"சம்ஜா... புரிஞ்சுச்சா?"- விமான நிறுவனங்களை டேக் செய்து கோபப்பட்ட பாடகர் பென்னி தயாள்! பிரபல பாடகர் பென்னி தயாள், விமான நிறுவனங்கள் எதுவும் இசைக்கருவிகளை சரியாக கையாள்வதில்லை என்றும், அதன்மீது குறைந்தபட்ச பராமரிப்பு கூட விமான ஊழியர்களால் காட்டப்படுவதில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் Vistara, Air India, Indigo, Air Asia India, Spice jet airlines, Akasa Air என அனைத்து விமான நிறுவனங்களையும் டேக் செய்து வீடியோ பகிர்ந்துள்ளார் பாடகர் பென்னி தயாள். அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளவை பின்வருமாறு: “இந்தியாவின் அனைத்து விமான சேவைகளுக்கும் ஒரு சின்ன விஷயம் சொல்ல விரும்புகிறேன். ஒவ்வொரு இசைக்கலைஞரும், பணம் சம்பாதிக்க மிகக்கடுமையாக உழைக்கின்றார். அப்படியான அவர்களின் சம்பளத்துக்கு வித்திடுவது, நீங்கள் அவர்களின் இசைக்கருவிகளை எப்படி கையாள்கின்றீர்கள் என்பதை பொறுத்துதான் அமையும். ஒவ்வொரு முறையும் கான்செர்ட், இசை நிகழ்ச்சிகள் என பல்வேறு நாடுகளுக்கு இசைக்கலைஞர்கள் இந்தியாவுக்கும் உள்ளேயேயும், இந்தியாவிலிருந்தும் பயணிக்கின்றனர். அப்படி பயணிக்கும் அவர்களின் இசைக்கருவிகளை பாதுகாப்பாக கையாள வேண்டும் என்ற அக்கறை, இந்தியாவில் இண்டிகோ, விஸ்தாரா, ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட் போன்ற எந்த விமான நிறுவனத்துக்குமே கொஞ்சம் கூட இருப்பதில்லை (இதை Zero Love or Zero Care என்று தன் வீடியோவில் குறிப்பிடுகிறார்). இதுபற்றி ஏராளமான இசைக்கலைஞர்கள் வீடியோக்கள் வழியாக குறையாக பகிர்ந்துள்ளனர். நானே அப்படிப்பட்ட பல வீடியோக்களை பார்த்துள்ளேன். இதுபோன்ற நிகழ்வுகள் எனக்கும்கூட நேரடியாக நடந்துள்ளது. விஸ்தாரா நிறுவன விமானத்தில் நான் பயணிக்கையில், என்னுடைய இரண்டு பைகளில் இருந்த அனைத்து கருவிகளும் 7 நாள் இடைவெளிக்குள் உடைந்த நிலையில் எனக்கு கிடைக்கப்பட்டன. அந்த உடைந்த பொருள்களுக்கு, நீங்கள்தான் பொறுப்பு. எனக்கு என்னுடைய பொருட்கள் வேண்டும். விஸ்தாராவின் பயணிகள் சேவை, மிக மிக மிக மோசமாக உள்ளது. இதேபோலதான் இண்டிகோவும். உங்களுக்கு இசைக்கலைஞர்கள் மீதும், அவர்களின் உணர்வுகள் மீதும் ஜீரோ என்ற அளவில்தான் அக்கறை உள்ளது. லக்கேஜை ஹேண்டில் செய்ய நீங்கள் நியமித்திருக்கும் நபர்களிடம், எதை எப்படி கையாள வேண்டும் என்றுகூட நீங்கள் சொல்லிக்கொடுப்பதில்லை. அப்படி நீங்கள் செய்யும் தவறுகளினால், மீண்டும் மீண்டும் எங்களுடைய கருவிகள் உடைந்த நிலையிலேயே எங்களுக்கு கிடைக்கிறது. உங்கள் போக்குவரத்தை பயன்படுத்தி ஒவ்வொரு முறை ஒவ்வொருவர் தங்கள் கருவிகளை கொண்டு செல்லும்போதும், அது உங்களால் ஏதாவதொரு வகையில் உடைக்கப்பட்டு விடுவதை காணமுடிகிறது. ஆனால் நீங்களோ, அதற்கு கொஞ்சம் கூட பொறுப்பெடுத்துக்கொள்ள மாட்டேன் என உள்ளீர்கள். இப்படியான மனப்போக்கை, நிச்சயமாக ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு உங்கள் விமானத்தில் பயணிப்பவர்கள், இறுதியில் தங்கள் பொருள் உடைந்திருப்பதை பார்க்கவா விரும்புவார்கள்? தயவுசெய்து இப்படி செய்யாதீர்கள். உங்களை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்… தயவுசெய்து எங்கள் கருவிகளை உடைக்காதீர்கள். அவற்றை கொஞ்சமாவது அக்கறையுடன் கையாளுங்கள். அந்தக் கருவிகள் தான் எங்களுக்கு சாப்பாடு போடுகிறது. அதை இவ்வளவு அலட்சியமாகவும் மோசமாகவும் கையாளாதீர்கள். நான் சொல்வது உங்களுக்கு புரிகிறதா? (தமிழிலும் இந்தியிலும் புரிகிறதா என சற்று கோபத்துடன் வீடியோவில் கேட்டுள்ளார் பென்னி தயாள்) ஒவ்வொரு முறையும் நாங்கள் (இசைக்கலைஞர்கள்) அனைத்து லக்கேஜூக்கும் உரிய வகையில் கட்டணம் செலுத்துகிறோம். அவற்றை ஒழுங்காக அடுக்கி, மிக மிக பாதுகாப்பாக அடுக்கி தருகிறோம். அதனால்… தயவு செய்து… தயவுசெய்து… கெஞ்சி கேட்கிறேன்... பொறுப்புடன் எங்கள் கருவிகளை கையாளுங்கள். கொஞ்சமாவது பொறுப்புடன் இருங்கள்” என கடுமையான குரலில் வேண்டுகோளாக முன்வைத்துள்ளார். பென்னி தயாலின் வீடியோவை இங்கு காணலாம்:   View this post on Instagram A post shared by BENNY DAYAL (@bennydayalofficial) அவரது இந்த பதிவுக்கு பல இசைக்கலைஞர்கள் கமெண்ட் வழியே ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் ஏதேனும் நடவடிக்கை எடுக்குமா, பதில் சொல்லுமா என்பதே தற்போது இசைக்கலைஞர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

