL (@bennydayalofficial) அவரது இந்த பதிவுக்கு பல இசைக்கலைஞர்கள் கமெண்ட் வழியே ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் ஏதேனும் நடவடிக்கை எடுக்குமா, பதில் சொல்லுமா என்பதே தற்போது இசைக்கலைஞர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
பிரபல பாடகர் பென்னி தயாள், விமான நிறுவனங்கள் எதுவும் இசைக்கருவிகளை சரியாக கையாள்வதில்லை என்றும், அதன்மீது குறைந்தபட்ச பராமரிப்பு கூட விமான ஊழியர்களால் காட்டப்படுவதில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் Vistara, Air India, Indigo, Air Asia India, Spice jet airlines, Akasa Air என அனைத்து விமான நிறுவனங்களையும் டேக் செய்து வீடியோ பகிர்ந்துள்ளார் பாடகர் பென்னி தயாள். அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளவை பின்வருமாறு: “இந்தியாவின் அனைத்து விமான சேவைகளுக்கும் ஒரு சின்ன விஷயம் சொல்ல விரும்புகிறேன். ஒவ்வொரு இசைக்கலைஞரும், பணம் சம்பாதிக்க மிகக்கடுமையாக உழைக்கின்றார். அப்படியான அவர்களின் சம்பளத்துக்கு வித்திடுவது, நீங்கள் அவர்களின் இசைக்கருவிகளை எப்படி கையாள்கின்றீர்கள் என்பதை பொறுத்துதான் அமையும். ஒவ்வொரு முறையும் கான்செர்ட், இசை நிகழ்ச்சிகள் என பல்வேறு நாடுகளுக்கு இசைக்கலைஞர்கள் இந்தியாவுக்கும் உள்ளேயேயும், இந்தியாவிலிருந்தும் பயணிக்கின்றனர். அப்படி பயணிக்கும் அவர்களின் இசைக்கருவிகளை பாதுகாப்பாக கையாள வேண்டும் என்ற அக்கறை, இந்தியாவில் ...

"அடுத்த 2 வருடங்களில் 12 படங்கள் "- மெகா திட்டத்துடன் KGF, காந்தாரா தயாரிப்பாளர் பேட்டி! “வருடத்துக்கு ஒரு பெரிய ஹிட் படம் என்பது எங்கள் இலக்கு” என கே.ஜி.எஃப் படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் கூறியுள்ளார் 2022ல் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த படங்களின் பட்டியலில் கன்னட சினிமாவிலிருந்து வெளிவந்த கே.ஜி.எஃப் மற்றும் காந்தாரா படங்கள் இருந்தன. இரண்டு படங்களுக்குமே ஒரு தயாரிப்பு நிறுவனம் என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியது. Hombale என்ற ப்ரொடக்‌ஷனின் நிறுவனரான விஜய் கிரகந்தூர்தான் அந்த தயாரிப்பாளர். கே.ஜி.எஃப் படம் முழுக்க முழுக்க கேங்க்ஸ்டர் படம்; அதுவே காந்தாரா கர்நாடகாவின் மங்களூர் பகுதியின் இறை வழிப்பாட்டு முறையையும், கலாசாரத்தை முதன்மைப்படுத்தியது. இப்படி இருவேறு தளங்களுடைய படங்களை தயாரித்தது குறித்தும், 2022-ல் வெளியான இப்படங்களால் 2023-ல் தன் படங்களுக்கான வெளி எந்தளவுக்கு விரிவடைந்துள்ளது என்பது குறித்தும் தனது சமீபத்திய பேட்டிகளில் பேசியுள்ளார் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர்.   அவர் பேசுகையில், “இந்த இரு படங்களின் வெற்றியுமே, கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றிதான். இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பு நிர்வாகிகள், தயாரிப்பு நிறுவனம் என எல்லோருமே இணைந்து பணியாற்றியதால் தான் இந்த வெற்றி கிடைத்தது. அடுத்ததடுத்து எங்களுக்கு கிடைத்த வெற்றி, அடுத்த ஆண்டுக்கு எங்களை உற்சாகப்படுத்தியுள்ளது. கே.ஜி.எஃப்-ஆ காந்தாராவா என்று கேட்டால், நான் காந்தாராவுக்குதான் முதல் சாய்ஸ் கொடுப்பேன். ஏனெனில் கே.ஜி.எஃப் வெற்றி நாங்கள் எதிர்பார்த்த வெற்றிதான். ஆனால் காந்தாரா திடீரென சர்ப்ரைஸ் ஹிட் ஆனது. அதுமட்டுமன்றி எங்கள் படத்தின் வழியே சமூக கருத்தொன்று சொல்லப்பட வேண்டும் என நான் எப்போதும் நினைப்பேன். அப்படியொரு படமாகவும் காந்தாரா அமைந்தது. இப்படியாக வசூல் ரீதியான வெற்றி மற்றும் அடுத்த தலைமுறைக்கு இந்திய கலாசாரத்தை கற்பித்தது போன்ற விஷயங்களின் காரணங்களால் காந்தாரா முதன்மை இடத்தில் இருக்கிறது. இரு படங்களின் வெற்றியினால், இப்போது நாங்கள் பன்மொழிகளில் படங்களை உருவாக்குகிறோம். அந்தவகையில் கன்னடம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் அடுத்த வருடம் எங்களுக்கு படங்கள் இருக்கிறது. பாலிவுட்டில்லும் சில நல்ல படங்களை இயக்க திட்டமிட்டிருக்கிறோம். அதற்காக கதைகள் கேட்பது, நடிகர்களை முடிவு செய்வது என பல விஷயங்கள் நடந்துக்கொண்டுள்ளது. ஒவ்வொரு வருடமும், ஒரு ஹிட் படமாவது கொடுக்க வேண்டும் என்பது எங்கள் இலக்கு. 2022-ல் கே.ஜி.எஃப் 2, காந்தாரா ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டாயின. 2023ல் சலார் படம் பெரிய ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கிறோம். இவற்றுடன் ஃபகத் ஃபாசிலின் Dhoomam, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தமிழ்ப்படமான ரகு தாத்தா, கே.ஜி.எஃப் பட  புகழ் ப்ரசாந்த் நீல் எழுத்தில் பகீரா உள்ளிட்ட படங்களும் 2023-ல் உங்களுக்காகக் காத்திருக்கின்றன. இவைதவிர கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் பேரனான யுவ ராஜ்குமாரை திரைக்கு அறிமுகப்படுத்தவுள்ளோம். இவை மட்டுமன்றி அடுத்த 5 ஆண்டுகளில் 3000 கோடி முதலீட்டுத் திட்டமும் எங்களுக்கு உள்ளது. அடுத்த இரு வருடங்களில் 10 முதல் 12 படங்களை எடுக்கத் திட்டமிட்டுள்ளோம்” என்றுள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
“வருடத்துக்கு ஒரு பெரிய ஹிட் படம் என்பது எங்கள் இலக்கு” என கே.ஜி.எஃப் படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் கூறியுள்ளார் 2022ல் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த படங்களின் பட்டியலில் கன்னட சினிமாவிலிருந்து வெளிவந்த கே.ஜி.எஃப் மற்றும் காந்தாரா படங்கள் இருந்தன. இரண்டு படங்களுக்குமே ஒரு தயாரிப்பு நிறுவனம் என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியது. Hombale என்ற ப்ரொடக்‌ஷனின் நிறுவனரான விஜய் கிரகந்தூர்தான் அந்த தயாரிப்பாளர். கே.ஜி.எஃப் படம் முழுக்க முழுக்க கேங்க்ஸ்டர் படம்; அதுவே காந்தாரா கர்நாடகாவின் மங்களூர் பகுதியின் இறை வழிப்பாட்டு முறையையும், கலாசாரத்தை முதன்மைப்படுத்தியது. இப்படி இருவேறு தளங்களுடைய படங்களை தயாரித்தது குறித்தும், 2022-ல் வெளியான இப்படங்களால் 2023-ல் தன் படங்களுக்கான வெளி எந்தளவுக்கு விரிவடைந்துள்ளது என்பது குறித்தும் தனது சமீபத்திய பேட்டிகளில் பேசியுள்ளார் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர்.   அவர் பேசுகையில், “இந்த இரு படங்களின் வெற்றியுமே, கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றிதான். இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பு நிர்வாகிகள், தயாரிப்பு நிறுவனம் என எல்லோருமே இணைந்த...

‘பாலிவுட் வாய்ப்புக்காக இப்படி பேசலாமா?’ - சர்ச்சையில் சிக்கிய ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய சினிமாக்களில் மசாலா, ஐட்டம் பாடல்கள்தான் உள்ளன என்றும், பாலிவுட்டில் தான் மெலடியான ரொமாண்டிக் பாடல்கள் உள்ளன எனவும் நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னடத் திரைப்படமான ‘கிரிக் பார்ட்டி’ மூலம் அறிமுகமான இவர், பின்னர் தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிப் படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். குறிப்பாக கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ தெலுங்குத் திரைப்படம், இவரை இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமடைய வைத்தது. இதனைத் தொடர்ந்து தமிழில் விஜய்யின் ‘வாரிசு’ படத்திலும், இந்தியில் சித்தார்த் மல்ஹோத்ராவின் ‘மிஷன் மஜ்னு’ படத்திலும் நடித்து முடித்துள்ளார். இதில் ‘வாரிசு’ படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரவுள்ள நிலையில், ‘மிஷன் மஜ்னு’ திரைப்படம் ஜனவரி 20-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. 1971-ம் ஆண்டு நடந்த இந்தியா - பாகிஸ்தான் போர் பற்றிய படமாக வெளிவரவுள்ள ‘மிஷன் மஜ்னு’ படத்தில் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது. இதில் ராஷ்மிகா மந்தனா பேசியவைதான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. After #RashmikaMandanna Got Chance To Act In Bollywood, Now She Is Blaming And Downgrading Our South Industry! She Did The Same Thing To #Kannada Industry When She Got Offer In #TFI. What An Woman Moral: Once A Cheater, Always A Cheater!#Yash19 #Kichcha46 #Salaar #RRR2 pic.twitter.com/tCqzARPR7X — Box Office - South India (@BoSouthIndia) December 28, 2022 விழாவில் பேசிய ராஷ்மிகா மந்தனா, “பாலிவுட்டில்தான் அதிகமான காதல் (ரொமாண்டிக்) பாடல்கள் வெளிவருகின்றன. நான் வளரும்போது பாலிவுட் காதல் பாடல்களை கேட்டுத்தான் வளர்ந்தேன். ஆனால் தென்னிந்திய சினிமாவில் மசாலா பாடல்கள், குத்துப் பாடல்கள் மற்றும் கவர்ச்சிப் பாடல்களே அதிகம் இடம்பெறுகின்றன. (அவர் பேசும்போது இடையில் தொகுப்பாளர் எங்களுக்குத் தெரியும், எங்களுக்கும் தெரியும் என்று பகடியாக பேசி சிரிக்கிறார். ராஷ்மிகாவும் சிரிக்கிறார்). இது என்னுடைய முதல் பாலிவுட் காதல் பாடல். இது மிகவும் நன்றாக வந்திருப்பதால் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்” என்று தெரிவித்தார். தற்போது இதுதான் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கன்னடத்திலிருந்து தெலுங்கு திரையுலகம் வரும்போதும், இதேமாதிரி ராஷ்மிகா மந்தனா வாய்ப்புக்காக பேசியதாகவும், தற்போது பாலிவுட் வாய்ப்புக்காக தென்னிந்தியா சினிமாவை அவமானப்படுத்துவதாகவும் சர்ச்சை கிளம்பியுள்ளது. ‘கீதா கோவிந்தம்’ படத்தில் காதல் பாடல்கள் மூலம் தான் நீங்கள் பிரபலமடைந்தீர்கள் என்றும், பாலிவுட் படங்களில் குத்துப் பாடல்களே இல்லையா என்றும், வாய்ப்புக்காக எப்படி வேண்டுமானாலும் பேசும் சாமர்த்தியம் நிறைந்தவர் எனவும் ராஷ்மிகா மந்தனாவை தென்னிந்திய ரசிகர்கள் சாடி வருகின்றனர். ஏற்கனவே கன்னட சினிமாவை பற்றி ராஷ்மிகா மந்தனா கூறியது விமர்சனங்களை சந்தித்த நிலையில், ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பதை வாடிக்கையாக ராஷ்மிகா மந்தனா வைத்திருப்பதாக நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். What is " inkem inkem inkem kavalee DearCommrade , he is so cute....... And many more...... @iamRashmika — Tanishq Roy. Radheshyam (@MarewarR) December 28, 2022 Now telugu peoples will understand why kannada peoples hate her. This is just a beginning — ನಿನ್ ಅಕ್ಕನ್ ಜುಟ್ಟು (@YashCult_Shashu) December 28, 2022 Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
தென்னிந்திய சினிமாக்களில் மசாலா, ஐட்டம் பாடல்கள்தான் உள்ளன என்றும், பாலிவுட்டில் தான் மெலடியான ரொமாண்டிக் பாடல்கள் உள்ளன எனவும் நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னடத் திரைப்படமான ‘கிரிக் பார்ட்டி’ மூலம் அறிமுகமான இவர், பின்னர் தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிப் படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். குறிப்பாக கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ தெலுங்குத் திரைப்படம், இவரை இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமடைய வைத்தது. இதனைத் தொடர்ந்து தமிழில் விஜய்யின் ‘வாரிசு’ படத்திலும், இந்தியில் சித்தார்த் மல்ஹோத்ராவின் ‘மிஷன் மஜ்னு’ படத்திலும் நடித்து முடித்துள்ளார். இதில் ‘வாரிசு’ படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரவுள்ள நிலையில், ‘மிஷன் மஜ்னு’ திரைப்படம் ஜனவரி 20-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. 1971-ம் ஆண்டு நடந்த இந்தியா - பாகிஸ்தான் போர் பற்றிய படமாக வெளிவரவுள்ள ‘மிஷன் மஜ்னு’ படத்தில் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்த...

‘விஜய்தான் நம்பர் 1 ஹீரோ என்று நான் சொன்னதற்கு இதுதான் காரணம்’ - தில் ராஜூ விளக்கம்! நடிகர் அஜித்தைவிட விஜய் தான் நம்பர் 1 என்றுக் கூறி நெட்டிசன்களின் கடும் விமர்சனங்களுக்கு ஆளான தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ, தான் ஏன் அவ்வாறு கூறினேன் என்று விளக்கமளித்து மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். நடிகர் விஜய் நடிப்பில், வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாரிசு’. இந்தப் படத்தை பிரபல தெலுங்குப் படத் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12-ம் தேதி வரவுள்ளநிலையில், அஜித்தின் ‘துணிவு’ படமும் வெளிவரவுள்ளது. சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இரு நட்சத்திரங்களின் படங்களும் நேருக்குநேர் மோதவுள்ளது ஒருவிதமான பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் தெலுங்கு ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த தயாரிப்பாளர் தில் ராஜூ, அஜித்தை விட விஜய்தான் நம்பர் 1 என்றும், அதனால் ‘வாரிசு’ படத்திற்கு தமிழ்நாட்டில் அதிக திரையரங்குகள் ஒதுக்க வேண்டும் என்று ‘துணிவு’ படத்தின் விநியோகஸ்தரும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனருமான உதயநிதி ஸ்டாலினிடம் நேரில் சென்று கேட்கப்போகிறேன் என்று கூறியிருந்தார். இதற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், தனது கருத்து குறித்து மீண்டும் தில் ராஜூ ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில், “தமிழகத்தில் விஜய், அஜித்தின் படங்களுக்கு சம அளவில் திரையரங்கு காட்சிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், என் ஹீரோதான் (விஜய்) பெரிய ஸ்டார். அதனால்தான், ‘வாரிசு’ படத்திற்கு அதிக திரையரங்குக் காட்சிகள் கேட்கப் போகிறேன் என்றேன். பெரிய நட்சத்திரம் யார் என்பதை எப்படி முடிவு செய்வீர்கள்?, ஒரு நடிகரின் நட்சத்திரப் பலத்தை திரையரங்கு வருமானம்தான் தீர்மானிக்கிறது. அப்படிப் பார்த்தால் விஜய்யின் கடைசி 5-6 படங்கள், தமிழ்நாட்டில் மட்டும் ரூ.60 கோடிக்கு மேல் ஷேர் கிடைத்துள்ளன. படம் ஹிட்டா, தோல்வியா என்பது வேறு விவாதம். ஆனால், விஜய்யின் படங்களுக்கு சீரான அளவில் வசூல் கிடைக்கிறது. அதனால்தான் மற்றவர்களை விட அவர் பெரிய ஸ்டார் என்று சொல்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். Last 5-6 movies of #ThalapathyVijay collected a huge theatrical revenue irrespective of movie's result Hence I'm telling he is bigger than anyone else right now and currently he is NO.1  #VarisuPongal #Varisu #VarisuAudioLanch #Thalapathy67pic.twitter.com/jEhXFeUuvn — OTVF™ (@otvfofficial) December 28, 2022 Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
நடிகர் அஜித்தைவிட விஜய் தான் நம்பர் 1 என்றுக் கூறி நெட்டிசன்களின் கடும் விமர்சனங்களுக்கு ஆளான தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ, தான் ஏன் அவ்வாறு கூறினேன் என்று விளக்கமளித்து மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். நடிகர் விஜய் நடிப்பில், வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாரிசு’. இந்தப் படத்தை பிரபல தெலுங்குப் படத் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12-ம் தேதி வரவுள்ளநிலையில், அஜித்தின் ‘துணிவு’ படமும் வெளிவரவுள்ளது. சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இரு நட்சத்திரங்களின் படங்களும் நேருக்குநேர் மோதவுள்ளது ஒருவிதமான பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் தெலுங்கு ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த தயாரிப்பாளர் தில் ராஜூ, அஜித்தை விட விஜய்தான் நம்பர் 1 என்றும், அதனால் ‘வாரிசு’ படத்திற்கு தமிழ்நாட்டில் அதிக திரையரங்குகள் ஒதுக்க வேண்டும் என்று ‘துணிவு’ படத்தின் விநியோகஸ்தரும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனருமான உதயநிதி ஸ்டாலினிடம் நேரில் சென்று கேட்கப்போகிறேன் என்று கூறியிருந்தார். இதற்குப் பல்வேறு ...

"முன்பெல்லாம் இப்படி இல்லை; மதுரை ஏர்போர்ட்டில் நடந்தது என்ன?" - சித்தார்த் முழு விளக்கம் மதுரை விமான நிலையத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு தங்கள் குடும்பத்தினரிடம் சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் கடுமையாக நடந்து கொண்டது குறித்து விளக்கமாக நடிகர் சித்தார்த் சமூக வலைதளத்தில் பதிவுசெய்துள்ளார். அதில், “கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மதுரை விமான நிலையத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்து பலரிடமிருந்து எனக்கு அழைப்புகள் வருகிறது. ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி. எனவே அதை விவரமாக கூற விரும்புகிறேன். நான் அடிக்கடி மதுரை விமான நிலையம் வந்து செல்வது வழக்கம். ஆனால் இந்த முறை நான், எனது சகோதரி, பெற்றோர் உட்பட குடும்பத்தினருடன் வந்திருந்தோம். அப்போது அங்கிருந்த சி.ஐ.எஸ்.