”கே.வி. ஆனந்த் சார் மிகவும் சீக்கிரமே சென்று விட்டீர்கள்” - சோகத்தில் தமிழ் திரையுலகம்! கே.வி.ஆனந்த் உயிரிழந்ததை தொடர்ந்து தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் தங்களது இரங்கல்களை தங்களது சமூகவலைதள பக்கங்கள் மூலமாக தெரிவித்துள்ளனர்.  அயன், மாற்றான், கவண், காப்பான், கோ, அநேகன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கிய 54 வயதான கே.வி. ஆனந்த், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது திடீர் மறைவு தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில் தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் தங்களது இரங்கல்களை தங்களது சமூகவலைதள பக்கங்கள் மூலம் தெரிவித்துள்ளனர்.  நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது, “ ஒரு நேர்மையான நல்ல மனிதர் இறந்துவிட்டார். அவர் அன்பையும் மகிழ்ச்சியையும் தனது வாழ்நாள் முழுவதும் கொண்டிருந்த மனிதர். கே.வி.ஆனந்த் சார் மிக சீக்கிரமே சென்று விட்டீர்கள்.. மிக சீக்கிரமே.. அவரது குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். கே.வி. ஆனந்தின் ஆத்மா சாந்தியடையட்டும்” என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.  A gentle kind honest man has passed away. A very sweet man full of life love and joy. K.v anand sir .. gone too soon sir. Too soon. My condolences to his family. Rest in peace k.v sir. — Dhanush (@dhanushkraja) April 30, 2021 ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது, “ இந்தச் செய்தி என்னை அதிர்ச்சியடைய வைத்து விட்டது. இது எனது இதயத்திற்கு மிகவும் வலிதரக்கூடிய ஒன்றாக அமைந்துவிட்டது. நான் எனது நெருங்கிய தோழனை இழந்துவிட்டேன். அவர் ஒரு அற்புதமான ஒளிப்பதிவாளர், மிகச் சிறந்த இயக்குநர்.  இந்த இழப்பை எதனாலும் ஈடு செய்ய இயலாது. எனது நண்பனை நான் மிஸ் செய்கிறேன். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.  Absolutely shocked. My heart feels so heavy... painful.Just can’t digest..I lost a very dear friend K.V a wonderful cinematographer, and a brilliant director.This loss can never be compensated. I will miss you my dear friend.R.I.P?My deepest condolences to his family and friends — Shankar Shanmugham (@shankarshanmugh) April 30, 2021 ஆர்யா கூறும் போது, “ இந்தச் செய்தியை என்னால் நம்ப முடியவில்லை. எனது இதயம் நொறுங்கி விட்டது. இது நிச்சயம் உண்மையாக இருக்க கூடாது. நான் உங்களை மிஸ் செய்கிறேன். மிகவும் சீக்கிரமே சென்றுவிட்டீர்கள்” என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.  Unbelievable and shocking news. Heartbroken. I wish this is not true Will miss you sir. Gone too soon #RIPKVAnand @anavenkat — Arya (@arya_offl) April 30, 2021 பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் கூறும் போது, “ மிகவும் சீக்கிரமே எங்களை விட்டுச் சென்று விட்டாய். நீ எப்போதும் என்னில் ஒரு பகுதியாய் இருப்பாய் நண்பனே.. பிரியாவிடை..” என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.   #RIPKVAnand Left us too soon You will be always part of me my friend . Farewll. pic.twitter.com/8fgMlaYqz9 — pcsreeramISC (@pcsreeram) April 30, 2021 மேலும் பிரபலங்கள் மற்றும் பிரபல நிறுவனங்கள் செய்த ட்வீட்கள் Rest in peace my friend ! pic.twitter.com/NKf4dba40I — selvaraghavan (@selvaraghavan) April 30, 2021 Rest in peace my friend ! pic.twitter.com/NKf4dba40I — selvaraghavan (@selvaraghavan) April 30, 2021 Deepest condolences.... ?? Rest in Peace KV Anand sir... pic.twitter.com/MUohDakROZ — karthik subbaraj (@karthiksubbaraj) April 30, 2021 Rest in peace! @anavenkat sir#RIPKVAnand #KVAnand pic.twitter.com/BNcKoJd1Fg — Lyca Productions (@LycaProductions) April 30, 2021 We've lost a wonderful creator. #KVAnand sir may you rest in peace. My condolences to the family... pic.twitter.com/kx6re0jpv7 — Gautham Karthik (@Gautham_Karthik) April 30, 2021 Saddened to hear this news...we will miss you sir! Rest In Peace sir ?? pic.twitter.com/2T6iCEEbnL — Lokesh Kanagaraj (@Dir_Lokesh) April 30, 2021 #kvanand Sir, you were one of the most passionate & disciplined filmmaker’s I had the honour to work with. You launched me into Tamil Cinema & for that I will always be forever grateful. Thank you for everything sir. Cinema will not be the same without you. Rest in Peace sir ??♥️ pic.twitter.com/aR1yscsWuU — Amyra Dastur (@AmyraDastur93) April 30, 2021 Rest in peace K. V. Anand sir! You played a way more important role in my career than you will ever realise. Indian cinema will miss you forever! ? Heartbroken! ? pic.twitter.com/IbAOvflFfm — Prithviraj Sukumaran (@PrithviOfficial) April 30, 2021 Just woke up to this sad news that Dir KV Anand garu is no more. Wonderful cameraman , brilliant director and very nice gentleman . Sir you will always be remember & missed . Condolences to the near , dear & family . Rest in Peace Sir . #KVAnand pic.twitter.com/V6ombIxZcy — Allu Arjun (@alluarjun) April 30, 2021 Shocked and shattered to know the demise of KV Anand Sir.. No words to describe what I feel.. May his soul Rest In Peace.. Prayers to his family Gone too soon! — Jiiva (@JiivaOfficial) April 30, 2021 My deepest condolences...Rest in peace sir ?????? pic.twitter.com/EUjILxuDPB — pa.ranjith (@beemji) April 30, 2021   Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

