`கொரோனா போன்ற தொற்றுகள் பரவ இதுதான் காரணம்!' - புதிய ஆய்வறிக்கை மனிதர்களுக்கு சொல்வது என்ன? கொரோனா பேரிடர்க்காலம் நீண்டுகொண்டே செல்கின்றது. இதுபோன்ற தொற்றுப் பரவல் அதிகரிப்பதற்கு அடிப்படைக் காரணமே காடழிப்பு, வேட்டை போன்ற நடவடிக்கைகள்தான் என்று சூழலியல் ஆர்வலர்களும் ஆய்வாளர்களும் தொடர்ந்து உரைத்துக்கொண்டேயிருக்க, சமீபத்தில் வெளியாகியுள்ள ஓர் ஆய்வறிக்கை அவர்களுடைய கூற்றை உண்மையென்று நிரூபித்திருக்கின்றது. காட்டுயிர்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே ஓர் அரணாகச் செயல்படுவது இயற்கையாகப் பரந்து வளர்ந்திருக்கும் காடுகள்தான். அத்தகைய சூழலியல் அரணை அழித்துவிட்டு, பணப் பயிர்களை வளர்ப்பது கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் தீவிரமடைந்துள்ளது. காடழிப்பு உலகளாவிய பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சார்ஸ், மெர்ஸ், நிபா போன்ற வைரஸ் தொற்றுகளின் பரவலுக்கு இதுபோன்ற நடவடிக்கைகளும் முக்கியப் பங்கு வகிப்பதாக, உயிரின அறிவியல் ஆய்விதழான Frontiers in Veterinary Science என்ற ஆய்விதழில் மார்ச் 24-ம் தேதி வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரை குறிப்பிடுகின்றது. 1990 முதல் 2016-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பரவிய டெங்கு போன்ற கொசுக்கள் மூலமாகப் பரவும் நோய்கள் மற்றும் காட்டு உயிரினங்களிட மிருந்து மனிதர்களுக்குப் பரவும் விலங்கியல் நோய்களுக்கு, காடழிப்பு நடவடிக்கைகளே முதன்மைக் காரணமாக இருப்பதாக இந்த ஆய்வு சுட்டிக் காட்டுகின்றது. தென் அமெரிக்காவில் காடழிப்பு நடவடிக்கைகளே, மலேரியா நோய்த் தாக்குதலைத் தொடங்கி வைத்தது. தென்கிழக்கு ஆசிய பகுதிகளிலும் அதேபோல் நிகழ்ந்த காடழிப்பு வேலைகளே A. dirus, A. minimus, A. balabacensis போன்ற மலேரியா நோயைப் பரப்பும் கொசுக்கள் மனிதர்களிடையே வருவதற்கு வழி உண்டாக்கிக் கொடுத்தது. வைரஸ், பாக்டீரியா, ஒட்டுண்ணி, பூஞ்சை போன்றவற்றால் ஏற்படும் நோய் எதுவாயிருப்பினும், அது ஓர் உயிரினத்திடமிருந்து மனிதர்களுக்குப் பரவினால், அதை விலங்கியல் நோய்கள் என்று குறிப்பிடுகின்றனர். கொரோனா தொற்றுப் பரவலும் அத்தகைய வழியில் நிகழ்ந்ததே என்பதால், அதுவும் விலங்கியல் நோயாகவே குறிப்பிடப்படுகின்றது. சரி, இப்போது இந்தத் தொற்று நோய்கள் மனிதர்களிடையே பரவுவதற்கும் காடுகள் அழிக்கப்படுவதற்கும் பணப் பயிர் தோட்டங்கள் அதிகரிப்பதற்கும் இடையே என்ன தொடர்பு? Megabat இதை ஓர் உதாரணத்தோடு புரிந்துகொள்ள முடியும். 1998-ம் ஆண்டின் இறுதியில், மலேசியாவின் போர்னியோ காட்டுப் பகுதியில் ஏற்பட்ட ஒரு காட்டுத்தீ, அங்கிருந்த பழந்தின்னி வௌவால்களை அருகிலிருக்கும் பழத்தோட்டங்களை நோக்கி இடம் பெயர வைத்தது. Megabats என்ற அந்தக் குறிப்பிட்ட பழந்தின்னி வௌவால் வகை, அப்படி இடம்பெயர்ந்து மனிதர்களால் உருவாக்கப்பட்ட செயற்கையான தோட்டங்களுக்குள் வந்தபோது, அதன்மீது ஒட்டிக் கொண்டிருந்த அந்த வைரஸும் கூடவே வந்தது. 