ஷங்கர், ராம் சரண் படத்தின் டைட்டில் அறிவிப்பு - மீண்டும் பொலிட்டிக்கல் த்ரில்லர் கதையா? ராம் சரண் - ஷங்கர் கூட்டணியில் தயாராகி வரும் ‘ஆர்.சி. 15’ படத்தின் டைட்டில் டீசர் அதிகாரபூர்வமாக இன்று வெளியாகியுள்ளது. பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில், நடிகர் ராம் சரண் நடித்து வரும் படத்திற்கு தற்காலிகமாக ‘ஆர்.சி. 15’ என்று பெயரிடப்பட்டு விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பெரும் பொருட் செலவில் தயாராகி வரும் இந்தப் படத்தில், ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. தமன் இசையமைக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ளார். இந்நிலையில் ராம் சரணின் இன்று தன்னுடைய 38- வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதையொட்டி இந்தப் படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளது படக்குழு. அதன்படி படத்திற்கு ‘கேம் சேஞ்சர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தேர்தல், வாக்குப்பதிவு, நாடாளுமன்றம், சட்டப்பேரவை ஆகியவற்றை மையப்படுத்தி டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. இதனால் ‘கேம் சேஞ்சர்’ என்றுப் பெயர் வைக்கப்பட்டுள்ளதால், இயக்குநர் ஷங்கரின் முந்தைய படங்களான ‘இந்தியன்’, ‘முதல்வன்’ போன்று இதுவும் அரசியல் பேசும் படமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. முன்னதாக, ‘CEO - Chief electoral officer’ என்று பெயர் வைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, ஜெயராம், அஞ்சலி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். #GAMECHANGER it is…https://t.co/avGa74S8vH Mega Powerstar @alwaysramcharan @shankarshanmugh @advani_kiara @DOP_Tirru @MusicThaman @SVC_official #SVC50 #RC15 #HBDGlobalStarRamCharan pic.twitter.com/2htttRsvPx — Sri Venkateswara Creations (@SVC_official) March 27, 2023 Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

ராம் சரண் - ஷங்கர் கூட்டணியில் தயாராகி வரும் ‘ஆர்.சி. 15’ படத்தின் டைட்டில் டீசர் அதிகாரபூர்வமாக இன்று வெளியாகியுள்ளது.
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில், நடிகர் ராம் சரண் நடித்து வரும் படத்திற்கு தற்காலிகமாக ‘ஆர்.சி. 15’ என்று பெயரிடப்பட்டு விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பெரும் பொருட் செலவில் தயாராகி வரும் இந்தப் படத்தில், ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. தமன் இசையமைக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ளார்.

இந்நிலையில் ராம் சரணின் இன்று தன்னுடைய 38- வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதையொட்டி இந்தப் படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளது படக்குழு. அதன்படி படத்திற்கு ‘கேம் சேஞ்சர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தேர்தல், வாக்குப்பதிவு, நாடாளுமன்றம், சட்டப்பேரவை ஆகியவற்றை மையப்படுத்தி டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. இதனால் ‘கேம் சேஞ்சர்’ என்றுப் பெயர் வைக்கப்பட்டுள்ளதால், இயக்குநர் ஷங்கரின் முந்தைய படங்களான ‘இந்தியன்’, ‘முதல்வன்’ போன்று இதுவும் அரசியல் பேசும் படமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, ‘CEO - Chief electoral officer’ என்று பெயர் வைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, ஜெயராம், அஞ்சலி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.
#GAMECHANGER it is…https://t.co/avGa74S8vH
— Sri Venkateswara Creations (@SVC_official) March 27, 2023
Mega Powerstar @alwaysramcharan @shankarshanmugh @advani_kiara @DOP_Tirru @MusicThaman @SVC_official #SVC50 #RC15 #HBDGlobalStarRamCharan pic.twitter.com/2htttRsvPx
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/sldc2uM
via IFTTT
Comments
Post a Comment