Posts

Showing posts from March, 2023

'மிஸ்டர் லோக்கல்' பட சம்பள பாக்கி விவகாரம்: சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் சமரசம் மிஸ்டர் லோக்கல் படத்தின் சம்பள பாக்கி தொடர்பான விவகாரத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் மத்தியஸ்த பேச்சுவார்த்தை மூலம் சமரசம் எட்டப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மிஸ்டர் லோக்கல் படத்தை தயாரிப்பதற்காக, 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒப்பந்தம் போட்டு, 15 கோடி ரூபாய் சம்பளம் பேசியதாக தெரிகிறது. 2019ஆம் ஆண்டு மே மாதமே படம் வெளியான நிலையில், இதுவரை 11 கோடி ரூபாய் மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டு, 4 கோடி ரூபாய் பாக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன், சென்னை உயர் நீதிமன்றத்தில் சம்பள பாக்கியை தர தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இரு தரப்பினரும் சமரசம் ஏற்படுத்தி கொள்வதாக தெரிவித்தனர். இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி என்.கிருபாகரனை மத்தியஸ்தராக நியமித்து உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு வந்தபோது, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சார்பில் இரு தரப்புக்கும் சமரசம் ஏற்பட்டுவிட்டதாக தெரிவித்து, அதற்கான மனு அளிக்கப்பட்டது. இதன்மூலம் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்படும். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
மிஸ்டர் லோக்கல் படத்தின் சம்பள பாக்கி தொடர்பான விவகாரத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் மத்தியஸ்த பேச்சுவார்த்தை மூலம் சமரசம் எட்டப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மிஸ்டர் லோக்கல் படத்தை தயாரிப்பதற்காக, 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒப்பந்தம் போட்டு, 15 கோடி ரூபாய் சம்பளம் பேசியதாக தெரிகிறது. 2019ஆம் ஆண்டு மே மாதமே படம் வெளியான நிலையில், இதுவரை 11 கோடி ரூபாய் மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டு, 4 கோடி ரூபாய் பாக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன், சென்னை உயர் நீதிமன்றத்தில் சம்பள பாக்கியை தர தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இரு தரப்பினரும் சமரசம் ஏற்படுத்தி கொள்வதாக தெரிவித்தனர். இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி என்.கிருபாகரனை மத்தியஸ்தராக நியமித்து உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு வந்தபோது, தயாரிப்பாள...

நடிகர் செந்திலின் பீமரதசாந்தி விழா: திருக்கடையூர் அபிராமி கோவிலில் இன்று நடைபெறுகிறது நகைச்சுவை நடிகர் செந்தில் தனது 70வது வயதை முன்னிட்டு திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் பீமரதசாந்தி விழா இன்று நடைபெறுகிறது மயிலாடுதுறை மாவட்டம் அருகே திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான அருள்மிகு அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.  இதனால் இங்கு ஆயுள் விருத்தி வேண்டி சிறப்பு ஹோமங்கள் செய்து 60 வயதில் சஸ்டியப்தபூர்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயதில் சதாபிஷேகம், 90 வயதில் கனகாபிஷேகம், 100 வயதில் பூரணாபிஷேகம் உள்ளிட்ட திருமணங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் இக்கோயிலில் ஆண்டு முழுவதும் தினமும் திருமண வைபவங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். இந்நிலையில், பல்வேறு சிறப்புகளை உடைய இவ்வாலயத்தில் திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில் தனது 70வது வயதை முன்னிட்டு இன்று பீமரத சாந்தி திருமண விழா நடைபெறவுள்ளது. நடிகர் செந்தில் அவரது மனைவி கலைச்செல்வி, மகன்கள் மணிகண்ட பிரபு, மிரிதிபிரபு மற்றும்' குடும்பத்தினருடன் திருமணம் செய்து கொள்வதற்காக கோவிலுக்கு வந்துள்ளனர். இந்நிலையில், இரவு கஜபூஜை, கோபூஜை செய்து சுவாமி அம்பாளை வழிபட்டு இரண்டுகால யாகசாலை பூஜையில் பங்கேற்றுள்ளனர். 64 கலசங்கள் வைக்கப்பட்டு முதல் காலயாகசாலை இரவு நடைபெற்றது. இதையடுத்து ஆயுள் விருத்தி வேண்டி ஆயுஷ் ஹோமம் நவகிரக ஹோமம் மிருத்யுஞ்சய ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து இன்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று பீமரதசாந்தி என்றழைக்கப்படும் 70வது திருமணம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
நகைச்சுவை நடிகர் செந்தில் தனது 70வது வயதை முன்னிட்டு திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் பீமரதசாந்தி விழா இன்று நடைபெறுகிறது மயிலாடுதுறை மாவட்டம் அருகே திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான அருள்மிகு அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.  இதனால் இங்கு ஆயுள் விருத்தி வேண்டி சிறப்பு ஹோமங்கள் செய்து 60 வயதில் சஸ்டியப்தபூர்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயதில் சதாபிஷேகம், 90 வயதில் கனகாபிஷேகம், 100 வயதில் பூரணாபிஷேகம் உள்ளிட்ட திருமணங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் இக்கோயிலில் ஆண்டு முழுவதும் தினமும் திருமண வைபவங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். இந்நிலையில், பல்வேறு சிறப்புகளை உடைய இவ்வாலயத்தில் திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில் தனது 70வது வயதை முன்னிட்டு இன்று பீமரத சாந்தி திருமண விழா நடைபெறவுள்ளது. நடிகர் செந்தில் அவரது மனைவி கலைச்செல்வி, மகன்கள் மணிகண்ட பிரபு, மிரிதிபிரபு மற்றும்' குடும்பத்தினருடன் திருமணம் செய்து கொள்வதற்காக கோவிலுக்கு வந்துள்ளனர். இந்நிலையில், இரவு கஜபூஜை, கோபூஜை ...

‘விடுதலை’ படத்தில் எத்தனை இடங்களில் மியூட்? - வெளியான சென்சார் சான்றிதழ்! வெற்றிமாறனின் ‘விடுதலை - 1’ படத்தில் மொத்தம் 11 இடங்களில் மியூட் செய்யப்பட்டுள்ள சென்சார் சான்றிதழ் வெளியாகியுள்ளது. பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய சிறுகதையான ‘துணைவன்’ என்றக் கதையை தழுவி ‘விடுதலை’ திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தப் படத்தை, தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இதில் முதல் பாகம் வருகிற 31-ம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இளையராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தில், விஜய் சேதுபதி, சூரி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நடிகர் சூரி, காவலராக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சுமார் இரண்டரை நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில் முதல் பாகம் எடிட் செய்யப்பட்டுள்ளநிலையில், இந்தப் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தப் படத்தில் 11 இடங்களில் வரும் கெட்ட வார்த்தைகள் மியூட் செய்யப்பட்டுள்ளது. மேலும், இரண்டு காட்சிகளில் சென்சார் செய்யப்பட்டுள்ளது. இதனால், ‘வடசென்னை’ போன்று இந்தப் படத்திற்கும் ‘ஏ’ சான்றிதழ், அதாவது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்கும் வகையில் சென்சார் சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ். இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் சந்தானம் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
வெற்றிமாறனின் ‘விடுதலை - 1’ படத்தில் மொத்தம் 11 இடங்களில் மியூட் செய்யப்பட்டுள்ள சென்சார் சான்றிதழ் வெளியாகியுள்ளது. பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய சிறுகதையான ‘துணைவன்’ என்றக் கதையை தழுவி ‘விடுதலை’ திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தப் படத்தை, தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இதில் முதல் பாகம் வருகிற 31-ம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இளையராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தில், விஜய் சேதுபதி, சூரி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நடிகர் சூரி, காவலராக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சுமார் இரண்டரை நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில் முதல் பாகம் எடிட் செய்யப்பட்டுள்ளநிலையில், இந்தப் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தப் படத்தில் 11 இடங்களில் வரும் கெட்ட வார்த்தைகள் மியூட் செய்யப்பட்டுள்ளது. மேலும், இரண்டு காட்சிகளில் சென்சார் செய்யப்பட்டுள்ளது. இதனால், ‘வடசென்னை’ போன்று இந்தப் படத்திற்கும் ‘ஏ’ சான்றிதழ், அதாவது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்கும...

‘ஆர்.ஆர்.ஆர்.’ ஆஸ்கர் பரப்புரை செலவு ரூ.80 கோடியா? - விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி! ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் ஆஸ்கர் விருது நடைமுறைக்கு 80 கோடி ரூபாய் வரை செலவு செய்ததாக தகவல் வெளியான நிலையில், படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் எஸ்.எஸ். கார்த்திகேயா விளக்கமளித்துள்ளார்.  ‘பாகுபலி’ பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு ராஜமௌலி இயக்கத்தில் மெகா பட்ஜெட்டில் உருவான திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்.’. பான் இந்தியா படமாக உருவாகிய இந்தப் படத்தில், ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஸ்ரேயா சரண், ஆலியா பட், ரே ஸ்டீவன்சன், ஒலிவியா மோரிஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். 1920-ம் ஆண்டு காலக்கட்டத்தில், ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய தெலுங்கு மாநிலத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களான, அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட உருவான கற்பனைக் கதைதான் ‘ரத்தம் ரணம் ரௌத்தரம்’ எனப்படும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்பட 5 மொழிகளில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதி உலகம் முழுவதும் வெளியான இந்த திரைப்படம், 1150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை ஈட்டியது. இதற்கு முன்னதாக ராஜமௌலியின் இயக்கத்தில், பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘பாகுபலி : தி கன்குளூஷன்’ திரைப்படம் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த நிலையில், இந்தப் படமும் அந்தச் சாதனையை படைத்திருந்தது. இதனால், 2023-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் அனுப்பப்படும் படமாக ‘ஆர்.ஆர்.ஆர்.’ இருக்கும் என்று கூறப்பட்டு வந்தநிலையில், இந்தப் படம் அனுப்பப்படவில்லை. இதையடுத்து தனிப்பட்ட முறையில், ஆஸ்கர் விருதுக்கு இந்தப் படம் அனுப்பப்பட்டது. மேலும் ஆஸ்கர் விருது பரப்புரைக்காக (Campaign) 80 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளரான டிவிவி தனய்யாவிடம் கேட்டதற்கு, ஆஸ்கர் விருது பரப்புரைக்காக தான் எந்த செலவும் செய்யவில்லை என்றும், சொல்லப்போனால் இயக்குநர் ராஜமௌலி மற்றும் படக்குழுவினருடன் தான் தொடர்பிலேயே இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இதுபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ‘பாகுபலி’ படத்தை தயாரித்த நிறுவனமான ஆர்கா மீடியாவின் நிறுவனர்களான ஷோபு யர்லகடா மற்றும் பிரசாத் தேவினேனி தான், ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்திற்கான ஆஸ்கர் பரப்புரைக்கு செலவு செய்ததாகவும் கூறப்பட்டது. எனினும், ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தில் வரும் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு கோல்டன் குளோப் விருதும், ஆஸ்கர் விருதும் இசையமைப்பாளர் கீரவாணிக்கு கிடைத்தது. படம் வெளியாகி ஒருவருடத்தை நிறைவுசெய்துள்ள நிலையில், இந்தப் படத்தின் நிர்வாக தயாரிப்பாளரும், ராஜமௌலியின் மகனுமான எஸ்.எஸ். கார்த்திகேயா சமீபத்தில் யூட்யூப் சேனலுக்கு இதுதொடர்பாக விளக்கமளித்துள்ளார். அதில், ‘ஆஸ்கர் விருது பரப்புரைக்கு ஹாலிவுட் படங்களுக்கு இருப்பது போன்று, பெரிய தயாரிப்பு நிறுவன ஸ்டூடியோ எங்களுக்கு பொருளாதார ரீதியாக ஆதரவுத் தர பின்னணியில் இல்லை. ஆஸ்கர் விருதுக்கான தேர்வில் இந்தியா சார்பில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தை அனுப்பாமல் போனது வருத்தம்தான். தனிப்பட்ட முறையில் ஆஸ்கர் விருதுக்கு நாங்கள் அனுப்பினோம். எனினும், முதலில் 5 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்வது என்று முடிவு செய்தோம். அதையும் 3 கட்டமாக செலவு செய்யலாம் என்று நினைத்தோம். நாமினேஷனுக்கு முன்னதாக இரண்டரை கோடியில் இருந்து மூன்று கோடி செலவு செய்யலாம் எனத் திட்டமிட்டு செலவு செய்தோம். நாமினேஷனுக்கு படம் போனதும் ரூ.8.5 கோடி வரை செலவு செய்தோம். 5 கோடி ரூபாய் வரையில் திட்டமிட்ட நிலையில், கூடுதலாக பணம் செலவு ஆகிவிட்டது. ஏனெனில் நியூயார்க் நகரில் கூடுதலாக சிறப்புக் காட்சிகள் வெளியிட வேண்டியிருந்தது. அதனால் செலவு கொஞ்சம் அதிகரித்து விட்டது. இதுதான் ஆஸ்கர் விருது நடைமுறைக்காக உண்மையாக நாங்கள் செலவு செய்த தொகையாகும். ஆஸ்கர் விருதை பணம் கொடுத்துதான் எனது தந்தை வாங்கினார் என்று சொல்வது அப்பட்டமான பொய். அப்படி வாங்கவும் முடியாது என்பது அனைவரும் அறிந்ததே” என்று தெரிவித்துள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் ஆஸ்கர் விருது நடைமுறைக்கு 80 கோடி ரூபாய் வரை செலவு செய்ததாக தகவல் வெளியான நிலையில், படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் எஸ்.எஸ். கார்த்திகேயா விளக்கமளித்துள்ளார்.  ‘பாகுபலி’ பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு ராஜமௌலி இயக்கத்தில் மெகா பட்ஜெட்டில் உருவான திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்.’. பான் இந்தியா படமாக உருவாகிய இந்தப் படத்தில், ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஸ்ரேயா சரண், ஆலியா பட், ரே ஸ்டீவன்சன், ஒலிவியா மோரிஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். 1920-ம் ஆண்டு காலக்கட்டத்தில், ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய தெலுங்கு மாநிலத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களான, அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட உருவான கற்பனைக் கதைதான் ‘ரத்தம் ரணம் ரௌத்தரம்’ எனப்படும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்பட 5 மொழிகளில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதி உலகம் முழுவதும் வெளியான இந்த திரைப்படம், 1150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை ஈட்டியது. இதற்கு முன்னதாக ராஜமௌலியின் இயக்கத்தில்,...

ஷங்கர், ராம் சரண் படத்தின் டைட்டில் அறிவிப்பு - மீண்டும் பொலிட்டிக்கல் த்ரில்லர் கதையா? ராம் சரண் - ஷங்கர் கூட்டணியில் தயாராகி வரும் ‘ஆர்.சி. 15’ படத்தின் டைட்டில் டீசர் அதிகாரபூர்வமாக இன்று வெளியாகியுள்ளது. பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில், நடிகர் ராம் சரண் நடித்து வரும் படத்திற்கு தற்காலிகமாக ‘ஆர்.சி. 15’ என்று பெயரிடப்பட்டு விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பெரும் பொருட் செலவில் தயாராகி வரும் இந்தப் படத்தில், ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. தமன் இசையமைக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ளார். இந்நிலையில் ராம் சரணின் இன்று தன்னுடைய 38- வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதையொட்டி இந்தப் படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளது படக்குழு. அதன்படி படத்திற்கு ‘கேம் சேஞ்சர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தேர்தல், வாக்குப்பதிவு, நாடாளுமன்றம், சட்டப்பேரவை ஆகியவற்றை மையப்படுத்தி டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது.  இதனால் ‘கேம் சேஞ்சர்’ என்றுப் பெயர் வைக்கப்பட்டுள்ளதால், இயக்குநர் ஷங்கரின் முந்தைய படங்களான ‘இந்தியன்’, ‘முதல்வன்’ போன்று இதுவும் அரசியல் பேசும் படமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. முன்னதாக, ‘CEO - Chief electoral officer’ என்று பெயர் வைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, ஜெயராம், அஞ்சலி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். #GAMECHANGER it is…https://t.co/avGa74S8vH Mega Powerstar @alwaysramcharan @shankarshanmugh @advani_kiara @DOP_Tirru @MusicThaman @SVC_official #SVC50 #RC15 #HBDGlobalStarRamCharan pic.twitter.com/2htttRsvPx — Sri Venkateswara Creations (@SVC_official) March 27, 2023 Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
ராம் சரண் - ஷங்கர் கூட்டணியில் தயாராகி வரும் ‘ஆர்.சி. 15’ படத்தின் டைட்டில் டீசர் அதிகாரபூர்வமாக இன்று வெளியாகியுள்ளது. பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில், நடிகர் ராம் சரண் நடித்து வரும் படத்திற்கு தற்காலிகமாக ‘ஆர்.சி. 15’ என்று பெயரிடப்பட்டு விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பெரும் பொருட் செலவில் தயாராகி வரும் இந்தப் படத்தில், ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. தமன் இசையமைக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ளார். இந்நிலையில் ராம் சரணின் இன்று தன்னுடைய 38- வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதையொட்டி இந்தப் படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளது படக்குழு. அதன்படி படத்திற்கு ‘கேம் சேஞ்சர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தேர்தல், வாக்குப்பதிவு, நாடாளுமன்றம், சட்டப்பேரவை ஆகியவற்றை மையப்படுத்தி டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது.  இதனால் ‘கேம் சேஞ்சர்’ என்றுப் பெயர் வைக்கப்பட்டுள்ளதால், இயக்குநர் ஷங்கரின் முந்தைய படங்களான ‘இந்தியன்’, ‘முதல்வன்’ போன்று இதுவும் ...

13 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் இயக்குநராகும் சசிகுமார்? எப்போது படப்பிடிப்பு தொடங்குகிறது? சுப்ரமணியபுரம், ஈசன் உள்ளிட்ட வெற்றிப் படங்களை எடுத்த இயக்குநரும் நடிகருமான சசிகுமார் மீண்டும் படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 'நான் மிருகமாய் மாறினால்', 'அயோத்தி' உள்ளிட்ட திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்த இயக்குநர் சசிகுமார், நேரமின்மையால் படம் இயக்குவதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில், 13 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அவர் படம் இயக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அனுராக் காஷ்யப் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கதாநாயகனாக சசிகுமார் நாடோடிகள், சுந்தரபாண்டியன், குட்டி புலி, வெற்றிவேல், கிடாரி,நாடோடிகள் 2, உடன் பிறப்பே, அயோத்தி என பல படங்களில் கவனத்தை ஈர்த்தபோதும் மீண்டும் அவர் எப்போது படம் இயக்குவார் என்ற எதிர்பார்ப்புதான் அவர் ரசிகர்களிடையே அதிகமாக இருந்தது. அதற்கு முக்கிய காரணம், மண் சார்ந்த படைப்பியலில் அவர் உருவாக்கிய சுப்பிரமணியபுரம் திரைப்படம், இன்றளவும் தமிழ்சினிமாவின் முக்கிய படைப்பாக இருப்பதை சொல்லலாம். இந்நிலையில் ‘இயக்குநர் சசிகுமாரின்’ அடுத்த படைப்பு பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகியிருப்பது, அவரது ரசிகர்களையும் சினிமா ஆர்வலர்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இருப்பினும் இதுபற்றி அதிகாரபூர்வமாக இன்னும் தகவல்கள் தெரியவரவில்லை. அனுராக் காஷ்யப் - சசிகுமாரின் இந்த படம், வரலாற்று படமாக உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது இப்படத்தின் முதற்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. வருகின்ற ஜூன் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. அனுராக் கஷ்யாப், சுப்ரமணியபுரம் படத்தை பல மேடைகளில் பெரிதும் பாராட்டி வந்தாரென்பது குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
சுப்ரமணியபுரம், ஈசன் உள்ளிட்ட வெற்றிப் படங்களை எடுத்த இயக்குநரும் நடிகருமான சசிகுமார் மீண்டும் படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 'நான் மிருகமாய் மாறினால்', 'அயோத்தி' உள்ளிட்ட திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்த இயக்குநர் சசிகுமார், நேரமின்மையால் படம் இயக்குவதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில், 13 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அவர் படம் இயக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அனுராக் காஷ்யப் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கதாநாயகனாக சசிகுமார் நாடோடிகள், சுந்தரபாண்டியன், குட்டி புலி, வெற்றிவேல், கிடாரி,நாடோடிகள் 2, உடன் பிறப்பே, அயோத்தி என பல படங்களில் கவனத்தை ஈர்த்தபோதும் மீண்டும் அவர் எப்போது படம் இயக்குவார் என்ற எதிர்பார்ப்புதான் அவர் ரசிகர்களிடையே அதிகமாக இருந்தது. அதற்கு முக்கிய காரணம், மண் சார்ந்த படைப்பியலில் அவர் உருவாக்கிய சுப்பிரமணியபுரம் திரைப்படம், இன்றளவும் தமிழ்சினிமாவின் முக்கிய படைப்பாக இருப்பதை சொல்லலாம். இந்நிலையில் ‘இயக்குநர் சசிகுமாரின்’ அடுத்த படைப்பு பற்றிய அ...

“சிவாஜி கணேசன் இல்லைன்னா நான் இல்ல” - ‘முதல் மரியாதை’ ரீ-ரிலீஸில் பாரதிராஜா நெகிழ்ச்சி “'முதல் மரியாதை'  போன்ற ஒரு படைப்பை நான் நினைத்தாலும் மறுபடியும் எடுக்க முடியாது” என்று கூறியிருக்கிறார் இயக்குநர் பாரதிராஜா. இயக்குநர் பாரதிராஜா இயக்கி நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகை ராதா, சத்யராஜ், தீபன் நடித்து, இசைஞானி இளையராஜா இசையிலும் கவிஞர் வைரமுத்து வரிகளிலும் 1985ஆம் ஆண்டு வெளியானது 'முதல் மரியாதை' திரைப்படம். இப்படம் வெளியாகி 38 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 67 திரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் இப்படம் தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 12 திரையரங்குகளில் முதல் மரியாதை திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இதனைக் காண படத்தின் இயக்குநர் பாரதிராஜா சென்னையில் உள்ள தனியார் திரையரங்கிற்கு நேற்று சென்றார். படத்தை காணும் முன் இயக்குநர் பாரதிராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “சினிமாவில் நுழைந்தவர்கள் எல்லாம் ஜெயித்து விட முடியாது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இல்லை என்றால் இந்த பாரதிராஜா இல்லை. சிவாஜி போட்ட பிச்சை தான், இதுவரையில் நான் நடிக்க காரணம். இதுபோன்ற ஒரு படைப்பை நானே நினைத்தாலும் மறுபடியும் எடுக்க முடியாது. படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் ராதா, சத்யராஜ், தீபன் உள்ளிட்டோர் மிகவும் சிறப்பாக நடித்திருந்தனர். ஒளிப்பதிவாளர் கண்ணன், இசையமைப்பாளர் இளையராஜா, பாடலாசிரியர் வைரமுத்து ஆகியோர் இந்த படத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்தனர்” என்றார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் தரப்பிலிருந்து பாரதிராஜாவிடம் ‘முதல் மரியாதை திரைப்படத்தில் நடிகை ராதா கதாபாத்திரம் பரிசல் ஓட்டும் பெண்ணாக இருப்பார். அதே வேலை செய்யும் கதாபாத்திரத்தில் பொன்னியின் செல்வனில் பூங்குழலி இருக்கிறார். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?’ என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த இயக்குநர் பாரதிராஜா, “இரண்டு கதாபாத்திரங்களும் வேறு வேறு. இரண்டையும் கலந்து பார்ப்பது தவறு. ஒரு கலைஞனின் படைப்பு மிகவும் முக்கியமானது. நான் இயக்குநர் மணிரத்னம் மீது மிகுந்த மரியாதை கொண்டிருக்கிறேன்'' என்றார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
“'முதல் மரியாதை'  போன்ற ஒரு படைப்பை நான் நினைத்தாலும் மறுபடியும் எடுக்க முடியாது” என்று கூறியிருக்கிறார் இயக்குநர் பாரதிராஜா. இயக்குநர் பாரதிராஜா இயக்கி நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகை ராதா, சத்யராஜ், தீபன் நடித்து, இசைஞானி இளையராஜா இசையிலும் கவிஞர் வைரமுத்து வரிகளிலும் 1985ஆம் ஆண்டு வெளியானது 'முதல் மரியாதை' திரைப்படம். இப்படம் வெளியாகி 38 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 67 திரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் இப்படம் தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 12 திரையரங்குகளில் முதல் மரியாதை திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இதனைக் காண படத்தின் இயக்குநர் பாரதிராஜா சென்னையில் உள்ள தனியார் திரையரங்கிற்கு நேற்று சென்றார். படத்தை காணும் முன் இயக்குநர் பாரதிராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “சினிமாவில் நுழைந்தவர்கள் எல்லாம் ஜெயித்து விட முடியாது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இல்லை என்றால் இந்த பாரதிராஜா இல்லை. சிவாஜி போட்ட பிச்சை தான், இதுவரையில் நான் நடிக்க காரணம். இதுபோன்ற ஒரு படைப்பை நானே நினைத்தாலும்...

வெளியான மகேஷ் பாபுவின் அடுத்த பட அப்டேட்... இயக்குநர் இவர்தானா? குஷியில் ரசிகர்கள்! தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் 28-ஆவது திரைப்படம், 2024-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. தெலுங்கில் ஃபீல்குட் திரைப்படங்களை இயக்கி, ப்ளாக்பஸ்டர் வெற்றிகளை அறுவடை செய்வதில் வல்லவரான திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸுடன் 3-ஆவது முறையாக இணைந்துள்ளார் மகேஷ் பாபு. திரிவிக்ரமும் மகேஷ் பாபுவும் ஏற்கெனவே கரம் கோத்த அத்தடு, கலேஜா ஆகிய திரைப்படங்கள், பாக்ஸ்ஆபீஸை அடித்து நொறுக்கி புதிய சாதனைகளைப் படைத்தன. இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் புதிய திரைப்படத்துக்குத் தமன் இசையமைக்கிறார். இந்தத் திரைப்படம் 2024-ஆம் ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதியன்று வெளியாகிறது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் 28-ஆவது திரைப்படம், 2024-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. தெலுங்கில் ஃபீல்குட் திரைப்படங்களை இயக்கி, ப்ளாக்பஸ்டர் வெற்றிகளை அறுவடை செய்வதில் வல்லவரான திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸுடன் 3-ஆவது முறையாக இணைந்துள்ளார் மகேஷ் பாபு. திரிவிக்ரமும் மகேஷ் பாபுவும் ஏற்கெனவே கரம் கோத்த அத்தடு, கலேஜா ஆகிய திரைப்படங்கள், பாக்ஸ்ஆபீஸை அடித்து நொறுக்கி புதிய சாதனைகளைப் படைத்தன. இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் புதிய திரைப்படத்துக்குத் தமன் இசையமைக்கிறார். இந்தத் திரைப்படம் 2024-ஆம் ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதியன்று வெளியாகிறது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/mDRsl1w via IFTTT

பத்து தல To லியோ.. 2023ல் திரையரங்குகளை அதிரவைக்க காத்திருக்கும் நட்சத்திரங்களின் படங்கள்! ஆண்டுதோறும் உலக அளவில் ஆயிரக்கணக்கான படங்கள் வெளியாகின்றன. அதிலும் தமிழ் சினிமாவில் மட்டும் 100க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின்றன. அதில், குறிப்பாக இந்த ஆண்டு மட்டும் ரிலீஸாக முன்னணி நடிகர்கள் நடித்திருக்கும் சில படங்கள் குறித்த பட்டியலைப் பார்ப்போம். இந்த மாதம் முடிய இன்னும் ஒருசில நாட்களே உள்ளன. அந்த நாட்களிலும் சில படங்கள் வெளியாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழரசன் - மார்ச் 30 பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனி, சுரேஷ் கோபி, ரம்யா நம்பீசன், சோனு சூட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்தாண்டே ரிலீசுக்கு தயாரான இப்படம் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் இப்படம் மார்ச் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாகத் தெரிகிறது. பத்து தல - மார்ச் 30 இயக்குநர் ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் 'பத்து தல'. பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கலையரசன், மலையாள நடிகை அனு சித்தாரா ஆகியோர் நடித்துள்ள படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், வரும் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விடுதலை 1 - மார்ச் 31 இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியிருக்கும் படம் ‘விடுதலை பாகம் 1’. இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களைத் தவிர பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், வரும் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. கேப்டன் மில்லர்  அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம், ’கேப்டன் மில்லர்’. தனுஷ் நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். வரலாற்று திரைப்படமாக உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் இந்த ஆண்டு வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது குறிப்பிடத்தக்கது. மாவீரன் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம், ‘மாவீரன்’. அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடிக்கிறார். பரத் சங்கர் இசையமைப்பில் அண்மையில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படமும் இந்த ஆண்டே வெளியாக இருக்கிறது. தங்கலான் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள படம், 'தங்கலான்’. இதில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ’கே.ஜி.எஃப்’ பட பாணியில் தங்கம் எடுக்கும் தொழிலாளர்களை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படமும் இந்த ஆண்டு வெளியாக இருக்கிறது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம், ’ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ், நடித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்தியன் 2 நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம், ‘இந்தியன் 2’. இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார். கடந்த 1996ல் வெளிவந்த ’இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படமும் இந்த ஆண்டு வெளியாக இருக்கிறது. ஜெயிலர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்திருக்கும் படம், 'ஜெயிலர்'. இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் தீபாவளி வெளியீடாக இருக்கும் எனச் சொல்லப்பட்ட நிலையில், அதற்கு முன்பாகவே இப்படத்தை ரிலீஸ் செய்யும் நோக்கில் படக்குழு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பொன்னியின் செல்வன் 2 கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து, இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. இதன் இரண்டாம் பாகத்தையும் இயக்குநர் மணிரத்னமே இயக்கி உள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, பிரபு, விக்ரம் பிரபு, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம், வரும் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது. லியோ லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம், ‘லியோ’. இதில் த்ரிஷா, கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ள இப்படத்தை, செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படமும் இந்த ஆண்டே வெளியாக இருக்கிறது. 42 ’சிறுத்தை’ சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் படம் ’42’. சூர்யாவின் 42வது படமாக அமையும், இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்துள்ளார். இந்தப் படத்தின் ‘பெயர்’ மற்றும் டீசர் வரும் மே மாதம் வெளியாகும் எனச் சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்தப் படத்தின் ரிலீஸ், வரும் டிசம்பர் மாதத்திலோ அல்லது அடுத்த ஜனவரி மாதத்திலோ ரிலீஸாகலாம் எனச் சொல்லப்படுகிறது. ஏ.கே. 62 நடிகர் அஜித்குமார் நடிப்பில், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'ஏகே 62' படம் உருவாவதாகவும், இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைப்பார் எனவும் அறிவிப்பு வெளியானது. ஆனால், அடுத்த அப்டேட்டில், இப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகி இருப்பதாகவும், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குவார் எனவும் தகவல் வெளியானது. என்றாலும், இந்தப் படத்தின் அடுத்த அப்டேட்கள் இன்னும் வரவில்லை. விரைவில் இதற்கான அப்டேட்கள் வெளியானால் இந்தப் படமும் இந்த ஆண்டே வெளியாகும் எனச் சொல்லப்படுகிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
ஆண்டுதோறும் உலக அளவில் ஆயிரக்கணக்கான படங்கள் வெளியாகின்றன. அதிலும் தமிழ் சினிமாவில் மட்டும் 100க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின்றன. அதில், குறிப்பாக இந்த ஆண்டு மட்டும் ரிலீஸாக முன்னணி நடிகர்கள் நடித்திருக்கும் சில படங்கள் குறித்த பட்டியலைப் பார்ப்போம்.  இந்த மாதம் முடிய இன்னும் ஒருசில நாட்களே உள்ளன. அந்த நாட்களிலும் சில படங்கள் வெளியாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழரசன் - மார்ச் 30 பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனி, சுரேஷ் கோபி, ரம்யா நம்பீசன், சோனு சூட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்தாண்டே ரிலீசுக்கு தயாரான இப்படம் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் இப்படம் மார்ச் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாகத் தெரிகிறது. பத்து தல - மார்ச் 30 இயக்குநர் ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் 'பத்து தல'. பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கலையரசன், மலையாள நடிகை அனு சித்தாரா ஆகியோர் நடித்துள்ள படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தி...

”அடிச்சு கேட்பாங்க அப்பவும் சொல்லிடாதீங்க”.. லியோ அப்டேட்டும்.. GVM கலகல பதிலும்! இயக்குநரும் நடிகருமான கெளதம் வாசுதேவ் மேனன், நடிகர் விஜய்யின் ‘லியோ’ படம் குறித்து சில சுவாரஸ்ய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். ‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் ‘லியோ’. சென்னையை தொடர்ந்து, கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக காஷ்மீரில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. கடும்குளிரையும் பொருட்படுத்தாமல் 500-க்கும் மேற்பட்டோரை வைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்புதான் காஷ்மீரில் படப்பிடிப்பு நிறைவடைந்தது. அங்கு நடந்த படப்பிடிப்பில் விஜய்யுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிரபல மலையாள நடிகர் பாபு ஆண்டனி, இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், த்ரிஷா உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், ’லியோ’ படம் குறித்து இயக்குநரும் நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் சில சுவாரஸ்ய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். காஷ்மீரில் படப்பிடிப்பு பணிகள் முடிந்து விட்டதாகவும் அடுத்தது சென்னையில்தான் படப்பிடிப்பு பணிகள் தொடங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், முக்கியமான ஒரு கேள்விக்கு மிகவும் கலகலப்பான பதில் ஒன்றினை அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதாவது கவுதம் மேனன் பங்கேற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் ஏராளமானோர் சூழ்ந்த கூட்டத்தின் மத்தியில் பேசிக் கொண்டிருக்கிறார். அங்கிருந்த இளைஞர் பட்டாளம் லியோ பட அப்டேட் கேட்டு பெரிய அளவில் ஆரவாரமிட்டனர். அப்போதுதான் படத்தின் அடுத்த அப்டேட் குறித்த ரசிகர்களின் கேள்வியை மிகவும் சாதுர்யமாக கௌதம் எதிர்கொண்டுள்ளார், அந்த வீடியோவில் “என்னுடைய நண்பர் லோகேஷ் கனகராஜ் மிகவும் கண்டிப்பு மிக்கவர். அவர் என்னிடம் ‘சார், படத்தோட அப்டேட் பற்றி கேட்பார்கள்; படத்தைப் பற்றி எதையும் சொல்லிவிடாதீர்கள். ஒருவேளை, அவர்கள் கட்டாயப்படுத்திக் கேட்டால் படப்பிடிப்பு மிகவும் நன்றாக இருந்தது என்று மட்டும் சொல்லுங்கள்’ என்று கூறியிருக்கார்.. உண்மையில் படப்பிடிப்பு நன்றாகவே இருந்தது” என்றார் கலகலப்பாக. அத்துடன், ”நடிகர் விஜய் உடன் பணியாற்றியது மிகவும் அற்புதமானதாக இருந்தது” என்றும் அவர் கூறினார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
இயக்குநரும் நடிகருமான கெளதம் வாசுதேவ் மேனன், நடிகர் விஜய்யின் ‘லியோ’ படம் குறித்து சில சுவாரஸ்ய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். ‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் ‘லியோ’. சென்னையை தொடர்ந்து, கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக காஷ்மீரில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. கடும்குளிரையும் பொருட்படுத்தாமல் 500-க்கும் மேற்பட்டோரை வைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்புதான் காஷ்மீரில் படப்பிடிப்பு நிறைவடைந்தது. அங்கு நடந்த படப்பிடிப்பில் விஜய்யுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிரபல மலையாள நடிகர் பாபு ஆண்டனி, இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், த்ரிஷா உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், ’லியோ’ படம் குறித்து இயக்குநரும் நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் சில சுவாரஸ்ய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். காஷ்மீரில் படப்பிடிப்பு பணிகள் முடிந்து விட்டதாகவும் அடுத்தது சென்னையில்தான் படப்பிடிப்பு பணிகள் தொடங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், முக்கியமான ஒரு கேள்விக்கு மிக...

முதல் நாள் இன்ஸ்டாவில் வீடியோ.. மறுநாள் சடலமாக ஹோட்டலில் மீட்பு - போஜ்புரி நடிகை தற்கொலை? பிரபல போஜ்புரி நடிகை அகன்ஷா துபே உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அகன்ஷா துபே 2019 ஆம் ஆண்டில் 'மேரி ஜங் மேரா ஃபைஸ்லா' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.  இந்தப் படத்தில் அவர் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார்.  இதற்குப் பிறகு, நடிகை 'முஜ்சே ஷாதி கரோகி' மற்றும் 'சாஜன்' போன்ற படங்களில் தனது அற்புதமான நடிப்புத் திறனைக் காட்டி இருந்தார். . நேற்று இரவு,  படப்பிடிப்பிற்குப் பிறகு உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் ஹோட்டலில் தங்குவதற்காக அகன்ஷா சென்றிருந்தார். இந்நிலையில் தூக்கில் தொங்கியபடி அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. நடிகையின் மரணம் தற்கொலையா? அல்லது கொலையா? தற்கொலை என்றால் அதற்கான காரணம் என்ன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று இரவு கூட கடைசியாக இன்ஸ்டாகிராமில் நடனமாடும் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ள ஆகான்ஷா துபே இன்று திடீரென தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தது ஏராளமான சந்தேகங்களை எழுப்பி உள்ளது. சக திரையுலகினர் மற்றும் நடிகையின் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியில் மூழ்கி உள்ளனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
பிரபல போஜ்புரி நடிகை அகன்ஷா துபே உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அகன்ஷா துபே 2019 ஆம் ஆண்டில் 'மேரி ஜங் மேரா ஃபைஸ்லா' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.  இந்தப் படத்தில் அவர் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார்.  இதற்குப் பிறகு, நடிகை 'முஜ்சே ஷாதி கரோகி' மற்றும் 'சாஜன்' போன்ற படங்களில் தனது அற்புதமான நடிப்புத் திறனைக் காட்டி இருந்தார். . நேற்று இரவு,  படப்பிடிப்பிற்குப் பிறகு உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் ஹோட்டலில் தங்குவதற்காக அகன்ஷா சென்றிருந்தார். இந்நிலையில் தூக்கில் தொங்கியபடி அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. நடிகையின் மரணம் தற்கொலையா? அல்லது கொலையா? தற்கொலை என்றால் அதற்கான காரணம் என்ன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று இரவு கூட கடைசியாக இன்ஸ்டாகிராமில் நடனமாடும் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ள ஆகான்ஷா துபே இன்று திடீரென தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தது ஏராளமான சந்தேகங்களை எழுப்பி உள்ளது. சக திரையுலகினர் மற்றும் ...

‘விஜய் சொன்னது இன்ப அதிர்ச்சியாக இருந்தது’ - ‘லியோ’ பட அனுபவத்தை பகிர்ந்த பிரபல நடிகர்! விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் ‘லியோ’ படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வை, பிரபல மலையாள நடிகர் பாபு ஆண்டனி தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். ‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் ‘லியோ’. சென்னையை தொடர்ந்து, கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக காஷ்மீரில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. கடும்குளிரையும் பொருட்படுத்தாமல் 500-க்கும் மேற்பட்டோரை வைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்புதான் காஷ்மீரில் படப்பிடிப்பு நிறைவடைந்தது. அங்கு நடந்த படப்பிடிப்பில் விஜய்யுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிரபல மலையாள நடிகர் பாபு ஆண்டனி, இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், த்ரிஷா உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், தமிழில் சத்யராஜின் ‘பூவிழி வாசலிலே’, ‘பேர் சொல்லும் பிள்ளை’, ‘சூரியன்’, ‘அஞ்சலி’ உள்ளிட்டப் படங்களில் வில்லனாகவும், தற்போது குணசித்திர நடிகராகவும் நடித்து வரும் பாபு ஆண்டனி தனது சமூகவலைத்தளம் வாயிலாக ‘லியோ’ படப்பிடிப்புத் தளத்தில் விஜய்யுடன் பேசியபோது நடந்த சுவாரஸ்ய நிகழ்வைப் பகிர்ந்துள்ளார். அதில், “இளைய தளபதி விஜய் சார், மிகவும் பணிவாகவும், அன்பாகவும் நடந்து கொண்டார். நான் நடித்த ‘பூவிழி வாசலிலே’, ‘சூரியன்’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ போன்ற திரைப்படங்களை அவர் மிகவும் ரசித்ததாகவும், அவர் எனது ரசிகர் என்றும் கூறினார். அது எனக்கு மிகவும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அவரைப் போன்ற ஒருவரிடமிருந்து இதுபோன்ற வார்த்தைகளை கேட்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். மேலும் லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழுவினர் அனைவருமே அன்புடன் நடந்துக்கொண்டார்கள். இவ்வாறு கிடைப்பது ஒரு வரம். இத்தனைக்கும் விஜய் மற்றும் அனைவரையும் இப்போதுதான் முதல்முறையாக சந்தித்தேன்” என வியப்புடன் அவர் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டுள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் ‘லியோ’ படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வை, பிரபல மலையாள நடிகர் பாபு ஆண்டனி தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். ‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் ‘லியோ’. சென்னையை தொடர்ந்து, கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக காஷ்மீரில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. கடும்குளிரையும் பொருட்படுத்தாமல் 500-க்கும் மேற்பட்டோரை வைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்புதான் காஷ்மீரில் படப்பிடிப்பு நிறைவடைந்தது. அங்கு நடந்த படப்பிடிப்பில் விஜய்யுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிரபல மலையாள நடிகர் பாபு ஆண்டனி, இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், த்ரிஷா உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், தமிழில் சத்யராஜின் ‘பூவிழி வாசலிலே’, ‘பேர் சொல்லும் பிள்ளை’, ‘சூரியன்’, ‘அஞ்சலி’ உள்ளிட்டப் படங்களில் வில்லனாகவும், தற்போது குணசித்திர நடிகராகவும் நடித்து வரும் பாபு ஆண்டனி தனது சமூகவலைத்தளம் வாயிலாக ‘லியோ’ படப்பிடிப்புத் தளத்தில் விஜ...

‘வாட்ஸ் அப் உலகத்தில் உண்மையைவிட பொய் செய்தி அதிகமாக பரவுகிறது’ - அமைச்சர் உதயநிதி! “வாட்ஸ் அப் மூலம் வரும் தகவல்களில் எது உண்மை செய்தி, எது பொய் செய்தி என்பதை அறிந்துகொள்ளும் பகுத்தறிவை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்; உண்மை செய்தியை விட பொய் செய்தி வேகமாக பரவுகிறது” என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை பெருநகர காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட போதைப் பொருட்களுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை குறித்த குறும்படப் போட்டியில் வெற்றிபெற்ற நபர்களுக்கு பரிசுகளை வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தப் போதைப்பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிரான போராட்டத்தில் இளைஞர்களை ஈடுபடுத்தும் நோக்கில் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆதரவுடன் நடத்தப்பட்ட குறும்பட போட்டியில் 289 பதிவுகள் பெறப்பட்ட நிலையில், அதில் வெற்றிபெற்ற 4 குழுக்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பின்னர், காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேசுகையில், “பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை கட்டாயம் பாதுகாக்க வேண்டும். அதனையும் தாண்டி போதைப் பொருட்களை ஒழிக்க சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் தெரிவித்தார். கடந்த 2 ஆண்டுகளில் 2 விதங்களில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். ஒருபக்கம் இதுவரை இல்லாத அளவிற்கு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மற்றொருபுறம் போதைப்பொருட்கள் தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். அந்த நேரத்தில்தான் குறும்படங்கள் போட்டி நடத்துவது குறித்த ஆலோசனை வந்தது. எத்தனை நபர்கள் இதில் பங்கேற்பார்கள் என சந்தேகம் இருந்தது. இருந்தாலும் குறைந்த நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட குறும்படங்கள் வந்துள்ளன. அவற்றில் முதல் 3 இடங்களை பிடித்த நபர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. இந்த குறும்படங்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒளிபரப்பு செய்யபடும். நிச்சயம் போதைப்பொருட்களை ஒழிக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார். நிகழ்வில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “நிறைய நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபெருக்கி மூலம் போடப்படுகின்ற நேரத்தில், யாரும் பாடாமல் இருப்பார்கள். இன்றைய நிகழ்ச்சியில் மாணவர்கள் எழுச்சியோடு பாடினார்கள். அனைத்து நிகழ்ச்சியிலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தொடர்ந்து மேற்கொண்டு வரும் நேரத்தில் மாணவர்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தற்போது எங்கும் வாட்ஸ் அப் உலகமாக உள்ளது. அதில் வரும் செய்தி உண்மையா, பொய்யா என தெரியாமல் அதனை பகிர்ந்து வருகிறோம். எனவே மாணவர்கள் உண்மையான செய்தி எது, பொய் எது என்பதை அறிந்துகொள்ள பகுத்தறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். உண்மை செய்தி செல்ல அதிக நேரம் எடுக்கும் நேரத்தில், பொய் செய்தி வேகமாக பரவுகிறது” என்று தெரிவித்தார். இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்துள்ள ட்வீட்டில், “போதைப்பொருட்கள் ஒழிப்பில் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுடன் விழிப்புணர்வுக்கான பரப்புரைகளைச் செய்திட வேண்டுமெனத் தொடர்ந்து கூறிவருகிறேன். இத்தகைய குறும்படங்களால் இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட முடியும். பாராட்டுகள்! போதைப் பொருட்கள் ஒழிப்பில் அனைவரும் கைக்கோர்த்திடுவோம்!” என்று தெரிவித்துள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
“வாட்ஸ் அப் மூலம் வரும் தகவல்களில் எது உண்மை செய்தி, எது பொய் செய்தி என்பதை அறிந்துகொள்ளும் பகுத்தறிவை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்; உண்மை செய்தியை விட பொய் செய்தி வேகமாக பரவுகிறது” என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை பெருநகர காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட போதைப் பொருட்களுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை குறித்த குறும்படப் போட்டியில் வெற்றிபெற்ற நபர்களுக்கு பரிசுகளை வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தப் போதைப்பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிரான போராட்டத்தில் இளைஞர்களை ஈடுபடுத்தும் நோக்கில் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆதரவுடன் நடத்தப்பட்ட குறும்பட போட்டியில் 289 பதிவுகள் பெறப்பட்ட நிலையில், அதில் வெற்றிபெற்ற 4 குழுக்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பின்னர், காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேசுகையில், “பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை கட்டாயம் பாதுகாக்க வேண்டும். அதனையும் தாண்டி போதைப் பொருட்களை...

”என்னுடைய படங்களில் இதுபோன்ற காட்சிகளை நான் எடுத்ததில்லை” - இயக்குநர் விக்னேஷ் சிவன் “நான் இதுவரை என்னுடைய படங்களில் குடிப்பது, புகைப்பிடிப்பது போல் படம் எடுத்ததில்லை” என்று இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். சென்னை பெருநகர காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட போதைப் பொருட்களுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை குறித்த குறும்படப் போட்டியில் வெற்றிபெற்ற நபர்களுக்கு பரிசுகளை வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள திரையரங்கு ஒன்றில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் கலந்து கொண்டனர். போதைப் பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிரான இந்தப் போராட்டத்தில் இளைஞர்களை ஈடுபடுத்தும் நோக்கில் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆதரவுடன் நடத்தப்பட்ட குறும்பட போட்டியில் 289 பதிவுகள் பெறப்பட்ட நிலையில், அதில் வெற்றி பெற்ற 4 குழுக்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் விக்னேஷ் சிவன், “திரைத்துறையில் போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த குறும்பட போட்டி என்பது ஒரு தொடக்கமாக அமைந்துள்ளது. இதுபோன்ற விசயங்களை படமாக எடுக்க முடியாது, அதற்காக தான் குறும்படமாக எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும். சினிமாவில் போதைப் பழக்கம் காட்சிகள் இல்லாமல் காண்பிப்பது நல்லது தான்; இது குறித்து காவல்துறை கூட அறிவுறுத்தி உள்ளது.  போதைப்பொருள் பயன்படுத்தும் காட்சிகள் படங்களில் வரும் பொழுது கீழேயே விழிப்புணர்வு ஏற்படுத்த கார்டு போடப்படுகிறது. தற்பொழுது அதுபோன்ற காட்சிகள் சினிமாவில் குறைந்துள்ளது; போகப் போக அது குறைத்து கொள்ளப்படும். மேலும், சில இயக்குநர்கள் அதுபோன்ற காட்சிகளை எடுக்காமல் இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறேன். சென்னையைப் போல், கோவையில் லோகேஷ் கனகராஜ் முயற்சியில் இதுபோன்ற விழிப்புணர்வு குறும்பட நிகழ்ச்சி நடைபெறுகிறது. காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த எடுக்கும் முயற்சியில் நானும் ஒரு பங்காக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் போதை பழக்கம் உடையவர்கள் தாமாக முன்வந்து திருந்த வேண்டும் என்று நினைத்தால் மட்டும்தான் திருந்த முடியும். நான் இதுவரையும் என்னுடைய படங்களில் குடிப்பது, புகைப் பிடிப்பது போல படம் எடுத்ததில்லை. அது போன்ற காட்சிகள் படங்களில் வைக்கும் பொழுது படம் தொடங்குவதற்கு முன்னதாகவே அது குறித்து விழிப்புணர்வு கார்டு போடப்படும்; ஆனால் என் படங்களில் அது போன்ற கார்டு போடப்பட்டது இல்லை. 'நானும் ரவுடிதான்' படம் புதுச்சேரியில் எடுத்தேன். அந்தப் படத்தில் கூட குடிப்பது போன்ற காட்சிகள் எதுவும் வைக்கவில்லை. என்னால் முடிந்தவரை என்னுடைய நண்பர்கள், என் படத்தில் வரும் ஹீரோக்களை குடிக்க விடாமல் நானும் பார்த்துக் கொள்கிறேன். குழந்தைகள்தான் அதிகமாக படங்கள் பார்க்கிறார்கள், அவர்களை பாதிக்காத வகையிலும், தீய பழக்கத்திற்கு கொண்டு போகாத வகையிலும் படம் எடுத்தால் நன்றாக இருக்கும்” என்றார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
“நான் இதுவரை என்னுடைய படங்களில் குடிப்பது, புகைப்பிடிப்பது போல் படம் எடுத்ததில்லை” என்று இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். சென்னை பெருநகர காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட போதைப் பொருட்களுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை குறித்த குறும்படப் போட்டியில் வெற்றிபெற்ற நபர்களுக்கு பரிசுகளை வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள திரையரங்கு ஒன்றில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் கலந்து கொண்டனர். போதைப் பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிரான இந்தப் போராட்டத்தில் இளைஞர்களை ஈடுபடுத்தும் நோக்கில் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆதரவுடன் நடத்தப்பட்ட குறும்பட போட்டியில் 289 பதிவுகள் பெறப்பட்ட நிலையில், அதில் வெற்றி பெற்ற 4 குழுக்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் விக்னேஷ் சிவன், “திரைத்துறையில் போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த குறும்பட போட்டி என்பது ஒரு தொடக்கமாக அமைந்துள்ளது. இதுபோன்ற விசயங்களை படமாக எடுக்க முடியாது, அதற்காக தான் குறும்படமாக எ...

பாடலாசிரியர் பா. விஜய் இயக்கும் படத்தில் ஜீவா, அர்ஜூன் - மேதாவியா; புதியக் கதையா? ஜீவா - அர்ஜூன் நடிக்கும் பீரியட் ஆக்‌ஷன் படத்தை பாடாலாசிரியர் பா. விஜய் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1996-ம் ஆண்டு கே. பாக்யராஜ் நடிப்பில் உருவான ‘ஞானப்பழம்’ படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமான பா.விஜய், முன்னணி நடிகர்களின் பல படங்களுக்கும் பாடல் எழுதியுள்ளார். பின்னர் ‘ஞாபகங்கள்’ படத்தின் வாயிலாக நடிகராகவும் அறிமுகமானதுடன், ‘ஸ்ட்ராபெர்ரி’ படத்தை இயக்கி நடித்திருந்தார். தொடர்ந்து, ‘ஆருத்ரா’ படத்தை இயக்கியிருந்த நிலையில், தற்போது ஜீவா, அர்ஜூன் நடிக்கும் புதியப் படத்தை பா. விஜய் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்தக் கூட்டணியில், கடந்த 2020-ம் ஆண்டு ‘மேதாவி’ என்ற ஹாரர் த்ரில்லர் படம் உருவாக உள்ளதாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவிப்பு வெளியானது. ஆனால், கொரோனா ஊரடங்கு மற்றும் இந்தப் படத்தில் நடிக்க இருத்த ரஷ்யப் பெண் உயிரிழந்தது ஆகியவற்றின் காரணமாக படம் ஒத்திவைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், பா.விஜய் இயக்கும் புதியப் படத்தில் ஜீவா - அர்ஜூன் நடிக்க, ஐசரி கணேஷ் தயாரிக்கவுள்ளார். பீரியட் டிராமாவாக உருவாக உள்ள இந்தப் படத்திற்காக, ஹைதராபாத் ராமேஜி ராவ் ஃபிலிம் சிட்டியில், பிரம்மாண்ட செட் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், பெரும்பாலான பகுதிகள் இங்கு படம் பிடிக்கப்பட்டப்பின், உதகை மற்றும் கொடைக்கானலில் படப்பிடிப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் ஜீவாவுடன் ராசி கண்ணா நடிக்கவுள்ளார். புதியக் கதையில் நடிப்பதால், ‘மேதாவி’ படம் மீண்டும் உருவாகுமா; இல்லை கைவிடப்பட்டு விட்டதா என்று விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
ஜீவா - அர்ஜூன் நடிக்கும் பீரியட் ஆக்‌ஷன் படத்தை பாடாலாசிரியர் பா. விஜய் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1996-ம் ஆண்டு கே. பாக்யராஜ் நடிப்பில் உருவான ‘ஞானப்பழம்’ படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமான பா.விஜய், முன்னணி நடிகர்களின் பல படங்களுக்கும் பாடல் எழுதியுள்ளார். பின்னர் ‘ஞாபகங்கள்’ படத்தின் வாயிலாக நடிகராகவும் அறிமுகமானதுடன், ‘ஸ்ட்ராபெர்ரி’ படத்தை இயக்கி நடித்திருந்தார். தொடர்ந்து, ‘ஆருத்ரா’ படத்தை இயக்கியிருந்த நிலையில், தற்போது ஜீவா, அர்ஜூன் நடிக்கும் புதியப் படத்தை பா. விஜய் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்தக் கூட்டணியில், கடந்த 2020-ம் ஆண்டு ‘மேதாவி’ என்ற ஹாரர் த்ரில்லர் படம் உருவாக உள்ளதாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவிப்பு வெளியானது. ஆனால், கொரோனா ஊரடங்கு மற்றும் இந்தப் படத்தில் நடிக்க இருத்த ரஷ்யப் பெண் உயிரிழந்தது ஆகியவற்றின் காரணமாக படம் ஒத்திவைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், பா.விஜய் இயக்கும் புதியப் படத்தில் ஜீவா - அர்ஜூன் நடிக்க, ஐசரி கணேஷ் தயாரிக்கவுள்ளார். பீரியட் டிராமாவாக உருவாக உள்ள இந்தப் படத்திற்காக, ஹைதராபாத் ராமேஜி ராவ்...

பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலை தற்போது எப்படி உள்ளது? - குடும்பத்தினர் வெளியிட்ட தகவல் பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலை தொடர்பான தகவலை அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர். தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியவர் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ. தமிழில் ‘மின்னலே’ திரைப்படத்தில் இடம்பெற்ற வசீகரா பாடலை பாடியதன் மூலம் இங்கு புகழ்பெற்றார். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கி பல முன்னனி இசையமைப்பாளர்களின் இசைகளில், ஏராளமான பாடல்களை இவர் பாடியுள்ளார். இந்த நிலையில் இசை நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க சமீபத்தில் லண்டன் சென்ற பாம்பே ஜெயஸ்ரீ, அங்கே தங்கியிருந்த விடுதியில் தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர் சுயநினைவை இழந்ததாகவும், அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும் நேற்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினர் ட்விட்டரில் இன்று தகவல் பகிர்ந்துள்ளனர். அதில், “பாம்பே ஜெயஸ்ரீக்கு இங்கிலாந்தில் வைத்து உடல்நிலை சரியில்லாமல் போனது. உரிய நேரத்தில் அவருக்கு சிகிச்சையும் வழங்கப்பட்டது. அவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. வேகமாக குணமடைந்து வருகிறது. இன்னும் 2 நாட்களுக்கு அவர் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் பாம்பே ஜெயஸ்ரீயின் குடும்பம், ப்ரைவசியையும் உங்கள் ஆதரவையும் கோருகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது. Bombay Jayashri had a health set back in the United Kingdom and received timely medical interventions. She is currently stable and recovering well, she requires rest for a couple of days. Bombay Jayashri's family requests privacy and your support during this period. — Bombay Jayashri (@Bombay_Jayashri) March 25, 2023 Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலை தொடர்பான தகவலை அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர். தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியவர் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ. தமிழில் ‘மின்னலே’ திரைப்படத்தில் இடம்பெற்ற வசீகரா பாடலை பாடியதன் மூலம் இங்கு புகழ்பெற்றார். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கி பல முன்னனி இசையமைப்பாளர்களின் இசைகளில், ஏராளமான பாடல்களை இவர் பாடியுள்ளார். இந்த நிலையில் இசை நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க சமீபத்தில் லண்டன் சென்ற பாம்பே ஜெயஸ்ரீ, அங்கே தங்கியிருந்த விடுதியில் தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர் சுயநினைவை இழந்ததாகவும், அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும் நேற்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினர் ட்விட்டரில் இன்று தகவல் பகிர்ந்துள்ளனர். அதில், “பாம்பே ஜெயஸ்ரீக்கு இங்கிலாந்தில் வைத்து உடல்நிலை சரியில்லாமல் போனது. உரிய நேரத்தில் அவருக்கு சிகிச்சையும் வழங்கப்பட்டது. அவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது...

பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீ இங்கிலாந்து மருத்துவமனையில் அனுமதி! பிரபல கர்நாடக இசைக் கலைஞரும், திரைப் பின்னணி பாடகியுமான பாம்பே ஜெயஸ்ரீ, மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக, இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இசைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவரான பாடகி பாம்பே ஜெயஸ்ரீ, லால்குடி ஜெயராமன், டி.ஆர். பாலாமணி ஆகியோரிடம் வாய்ப்பாட்டு கற்றவர். கடந்த 2021-ம் ஆண்டு, மத்திய அரசின் உயரிய விருதான ‘பத்ம ஸ்ரீ’ விருதையும் பெற்று கௌரவிக்கப்பட்டுள்ளார். கர்நாடக இசை ரசிகர்களை தனது ‘வசீகர’ குரலால் கவர்ந்த இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளைச் சேர்ந்த திரைப்படங்களிலும் பாடியுள்ளார் பாம்பே ஜெயஸ்ரீ. கல்கத்தாவில், தமிழ் குடும்பத்தில் பிறந்த பாம்பே ஜெயஸ்ரீ, ஜி.என். தண்டபாணி ஐயரிடம் வீணையும், பின்னாளில் இந்துஸ்தானி கிளாஸிக்கல் இசையையும் கற்றுள்ளார். எம்.எஸ். விஸ்வநாதன் துவங்கி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், எம்.எம்.கீரவாணி, ஹாரிஸ் ஜெயராஜ், ஷங்கர், இமான், யுவன் சங்கர் ராஜா, கோவிந்த் வசந்தா வரை பலரின் இசையில் பாடியுள்ளார். குறிப்பாக, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் - பாடலாசிரியர் தாமரை - இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் - பாடகி பாம்பே ஜெயஸ்ரீ ஆகியோரின் கூட்டணியில் வெளியானப் பாடல்களுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது என்றே கூறலாம். அதிலும், ‘மின்னலே’ படத்தில் வரும் ‘வசீகரா’ பாடல் காலத்திற்கும் ரசிகர்களின் நினைவில் நிற்பவை. ‘லைஃப் ஆஃப் பை’ படத்தில் இவர் பாடிய தாலாட்டு பாடல், 2012-ம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு சிறந்த பாடல்கள் பிரிவில் நாமினேட் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இசை நிகழ்ச்சிக்காக, பாம்பே ஜெயஸ்ரீ இங்கிலாந்து சென்றுள்ள நிலையில், மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, அவர் தங்கியிருந்த ஓட்டலில் சுயநினைவற்ற நிலையில் கீழே விழுந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உடல்நிலை சீரானதும், சென்னை வருவார் என்று சொல்லப்படுகிறது. பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலை சீராக, ரசிகர்களும், பிரபலங்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். ‘சங்கீத கலாநிதி’ விருதுக்கு பாம்பே ஜெயஸ்ரீ தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி கடந்த ஞாயிறன்றுதான் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. Having a great time with Bombay Jayashri Akka at Liverpool, United Kingdom. I’m sooooo happy for her on being conferred with the prestigious title “Sangita Kalanidhi” for the year 2023 by The Madras Music Academy, Chennai.@Bombay_Jayashri #BombayJayashri pic.twitter.com/h5J4b1STkD — Ghatam GiridharUdupa (@ghatamudupa) March 21, 2023 Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
பிரபல கர்நாடக இசைக் கலைஞரும், திரைப் பின்னணி பாடகியுமான பாம்பே ஜெயஸ்ரீ, மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக, இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இசைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவரான பாடகி பாம்பே ஜெயஸ்ரீ, லால்குடி ஜெயராமன், டி.ஆர். பாலாமணி ஆகியோரிடம் வாய்ப்பாட்டு கற்றவர். கடந்த 2021-ம் ஆண்டு, மத்திய அரசின் உயரிய விருதான ‘பத்ம ஸ்ரீ’ விருதையும் பெற்று கௌரவிக்கப்பட்டுள்ளார். கர்நாடக இசை ரசிகர்களை தனது ‘வசீகர’ குரலால் கவர்ந்த இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளைச் சேர்ந்த திரைப்படங்களிலும் பாடியுள்ளார் பாம்பே ஜெயஸ்ரீ. கல்கத்தாவில், தமிழ் குடும்பத்தில் பிறந்த பாம்பே ஜெயஸ்ரீ, ஜி.என். தண்டபாணி ஐயரிடம் வீணையும், பின்னாளில் இந்துஸ்தானி கிளாஸிக்கல் இசையையும் கற்றுள்ளார். எம்.எஸ். விஸ்வநாதன் துவங்கி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், எம்.எம்.கீரவாணி, ஹாரிஸ் ஜெயராஜ், ஷங்கர், இமான், யுவன் சங்கர் ராஜா, கோவிந்த் வசந்தா வரை பலரின் இசையில் பாடியுள்ளார். குறிப்பாக, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் - பாடலாசிரியர் தாமரை - இயக்குநர் கௌதம்...

நடிகர் அஜித்தின் தந்தை உடல் தகனம் - ஆறுதல் கூறிய திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியத்தின் உடல், பெசன்ட் நகர் மயானத்தில் இறுதி சடங்குகளுக்குப் பின்னர் தகனம் செய்யப்பட்டது.  இந்நிலையில், நடிகர் அஜித் வீட்டிற்கு சென்று நடிகர் விஜய் ஆறுதல் கூறினார். நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை 4.30 மணி அளவில் காலமானார். கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக பக்கவாதத்துக்கு அவர் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலையில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது. இதையடுத்து 85 வயதாகும் சுப்பிரமணியம் உடல் அஞ்சலிக்காக ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டது. உறவினர்கள், நண்பர்கள் என பலரும் நேரில் சென்று அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினர். அமைச்சர் உதயநதி ஸ்டாலின், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரும் நேரில் சென்று மரியாதை செலுத்தினர்.  அதேபோல் நடிகர்கள் விஜய், பார்த்திபன், பிரசன்னா, மிர்ச்சி சிவா, இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.எல்.விஜய் மற்றும் தயாரிப்பாளர் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தியாகராஜன் உள்ளிட்டோரும சென்று மரியாதை செலுத்தினர். மேலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, சுப்பிரமணியம் உடல் பெசன்ட் நகர் மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். தந்தையின் உடலை அஜித் கனத்த இதயத்துடன் எடுத்துச் சென்றார். அங்கு வைத்து இறுதிச்சடங்குகள் மேற்கொள்ளப்பட்ட பின், சுமார் நண்பகல் 12 மணியளவில், சிவசுப்பிரமணியம் உடல் மின் மயானத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியத்தின் உடல், பெசன்ட் நகர் மயானத்தில் இறுதி சடங்குகளுக்குப் பின்னர் தகனம் செய்யப்பட்டது.  இந்நிலையில், நடிகர் அஜித் வீட்டிற்கு சென்று நடிகர் விஜய் ஆறுதல் கூறினார். நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை 4.30 மணி அளவில் காலமானார். கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக பக்கவாதத்துக்கு அவர் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலையில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது. இதையடுத்து 85 வயதாகும் சுப்பிரமணியம் உடல் அஞ்சலிக்காக ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டது. உறவினர்கள், நண்பர்கள் என பலரும் நேரில் சென்று அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினர். அமைச்சர் உதயநதி ஸ்டாலின், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரும் நேரில் சென்று மரியாதை செலுத்தினர்.  அதேபோல் நடிகர்கள் விஜய், பார்த்திபன், பிரசன்னா, மிர்ச்சி சிவா, இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.எல்.விஜய் மற்றும் தயாரிப்பாளர் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தியாகராஜன் உள்ளிட்டோரும சென்று மரியாதை செலுத்தினர். மேலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலை...

புகாரைவிட கூடுதலான நகைகளை கைப்பற்றிய போலீசார் - ஐஸ்வர்யாவிடம் விசாரணை நடத்த திட்டம்? லாக்கரில் இருந்த நகைகள் காணாமல் போன வழக்கில், நடிகர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டு லாக்கரில் இருந்து நகைகள் திருடிய வழக்கில் வீட்டில் வேலை செய்த பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் கார் ஓட்டுநர் வெங்கடேசன் ஆகிய இருவர் தேனாம்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஈஸ்வரிடமிருந்து 100 சவரன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் வீட்டு சொத்து ஆவணங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ஐஸ்வர்யா வீட்டிலிருந்து திருடிய நகைகளை வைத்து, சோழிங்கநல்லூரில் ஈஸ்வரி 1 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை வாங்கியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் பினாமி தான் என்றும், அதனால் அவர்தான் தனது பெயரை பயன்படுத்தி அந்த வீட்டை வாங்கியிருப்பதாகவும், ஈஸ்வரி தனது குடும்பத்தாரிடம் சொல்லி வைத்ததும் விசாரணையில் அம்பலமானது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளதை விட கூடுதல் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதால், ஐஸ்வர்யாவின் வீட்டுக்குச் சென்றோ, அவரை வரவழைத்தோ விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். வீட்டுக்கு செல்லும்போது லாக்கரில் உள்ள நகைகள் பற்றி கேட்கவும் திட்டமிட்டுள்ளனர். போலீசில் புகார் அளித்தபோது சௌந்தர்யா திருமணத்தின் போது எடுத்த ஆல்பத்தையும் ஐஸ்வர்யா வழங்கியிருந்தார். அந்த ஆதாரத்துடன் ஒப்பிட்டு பார்த்து திருடப்பட்ட நகைகளை போலீசார் சரி பார்த்து வருகிறார்கள். நீதிமன்றத்தில் ஒப்படைக்க திருடப்பட்ட நகைகளின் ஆவணங்கள் குறித்தும் ஐஸ்வர்யாவிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
லாக்கரில் இருந்த நகைகள் காணாமல் போன வழக்கில், நடிகர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டு லாக்கரில் இருந்து நகைகள் திருடிய வழக்கில் வீட்டில் வேலை செய்த பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் கார் ஓட்டுநர் வெங்கடேசன் ஆகிய இருவர் தேனாம்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஈஸ்வரிடமிருந்து 100 சவரன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் வீட்டு சொத்து ஆவணங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ஐஸ்வர்யா வீட்டிலிருந்து திருடிய நகைகளை வைத்து, சோழிங்கநல்லூரில் ஈஸ்வரி 1 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை வாங்கியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் பினாமி தான் என்றும், அதனால் அவர்தான் தனது பெயரை பயன்படுத்தி அந்த வீட்டை வாங்கியிருப்பதாகவும், ஈஸ்வரி தனது குடும்பத்தாரிடம் சொல்லி வைத்ததும் விசாரணையில் அம்பலமானது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளதை விட கூடுதல் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதால்...

நடிகர் அஜித்தின் தந்தை மறைவு: ‘மருத்துவர்களுக்கு கடமைபட்டுள்ளோம்’- சகோதரர்கள் அறிக்கை நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 85. ‘துணிவு’ படத்துக்குப்பின், அடுத்தப் படத்திற்கான பணிகளுக்கு இடையே தனது குடும்பத்துடன் ஓய்வில் இருந்து வருகிறார் நடிகர் அஜித். இந்நிலையில், வயது மூப்பு மற்றும் நீண்ட நாள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் இன்று காலை உயிரிழந்தார். அஜித்தின் தந்தை, கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாகவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து, நடிகர் அஜித் மற்றும் அவரது சகோதரர்கள் சேர்ந்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்களது தந்தை பி.எஸ்.மணி பல நாட்களாக உடல்நலன் சரியின்றி இருந்து வந்த நிலையில், இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார். அவருக்கு வயது 85. கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த எங்களது தந்தையை அன்போடும், அக்கறையோடும் கவனித்து வந்தும், எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்தும் வந்த அனைத்து மருத்துவர்களுக்கும் நாங்கள் கடமைபட்டுள்ளோம்.  சுமார் அறுபது ஆண்டு காலமாக எங்களது தாயின் அன்போடும், அர்ப்பணிப்போடும் ஒரு நல்ல வாழ்க்கையை எங்களது தந்தை வாழ்ந்து வந்தார். இந்த துயர நேரத்தில், பலர் எங்கள் தந்தையின் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும், எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காகவும் எங்களை தொலைபேசியிலோ, அலைபேசியிலோ அழைப்பு விடுத்தோ அல்லது குறுந்தகவல் அனுப்பியோ விசாரித்து வருகின்றனர். தற்போதுள்ள இந்த சூழலில் எங்களால் உங்கள் அழைப்பை ஏற்கவோ அல்லது பதில் தகவல் அனுப்பவோ இயலாவிட்டால், எங்கள் சூழலை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம். எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க வேண்டும் என விரும்புகிறோம். எனவே இந்த இறப்பு தகவலை அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும், இழப்பையும் புரிந்துகொண்டு, குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும், இறுதிச் சடங்குகளை தனிப்பட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளனர். அஜித்தின் தந்தை மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 85. ‘துணிவு’ படத்துக்குப்பின், அடுத்தப் படத்திற்கான பணிகளுக்கு இடையே தனது குடும்பத்துடன் ஓய்வில் இருந்து வருகிறார் நடிகர் அஜித். இந்நிலையில், வயது மூப்பு மற்றும் நீண்ட நாள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த அஜித்தின் தந்தை சுப்பிரமணியம்  இன்று காலை உயிரிழந்தார். அஜித்தின் தந்தை, கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாகவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து, நடிகர் அஜித் மற்றும் அவரது சகோதரர்கள் சேர்ந்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்களது தந்தை பி.எஸ்.மணி பல நாட்களாக உடல்நலன் சரியின்றி இருந்து வந்த நிலையில், இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார். அவருக்கு வயது 85. கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த எங்களது தந்தையை அன்போடும், அக்கறையோடும் கவனித்து வந்தும், எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்தும் வந்த அனைத்து மருத்துவர்களுக்கும் நாங்கள் கடமைபட்டுள்ளோம்.  சுமார் அறுபது ஆண்டு காலமாக எங்களது தாய...