1997-98 ஆண்டுகளில் வேகமெடுத்த காகிதக் கூழ் மர வளர்ப்பு, பழ மரங்கள் வளர்ப்பு போன்ற பல்வேறு தொழில்சார் பண மரத்தோட்டங்கள், அந்த வௌவால் இனத்தின் வாழ்விடத்துக்கு ஏற்கெனவே பெரும் கேடுகளை விளைவித்துக் கொண்டிருந்தன. இந்த ஆக்கிரமிப்புகள், அந்தக் காட்டுப் பகுதியிலிருந்த பழ மரங்களில் நடக்கும் பூ பூப்பது, பழம் காய்ப்பது போன்ற செயல்பாடுகளைப் பாதிக்கவே, அதனால், பழந்தின்னி வௌவால்களுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படத் தொடங்கியது. இதன் காரணமாக அவை, உணவு தேடி பழ மரத் தோட்டங்களுக்குள் அடிக்கடி வந்து செல்லத் தொடங்கின. இந்நிலையில், 1998-ம் ஆண்டு மீண்டும் அதேபோல் காட்டை அழித்து செயற்கையான மர வளர்ப்பில் ஈடுபடுவதற்கான வேலைகள் நடைபெற்றன. அதனால், தன் வாழ்விடத்தை இழந்த பழந்தின்னி வௌவால்கள் பழத் தோட்டங்களுக்கு வேறிடம் தேடிப் படையெடுத்தன. காட்டுத்தீ ஏற்கெனவே, பல்வேறு வழிகளில் உணவு தேடி மனிதர்களிடையே வந்துகொண்டிருக்கும் சூழலுக்கு வௌவால்கள் தள்ளப்பட்டிருந்தாலும்கூட, இந்தக் குறிப்பிட்ட செயல்பாடுதான், கால்நடைகளோடு வௌவால்களுக்கு தொடர்பு ஏற்படக் கிடைத்த முதல் வாய்ப்பாகச் சொல்லப்படுகிறது. அங்கு வந்த வௌவால்கள் சாப்பிட்டுவிட்டுப் போடும் பழங்களின் மிச்சத்தைச் சாப்பிட்ட வளர்ப்புப் பன்றிகளிடையே நிபா என்னும் கொடிய தொற்றுநோய் பரவியது. அதன் உடலில், அந்த வைரஸ் தொற்று பல்வேறு வளர்சிதை மாற்றங்களுக்கு உள்ளாகி, மனிதர்களைப் பாதிக்கக்கூடிய கொடிய நோயாக அப்பகுதி மக்களிடையே பரவியது. அதன்பின்னர், நிபா மனித சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கங்களும் பாதிப்புகளும் நாம் அனைவரும் அறிந்ததே. நிபா வைரஸைப் பொறுத்தவரை, இன்று வரையுமே பலரும் அது பரவியதற்கு வௌவால்களே காரணம் என்ற கூற்றைக் குற்றச்சாட்டாக முன் வைக்கின்றனர். ஆனால், உண்மையில் அங்கு நிகழ்ந்த லாப நோக்கிலான பண மரப் பயிரிடுதலே, அவற்றுக்கு வாழ்விட இழப்பிற்கும் உணவுப் பற்றாக்குறைக்கும் வழி வகுத்தது. அதன் விளைவாகவே, அவை மனிதத் தோட்டங்களுக்குள் ஊடுருவத் தொடங்கின. அப்படி உணவு தேடி வந்தபோது ஏற்பட்ட சிக்கல்தான் நிபா தொற்றுப் பரவல். ஒருவேளை, அவற்றுடைய வாழ்விடமான இயற்கையான காடுகள்மீது லாப நோக்கத்தோடு கை வைக்காமலே இருந்திருந்தால், அவற்றுடைய வாழ்விடமும் பாதிக்கப்பட்டிருக்காது, மனித சமூகத்தில் நிபா என்னும் கொடிய தொற்று நோயும் பரவுவதற்கான வாய்ப்புகளும் குறைந்திருக்கும் நிலப்பயன்பாட்டில் நிகழும் மாற்றங்கள் நிபா வைரஸ் ஓர் உதாரணம் மட்டுமே. நிபா பரவ எப்படி காடழிப்பு காரணமாக இருந்ததோ, கொரோனா பரவ காட்டுயிர் கடத்தல் மற்றும் வன விலங்குச் சந்தை எப்படிக் காரணமாக அமைந்ததோ அதேபோல, விலங்கியல் தொற்று நோய் ஒவ்வொன்றுக்கும் ஏதாவதொரு வழியில் மனிதத் தலையீடுகள் முதன்மைக் காரணமாக இருப்பதாக இந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. அதிலும், குறிப்பாக வெப்பமண்டலப் பகுதிகளில் நடக்கும் காடுகள் மீட்டுருவாக்கம் இத்தகைய தொற்றுப் பரவலுக்கு அதிகளவில் வழி வகுப்பதாக இந்த ஆய்வில் நிரூபிக்கப் பட்டுள்ளது. அதாவது, அழிக்கப்படும் இயற்கையான