மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்திற்கு கொரோனா உறுதி; நேரடியாக தகனம் செய்ய ஏற்பாடு மறைந்த பிரபல திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்திற்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. பிரபல திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆனந்த் இன்று காலை 3 மணிக்கு காலமானார். இந்தநிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்ததும், அதற்காக அவர் கடந்த 20 ஆம் தேதி அவர் தடுப்பூசி செலுத்திக்கொண்டதும் தெரியவந்துள்ளது. மேலும் கே.வி.ஆனந்தின் மனைவிக்கும் அவரது மகள்களான இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதும், அதனைத்தொடர்ந்து அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்ட நிலையில் குணமடைந்ததும் தெரியவந்துள்ளது. ஆனால் அதனைத்தொடர்ந்து ராமாபுரம் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கே.வி.ஆனந்த் காலமாகியுள்ளார். அவருக்கு கொரோனா தொற்று இருந்ததால் அவரது உடல் நேரடியாக பெசண்ட் நகர் மின்மயானத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. முன்னதாக, அயன், மாற்றான், கவண், காப்பான், கோ, அநேகன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கிய 54 வயதான கே.வி. ஆனந்த், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதிகாலை 3 மணிக்கு காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

மறைந்த பிரபல திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்திற்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
பிரபல திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆனந்த் இன்று காலை 3 மணிக்கு காலமானார். இந்தநிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்ததும், அதற்காக அவர் கடந்த 20 ஆம் தேதி அவர் தடுப்பூசி செலுத்திக்கொண்டதும் தெரியவந்துள்ளது.

மேலும் கே.வி.ஆனந்தின் மனைவிக்கும் அவரது மகள்களான இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதும், அதனைத்தொடர்ந்து அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொண்ட நிலையில் குணமடைந்ததும் தெரியவந்துள்ளது. ஆனால் அதனைத்தொடர்ந்து ராமாபுரம் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கே.வி.ஆனந்த் காலமாகியுள்ளார். அவருக்கு கொரோனா தொற்று இருந்ததால் அவரது உடல் நேரடியாக பெசண்ட் நகர் மின்மயானத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

முன்னதாக, அயன், மாற்றான், கவண், காப்பான், கோ, அநேகன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கிய 54 வயதான கே.வி. ஆனந்த், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதிகாலை 3 மணிக்கு காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2SaDCZr
via IFTTT
Comments
Post a Comment