விக்ரம், பீஸ்ட், KGF கலந்த கலவையா அஜித்தின் துணிவு படம்? - ட்ரெய்லர் சொல்லும் சேதி என்ன? 2023ம் ஆண்டு பிறக்கப் போகும் நேரத்தில் அஜித்தின் துணிவு படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டு ரசிகர்களின் மிகப்பெரிய ஆவலை தீர்த்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் #ThunivuTrailer ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. துணிவு ட்ரெய்லர் வெளியான சில நிமிடங்களிலேயே 1 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருக்கிறது. ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டிருக்கும் துணிவு படத்தின் தற்போதைய ட்ரெய்லரில் அஜித் வில்லனை போன்றே காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறார். அதன்படி சென்னை சிட்டியின் பிரபல வங்கி ஒன்றில் பட்டப்பகலில் தடாலடியாக புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளையை அரங்கேற்றும் வகையில் காட்சிகள் அமைந்திருக்கிறது. அதில், மக்கள் பணத்தை கொள்ளையடிக்குறியே வெக்கமா இல்ல என கேட்கும் போது மாஸ்கை கழற்றி இல்லைனு சிரிச்ச முகத்தோடு சொல்லும் வசனத்தோடு தொடங்குகிறது அஜித்தின் அறிமுகம். அதன் பின்னர், “Dont act like a hero. அந்த வேலைய நான் பாத்துக்குறேன்” , “என்ன மாதிரி ஒரு அயோக்கியப்பய மேல கைய வெக்கலாமா” ஆகிய வசனங்கள் அஜித் பேசுவது போல அமைந்திருக்கிறது. இதுபோக ட்ரெய்லரின் முடிவில் அஜித் போலிஸ் உடையில் துப்பாக்கி பயிற்சி செய்வதும் போலவும் காட்சிகள் இருக்கின்றன. படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டாலும் எந்த தேதியில் ரிலீசாகும் என்ற அறிவிப்பு வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் பலரும் விஜ்ஜயின் பீஸ்ட் படத்தின் இரண்டாம் பாகமா? அஜித்தின் அறிமுகம் விக்ரம் படத்தின் கமல் வரும் காட்சிய போல இருக்கிறதே? என்றெல்லாம் ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள். மேலும், கே.ஜி.எஃப் பட பாணியிலும் சில காட்சிகள் இருப்பதால் “நீங்க நல்லவரா கெட்டவரா?” என்றும் துணிவு ட்ரெய்லருக்கு பதிவுகள் சமூக வலைதளங்களில் பறந்து வருகிறது Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

2023ம் ஆண்டு பிறக்கப் போகும் நேரத்தில் அஜித்தின் துணிவு படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டு ரசிகர்களின் மிகப்பெரிய ஆவலை தீர்த்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் #ThunivuTrailer ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
துணிவு ட்ரெய்லர் வெளியான சில நிமிடங்களிலேயே 1 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருக்கிறது. ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டிருக்கும் துணிவு படத்தின் தற்போதைய ட்ரெய்லரில் அஜித் வில்லனை போன்றே காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறார்.
அதன்படி சென்னை சிட்டியின் பிரபல வங்கி ஒன்றில் பட்டப்பகலில் தடாலடியாக புகுந்து துப்பாக்கி முனையில் கொள்ளையை அரங்கேற்றும் வகையில் காட்சிகள் அமைந்திருக்கிறது. அதில், மக்கள் பணத்தை கொள்ளையடிக்குறியே வெக்கமா இல்ல என கேட்கும் போது மாஸ்கை கழற்றி இல்லைனு சிரிச்ச முகத்தோடு சொல்லும் வசனத்தோடு தொடங்குகிறது அஜித்தின் அறிமுகம்.
அதன் பின்னர், “Dont act like a hero. அந்த வேலைய நான் பாத்துக்குறேன்” , “என்ன மாதிரி ஒரு அயோக்கியப்பய மேல கைய வெக்கலாமா” ஆகிய வசனங்கள் அஜித் பேசுவது போல அமைந்திருக்கிறது. இதுபோக ட்ரெய்லரின் முடிவில் அஜித் போலிஸ் உடையில் துப்பாக்கி பயிற்சி செய்வதும் போலவும் காட்சிகள் இருக்கின்றன. படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டாலும் எந்த தேதியில் ரிலீசாகும் என்ற அறிவிப்பு வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் பலரும் விஜ்ஜயின் பீஸ்ட் படத்தின் இரண்டாம் பாகமா? அஜித்தின் அறிமுகம் விக்ரம் படத்தின் கமல் வரும் காட்சிய போல இருக்கிறதே? என்றெல்லாம் ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள். மேலும், கே.ஜி.எஃப் பட பாணியிலும் சில காட்சிகள் இருப்பதால் “நீங்க நல்லவரா கெட்டவரா?” என்றும் துணிவு ட்ரெய்லருக்கு பதிவுகள் சமூக வலைதளங்களில் பறந்து வருகிறது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/7B9sHmi
via IFTTT
Comments
Post a Comment