காடுகளுக்கு ஈடாக மீண்டும் புதியதாக ஒரு காட்டை உருவாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளின்போது, அதுவரை தொந்தரவு செய்யப்படாமலிருக்கும் பகுதிகளுக்குள் மனிதக் கால்தடம் பதிகின்றது. மேலும், காடுகள் மீட்டுருவாக்கம் என்பது அதிகளவில் நடப்பது என்னவோ புல்வெளிக் காடுகளில்தான். ஓரிடத்தில், அழிக்கப்படும் காட்டிற்கு ஈடாக, வேறோர் இடத்தில் புதிதாகக் காடு உருவாக்கப்படுகின்றது. ஆனால், அப்படிப்பட்ட வேலைகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்படுவது என்னவோ, புல்வெளிக் காடுகள்தான். Corona Vaccine மனித சமூகத்தின் பார்வையில், புல்வெளிக் காடுகள் என்பது பயன்பாடற்ற தரிசு நிலங்களே. அவற்றை, கட்டுமான வேலைகளுக்காகவோ, இதுபோன்ற காடு மீட்டுருவாக்கத்துக்காகவோ பயன்படுத்துகின்றனர். ஆனால், புல்வெளிக் காடுகளும் ஒரு தனித்துவமான சூழலியல் அமைப்பைக் கொண்டவை. புல்வெளிகள், திறந்தவெளிக் காடுகள், பாலை நிலங்கள் அழிக்கப்பட்டு அந்த நிலத்திற்கே தொடர்பில்லாத வகையில் மாற்றியமைக்கப்படும்போது, புதுப்புது விலங்கியல் நோய்கள் பரவக் காரணமாக அமைகிறது. இப்படி, இயற்கையான சூழலியல் அமைப்புகளை மனிதத் தலையீடுகள் குலைக்கும்போது, பல்வேறு தொற்றுநோய்கள் வெளியுலகத்தில் பரவுகின்றன. இதுபோன்ற உலகளவிலான ஆய்வு நடைபெறுவது இதுவே முதல்முறை. இந்த ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியர்கள், இதுபோன்ற தொற்றுப் பரவல்களுக்கு உதாரணமாக இத்தாலியில் பாதிப்பை உண்டாக்கிய என்செஃபாலிட்டிஸ் என்ற உண்ணிகளிலிருந்து தொடங்கிய நோய்ப்பரவலைக் குறிப்பிடுகின்றார்கள். அதேபோல், பனை எண்ணெய் உற்பத்திக்காக வளர்க்கப்படும் தோட்டங்கள், ரப்பர் தோட்டங்களைச் சுற்றி வாழும் மக்கள், டெங்கு, ஸிகா, சிக்கன்குன்யா, மஞ்சள் காமாலை போன்ற பல தொற்று நோய்களுக்கு ஆளாகின்றார்கள் என்பதை இந்த ஆய்வு முடிவு நிரூபித்துள்ளது. ஒற்றைப் பயிரிடுதல் முறை Also Read: `வௌவால்களே காரணம்; சீன ஆய்வகம் அல்ல!' - கொரோனா வைரஸ் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த WHO ஒற்றைப் பயிர் வளர்ப்பு முறையில், ஒரேயொரு வகையான தாவரத்தை வளர்ப்பதில் தீவிரமாக ஈடுபடும்போது, அது நடைபெறும் நிலத்தின் இயல்புநிலையைக் குலைக்கிறது. இதனால், அப்பகுதியின் பல்லுயிரிய வளம் பாதிக்கப்படுவதோடு, சூழலியல் சமநிலையும் சீர்குலைகிறது. 1990 முதல் 2016 வரையிலான நாடு வாரியான தரவுகளைச் சேகரித்து மூன்று கட்டமாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு, மனிதர்களிடையே பரவும் தொற்றுநோய்கள் அதிகரிப்பதற்கு மனிதத் தலையீடுகளால் நிகழும் சூழலியல் சீர்குலைவே காரணம் என்ற பன்னாட்டு ஆய்வாளர்களின் கூற்றை உறுதி செய்துள்ளது. மேலும், இந்த நிலை இப்படியே நீடித்தால், மற்ற உயிரினங்களின் வாழ்விடங்களில் தொடர்ந்து ஊடுருவிக் கொண்டும் அழித்துக்கொண்டுமிருக்கும் மனிதர்கள், தங்களுக்கெனப் பாதுகாப்பான வாழ்விடமின்றித் தவிக்க நேரிடும் என்ற எச்சரிக்கையையும் இந்த ஆய்வுமுடிவுகள் கொடுத்துள்ளன.

