முதல் நாள் இன்ஸ்டாவில் வீடியோ.. மறுநாள் சடலமாக ஹோட்டலில் மீட்பு - போஜ்புரி நடிகை தற்கொலை? பிரபல போஜ்புரி நடிகை அகன்ஷா துபே உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அகன்ஷா துபே 2019 ஆம் ஆண்டில் 'மேரி ஜங் மேரா ஃபைஸ்லா' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்தப் படத்தில் அவர் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். இதற்குப் பிறகு, நடிகை 'முஜ்சே ஷாதி கரோகி' மற்றும் 'சாஜன்' போன்ற படங்களில் தனது அற்புதமான நடிப்புத் திறனைக் காட்டி இருந்தார். . நேற்று இரவு, படப்பிடிப்பிற்குப் பிறகு உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் ஹோட்டலில் தங்குவதற்காக அகன்ஷா சென்றிருந்தார். இந்நிலையில் தூக்கில் தொங்கியபடி அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. நடிகையின் மரணம் தற்கொலையா? அல்லது கொலையா? தற்கொலை என்றால் அதற்கான காரணம் என்ன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று இரவு கூட கடைசியாக இன்ஸ்டாகிராமில் நடனமாடும் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ள ஆகான்ஷா துபே இன்று திடீரென தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தது ஏராளமான சந்தேகங்களை எழுப்பி உள்ளது. சக திரையுலகினர் மற்றும் நடிகையின் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியில் மூழ்கி உள்ளனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

பிரபல போஜ்புரி நடிகை அகன்ஷா துபே உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அகன்ஷா துபே 2019 ஆம் ஆண்டில் 'மேரி ஜங் மேரா ஃபைஸ்லா' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்தப் படத்தில் அவர் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். இதற்குப் பிறகு, நடிகை 'முஜ்சே ஷாதி கரோகி' மற்றும் 'சாஜன்' போன்ற படங்களில் தனது அற்புதமான நடிப்புத் திறனைக் காட்டி இருந்தார்.
.

நேற்று இரவு, படப்பிடிப்பிற்குப் பிறகு உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் ஹோட்டலில் தங்குவதற்காக அகன்ஷா சென்றிருந்தார். இந்நிலையில் தூக்கில் தொங்கியபடி அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. நடிகையின் மரணம் தற்கொலையா? அல்லது கொலையா? தற்கொலை என்றால் அதற்கான காரணம் என்ன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நேற்று இரவு கூட கடைசியாக இன்ஸ்டாகிராமில் நடனமாடும் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ள ஆகான்ஷா துபே இன்று திடீரென தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தது ஏராளமான சந்தேகங்களை எழுப்பி உள்ளது. சக திரையுலகினர் மற்றும் நடிகையின் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியில் மூழ்கி உள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/znWjyi0
via IFTTT
Comments
Post a Comment