”ஹீரோ மாதிரி நடிக்க வேண்டாம்.. அந்த வேலைய நான் பாத்துக்குறேன்” - துணிவு ட்ரெய்லர் இதோ! அஜித்தின் 61வது படமான துணிவு ட்ரெய்லரை வெளியிட்டது படக்குழு. ஹெச்.வினோத்தின் இயக்கத்தில், போனி கபூரின் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு இந்த கூட்டணியில் அஜித் மீண்டும் இணைந்திருக்கிறார். ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகிக் கொண்டிருக்கும் துணிவு படத்தில் ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். படத்தில் மஞ்சுவாரியர், ஜான் கொக்கேன் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். 2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி படம் ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டாலும் இதுவரை தேதி அறிவிக்கப்படவில்லை. இதனிடையே சில்லா சில்லா, காசேதான் கடவுளடா மற்றும் கேங்ஸ்டா ஆகிய மூன்று பாடல்கள் வெளியிடப்பட்டு அஜித் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. Just saw something. Buy extra crackers. Lots of extra crackers. — NIRAV SHAH (@nirav_dop) December 29, 2022 இப்படி இருக்கையில், படத்தின் ஒளிப்பதிவாளரான நீரவ் ஷா கடந்த இரு நாட்களுக்கு முன்பு, “அதிக அளவிலான பட்டாசுகளை வாங்கி வைத்திருங்கள்.” என பூடகமாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த துணிவு படத்தின் ட்ரெய்லரை 2023ன் ஆங்கில புத்தாண்டையொட்டி இன்று (டிச.,31) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டதும் ட்விட்டரில் #ThunivuTrailer என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கிலேயே இருந்து வருகிறது. இந்த நிலையில் துணிவு படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டது. முன்னதாக துணிவு படத்தின் மொத்த ரன்னிங் நேரம் 2 மணிநேரம் 23 நிமிடமாக இருக்கும் என தகவல் வெளியாகியிருந்தது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

அஜித்தின் 61வது படமான துணிவு ட்ரெய்லரை வெளியிட்டது படக்குழு.
ஹெச்.வினோத்தின் இயக்கத்தில், போனி கபூரின் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு இந்த கூட்டணியில் அஜித் மீண்டும் இணைந்திருக்கிறார். ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகிக் கொண்டிருக்கும் துணிவு படத்தில் ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.
படத்தில் மஞ்சுவாரியர், ஜான் கொக்கேன் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். 2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி படம் ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டாலும் இதுவரை தேதி அறிவிக்கப்படவில்லை.
இதனிடையே சில்லா சில்லா, காசேதான் கடவுளடா மற்றும் கேங்ஸ்டா ஆகிய மூன்று பாடல்கள் வெளியிடப்பட்டு அஜித் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
Just saw something. Buy extra crackers. Lots of extra crackers.
— NIRAV SHAH (@nirav_dop) December 29, 2022
இப்படி இருக்கையில், படத்தின் ஒளிப்பதிவாளரான நீரவ் ஷா கடந்த இரு நாட்களுக்கு முன்பு, “அதிக அளவிலான பட்டாசுகளை வாங்கி வைத்திருங்கள்.” என பூடகமாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த துணிவு படத்தின் ட்ரெய்லரை 2023ன் ஆங்கில புத்தாண்டையொட்டி இன்று (டிச.,31) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டதும் ட்விட்டரில் #ThunivuTrailer என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கிலேயே இருந்து வருகிறது. இந்த நிலையில் துணிவு படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டது.
முன்னதாக துணிவு படத்தின் மொத்த ரன்னிங் நேரம் 2 மணிநேரம் 23 நிமிடமாக இருக்கும் என தகவல் வெளியாகியிருந்தது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/FIY1cr4
via IFTTT
Comments
Post a Comment