‘தலைவி’ படத்தின் முதல் பாடல் நாளை மறுநாள் வெளியீடு! ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’ படத்தின் முதல் பாடல் நாளை மறுநாள் வெளியாகிறது. மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’ படத்தை ஏ.எல் விஜய் இயக்க நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். எம்.ஜி. ஆர். வேடத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடித்திருக்கிறார். தமிழ், இந்தி, தெலுங்கு என மும்மொழிகளில் ஏப்ரல் 23 ஆம் தேதி படம் வெளியாகிறது. கங்கனா ரனாவத்தின் பிறந்தநாளையொட்டி ‘தலைவி’ படத்தின் ட்ரைலர் மார்ச் 23 ஆம் தேதி வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில், தலைவி படத்தின் முதல் பாடலான ‘மழை மழை’ பாடல் நாளை மறுநாள் ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியாகிறது. பாடலின் போஸ்டரும் புகைப்படங்களிலும் கலர்ஃபுல்லாக கங்கனா கவனம் ஈர்ப்பதால், எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’ படத்தின் முதல் பாடல் நாளை மறுநாள் வெளியாகிறது. மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’ படத்தை ஏ.எல் விஜய் இயக்க நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். எம்.ஜி. ஆர். வேடத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடித்திருக்கிறார். தமிழ், இந்தி, தெலுங்கு என மும்மொழிகளில் ஏப்ரல் 23 ஆம் தேதி படம் வெளியாகிறது. கங்கனா ரனாவத்தின் பிறந்தநாளையொட்டி ‘தலைவி’ படத்தின் ட்ரைலர் மார்ச் 23 ஆம் தேதி வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில், தலைவி படத்தின் முதல் பாடலான ‘மழை மழை’ பாடல் நாளை மறுநாள் ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியாகிறது. பாடலின் போஸ்டரும் புகைப்படங்களிலும் கலர்ஃபுல்லாக கங்கனா கவனம் ஈர்ப்பதால், எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3wg9uvy via IFTTT