கே.வி.ஆனந்த் உயிரிழந்ததை தொடர்ந்து தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் தங்களது இரங்கல்களை தங்களது சமூகவலைதள பக்கங்கள் மூலமாக தெரிவித்துள்ளனர். 

அயன், மாற்றான், கவண், காப்பான், கோ, அநேகன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கிய 54 வயதான கே.வி. ஆனந்த், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது திடீர் மறைவு தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில் தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் தங்களது இரங்கல்களை தங்களது சமூகவலைதள பக்கங்கள் மூலம் தெரிவித்துள்ளனர். 

நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது, “ ஒரு நேர்மையான நல்ல மனிதர் இறந்துவிட்டார். அவர் அன்பையும் மகிழ்ச்சியையும் தனது வாழ்நாள் முழுவதும் கொண்டிருந்த மனிதர். கே.வி.ஆனந்த் சார் மிக சீக்கிரமே சென்று விட்டீர்கள்.. மிக சீக்கிரமே.. அவரது குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். கே.வி. ஆனந்தின் ஆத்மா சாந்தியடையட்டும்” என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். 

ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது, “ இந்தச் செய்தி என்னை அதிர்ச்சியடைய வைத்து விட்டது. இது எனது இதயத்திற்கு மிகவும் வலிதரக்கூடிய ஒன்றாக அமைந்துவிட்டது. நான் எனது நெருங்கிய தோழனை இழந்துவிட்டேன். அவர் ஒரு அற்புதமான ஒளிப்பதிவாளர், மிகச் சிறந்த இயக்குநர்.  இந்த இழப்பை எதனாலும் ஈடு செய்ய இயலாது. எனது நண்பனை நான் மிஸ் செய்கிறேன். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். 

