இந்தியில் வெளியாகும் ’சூரரைப் போற்று’ - ரிலீஸ் தேதி, டைட்டில் அறிவிப்பு சூர்யா நடிப்பில் பாராட்டுக்களை குவித்த ‘சூரரைப் போற்று’ படம் இந்தியில் ‘உடான்’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில், தீபாவளியையொட்டி வெளியான ’சூரரைப் போற்று’ சூப்பர் ஹிட் அடித்தது. ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் இருந்து சிலப் பகுதிகளை எடுத்துக்கொண்டு தமிழ் மொழியில் மட்டுமல்லாமல், கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்ட்டு அங்கும் கொண்டாடப்பட்டது. சினிமாத்துறையினர் மட்டுமல்ல ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட அரசு துறையினர், தொழில்துறையினர் என அனைத்து தரப்பினரும் பாராட்டித் தள்ளினார்கள். அபர்ணா பாலமுரளியின் நடிப்பும் ஜி.வி பிரகாஷின் இசையும் மேலும் படத்திற்கு பலம் சேர்த்தது. இதனால், ஆஸ்காருக்கு போட்டியிட்ட படங்களின் பட்டியலிலும் சூரரைப் போற்று இடம் பிடித்ததது. சூர்யா தயாரித்த இப்படம் அமேசான் பிரைமில் படம் வெளியான நிலையில், தற்போது, இந்தியில் ‘உடான்’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு ’சூரரைப் போற்று’ வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது. இதனால், சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

சூர்யா நடிப்பில் பாராட்டுக்களை குவித்த ‘சூரரைப் போற்று’ படம் இந்தியில் ‘உடான்’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில், தீபாவளியையொட்டி வெளியான ’சூரரைப் போற்று’ சூப்பர் ஹிட் அடித்தது. ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் இருந்து சிலப் பகுதிகளை எடுத்துக்கொண்டு தமிழ் மொழியில் மட்டுமல்லாமல், கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்ட்டு அங்கும் கொண்டாடப்பட்டது. சினிமாத்துறையினர் மட்டுமல்ல ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட அரசு துறையினர், தொழில்துறையினர் என அனைத்து தரப்பினரும் பாராட்டித் தள்ளினார்கள்.

அபர்ணா பாலமுரளியின் நடிப்பும் ஜி.வி பிரகாஷின் இசையும் மேலும் படத்திற்கு பலம் சேர்த்தது. இதனால், ஆஸ்காருக்கு போட்டியிட்ட படங்களின் பட்டியலிலும் சூரரைப் போற்று இடம் பிடித்ததது.

சூர்யா தயாரித்த இப்படம் அமேசான் பிரைமில் படம் வெளியான நிலையில், தற்போது, இந்தியில் ‘உடான்’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு ’சூரரைப் போற்று’ வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது. இதனால், சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3rC49Lr
via IFTTT
Comments
Post a Comment