பிரபல பாடகர் பென்னி தயாள், விமான நிறுவனங்கள் எதுவும் இசைக்கருவிகளை சரியாக கையாள்வதில்லை என்றும், அதன்மீது குறைந்தபட்ச பராமரிப்பு கூட விமான ஊழியர்களால் காட்டப்படுவதில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் Vistara, Air India, Indigo, Air Asia India, Spice jet airlines, Akasa Air என அனைத்து விமான நிறுவனங்களையும் டேக் செய்து வீடியோ பகிர்ந்துள்ளார் பாடகர் பென்னி தயாள். அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளவை பின்வருமாறு:

“இந்தியாவின் அனைத்து விமான சேவைகளுக்கும் ஒரு சின்ன விஷயம் சொல்ல விரும்புகிறேன். ஒவ்வொரு இசைக்கலைஞரும், பணம் சம்பாதிக்க மிகக்கடுமையாக உழைக்கின்றார். அப்படியான அவர்களின் சம்பளத்துக்கு வித்திடுவது, நீங்கள் அவர்களின் இசைக்கருவிகளை எப்படி கையாள்கின்றீர்கள் என்பதை பொறுத்துதான் அமையும்.

image

ஒவ்வொரு முறையும் கான்செர்ட், இசை நிகழ்ச்சிகள் என பல்வேறு நாடுகளுக்கு இசைக்கலைஞர்கள் இந்தியாவுக்கும் உள்ளேயேயும், இந்தியாவிலிருந்தும் பயணிக்கின்றனர். அப்படி பயணிக்கும் அவர்களின் இசைக்கருவிகளை பாதுகாப்பாக கையாள வேண்டும் என்ற அக்கறை, இந்தியாவில் இண்டிகோ, விஸ்தாரா, ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட் போன்ற எந்த விமான நிறுவனத்துக்குமே கொஞ்சம் கூட இருப்பதில்லை (இதை Zero Love or Zero Care என்று தன் வீடியோவில் குறிப்பிடுகிறார்). இதுபற்றி ஏராளமான இசைக்கலைஞர்கள் வீடியோக்கள் வழியாக குறையாக பகிர்ந்துள்ளனர். நானே அப்படிப்பட்ட பல வீடியோக்களை பார்த்துள்ளேன்.

image

இதுபோன்ற நிகழ்வுகள் எனக்கும்கூட நேரடியாக நடந்துள்ளது. விஸ்தாரா நிறுவன விமானத்தில் நான் பயணிக்கையில், என்னுடைய இரண்டு பைகளில் இருந்த அனைத்து கருவிகளும் 7 நாள் இடைவெளிக்குள் உடைந்த நிலையில் எனக்கு கிடைக்கப்பட்டன. அந்த உடைந்த பொருள்களுக்கு, நீங்கள்தான் பொறுப்பு. எனக்கு என்னுடைய பொருட்கள் வேண்டும். விஸ்தாராவின் பயணிகள் சேவை, மிக மிக மிக மோசமாக உள்ளது. இதேபோலதான் இண்டிகோவும். உங்களுக்கு இசைக்கலைஞர்கள் மீதும், அவர்களின் உணர்வுகள் மீதும் ஜீரோ என்ற அளவில்தான் அக்கறை உள்ளது. லக்கேஜை ஹேண்டில் செய்ய நீங்கள் நியமித்திருக்கும் நபர்களிடம், எதை எப்படி கையாள வேண்டும் என்றுகூட நீங்கள் சொல்லிக்கொடுப்பதில்லை. அப்படி நீங்கள் செய்யும் தவறுகளினால், மீண்டும் மீண்டும் எங்களுடைய கருவிகள் உடைந்த நிலையிலேயே எங்களுக்கு கிடைக்கிறது.

உங்கள் போக்குவரத்தை பயன்படுத்தி ஒவ்வொரு முறை ஒவ்வொருவர் தங்கள் கருவிகளை கொண்டு செல்லும்போதும், அது உங்களால் ஏதாவதொரு வகையில் உடைக்கப்பட்டு விடுவதை காணமுடிகிறது. ஆனால் நீங்களோ, அதற்கு கொஞ்சம் கூட பொறுப்பெடுத்துக்கொள்ள மாட்டேன் என உள்ளீர்கள். இப்படியான மனப்போக்கை, நிச்சயமாக ஏற்றுக்கொள்ளவே முடியாது.

image

ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு உங்கள் விமானத்தில் பயணிப்பவர்கள், இறுதியில் தங்கள் பொருள் உடைந்திருப்பதை பார்க்கவா விரும்புவார்கள்? தயவுசெய்து இப்படி செய்யாதீர்கள். உங்களை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்… தயவுசெய்து எங்கள் கருவிகளை உடைக்காதீர்கள். அவற்றை கொஞ்சமாவது அக்கறையுடன் கையாளுங்கள். அந்தக் கருவிகள் தான் எங்களுக்கு சாப்பாடு போடுகிறது. அதை இவ்வளவு அலட்சியமாகவும் மோசமாகவும் கையாளாதீர்கள். நான் சொல்வது உங்களுக்கு புரிகிறதா? (தமிழிலும் இந்தியிலும் புரிகிறதா என சற்று கோபத்துடன் வீடியோவில் கேட்டுள்ளார் பென்னி தயாள்)

image

ஒவ்வொரு முறையும் நாங்கள் (இசைக்கலைஞர்கள்) அனைத்து லக்கேஜூக்கும் உரிய வகையில் கட்டணம் செலுத்துகிறோம். அவற்றை ஒழுங்காக அடுக்கி, மிக மிக பாதுகாப்பாக அடுக்கி தருகிறோம். அதனால்… தயவு செய்து… தயவுசெய்து… கெஞ்சி கேட்கிறேன்... பொறுப்புடன் எங்கள் கருவிகளை கையாளுங்கள். கொஞ்சமாவது பொறுப்புடன் இருங்கள்” என கடுமையான குரலில் வேண்டுகோளாக முன்வைத்துள்ளார்.

பென்னி தயாலின் வீடியோவை இங்கு காணலாம்:

 

அவரது இந்த பதிவுக்கு பல இசைக்கலைஞர்கள் கமெண்ட் வழியே ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் ஏதேனும் நடவடிக்கை எடுக்குமா, பதில் சொல்லுமா என்பதே தற்போது இசைக்கலைஞர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/ijJaqBL
via IFTTT

Comments

Popular posts from this blog

‘யோகி பாபுக்காக ஒரு கதை எடுக்க வேண்டும் என்று ஆசை’ -‘பொம்மை நாயகி’ விழாவில் மாரி செல்வராஜ் பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகிபாபு நடித்துள்ள ‘பொம்மை நாயகி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் இன்று நடைபெற்றது. பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘பொம்மை நாயகி’. சிறுமி ஸ்ரீமதி, யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஷான். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள படத்தின் பாடல்களை ‘தெருக்குரல்’ அறிவு எழுதியிருக்கிறார். இந்த விழாவில் அறிமுக இயக்குநர் ஷான் பேசுகையில், “இந்தக் கதை எழுதி முடித்ததும் யாரிடமும் சொல்ல வில்லை. நீண்ட நாட்களாக இந்தக் கதையை வைத்து கொண்டே இருந்தேன். படம் பண்ணினால் நீளம் புரொடக்ஷனில் தான் பண்ண வேண்டும் என்று தீர்க்கமாக இருந்தேன். கதையைப் படித்து கதையில் இருந்த நம்பிக்கையால் இந்தப் படம் எடுக்க முடிந்தது. ‘பரியேறும் பெருமாள்’ படம் பார்த்து யோகி பாபு நடித்தால் எப்படி இருக்கும் என்ற நினைத்தேன். எதார்த்தமான மனிதன் சந்திக்கும் பிரச்சினைகளை எதிர்கொள்ளுவது தான் இந்த படம். எல்லோரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் இது” என்று தெரிவித்தார். இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், “இயக்குநர் இந்த கதையை தான் எடுப்பேன் என்று உறுதியாக இருந்து எடுத்து முடித்தவர். யார் இந்தக் கதையில் நடித்தால் சரி வரும் என்று தேர்வு செய்து பொருத்தமாக எடுத்துள்ளார். நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம் முக்கியமான நபர்கள் வெளி வந்துள்ளனர். ‘வாழை’ படம் முதன் முதலில் நான் எழுதிய கதை. அதை எப்போது எடுப்பேன் என்று எதிர்பார்த்து கொண்டு இருந்தேன். தற்போது அந்தப் படத்தை முடித்து விட்டேன். அடுத்து நான் நீலம் புரொடக்ஷனில் தான் படம் பண்ண போகிறேன். பிற்போக்குத்தனமான ஒரு படத்தை எடுக்க மாட்டேன் என்பது என் கொள்கை. நான் தப்பான படங்களை எடுக்க மாட்டேன். நிஜ கதைகளை உருவாக்கும் போதே இவர்கள் இந்த கதையை தயாரிப்பார்கள் என்ற நிச்சயம் உண்டானால் அது தான் தமிழ் சினிமாவின் வெற்றி. ‘பொம்மை நாயகி’ ஒரு பேரலையாய் அமையும். பெரிய இயக்குனர்கள் அனைவருக்கும் யோகி பாபுவிற்காக கதை எடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும், எனக்கும் அந்த ஆசை உள்ளது” என்று கூறினார். நடிகர் ஜி.எம். குமார் பேசுகையில், “இங்கே நான் வந்ததற்கு காரணம் கதை தான். யோகி பாபு உடன் என்னோட மூணாவது படம். ‘கர்ணன்’ படத்தில் மாரியிடம் யோகி பாபுவால் திட்டு வாங்கினேன். இயக்குநர் பா. ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’ மற்றும் ‘சார்பட்டா பரம்பரை’ படங்களை பார்த்து அசந்து போனேன்” என்று தெரிவித்தார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

நடிகர் மயில்சாமி உடலுக்கு பிரேத பரிசோதனை இல்லை... ஏன்? நடிகர் மயில்சாமிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். சென்னை சாலிகிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தவர் தமிழ் திரைப்பட காமெடி நடிகர் மயில்சாமி. தமிழ் திரைப்படங்களில் சிறந்த காமெடி நடிகராக வலம் வந்த மயில்சாமிக்கு இன்று காலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை அவரது உறவினர்கள் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மயில்சாமி வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மயில்சாமி இறந்த செய்தி கேட்டு அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த போரூர் போலீசார் உயிரிழந்த மயில்சாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மயில்சாமி உயிரிழப்புக்கு காரணம் மாரடைப்பா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரித்து வந்தனர். பின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் மயில்சாமி உடல் பிரேத பரிசோதனை செய்யவில்லை என சொல்லப்பட்டுள்ளது. அதன் பின்னணியாக, அவருக்கு மாரடைப்பு உறுதியானதை மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவர் ஏற்கனவே இதயம் சம்பந்தமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனது உறுதியானது. இறப்புக்கான காரணம் உறுதியானதால், அவரது உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை என்றும் இன்னும் சிறிது நேரத்தில் அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளன. நடிகர் மயில்சாமியின் உயிரிழப்பு தமிழ் திரை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

விஜய்.. கமல்ஹாசன் அடுத்தது?: முன்னணி நடிகர்களின் படங்களைக் கைப்பற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தினை ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. நடிகர் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ படங்களைத் தயாரிப்பதோடு முன்னணி நடிகர்களின் படங்களையும் கைப்பற்றி வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்’, பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’, ராஜமெளலியின் ( ‘ஆர்ஆர்ஆர்’ மூன்று இடங்களில் மட்டும்) உள்ளிட்டப் படங்களை கைப்பற்றி வெளியிட்டது. வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகும் விஜய்யின் ‘பீஸ்ட்’, ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படங்களின் தமிழக ரெட் ஜெயன்ட் மூவிஸ்தான் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் தமிழக உரிமையையும் கைப்பற்றியுள்ளதகாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவிருக்கிறார்கள். ‘விக்ரம்’ வரும் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகிறது. அன்றுதான் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்துவரும் ‘மாமன்னன்’ படத்தினை ரெட் ஜெயன்ட் தான் தயாரிக்கிறது. இதற்கு முன்னதாக, தமிழ் சினிமாவில் ஹாட்ரிக் வெற்றி கொடுத்த இயக்குநர்களில் லோகேஷ் கனகராஜும் ஒருவர். அவரின் ’மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் அடித்து வசூலைக் குவித்ததால் இயக்குநர் நான்காவதாக கமல்ஹாசனை இயக்கும் ‘விக்ரம்’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. கோரோனா சூழலிலும் மக்களை தியேட்டர் நோக்கி வரவைத்தது ‘மாஸ்டர்’. அதன் வெற்றிக்குப்பிறகு விஜய் சேதுபதி - அனிருத்துடன் மீண்டும் ’விக்ரம்’மில் கைக்கோர்த்துள்ளார் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் இப்படத்தில் ஃபகத் ஃபாசிலும் நடிப்பதால் மலையாள ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். காளிதாஸ் ஜெயராம், நரேன், ’பிக்பாஸ்’ ஷிவானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM