பிரசாரத்தின் போது திடீரென நிலை தடுமாறிய நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா அரசியல் ரீதியாக பிரசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, அவர் சென்றுக்கொண்டிருந்த வாகனம், திடீரென கிளம்பியதில் அவர் சற்றே நிலை தடுமாறியுள்ளார். நடிகர் பாலகிருஷ்ணா, தெலுங்கு திரைப்பட நடிகர் மட்டுமன்றி ஆந்திரபிரதேச சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் நேற்று தன்னுடைய சொந்த தொகுதியான இந்துபூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். வாகனத்தில் இருந்தபடி தன் தொண்டர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார் பாலகிருஷ்ணா. அப்போது திடீரென ஓட்டுநர் அந்த பிரச்சார வாகனத்தை கியரை அழுத்தவே, சட்டென வண்டி வேகமாக நகர்ந்தது. அச்சமயத்தில் ரசிகர்களை நோக்கி கைகளை அசைத்துக்கொண்டிருந்த பாலகிருஷ்ணா, எதிர்பாராவிதமாக நிலை தடுமாறினார். அவர் சென்றுகொண்டிருந்தது பிரசார வாகனம் என்பதாலும், வாகனத்தின் உள்ளே தான் அவர் நின்றுகொண்டிருந்தார் என்பதாலும் நல்வாய்ப்பாக அவரை சுற்றி பலர் இருந்தனர். அவர்கள் சுதாரித்துக்கொண்டு பாலகிருஷ்ணா விழாவில் பிடித்துக்கொண்டனர். இதனால் ஏற்பட இருந்த அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. காயங்கள் ஏதும் இன்றி அவரும் தப்பினார். இருப்பினும் சற்று நிலை தடுமாறியதில் அவர் சிரமப்பட்டார். இதையடுத்து சிறிது ஓய்வெடுத்துவிட்டு, பின் மீண்டும் தன்னுடைய சுற்றுப்பயணத்தை தொடர்ந்தார் பாலகிருஷ்ணா. தொடர்ந்து இன்றும் தெலுங்கு தேசிய கட்சி சார்பாக நடந்த நிகழ்ச்சியில் அவர் ஆரோக்கியமாக கலந்துகொண்டார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா அரசியல் ரீதியாக பிரசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, அவர் சென்றுக்கொண்டிருந்த வாகனம், திடீரென கிளம்பியதில் அவர் சற்றே நிலை தடுமாறியுள்ளார்.
நடிகர் பாலகிருஷ்ணா, தெலுங்கு திரைப்பட நடிகர் மட்டுமன்றி ஆந்திரபிரதேச சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் நேற்று தன்னுடைய சொந்த தொகுதியான இந்துபூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். வாகனத்தில் இருந்தபடி தன் தொண்டர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார் பாலகிருஷ்ணா. அப்போது திடீரென ஓட்டுநர் அந்த பிரச்சார வாகனத்தை கியரை அழுத்தவே, சட்டென வண்டி வேகமாக நகர்ந்தது. அச்சமயத்தில் ரசிகர்களை நோக்கி கைகளை அசைத்துக்கொண்டிருந்த பாலகிருஷ்ணா, எதிர்பாராவிதமாக நிலை தடுமாறினார்.

அவர் சென்றுகொண்டிருந்தது பிரசார வாகனம் என்பதாலும், வாகனத்தின் உள்ளே தான் அவர் நின்றுகொண்டிருந்தார் என்பதாலும் நல்வாய்ப்பாக அவரை சுற்றி பலர் இருந்தனர். அவர்கள் சுதாரித்துக்கொண்டு பாலகிருஷ்ணா விழாவில் பிடித்துக்கொண்டனர். இதனால் ஏற்பட இருந்த அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. காயங்கள் ஏதும் இன்றி அவரும் தப்பினார். இருப்பினும் சற்று நிலை தடுமாறியதில் அவர் சிரமப்பட்டார். இதையடுத்து சிறிது ஓய்வெடுத்துவிட்டு, பின் மீண்டும் தன்னுடைய சுற்றுப்பயணத்தை தொடர்ந்தார் பாலகிருஷ்ணா. தொடர்ந்து இன்றும் தெலுங்கு தேசிய கட்சி சார்பாக நடந்த நிகழ்ச்சியில் அவர் ஆரோக்கியமாக கலந்துகொண்டார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/P2lex8C
via IFTTT
Comments
Post a Comment