கொரோனா பேரிடர்க்காலம் நீண்டுகொண்டே செல்கின்றது. இதுபோன்ற தொற்றுப் பரவல் அதிகரிப்பதற்கு அடிப்படைக் காரணமே காடழிப்பு, வேட்டை போன்ற நடவடிக்கைகள்தான் என்று சூழலியல் ஆர்வலர்களும் ஆய்வாளர்களும் தொடர்ந்து உரைத்துக்கொண்டேயிருக்க, சமீபத்தில் வெளியாகியுள்ள ஓர் ஆய்வறிக்கை அவர்களுடைய கூற்றை உண்மையென்று நிரூபித்திருக்கின்றது.

காட்டுயிர்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே ஓர் அரணாகச் செயல்படுவது இயற்கையாகப் பரந்து வளர்ந்திருக்கும் காடுகள்தான். அத்தகைய சூழலியல் அரணை அழித்துவிட்டு, பணப் பயிர்களை வளர்ப்பது கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் தீவிரமடைந்துள்ளது.

காடழிப்பு

உலகளாவிய பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சார்ஸ், மெர்ஸ், நிபா போன்ற வைரஸ் தொற்றுகளின் பரவலுக்கு இதுபோன்ற நடவடிக்கைகளும் முக்கியப் பங்கு வகிப்பதாக, உயிரின அறிவியல் ஆய்விதழான Frontiers in Veterinary Science என்ற ஆய்விதழில் மார்ச் 24-ம் தேதி வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரை குறிப்பிடுகின்றது. 1990 முதல் 2016-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பரவிய டெங்கு போன்ற கொசுக்கள் மூலமாகப் பரவும் நோய்கள் மற்றும் காட்டு உயிரினங்களிட மிருந்து மனிதர்களுக்குப் பரவும் விலங்கியல் நோய்களுக்கு, காடழிப்பு நடவடிக்கைகளே முதன்மைக் காரணமாக இருப்பதாக இந்த ஆய்வு சுட்டிக் காட்டுகின்றது.

தென் அமெரிக்காவில் காடழிப்பு நடவடிக்கைகளே, மலேரியா நோய்த் தாக்குதலைத் தொடங்கி வைத்தது. தென்கிழக்கு ஆசிய பகுதிகளிலும் அதேபோல் நிகழ்ந்த காடழிப்பு வேலைகளே A. dirus, A. minimus, A. balabacensis போன்ற மலேரியா நோயைப் பரப்பும் கொசுக்கள் மனிதர்களிடையே வருவதற்கு வழி உண்டாக்கிக் கொடுத்தது.

வைரஸ், பாக்டீரியா, ஒட்டுண்ணி, பூஞ்சை போன்றவற்றால் ஏற்படும் நோய் எதுவாயிருப்பினும், அது ஓர் உயிரினத்திடமிருந்து மனிதர்களுக்குப் பரவினால், அதை விலங்கியல் நோய்கள் என்று குறிப்பிடுகின்றனர். கொரோனா தொற்றுப் பரவலும் அத்தகைய வழியில் நிகழ்ந்ததே என்பதால், அதுவும் விலங்கியல் நோயாகவே குறிப்பிடப்படுகின்றது. சரி, இப்போது இந்தத் தொற்று நோய்கள் மனிதர்களிடையே பரவுவதற்கும் காடுகள் அழிக்கப்படுவதற்கும் பணப் பயிர் தோட்டங்கள் அதிகரிப்பதற்கும் இடையே என்ன தொடர்பு?