ஆர்யா கூறும் போது, “ இந்தச் செய்தியை என்னால் நம்ப முடியவில்லை. எனது இதயம் நொறுங்கி விட்டது. இது நிச்சயம் உண்மையாக இருக்க கூடாது. நான் உங்களை மிஸ் செய்கிறேன். மிகவும் சீக்கிரமே சென்றுவிட்டீர்கள்” என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். 

பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் கூறும் போது, “ மிகவும் சீக்கிரமே எங்களை விட்டுச் சென்று விட்டாய். நீ எப்போதும் என்னில் ஒரு பகுதியாய் இருப்பாய் நண்பனே.. பிரியாவிடை..” என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.  

மேலும் பிரபலங்கள் மற்றும் பிரபல நிறுவனங்கள் செய்த ட்வீட்கள்

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3sZIltS
via IFTTT

Comments

Popular posts from this blog

‘யோகி பாபுக்காக ஒரு கதை எடுக்க வேண்டும் என்று ஆசை’ -‘பொம்மை நாயகி’ விழாவில் மாரி செல்வராஜ் பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகிபாபு நடித்துள்ள ‘பொம்மை நாயகி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் இன்று நடைபெற்றது. பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘பொம்மை நாயகி’. சிறுமி ஸ்ரீமதி, யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஷான். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள படத்தின் பாடல்களை ‘தெருக்குரல்’ அறிவு எழுதியிருக்கிறார். இந்த விழாவில் அறிமுக இயக்குநர் ஷான் பேசுகையில், “இந்தக் கதை எழுதி முடித்ததும் யாரிடமும் சொல்ல வில்லை. நீண்ட நாட்களாக இந்தக் கதையை வைத்து கொண்டே இருந்தேன். படம் பண்ணினால் நீளம் புரொடக்ஷனில் தான் பண்ண வேண்டும் என்று தீர்க்கமாக இருந்தேன். கதையைப் படித்து கதையில் இருந்த நம்பிக்கையால் இந்தப் படம் எடுக்க முடிந்தது. ‘பரியேறும் பெருமாள்’ படம் பார்த்து யோகி பாபு நடித்தால் எப்படி இருக்கும் என்ற நினைத்தேன். எதார்த்தமான மனிதன் சந்திக்கும் பிரச்சினைகளை எதிர்கொள்ளுவது தான் இந்த படம். எல்லோரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் இது” என்று தெரிவித்தார். இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், “இயக்குநர் இந்த கதையை தான் எடுப்பேன் என்று உறுதியாக இருந்து எடுத்து முடித்தவர். யார் இந்தக் கதையில் நடித்தால் சரி வரும் என்று தேர்வு செய்து பொருத்தமாக எடுத்துள்ளார். நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம் முக்கியமான நபர்கள் வெளி வந்துள்ளனர். ‘வாழை’ படம் முதன் முதலில் நான் எழுதிய கதை. அதை எப்போது எடுப்பேன் என்று எதிர்பார்த்து கொண்டு இருந்தேன். தற்போது அந்தப் படத்தை முடித்து விட்டேன். அடுத்து நான் நீலம் புரொடக்ஷனில் தான் படம் பண்ண போகிறேன். பிற்போக்குத்தனமான ஒரு படத்தை எடுக்க மாட்டேன் என்பது என் கொள்கை. நான் தப்பான படங்களை எடுக்க மாட்டேன். நிஜ கதைகளை உருவாக்கும் போதே இவர்கள் இந்த கதையை தயாரிப்பார்கள் என்ற நிச்சயம் உண்டானால் அது தான் தமிழ் சினிமாவின் வெற்றி. ‘பொம்மை நாயகி’ ஒரு பேரலையாய் அமையும். பெரிய இயக்குனர்கள் அனைவருக்கும் யோகி பாபுவிற்காக கதை எடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும், எனக்கும் அந்த ஆசை உள்ளது” என்று கூறினார். நடிகர் ஜி.எம். குமார் பேசுகையில், “இங்கே நான் வந்ததற்கு காரணம் கதை தான். யோகி பாபு உடன் என்னோட மூணாவது படம். ‘கர்ணன்’ படத்தில் மாரியிடம் யோகி பாபுவால் திட்டு வாங்கினேன். இயக்குநர் பா. ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’ மற்றும் ‘சார்பட்டா பரம்பரை’ படங்களை பார்த்து அசந்து போனேன்” என்று தெரிவித்தார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

நடிகர் மயில்சாமி உடலுக்கு பிரேத பரிசோதனை இல்லை... ஏன்? நடிகர் மயில்சாமிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். சென்னை சாலிகிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தவர் தமிழ் திரைப்பட காமெடி நடிகர் மயில்சாமி. தமிழ் திரைப்படங்களில் சிறந்த காமெடி நடிகராக வலம் வந்த மயில்சாமிக்கு இன்று காலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை அவரது உறவினர்கள் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மயில்சாமி வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மயில்சாமி இறந்த செய்தி கேட்டு அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த போரூர் போலீசார் உயிரிழந்த மயில்சாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மயில்சாமி உயிரிழப்புக்கு காரணம் மாரடைப்பா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரித்து வந்தனர். பின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் மயில்சாமி உடல் பிரேத பரிசோதனை செய்யவில்லை என சொல்லப்பட்டுள்ளது. அதன் பின்னணியாக, அவருக்கு மாரடைப்பு உறுதியானதை மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவர் ஏற்கனவே இதயம் சம்பந்தமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனது உறுதியானது. இறப்புக்கான காரணம் உறுதியானதால், அவரது உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை என்றும் இன்னும் சிறிது நேரத்தில் அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளன. நடிகர் மயில்சாமியின் உயிரிழப்பு தமிழ் திரை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

விஜய்.. கமல்ஹாசன் அடுத்தது?: முன்னணி நடிகர்களின் படங்களைக் கைப்பற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தினை ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. நடிகர் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ படங்களைத் தயாரிப்பதோடு முன்னணி நடிகர்களின் படங்களையும் கைப்பற்றி வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்’, பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’, ராஜமெளலியின் ( ‘ஆர்ஆர்ஆர்’ மூன்று இடங்களில் மட்டும்) உள்ளிட்டப் படங்களை கைப்பற்றி வெளியிட்டது. வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகும் விஜய்யின் ‘பீஸ்ட்’, ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படங்களின் தமிழக ரெட் ஜெயன்ட் மூவிஸ்தான் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் தமிழக உரிமையையும் கைப்பற்றியுள்ளதகாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவிருக்கிறார்கள். ‘விக்ரம்’ வரும் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகிறது. அன்றுதான் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்துவரும் ‘மாமன்னன்’ படத்தினை ரெட் ஜெயன்ட் தான் தயாரிக்கிறது. இதற்கு முன்னதாக, தமிழ் சினிமாவில் ஹாட்ரிக் வெற்றி கொடுத்த இயக்குநர்களில் லோகேஷ் கனகராஜும் ஒருவர். அவரின் ’மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் அடித்து வசூலைக் குவித்ததால் இயக்குநர் நான்காவதாக கமல்ஹாசனை இயக்கும் ‘விக்ரம்’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. கோரோனா சூழலிலும் மக்களை தியேட்டர் நோக்கி வரவைத்தது ‘மாஸ்டர்’. அதன் வெற்றிக்குப்பிறகு விஜய் சேதுபதி - அனிருத்துடன் மீண்டும் ’விக்ரம்’மில் கைக்கோர்த்துள்ளார் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் இப்படத்தில் ஃபகத் ஃபாசிலும் நடிப்பதால் மலையாள ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். காளிதாஸ் ஜெயராம், நரேன், ’பிக்பாஸ்’ ஷிவானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM