Posts

Showing posts from January, 2023

`ச்ச... என்னா மனுஷன்யா’- அப்டேட்களைத் வாரி வழங்கிய தளபதி 67 படக்குழு! குஷியில் ரசிகர்கள்! நடிகர் விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 67’ குறித்த அடுத்தடுத்த அப்டேட்களை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இன்று ஒன்றன்பின் ஒன்றாக வெளியிட்டது. அதில், பெரிய நடிகர் பட்டாளங்களையே அறிவித்துள்ளது படக்குழு. இதனால் விஜய் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். இன்று வெளியாகியுள்ள அப்டேட்களை  மட்டும், இந்தத் தொகுப்பில் பார்ப்போம். 'வாரிசு' படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ’தளபதி 67’ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். இம்மூவரும் 2வது முறையாகக் கூட்டணி அமைக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. அதேநேரத்தில், ‘தளபதி 67’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று மாலை (ஜனவரி 30) வெளியானது. ’விஜய் அண்ணாவுடன் மீண்டும் இணைகிறேன்’ என இயக்குநர் லோகேஷ் கனகராஜும், ’தளபதி விஜய்யுடன் மீண்டும் தளபதி 67ல் இணைவது மகிழ்ச்சியளிக்கிறது’ என செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட, ரசிகர்கள் மத்தியில் இப்பதிவுகள் வைரலாகின. Good evening guys! More than happy to join hands with @actorvijay na once again #Thalapathy67 pic.twitter.com/4op68OjcPi — Lokesh Kanagaraj (@Dir_Lokesh) January 30, 2023 அத்துடன், இப்படத்தில் இணைந்துள்ள பிரபலங்களை படக்குழு நேற்று அறிவித்தது. அதன்படி, இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சாவும், படத்தொகுப்பு பணிகளை பிலோமின் ராஜ் மேற்கொள்ள உள்ளதாகவும் அறிவித்தனர். அதோடு ஸ்டண்ட் மாஸ்டராக அன்பறிவு பணியாற்றுகின்றனர் எனவும் தெரிவித்தது. இந்த நிலையில், காஷ்மீரில் நடைக்கும் இரண்டாவதுகட்ட படப்பிடிப்புக்காக ‘தளபதி 67’ படக்குழுவினர் இன்று (ஜனவரி 31) காலை தனி விமானத்தில் சென்றுள்ளனர். இதனை படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் விமான டிக்கெட்டுடன் பகிர்ந்து இருந்தார். அத்துடன், ‘தளபதி 67’ படத்தில் இணைந்து பணியாற்றும் நடிகர்களையும் படத் தயாரிப்பு நிறுவனம், இன்று அடுத்தடுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. அதன்படி, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், இளம் நடிகர் மேத்யூ தாமஸ், பழைய வில்லன் நடிகர் மன்சூர் அலிகான், இயக்குநர் மிஷ்கின், நடன இயக்குநர் சாண்டி, நடிகை பிரியா ஆனந்த் ஆகியோர் பெயர்களை அடுத்தடுத்து வெளியிட்ட பட நிறுவனம், இறுதியாக இயக்குநர் மற்றும் நடிகர்களான கெளதம் வாசுதேவ மேனன், அர்ஜுன் ஆகியோர் பெயர்களை வெளியிட்டு, ‘இத்துடன் இன்றைய ‘தளபதி 67’ அப்டேட்ஸ் முடிவு அடைகிறது” எனக் குறிப்பிட்டுள்ளது. Guess paniteenga nu theriyum, but first time kekra mari nenachikonga nanba @PriyaAnand is officially part of #Thalapathy67 now #Thalapathy67Cast #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @Jagadishbliss pic.twitter.com/5cdFu5MtjN — Seven Screen Studio (@7screenstudio) January 31, 2023 'தளபதி 67’ படத்தில் இணைந்தது குறித்து சஞ்சய் தத், “படத்தின் ஒன்லைன் கேட்டபோதே, இந்தப் படத்தின் ஒரு பகுதியாக நானும் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன். அதற்குச் சரியான தருணம் இதுதான் என்று தோன்றியது. தளபதி 67 பயணம் குறித்து மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்” எனக் கூறியதாக படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டரில் குறிப்பிட்டுள்ளது. நடிகை பிரியா ஆனந்த், "தளபதி 67 படத்தில் நடிப்பது த்ரில்லாக உள்ளது. ஒரு அற்புதமான படக்குழுவினருடன் பணிபுரிவதை எதிர்நோக்கி உள்ளேன்" எனவும், நடன இயக்குநர் சாண்டி, “இது ஒரு ஸ்பெஷல் ஃபீலிங். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படி ஒரு பிரம்மாண்டமான படத்தில் நான் நடிப்பது எனக்கே ஒரு புது அனுபவமாக உள்ளது. தளபதி விஜய் சார் உடன் நடிக்க உள்ளதை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை” எனவும் கூறியிருப்பதாகப் படக்குழு வெளியிட்டிருக்கும் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Expect the unexpected from Team #Thalapathy67 Actor @iamSandy_Off joins the cast of Thalapathy 67 Inaiki full ah update mela update dhan #Thalapathy67Cast #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @Jagadishbliss pic.twitter.com/BchtQ9IU6Z — Seven Screen Studio (@7screenstudio) January 31, 2023 அதுபோல் இயக்குநர் மிஷ்கின், “21 வருடங்களுக்கு முன் விஜய் நடித்த படத்தில் அசோசியேட் இயக்குனராக பணிபுரிந்தேன். இத்தனை வருடங்களில் ஒரு விஷயம் மாறாமல் உள்ளது. அது விஜய்க்கும் எனக்கும் உள்ள பிணைப்பு. Yes, it’s official now! We are happy to announce Director #Mysskin sir is part of #Thalapathy67 #Thalapathy67Cast #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @Jagadishbliss pic.twitter.com/Zn44BqkN5N — Seven Screen Studio (@7screenstudio) January 31, 2023 இந்த பிணைப்புடன் லோகேஷ் கனகராஜூக்கு என் மீதும் எனக்கு அவர் மீதும் உள்ள பரஸ்பர அன்பும் மரியாதையும் என்னை ஆர்வம் கொள்ளச் செய்கிறது. தளபதி 67 படத்தினை உங்களோடு தியேட்டரில் காண ஆர்வமாக உள்ளேன்" என அந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ளார். நடிகர் மன்சூர் அலிகான், “யாணும் இணைந்தேன். தளபதி 67இல் லோகேஷ் நீ ஆர்ப்பரித்து எழு; திரையில் விரைவில் சந்திப்போம் மக்களே” என அந்த போஸ்டரில் தெரிவித்துள்ளார். இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், “இந்த நேரத்தில் கேமரா முன் மற்றும் திரைத்துறையில் கைதேர்ந்தவர்களுடன் தோள்சேர்ந்து நிற்கிறேன். Hi nanba, naanga idha solliye aaganum, en na @menongautham sir is part of #Thalapathy67 #Thalapathy67Cast #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @Jagadishbliss pic.twitter.com/4m2z9JxEgv — Seven Screen Studio (@7screenstudio) January 31, 2023 தளபதி 67ல் தானும் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி” எனவும், இயக்குநரும் நடிகருமான அர்ஜுன், ”ஒரு அற்புதமான கேப்டனால் (லோகேஷ் கனகராஜ்) வழிநடத்தப்படும் கப்பலில் ஏறுகிறேன்” எனவும் அந்த போஸ்டர்களில் குறிப்பிட்டுள்ளனர். And Finally ACTION KING @akarjunofficial on board #Thalapathy67 pic.twitter.com/UdjVJx2l0f — Seven Screen Studio (@7screenstudio) January 31, 2023 இந்த அப்டேட் மழையை தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம், “இத்துடன் இன்றைய தளபதி 67 அப்டேட்ஸ் முடிவடைகிறது! நாளை சந்திப்போம்” எனக்குறிப்பிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நாளை நடிகை த்ரிஷா, நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் படத்திலிருப்பது பற்றிய அப்டேட்ஸ் வருமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இந்த தொடர் அறிவுப்புகளால் ரசிகர்கள் விஜய் உற்சாகத்தில் உள்ளனர். Ithudan indraya #Thalapathy67 updates mudivu adaikirathu Naalai santhipom — Seven Screen Studio (@7screenstudio) January 31, 2023 ஒரு ரசிகை, “இன்னைக்கு அறிவிச்சவங்களாம், படத்தில் ஒரு தரப்பு போல” என்றுள்ளார். இன்னொருவர், “நாங்க வெயிட் பண்ணுவோம்னு தெரிஞ்சு, இன்னைக்கு அப்டேட் முடிஞ்சிருச்சுனு சொல்றீங்க பாத்தீங்களா... அண்ணா, நீங்க எங்க ஆளு அண்ணா” என்றுள்ளார். இன்னொருவரோ “என்னா மனுஷன்யா” என போட்டுள்ளார். Enna manushan yaa — (@MasterS_a_r_a_n) January 31, 2023 Naanga wait panuvom nu therinju thoonga solra pathiya .. Annaa ne enga aalu naa #Thalapathy67 — (@CeoAbdul__17) January 31, 2023 தொடர்ந்து பலரும் த்ரிஷா பற்றிய அறிவிப்புக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். Trisha poster mattum vittutu po Ney pic.twitter.com/4UCkog6nUb — மைக்கெல் மதன் (@Michael_Madhan2) January 31, 2023 Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
நடிகர் விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 67’ குறித்த அடுத்தடுத்த அப்டேட்களை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இன்று ஒன்றன்பின் ஒன்றாக வெளியிட்டது. அதில், பெரிய நடிகர் பட்டாளங்களையே அறிவித்துள்ளது படக்குழு. இதனால் விஜய் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். இன்று வெளியாகியுள்ள அப்டேட்களை  மட்டும், இந்தத் தொகுப்பில் பார்ப்போம். 'வாரிசு' படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ’தளபதி 67’ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். இம்மூவரும் 2வது முறையாகக் கூட்டணி அமைக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. அதேநேரத்தில், ‘தளபதி 67’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று மாலை (ஜனவரி 30) வெளியானது. ’விஜய் அண்ணாவுடன் மீண்டும் இணைகிறேன்’ என இயக்குநர் லோகேஷ் கனகராஜும், ’தளபதி விஜய்யுடன் மீண்டும் தளபதி 67ல் இணைவது மகிழ்ச்சியளிக்கிறது’ என செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட, ரசிகர்கள் மத்தியில் இப்பதிவுகள் வைரலாகின. Good evening guys! More than ...

வெளியானது ஹன்சிகாவின் திருமண வீடியோ டீசர்! என்ன ஆனது நயன்-விக்கியின் திருமண வீடியோ? ஹன்சிகாவின் திருமண ஆவணப்படத்தின் முழு வீடியோ எப்போது வெளியாகும், அதில் என்ன உள்ளது என்பது குறித்த தகவலுடன் டீசர் ஒன்றை பிரபல ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது. அதேநேரத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமண ஆவணப்படம் பற்றிய எந்த அப்டேட்டும் வெளியாகாமல் உள்ளது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்ப நண்பர்கள் முன்னிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள முண்டோட்டா பேலஸில் தனது காதலரான சோஹெல் கத்தூரியாவை கடந்த டிசம்பர் மாதம் 4-ம் தேதி கரம் பிடித்தார் நடிகை ஹன்சிகா. மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்தத் திருமணம் டாக்குமெண்ட்ரியாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ வரும் பிப்ரவரி மாதம் 10-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளதாக, டீசருடன் நடிகை ஹன்சிகா தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். அந்த டீசர், ஹன்சிகா அவரது தாயாருடன் கலந்துரையாடும் வகையில் உள்ளது. இதற்கிடையில், கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி சென்னை மாமல்லபுரத்தில் கோலாகலமாக நடைபெற்ற இயக்குநர் விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் திருமண வீடியோ குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. 'Nayanthara: Beyond The Fairytale' என்ற அந்த வீடியோவின் சிறிய கிளிப்பிங்ஸ் அடங்கிய புரோமோவை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்டு இருந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதமே முழு வீடியோவும் வெளியாக வேண்டியிருந்தது. ஆனால், இடையில் நயன்தாராவின் ‘கனெக்ட்’ படத்தால், நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் படம் குறித்த ஆவணப்படத்தை தயாரிப்பது தாமதமாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 23-ம் தேதி வரை திருமணம் குறித்த ஆவணப் படத்தின் படப்பிடிப்புகளை விக்னேஷ் சிவன் நடத்தி வந்ததாகவும், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து மார்ச் மாதம் அல்லது ஏப்ரலில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண வீடியோ வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த ஆவணப் படத்தை விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் தயாரிக்கிறது. நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
ஹன்சிகாவின் திருமண ஆவணப்படத்தின் முழு வீடியோ எப்போது வெளியாகும், அதில் என்ன உள்ளது என்பது குறித்த தகவலுடன் டீசர் ஒன்றை பிரபல ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது. அதேநேரத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமண ஆவணப்படம் பற்றிய எந்த அப்டேட்டும் வெளியாகாமல் உள்ளது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் குடும்ப நண்பர்கள் முன்னிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள முண்டோட்டா பேலஸில் தனது காதலரான சோஹெல் கத்தூரியாவை கடந்த டிசம்பர் மாதம் 4-ம் தேதி கரம் பிடித்தார் நடிகை ஹன்சிகா. மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்தத் திருமணம் டாக்குமெண்ட்ரியாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ வரும் பிப்ரவரி மாதம் 10-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளதாக, டீசருடன் நடிகை ஹன்சிகா தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். அந்த டீசர், ஹன்சிகா அவரது தாயாருடன் கலந்துரையாடும் வகையில் உள்ளது. இதற்கிடையில், கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி சென்னை மாமல்லபுரத்தில் கோலாகலமாக நடைபெற்ற இயக்குநர் விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் திருமண வீடியோ குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. 'Nayanthara: Beyond The Fa...

‘தளபதி 67’ படக்குழுவினருடன் த்ரிஷா, ப்ரியா ஆனந்த்? - வைரலாகும் புகைப்படங்கள், வீடியோ! விஜய்யின் ‘தளபதி 67’ படக்குழுவினருடன் நடிகைகள் த்ரிஷா மற்றும் ப்ரியா ஆனந்த் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - நடிகர் விஜய் - தயாரிப்பாளர் லலித்குமார் 2-வது முறையாக கூட்டணி அமைத்துள்ள திரைப்படம் ‘தளபதி 67’. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ என அடுத்தடுத்து வெற்றிப்படங்களை தந்து கவனம் ஈர்த்துள்ளதால், ‘தளபதி 67’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் ‘மாஸ்டர்’ படம் போன்று இல்லாமல், இந்தப் படம் 100 சதவிகிதம் தனதுப் படமாக இருக்கும் என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளதால், படத்தின் மீதான ஆர்வம் கூடுதலாக இருந்து வருகிறது. ஏற்கனவே படப்பிடிப்பு துவங்கியுள்ளது தெரிய வந்தாலும், நேற்று மாலை தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து காஷ்மீரில் நடக்கும் இரண்டாவது கட்டப் படப்பிடிப்புக்காக ‘தளபதி 67’ படக்குழுவினர் இன்று காலை தனி விமானத்தில் சென்றுள்ளனர். இதனைப் படத்தின் நிர்வாக தயாரிப்பாளரும் விமான டிக்கெட்டை பகிர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். Actress #PriyaAnand Flying to Kashmir for #Thalapathy67 Shoot. pic.twitter.com/UIJ3fqPloD — Chandru (@ImChandruJcs) January 31, 2023 Actress #Trisha Flying to Kashmir for #Thalapathy67 Shoot. pic.twitter.com/mhWPtilueP — #Thalapathy67 (@TheVijay67) January 31, 2023 இந்நிலையில், காஷ்மீர் செல்லும் படக்குழுவினருடன் நடிகைகள் த்ரிஷா மற்றும் ப்ரியா ஆனந்த் ஆகியோரும் சென்றுள்ளதாக விமான நிலைய புகைப்படங்கள் மற்றும் டிக்கெட்டில் உள்ள பயணிகள் பட்டியலைப் பகிர்ந்து ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும், விஜய், லோகேஷ் கனகராஜ், தினேஷ் மாஸ்டர் ஆகியோர் விமான நிலையத்தில் செக்கிங் பகுதியில் நிற்கும் வீடியோவை ரசிகர்கள் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். #Thalapathy67 Team At AirPort pic.twitter.com/pbUBq5VKi3 — Saloon Kada Shanmugam (@saloon_kada) January 31, 2023 Actress #Trisha & #PriyaAnand flying to Kashmir for #Thalapathy67 shoot @actorvijay pic.twitter.com/BmLyRiBVGL — (@TNVFC_OFFI) January 31, 2023 Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
விஜய்யின் ‘தளபதி 67’ படக்குழுவினருடன் நடிகைகள் த்ரிஷா மற்றும் ப்ரியா ஆனந்த் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - நடிகர் விஜய் - தயாரிப்பாளர் லலித்குமார் 2-வது முறையாக கூட்டணி அமைத்துள்ள திரைப்படம் ‘தளபதி 67’. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ என அடுத்தடுத்து வெற்றிப்படங்களை தந்து கவனம் ஈர்த்துள்ளதால், ‘தளபதி 67’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் ‘மாஸ்டர்’ படம் போன்று இல்லாமல், இந்தப் படம் 100 சதவிகிதம் தனதுப் படமாக இருக்கும் என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளதால், படத்தின் மீதான ஆர்வம் கூடுதலாக இருந்து வருகிறது. ஏற்கனவே படப்பிடிப்பு துவங்கியுள்ளது தெரிய வந்தாலும், நேற்று மாலை தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து காஷ்மீரில் நடக்கும் இரண்டாவது கட்டப் படப்பிடிப்புக்காக ‘தளபதி 67’ படக்குழுவினர் இன்று காலை தனி விமானத்தில் சென்றுள்ளனர். இதனைப் படத்தின் நிர்வாக தயாரிப்பாளரும் விமான டிக்கெட்டை பகிர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். Actress #PriyaAnand Flying to Kashmir for #Thala...

படத்தை அறிவித்த கையோடு தனி விமானத்தில் காஷ்மீர் பறந்த ‘தளபதி 67’ படக்குழு! நடிகர் விஜய்யின் ‘தளபதி 67’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று மாலை வெளியான நிலையில், இன்று அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு காஷ்மீர் சென்றுள்ளது. ‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு மீண்டும் லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணி அமையுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இதுகுறித்த கடந்த வருடம் லோகேஷ் கனகராஜ் உறுதிசெய்து தகவல் வெளியிட்டார். எனினும், விஜய் உடனான படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகமலேயே ‘வாரிசு’ படம் முடிந்ததும், ரகசியமாக பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது. இந்தநிலையில், நேற்று மாலை அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. அதன்படி, விஜய் - லோகேஷ் கனகராஜ் இணையும் படத்திற்கு ‘தளபதி 67’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில், இந்தப் படத்தை லலித்குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிக்க, அனிருத் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டது. The one & the only brand #Thalapathy67, is proudly presented by @7screenstudio We are excited in officially bringing you the announcement of our most prestigious project We are delighted to collaborate with #Thalapathy @actorvijay sir, for the third time. @Dir_Lokesh pic.twitter.com/0YMCbVbm97 — Seven Screen Studio (@7screenstudio) January 30, 2023 மனோஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, பிலோமின் ராஜ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டது. லோகேஷ் கனகராஜ் உடன் இயக்குநர்கள் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி வசனம் எழுதுவதாகவும் குறிப்பிடப்பட்டது. மேலும், கடந்த 2-ம் தேதி படப்பிடிப்பு துவங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் இன்று காலை 8.30 மணிக்கு தனிவிமானத்தில் காஷ்மீர் புறப்பட்டுச் சென்றுள்ளனர். படத்தின் நிர்வாக தயாரிப்பாளரான ராம்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் விமான டிக்கெட் புகைப்படத்தை இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். On board in #Thalapathy67 as EP and also on board to Kashmir with one & only #Thalapathy @actorvijay sir,@Dir_Lokesh , #LalitSir @Jagadishbliss & the entire crew for the next schedule  pic.twitter.com/gEFbET0Uan — Ramkumar (@RamVJ2412) January 31, 2023 சென்னையில் நடந்த ‘தளபதி 67’ படப்பிடிப்புடன், சிலப் பகுதிகள் கொடைக்கானலிலும் நடைபெற்றதாக தெரிகிறது. அங்கு விஜய் மற்றும் மிஷ்கினின் பகுதிகள் எடுக்கப்பட்டதாகவும், காஷ்மீர் செல்வதற்கான தேதிகள் இயக்குநர் மிஷ்கினிடம் இல்லாததால், படக்குழு மிஷ்கினுடன் கொடைக்கானலில் சில பகுதிகளை படமாக்கியதாக கூறப்படுகிறது. தற்போது காஷ்மீர் சென்றுள்ள படக்குழு அங்கு சஞ்சய் தத் மற்றும் முக்கிய நடிகர்களுடன் விஜய் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஹிண்ட் கொடுத்திருப்பதால், ‘தளபதி 67’ புரோமோ டீசர் வரும் பிப்ரவரி 3-ம் தேதி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
நடிகர் விஜய்யின் ‘தளபதி 67’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று மாலை வெளியான நிலையில், இன்று அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு காஷ்மீர் சென்றுள்ளது. ‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு மீண்டும் லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணி அமையுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இதுகுறித்த கடந்த வருடம் லோகேஷ் கனகராஜ் உறுதிசெய்து தகவல் வெளியிட்டார். எனினும், விஜய் உடனான படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகமலேயே ‘வாரிசு’ படம் முடிந்ததும், ரகசியமாக பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது. இந்தநிலையில், நேற்று மாலை அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. அதன்படி, விஜய் - லோகேஷ் கனகராஜ் இணையும் படத்திற்கு ‘தளபதி 67’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில், இந்தப் படத்தை லலித்குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிக்க, அனிருத் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டது. The one & the only brand #Thalapathy67 , is proudly presented by @7screenstudio We are excited in officially bringing you the announcement of our most prestigious project We are delighted to collaborate with #Thalapathy @actorvijay sir,...

‘வீர சிம்ஹா ரெட்டி பார்த்து தலைவர் ரஜினி சொன்ன அந்த வார்த்தைகள்’ - கோபிசந்த் நெகிழ்ச்சி! பாலகிருஷ்ணா இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்த ‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தின் இயக்குநரை, நடிகர் ரஜினிகாந்த் தொலைப்பேசியில் அழைத்துப் பாராட்டியுள்ளார். கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில், நந்தாமூரி பாலகிருஷ்ணா இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்த திரைப்படம் ‘வீர சிம்ஹா ரெட்டி’. இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன், வரலஷ்மி சரத்குமார், ஹனி ரோஸ், துனியா விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமன் இசையமைத்திருந்த இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தது. ரூ. 110 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு சங்ராந்தியை முன்னிட்டு கடந்த 12-ம் தேதி வெளியான இந்தத் திரைப்படம், இதுவரை ரூ. 129.58 கோடி வசூல் செய்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கோபிசந்த் மாலினேனியை தொலைப்பேசியில் அழைத்துப் பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக இயக்குநர் கோபிசந்த் மாலினேனி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “உண்மையிலேயே இது ஒரு அதிசயமான தருணம். தலைவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாரிடம் இருந்து ஃபோன் கால் வந்தது. படத்தைப் பார்த்து மிகவும் பிடித்ததாகக் கூறினார். அவர் உணர்ச்சி மிகுந்து படத்தைப் பற்றி பாராட்டிய வார்த்தைகள், இதைவிட உலகில் சிறந்தது எதுவும் இல்லை. நன்றி ரஜினி சார்” என்று தெரிவித்துள்ளார். This is a surreal moment for me Received a call from the Thalaivar, The Superstar @rajinikanth sir. He watched #VeeraSimhaReddy and loved the film. His Words of praise about my film and the emotion he felt are more than anything in this world to me. Thankyou Rajini sir — Gopichandh Malineni (@megopichand) January 29, 2023 Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
பாலகிருஷ்ணா இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்த ‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தின் இயக்குநரை, நடிகர் ரஜினிகாந்த் தொலைப்பேசியில் அழைத்துப் பாராட்டியுள்ளார். கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில், நந்தாமூரி பாலகிருஷ்ணா இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்த திரைப்படம் ‘வீர சிம்ஹா ரெட்டி’. இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன், வரலஷ்மி சரத்குமார், ஹனி ரோஸ், துனியா விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமன் இசையமைத்திருந்த இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தது. ரூ. 110 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு சங்ராந்தியை முன்னிட்டு கடந்த 12-ம் தேதி வெளியான இந்தத் திரைப்படம், இதுவரை ரூ. 129.58 கோடி வசூல் செய்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கோபிசந்த் மாலினேனியை தொலைப்பேசியில் அழைத்துப் பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக இயக்குநர் கோபிசந்த் மாலினேனி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “உண்மையிலேயே இது ஒரு அதிசயமான தருணம். தலைவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாரிடம் இருந்து ஃபோன் கால் வந்தது. படத்தைப் பார்த்து மிகவும் பிடித்ததாகக் கூறினார். அவர் உணர்ச்சி மிகுந்து...