எஃப். வீரர் ஒருவர் எனது ஆதார் கார்டை சோதனை செய்தார். மேலும் என் முகத்திலிருந்து முகக்கவசத்தை இறக்கியப் பிறகும் இரண்டு மூன்று முறை அவர் சோதனை செய்தார். நான் என்னவென்று கேட்டபோது, இதில் இருப்பது உங்களைப்போல இல்லை என்றார். நான் இப்பொழுது எப்படி இருக்கிறேனோ அப்படித்தான் இந்த புகைப்படத்திலும் இருக்கிறேன். இருந்தபோதிலும் அவர் ஏன் அப்படி கேட்டார் என்று தெரியவில்லை. தொடர்ந்து எனது ஏர்பேட் மற்றும் தொலைபேசியை சோதனை செய்து அருகில் இருந்த டிரைவில் தூக்கி வீசினார். ஏற்கனவே பலமுறை இதனால் எனது தொலைபேசிகள் தொலைந்து உள்ளது என்று நான் அவரிடம் கூறினேன். அதற்கு அவர், இது மதுரை விமான நிலையம் இங்கு விதிகள் இப்படித்தான் இருக்கும் என்றார். தொடர்ந்து எனது அம்மாவின் கைப்பையில் இருந்த சில்லறைகளை முழுவதுமாக வெளியே எடுக்கும்படி கூறினார்கள். ஸ்கேன் செய்து பார்த்ததில் சில்லறைகள் என்று தெரிந்தும் ஏன் அதை எடுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு இந்தியில் பேசினார்கள். மேலும் எனது சகோதரியின் பையில் சில மருந்துப் பொருட்கள் இருந்தது. அதை தூரத்தில் இருந்த சி.ஐ.எஸ்.எஃப் வீரர் ஒருவர் எதற்காக இந்த மருந்துப் பொருட்களை எடுத்துச் செல்கிறீர்கள் என்று கேட்டார். தனிப்பட்ட ஒருவரின் உடல் நிலையை பொது இடத்தில் கேட்க வேண்டிய அவசியம் இல்லை, தனியே அழைத்து கேட்டிருக்கலாம். அதன் பிறகு நான் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிறகு, அங்கு வந்த ஒரு மூத்த அதிகாரி என்னிடம் என்ன பிரச்சனை எனக் கேட்டார். அப்போது நான் என் முக கவசத்தை கழட்டி காட்டிய போது நான் உங்களின் ரசிகர் இங்கு நடந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார். எனக்கே இந்த நிலைமை என்றால், பொதுமக்கள் வயதானவர்களின் நிலைமை என்னவாகும். நான் அடிக்கடி விமானத்தில் பயணம் செய்துள்ளேன். அப்போதெல்லாம் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றது இல்லை. ஆனால் இந்த சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் எனது பெற்றோரிடம் பேசிய விதம் என்னை அச்சுறுத்தியது. அவர்கள் வேலை சற்று கடினம் தான். அதற்காக அவர்கள் பயணிகளிடம் இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று விதிகள் எதுவும் கிடையாது” என அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார். View this post on Instagram A post shared by Siddharth (@worldofsiddharth) Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
மதுரை விமான நிலையத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு தங்கள் குடும்பத்தினரிடம் சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் கடுமையாக நடந்து கொண்டது குறித்து விளக்கமாக நடிகர் சித்தார்த் சமூக வலைதளத்தில் பதிவுசெய்துள்ளார். அதில், “கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மதுரை விமான நிலையத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்து பலரிடமிருந்து எனக்கு அழைப்புகள் வருகிறது. ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி. எனவே அதை விவரமாக கூற விரும்புகிறேன். நான் அடிக்கடி மதுரை விமான நிலையம் வந்து செல்வது வழக்கம். ஆனால் இந்த முறை நான், எனது சகோதரி, பெற்றோர் உட்பட குடும்பத்தினருடன் வந்திருந்தோம். அப்போது அங்கிருந்த சி.ஐ.எஸ்.எஃப். வீரர் ஒருவர் எனது ஆதார் கார்டை சோதனை செய்தார். மேலும் என் முகத்திலிருந்து முகக்கவசத்தை இறக்கியப் பிறகும் இரண்டு மூன்று முறை அவர் சோதனை செய்தார். நான் என்னவென்று கேட்டபோது, இதில் இருப்பது உங்களைப்போல இல்லை என்றார். நான் இப்பொழுது எப்படி இருக்கிறேனோ அப்படித்தான் இந்த புகைப்படத்திலும் இருக்கிறேன். இருந்தபோதிலும் அவர் ஏன் அப்படி கேட்டார் என்று தெரியவில்லை. தொடர்ந்து எனது ஏர்பேட் மற்றும் தொலைபேசியை சோதனை செய்து அருகில் இருந்த ட...

”யுவனுடன் சேர்ந்து எப்போ படம் பண்ணுவீங்க?” பா.ரஞ்சித்தின் நச் பதிலும் யுவனின் ரியாக்‌ஷனும் இசைப் பிரியர்களின் ஆரவாரத்துடன் மார்கழியில் மக்கள் இசை, சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் நாள் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித் தலைமையில் தொடங்கிய இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக யுவன் சங்கர் ராஜா, பேரறிவாளன், அற்புதம்மாள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, “4 வருடங்களாக மார்கழி மக்களிசையை நிகழ்ச்சியில் பங்கேற்காமல் விட்டுவிட்டேன். இசைக்கு சாதி, மதம் என்று எதுவும் இல்லை. இசையால் தான் அனைவரும் இணைந்து இருக்கிறோம். பா. ரஞ்சித் அவர்களுக்கு இசையின் மீது தீரா காதல் உள்ளது. இத்தகைய நிகழ்ச்சியின் மூலம் பல இசை கலைஞர்களுக்கு பா.ரஞ்சித் புதிய வாய்ப்புகளை வழங்கி இருக்கிறார்” என்று தெரிவித்தார். பின்னர் யுவன் சங்கர் ராஜா திரையுலகிற்கு வந்து 25 ஆண்டுகளை கடந்துள்ளதால், ரசிகர்கள் யுவனுக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். மேலும் சமீபத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளிவந்த ‘லவ் டுடே’ படத்தின் பாடலான "என்னை விட்டு உயிர் போனாலும்… உன்னை விட்டு நான் போமாட்டேன்" என்ற பாடலை ரசிகர்களுக்கு மத்தியில் அவர் பாடி அசத்தினார். யுவன் சங்கர் ராஜாவை தொடர்ந்து பேசிய பா.ரஞ்சித், ‘ஜெய்பீம்’ என்ற வார்த்தையைக் கூறி பேச துவங்கினார். அப்போது “இளையராஜா அவர்கள் எனக்கு ஒரு உணர்வு. இளையராஜாவை பார்த்து தான் திரையுலகிற்கு அனைவரும் வருகின்றனர். ராஜா அவர்களின இசையை கேட்கும் போது ஏற்படக்கூடிய உணர்வு தான் யுவன் சங்கர் ராஜாவின் இசையை கேட்கும்போது ஏற்படுகிறது. எனக்கு ஏற்படக்கூடிய வலிகளை இசையின் மூலமாக தான் மறக்கிறேன்” என்று தெரிவித்தார். பா. ரஞ்சித் மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் விரைவில் ஒரு படம் உருவாகும் எனவும் இயக்குநர் பா. ரஞ்சித் தெரிவித்தார். அந்த மேடையிலேயே “நான் தயார்” என்று அழுத்தமாக யுவனும் கூறினார்.  பின்னர், ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க லவ் டுடே படத்தில் இருந்து யுவன் பாடினார்.  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

செம்பி முதல் டிஎஸ்பி வரை... இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸும்! #OTTGuide ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகின்றன. எந்த தளத்தில், எந்தப் படம், எப்போது வெளியாகிறது என்பதைத் தொகுத்து உங்களுக்கு வழங்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம். இந்த வாரம் வெளியாகும் படைப்புகள்: திரையரங்கு(Theatre) 1. ராங்கி (தமிழ்) - டிசம்பர் 30 2. டிரைவர் ஜமுனா (தமிழ்) - டிசம்பர் 30   3. செம்பி (தமிழ்) - டிசம்பர் 30 4. ஒஅஎம்ஜி (தமிழ்) - டிசம்பர் 30 5. காலேஜ் ரொடு (தமிழ்) - டிசம்பர் 30 6. அருவா சண்ட (தமிழ்) - டிசம்பர் 30 7. சகுந்தலாவின் காதலன்  (தமிழ்) - டிசம்பர் 30 8. கடைசி காதல் காதை (தமிழ்) - டிசம்பர் 30 9. Topgear (தெலுங்கு) - டிசம்பர் 30 10. Once Upon a Time in Jamaligudda  (கன்னடம்) - டிசம்பர் 30 11. Ved (மராத்தி) - டிசம்பர் 30 12. Projapoti (பெங்காலி) - டிசம்பர் 30 13. டிம் டிப் (தமிழ்) - டிசம்பர் 31 14. Korameenu (தெலுங்கு) - டிசம்பர் 31 15. Mann Bairagi (இந்தி) - டிசம்பர் 31 ஓ.டி.டி.  (OTT) 1.Roald Dahl's Matilda the Musical (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் - டிசம்பர்25 2.Color of Love (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் - டிசம்பர் 25 3.Encanto at the Hollywood Bowl (ஆங்கிலம்) ஹாட்ஸ்டார் - டிசம்பர் 28 4.Stuck with You (பிரஞ்சு) நெட்ஃப்ளிக்ஸ் - டிசம்பர் 28 5.A Night at Kindergarten (Polish) நெட்ஃப்ளிக்ஸ் - டிசம்பர் 28 6.Butterfly (தெலுங்கு) ஹாட்ஸ்டார் - டிசம்பர் 29 7.Udanpaal உடன்பால் (தமிழ்) ஆஹா - டிசம்பர் 30 8.Uttwaraan (பெங்காலி) ஜீ5 - டிசம்பர் 30 9.White Noise (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் - டிசம்பர் 30 குறும்படம்  (Short Film) 1.The 100th (இந்தி) ஹாட்ஸ்டார் - டிசம்பர் 27 2.The roka (இந்தி) ஹாட்ஸ்டார் - டிசம்பர் 27   ஷோ (Show) 1.Vir Das: Landing (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் - டிசம்பர் 26 2.Chelsea Handler: Revolution (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் - டிசம்பர் 27 3.The Circle S5 (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் - டிசம்பர் 28 4.Love is Blind Brazil S2 (போர்த்துகீசியம்) நெட்ஃப்ளிக்ஸ் - டிசம்பர் 28 5.Unstoppable 2 with NBK (தெலுங்கு) ஆஹா - டிசம்பர் 30 டாக்குமெண்ட்ரி  (Documentary) 1.True Story Of Madonna (ஆங்கிலம்) பிரைம்  -டிசம்பர் 27 சீரிஸ் (Series) 1.The Witcher: Blood Origin (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் - டிசம்பர் 25 2.Time Hustler (போர்த்துகீசியம்) நெட்ஃப்ளிக்ஸ் - டிசம்பர் 25 3.Treason (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் - டிசம்பர் 26 4.Daughter from Another Mother S3 (ஸ்பானீஷ்) நெட்ஃப்ளிக்ஸ் - டிசம்பர் 26 5.Rise of Empires: Ottoman S2 (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் - டிசம்பர் 29 6.Aar Ya Paar (இந்தி) ஹாட்ஸ்டார் - டிசம்பர் 30 7.The Glory (கொரியன்) நெட்ஃப்ளிக்ஸ் - டிசம்பர் 30 திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகான ஓ.டி.டி.  (Post Theatrical Digital Streaming) 1.Top Gun Maverick (ஆங்கிலம்) பிரைம்  - டிசம்பர் 26 2.Pattathu Arasan பட்டத்து அரசன் (தமிழ்) நெட்ஃப்ளிக்ஸ்- டிசம்பர் 28 3.Double XL (இந்தி) நெட்ஃப்ளிக்ஸ் - டிசம்பர் 28 4.Gold (மலையாளம்) பிரைம்  - டிசம்பர் 29 5.DSP டிஎஸ்பி (தமிழ்) நெட்ஃப்ளிக்ஸ் - டிசம்பர் 30 6.Rocket Gang (இந்தி) ஜீ5 - டிசம்பர் 30 Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகின்றன. எந்த தளத்தில், எந்தப் படம், எப்போது வெளியாகிறது என்பதைத் தொகுத்து உங்களுக்கு வழங்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம். இந்த வாரம் வெளியாகும் படைப்புகள்: திரையரங்கு(Theatre) 1. ராங்கி (தமிழ்) - டிசம்பர் 30 2. டிரைவர் ஜமுனா (தமிழ்) - டிசம்பர் 30   3. செம்பி (தமிழ்) - டிசம்பர் 30 4. ஒஅஎம்ஜி (தமிழ்) - டிசம்பர் 30 5. காலேஜ் ரொடு (தமிழ்) - டிசம்பர் 30 6. அருவா சண்ட (தமிழ்) - டிசம்பர் 30 7. சகுந்தலாவின் காதலன்  (தமிழ்) - டிசம்பர் 30 8. கடைசி காதல் காதை (தமிழ்) - டிசம்பர் 30 9. Topgear (தெலுங்கு) - டிசம்பர் 30 10. Once Upon a Time in Jamaligudda  (கன்னடம்) - டிசம்பர் 30 11. Ved (மராத்தி) - டிசம்பர் 30 12. Projapoti (பெங்காலி) - டிசம்பர் 30 13. டிம் டிப் (தமிழ்) - டிசம்பர் 31 14. Korameenu (தெலுங்கு) - டிசம்பர் 31 15. Mann Bairagi (இந்தி) - டிசம்பர் 31 ஓ.டி.டி.  (OTT) 1.Roald Dahl's Matilda the Musical (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் - டிசம்பர...

இருள் நிரம்பிய அறையில் ஆதித்தன்! கையில் வாளுடன் நந்தினி! மாஸ்ஸாக வெளியான PS-2 அப்டேட்! மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி வசூலை குவித்த நிலையில், எதிர்ப்பார்ப்புகளுடன் கூடிய இரண்டாவது பாகத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை தழுவி இயக்குநர் மணிரத்னத்தின் வெர்ஷனில், ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக த்ரிஷா நடித்து கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகிய பொன்னியின் செல்வன் திரைப்படம், உலக அரங்கில் 500கோடி ரூபாய் வசூல் வேட்டை நடத்தியது. படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அற்புதமான ஒரு படைப்பை அளித்திருந்தனர். அடுத்த பாகத்திற்கான லீட் கொடுக்கப்பட்டு முடிக்கப்பட்டிருந்த முதல் பாகத்திற்கு பிறகு, இரண்டாவது பாகத்திற்கான எதிர்ப்பார்ப்பு அனைத்துவிதமான ரசிகர்களிடம் அதிகமாகவே எகிறி இருந்தது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாவது பாகத்திற்கான ரிலீஸ் தேதி, ஒரு குறு வீடியோவுடன் லைகா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி திரையிடப்படும் என்று லைகா வெளியிட்டிருக்கும் அந்த வீடியோவில், ”இருள் நிரம்பும் ஒரு அறையில் ஆதித்த கரிகாலன் அமர்ந்திருப்பது போன்றும், நந்தினி அவருடைய வாளை கையில் ஏந்தியபடியும், பொன்னியின் செல்வர் உயிரோடு மக்கள் மத்தியில் நடமாடும்படியும், வந்தியத்தேவன் உடல் முழுதும் காயங்களுடன் காட்டுக்குள் அமர்ந்திருந்தபடியும்” அந்த வீடியோ முடிவடைகிறது. பொன்னியின் செல்வன் நாவலின் வாசிப்பாளர்களின் கற்பனையில் எப்போதும் மிதந்துகொண்டே இருக்கும் காட்சிப்பதிப்பாக ஆதித்த கரிகாலனின் படுகொலை இருக்கும். அந்த கொலையை யார் செய்திருப்பார்கள் என்ற கேள்வி இன்றளவும் விவாதத்திற்குரிய ஒன்றாகத்தான் இருந்துவருகிறது. அப்படிப்பட்ட ஒரு காட்சியின் நீட்சி பதிப்பு அந்த வீடியோவில் அழகாகவே இருக்கிறது. மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனில் ஆதித்தனின் மரணம் நந்தினியின் வாளால் மட்டுமில்லாமல் காட்சியமைப்பிலும் “அழகான கொலையாக” மாறவிருக்கிறது என்றே தோன்றுகிறது. ஆதித்தனின் மர்மமான கொலை நிகழப்போகும் நாள் ஏப்ரல் 28ஆம் தேதி என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி வசூலை குவித்த நிலையில், எதிர்ப்பார்ப்புகளுடன் கூடிய இரண்டாவது பாகத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை தழுவி இயக்குநர் மணிரத்னத்தின் வெர்ஷனில், ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக த்ரிஷா நடித்து கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகிய பொன்னியின் செல்வன் திரைப்படம், உலக அரங்கில் 500கோடி ரூபாய் வசூல் வேட்டை நடத்தியது. படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அற்புதமான ஒரு படைப்பை அளித்திருந்தனர். அடுத்த பாகத்திற்கான லீட் கொடுக்கப்பட்டு முடிக்கப்பட்டிருந்த முதல் பாகத்திற்கு பிறகு, இரண்டாவது பாகத்திற்கான எதிர்ப்பார்ப்பு அனைத்துவிதமான ரசிகர்களிடம் அதிகமாகவே எகிறி இருந்தது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாவது பாகத்திற்கான ரிலீஸ் தேதி, ஒரு குறு வீடியோவுடன் லைகா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப...

நீலம் பண்பாட்டு மையம் என்றால் அரசாங்க சபாக்களில் கூட அனுமதி மறுக்கிறார்கள் - பா. ரஞ்சித் சபாக்களில் முன்பதிவு செய்யப்படவில்லை என்றாலும், நீலம் பண்பாட்டு மையம் என்றால் புறக்கணிக்கிறார்கள்; கலைவாணர் அரங்கத்தில் மார்கழியில் மக்கள் இசை நிகழ்ச்சியை இந்த வருடத்தில் நடத்துவதற்கு எவ்வளவோ முயற்சி எடுத்தபோதும் நடக்கவில்லை என இயக்குநர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார். இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், சமூக மாற்றத்திற்கான முனைப்பாக கலைத்தளத்தில் தொடர்ந்து இயங்கி வருகிறது. கடந்த வருடம் நீலம் பண்பாட்டு மையத்தால் உருவாக்கப்பட்ட “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” என்ற கலைக்குழுவின் இசை நிகழ்ச்சி பேசுபொருளாக மாறியது. இந்நிலையில் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி சேத்துப்பட்டுவில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல் நாளான இன்று கிராமிய இசை என்ற தலைப்பில் இசை விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் இயக்குநர் பா.ரஞ்சித், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புத்தர் கலை குழு, இளையராஜா மாரியம்மாள் குழுவினரின் இசை நிகழ்ச்சி, பழங்குடியின மக்களின் இசை நிகழ்ச்சி போன்றவை இன்று நடைபெற்றது. அப்போது புதிய தலைமுறையுடன் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித், நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் நிகழ்வு என்றால் சபாக்களில் அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள். நிகழ்ச்சி நடத்துவதற்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. தனியார் சபாக்கள் தான் இவ்வாறு நடந்து கொள்கிறது என்றால் அரசாங்க அதிகாரிகளும் இவ்வாறு தான் நடந்து கொள்கிறார்கள். கலைவாணர் அரங்கத்தில் மார்கழியில் மக்கள் இசை நிகழ்ச்சி இந்த வருடத்தில் நடத்துவதற்கு எவ்வளவோ முயற்சி எடுத்தாலும், அரங்கம் முன்பதிவு செய்யப்படாமல் இருக்கும்போதே சரியான பதில் கிடைக்கவில்லை. அரசாங்க அரங்கங்களை முன்பதிவு செய்யவதற்கான அனுமதியும் கிடைக்கவில்லை. சரியான பதிலும் கிடைக்கவில்லை என்று கூறினார். மேலும் அதிக நாட்கள் இழுத்தடிக்கப்பட்டதால் வேறு அரங்கங்களில் நிகழ்ச்சி நடத்தவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
சபாக்களில் முன்பதிவு செய்யப்படவில்லை என்றாலும், நீலம் பண்பாட்டு மையம் என்றால் புறக்கணிக்கிறார்கள்; கலைவாணர் அரங்கத்தில் மார்கழியில் மக்கள் இசை நிகழ்ச்சியை இந்த வருடத்தில் நடத்துவதற்கு எவ்வளவோ முயற்சி எடுத்தபோதும் நடக்கவில்லை என இயக்குநர் பா. ரஞ்சித் தெரிவித்துள்ளார். இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், சமூக மாற்றத்திற்கான முனைப்பாக கலைத்தளத்தில் தொடர்ந்து இயங்கி வருகிறது. கடந்த வருடம் நீலம் பண்பாட்டு மையத்தால் உருவாக்கப்பட்ட “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” என்ற கலைக்குழுவின் இசை நிகழ்ச்சி பேசுபொருளாக மாறியது. இந்நிலையில் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி சேத்துப்பட்டுவில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல் நாளான இன்று கிராமிய இசை என்ற தலைப்பில் இசை விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் இயக்குநர் பா.ரஞ்சித், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புத்தர் கலை குழு, இளையராஜா மாரியம்மாள் குழுவினரின் இசை நிகழ்ச்சி, பழங்குடியின மக்களின் இசை நிகழ்ச்சி போன்றவை இன்று நடைபெற்றது. அப்போத...

”ஒரு நல்ல படத்திற்கு அதுவே புரமோஷன்”.. புரமோஷன் எல்லாம் ஓகே? கதை, திரைக்கதை எங்கே? “நல்ல படத்துக்கு எதுக்கு புரோமோஷன், நல்ல படமாக இருந்தால் அதன் கதையும் வேலையுமே அதற்கு புரோமோஷன்” என நடிகர் அஜித்குமார் கூறியதாக சமீபத்தில் செய்திகள் பரவின. இப்படி இருக்கையில், அவரது துணிவு படத்துக்கான வேலைகளை படக்குழு தற்போது இறங்கியிருக்கிறது. அதன்படி துபாயில் ஸ்கைடைவிங் மூலமும், நியூயார்க்கின் டைம் ஸ்கொயரிலும் துணிவு பட புரோமோஷன் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, விஜய்யின் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாக் கூட சென்னையில் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி அன்று ஆயிரக்கணக்கான ரசிகர்களை வரவைத்து பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இந்த நிலையில், திரைப்படங்களுக்கு ஷூட்டிங், சம்பளம் போன்றவற்றையெல்லாம் தாண்டி புரோமோஷனுக்காகவே குறிப்பிட்ட அளவில் கோடிக்கணக்கில் செலவிடுவது எந்த அளவுக்கு தேவையானது மற்றும் இத்தனை கோடி செலவு செய்து ஒரு படத்துக்கு புரோமோஷன் செய்வதால் என்ன மாதிரியான பயன்கள் ஏற்படுகின்றன என்பதை காணலாம். உச்ச நட்சத்திரங்களின் படங்களின் கதைக்களத்துக்கும், அதற்காக மேற்கொள்ளப்படும் புரோமோஷன்களுக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாத அளவுக்கான வித்தியாசமே இருக்கும். குறிப்பாக பிரம்மாண்ட பொருட் செலவில் ஆடியோ, டீசர், ட்ரெய்லர் வெளியீட்டு விழா வைப்பது, ட்ரெயின், பஸ், ஃப்ளைட் என போக்குவரத்துகளில் விளம்பரம் செய்வது என பல புரோமோஷன்கள் நடக்கின்றன. புரமோஷன் ஓகே.. கதை மற்றும் திரைக்கதையும் முக்கியம் தானே! ஒரு படம் தியேட்டர் என்ற சந்தைக்கு வருவதற்கு விளம்பரங்கள் எந்த அளவுக்கு முக்கியமாக கருதப்படுகிறதோ அதே அளவுக்கான முக்கியத்துவம் கதை மற்றும் திரைக் கதைக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்பதே பரவலான கருத்தாக இருந்து வருகிறது. குறிப்பாக படத்தில் நடிக்கும் கதாநாயகர்களுக்கு நூறு கோடி அளவுக்கு சம்பளத்தை வாரி இறைத்துவிட்டு அந்த கதையை உருவாக்க முக்கிய காரணமாக இருக்கும் எழுத்தாளர்களுக்கோ, வசனகர்த்தாக்களுக்கோ கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கும் பட்சத்தில் படமும் நிலைத்து நிற்கும். ஏனெனில் ஒரு படம் என்பது எந்த அளவிற்கு எங்கேஜிங்காக இருக்கும் என்பது அந்த படத்தின் கதை மற்றும் கதை எடுக்கப்படும் விதம் ஆகியவற்றில் தான் உள்ளது. இப்படி ஒரு படம் சிறப்பான ஒன்றாக உருவாவதற்கு என்ன என்ன தேவையோ அதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதே நிதர்சனமான உண்மை. பல கோடிகள் செலவிட்டு குறைந்த லாபத்தை ஈட்டுவது எப்படி வெற்றி ஆகும்? ஆனால் அவற்றை விடுத்து ஒரு படத்துக்கு புரோமோஷன் செய்தால் மட்டும் போதும் ஆட்டோமேட்டிக்காக மக்கள் தியேட்டருக்கு படையெடுப்பார்கள் என கடிவாளம் போட்டது போல பயணிப்பது உச்ச நட்சத்திர அந்தஸ்த்தில் இருக்கும் நடிகர்களுக்கும், இயக்குநர் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் சம்பளம் நீங்கலாக துறை ரீதியான எந்த பெருமையும் கிட்டிடாது என்பதே பொது கருத்தாக இருக்கிறது. குறிப்பிடும் வகையில் சொல்ல வேண்டுமானால், இந்தியாவில் பாலிவுட், கோலிவுட் சினிமாக்களில் மட்டுமே புரோமோஷனுக்காக கோடிக் கணக்கில் பணம் அள்ளி வீசப்படுகிறது. அதுவும் ஒரு படத்தின் பட்ஜெட் 400 கோடியாக இருந்து, அது வெளியான பிறகு அதே 400 கோடியோ அல்லது 450 கோடியோ வசூலித்திருந்தால் அது நல்ல வசூல் செய்யப்படமாக எப்படி கருதப்படும்?. ஒரு படம் தயாரிக்க ஆன செலவை காட்டிலும் கூடுதலாக எவ்வளவுக்கு எவ்வளவு சதம் அதிகம் வசூலிக்கிறதோ அதனை பொறுத்தே சிறந்த படம் என்பதை சொல்ல முடியும். உதராணத்துக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான கைதி படத்தின் மொத்த பட்ஜெட் தோராயமாக 30 கோடியாகவே இருந்திருக்கிறது. ஆனால் அந்த படத்தின் வசூலோ 100 கோடியை தாண்டியிருக்கிறது. இப்படி குறைந்த பட்ஜெட்டில் நல்ல கதையம்சத்தோடு எடுக்கும் படங்களுக்கு கிடைக்கும் இத்தகைய கலெக்‌ஷனை பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் என்பதா? அல்லது போட்ட முதலீட்டு பணமே வசூலாக வந்ததை பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் என கூறமுடியுமா? என்ற இந்த கேள்வியே சினிமா வட்டாரத்திடையேவும் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் இருக்கிறது. குறைந்த பட்ஜெட்டில் அசத்தும் மலையாள, கர்நாடக படங்கள்  அதே வேளையில் கர்நடகா, கேரளாவில் எடுக்கப்படும் சின்ன பட்ஜெட் படங்களெல்லாம் பான் இந்தியா முழுவதும் வெளியிடப்பட்டு சக்கப்போடு போடுகிறது. அதில் கே.ஜி.எஃப் 1 & 2, காந்தாரா, குரூப், ஜன கன மன, ஹிருதயம், ஜெய ஜெய ஜெய ஹே போன்ற பல படங்களின் மொத்த பட்ஜெட்டே அதிகபட்சம் 10 முதல் 40 கோடிக்குள்ளாகவே இருக்கும். ஆனால் வசூலித்த கலெக்‌ஷனோ உச்சத்தில் இருக்கும். இதில் முக்கியமான விஷயம் என்ன வென்றால் அவர்கள் சிறிய கதை அம்சத்தை எடுத்துக் கொண்டு அதனை பார்வையாளர்களின் மனதில் தைக்கும் வண்ணம் திரைக்கதையை உருவாக்கி அசத்திவிடுவார்கள். இந்த கதையை இப்படியெல்லாம் உணர்வுபூர்வமாக எடுக்க முடியுமா என்று நம்மை வியக்க வைத்துவிடுவார்கள்.  வானாளவிய, உலகமே கண்டு வியக்கும் அளவுக்கான புரோமோஷனை காட்டிலும் பத்திரிகையாளர்களை சந்திப்பது, நேர்காணல் நடத்துவது போன்ற குறைந்த செலவிலான புரோமோஷன் வேலைகளையே இப்படியான சின்ன பட்ஜெட் படங்கள் செய்திருக்கின்றன. சினிமா என்றாலே வெறும் வியாபாரம் தானா? சினிமா என்றாலேயே படைப்பு, கலை மற்றும் வியாபாரம் என்பதையெல்லாம் தாண்டி தற்போதைய காலகட்டத்தில் சினிமாவை வெறும் வியாபாரமாக மட்டுமே கருதி அதே டெம்ப்ளேட் பாணியிலான படங்களே அண்மைக்காலமாக வெளியாகி வருகிறது. இது கதைக்கான, கற்பனை வளத்துக்கான வறட்சியா அல்லது எதையாவது படமாக எடுத்து புரோமோஷன் செய்தால் போதும், படத்தை பார்க்க அவர்களாகவே ஓடோடி வருவார்கள் என்ற எண்ணமா? ஆனால் 400, 500 கோடி செலவில் படத்தை எடுத்து எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற வகையில் ஊர் ஊராக சுற்றி எப்படியாவது படத்தை பார்க்க மக்கள் கூட்டம் வந்துவிட வேண்டும் என்ற பாணியிலான புரோமோஷன் வேலைகளே அண்மைக்காலங்களாக நடந்து வருகிறது. முன்பெல்லாம் ஒரு படத்துக்கான கதைக்களமாக சிறு, குறு நாவலோ, கட்டுரையோ நாதமாக இருக்கும். அப்படி இல்லையெல்லாம் கதை, திரைக்கதைக்கு என்று தனியாக சிலர் பணியாற்றுவார்கள். பாலகுமாரன் போன்றவர்கள் வசன கர்த்தாவாக மிரள செய்ததும், மணிவண்ணனின் கதைகளை எடுத்து பாரதிராஜா படமாக இயக்கியதையும் இங்கு குறிப்பிடலாம். அதாவது, கதையும், திரைக்கதை வசனும் எவ்வளவு முக்கியம் என்பதை பலரும் தற்போது உணர்வதே இல்லை. நல்ல கதைகளை அடிப்படையாக கொண்டு சிறப்பாக திரைக்கதை அமைத்து அந்த கதைக்களத்துக்கு ஏற்றவாறு பாடல்கள், காட்சிகள் அமைத்து வெள்ளி விழா வரை கொண்டாடப்பட்ட படங்களின் காலங்களெல்லாம் மலையேறி, இப்போது படம் வெளியான மூன்றுநாள்தான் கணக்கு. அதுவும் கலெக்‌ஷன் வந்தால் போதும், கதை எப்படி இருந்தாலும் பரவாயில்லை, உச்ச மற்றும் முன்னணி நட்சத்திரங்களில் படமாக இருந்தால் மட்டும் போதும் என்ற பொது கணக்கே இருக்கிறது. இதில் தயாரிப்பாளர் மற்றும் உச்ச நடிகர்களின் அச்சமும் ஒரு காரணமாக இருக்கிறது. ஒருவேளை திரைப்படம் ஓட வில்லை என்றால் என்ன செய்வது. முதல் இரண்டு, மூன்று நாட்களுக்கு ஆடியன்ஸை தியேட்டருக்கு எப்படியாவது புரமோஷன்கள் மூலம் கூட்டிவிட்டால் போதும் என்ற மனநிலையிலேயே அவர்கள் இருக்கிறார்கள். மவுத் டாக் என்பதன் முக்கியத்துமே தற்போது இல்லை. ஒரு படம் நன்றாக இருந்தால் அதுவே தன்னைத்தானே புரமோஷன் செய்து கொள்ளும்.  சமீபத்தில் உச்ச நட்சத்திரங்களின் படங்கள் செய்த சம்பவம்! அஜித்தின் வலிமை, விஜய்யின் பீஸ்ட், சிவகார்த்திகேயனின் டான் மற்றும் பிரின்ஸ் போன்ற தமிழ் சினிமாவின் முக்கிய முகங்களின் படங்களின் கதைக்களமே சுமாராகத்தான் இருந்ததாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த படங்கள் பெரிய அளவில் புரமோஷன்கள் மூலம் ரசிகர்களை திரையரங்கு நோக்கி ஈர்த்தது. ஆனால், திரையரங்கு வந்தவர்களுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. வியாபார யுக்தியின் மூலம் ஒரு பொருளை எப்படியாவது வாடிக்கையாளர் தலையில் கட்டிவிடுவது போல திரைப்படங்களை ரசிகர்களின் தலையில் கட்டி உச்ச நட்சத்திரங்கள் லாபத்தை ஈட்டிவிடுகிறார்கள். இது தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, இந்தி போன்ற சினிமாவுக்கு நல்ல லாபம் கொடுக்கக் கூடிய wood-களிலும் இதே நிலைமையே நீடிக்கிறது. ஆனால் நித்தம் ஒரு வானம், அனல் மேலே பனித்துளி, அம்மு போன்ற பல நல்ல கதையம்சம் கொண்ட, ஃபீல் குட் மூவிஸ் என்ற ரகத்தில் இருக்கும் படங்களோ அமைதியாக OTT தளங்களுக்கு சென்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கான வெற்றியையே பெறுகின்றன. இறுதி கருத்து - ஒரு படமே அதற்கான புரமோஷன்! ஆகவே “சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்” என்ற பேச்சுக்கு ஏற்ப பிரமாண்டமான முறையில் புரோமோஷனை மேற்கொண்டாலும் படத்தில் கதையும் திரைக்கதையும் இல்லையென்றால் எத்தனை கோடியை செலவழித்து படமெடுத்தாலும் என்ன வருமோ அதுதான் வரும் என்பதே இதன் மூலம் தெள்ளத்தெளிவாக இருக்கிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
“நல்ல படத்துக்கு எதுக்கு புரோமோஷன், நல்ல படமாக இருந்தால் அதன் கதையும் வேலையுமே அதற்கு புரோமோஷன்” என நடிகர் அஜித்குமார் கூறியதாக சமீபத்தில் செய்திகள் பரவின. இப்படி இருக்கையில், அவரது துணிவு படத்துக்கான வேலைகளை படக்குழு தற்போது இறங்கியிருக்கிறது. அதன்படி துபாயில் ஸ்கைடைவிங் மூலமும், நியூயார்க்கின் டைம் ஸ்கொயரிலும் துணிவு பட புரோமோஷன் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, விஜய்யின் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாக் கூட சென்னையில் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி அன்று ஆயிரக்கணக்கான ரசிகர்களை வரவைத்து பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இந்த நிலையில், திரைப்படங்களுக்கு ஷூட்டிங், சம்பளம் போன்றவற்றையெல்லாம் தாண்டி புரோமோஷனுக்காகவே குறிப்பிட்ட அளவில் கோடிக்கணக்கில் செலவிடுவது எந்த அளவுக்கு தேவையானது மற்றும் இத்தனை கோடி செலவு செய்து ஒரு படத்துக்கு புரோமோஷன் செய்வதால் என்ன மாதிரியான பயன்கள் ஏற்படுகின்றன என்பதை காணலாம். உச்ச நட்சத்திரங்களின் படங்களின் கதைக்களத்துக்கும், அதற்காக மேற்கொள்ளப்படும் புரோமோஷன்களுக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாத அளவுக்கான வித்தியாசமே இருக்கும். குறிப்பாக பிரம்மாண்ட...