Megabat

இதை ஓர் உதாரணத்தோடு புரிந்துகொள்ள முடியும். 1998-ம் ஆண்டின் இறுதியில், மலேசியாவின் போர்னியோ காட்டுப் பகுதியில் ஏற்பட்ட ஒரு காட்டுத்தீ, அங்கிருந்த பழந்தின்னி வௌவால்களை அருகிலிருக்கும் பழத்தோட்டங்களை நோக்கி இடம் பெயர வைத்தது. Megabats என்ற அந்தக் குறிப்பிட்ட பழந்தின்னி வௌவால் வகை, அப்படி இடம்பெயர்ந்து மனிதர்களால் உருவாக்கப்பட்ட செயற்கையான தோட்டங்களுக்குள் வந்தபோது, அதன்மீது ஒட்டிக் கொண்டிருந்த அந்த வைரஸும் கூடவே வந்தது. 1997-98 ஆண்டுகளில் வேகமெடுத்த காகிதக் கூழ் மர வளர்ப்பு, பழ மரங்கள் வளர்ப்பு போன்ற பல்வேறு தொழில்சார் பண மரத்தோட்டங்கள், அந்த வௌவால் இனத்தின் வாழ்விடத்துக்கு ஏற்கெனவே பெரும் கேடுகளை விளைவித்துக் கொண்டிருந்தன.

இந்த ஆக்கிரமிப்புகள், அந்தக் காட்டுப் பகுதியிலிருந்த பழ மரங்களில் நடக்கும் பூ பூப்பது, பழம் காய்ப்பது போன்ற செயல்பாடுகளைப் பாதிக்கவே, அதனால், பழந்தின்னி வௌவால்களுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படத் தொடங்கியது. இதன் காரணமாக அவை, உணவு தேடி பழ மரத் தோட்டங்களுக்குள் அடிக்கடி வந்து செல்லத் தொடங்கின. இந்நிலையில், 1998-ம் ஆண்டு மீண்டும் அதேபோல் காட்டை அழித்து செயற்கையான மர வளர்ப்பில் ஈடுபடுவதற்கான வேலைகள் நடைபெற்றன. அதனால், தன் வாழ்விடத்தை இழந்த பழந்தின்னி வௌவால்கள் பழத் தோட்டங்களுக்கு வேறிடம் தேடிப் படையெடுத்தன.

காட்டுத்தீ

ஏற்கெனவே, பல்வேறு வழிகளில் உணவு தேடி மனிதர்களிடையே வந்துகொண்டிருக்கும் சூழலுக்கு வௌவால்கள் தள்ளப்பட்டிருந்தாலும்கூட, இந்தக் குறிப்பிட்ட செயல்பாடுதான், கால்நடைகளோடு வௌவால்களுக்கு தொடர்பு ஏற்படக் கிடைத்த முதல் வாய்ப்பாகச் சொல்லப்படுகிறது.

அங்கு வந்த வௌவால்கள் சாப்பிட்டுவிட்டுப் போடும் பழங்களின் மிச்சத்தைச் சாப்பிட்ட வளர்ப்புப் பன்றிகளிடையே நிபா என்னும் கொடிய தொற்றுநோய் பரவியது. அதன் உடலில், அந்த வைரஸ் தொற்று பல்வேறு வளர்சிதை மாற்றங்களுக்கு உள்ளாகி, மனிதர்களைப் பாதிக்கக்கூடிய கொடிய நோயாக அப்பகுதி மக்களிடையே பரவியது. அதன்பின்னர், நிபா மனித சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கங்களும் பாதிப்புகளும் நாம் அனைவரும் அறிந்ததே.

நிபா வைரஸைப் பொறுத்தவரை, இன்று வரையுமே பலரும் அது பரவியதற்கு வௌவால்களே காரணம் என்ற கூற்றைக் குற்றச்சாட்டாக முன் வைக்கின்றனர். ஆனால், உண்மையில் அங்கு நிகழ்ந்த லாப நோக்கிலான பண மரப் பயிரிடுதலே, அவற்றுக்கு வாழ்விட இழப்பிற்கும் உணவுப் பற்றாக்குறைக்கும் வழி வகுத்தது. அதன் விளைவாகவே, அவை மனிதத் தோட்டங்களுக்குள் ஊடுருவத் தொடங்கின. அப்படி உணவு தேடி வந்தபோது ஏற்பட்ட சிக்கல்தான் நிபா தொற்றுப் பரவல். ஒருவேளை, அவற்றுடைய வாழ்விடமான இயற்கையான காடுகள்மீது லாப நோக்கத்தோடு கை வைக்காமலே இருந்திருந்தால், அவற்றுடைய வாழ்விடமும் பாதிக்கப்பட்டிருக்காது, மனித சமூகத்தில் நிபா என்னும் கொடிய தொற்று நோயும் பரவுவதற்கான வாய்ப்புகளும் குறைந்திருக்கும்

நிலப்பயன்பாட்டில் நிகழும் மாற்றங்கள்

நிபா வைரஸ் ஓர் உதாரணம் மட்டுமே. நிபா பரவ எப்படி காடழிப்பு காரணமாக இருந்ததோ, கொரோனா பரவ காட்டுயிர் கடத்தல் மற்றும் வன விலங்குச் சந்தை எப்படிக் காரணமாக அமைந்ததோ அதேபோல, விலங்கியல் தொற்று நோய் ஒவ்வொன்றுக்கும் ஏதாவதொரு வழியில் மனிதத் தலையீடுகள் முதன்மைக் காரணமாக இருப்பதாக இந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

அதிலும், குறிப்பாக வெப்பமண்டலப் பகுதிகளில் நடக்கும் காடுகள் மீட்டுருவாக்கம் இத்தகைய தொற்றுப் பரவலுக்கு அதிகளவில் வழி வகுப்பதாக இந்த ஆய்வில் நிரூபிக்கப் பட்டுள்ளது.

அதாவது, அழிக்கப்படும் இயற்கையான காடுகளுக்கு ஈடாக மீண்டும் புதியதாக ஒரு காட்டை உருவாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளின்போது, அதுவரை தொந்தரவு செய்யப்படாமலிருக்கும் பகுதிகளுக்குள் மனிதக் கால்தடம் பதிகின்றது. மேலும், காடுகள் மீட்டுருவாக்கம் என்பது அதிகளவில் நடப்பது என்னவோ புல்வெளிக் காடுகளில்தான். ஓரிடத்தில், அழிக்கப்படும் காட்டிற்கு ஈடாக, வேறோர் இடத்தில் புதிதாகக் காடு உருவாக்கப்படுகின்றது. ஆனால், அப்படிப்பட்ட வேலைகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்படுவது என்னவோ, புல்வெளிக் காடுகள்தான்.

Corona Vaccine

மனித சமூகத்தின் பார்வையில், புல்வெளிக் காடுகள் என்பது பயன்பாடற்ற தரிசு நிலங்களே. அவற்றை, கட்டுமான வேலைகளுக்காகவோ, இதுபோன்ற காடு மீட்டுருவாக்கத்துக்காகவோ பயன்படுத்துகின்றனர். ஆனால், புல்வெளிக் காடுகளும் ஒரு தனித்துவமான சூழலியல் அமைப்பைக் கொண்டவை. புல்வெளிகள், திறந்தவெளிக் காடுகள், பாலை நிலங்கள் அழிக்கப்பட்டு அந்த நிலத்திற்கே தொடர்பில்லாத வகையில் மாற்றியமைக்கப்படும்போது, புதுப்புது விலங்கியல் நோய்கள் பரவக் காரணமாக அமைகிறது.

இப்படி, இயற்கையான சூழலியல் அமைப்புகளை மனிதத் தலையீடுகள் குலைக்கும்போது, பல்வேறு தொற்றுநோய்கள் வெளியுலகத்தில் பரவுகின்றன. இதுபோன்ற உலகளவிலான ஆய்வு நடைபெறுவது இதுவே முதல்முறை. இந்த ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியர்கள், இதுபோன்ற தொற்றுப் பரவல்களுக்கு உதாரணமாக இத்தாலியில் பாதிப்பை உண்டாக்கிய என்செஃபாலிட்டிஸ் என்ற உண்ணிகளிலிருந்து தொடங்கிய நோய்ப்பரவலைக் குறிப்பிடுகின்றார்கள். அதேபோல், பனை எண்ணெய் உற்பத்திக்காக வளர்க்கப்படும் தோட்டங்கள், ரப்பர் தோட்டங்களைச் சுற்றி வாழும் மக்கள், டெங்கு, ஸிகா, சிக்கன்குன்யா, மஞ்சள் காமாலை போன்ற பல தொற்று நோய்களுக்கு ஆளாகின்றார்கள் என்பதை இந்த ஆய்வு முடிவு நிரூபித்துள்ளது.