வெளியானது தளபதி 67 அப்டேட்.. ஃபோட்டோ வெளியிட்ட லோகேஷ்.. குஷியில் ரசிகர்கள்! விஜய்யின் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ்தான் இயக்குகிறார் என்ற ஊரறிந்த தகவலை அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியிட்டிருக்கிறது தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ. அதன்படி தளபதி 67 படத்தின் அப்டேட் வெளியிடப்படும் என இன்று (ஜன.,30) பிற்பகல் 3 மணியளவில் 67 புள்ளிகளை மட்டும் வைத்து 6.07 மணிக்கு அறிவிக்கப்படும் என ட்விட்டரில் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ பதிவிட்டிருந்தது. இதனையடுத்து விஜய் ரசிகர்கள் குஷியில் ட்விட்டரில் #Thalapathy67 என்ற ஹேஷ்டேக்கின் கீழ் தங்களது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வந்தார்கள். இந்த நிலையில் சரியாக 6.07 மணிக்கு தளபதி 67-ஐ நாங்கள்தான் தயாரிக்கிறோம் என்று ட்விட்டரில் அறிக்கையும் வெளியிட்டிருக்கிறது தயாரிப்பு நிறுவனம். The one & the only brand #Thalapathy67, is proudly presented by @7screenstudio We are excited in officially bringing you the announcement of our most prestigious project We are delighted to collaborate with #Thalapathy @actorvijay sir, for the third time. @Dir_Lokesh pic.twitter.com/0YMCbVbm97 — Seven Screen Studio (@7screenstudio) January 30, 2023 அதில், தளபதி 67க்கு அனிருத் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, அன்பறிவ் ஆக்‌ஷனில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, தினேஷ் நடன இயக்குநராக பணியாற்றுகிறார் என்றும், சதீஸ் குமார் கலை இயக்க, லோகேஷ் கனகராஜ், ரத்ன குமார் மற்றும் தீரஜ் வைதி ஆகியோர் வசனம் எழுதுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜனவரி 2ம் தேதி தொடங்கிய தளபதி 67 படத்தின் ஷூட்டிங் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும், விரைவில் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல் வெளியிடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. முன்னதாக மாஸ்டர் படத்தை தயாரித்திருந்த செவன் ஸ்க்ரீன் நிறுவனம் அண்மையில் வெளியான விஜய்யின் வாரிசு படத்தின் விநியோகஸ்தராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. Good evening guys! More than happy to join hands with @actorvijay na once again  #Thalapathy67  pic.twitter.com/4op68OjcPi — Lokesh Kanagaraj (@Dir_Lokesh) January 30, 2023 தளபதி 67 குறித்து தயாரிப்பு நிர்வாகத்தின் அறிவிப்பை அடுத்து, சமூக வலைதளங்களுக்கு பிரேக் விட்டிருந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஷூட்டிங்கின் போது விஜய்யுடன் எடுத்துக்கொண்ட ஃபோட்டோவை பகிர்ந்து, “மீண்டும் விஜய்யுடன் கூட்டணி சேர்ந்தது பெரு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார். பிப்ரவரி 1, 2 , 3 ஆகிய தேதிகளில் தளபதி 67 குறித்த அப்டேட்கள் வரும் என லோகேஷ் கனகராஜ் மைக்கேல் பட விழாவின் போது கூறியிருந்த நிலையில், அதற்கு முன்னோட்டமாக தற்போது வந்த அப்டேட்டும் விஜய்யின் தளபதி 67 ஃபோட்டோவும் அவரது ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளது என்றே கூறலாம். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
விஜய்யின் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ்தான் இயக்குகிறார் என்ற ஊரறிந்த தகவலை அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியிட்டிருக்கிறது தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ. அதன்படி தளபதி 67 படத்தின் அப்டேட் வெளியிடப்படும் என இன்று (ஜன.,30) பிற்பகல் 3 மணியளவில் 67 புள்ளிகளை மட்டும் வைத்து 6.07 மணிக்கு அறிவிக்கப்படும் என ட்விட்டரில் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ பதிவிட்டிருந்தது. இதனையடுத்து விஜய் ரசிகர்கள் குஷியில் ட்விட்டரில் #Thalapathy67 என்ற ஹேஷ்டேக்கின் கீழ் தங்களது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வந்தார்கள். இந்த நிலையில் சரியாக 6.07 மணிக்கு தளபதி 67-ஐ நாங்கள்தான் தயாரிக்கிறோம் என்று ட்விட்டரில் அறிக்கையும் வெளியிட்டிருக்கிறது தயாரிப்பு நிறுவனம். The one & the only brand #Thalapathy67 , is proudly presented by @7screenstudio We are excited in officially bringing you the announcement of our most prestigious project We are delighted to collaborate with #Thalapathy @actorvijay sir, for the third time. @Dir_Lokesh pic.twitter.com/0YMCbVbm97 — Seven Screen Studio (@7screenstudio) January ...

ஷாருக்கானை பதான் என அழைத்து ‘ஹே ராம்’ படத்திலேயே கணித்த கமல்ஹாசன் ‘பதான்’ படம் பாக்ஸ் ஆபிஸீல் தாறுமாறான வெற்றி அடைந்து வரும் நிலையில், 20 வருடங்களுக்கு முன்னரே உலக நாயகன் கமல்ஹாசன் ‘ஹே ராம்’ படத்திலேயே, ஷாருக்கானை பதான் என அழைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ஷாருக்கான் நடித்துள்ள ‘பதான்’ திரைப்படம் கடந்த 25-ம் தேதி வெளியானது. சுமார் 5 வருடங்களுக்குப் பிறகு ஷாருக்கானின் ‘பதான்’ படம் வெளியானதால் எழுந்த எதிர்பார்ப்புகளையும் மீறி, கடந்த 5 நாட்களில் 542 கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்துள்ளது ‘பதான்’. ‘பாகுபலி 2’, ‘கே.ஜி.எஃப். 2’ படங்களின் சாதனைகளையெல்லாம் அசால்ட்டாக கடந்து வரும் நிலையில், இந்தப் படத்தின் பெயருக்கும், கமல்ஹாசனுக்கும் உள்ள தொடர்பை குறித்து அறியலாம். தமிழ் சினிமாவில் எப்போதும் தொழில்நுட்ப விஷயங்களிலும் சரி, நடிப்பு சார்ந்த விஷயத்திலும் சரி பரீட்சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்பவர் கமல்ஹாசன். அந்தவகையில் கடந்த 2000-ம் ஆண்டு ‘ஹே ராம்’ என்றப் படத்தை நடிகர் கமல்ஹாசன், எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்தும் இருந்தார். இந்தப் படத்தில் சாக்கேத் ராம் என்ற கதாபாத்திரத்தில் கமல்ஹாசனும், அவரது நண்பராக அம்ஜத் அலி கான் கதாபாத்திரத்தில் ஷாருக்கானும் நடித்திருந்தனர். கமல்ஹாசனின் மீது கொண்ட மதிப்பால் ஷாருக்கான் இந்தப் படத்தில் நடித்திருந்தார். ‘ஹே ராம்’ படத்தில் அகழ்வாராய்ச்சியாளர்களாக நடித்திருந்த இவர்கள் இருவரும், 1940-ம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் நடத்தப்படும் அகழ்வாராய்ச்சியின்போது, ஷாருக்கானை பார்த்து கமல்ஹாசன், ‘சரி பதான்... உங்கள் கோபத்தை கட்டுப்படுத்துங்கள்’ என்று கூறுவார். 2000-ம் ஆண்டில் வந்த அந்தப் படத்தில் கமல்ஹாசன் அவ்வாறு கூறியிருந்தநிலையில், தற்போது 2023 ஆண்டில் வெளிவந்த ஷாருக்கான் படத்திற்கு ‘பதான்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது இரு படத்திற்கும் உள்ள தொடர்பை (தீர்க்கதரிசி) காட்டுவதுபோல் உள்ளது. மேலும், கமல்ஹாசன், கடந்த சில தினங்களுக்கு முன்னர், ‘பதான்’ வெற்றி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டும்போது கூட, “ ‘பதான்’ படம் குறித்து நல்ல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. பதானை, சாகேத் வாழ்த்துகிறார். இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும் சகோதரா” என்று குறிப்பிட்டு இருந்தார். Hearing great reports about Pathan. Saket congratulates Pathan. Way to go brother @iamsrk — Kamal Haasan (@ikamalhaasan) January 25, 2023 Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
‘பதான்’ படம் பாக்ஸ் ஆபிஸீல் தாறுமாறான வெற்றி அடைந்து வரும் நிலையில், 20 வருடங்களுக்கு முன்னரே உலக நாயகன் கமல்ஹாசன் ‘ஹே ராம்’ படத்திலேயே, ஷாருக்கானை பதான் என அழைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ஷாருக்கான் நடித்துள்ள ‘பதான்’ திரைப்படம் கடந்த 25-ம் தேதி வெளியானது. சுமார் 5 வருடங்களுக்குப் பிறகு ஷாருக்கானின் ‘பதான்’ படம் வெளியானதால் எழுந்த எதிர்பார்ப்புகளையும் மீறி, கடந்த 5 நாட்களில் 542 கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்துள்ளது ‘பதான்’. ‘பாகுபலி 2’, ‘கே.ஜி.எஃப். 2’ படங்களின் சாதனைகளையெல்லாம் அசால்ட்டாக கடந்து வரும் நிலையில், இந்தப் படத்தின் பெயருக்கும், கமல்ஹாசனுக்கும் உள்ள தொடர்பை குறித்து அறியலாம். தமிழ் சினிமாவில் எப்போதும் தொழில்நுட்ப விஷயங்களிலும் சரி, நடிப்பு சார்ந்த விஷயத்திலும் சரி பரீட்சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்பவர் கமல்ஹாசன். அந்தவகையில் கடந்த 2000-ம் ஆண்டு ‘ஹே ராம்’ என்றப் படத்தை நடிகர் கமல்ஹாசன், எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்தும் இருந்தார். இந்தப் படத்தில் சாக்கேத் ராம் என்ற கதாபாத்திரத்தில் கமல்ஹாசனும், அவரது ந...

‘தளபதி 67’ படத்தில் சிம்பு,ரக்ஷித் ஷெட்டி ?படத்தை இந்த தேதியில் வெளியிட படக்குழு திட்டம்? ‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய்யின் ‘தளபதி 67’ படம் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது. ‘வாரிசு’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக ‘தளபதி 67’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மனோபாலா, நடிகர்கள் அர்ஜூன், மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்து வருகின்றனர். கேங்ஸ்டர் கதையாகவும், லோகேஷின் சினிமாட்டிக் யுனிவர்ஸ் கதையாகும் உருவாகி வருவதால், ஏராளமான நடிகர்கள் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தாலும், இந்தப் படம் சம்பந்தமான புரோமோ அல்லது புகைப்படங்கள் என எதுவும் இதுவரை வெளிவரவில்லை. இதுதொடர்பாக பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர், கோவை தனியார் கல்லூரி விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், பிப்ரவரி 1,2,3 ஆகிய தேதிகளை குறித்து வைத்துக்கொள்ளுமாறும், அது மட்டும் தான் தன்னால் சொல்ல முடியும் என்று கூறியிருந்தார். Exclusive: #Thalapathy67 Updates on February 1st, 2nd & 3rd  pic.twitter.com/eoj3UeEC7s — Thalapathy67 Fan Page (@Vijay67Off) January 25, 2023 இதனால், இந்த தேதிகளில் படம் தொடர்பான புரோமோ எதும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதைவைத்து ‘தளபதி 67’ படத்தில் நடிகர் சிம்பு வில்லனாக நடிப்பதாகவும் சமூகவலைத்தளங்களில் கூறப்பட்டு வருகிறது. ஏனெனில் சிம்புவின் பிறந்தநாள் 3-ம் தேதி கொண்டாடப்படுவதால், அன்றைய தினம் ‘தளபதி 67’ படத்தில் சிம்பு அடங்கிய புரோமோ எதும் வெளியாகலாம் என்று தகவல் பரவி வருகிறது. அதனாலேயே லோகேஷ் ஹிண்ட் கொடுக்கும் வகையில் பேசியுள்ளதாகவும் செய்தி பரவி வருகிறது. ஏற்கனவே ‘வாரிசு’ படத்தில் ‘தீ தளபதி’ பாடலை நடிகர் சிம்பு பாடியதுடன் பாடலில் சின்ன கேமியோ பண்ணியிருந்தார். அத்துடன், செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்னே டிஜிட்டல் தளம் மூலம் கல்லா கட்டிய நிலையில், அக்டோபர் மாதம் 23-ம் தேதி ஆயுத பூஜை, அக்டோபர் 24-ம் தேதி விஜயதசமி விடுமுறைகள் திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் வருவதால், இதனை முன்னிட்டு அக்டோபர் 19-ம் தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து முழு வீச்சில் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது. இந்தப் படத்தில் மிஷ்கின் சம்பந்தப்பட்ட பகுதிகள் கொடைக்கானலில் எடுக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக காஷ்மீரில் சஞ்சய் தத் உடன் படத்தை எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில், இந்தப் படத்தில் பிரபல கன்னட நடிகரும், இயக்குநருமான ரக்ஷித் ஷெட்டி நடிப்பதாக தகவல் பரவி வந்தநிலையில், மறைமுகமாக ‘தளபதி 67’ படத்தில் தான் இல்லை என்பதை ட்விட்டர் மூலம் அவர் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், “ ‘Sapta Sagaradaache Ello’(SSE) படத்துக்குப் பிறகு அடுத்தப் படங்கள் குறித்த தெளிவாக உள்ளன. அதாவது ‘Richard Anthony’(RA), ‘Punya Koti 1’ (PK 1), ‘Punya Koti 2’ (PK 2), ‘Midnight to Moksha’ (M2M) ஆகிய நான்கு படங்கள் மட்டுமே எனது வரிசையில், அதற்காக தூக்கத்தை தொலைத்து ஓடிக்கொண்டிருக்கிறேன். Kirik Party 2 (KP 2) இப்போது இல்லை. எனினும், அது சம்பந்தமாக வேறு திட்டங்கள் உள்ளன. பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று. இதைத் தவிர இணையத்தில் நீங்கள் படிக்கும் எதுவும் உண்மையல்ல. உண்மையாகவும் இருந்ததில்லை... அன்புடன்” என்று பதிவிட்டுள்ளார். இதன்மூலம், ‘தளபதி 67’ படத்தில் ரக்ஷித் ஷெட்டி நடிக்கவில்லை என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.  My line ups are quite clear after SSE. i.e. RA, PK 1 and 2, M2M… these are the only four films which gives me sleepless nights. No KP2 as well… but I have different plans for KP2. Let’s see. Anything else u read on the internet isn’t true. Was never true… Love you all — Rakshit Shetty (@rakshitshetty) January 30, 2023 Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய்யின் ‘தளபதி 67’ படம் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது. ‘வாரிசு’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக ‘தளபதி 67’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மனோபாலா, நடிகர்கள் அர்ஜூன், மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்து வருகின்றனர். கேங்ஸ்டர் கதையாகவும், லோகேஷின் சினிமாட்டிக் யுனிவர்ஸ் கதையாகும் உருவாகி வருவதால், ஏராளமான நடிகர்கள் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தாலும், இந்தப் படம் சம்பந்தமான புரோமோ அல்லது புகைப்படங்கள் என எதுவும் இதுவரை வெளிவரவில்லை. இதுதொடர்பாக பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர், கோவை தனியார் கல்லூரி விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், பிப்ரவரி 1,2,3 ஆகிய தேதிகளை குறித்து வைத்துக்கொள்ளுமாறும், அது மட்டும் தான் தன்னால் சொல...

25 ஆண்டுகளுக்கு பின் கம்பேக்... ஜோதிகாவின் உருக்கமான பதிவுக்கு சூர்யா போட்ட வாவ் கமெண்ட்! நீண்ட வருடங்கள் கழித்து நடிகை ஜோதிகா இந்தி படம் ஒன்றில் நடித்து வந்த நிலையில், அந்தப் படத்தில் அவர் சம்பந்தப்பட்ட பகுதியின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது குறித்து புகைப்படத்துடன் சமூகவலைத்தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் ஜோதிகா. அதற்கு நடிகர் சூர்யா தனது கருத்தை தெரிவித்துள்ளது வைரலாகி வருகிறது. இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் கடந்த 1998-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ‘Doli Saja Ke Rakhna’ என்ற படத்தின் மூலம் அக்ஷய் கண்ணாவுக்கு ஜோடியாக திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. இந்தப் படத்தைத் தொடர்ந்து அஜித்தின் ‘வாலி’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றிய அவர், சூர்யாவின் ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தின் வாயிலாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின்னர் ‘முகவரி’, ‘குஷி’, ‘தெனாலி’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை தந்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்ததுடன், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்து வந்த ஜோதிகா, சூர்யாவுடனான திருமணத்திற்குப் பிறகு சினிமாவிலிருந்து விலகியிருந்தார். எனினும், சில வருடங்களில் ‘36 வயதினிலே’ ரீ என்ட்ரி கொடுத்த ஜோதிகா, பெண்களை மையப்படுத்தி வரும் கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து தொடர்ந்து நடித்து வருகிறார். அந்தவகையில் மலையாளத்தில் மம்முட்டியுடன் ‘Kaathal:The Core’ படத்திலும், இந்தியில் கம்பேக் கொடுக்கும் வகையில், ராஜ்குமார் ராவ்-ன் ‘ஸ்ரீ’ என்றப் படத்திலும் நடித்து வந்தார். இதில் ‘ஸ்ரீ’ படத்தில் ஜோதிகா சம்பந்தப்பட்டப் பகுதியின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளநிலையில், படத்தின் குழுவினர்களிடமிருந்து விடைபெறுவது குறித்து புகைப்படத்துடன் சமூகவலைத்தளத்தில் உருக்கமான போஸ்ட் ஒன்றை அவர் பதிவு செய்துள்ளார். அதில், “கனத்த இதயத்துடன் ‘ஸ்ரீ’ படத்திற்கான எனதுப் பகுதிகளை முடித்துவிட்டு அவர்களிடம் இருந்து விடைபெறுகிறேன். நான் பணியாற்றிய சிறந்த குழுவினர்களில் ஒரு டீம் தான் இந்தப் பட குழு. இந்த அர்த்தமுள்ள சினிமாவில் என்னை ஒரு பகுதியாக மாற்றியதற்கும், மரியாதை செய்ததற்கும் இயக்குநர் துஷார் மற்றும் தயாரிப்பாளர் நிதி ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். View this post on Instagram A post shared by Jyotika (@jyotika) இந்த படத்தின் ஹீரோவான ராஜ்குமார் ராவின் தீவிர ரசிகை நான். பாலிவுட் திரையுலகின் மிகச்சிறந்த நடிகர்களுடன் நடித்து எனது நடிப்பை பகிர்ந்து கொள்ள எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது, எனக்குக் கிடைத்த பெருமை. இந்த படத்தின் குழுவினர்களிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன்” என்று பதிவிட்டுள்ளார். இதற்கு கமெண்ட் பகுதியில் நடிகரும் ஜோதிகாவின் கணவருமான சூர்யா, “இந்த அற்புதமான பயணம் அனைவரின் மனதையும் வெல்லட்டும்” என்று பதிவிட்டுள்ளார். சுமார் 25 வருடங்களுக்குப் பிறகு நடிகை ஜோதிகா மீண்டும் ‘ஸ்ரீ’ படத்தின் மூலம் இந்தியில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
நீண்ட வருடங்கள் கழித்து நடிகை ஜோதிகா இந்தி படம் ஒன்றில் நடித்து வந்த நிலையில், அந்தப் படத்தில் அவர் சம்பந்தப்பட்ட பகுதியின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது குறித்து புகைப்படத்துடன் சமூகவலைத்தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் ஜோதிகா. அதற்கு நடிகர் சூர்யா தனது கருத்தை தெரிவித்துள்ளது வைரலாகி வருகிறது. இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் கடந்த 1998-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ‘Doli Saja Ke Rakhna’ என்ற படத்தின் மூலம் அக்ஷய் கண்ணாவுக்கு ஜோடியாக திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. இந்தப் படத்தைத் தொடர்ந்து அஜித்தின் ‘வாலி’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றிய அவர், சூர்யாவின் ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தின் வாயிலாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின்னர் ‘முகவரி’, ‘குஷி’, ‘தெனாலி’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை தந்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்ததுடன், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்து வந்த ஜோதிகா, சூர்யாவுடனான திருமணத்திற்குப் பிறகு சினிமாவிலிருந்து விலகியிருந்தார். எனினும், சில வருடங்களில் ‘36 வயதினிலே’ ரீ என்ட்ரி கொடுத்த ஜோதிகா, பெண்களை மையப்ப...

மாரடைப்பால் உயிரிழந்த இளம் ரசிகர் - நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி சென்னையில் இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழந்த தனது ரசிகரின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தாருக்கு நடிகர் கார்த்தி ஆறுதல் தெரிவித்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார்த்தியின் மக்கள் நல மன்றத்தின் தென் சென்னை கிழக்கு மாவட்ட பொருளாளராக இருந்த 29 வயதான வினோத் என்ற ரசிகர் சமீபத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார். இதையறிந்த நடிகர் கார்த்தி, திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று வினோத்தின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் வினோத்தின் குடும்பத்தாருக்கும் ஆறுதல் தெரிவித்தார். வினோத் வயது 29. தென் சென்னை கிழக்கு மாவட்ட கார்த்தி ரசிகர் மன்றத்தின் பொருளாளராக உள்ளார். வினோத்திற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதையறிந்த நடிகர் கார்த்தி திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். @Karthi_Offl pic.twitter.com/uuJxe7mueR — Ramesh Bala (@rameshlaus) January 29, 2023 கடந்த ஆண்டு வெளியான ‘விருமன்’, ‘பொன்னியின் செல்வன் - 1’, ‘சர்தார்’ என அடுத்தடுத்த 3 படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக ‘ஜப்பான்’ என்றப் படத்தில் நடிகர் கார்த்தி நடித்து வருகிறார். ‘ஜோக்கர்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ராஜுமுருகன் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். கார்த்தியின் 25-வது படமான இந்தப் படத்தில் அனு இமானுவேல் நாயகியாக நடிக்கிறார். மேலும், மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் -2’ படத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ள நிலையில் இந்தப் படம் வருகிற ஏப்ரல் 28-ம் தேதி வெளியாக உள்ளது. கார்த்தி மக்கள் நல மன்றம் தென் சென்னை கிழக்கு மாவட்ட பொருளாளர் திரு. வினோத் அவர்கள் சமீபத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார். இதையறிந்த @Karthi_Offl அண்ணன் திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் குடும்பத்தாருக்கும் ஆறுதல் தெரிவித்தார். pic.twitter.com/jPx9LiyCPz — Japan (@KannanKarthifan) January 29, 2023 Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
சென்னையில் இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழந்த தனது ரசிகரின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தாருக்கு நடிகர் கார்த்தி ஆறுதல் தெரிவித்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார்த்தியின் மக்கள் நல மன்றத்தின் தென் சென்னை கிழக்கு மாவட்ட பொருளாளராக இருந்த 29 வயதான வினோத் என்ற ரசிகர் சமீபத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார். இதையறிந்த நடிகர் கார்த்தி, திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று வினோத்தின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் வினோத்தின் குடும்பத்தாருக்கும் ஆறுதல் தெரிவித்தார். வினோத் வயது 29. தென் சென்னை கிழக்கு மாவட்ட கார்த்தி ரசிகர் மன்றத்தின் பொருளாளராக உள்ளார். வினோத்திற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதையறிந்த நடிகர் கார்த்தி திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். @Karthi_Offl pic.twitter.com/uuJxe7mueR — Ramesh Bala (@rameshlaus) January 29, 2023 கடந்த ஆண்டு வெளியான ‘விருமன்’, ‘பொன்னியின் செல்வன் - 1’, ‘சர்தார்’ என அடுத்தடுத்த 3 படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக ...

‘யோகி பாபுக்காக ஒரு கதை எடுக்க வேண்டும் என்று ஆசை’ -‘பொம்மை நாயகி’ விழாவில் மாரி செல்வராஜ் பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகிபாபு நடித்துள்ள ‘பொம்மை நாயகி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் இன்று நடைபெற்றது. பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘பொம்மை நாயகி’. சிறுமி ஸ்ரீமதி, யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஷான். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள படத்தின் பாடல்களை ‘தெருக்குரல்’ அறிவு எழுதியிருக்கிறார். இந்த விழாவில் அறிமுக இயக்குநர் ஷான் பேசுகையில், “இந்தக் கதை எழுதி முடித்ததும் யாரிடமும் சொல்ல வில்லை. நீண்ட நாட்களாக இந்தக் கதையை வைத்து கொண்டே இருந்தேன். படம் பண்ணினால் நீளம் புரொடக்ஷனில் தான் பண்ண வேண்டும் என்று தீர்க்கமாக இருந்தேன். கதையைப் படித்து கதையில் இருந்த நம்பிக்கையால் இந்தப் படம் எடுக்க முடிந்தது. ‘பரியேறும் பெருமாள்’ படம் பார்த்து யோகி பாபு நடித்தால் எப்படி இருக்கும் என்ற நினைத்தேன். எதார்த்தமான மனிதன் சந்திக்கும் பிரச்சினைகளை எதிர்கொள்ளுவது தான் இந்த படம். எல்லோரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் இது” என்று தெரிவித்தார். இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், “இயக்குநர் இந்த கதையை தான் எடுப்பேன் என்று உறுதியாக இருந்து எடுத்து முடித்தவர். யார் இந்தக் கதையில் நடித்தால் சரி வரும் என்று தேர்வு செய்து பொருத்தமாக எடுத்துள்ளார். நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம் முக்கியமான நபர்கள் வெளி வந்துள்ளனர். ‘வாழை’ படம் முதன் முதலில் நான் எழுதிய கதை. அதை எப்போது எடுப்பேன் என்று எதிர்பார்த்து கொண்டு இருந்தேன். தற்போது அந்தப் படத்தை முடித்து விட்டேன். அடுத்து நான் நீலம் புரொடக்ஷனில் தான் படம் பண்ண போகிறேன். பிற்போக்குத்தனமான ஒரு படத்தை எடுக்க மாட்டேன் என்பது என் கொள்கை. நான் தப்பான படங்களை எடுக்க மாட்டேன். நிஜ கதைகளை உருவாக்கும் போதே இவர்கள் இந்த கதையை தயாரிப்பார்கள் என்ற நிச்சயம் உண்டானால் அது தான் தமிழ் சினிமாவின் வெற்றி. ‘பொம்மை நாயகி’ ஒரு பேரலையாய் அமையும். பெரிய இயக்குனர்கள் அனைவருக்கும் யோகி பாபுவிற்காக கதை எடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும், எனக்கும் அந்த ஆசை உள்ளது” என்று கூறினார். நடிகர் ஜி.எம். குமார் பேசுகையில், “இங்கே நான் வந்ததற்கு காரணம் கதை தான். யோகி பாபு உடன் என்னோட மூணாவது படம். ‘கர்ணன்’ படத்தில் மாரியிடம் யோகி பாபுவால் திட்டு வாங்கினேன். இயக்குநர் பா. ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’ மற்றும் ‘சார்பட்டா பரம்பரை’ படங்களை பார்த்து அசந்து போனேன்” என்று தெரிவித்தார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகிபாபு நடித்துள்ள ‘பொம்மை நாயகி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் இன்று நடைபெற்றது. பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘பொம்மை நாயகி’. சிறுமி ஸ்ரீமதி, யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஷான். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள படத்தின் பாடல்களை ‘தெருக்குரல்’ அறிவு எழுதியிருக்கிறார். இந்த விழாவில் அறிமுக இயக்குநர் ஷான் பேசுகையில், “இந்தக் கதை எழுதி முடித்ததும் யாரிடமும் சொல்ல வில்லை. நீண்ட நாட்களாக இந்தக் கதையை வைத்து கொண்டே இருந்தேன். படம் பண்ணினால் நீளம் புரொடக்ஷனில் தான் பண்ண வேண்டும் என்று தீர்க்கமாக இருந்தேன். கதையைப் படித்து கதையில் இருந்த நம்பிக்கையால் இந்தப் படம் எடுக்க முடிந்தது. ‘பரியேறும் பெருமாள்’ படம் பார்த்து யோகி பாபு நடித்தால் எப்படி இருக்கும் என்ற நினைத்தேன். எதார்த்தமான மனிதன் சந்திக்கும் பிரச்சினைகளை எதிர்கொள்ளுவது தான் இந்த படம். எல்லோரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் இது” என்று ...

‘பாகுபலி 2’, ‘கே.ஜி.எஃப். 2’ சாதனையை முறியடித்த ‘பதான்’ - 4 நாட்களில் ரூ. 400 கோடி வசூல் ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பால் திரையரங்குகளில் வெளியான நான்கு நாட்களில் ரூ.400 கோடி வசூலித்துள்ளது.  ஷாருக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆப்ரஹாம், சல்மான்கான் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 25-ம் தேதி வெளியான திரைப்படம் ‘பதான்’. சித்தார்த் ஆனந்த் இயக்கியிருந்த இந்தப் படத்தை, ஆதித்யா சோப்ராவின் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரித்திருந்தது. இந்நிலையில், இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான 4 நாட்களில் ரூ. 415 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ. 218. 75 கோடி வசூலை ஈட்டி, 200 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது. இந்தியில் அதிவேகத்தில் 200 கோடி ரூபாய் வசூலித்த படம் என்ற பெருமையையும் ‘பதான்’ படம் பெற்றுள்ளது. #Pathaan crosses ₹ 400 Crs gross at the WW Box office in 4 days.. — Ramesh Bala (@rameshlaus) January 29, 2023 இந்தியில், ‘கே.ஜி.எஃப். 2’ வின் முதல்நாள் வசூல் சாதனையான ரூ. 53.95 கோடியை முந்தி, ரூ. 55 கோடி வசூலித்திருந்தது ‘பதான்’. தற்போது எஸ்.எஸ். ராஜமௌலியின் ‘பாகுபலி 2’ படம் 6 நாட்களிலும், யஷ்ஷின் ‘கே.ஜி.எஃப். 2’ படம் 5 நாட்களிலும், பாலிவுட்டில் படைத்த சாதனையை ‘பதான்’ படம் நான்கே நாட்களில் முறியடித்துள்ளது. அதன்படி, 200 கோடி ரூபாய் கடந்து சாதனை படைத்துள்ளது. மேலும் ‘பாகுபலி 2’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி 4 நாட்களில் 400 கோடி ரூபாய் வசூலை கடக்காத நிலையில், ‘பதான்’ படம் அதனையும் கடந்துள்ளது. ‘PATHAAN’ OVERTAKES ‘KGF2’, ‘BAAHUBALI 2’… FASTEST TO ENTER ₹ 200 CR CLUB... #Pathaan: Day 4 [Sat] #KGF2 #Hindi: Day 5 #Baahubali2 #Hindi: Day 6#India biz.#Pathaan is truly rewriting record books. pic.twitter.com/w5y07xKRnI — taran adarsh (@taran_adarsh) January 28, 2023 இன்று விடுமுறை தினம் என்பதால், படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதே வரவேற்புடன் இன்னும் ஒரே வாரம் சென்றால், விரைவில் ரூ.1000 கோடியை ‘பதான்’ படம் வசூலிக்கும் என்று திரைத்துறை வர்த்தக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ‘பதான்’ படத்திற்கு அப்பாஸ் டயர்வாலா மற்றும் ஸ்ரீதர் ராகவன் திரைக்கதை அமைத்திருந்தனர். சஞ்சித் பால்ஹரா, அங்கீத் பால்ஹரா பின்னணி இசை அமைத்திருந்தனர். விஷால் -சேகர் பாடல்கள் செய்திருந்தனர். ஆரிஃப் ஷேக் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருந்தார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பால் திரையரங்குகளில் வெளியான நான்கு நாட்களில் ரூ.400 கோடி வசூலித்துள்ளது.  ஷாருக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆப்ரஹாம், சல்மான்கான் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 25-ம் தேதி வெளியான திரைப்படம் ‘பதான்’. சித்தார்த் ஆனந்த் இயக்கியிருந்த இந்தப் படத்தை, ஆதித்யா சோப்ராவின் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரித்திருந்தது. இந்நிலையில், இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான 4 நாட்களில் ரூ. 415 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ. 218. 75 கோடி வசூலை ஈட்டி, 200 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது. இந்தியில் அதிவேகத்தில் 200 கோடி ரூபாய் வசூலித்த படம் என்ற பெருமையையும் ‘பதான்’ படம் பெற்றுள்ளது. #Pathaan crosses ₹ 400 Crs gross at the WW Box office in 4 days.. — Ramesh Bala (@rameshlaus) January 29, 2023 இந்தியில், ‘கே.ஜி.எஃப். 2’ வின் முதல்நாள் வசூல் சாதனையான ரூ. 53.95 கோடியை முந்தி, ரூ. 55 கோடி வசூலித்திருந்தது ‘பதான்’. தற்போது எஸ்.எஸ். ராஜமௌலியின் ‘பாகுபலி 2’ படம் 6 நாட்களிலும், யஷ்ஷின் ‘கே.ஜி.எஃப். 2’ படம் 5 நாட்களிலும், பாலிவுட்டில் பட...

`ரஜினிகாந்த் பெயர், குரல், போட்டோவை அனுமதியின்றி பயன்படுத்தினால்...’-வழக்கறிஞர் எச்சரிக்கை நடிகர் ரஜினிகாந்தின் அனுமதியின்றி அவரது பெயர், புகைப்படம் மற்றும் குரலை பயன்படுத்துவோருக்கு எதிராக உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்தின் வழக்கறிஞர் எஸ்.இளம்பாரதி பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இந்திய திரை உலகில் பிரபலமான, பாராட்டு பெற்ற, வெற்றிகரமான நடிகரான ரஜினிகாந்த் என்கிற சிவாஜி ராவ் கெய்க்வாட், ஒரு நடிகராகவும், மனிதனாகவும் அவரது கவர்ச்சி மற்றும் இயல்பின் மூலம் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான ரசிகர்களால் 'சூப்பர் ஸ்டார்' என அழைக்கப்படுகிறார். திரையுலகம் முழுவதும் ரசிகர் பட்டாளமும், மரியாதையும் ஒப்பிட முடியாதது. மறுக்க முடியாதது. குறிப்பிடப்பட்டுள்ள அறிவிப்பில், அவரது நற்பெயர் அல்லது ஆளுமைக்கு ஏதேனும் சேதம் எற்பட்டால் அது ரஜினிகாந்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட ரஜினிகாந்திற்கு அனைத்து அம்சங்களிலும் உள்ள ஆளுமை, பப்ளிசிட்டி, உரிமை உள்ள நிலையில், அவரது பெயர், குரல், புகைப்படம், கேலிச்சித்திரப ;படம், கலைப் படம், கணினி செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கிய படம் உள்ளிட்டவற்றை பல்வேறு தளங்கள், ஊடகங்கள் மற்றும் பல்வேறு தயாரிப்பு நிறுவனங்கள் தவறாக பயன்படுத்துவதாக அவரது கவனத்திற்கு வந்துள்ளது. பொதுமக்கள் மத்தியில் அவர்களின் தயாரிப்புகளை வாங்குவதற்கும், அவர்களின் தளம் மற்றும் ஊடகத்தை அணுகுவதற்கும் பொதுமக்களை கவர்ந்திழுக்க வேண்டும் என்பதற்காக பயன்படுத்துகிறார்கள். டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்கள் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் தனித்துவம் வாய்ந்த ரஜினிகாந்தின் படம், பெயர், புகைப்படங்கள் மற்றும் தோற்றம் ஆகியவற்றை அவர் அங்கீகரிக்காமல் பயன்படுத்துவது, பொதுமக்களிடையே குழப்பத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடும் என வழக்கறிஞர் இளம்பாரதி வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ரஜினிகாந்தின் ஆளுமையின் அனைத்து அம்சங்களிலும் அதாவது அவரது பெயர், குரல், படம் மற்றும் பிற தனித்துவமான கூறுகள் உள்ளிட்டவற்றில் உள்ள உரிமைகள் எதையும், யாராவது மீறினால், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்டப்படி உரிமையியல், குற்றவியல் நடவடிக்கைகளையும் எடுக்கப்படும்" என எச்சரிக்கப்பட்டுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
நடிகர் ரஜினிகாந்தின் அனுமதியின்றி அவரது பெயர், புகைப்படம் மற்றும் குரலை பயன்படுத்துவோருக்கு எதிராக உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்தின் வழக்கறிஞர் எஸ்.இளம்பாரதி பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இந்திய திரை உலகில் பிரபலமான, பாராட்டு பெற்ற, வெற்றிகரமான நடிகரான ரஜினிகாந்த் என்கிற சிவாஜி ராவ் கெய்க்வாட், ஒரு நடிகராகவும், மனிதனாகவும் அவரது கவர்ச்சி மற்றும் இயல்பின் மூலம் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான ரசிகர்களால் 'சூப்பர் ஸ்டார்' என அழைக்கப்படுகிறார். திரையுலகம் முழுவதும் ரசிகர் பட்டாளமும், மரியாதையும் ஒப்பிட முடியாதது. மறுக்க முடியாதது. குறிப்பிடப்பட்டுள்ள அறிவிப்பில், அவரது நற்பெயர் அல்லது ஆளுமைக்கு ஏதேனும் சேதம் எற்பட்டால் அது ரஜினிகாந்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட ரஜினிகாந்திற்கு அனைத்து அம்சங்களிலும் உள்ள ஆளுமை, பப்ளிசிட்டி, உரிமை உள்ள நிலையில், அவரது பெயர், குரல், புகைப்படம், கேலிச்சித்திரப ;படம், கலைப் படம், கணினி செயற்கை நுண்ணறிவு மூலம் உ...

கோலிவுட்டுக்கு வரும் `சீதா மகாலக்‌ஷ்மி’? மிருணால் தாகூர் கோலிவுட் எண்ட்ரி இந்தப் படத்திலா? 'சீதா ராமம்' படம் மூலம் கவனம் ஈர்த்த நடிகை மிருணால் தாகூர், கோலிவுட்டில் 'சூர்யா 42' படத்தின்மூலமாக கால் பதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'அண்ணாத்த' படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கும் திரைப்படத்தில் சூர்யா நடிக்கிறார். 'சூர்யா 42' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பட்டானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நிகழ்காலம் கலந்து வரலாற்றுப் பின்னணியில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ள இப்படத்தை 10 மொழிகளில் இரண்டு பாகமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதுதான் நடிகர் சூர்யாவின் அதிகபட்ச பொருட்செலவில் உருவாகும் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் இந்தி திரையரங்கு, சேட்டிலைட், டிஜிட்டல் உரிமை ரூ.100 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இப்படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகவுள்ளது. அதன்படி, 'சூர்யா 42' படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சிகளில் பாலிவுட் நடிகை மிருணால் தாகூர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Hey Sitaaa, welcome to Kollywood pic.twitter.com/m7cADmwm13 — Venkatramanan (@VenkatRamanan_) January 28, 2023 மராத்தி மற்றும் இந்தி படங்களில் நடித்து 'சீதா ராமம்' படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானவர் மிருணால் தாகூர். இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியாகியிருந்த நிலையில் இவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. இதையடுத்து மிருணால் தாகூர் தற்போது தமிழில் 'சூர்யா 42' படம் மூலம் 'கோலிவுட் என்ட்ரி' கொடுக்கவுள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதுவொருபுறமிருக்க, சீதா ராமம் படத்தில் இணைந்து நடத்திய துல்கர் சல்மாண் மற்றும் மிருணால் தாகூர் இன்றைய தினம் விழாவொன்றில் சந்தித்துள்ளனர். இதுதொடர்பான படத்தை இருவரும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர். இருப்பினும் இருவரும் இணைந்து புகைப்படம் எதுவும் எடுக்கவில்லை. மிருணால் தாகூர் தனது இன்ஸ்டாகிராமில் `ஏன் நாம் இந்தவொரு படம் மட்டுமே எடுத்துள்ளோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள துல்கர் சல்மாண், “வாவ்... நான் இதை உணரவே இல்லை. நாம் இணைந்து புகைப்படம் எடுக்க தவறிவிட்டோம்” என்றுள்ளார். இதுவும் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
'சீதா ராமம்' படம் மூலம் கவனம் ஈர்த்த நடிகை மிருணால் தாகூர், கோலிவுட்டில் 'சூர்யா 42' படத்தின்மூலமாக கால் பதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'அண்ணாத்த' படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கும் திரைப்படத்தில் சூர்யா நடிக்கிறார். 'சூர்யா 42' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பட்டானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நிகழ்காலம் கலந்து வரலாற்றுப் பின்னணியில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ள இப்படத்தை 10 மொழிகளில் இரண்டு பாகமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதுதான் நடிகர் சூர்யாவின் அதிகபட்ச பொருட்செலவில் உருவாகும் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் இந்தி திரையரங்கு, சேட்டிலைட், டிஜிட்டல் உரிமை ரூ.100 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இப்படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகவுள்ளது. அதன்படி, 'சூர்யா 42' படத்தில் ஒரு குறிப்பிட்ட ...

