'பேரன்பு' படத்துக்குப் பின், இயக்குநர் ராம், நடிகர் நிவின் பாலியுடன் இணைந்து இருமொழி படமொன்றை இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. விரைவில் படக்குழுவினர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ராம் இயக்கத்தில், சில ஆண்டுகளுக்கு முன் மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டி, நடிகை அஞ்சலி, சிறுமி, சாதனா ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருந்த படம் 'பேரன்பு'. இந்தப் படத்துக்குப் பின், நடிப்பில் கவனம் செலுத்திய ராம், படங்கள் இயக்காமல் இருந்தார். அப்படி, கடைசியாக மிஷ்கின் இயக்கிய 'சைக்கோ' படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்திருந்தார் அவர். ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்பட்ட 'பேரன்பு' படத்தில், கேரளாவை சேர்ந்த திருநங்கை அஞ்சலி அமீர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது ராம், மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கிறார். தனது பட வேலைகளை தொடங்கிவிட்ட ராம், 'பேரன்பை' போலவே, தனது இந்தப் படத்திலும், மலையாள ஹீரோவுடன்தான் இணைய இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அந்தவகையில், இந்த முறை நடிகர் நிவின் பாலியை வை...