ஒற்றைப் பயிரிடுதல் முறை

Also Read: `வௌவால்களே காரணம்; சீன ஆய்வகம் அல்ல!' - கொரோனா வைரஸ் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த WHO

ஒற்றைப் பயிர் வளர்ப்பு முறையில், ஒரேயொரு வகையான தாவரத்தை வளர்ப்பதில் தீவிரமாக ஈடுபடும்போது, அது நடைபெறும் நிலத்தின் இயல்புநிலையைக் குலைக்கிறது. இதனால், அப்பகுதியின் பல்லுயிரிய வளம் பாதிக்கப்படுவதோடு, சூழலியல் சமநிலையும் சீர்குலைகிறது.

1990 முதல் 2016 வரையிலான நாடு வாரியான தரவுகளைச் சேகரித்து மூன்று கட்டமாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு, மனிதர்களிடையே பரவும் தொற்றுநோய்கள் அதிகரிப்பதற்கு மனிதத் தலையீடுகளால் நிகழும் சூழலியல் சீர்குலைவே காரணம் என்ற பன்னாட்டு ஆய்வாளர்களின் கூற்றை உறுதி செய்துள்ளது. மேலும், இந்த நிலை இப்படியே நீடித்தால், மற்ற உயிரினங்களின் வாழ்விடங்களில் தொடர்ந்து ஊடுருவிக் கொண்டும் அழித்துக்கொண்டுமிருக்கும் மனிதர்கள், தங்களுக்கெனப் பாதுகாப்பான வாழ்விடமின்றித் தவிக்க நேரிடும் என்ற எச்சரிக்கையையும் இந்த ஆய்வுமுடிவுகள் கொடுத்துள்ளன.



from விகடன் https://ift.tt/3cCN1AP
via IFTTT

Comments

Popular posts from this blog

‘யோகி பாபுக்காக ஒரு கதை எடுக்க வேண்டும் என்று ஆசை’ -‘பொம்மை நாயகி’ விழாவில் மாரி செல்வராஜ் பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகிபாபு நடித்துள்ள ‘பொம்மை நாயகி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் இன்று நடைபெற்றது. பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘பொம்மை நாயகி’. சிறுமி ஸ்ரீமதி, யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஷான். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள படத்தின் பாடல்களை ‘தெருக்குரல்’ அறிவு எழுதியிருக்கிறார். இந்த விழாவில் அறிமுக இயக்குநர் ஷான் பேசுகையில், “இந்தக் கதை எழுதி முடித்ததும் யாரிடமும் சொல்ல வில்லை. நீண்ட நாட்களாக இந்தக் கதையை வைத்து கொண்டே இருந்தேன். படம் பண்ணினால் நீளம் புரொடக்ஷனில் தான் பண்ண வேண்டும் என்று தீர்க்கமாக இருந்தேன். கதையைப் படித்து கதையில் இருந்த நம்பிக்கையால் இந்தப் படம் எடுக்க முடிந்தது. ‘பரியேறும் பெருமாள்’ படம் பார்த்து யோகி பாபு நடித்தால் எப்படி இருக்கும் என்ற நினைத்தேன். எதார்த்தமான மனிதன் சந்திக்கும் பிரச்சினைகளை எதிர்கொள்ளுவது தான் இந்த படம். எல்லோரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் இது” என்று தெரிவித்தார். இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், “இயக்குநர் இந்த கதையை தான் எடுப்பேன் என்று உறுதியாக இருந்து எடுத்து முடித்தவர். யார் இந்தக் கதையில் நடித்தால் சரி வரும் என்று தேர்வு செய்து பொருத்தமாக எடுத்துள்ளார். நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம் முக்கியமான நபர்கள் வெளி வந்துள்ளனர். ‘வாழை’ படம் முதன் முதலில் நான் எழுதிய கதை. அதை எப்போது எடுப்பேன் என்று எதிர்பார்த்து கொண்டு இருந்தேன். தற்போது அந்தப் படத்தை முடித்து விட்டேன். அடுத்து நான் நீலம் புரொடக்ஷனில் தான் படம் பண்ண போகிறேன். பிற்போக்குத்தனமான ஒரு படத்தை எடுக்க மாட்டேன் என்பது என் கொள்கை. நான் தப்பான படங்களை எடுக்க மாட்டேன். நிஜ கதைகளை உருவாக்கும் போதே இவர்கள் இந்த கதையை தயாரிப்பார்கள் என்ற நிச்சயம் உண்டானால் அது தான் தமிழ் சினிமாவின் வெற்றி. ‘பொம்மை நாயகி’ ஒரு பேரலையாய் அமையும். பெரிய இயக்குனர்கள் அனைவருக்கும் யோகி பாபுவிற்காக கதை எடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும், எனக்கும் அந்த ஆசை உள்ளது” என்று கூறினார். நடிகர் ஜி.எம். குமார் பேசுகையில், “இங்கே நான் வந்ததற்கு காரணம் கதை தான். யோகி பாபு உடன் என்னோட மூணாவது படம். ‘கர்ணன்’ படத்தில் மாரியிடம் யோகி பாபுவால் திட்டு வாங்கினேன். இயக்குநர் பா. ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’ மற்றும் ‘சார்பட்டா பரம்பரை’ படங்களை பார்த்து அசந்து போனேன்” என்று தெரிவித்தார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

