‘உட்றாதீங்க எப்போவ்’; தீ குரலில் கவனம் ஈர்க்கும் ‘கர்ணன்’ படத்தின் நான்காம் பாடல்! தனுஷின் ‘கர்ணன்’ படத்தின் நான்காவது பாடலான ’உட்றாதீங்க எப்போவ்’ வெளியாகி இருக்கிறது. ‘கர்ணன்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அண்மையில் படத்தில் இருந்து முதல் பாடலாக ‘கண்டா வரச்சொல்லுங்க.. கர்ணனை கையோட கூட்டி வாருங்க’ என்ற பாடல் வெளியாகி வைரல் ஹிட் அடித்து யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் வந்தது. அதனைத்தொடர்ந்து, வெளியானது இரண்டாவது பாடலான ‘மஞ்சனத்தி புராணம்’. தமிழ் சினிமாவில் இழவு வீட்டு பாடல்கள் எத்தனையோ இடம்பெற்றிருக்கின்றன. தர்மதுரை படத்தில் மக்க களங்குதைய்யா, மதயானை கூட்டம் படத்தில் உன்னை வணங்காத நாளில்லை என எல்லா பாடல்களுமே வீட்டில் மூத்தவர் யாரேனும் ஒருவர் இறந்திருப்பார் அவரைப்பற்றி இடம்பெற்ற பாடலாகவே அமைந்தது. ஆனால், மஞ்சனத்தி பாடல் என்பது இறந்த மனைவி மீதான தன் காதலை, பிரிவின் சோகத்தை கணவனே பாடுவது புதிதான ஒன்றுதான். இதனால் பாரட்டுகளை குவித்தது. மூன்றாம் பாடலான ‘திரெளபதையின் முத்தம்’ வெளியாகி வரவேற்பை பெற்றது. மூன்று பாடல்களும் வைரல் ஹிட் அடித்ததால் நான்காவது க்ளைமேக்ஸ் பாடலான கர்ணனின் யுத்தம் ’உட்றாதீங்க எப்போவ்’ பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே வெளியான மூன்று பாடல்களும் கிராமத்து பாணியில் வெளியான நிலையில், ’உட்றாதீங்க எப்போவ்’ அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு வெஸ்டர்ன் ஸ்டைலில் லைக்ஸ்களை குவித்து வருகிறது. இப்பாடலை சந்தோஷ் நாராயணனும் அவரது மகள் தீ பாடி இருக்கிறார்கள். பாடுவதோடு சிறப்பு தோற்றத்தில் வந்து நடனம் ஆடி இன்னும் ஈர்க்கிறார் தீ. பாடல் முழுக்க கைகளில் சங்கிலியும் கயிறுகளும் கட்டப்பட்ட நிலையில் காட்டப்படுவதால் அடிமைத்தன கைக்கட்டுகளை உடைத்தெறியும் வரை ’உட்றாதீங்க எப்போவ்’ என்பதை உணர்த்துகிறது கர்ணன் படத்தின் நான்காம் பாடல். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

தனுஷின் ‘கர்ணன்’ படத்தின் நான்காவது பாடலான ’உட்றாதீங்க எப்போவ்’ வெளியாகி இருக்கிறது.
‘கர்ணன்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அண்மையில் படத்தில் இருந்து முதல் பாடலாக ‘கண்டா வரச்சொல்லுங்க.. கர்ணனை கையோட கூட்டி வாருங்க’ என்ற பாடல் வெளியாகி வைரல் ஹிட் அடித்து யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் வந்தது. அதனைத்தொடர்ந்து, வெளியானது இரண்டாவது பாடலான ‘மஞ்சனத்தி புராணம்’. தமிழ் சினிமாவில் இழவு வீட்டு பாடல்கள் எத்தனையோ இடம்பெற்றிருக்கின்றன. தர்மதுரை படத்தில் மக்க களங்குதைய்யா, மதயானை கூட்டம் படத்தில் உன்னை வணங்காத நாளில்லை என எல்லா பாடல்களுமே வீட்டில் மூத்தவர் யாரேனும் ஒருவர் இறந்திருப்பார் அவரைப்பற்றி இடம்பெற்ற பாடலாகவே அமைந்தது. ஆனால், மஞ்சனத்தி பாடல் என்பது இறந்த மனைவி மீதான தன் காதலை, பிரிவின் சோகத்தை கணவனே பாடுவது புதிதான ஒன்றுதான். இதனால் பாரட்டுகளை குவித்தது. மூன்றாம் பாடலான ‘திரெளபதையின் முத்தம்’ வெளியாகி வரவேற்பை பெற்றது. மூன்று பாடல்களும் வைரல் ஹிட் அடித்ததால் நான்காவது க்ளைமேக்ஸ் பாடலான கர்ணனின் யுத்தம் ’உட்றாதீங்க எப்போவ்’ பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே வெளியான மூன்று பாடல்களும் கிராமத்து பாணியில் வெளியான நிலையில், ’உட்றாதீங்க எப்போவ்’ அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு வெஸ்டர்ன் ஸ்டைலில் லைக்ஸ்களை குவித்து வருகிறது. இப்பாடலை சந்தோஷ் நாராயணனும் அவரது மகள் தீ பாடி இருக்கிறார்கள். பாடுவதோடு சிறப்பு தோற்றத்தில் வந்து நடனம் ஆடி இன்னும் ஈர்க்கிறார் தீ. பாடல் முழுக்க கைகளில் சங்கிலியும் கயிறுகளும் கட்டப்பட்ட நிலையில் காட்டப்படுவதால் அடிமைத்தன கைக்கட்டுகளை உடைத்தெறியும் வரை ’உட்றாதீங்க எப்போவ்’ என்பதை உணர்த்துகிறது கர்ணன் படத்தின் நான்காம் பாடல்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3sE0IVZ
via IFTTT
Comments
Post a Comment