”இருந்தாலும் நியாயம் வேண்டாமா?” - ரசிகரின் ஃபோனை ரன்பீர் தூக்கியெறிந்தது இதற்குதானாம்! சினிமா பிரபலங்கள் பொது வெளியில் வரும் போது ரசிகர்கள் படை சூழ்ந்து ஃபோட்டோ எடுக்கத் தொடங்கி விடுவார்கள். கூட்டம் அதிகபடியாக கூடிவிட்டால் வேறு வழியில்லாமல் நட்சத்திரங்கள் வேக வேகமாக அவ்விடத்தை காலி செய்யும் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் நித்தமும் வெளியாவதுண்டு. இப்படி இருக்கையில், பாலிவுட்டின் முன்னணி ஹீரோவும், நடிகை ஆலியா பட்டின் கணவருமான ரன்பீர் கபூருடன் இளைய ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க முற்பட்டிருக்கிறார். அப்போது சிரித்துக் கொண்டே போஸ் கொடுத்த ரன்பீர் திடீரென அந்த ரசிகரின் கையில் இருந்த ஃபோனை வாங்கி பின்னால் தூக்கி எறிந்திருக்கிறார். Shocking  Ranbir Kapoor THROWS Fan's Phone for annoying him for a Selfie.#RanbirKapoor pic.twitter.com/dPEymejxRv — $@M (@SAMTHEBESTEST_) January 27, 2023 வெறும் ஆறு நொடி மட்டுமே இருந்த அந்த வீடியோ நாடுமுழுக்க பட்டித் தொட்டியெங்கும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 40 வயதை தொட்டபின்னரும்கூட, ஒரு குழந்தைக்கு தந்தையான பின்னரும்கூட பாலிவுட்டின் சாக்லேட் பாயாகவே இப்போது வரை இருந்து வரும் ரன்பீர் கபூர் இப்படியா கோபத்தில் பொதுவெளியில் ரசிகரிடம் நடந்துக் கொள்வது என்றெல்லாம் பலரும் கடிந்து வந்தார்கள். இருப்பினும் இது ஏதேனும் விளம்பரத்துக்கானதாக இருக்கக் கூடும் என்றும் பதிவிட்டு வந்தார்கள். அந்த வகையில், கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு பிறகு ரசிகரிடம் ஏன் ரன்பீர் அப்படி நடந்துக் கொண்டார் என்பதற்கான விடை தெரிய வந்திருக்கிறது. View this post on Instagram A post shared by Viral Bhayani (@viralbhayani) சில நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் கணித்தபடி இது முற்றிலும் விளம்பர நோக்கத்துக்கானதுதான் என்பது தற்போது அம்பலமாகியிருக்கிறது. அதன்படி பிரபல மொபைல் நிறுவனமாக ஓப்போ பிராண்டின் புதிய 5G மொபைலை பரிசாக வழங்கியிருக்கிறார். அந்த புதிய ஃபோன் எதிர்வரும் பிப்ரவரி 3ம் தேதிதான் சந்தைக்கே விற்பனைக்கு வர இருக்கிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
சினிமா பிரபலங்கள் பொது வெளியில் வரும் போது ரசிகர்கள் படை சூழ்ந்து ஃபோட்டோ எடுக்கத் தொடங்கி விடுவார்கள். கூட்டம் அதிகபடியாக கூடிவிட்டால் வேறு வழியில்லாமல் நட்சத்திரங்கள் வேக வேகமாக அவ்விடத்தை காலி செய்யும் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் நித்தமும் வெளியாவதுண்டு. இப்படி இருக்கையில், பாலிவுட்டின் முன்னணி ஹீரோவும், நடிகை ஆலியா பட்டின் கணவருமான ரன்பீர் கபூருடன் இளைய ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க முற்பட்டிருக்கிறார். அப்போது சிரித்துக் கொண்டே போஸ் கொடுத்த ரன்பீர் திடீரென அந்த ரசிகரின் கையில் இருந்த ஃபோனை வாங்கி பின்னால் தூக்கி எறிந்திருக்கிறார். Shocking  Ranbir Kapoor THROWS Fan's Phone for annoying him for a Selfie. #RanbirKapoor pic.twitter.com/dPEymejxRv — $@M (@SAMTHEBESTEST_) January 27, 2023 வெறும் ஆறு நொடி மட்டுமே இருந்த அந்த வீடியோ நாடுமுழுக்க பட்டித் தொட்டியெங்கும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 40 வயதை தொட்டபின்னரும்கூட, ஒரு குழந்தைக்கு தந்தையான பின்னரும்கூட பாலிவுட்டின் சாக்லேட் பாயாகவே இப்போது வரை இருந்து வரும் ரன்பீர் கபூர் இப்படியா கோபத்தில் பொதுவெளியில...

அஜித்தின் AK 62-ஐ இயக்கப் போவது இவரா? அண்மைத் தகவலால் ரசிகர்கள் ஆரவாரம்..! ட்விட்டர் தளத்தில் எங்கு காணினும் அஜித்தின் 62வது படம் குறித்த பேச்சாகத்தான் இருக்கிறது. இதனால் #AK62 , #Ajithkumar போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கிலேயே இருந்து வருகிறது. நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என தொடர்ச்சியாக ஹெச்.வினோத் இயக்கத்திலேயே நடித்திருந்த நடிகர் அஜித்குமார் அவரது 62வது படத்துக்காக விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் நடிக்கப் போவதாகவும், அதை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்க இருந்ததாகவும் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கப் போகிறார் என்றதும் ரோம்-காம் பாணியிலான கதையாக இருக்குமோ என்றெல்லாம் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்து வந்தார்கள். ஷூட்டிங் பணிகளும் விரைவில் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் கசிந்தன. எல்லாமே இனிமேல் நல்லாதான் நடக்கும் காணும் கனவெல்லாம் இறைவன் அருளால் பலிக்கும் Thank U #AjithSir for this greatest opportunity to work with you for the prestigious #AK62 Words can’t explain the happiness With my king @anirudhofficial again  & @LycaProductions  pic.twitter.com/xFnT8jGSEf — WikkiFlix (@VigneshShivN) March 18, 2022 இப்படி இருக்கையில், அஜித்தின் AK62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவில்லை என்றும் அதற்கு பதிலாக AK63 படத்தைதான் விக்னேஷ் சிவன் இயக்கப் போகிறார் என்றும் நேற்றிலிருந்து தகவல்கள் உலா வந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில், தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் போன்ற படங்களை இயக்கிய மகிழ் திருமேனிதான் அஜித்தின் 62வது படத்தை இயக்கப் போகிறார் என்று சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தனித்துவமான, ஆக்‌ஷன் படங்களை இயக்கி வந்த மகிழ் திருமேனி முதல் முறையாக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான அஜித்தை வைத்து இயக்கப் போகிறார் என்ற செய்தி ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. இதுபோக, ஏகே 62 படத்தை விஷ்ணு வர்தன் இயக்கப் போவதாகவும் கூறப்பட்டு வருகிறது. #AK62 director #magizhthirumeni confirmed! #AjithKumar will work with Magizh!!! — Latha Srinivasan (@latasrinivasan) January 28, 2023 ஆனால் AK62-ஐ இயக்கப்போவது விக்னேஷ் சிவன்தான் என லைகா நிறுவனம் கடந்த ஆண்டே அறிவித்திருந்தாலும் தற்போது நிலவி வரும் பரபரப்புகளுக்கு விக்னேஷ் சிவன் மற்றும் தயாரிப்பு நிர்வாகம் தரப்பு மவுனம் சாதித்து வருவதால் AK62 கைமாறியிருப்பது உண்மைதான் போல என்றும் அஜித் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. முன்னதாக சிவகார்த்திகேயனை வைத்து அவரது 17வது படமாக Love Insurance Company (LIC) என்ற ஃபாண்டசி ரொமான்டிக் கதையை விக்னேஷ் சிவன் இயக்க இருந்தது. ஆனால் பட்ஜெட் காரணமாக கதை விவாதத்துடனேயே அந்த படம் கிடப்பில் போடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
ட்விட்டர் தளத்தில் எங்கு காணினும் அஜித்தின் 62வது படம் குறித்த பேச்சாகத்தான் இருக்கிறது. இதனால் #AK62 , #Ajithkumar போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கிலேயே இருந்து வருகிறது. நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என தொடர்ச்சியாக ஹெச்.வினோத் இயக்கத்திலேயே நடித்திருந்த நடிகர் அஜித்குமார் அவரது 62வது படத்துக்காக விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் நடிக்கப் போவதாகவும், அதை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்க இருந்ததாகவும் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கப் போகிறார் என்றதும் ரோம்-காம் பாணியிலான கதையாக இருக்குமோ என்றெல்லாம் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்து வந்தார்கள். ஷூட்டிங் பணிகளும் விரைவில் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் கசிந்தன. எல்லாமே இனிமேல் நல்லாதான் நடக்கும் காணும் கனவெல்லாம் இறைவன் அருளால் பலிக்கும் Thank U #AjithSir for this greatest opportunity to work with you for the prestigious #AK62 Words can’t explain the happiness With my king @anirudhofficial again  & @LycaProductions   pic.twitter.com/xFnT8jGSEf — WikkiFlix (@VigneshSh...

அஜித்தின் ‘ஏகே63’ படத்தை இயக்கப் போவது இவரா?-தீயாய் பரவும் தகவல்! அப்படினா விக்னேஷ் சிவன்? நடிகர் அஜித் அடுத்ததாக நடிக்க உள்ளப் படத்தின் இயக்குநர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றன. எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து நடித்திருந்த படம் ‘துணிவு’. பொங்கலை முன்னிட்டு, விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படத்துடன் கடந்த 11-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. ‘ஏகே 62’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்திற்கான திரைக்கதை அமைப்பதில் கவனம் செலுத்திவரும் விக்னேஷ் சிவன், வருகிற பிப்ரவரியில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அஜித்தின் ‘ஏகே 63’ படம் குறித்த தகவல் ஒன்று சமூகவலைத்தளங்களில் அதிவேகமாக பரவி வருவதுடன் ட்ரெண்டாகியும் வருகிறது. அதன்படி, ‘ஏகே 63’ படத்தை இயக்குநர் அட்லீ இயக்கவுள்ளதாகவும், இந்தப் படத்தை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. விஜய்யை வைத்து ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்தவர் அட்லீ என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் அட்லீ இடம் ‘விஜய்யை வைத்து படம் எடுத்துவிட்டீர்கள், அஜித்தை வைத்து எப்பொழுது படம் இயக்குவீர்கள்’ என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு அவர், ‘ஒரு இயக்குநராக எல்லா நடிகர்களுடனும் படம் பண்ண விரும்புகிறேன். நிச்சயம் அஜித் உடனும் படம் பண்ணுவேன்’ என்று பதில் அளித்தார். அட்லீ பேசிய இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் தற்போது ஷேர் செய்து வருகிறார்கள். மேலும், அஜித்தின் ‘பில்லா’ படத்தை இயக்கிய விஷ்ணுவர்தன் - யுவன் ஷங்கர் ராஜா - சத்யஜோதி ஃபிலிம்ஸ் ஆகிய கூட்டணியில் தான் ‘ஏகே 63’ படம் உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’ படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, இரண்டாவது பாகத்தை இயக்கி வரும் இயக்குநர் சுகுமாரும், அஜித்தின் ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’, ‘விஸ்வாசம்’ ஆகிய 4 படங்களை இயக்கிய சிறுத்தை சிவாவும் பேச்சுவார்த்தையில் இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் அஜித் ரசிகர்கள் #AK63 என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர். இயக்குநர் அட்லீ தற்போது ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோனே, யோகி பாபு ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜவான்’ என்ற பான் இந்தியா படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் வருகிற ஜூன் மாதம் 2-ம் தேதி வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து ‘ஏகே 63’ படத்தை இயக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. பல இயக்குநர்கள் பேசப்பட்டாலும், இயக்குநர் அட்லீக்கே ‘ஏகே 63’ படத்தை இயக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏகே62 இருக்கும் போது ஏகே63 ஏன்? விக்னேஷ் சிவன் படத்தின் நிலை? அஜித் மற்றும் விஜய் ஆகிய இரு உச்ச நடிகர்களும் ஒரே நேரத்தில் ஒரு படத்தில் மட்டும் நடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஒரு படம் முடியும் வரை அடுத்த படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளி வராத வகையில் பார்த்துக் கொள்வார்கள். இத்தகைய சூழலில் விக்னேஷ் சிவன் உடனான படத்தின் அறிவிப்பை வெளியிட்ட பிறகு தற்போது அடுத்த படம் தொடர்பான தகவல்கள் கசிந்து வருகிறது. தீபாவளிக்கு விஜய்யின் ‘தளபதி 67’ வருவதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில், மீண்டும் விஜய் உடன் தன்னுடைய படத்தை மோத விட அஜித் முடிவு செய்துள்ளதாகவும் அதற்குள் அடுத்த படத்தை முடித்துவிட வேண்டும் என்றும் பேசப்படுகிறது. ஆனால், விக்னேஷ் சிவன் திரைக்கதை எழுதுவதில் தாமதம் ஏற்படுத்தி வருவதால், அஜித் தரப்பில் சற்றே யோசிக்க தொடங்கிவிட்டதாகவும், முழுக்க முழுக்க தன்னுடைய பாணியிலே திரைப்படத்தை உருவாக்குவதில் அவர் உறுதியாக இருப்பதிலும் அஜித் தரப்பினருக்கு உடன்பாடு இல்லை என்றும் தெரிகிறது. அதாவது விக்னேஷ் சிவன் புராஷக்டை ட்ராப் செய்யும் அளவிற்கு கூட சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. அதனால்தான், அடுத்தப் படம் குறித்த தகவல்கள் தீயாய் பரவி வருகிறது. விஜய் படத்துடன் மோத வேண்டும் என்பதாலும் மாஸான படமாக அதனை உருவாக்க வேண்டும் என்று நினைத்துள்ளதாலும், விஷ்ணுவர்தன் போன்ற இயக்குநர்களை நாடுவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அஜித்தை வைத்து ‘பில்லா’, ‘ஆரம்பம்’ ஆகிய மாஸான திரைப்படங்களை கொடுத்தவர் விஷ்ணுவர்தன் என்பது குறிப்பிடத்தக்கது.  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
நடிகர் அஜித் அடுத்ததாக நடிக்க உள்ளப் படத்தின் இயக்குநர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றன. எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து நடித்திருந்த படம் ‘துணிவு’. பொங்கலை முன்னிட்டு, விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படத்துடன் கடந்த 11-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. ‘ஏகே 62’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்திற்கான திரைக்கதை அமைப்பதில் கவனம் செலுத்திவரும் விக்னேஷ் சிவன், வருகிற பிப்ரவரியில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அஜித்தின் ‘ஏகே 63’ படம் குறித்த தகவல் ஒன்று சமூகவலைத்தளங்களில் அதிவேகமாக பரவி வருவதுடன் ட்ரெண்டாகியும் வருகிறது. அதன்படி, ‘ஏகே 63’ படத்தை இயக்குநர் அட்லீ இயக்கவுள்ளதாகவும், இந்தப் படத்தை ஏ.ஆர்.ரஹ்மான் இச...

`அக்கினேனி குடும்பத்தை மரியாதை குறைவாக பேசினேனா?’- எதிர்ப்புகளுக்கு பாலகிருஷ்ணா விளக்கம் மறைந்த பழம்பெரும் நடிகர் அக்கினேனி நாகேஸ்வர ராவ் குறித்து பேசியது விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நந்தமூரி பாலகிருஷ்ணா நடித்து சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் ‘வீர சிம்ஹா ரெட்டி’. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்தப் படம், இதுவரை 128.2 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதற்கிடையில் இந்தப்படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடந்திருந்தது. அதில் பேசிய நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா, தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரும், நாகர்ஜூனாவின் தந்தையுமான அக்கினேனி நாகேஸ்வர ராவ் மற்றும் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் எஸ்.வி.ரங்கா ராவ் பெயரைக் குறிப்பிட்டு, மரியாதை குறைவான விதத்தில் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அந்த விழாவின் மேடையில் அவர் பேசுகையில், “எனது தந்தை சீனியர் என்.டி.ராமராவ் பற்றியும், அவரது சமகால நடிகர்களான ‘ஆ ரங்காராவ் - ஈ ரங்காராவ், அக்கினேனி - தொக்கினேனி’ எனப் பலரை பற்றியும் நாங்கள் படப்பிடிப்பில் பேசிக்கொண்டிருப்போம்” என்று பேசியிருந்தார். இதற்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்திருந்தனர். தொடர்புடைய செய்தி: பாலகிருஷ்ணாவுக்கு எதிராக களமிறங்கிய `அக்கினேனி' குடும்பம்! ஒற்றை பேச்சால் கிளம்பிய புயல்! சமூகவலைத்தளத்திலும் இது பேசுபொருளானது. இதையடுத்து மறைந்த நடிகர் அக்கினேனி நாகேஸ்வர ராவ்வின் பேரனும், நாகர்ஜூனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யா மற்றும் அகில் ஆகிய இருவரும் தங்களது கண்டனங்களை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்திருந்தனர்.  pic.twitter.com/0coiyzlkiD — Akhil Akkineni (@AkhilAkkineni8) January 24, 2023 தெலுங்கு திரை உலகத்தில் பாலகிருஷ்ணாவுக்கும், நாகார்ஜுனாவுக்கும் எப்பொழுதுமே போட்டி உண்டு. மேலும் இருவரும் நட்பாகவும் பழகிக்கொள்ள மாட்டார்கள். அதனால் தான் இவ்வறிக்கையை நாகார்ஜுனாவின் மகன்களான நாக சைதன்யா மற்றும் அகில் ஆகியோர் வெளியிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், இதுதொடர்பாக நந்தமூரி பாலகிருஷ்ணா சமீபத்தில் நடந்த விழாவில் விளக்கம் அளித்துள்ளார். அதில் பாபாய் என மூத்த உறவுமுறைபோல் அக்கினேனி நாகேஸ்வரராவ் பெயரை அழைத்து, “சித்தப்பா (அக்கினேனி நாகேஸ்வரராவ்) என்னை அவரது சொந்த குழந்தைகளைவிட அதிகம் நேசித்தவர். எப்போதும் என் மீது அதிக பாசம் காட்டி வந்தவர். அதனால் அவர் மீது எப்போதும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நான் சொல்ல வந்தது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டுள்ளது” என்று விளக்கம் அளித்துள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
மறைந்த பழம்பெரும் நடிகர் அக்கினேனி நாகேஸ்வர ராவ் குறித்து பேசியது விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நந்தமூரி பாலகிருஷ்ணா நடித்து சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் ‘வீர சிம்ஹா ரெட்டி’. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்தப் படம், இதுவரை 128.2 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதற்கிடையில் இந்தப்படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடந்திருந்தது. அதில் பேசிய நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா, தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரும், நாகர்ஜூனாவின் தந்தையுமான அக்கினேனி நாகேஸ்வர ராவ் மற்றும் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் எஸ்.வி.ரங்கா ராவ் பெயரைக் குறிப்பிட்டு, மரியாதை குறைவான விதத்தில் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அந்த விழாவின் மேடையில் அவர் பேசுகையில், “எனது தந்தை சீனியர் என்.டி.ராமராவ் பற்றியும், அவரது சமகால நடிகர்களான ‘ஆ ரங்காராவ் - ஈ ரங்காராவ், அக்கினேனி - தொக்கினேனி’ எனப் பலரை பற்றியும் நாங்கள் படப்பிடிப்பில் பேசிக்கொண்டிருப்போம்” என்று பேசியிருந்தார். இதற்கு பலரும் கண...

ஹரீஷ் கல்யாண் - இவானாவின் Let's Get Married! ரசிகர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்த தோனி! கிரிக்கெட் என்றாலே தமிழ்நாட்டு இளைஞர்கள் சொல்லும் ஒரே வார்த்தை `தல தோனி’. அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் தோனி. இவரின் வாழ்க்கை வரலாற்றை M.S.தோனி என படமாக எடுத்து, பல மொழிகளில் டப் செய்திருந்தனர் இயக்குநர்கள். அந்தப் படம், வெற்றி நடை போட்டது. தோனிக்கு உயரிய விருதான பத்மஸ்ரீ பத்மவிபூஷன் விருது மட்டும் அல்லாது பல உயர்ந்த விருதையும் பெற்றவர். இந்நிலையில் கிரிக்கெட் மட்டுமின்றி ஏராளமான துறைகளில் இவர் முதலீடு செய்து வருகிறார் தோனி. அந்தவகையில் விவசாயம் செய்வது, பள்ளிக் கூடங்கள் கட்டுவது, ஸ்டார்ட்டப் நிறுவனங்களில் முதலீடு செய்வது, விளம்பரப் படங்களில் நடிப்பது என மிகவும் பிஸியாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். தற்போது அவர் திரைத்துறையிலும் கால் பதித்திருக்கிறார்.  தோனி என்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பதாக, அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தோனியின் மனைவியுமான சாக்ஷி தோனி கூறியிருந்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து தென்னிந்தியாவில் தோனி என்டெர்டெயின்மெண்ட் சார்பில் நயன்தாராவை வைத்து தமிழ் படம் தயாரிக்கப் போவதாக தகவல் வெளியானநிலையில், இதுகுறித்து மறுப்பு தெரிவித்து அந்நிறுவனம் விளக்கம் அளித்திருந்தது. இதன்பிறகு நடிகர் விஜய்யின் அடுத்தப் படத்தை தயாரிக்கவுள்ளதாக தகவல் கசிந்தது. நடிகர் விஜய்யை வைத்து தமிழிலும், மகேஷ் பாபு வைத்து தெலுங்கிலும், பிரித்விராஜை வைத்து மலையாளத்திலும், கிச்சா சுதீப்பை வைத்து கன்னடத்திலும் படம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதற்கும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. பின்னர் ஹரிஷ் கல்யாண் நடிக்க, அந்தப் படத்தை தோனி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டநிலையில், தற்போது இந்த நிறுவனத்தின் முதல் படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. அதன்படி படத்தின் தலைப்பு, நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன. இத்துடன் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதன்படி, தோனி தயாரிக்கும் முதல் படம், தமிழில் உருவாகும் 'Let’s get married'. இந்தப் படத்தில் ஹரீஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு நடிக்கின்றனர். அறிமுக இயக்குநர் ரமேஷ் இயக்கும் இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. தமிழரான ரமேஷ் தமிழ்மணி எழுதிய ‘அதர்வா: தி ஆர்ஜின்’ என்ற கிராஃபிக் நாவலில் சூப்பர் ஹீரோவாகவும், போர் வீரர்களின் தலைவராகவும் தோனி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அது விரைவில் வெளியாக உள்ளது. Let’s get married படத்துக்கு விஸ்வஜித் என்ற மலையாள இசையமைப்பாளர் இசையமைக்க உள்ளார். ப்ரதீப் இ.ராகவ், படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளார். இவர் லவ் டுடே, கோமாளி ஆகிய படங்களுக்கு படத்தொகுப்பு செய்தவராவார் Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
கிரிக்கெட் என்றாலே தமிழ்நாட்டு இளைஞர்கள் சொல்லும் ஒரே வார்த்தை ` தல தோனி’. அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் தோனி. இவரின் வாழ்க்கை வரலாற்றை M.S.தோனி என படமாக எடுத்து, பல மொழிகளில் டப் செய்திருந்தனர் இயக்குநர்கள். அந்தப் படம், வெற்றி நடை போட்டது. தோனிக்கு உயரிய விருதான பத்மஸ்ரீ பத்மவிபூஷன் விருது மட்டும் அல்லாது பல உயர்ந்த விருதையும் பெற்றவர். இந்நிலையில் கிரிக்கெட் மட்டுமின்றி ஏராளமான துறைகளில் இவர் முதலீடு செய்து வருகிறார் தோனி. அந்தவகையில் விவசாயம் செய்வது, பள்ளிக் கூடங்கள் கட்டுவது, ஸ்டார்ட்டப் நிறுவனங்களில் முதலீடு செய்வது, விளம்பரப் படங்களில் நடிப்பது என மிகவும் பிஸியாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். தற்போது அவர் திரைத்துறையிலும் கால் பதித்திருக்கிறார்.  தோனி என்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பதாக, அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தோனியின் மனைவியுமான சாக்ஷி தோனி கூறியிருந்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து தென்னிந்தியாவில் தோனி என்டெர்டெயின்மெண்ட் சார்பில் நயன்தாராவை வைத்து தமிழ் படம் தயாரிக்கப் போவதாக தகவல் வெளியானநிலையில், இதுகுறித்து மறுப்பு தெரிவ...

பிரசாரத்தின் போது திடீரென நிலை தடுமாறிய நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா அரசியல் ரீதியாக பிரசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, அவர் சென்றுக்கொண்டிருந்த வாகனம், திடீரென கிளம்பியதில் அவர் சற்றே நிலை தடுமாறியுள்ளார். நடிகர் பாலகிருஷ்ணா, தெலுங்கு திரைப்பட நடிகர் மட்டுமன்றி ஆந்திரபிரதேச சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் நேற்று தன்னுடைய சொந்த தொகுதியான இந்துபூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். வாகனத்தில் இருந்தபடி தன் தொண்டர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார் பாலகிருஷ்ணா. அப்போது திடீரென ஓட்டுநர் அந்த பிரச்சார வாகனத்தை கியரை அழுத்தவே, சட்டென வண்டி வேகமாக நகர்ந்தது. அச்சமயத்தில் ரசிகர்களை நோக்கி கைகளை அசைத்துக்கொண்டிருந்த பாலகிருஷ்ணா, எதிர்பாராவிதமாக நிலை தடுமாறினார். அவர் சென்றுகொண்டிருந்தது பிரசார வாகனம் என்பதாலும், வாகனத்தின் உள்ளே தான் அவர் நின்றுகொண்டிருந்தார் என்பதாலும் நல்வாய்ப்பாக அவரை சுற்றி பலர் இருந்தனர். அவர்கள் சுதாரித்துக்கொண்டு பாலகிருஷ்ணா விழாவில் பிடித்துக்கொண்டனர். இதனால் ஏற்பட இருந்த அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. காயங்கள் ஏதும் இன்றி அவரும் தப்பினார். இருப்பினும் சற்று நிலை தடுமாறியதில் அவர் சிரமப்பட்டார். இதையடுத்து சிறிது ஓய்வெடுத்துவிட்டு, பின் மீண்டும் தன்னுடைய சுற்றுப்பயணத்தை தொடர்ந்தார் பாலகிருஷ்ணா. தொடர்ந்து இன்றும் தெலுங்கு தேசிய கட்சி சார்பாக நடந்த நிகழ்ச்சியில் அவர் ஆரோக்கியமாக கலந்துகொண்டார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
தெலுங்கு நடிகர்  நந்தமுரி பாலகிருஷ்ணா அரசியல் ரீதியாக பிரசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, அவர் சென்றுக்கொண்டிருந்த வாகனம், திடீரென கிளம்பியதில் அவர் சற்றே நிலை தடுமாறியுள்ளார். நடிகர் பாலகிருஷ்ணா,  தெலுங்கு திரைப்பட நடிகர் மட்டுமன்றி ஆந்திரபிரதேச சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் நேற்று தன்னுடைய சொந்த தொகுதியான இந்துபூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். வாகனத்தில் இருந்தபடி தன் தொண்டர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார் பாலகிருஷ்ணா. அப்போது திடீரென ஓட்டுநர் அந்த பிரச்சார வாகனத்தை கியரை அழுத்தவே, சட்டென வண்டி வேகமாக நகர்ந்தது. அச்சமயத்தில் ரசிகர்களை நோக்கி கைகளை அசைத்துக்கொண்டிருந்த பாலகிருஷ்ணா, எதிர்பாராவிதமாக நிலை தடுமாறினார். அவர் சென்றுகொண்டிருந்தது பிரசார வாகனம் என்பதாலும், வாகனத்தின் உள்ளே தான் அவர் நின்றுகொண்டிருந்தார் என்பதாலும் நல்வாய்ப்பாக அவரை சுற்றி பலர் இருந்தனர். அவர்கள் சுதாரித்துக்கொண்டு பாலகிருஷ்ணா விழாவில் பிடித்துக்கொண்டனர். இதனால் ஏற்பட இருந்த அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. காயங்கள் ஏதும் இன்றி அவரும் தப்பினார். இருப்பினும் சற்று நிலை தடுமாறி...

"நீ ஒரு சூப்பர் ஸ்டாருன்னு ப்ரூப் பண்ணிட்ட” - ரஜினியின் மங்காத மகுடமும் விஜய்யின் ஆசையும்! சூப்பர் ஸ்டார் பட்டமும் தொடரும் விவாதமும் சமீப காலமாக சூப்பர் ஸ்டார் பட்டம் தொடர்பான விவாதம் அனல் பறந்து கொண்டே இருக்கிறது. வசூல் சக்கரவர்த்தியாக வலம்வரும் நடிகர் விஜய்தான் தற்போதைய சூப்பர் ஸ்டார் என்று பலரும் கூறி வருகிறார்கள். வைரலாகும் தீ வீடியோ! ரஜினிகாந்த் நடிப்பில் 1981 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் தீ. ரஜினியின் சினிமா கேரியரில் பில்லா போன்று மிகவும் ஸ்டைலிஸ் ஆன கேங்ஸ்டர் படம்தான் தீ. தன்னுடைய யதார்த்தமான, ஸ்டைலான நடிப்பில் எல்லோரையும் கட்டிப்போட்டிருப்பார் ரஜினி. தீ திரைப்படம் வெளியாகி 41 ஆண்டுகள் ஆன நிலையில், அதனை அவருடைய ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கொண்டாடி வருகிறார்கள். குறிப்பாக தீப் படத்தில் நடிகரும், தயாரிப்பாளருமான பாலாஜி பேசும் வசனத்தை ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள். தீ படத்தில் ரஜினி டான் ஆக வளர்ந்து வரும் பொழுது ஒரு முக்கியமான சம்பத்திற்கு பிறகு, “நீ ஒரு சூப்பர்ஸ்டாருன்னு ஃப்ரூப் பண்ணிட்ட, இன்று முதல் இந்த நாற்காலி உனக்குத்தான் சொந்தம்" என்று பேசியிருப்பார். அந்த வீடியோவை ஷேர் செய்த பலரும், ”தீ படத்தில் இந்த வசனம். இது படத்துக்கான வசனம் என்று மட்டும் கருதினால் அது உங்கள் தவறு” என்று குறிப்பிட்டு சிலாகித்து வருகிறார்கள். சூப்பர் ஸ்டார் பட்டத்தை ஏற்க மறுத்த ரஜினி! ஆபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் தோன்றிய ரஜினிகாந்திற்கு, 1978 ஆம் ஆண்டு வெளியான பைரவி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கிடைத்தது. ஆனால், முதலில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை ரஜினிகாந்த் விரும்பவில்லை. அதனை ஏற்க மறுத்தார். இதுதொடர்பாக தயாரிப்பாளர் தாணு அளித்த பேட்டி ஒன்றில் விரிவாக பேசியிருந்தார். ஏனெனில் பைரவி படத்தின் சென்னை வட்டார விநியோகஸ்தராக இருந்தவர் தாணு. அன்று தாணு போஸ்டர்கள் மூலம் செய்த தரமான புரமோஷன்களை கண்டு ரஜினியே மிரண்டு போய்விடார். தாணுவையும் பாராட்டி இருக்கிறார். ஆனால், சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை அவர் விரும்பவில்லை. இதுதொடர்பாக தாணு அளித்த அந்த பேட்டியில், “பைரவி பட தயாரிப்பாளர் கலைஞானம், டைரக்டர் எம்.பாஸ்கர் இருவரும் என்னை ஒரு நாள் வந்து பார்த்தார்கள். "ரஜினி அனுப்பி, உங்களை வந்து பார்க்கிறோம். எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகிய மூத்த கலைஞர்கள் இருக்கும்போது, தன்னை சூப்பர் ஸ்டார் என்று அழைப்பதை ரஜினி விரும்பவில்லை. அப்படி விளம்பரப்படுத்துவதை நிறுத்திவிடச் சொன்னார்'' என்றார்கள். ஆனால், இதற்குள் சூப்பர் ஸ்டார் என்ற பெயர் பிரபலமாகி விட்டது. ரஜினியை பார்க்கும்போதெல்லாம் ரசிகர்கள் `சூப்பர் ஸ்டார்' என்று குரல் எழுப்ப ஆரம்பித்து விட்டனர். எனவே, நான் துணிந்து `கிரேட்டஸ்ட் சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடிக்கும் பைரவி என்று விளம்பரம் செய்தேன்” என்று குறிப்பிட்டிருந்தார். விஜய் மனதிற்கு சூப்பர் ஸ்டார் ஆசை இருக்கா? வாரிசு படம் தொடர்பான புரமோஷன் நிகழ்வுகளின் போதுதான் சூப்பர் ஸ்டார் பட்டம் தொடர்பான விவாதம் சூடுபிடித்தது. இசை வெளியீட்டு விழாவில் சரத்குமார் சூர்ய வம்சம் நிகழ்வை சுட்டிக்காட்டி விஜய்தான் சூப்பர் ஸ்டார் என்று கூறினார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் தொடர்ச்சியாக விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். இருப்பினும், ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது பலரும் ரஜினிதான் சூப்பர் ஸ்டார் என்று பதில் கொடுத்து வருகிறார்கள். ஆனால், இந்த விவகாரத்தில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன வென்றால், தன்னை வைத்துகொண்டே பலரும் சூப்பர் ஸ்டார் என்று கூறி வரும் நிலையில் நடிகர் விஜய் ஏன் இதுவரை அதுகுறித்து எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஒருவேளை விஜய்யும் அதனை ரசிக்கிறாரா என்றே தோன்றுகிறது. வசூலை பொறுத்தவரை தமிழ் சினிமா நெம்பர் 1 இடத்தில் இருப்பதால் அவர் நினைப்பதில் தவறில்லை. இதனை செய்திருந்தால் விஜய் மதிப்பு கூடுமல்லவா! சீனியர் நடிகரான ரஜினிகாந்திற்கு இன்றளவும் மசுவு குறையவே இல்லை. அமிதாப் போன்று டிராக் மாற்றிக் கொள்ளவும் இல்லை. ரஜினியின் படங்களுக்கும் இன்றளவும் முதல் நாள் முதல் காட்சிக்கு கூட்டம் அலைமோதவே செய்கிறது. விஸ்வாசம் பெரிய வெற்றி பெற்ற போதும் பேட்ட அதற்கு ஈடு கொடுத்தது. அப்படி களத்தில் அவர் இருக்கையில் விஜய் சற்றே காலம் பொறுத்து இருக்கலாம். ஒரு விஜய் தானாக முன் வந்து ‘ரஜினி களத்தில் இருக்கையில் என்னை யாரும் சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம்’ என்று பேசினால் அவர் மீதான மதிப்பு பல மடங்கும் கூடும் அல்லவா. இதனை ஏன் விஜய் செய்ய தவறுகிறார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
சூப்பர் ஸ்டார் பட்டமும் தொடரும் விவாதமும் சமீப காலமாக சூப்பர் ஸ்டார் பட்டம் தொடர்பான விவாதம் அனல் பறந்து கொண்டே இருக்கிறது. வசூல் சக்கரவர்த்தியாக வலம்வரும் நடிகர் விஜய்தான் தற்போதைய சூப்பர் ஸ்டார் என்று பலரும் கூறி வருகிறார்கள். வைரலாகும் தீ வீடியோ! ரஜினிகாந்த் நடிப்பில் 1981 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் தீ. ரஜினியின் சினிமா கேரியரில் பில்லா போன்று மிகவும் ஸ்டைலிஸ் ஆன கேங்ஸ்டர் படம்தான் தீ. தன்னுடைய யதார்த்தமான, ஸ்டைலான நடிப்பில் எல்லோரையும் கட்டிப்போட்டிருப்பார் ரஜினி. தீ திரைப்படம் வெளியாகி 41 ஆண்டுகள் ஆன நிலையில், அதனை அவருடைய ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கொண்டாடி வருகிறார்கள். குறிப்பாக தீப் படத்தில் நடிகரும், தயாரிப்பாளருமான பாலாஜி பேசும் வசனத்தை ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள். தீ படத்தில் ரஜினி டான் ஆக வளர்ந்து வரும் பொழுது ஒரு முக்கியமான சம்பத்திற்கு பிறகு, “நீ ஒரு சூப்பர்ஸ்டாருன்னு ஃப்ரூப் பண்ணிட்ட, இன்று முதல் இந்த நாற்காலி உனக்குத்தான் சொந்தம்" என்று பேசியிருப்பார். அந்த வீடியோவை ஷேர் செய்த பலரும், ”தீ படத்தில் இந்த வசனம். இது படத்துக்கான வசனம் என்று மட்டும...

”அப்போதெல்லாம் தினமும் குடி, சிகரெட் தான்!” - ரஜினியின் கலகல பேச்சால் அதிர்ந்த அரங்கம்! நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் புதிதாய் தொடங்கியுள்ள SARP PRODUCTIONS மற்றும் அதன் மூலம் தயாரிக்கப்பட உள்ள "சாருகேசி" திரைப்படம் குறித்த அறிவிப்பு விழாவானது சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு திரைப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். ரஜினிகாந்த் பேசியதன் முழுவிபரம்;- அன்று என்னை உள்ளேயே அனுமதிக்கவில்லை; அறிவிப்பை அடுத்து பேசிய ரஜினிகாந்த், “ரகசியம் பரம ரகசியம் நாடகத்தை பார்க்க 45 வருடத்திற்கு முன்பு உள்ளே சென்றபோது, என்னை அனுமதிக்கவில்லை. ஆனால் சாருகேசி நாடகத்தின் 50வது விழாவில் தலைமை விருந்தினராக வந்திருக்கிறேன் என்றால் எல்லாம் அந்த காலத்தின் செயல். ஜெயலலிதா, நாகேஷ், சோ, விசு போன்றவர்கள் YGP நாடகக்குழுவின் இருந்து வந்தவர்கள். பாதுகாப்பும் கண்ணியமுமிக்க நாடக குழுவினராக திகழ்ந்தனர். சினிமாவிலும், நாடகத்திலும் கதை திரைக்கதை மிகவும் முக்கியம். படித்தவர்களும் பட்டதாரிகளும் பல துறை வல்லுனர்களும் YGP நாடக குழுவில் இருந்தனர். சிவாஜி இருந்தால் மகிழ்ந்திருப்பார்; சிவாஜி கணேசன் உயிரோடு இருந்திருந்தால் இந்த நாடகத்தைக் கண்டு மகிழ்ந்திருப்பார். சிவாஜி கணேசனின் "வியட்நாம் வீடு" போன்று இருந்தது. ஒய்.ஜி மகேந்திரனுக்கு சினிமாவைவிட நாடகம்தான் முக்கியம். தினமும் குடிப்பேன், சிகரெட் பிடிப்பேன்! எனது மனைவியை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் என்கிற முறையில், ஒய்.ஜி மகேந்திரனுக்கு நான் கடன்பட்டுள்ளேன். நடத்துனராக இருக்கும்போது தினமும் குடிப்பேன், சிகரெட் குடிப்பேன், நாள்தோறும் இரண்டு முறை மாமிசம் சாப்பிடுவேன். சைவப் பிரியர்களை பார்த்தால் அப்போது எனக்கு பாவமாக தெரியும். இதை அளவுக்கு மீறி அதிகம் எடுத்தவர்கள் 60 வயதுக்கு மேல் வாழ்ந்தது இல்லை. இதற்கு நிறைய எடுத்துக்காட்டுகள் உள்ளன. என்னை அன்பால் மாற்றியவர் என் மனைவி! என்னை அன்பால் மாற்றியவர் என் மனைவி லதா. என்னை ஒழுக்கமிக்கவனாக மாற்றி, என்னை வாழவைத்தவர். ஒய்.ஜி மகேந்திரனுக்கு எனது நன்றி. மது, புகைபிடிக்கும் பழக்கம், அசைவ பழக்கம் போன்றவை ஒரு காலத்தில் என்னோடு ஒட்டி இருந்தது. அதை மாற்றியவர் எனது மனைவி தான்” என்று பேசினார். ரஜினிகாந்திற்கு முன்பு மேடையில் பேசிய ஒய்.ஜி மகேந்திரன், ஒரே ஒரு மக்கள் திலகம், ஒரே ஒரு நடிகர் திலகம், ஒரே ஒரு மெல்லிசை மன்னர், ஒரே ஒரு கவிஞர் கண்ணதாசன் ஒரே ஒரு ரஜினிகாந்த்தான் சூப்பர் ஸ்டாராக இருக்க முடியும் என்று ரஜினிக்கு புகழாரம் சூட்டினார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் புதிதாய் தொடங்கியுள்ள SARP PRODUCTIONS மற்றும் அதன் மூலம் தயாரிக்கப்பட உள்ள "சாருகேசி" திரைப்படம் குறித்த அறிவிப்பு விழாவானது சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு திரைப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். ரஜினிகாந்த் பேசியதன் முழுவிபரம்;- அன்று என்னை உள்ளேயே அனுமதிக்கவில்லை; அறிவிப்பை அடுத்து பேசிய ரஜினிகாந்த், “ரகசியம் பரம ரகசியம் நாடகத்தை பார்க்க 45 வருடத்திற்கு முன்பு உள்ளே சென்றபோது, என்னை அனுமதிக்கவில்லை. ஆனால் சாருகேசி நாடகத்தின் 50வது விழாவில் தலைமை விருந்தினராக வந்திருக்கிறேன் என்றால் எல்லாம் அந்த காலத்தின் செயல். ஜெயலலிதா, நாகேஷ், சோ, விசு போன்றவர்கள் YGP நாடகக்குழுவின் இருந்து வந்தவர்கள். பாதுகாப்பும் கண்ணியமுமிக்க நாடக குழுவினராக திகழ்ந்தனர். சினிமாவிலும், நாடகத்திலும் கதை திரைக்கதை மிகவும் முக்கியம். படித்தவர்களும் பட்டதாரிகளும் பல துறை வல்லுனர்களும் YGP நாடக குழுவில் இருந்தனர். சிவாஜி இருந்தால் மகிழ்ந்திருப்பார்; சிவாஜி கணேசன் உயிரோடு இருந்திருந்தால் இந்த நாடகத்தைக் க...