நடிகர் மயில்சாமி உடலுக்கு பிரேத பரிசோதனை இல்லை... ஏன்? நடிகர் மயில்சாமிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். சென்னை சாலிகிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தவர் தமிழ் திரைப்பட காமெடி நடிகர் மயில்சாமி. தமிழ் திரைப்படங்களில் சிறந்த காமெடி நடிகராக வலம் வந்த மயில்சாமிக்கு இன்று காலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை அவரது உறவினர்கள் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மயில்சாமி வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மயில்சாமி இறந்த செய்தி கேட்டு அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த போரூர் போலீசார் உயிரிழந்த மயில்சாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மயில்சாமி உயிரிழப்புக்கு காரணம் மாரடைப்பா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரித்து வந்தனர். பின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் மயில்சாமி உடல் பிரேத பரிசோதனை செய்யவில்லை என சொல்லப்பட்டுள்ளது. அதன் பின்னணியாக, அவருக்கு மாரடைப்பு உறுதியானதை மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவர் ஏற்கனவே இதயம் சம்பந்தமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனது உறுதியானது. இறப்புக்கான காரணம் உறுதியானதால், அவரது உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை என்றும் இன்னும் சிறிது நேரத்தில் அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளன. நடிகர் மயில்சாமியின் உயிரிழப்பு தமிழ் திரை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

விஜய்.. கமல்ஹாசன் அடுத்தது?: முன்னணி நடிகர்களின் படங்களைக் கைப்பற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தினை ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. நடிகர் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ படங்களைத் தயாரிப்பதோடு முன்னணி நடிகர்களின் படங்களையும் கைப்பற்றி வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்’, பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’, ராஜமெளலியின் ( ‘ஆர்ஆர்ஆர்’ மூன்று இடங்களில் மட்டும்) உள்ளிட்டப் படங்களை கைப்பற்றி வெளியிட்டது. வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகும் விஜய்யின் ‘பீஸ்ட்’, ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படங்களின் தமிழக ரெட் ஜெயன்ட் மூவிஸ்தான் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் தமிழக உரிமையையும் கைப்பற்றியுள்ளதகாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவிருக்கிறார்கள். ‘விக்ரம்’ வரும் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகிறது. அன்றுதான் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்துவரும் ‘மாமன்னன்’ படத்தினை ரெட் ஜெயன்ட் தான் தயாரிக்கிறது. இதற்கு முன்னதாக, தமிழ் சினிமாவில் ஹாட்ரிக் வெற்றி கொடுத்த இயக்குநர்களில் லோகேஷ் கனகராஜும் ஒருவர். அவரின் ’மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் அடித்து வசூலைக் குவித்ததால் இயக்குநர் நான்காவதாக கமல்ஹாசனை இயக்கும் ‘விக்ரம்’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. கோரோனா சூழலிலும் மக்களை தியேட்டர் நோக்கி வரவைத்தது ‘மாஸ்டர்’. அதன் வெற்றிக்குப்பிறகு விஜய் சேதுபதி - அனிருத்துடன் மீண்டும் ’விக்ரம்’மில் கைக்கோர்த்துள்ளார் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் இப்படத்தில் ஃபகத் ஃபாசிலும் நடிப்பதால் மலையாள ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். காளிதாஸ் ஜெயராம், நரேன், ’பிக்பாஸ்’ ஷிவானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM