“விதவையான கேமரா கேவிக்கேவி அழுகிறது கே.வி.ஆனந்த்” - வைரமுத்து புகழஞ்சலி கே.வி.ஆனந்த் மறைவுக்கு கவிதை மூலம் புகழஞ்சலி செலுத்தியுள்ளார் கவிஞர் வைரமுத்து. பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் இன்று அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கே.வி.ஆனந்த் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து கவிதை மூலம் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். அதில், ''வருந்துகிறேன் நண்பா! திரையில் ஒளிகொண்டு சிலை செதுக்கினாய்! வாஜி வாஜி பாடலை ராஜ கவிதையாய் வடித்தெடுத்தாய்! என் எத்தனையோ பாடல்களை ரத்தினமாய் மாற்றினாய்! இதோ உனக்கான இரங்கல்பாட்டை எங்ஙனம் படம் செய்வாய்? விதவையான கேமரா கேவிக்கேவி அழுகிறது கே.வி.ஆனந்த்! ஒளியாய் வாழ்வாய் இனி நீ.'' இவ்வாறு வைரமுத்து புகழஞ்சலி செலுத்தியுள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

கே.வி.ஆனந்த் மறைவுக்கு கவிதை மூலம் புகழஞ்சலி செலுத்தியுள்ளார் கவிஞர் வைரமுத்து.
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் இன்று அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கே.வி.ஆனந்த் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து கவிதை மூலம் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். அதில்,
''வருந்துகிறேன் நண்பா!
திரையில் ஒளிகொண்டு சிலை செதுக்கினாய்!
வாஜி வாஜி பாடலை ராஜ கவிதையாய் வடித்தெடுத்தாய்!
என் எத்தனையோ பாடல்களை ரத்தினமாய் மாற்றினாய்!
இதோ உனக்கான இரங்கல்பாட்டை எங்ஙனம் படம் செய்வாய்?
விதவையான கேமரா கேவிக்கேவி அழுகிறது கே.வி.ஆனந்த்!
ஒளியாய் வாழ்வாய் இனி நீ.''
இவ்வாறு வைரமுத்து புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3aQdqd3
via IFTTT
Comments
Post a Comment