Posts

Showing posts from February, 2023

இன்னுமா இதெல்லாம் காமெடின்னு நம்பறீங்க! சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் விமர்சனம் சிங்கிள் பையன் ஒருவருக்கு ஸ்மார்ட்ஃபோனில் நல்லதொரு செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட இணை கிடைத்தால் என்ன நடக்கும் என்பது தான் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும்’ படத்தின் கதை. உணவு டெலிவரி செயலியின் மூலம் டெலிவரி பாயாக வேலை பார்த்து வருகிறார் சிவா. அவருக்கு எப்படியோ விஞ்ஞானி ஷாரா கண்டுபிடித்திருக்கும் ஸ்மார்ட்ஃபோன் கைக்கு கிடைத்துவிடுகிறது. அந்த ஸ்மார்ட்ஃபோனின் உதவியுடன் எல்லா விதமான ஸ்மார்ட் வேலைகளையும் செய்து ஓவர்நைட்டில் ஒபாமா அளவுக்கு பாப்புலராகிறார் சிவா. அந்த மொபைலின் முதலீட்டளாரான பக்ஸ் ஒரு பக்கம் மொபைலைத் தேடுகிறார். மொபைலைக் களவாட KPY பாலா ஒரு பக்கம் முயல்கிறார். இதற்கிடையே நல்லது நடந்தா மொத்தமா நடக்கும் என்பதாக சிங்கிள் சிவாவுக்கு ஜோடியும் கிடைத்துவிடுகிறது. இதுவரை எல்லாம் நல்லதாய் போய்க்கொண்டு இருக்க, 2.0 ரெட் சிப் பொருத்தப்பட்ட எந்திரனாக மாறிவிடுகிறார் ஸ்மார்ட்ஃபோனில் இருக்கும் சிம்ரன். சிம்ரன் ஏன் கோபம் அடைந்தார், அதை எப்படி சிவா சமாளித்தார் என்பதுதான் மீதிக்கதை. சிங்கிள் ஷங்கராக சிவா. வழக்கம் போல அவர் எப்படிப் பேசுவாரோ, அப்படியே தான் இந்த படத்திலும் பேசியிருக்கிறார். அது க்ளீஷே, டெம்ப்ளேட் என எப்படி வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம். ஆனாலும் சிரிக்க வைத்துவிடுகிறார் மனிதர். படத்தில் சிவாவுக்கு அடுத்து நம்மை ஈர்ப்பது மேகா ஆகாஷின் நடிப்பு. ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனாக செயற்கை நுண்ணறிவு செயலியின் முகமாக மிளிர்கிறார் மேகா ஆகாஷ். 2.0, 3.0 வித்தியாச கெட்டப் க்யூட் ரகம். சிவாவுக்கு பக்கபலமாக KPY பாலா, ஷாரா, பக்ஸ், பாடகர் மனோ, மா.கா.பா ஆனந்த், மொட்டை ராஜேந்திரன் என அரை டஜன் காமெடி நடிகர்களை கோதாவுக்குள் இறக்கியிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் ஷா. ஆனால் அது சுத்தமாய் செட் ஆகவில்லை. சிவா மட்டும் தான் ஓரளவுக்கு கரையேறுகிறார். மற்றவர்கள் மொத்தமாய் கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணாதீங்க பாஸ் ரகம் தான். பக்ஸை வடமாநில சேட்டு கதாபாத்திரம் போல ஜுனூன் தமிழ் எல்லாம் பேச வைத்திருக்கிறார்கள். இன்னுமா பாஸ் இதெல்லாம் காமெடின்னு நம்பறீங்க. ஷாராவுக்கு ஒருபடி மேலே போய், கோமாவுக்குப் பின் ஊளையிடும் வியாதி. யப்பா டேய். அதிலும் ஸ்மார்ட்ஃபோன் யுகத்திலும் இன்னும் பெண்கள் ஏமாற்றுகிறார்கள்; ஆண்கள் பாவம் 'இந்த பொம்பளைகளே இப்படித்தான்' பாணியில் பாருங்க ப்ரோ காமெடி பண்றோம், சிரிங்க ப்ளீஸ் என்பது போல் நகரும் பின்பாதி நம்மை கொஞ்சம் அதிகமாகவே சோதித்துவிடுகிறது. ஷிரினிக் விஸ்வநாதனின் வசனங்களில் டெலிவரி பசங்க படும் பாடுகளைச் சொல்லும் இடம் செம்ம. லியோன் ஜேம்ஸ் இசையில் சோறு தான் முக்கியம் மட்டும் தேறுகிறது. காமெடி படத்துக்கேற்ப இறுதியில் வரும் லோ பட்ஜெட் கிராபிக்ஸ் குழந்தைகள் ரசிக்கும் அளவில் இருக்கிறது. சிவாவும் சிம்ரனும் மட்டுமே இந்த படத்தில் க்ளிக் அடிக்கிறார்கள். மற்றவை எல்லாமே ம்ஹூம். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
சிங்கிள் பையன் ஒருவருக்கு ஸ்மார்ட்ஃபோனில் நல்லதொரு செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட இணை கிடைத்தால் என்ன நடக்கும் என்பது தான் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்ஃபோன் சிம்ரனும்’ படத்தின் கதை. உணவு டெலிவரி செயலியின் மூலம் டெலிவரி பாயாக வேலை பார்த்து வருகிறார் சிவா. அவருக்கு எப்படியோ விஞ்ஞானி ஷாரா கண்டுபிடித்திருக்கும் ஸ்மார்ட்ஃபோன் கைக்கு கிடைத்துவிடுகிறது. அந்த ஸ்மார்ட்ஃபோனின் உதவியுடன் எல்லா விதமான ஸ்மார்ட் வேலைகளையும் செய்து ஓவர்நைட்டில் ஒபாமா அளவுக்கு பாப்புலராகிறார் சிவா. அந்த மொபைலின் முதலீட்டளாரான பக்ஸ் ஒரு பக்கம் மொபைலைத் தேடுகிறார். மொபைலைக் களவாட KPY பாலா ஒரு பக்கம் முயல்கிறார். இதற்கிடையே நல்லது நடந்தா மொத்தமா நடக்கும் என்பதாக சிங்கிள் சிவாவுக்கு ஜோடியும் கிடைத்துவிடுகிறது. இதுவரை எல்லாம் நல்லதாய் போய்க்கொண்டு இருக்க, 2.0 ரெட் சிப் பொருத்தப்பட்ட எந்திரனாக மாறிவிடுகிறார் ஸ்மார்ட்ஃபோனில் இருக்கும் சிம்ரன். சிம்ரன் ஏன் கோபம் அடைந்தார், அதை எப்படி சிவா சமாளித்தார் என்பதுதான் மீதிக்கதை. சிங்கிள் ஷங்கராக சிவா. வழக்கம் போல அவர் எப்படிப் பேசுவாரோ, அப்படியே தான் இந்த படத்திலும் பேசியிருக...

கோலிவுட் வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை... ப்ரீ ரிலீஸ் வியாபாரத்தில் சாதனை படைத்த லியோ! லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யின் 67வது படமாக உருவாகி வருகிறது லியோ. த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், மிஷ்கின், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த, கவுதம் மேனன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறது. சென்னை, கொடைக்கானல் ஆகிய இடங்களுக்கு அடுத்தபடியாக, படக்குழு தற்போது காஷ்மீரில் ஷூட்டிங் வேலைகளை படு மும்முரமாக நடத்தி வருகிறது. அக்டோபர் 19ம் தேதி என படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து வெளியிட்ட ப்ரோமோ வீடியோவுக்குப்பின், தற்போதுவரை வேறு எந்த அதிகாரப்பூர்வ அப்டேட்டும் படக்குழு தரப்பில் இருந்து வரவில்லை. இந்த நிலையில், லியோ படத்தில் தன்னுடைய காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டதாக குறிப்பிட்டு மகிழ்ச்சியான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் இயக்குநர் மிஷ்கின். அந்த பதிவே வைரலாகி வரும் நிலையில், தற்போது லியோ படத்தின் ஷூட்டிங் வேலைகள் முடிவதற்கு முன்பே அது செய்திருக்கக் கூடிய வியாபாரம் குறித்த விவரங்கள் வெளியாகியிருக்கிறது. இது குறித்து பிரபல சினிமா செய்தி தளமான பிங்க்வில்லா செய்தி வெளியிட்டிருக்கிறது. அதன்படி தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ரிலீசுக்கு முன்பே 400 கோடி ரூபாய் பிசினஸ் பார்த்த ஒரே படம் என்ற மைல் ஸ்டோனை லியோ எட்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, தியேட்டர் ரிலீஸ் மட்டுமல்லாமல் டிஜிட்டல் தளங்களுக்கான உரிமைகள் மூலமாக மட்டுமே, லியோ படத்துக்கான வியாபாரம் 240 கோடியாக இருக்கின்றதாம். விரிவாக சொல்ல வேண்டுமென்றால், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளுக்கான ஆன்லைன் ஸ்ட்ரீமிங் உரிமையை கைப்பற்றிய நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் 120 கோடி ரூபாய்க்கு லியோ படத்தை வாங்கியிருக்கிறதாம். அடுத்தபடியாக சாட்டிலைட் உரிமத்தை பெற்ற சன் டிவி 70 கோடி ரூபாய்க்கு படத்தை பெற்றிருக்கிறது. தொடர்ந்து பாடல்களுக்கான உரிமத்தை சோனி மியூசிக் நிறுவனம் 18 கோடி ரூபாய்க்கும், இந்தி டப்பிங் சாட்டிலைட் உரிமம் 30 கோடி ரூபாய்க்கும் பேசப்பட்டிருக்கிறதாம். இதற்கான பேச்சுவார்த்தைகள் செட் மேக்ஸ் அல்லது கோல்ட்மைன்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் நடந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதுபோக, உலகம் முழுமைக்குமான லியோ படத்தின் திரையரங்க உரிமங்கள் மட்டுமே 175 கோடி ரூபாய்க்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதாம். இதில் ஓவர் சீஸில் 50 கோடி ரூபாய்க்கு விற்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வரும் வேளையில், தமிழ்நாட்டுக்கு மட்டும் 75 கோடி ரூபாயும், கேரளா, ஆந்திரா, தெலங்கானாவில் 35 கோடி ரூபாயும், எஞ்சிய மாநிலங்களுக்கெல்லாம் 15 கோடி ரூபாயும் கேட்கப்பட்டிருக்கிறதாம். ஏற்கெனவே லியோ படம் லோகேஷ் கனகராஜின் யூனிவெர்ஸுக்குள் வருமா வராதா என்பதை ஓயாமல் ரசிகர்கள் தங்களது பதிவுகள் மூலம் கேட்டு வரும் நிலையில், தற்போது படத்தின் ப்ரி-ரிலீஸ் வியாபாரம் 400 கோடியை எட்டியிருப்பதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு யாவும் ரசிகர்களுக்கு மேன்மேலும் அதிகரிக்கவே போகிறது என்பதில் ஐயமில்லை. அதேவேளையில் லியோ படம் அதிகாரப்பூர்வமாக LCUக்குள் வரும் என அறிவிக்கும்பட்சத்தில், அதன் வியாபாரம் இன்னும் விரிவடையவும் வாய்ப்புள்ளதாக கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யின் 67வது படமாக உருவாகி வருகிறது லியோ. த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், மிஷ்கின், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த, கவுதம் மேனன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறது. சென்னை, கொடைக்கானல் ஆகிய இடங்களுக்கு அடுத்தபடியாக, படக்குழு தற்போது காஷ்மீரில் ஷூட்டிங் வேலைகளை படு மும்முரமாக நடத்தி வருகிறது. அக்டோபர் 19ம் தேதி என படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து வெளியிட்ட ப்ரோமோ வீடியோவுக்குப்பின், தற்போதுவரை வேறு எந்த அதிகாரப்பூர்வ அப்டேட்டும் படக்குழு தரப்பில் இருந்து வரவில்லை. இந்த நிலையில், லியோ படத்தில் தன்னுடைய காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டதாக குறிப்பிட்டு மகிழ்ச்சியான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் இயக்குநர் மிஷ்கின். அந்த பதிவே வைரலாகி வரும் நிலையில், தற்போது லியோ படத்தின் ஷூட்டிங் வேலைகள் முடிவதற்கு முன்பே அது செய்திருக்கக் கூடிய வியாபாரம் குறித்த விவரங்கள் வெளியாகியிருக்கிறது. இது குறித்து பிரபல சினிமா செய்தி தளமான பிங்க்வில்லா செய்தி வெளியிட்டிருக்கிறது. அதன்படி தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ரிலீசுக்கு முன்பே 400 க...

போதை மருந்தை உட்கொண்ட கரடியிடம் சிக்கும் மனிதர்கள்! எப்படி இருக்கு 'Cocaine Bear' படம்? கரடி ஒன்று போதை மருந்துகளை உட்கொண்டால், அடுத்து என்ன என்ன களேபரங்கள் நடக்கும் என்பதுதான் ‘cocaine bear’ படத்தின் ஒன்லைன். விமானத்திலிருந்து பல்க்கான போதை மருந்து பெட்டிகளுடன் தப்பிக்க ஒருவர் முயல, கடைசி நிமிடத்தில் அவரால் சரியாக குதிக்க முடியாமல் வேறொரு ரூபத்தில் ஆபத்து வர, மொத்த போதை மருந்தும் காட்டுக்குள் விழுந்துவிடுகிறது. போதைப் பொருளைத் தேட காவல்துறை ஒருபக்கம் விரைகிறது. இன்னொரு பக்கம் இரு வாண்டுகள் ஜாலி டிரிப்பாக காட்டுக்குள் வருகிறார்கள். போதை மருந்தை மீட்டெடுக்க மாஃபியா கும்பலும் உள்ளே நுழைகிறது. இவர்களுக்கு மத்தியில் ஒரு பெண் வனத்துறை அதிகாரி, அவரின் பாய் ஃபிரெண்டு, ஆம்புலன்ஸ் என பல கதாபாத்திரங்கள் கலவையாய் கதைக்குள் வருகிறார்கள். ஆனால், கதையிலிருக்கும் மிகெப்பெரிய ட்விஸ்ட் என்னவென்றால் அந்த போதை மருந்தை ஒரு கரடி சுவைக்க ஆரம்பித்துவிடுகிறது என்பதுதான். 'ஹார்லிக்ஸ்னா அப்படியே சாப்பிடலாமே' என்பதாக அந்தக் கரடி, போதை மருந்து விழுந்த ஒவ்வொரு இடத்தையும் தேடித் தேடி அலைய, அந்த கரடியின் காலுக்கு அடியில் மனிதர்கள் சிக்கிக்கொள்ள ஒரே கூத்துதான் படம் முழுக்க. கடந்த 1985ல் நிகழ்ந்த உண்மைச் செய்தியை மையமாக வைத்து இந்தக் கதையை இயக்கியிருக்கிறார் நடிகையும் இயக்குநரமான எலிசபெத் பேன்க்ஸ். என்ன இப்படியெல்லாம ஒரு கரடி செய்தது என ஷாக்காக வேண்டாம். உண்மையில் இப்படி போதை மருந்தை உண்ட கரடி, இறந்துவிட்டது. அதில் கற்பனையை எக்கச்சக்கமாய் இணைத்து இந்தப் படத்தை ரகளையாய் இயக்கியிருக்கிறார் பேன்க்ஸ். காமெடி ஹாரர் வகைமை சினிமா என்பதால் படத்தில் காமெடிக்கு பஞ்சமேயில்லை. lokesh cinematic universe அதாங்க LCUவில் சேர்க்கும் அளவுக்கும், படத்தில் கரடி போதை பொட்டலங்களை தேடி அலைந்துகொண்டே இருக்கிறது. கரடி யாரைத் துரத்தினாலும் நமக்கு சிரிப்பு வந்துகொண்டே இருக்கிறது. இயற்கை ஆர்வலர்களை நக்கலடிப்பது, விக்கிப்பீடியாவை வம்புக்கு இழுப்பது என எல்லா பக்கமும் ஒரண்டை இழுத்து வைத்திருக்கிறார் எலிசபெத் பேன்க்ஸ். என்ன... இடைவேளையில் நாம் தக்காளில் சாஸ் வாங்கினால், அதை சாப்பிட முடியாத அளவுக்கு படத்தில் ஆங்காங்கே ரத்தம் தெறிக்கிறது. அதுசரி, கரடி மனிதர்களைக் கடிப்பதை வேறு எப்படித்தான் காட்டுவது என நினைத்துக்கொள்ள வேண்டும் போல. ஆனாலும் இறுதியில் கரடிக்குட்டிகளை வைத்து எமோஷனல் கதையாக லாலாலாலா என விக்ரமன் பாணியில் சுபம் போட்டதை மட்டும் தவிர்த்திருக்கலாம். படத்தின் கலருக்கு சற்றும் ஒட்டாத க்ளைமேக்ஸ் அது. மற்றபடி செம்ம ஜாலியான சிரித்து அதே சமயம் பீதியாக்க வைக்கும் ஹாரர் சினிமா இந்த ‘கொக்கைன் பீர்’. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
கரடி ஒன்று போதை மருந்துகளை உட்கொண்டால், அடுத்து என்ன என்ன களேபரங்கள் நடக்கும் என்பதுதான் ‘cocaine bear’ படத்தின் ஒன்லைன். விமானத்திலிருந்து பல்க்கான போதை மருந்து பெட்டிகளுடன் தப்பிக்க ஒருவர் முயல, கடைசி நிமிடத்தில் அவரால் சரியாக குதிக்க முடியாமல் வேறொரு ரூபத்தில் ஆபத்து வர, மொத்த போதை மருந்தும் காட்டுக்குள் விழுந்துவிடுகிறது. போதைப் பொருளைத் தேட காவல்துறை ஒருபக்கம் விரைகிறது. இன்னொரு பக்கம் இரு வாண்டுகள் ஜாலி டிரிப்பாக காட்டுக்குள் வருகிறார்கள். போதை மருந்தை மீட்டெடுக்க மாஃபியா கும்பலும் உள்ளே நுழைகிறது. இவர்களுக்கு மத்தியில் ஒரு பெண் வனத்துறை அதிகாரி, அவரின் பாய் ஃபிரெண்டு, ஆம்புலன்ஸ் என பல கதாபாத்திரங்கள் கலவையாய் கதைக்குள் வருகிறார்கள். ஆனால், கதையிலிருக்கும் மிகெப்பெரிய ட்விஸ்ட் என்னவென்றால் அந்த போதை மருந்தை ஒரு கரடி சுவைக்க ஆரம்பித்துவிடுகிறது என்பதுதான். 'ஹார்லிக்ஸ்னா அப்படியே சாப்பிடலாமே' என்பதாக அந்தக் கரடி, போதை மருந்து விழுந்த ஒவ்வொரு இடத்தையும் தேடித் தேடி அலைய, அந்த கரடியின் காலுக்கு அடியில் மனிதர்கள் சிக்கிக்கொள்ள ஒரே கூத்துதான் படம் முழுக்க. கடந்த 1985ல் நி...

லியோ படப்பிடிப்பில் ‘தம்பி விஜய்யுடன்.. லோகேஷ் பெரும் வீரனைப் போல்’ - மிஷ்கின் நெகிழ்ச்சி! ‘லியோ’ படத்தில் தனது பகுதி நிறைவடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள இயக்குநர் மிஷ்கின், காஷ்மீர் படப்பிடிப்பில் நடந்த சுவராஸ்ய விஷயங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் கடிதம் வாயிலாக பகிர்ந்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இந்தப் படத்தில் த்ரிஷா, ப்ரியா ஆனந்த், அர்ஜூன், மன்சூர் அலிகான், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், பாலிவுட் நடிர் சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொடைக்கானலை அடுத்து தற்போது காஷ்மீரில் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ‘லியோ’ படத்தில் தனது போர்ஷனை முடித்துவிட்டு சென்னை திரும்புவதாக தெரிவித்துள்ள மிஷ்கின் தனது ட்விட்டர் பக்கத்தில் கடிதம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், “இன்று காஷ்மீரிலிருந்து சென்னை திரும்புகிறேன்... மைனஸ் 12 டிகிரியில் 500 பேர் கொண்ட 'Leo' படக்குழு கடுமையாக உழைத்து என்னுடைய பகுதியை நிறைவு செய்தது. ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவு மிகச்சிறப்பாக ஒரு சண்டைக் காட்சியைப் படமாக்கினார்கள். Assistant director-களின் ஓயாத உழைப்பும் என்மேல் அவர்கள் செலுத்திய அன்பும் என்னை ஆச்சரியப்பட வைத்தது. படத்தின் தயாரிப்பாளர் லலித் அந்த குளிரிலும் ஒரு சக தொழிலாளியாக உழைத்துக்கொண்டிருந்தார். #Leo #vijay #mysskin #lokeshkanagaraj @Dir_Lokesh pic.twitter.com/rcYXcoCRRK — Mysskin (@DirectorMysskin) February 26, 2023 என் லோகேஷ் கனகராஜ், ஒரு தேர்ச்சி பெற்ற இயக்குநராக அன்பாகவும் கண்டிப்பாகவும், ஒத்த சிந்தனையுடனும் ஒரு பெரும் வீரனைப்போல் களத்தில் இயங்கிக்கொண்டிருந்தான். என் கடைசி காட்சி முடிந்தவுடன் என்னை ஆரத்தழுவினான், அவன் நெற்றியில் நான் முத்தமிட்டேன். என் அருமை தம்பி விஜய்யுடன் ஒரு நடிகனாக இந்தப் படத்தில் பணியாற்றியதை நினைத்து சந்தோஷம் அடைகிறேன். அவர் என்னுடன் பண்பாக நடந்துகொண்ட விதத்தையும் அவர் அன்பையும் நான் என்றும் மறவேன். 'Leo' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும்” என்று மிஷ்கின் குறிப்பிட்டுள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
‘லியோ’ படத்தில் தனது பகுதி நிறைவடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள இயக்குநர் மிஷ்கின், காஷ்மீர் படப்பிடிப்பில் நடந்த சுவராஸ்ய விஷயங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் கடிதம் வாயிலாக பகிர்ந்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இந்தப் படத்தில் த்ரிஷா, ப்ரியா ஆனந்த், அர்ஜூன், மன்சூர் அலிகான், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், பாலிவுட் நடிர் சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொடைக்கானலை அடுத்து தற்போது காஷ்மீரில் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ‘லியோ’ படத்தில் தனது போர்ஷனை முடித்துவிட்டு சென்னை திரும்புவதாக தெரிவித்துள்ள மிஷ்கின் தனது ட்விட்டர் பக்கத்தில் கடிதம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், “இன்று காஷ்மீரிலிருந்து சென்னை திரும்புகிறேன்... மைனஸ் 12 டிகிரியில் 500 பேர் கொண்ட 'Leo' படக்குழு கடுமையாக உழைத்து என்னுடைய பகுதியை நிறைவு செய்தது. ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவு மிகச்சிறப்பாக ஒரு சண்டைக் காட்சியைப் படமாக்கினார்கள். Assistant director-களின் ஓயாத...

”சங்கடமாதான் இருக்கு.. ஆனா என்ன பண்ண” - சிம்புவின் கெட்டப்பால் பத்து தல இயக்குநர் வருத்தம் பரபரப்புக்கும் கிசு கிசுக்களுக்கும் பஞ்சமே இல்லாத நடிகரில் ஒருவராக கோலிவுட்டில் வலம் வரக் கூடியவர் சிலம்பரசன். இருப்பினும் அந்த பேச்சுகளுக்கெல்லாம் தன்னுடைய படங்களின் மூலம் பதிலடி கொடுப்பதையும் சிம்பு தவறுவதில்லை. தொடர்ந்து தோல்வி அல்லது சுமாரான படங்களாக நடித்து வந்த சிம்பு, மாநாடு ஹிட்டானதை அடுத்து மீண்டும் முன்னணி நட்சத்திரத்தின் உச்சத்திற்கு சென்றார். அதன் பிறகு வந்த வெந்து தணிந்தது காடு வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவரது நடிப்பிலான ’பத்து தல’ படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதன்படி மார்ச் 31ம் தேதி ரிலீசாக இருக்கும் ’பத்து தல’ படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 18ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கெனவே ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அவரே பாடியிருக்கும் நம்ம சத்தம் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை எழச் செய்திருக்கிறது. இந்த நிலையில், பத்து தல படத்தின் இயக்குநர் ஓபிலி கிருஷ்ணா சிம்புவின் கெட்டப் குறித்தும், படத்தின் சில சாராம்சங்கள் குறித்தும் இணையதள நேர்காணலில் பேசியது தற்போது வைரலாகி வருகிறது. அதில், “பத்து தல படத்தின் கெட்டப்பில் வெந்து தணிந்தது காடு படத்தின் க்ளைமேக்ஸில் சிம்பு வந்தது எனக்கு சங்கடமாகவும், வருத்தமாகவே இருந்தது. கவுதம் மேனன் எனக்கு பாஸ். சிம்பு எனக்கு நல்ல நண்பர். அதனால் சரி பரவாயில்லை என நினைத்துக்கொண்டு கடந்து செல்கிறேன். எது எப்படியோ, வெந்து தணிந்தது காடு க்ளைமேக்ஸில் பத்து தல கெட்டப்பில் சிம்பு வந்திருந்தாலும் அதனை ரசிகர்கள் அங்கீகரித்திருக்கிறார்கள் என்றால் அதுவே போதும். மகிழ்ச்சிதான்.” எனக் கூறியிருக்கிறார். However, I am happy that fans recognized that the last portions of VTK were filmed with Pathu Thala's getup. — KARTHIK DP (@dp_karthik) February 26, 2023 மேலும், பத்து தல படம் மணல் மாஃபியா கும்பலின் கிங்காக சிம்பு நடிக்கிறார் என்றும் தகவல்களும் தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது. முன்னதாக வெந்து தணிந்தது காடு க்ளைமேக்ஸில் இருந்த அதே கெட்டப்பில்தான் வாரிசு படத்தின் தீ தளபதி பாடலின் ப்ரோமோவிலும் சிம்பு தோன்றியிருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
பரபரப்புக்கும் கிசு கிசுக்களுக்கும் பஞ்சமே இல்லாத நடிகரில் ஒருவராக கோலிவுட்டில் வலம் வரக் கூடியவர் சிலம்பரசன். இருப்பினும் அந்த பேச்சுகளுக்கெல்லாம் தன்னுடைய படங்களின் மூலம் பதிலடி கொடுப்பதையும் சிம்பு தவறுவதில்லை. தொடர்ந்து தோல்வி அல்லது சுமாரான படங்களாக நடித்து வந்த சிம்பு, மாநாடு ஹிட்டானதை அடுத்து மீண்டும் முன்னணி நட்சத்திரத்தின் உச்சத்திற்கு சென்றார். அதன் பிறகு வந்த வெந்து தணிந்தது காடு வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவரது நடிப்பிலான ’பத்து தல’ படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதன்படி மார்ச் 31ம் தேதி ரிலீசாக இருக்கும் ’பத்து தல’ படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 18ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கெனவே ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அவரே பாடியிருக்கும் நம்ம சத்தம் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை எழச் செய்திருக்கிறது. இந்த நிலையில், பத்து தல படத்தின் இயக்குநர் ஓபிலி கிருஷ்ணா சிம்புவின் கெட்டப் குறித்தும், படத்தின் சில சாராம்சங்கள் குற...

வாரிசை ஓரங்கட்டிய வாத்தி.. எட்டு நாளில் இத்தனை கோடி வசூலா? அண்மைத் தகவல் இதோ! கோலிவுட்டில் இருந்து பாலிவுட், ஹாலிவுட் வரை சென்ற நடிகர் தனுஷ் தற்போது தென்னிந்திய சினிமாவின் டோலிவுட்டையும் விட்டு வைக்கவில்லை. வெங்கி அட்லூரி இயக்கத்தில் தெலுங்கில் தனுஷ் நடிப்பில் வெளியான படம்தான் SIR. தமிழில் வாத்தி என்ற பெயரிலும் வெளியானது. சமுத்திரகனி, சம்யுக்தா என பலரும் நடித்திருந்த இந்த படம் தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்தால் அரசு பள்ளிகள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகின்றன? அதனை இளம் ஆசிரியராக வரும் தனுஷ் எப்படி முறியடிக்கிறார் என்பதுமாகவே அமைந்திருக்கிறது வாத்தி பட கதை. விமர்சன ரீதியில் கலவையான கருத்துகளை பெற்றிருந்தாலும், முதல் முறையாக நேரடி தெலுங்கு படத்தில் நடித்த தனுஷுக்கு வாத்தி படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பையே பெற்றுக் கொடுத்திருக்கிறது. அதன்படி படம் வெளியாகி எட்டே நாட்களில் உலகம் முழுவதும் 75 கோடி ரூபாய் கலெக்‌ஷனை வாத்தி படம் பெற்றிருப்பதாக படத்தின் இயக்குநரே வெற்றி விழாவின் போது கூறியிருக்கிறார். முதல் இரண்டு நாட்களிலேயே 14 மற்றும் 20 கோடி ரூபாய் முறையே வசூல் நிலவரங்கள் சொல்லப்பட்டாலும் தயாரிப்பு நிர்வாகமே தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது தனுஷுக்கு இருக்கும் மவுசு மேலும் அதிகரித்திருப்பதாகவே அவரது ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள். இருப்பினும் தமிழ்நாட்டில் வாத்தி படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றும் மறுபுறம் பேச்சுகள் அடிபடுகிறது. ஏனெனில், படம் ரிலீசாவதற்கு முன்பு இயக்குநர் வெங்கி அட்லூரி ஒரு நேர்காணலில் “நான் ஒன்றிய கல்வி அமைச்சரானால் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டு முறையை ஒழித்து பொருளாதார ரீதியில் இடஒதுக்கீடு கொடுப்பேன்.” என பேசியிருந்தார். அதேபோல், படமும் பார்த்து பழகிய டெம்பிளேட்டில் புதிய காட்சிகள் இல்லாமல் சாட்டை, வாகை சூடவா படங்களின் சாயல்களில் இருந்ததாலும் தமிழகத்தில் பெரிய வரவேற்பு இல்லை. இந்த காரணங்களால் தமிழ்நாட்டில் வாத்தி படத்துக்கான வரவேற்பு கிட்டவில்லை என்றும் அதனாலேயே வசூலிலும் சற்று அடிபட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஏனெனில், தமிழ் ஹீரோவான தனுஷூக்கு தமிழ்நாட்டில் 40 கோடி அளவுக்குதான் வசூல் கிடைத்துள்ளது. அதேவேளையில் ஆந்திரா தெலங்கானாவில் 25 கோடிக்கும் மேல் தனுஷின் சார் (வாத்தி) படத்துக்கு வசூல் குவிந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், நடப்பாண்டில் நேரடி தெலுங்கு படமாக வெளியான விஜய்யின் வாரசுடு மற்றும் தனுஷின் சார் படத்துக்கான வசூல் நிலவரம்தான் நீயா நானா என்ற வாதத்தில் இருக்கிறது. ஏனெனில் விஜய்யின் வாரிசு படத்தின் வாரசுடுவுக்கு தெலுங்கில் அதிக வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் ஆந்திரா தெலங்கானா சேர்த்தே வெறும் 13 கோடிதான் வசூலானதாக அதிகாரப்பூர்வ தகவல்களே வெளியானது. ஆனால் தனுஷின் வாத்தி படம் தெலுங்கில் மட்டுமே 25 கோடி அளவுக்கு வெறும் எட்டே நாளில் வசூலித்திருப்பதாக வெளியான தகவலால் வாரிசை வாத்தி முந்தி விட்டதாகவே ஒரு பேச்சு எழுந்திருக்கிறது. ALSO READ:  விஜய்யின் வாரிசு ஹிட்டா? ஃப்ளாப்பா? பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம் சொல்வதென்ன? முழுவிவரம் இதோ! Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
கோலிவுட்டில் இருந்து பாலிவுட், ஹாலிவுட் வரை சென்ற நடிகர் தனுஷ் தற்போது தென்னிந்திய சினிமாவின் டோலிவுட்டையும் விட்டு வைக்கவில்லை. வெங்கி அட்லூரி இயக்கத்தில் தெலுங்கில் தனுஷ் நடிப்பில் வெளியான படம்தான் SIR. தமிழில் வாத்தி என்ற பெயரிலும் வெளியானது. சமுத்திரகனி, சம்யுக்தா என பலரும் நடித்திருந்த இந்த படம் தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்தால் அரசு பள்ளிகள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகின்றன? அதனை இளம் ஆசிரியராக வரும் தனுஷ் எப்படி முறியடிக்கிறார் என்பதுமாகவே அமைந்திருக்கிறது வாத்தி பட கதை. விமர்சன ரீதியில் கலவையான கருத்துகளை பெற்றிருந்தாலும், முதல் முறையாக நேரடி தெலுங்கு படத்தில் நடித்த தனுஷுக்கு வாத்தி படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பையே பெற்றுக் கொடுத்திருக்கிறது. அதன்படி படம் வெளியாகி எட்டே நாட்களில் உலகம் முழுவதும் 75 கோடி ரூபாய் கலெக்‌ஷனை வாத்தி படம் பெற்றிருப்பதாக படத்தின் இயக்குநரே வெற்றி விழாவின் போது கூறியிருக்கிறார். முதல் இரண்டு நாட்களிலேயே 14 மற்றும் 20 கோடி ரூபாய் முறையே வசூல் நிலவரங்கள் சொல்லப்பட்டாலும் தயாரிப்பு நிர்வாகமே தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது தனுஷுக்கு இருக்கு...

தரமணி: எம்ஜிஆர் திரைப்பட கல்லூரி திரையரங்கில் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து தரமணியில் எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் திரையரங்கு மேற்கூரை விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தரமணியில் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இன்று காலை கல்லூரி வளாகத்தில் உள்ள ஆர்.ஆர்.திரையரங்கில் மாணவர்களால் திரையிடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக மாணவர்கள் ஒன்றுகூடியிருந்த நிலையில், 10.30 மணியளவில் தெர்மாகோலால் அமைக்கப்பட்டிருந்த ஃபால் சீலிங் எனப்படும் மேற்கூரை பிய்த்துக் கொண்டு கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. திரையின் அருகில் அது விழுந்ததால், மாணவர்கள் ஆசிரியர்கள் என யாருக்கும் எவ்வித அசம்பாவிதமும் நிகழவில்லை. இதனையடுத்து திரையிடல் நிறுத்தப்பட்டது. மேலும் கல்லூரியில் அடிப்படை வசதிகளை சீரமைத்து தரவும், நிரந்தர முதல்வரை நியமிக்க வேண்டும் எனவும் மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த போலீசார், எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் பயிற்சி நிறுவனத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
தரமணியில் எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் திரையரங்கு மேற்கூரை விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தரமணியில் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இன்று காலை கல்லூரி வளாகத்தில் உள்ள ஆர்.ஆர்.திரையரங்கில் மாணவர்களால் திரையிடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக மாணவர்கள் ஒன்றுகூடியிருந்த நிலையில், 10.30 மணியளவில் தெர்மாகோலால் அமைக்கப்பட்டிருந்த ஃபால் சீலிங் எனப்படும் மேற்கூரை பிய்த்துக் கொண்டு கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. திரையின் அருகில் அது விழுந்ததால், மாணவர்கள் ஆசிரியர்கள் என யாருக்கும் எவ்வித அசம்பாவிதமும் நிகழவில்லை. இதனையடுத்து திரையிடல் நிறுத்தப்பட்டது. மேலும் கல்லூரியில் அடிப்படை வசதிகளை சீரமைத்து தரவும், நிரந்தர முதல்வரை நியமிக்க வேண்டும் எனவும் மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த போலீசார், எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் பயிற்சி நிறுவனத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.CO...

காஷ்மீரிலிருந்து லெஜண்ட் சரவணன் வெளியிடப்போகும் முக்கிய அப்டேட்... ஒருவேளை இருக்குமோ! #LEO இன்னும் ஒரு சில நாட்களில் முக்கிய அப்டேட்டுகளை வெளியிடப்போவதாக, காஷ்மீரில் இருக்கும் தனது புகைப்படங்களை லெஜண்ட் சரவணன் ட்வீட் செய்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்ஸ், ஒருவேளை விஜய்யின் ‘லியோ’ படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் அவர் வருகிறாரோ என்று கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். லெஜண்ட் சரவணா ஸ்டோரின் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் தயாரித்து, நடித்திருந்த திரைப்படம் ‘தி லெஜண்ட்’. ஜேடி-ஜெர்ரி இயக்கிய இந்தப் படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌதாலா நடித்திருந்தார். மிகவும் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகிய இந்தப் படத்தில் மறைந்த நடிகர்கள் விவேக் மற்றும் மயில்சாமி நடித்திருந்தனர். அவர்களுடன் விஜயகுமார், சச்சு, லதா, நாசர், பிரபு, ரோபோ சங்கர், யோகி பாபு, பேபி மானஸ்வி கொட்டாச்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28-ம் தேதி வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. எனினும், இந்தப் படம் ஆரம்பித்தது முதல் திரையரங்குகளில் வெளியானது வரை எல்லாமே சமூகவலைத்தளங்களில் ஹாட் டாபிக்காக இருந்தது. இதனைத் தொடர்ந்து லெஜண்ட் சரவணன் தனது அடுத்தப் படம் குறித்து எந்தத் தகவலும் வெளியிடாத நிலையில், காஷ்மீரில் உள்ள நட்சத்திர தங்கும் விடுதியில் இருந்து காணொலி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 21-ம் வெளியிட்டு இருந்தார். அதில் ‘காஷ்மீரில் லெஜண்ட்’ என்றும் அவர் பதிவிட்டிருந்தார். #Legend in #Kashmir #TheLegend#LegendSaravanan pic.twitter.com/fYYZ3RsvvD — Legend Saravanan (@yoursthelegend) February 21, 2023 இந்நிலையில் இன்று, “உங்கள் காத்திருப்புக்கான நேரம் நெருங்கிவிட்டது. சுவாரஸ்யமான அட்டேட்டுகள் இன்னும் சில தினங்களில் வெளியாகும்” என்று பனிப்படர்ந்த காஷ்மீரில் இருக்கும் புகைப்படங்களுடன் லெஜண்ட் சரவணன் ட்வீட் செய்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில், ஒருவேளை காஷ்மீரில் இருக்கும் ‘லியோ’ படப்பிடிப்பில் லெஜண்ட் சரவணன் இணைந்துள்ளாரோ என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். The Wait is Nearing… Interesting Updates in few dates…#Legend#TheLegend#LegendSaravanan pic.twitter.com/iN5XvMse8O — Legend Saravanan (@yoursthelegend) February 24, 2023 ஏனெனில், லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவாகும் ‘லியோ’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு 20 நாட்களுக்கும் மேலாக காஷ்மீரில் தான் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், காஷ்மீருக்கு சென்றுள்ள லெஜண்ட் சரவணன் முக்கிய அப்டேட் என்று குறிப்பிட்டுள்ளதை ஒப்பிட்டு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இவையாவும் அவரது அடுத்தப்படம் குறித்த அறிவிப்பாக இருக்கலாம் என்றும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலர், தி லெஜண்ட் படத்தின் ஓடிடி அப்டேட்டோ என்றும் சந்தேகம் எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து இரு தரப்புமே எதுவும் கூறாத நிலையில் விரைவில் நெட்டிசன்களின் கேள்விகளுக்கு விடைகிடைக்கும் என நம்பலாம்.! Apo confirm Leo update dha — vinoth Kumar.A (@k44057461) February 24, 2023 Oruvela irukumoo.. — Jeeks (@desperado_gk) February 24, 2023 Legend in LCU ? @Dir_Lokesh @MrRathna — Karthik S (@Krkvijay) February 24, 2023 Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
இன்னும் ஒரு சில நாட்களில் முக்கிய அப்டேட்டுகளை வெளியிடப்போவதாக, காஷ்மீரில் இருக்கும் தனது புகைப்படங்களை லெஜண்ட் சரவணன் ட்வீட் செய்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்ஸ், ஒருவேளை விஜய்யின் ‘லியோ’ படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் அவர் வருகிறாரோ என்று கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். லெஜண்ட் சரவணா ஸ்டோரின் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் தயாரித்து, நடித்திருந்த திரைப்படம் ‘தி லெஜண்ட்’. ஜேடி-ஜெர்ரி இயக்கிய இந்தப் படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌதாலா நடித்திருந்தார். மிகவும் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகிய இந்தப் படத்தில் மறைந்த நடிகர்கள் விவேக் மற்றும் மயில்சாமி நடித்திருந்தனர். அவர்களுடன் விஜயகுமார், சச்சு, லதா, நாசர், பிரபு, ரோபோ சங்கர், யோகி பாபு, பேபி மானஸ்வி கொட்டாச்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28-ம் தேதி வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. எனினும், இந்தப் படம் ஆரம்பித்தது ம...

முத்தழகின் வாழ்க்கை பருத்திவீரனால் காவு வாங்கப்பட்டதா? என்ன சொல்கிறது படம்? - ஓர் அலசல்! சினிமா என்பது மனிதர்களுடைய எண்ணங்களை, கனவுகளை ஒரு கலைப் படைப்பாக உருவாக்குவது மட்டுமல்ல. அது, சமுதாயத்தில் மாற்றங்களை உருவாக்கவும், மனிதர்களின் சிந்தனையை வளர்க்கவும் செய்யும். அந்த அளவிற்கு நவீன காலத்தில் மற்ற எல்லா கலைகளை காட்டிலும் சினிமாவின் தாக்கம் அதிக அளவில் சமுதாயத்தில் இருந்து வருகிறது. ஆனால், சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு அம்சம் என்ற அளவிலேயே பெரும்பாலும் புரிந்து கொள்ளப்படுகிறது. அதனால்தான் ஒரு திரைப்படம் குறித்த விமர்சனங்கள் எழும்போது ’ஏன் ஒரு பொழுதுபோக்கு சினிமாவுக்கு இப்படி எதிர்வினை ஆற்றுகிறார்கள்?’ என்று பலரும் கூறுகிறார்கள். அது அப்படி அல்ல. கலை வடிவங்களே ஒரு மனிதனுக்கு அவனை தாண்டிய உலகின் பரந்த பார்வையை எடுத்துக்காட்டுகிறது. பரந்து விரிந்த இந்த உலகமானது ஒரு மனிதனுக்கு சினிமா போன்ற கலைப்படைப்புகளின் வழியேதான் பெரும்பாலும் அறிமுகம் ஆகிறது. அதனால், ஒரு சினிமா என்பதை வெறுமனே பொழுதுபோக்கு அம்சம் என்று புறந்தள்ளி விட முடியாது. இந்த கட்டுரையில் நாம் பருத்திவீரன் படம் குறித்துதான் ஓர் ஆய்வு மேற்கொள்ளப் போகிறோம். தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு பென்ச் மார்க் திரைப்படமாக பருத்திவீரன் திகழ்கிறது. பருத்திவீரன் வெளியான பிறகு அந்த படத்தின் தாக்கத்தில் சாயலில் இதுவரை நூற்றுக்கணக்கான படம் தமிழ் சினிமாவில் வந்துவிட்டது. ஆனால், இதுவரை பருத்திவீரன் போன்ற ஒரு க்ளாசிக்கான படத்தை இன்னொருவரால் உருவாக்கவே முடியவில்லை. சரி, பருத்திவீரன் ஒரு கொண்டாட்ட மனநிலையுடன் காணவேண்டிய படம் தானே; இதில் ஆய்வு செய்யும் அளவிற்கு என்ன இருக்கிறது என்று தானே நினைக்கிறீர்கள்? நிச்சயம் இல்லை. பருத்திவீரன் படம் குறித்த விரிவான ஒரு ஆய்வு நிச்சயம் தேவைப்படுகிறது. ஏனெனில், பருத்திவீரனில் இருந்து எடுத்துக் கொள்ளவேண்டிய விஷயங்களும் இருக்கின்றது. அதேபோல், ஒரு மோசமான தவறான முன்னுதாரணமாகவும் இந்தப் படம் அமைந்துவிட்டது என்பதும் மறுக்க இயலாத உண்மையாக உள்ளது. அப்படி என்ன மோசமான அம்சத்தை பருத்திவீரன் கொண்டுள்ளது என உங்களுக்கு திகைப்பாகக் கூட இருக்கலாம். வாருங்கள் விரிவாக பார்க்கலாம். பருத்திவீரனில் எதுதான் பிரச்னை! ஒரு திரைப்படம் என்பதை என்ன நோக்கத்துடன் ஒரு இயக்குநர் எடுக்கிறார் என்பதைக் காட்டிலும் அந்த திரைப்படம் என்ன தாக்கத்தை சமுதாயத்தில் ஏற்படுத்துகிறது என்பது முக்கியமானதாகும். அந்த தாக்கத்திற்கு இயக்குநரே முழு முதல் பொறுப்பாகும். பருத்திவீரன் படத்தை இயக்குநர் அமீர் ஒரு நல்ல நோக்கத்துடன் தான் எடுத்திருக்கிறார் என்பது நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், பருத்திவீரன் படம் எடுத்துக் கொள்ளப்பட்ட விதமும், அதனால் ஏற்பட்ட தாக்கமும் நிச்சயம் அவர் நினைத்ததுபோல இருந்திருக்காது. இந்தப் பிரச்னை தேவர் மகன் திரைப்படத்திற்கும் உண்டு. அதேபோல், மதயானைக் கூட்டம் திரைப்படத்திற்கும் பொருந்தும். இந்த மூன்று படங்களின் இயக்குநர்களும் கதையை உருவாக்கியவர்களின் நோக்கமும் சிறந்ததே. ஆனால், அந்த படைப்புகளின் தாக்கம் என்னவாக சமுதாயத்தில் பிரதிபலித்தது. பருத்திவீரன் கதைப்படி, பருத்திவீரன் வாழ்வில் அவன் செய்த தீமைகள் அனைத்தும் முத்தழகின் வாழ்க்கையை சிதைத்து சின்னாபின்னமாக்கிவிட்டது என்பதுதான் மையக்கரு. அதேபோல், பருத்திவீரன் வாழ்க்கை சீரழிந்ததற்கு காரணம் இந்த தமிழ் சமுதாயத்தில் புரையோடிக்கிடக்கும் சாதிய கட்டுமானம்தான். கழுவத் தேவன் கதாபாத்திரத்தின் சாதிய வெறியே பருத்திவீரன் வாழ்க்கையை அழித்தது. இத்தனைக்கும் பருத்திவீரன் அவருடைய மனைவியின் சகோதரனின் மகன் தான். தங்களைவிட தாழ்ந்ததாக கருதப்படும் ஒரு சமுதாயத்தில் பெண்ணை கட்டிவிட்டார் என்பதற்காகவே பருத்திவீரனின் தந்தையான மருதுவையும் தாயையும் வீட்டைவிட்டே வெளியேற்றி ஒதுக்கி வைத்தான் கழுவன். அதேபோல், தாய், தந்தையை இழந்துவிட்ட பின்னர் அனாதையாக நின்ற பருத்திவீரனை கழுவன் வீட்டைவிட்டு வெளியேற்றினான். சாதிய சமுதாயத்தின் தாக்கம், அதாவது பருத்திவீரனை படிக்காமல் செய்தது. அவனது பிறப்பை மனதில் வைத்து வாத்தியார் அடித்தார் என்று செவ்வாழை கதாபாத்திரம் தெளிவாக சொல்லும். சாதிய கட்டுமானத்திற்கு எதிரான மிக காட்டமான படமாகவே அமீர் எடுக்க நினைத்திருக்கக் கூடும். ஆனால், உண்மையில் இந்த கருத்தாக்கங்கள் மக்கள் மனதில் பதிந்ததா என்றால் அது கேள்விக்குறிதான். ஆனால், பருத்திவீரன் படம் புரிந்து கொள்ளப்பட்ட விதம் நிச்சயமாக அப்படி இல்லை. பருத்திவீரன் படத்தின் சிக்கலை புரிந்துகொள்வதற்கு முன்பாக தமிழ் சினிமாவில் சாதிய சமுதாயங்களின் வாழ்வியல் எப்படி காலந்தோறும் பிரதிபலித்து வந்துள்ளது என்பதையும், பாரதிராஜாவின் காலம், தேவர் மகன் படம் ஏற்படுத்திய தாக்கம் ஆகியவற்றை நாம் புரிந்துகொள்ளும் போதுதான் பருத்திவீரன் திரைப்படமும் அதனையொட்டி வந்த மதயானைக் கூட்டம் போன்ற படங்களும் ஏற்படுத்திய தாக்கத்தையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும். புரிதல் மிக முக்கியம் என்பதால் ஒவ்வொன்றாக நாம் பார்க்கலாம். கால மாற்றமும் சினிமாவின் மாற்றமும் தமிழக வரலாற்றில் மிக முக்கியமான போர்குடி சமுதாயத்தின் வாழ்வியலை மிக துல்லியமாக, மிக நெருக்கமாக காட்சிப்படுத்திய திரைப்படம் பருத்திவீரன். முக்குலத்தோர் எனப்படும் கள்ளர், மறவர், அகமுடையார் ஆகியோரது வாழ்வியலை முன்னிருத்தி 1980களுக்கு பிறகு குறிப்பாக 1990களுக்கு பிறகு நூற்றுக்கணக்கான படங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், அதற்கு முன்பாக பார்த்தால் அவர்களது வாழ்வியலை மட்டும் முன்னிறுத்திய படங்களை காண முடியாது. எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் காலங்களிலும் சரி, அவர்களுக்கு முந்தைய காலங்களிலும் சரி. அதிகமாக அடிபடும் பெயர்கள் ஐயர்வாள், பிள்ளைவாள், நாயுடு போன்றவைதான். அங்கு மாயாண்டிகளும், கபாலிகளும் அடியாட்களாகவே இருந்தார்கள். பண்ணையார்களின் சினிமாக்கள் அப்பொழுது வந்தது. இது சினிமாவில் மட்டுமல்ல; நாடகம் உள்ளிட்ட எல்லா கலைத்துறைகளிலும் இதனை பார்க்க முடியும். அதாவது, சமுதாயத்தில் எந்தவிதமாக சூழல் நிலவுகிறதோ அதே சூழல்தான் சினிமாவிலும் இருக்கும். சமுதாயத்தில் ஏற்பட்ட மாற்றம் பொருளாதார கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றமானது அடுத்த தலைமுறைகளை சினிமா துறைக்குள் கொண்டு வந்தது. அந்த வகையில் 80களில் மிகப்பெரிய இயக்குநர் ஆளுமையாக வந்தவர்தான் பாரதிராஜா. பாரதிராஜாவின் காலம் முக்குலத்தோர், குறிப்பாக கள்ளர் சமுதாய மக்களின் வாழ்வியலை சினிமாவின் அதிகம் காட்சிப்படுத்தியவர் இயக்குநர் பாரதிராஜா. மண்வாசனை, கிழக்குச் சீமையிலே போன்ற படங்களில் அவருடைய சமுதாயத்தின் வாழ்வியலை பேசியிருப்பார். அது அன்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளும் திரைவடிவில் இருந்தது. ஆனாலும், பாரதிராஜா கோலோச்ச தொடங்கிய 80களின் காலத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பாரதிராஜாவின் காலத்தில் மணிவண்ணன் போன்றவர்கள் அவருடன் இருந்தார்கள். அந்த காலமுமே ஒரு விதமான புரட்சிகரமான முற்போக்கு கருத்துக்களை கொண்ட படங்கள் வெளிவந்தன. மலையூர் மம்மட்டியான், கரிமேடு கருவாயன் போன்ற பண்ணையார் அடிமைத்தனத்திற்கு எதிரான படங்கள் வந்தன. அதனால், அந்த காலத்தில் வந்த பாரதிராஜாவின் படங்களில் பெண்கள் முன்னேற்றம், சாதி ஒழிப்பு, வேலையில்லாத திண்டாட்டம், மூடநம்பிக்கை போன்ற கருத்துக்களை தாங்கி நின்றன. அதேபோல், மண்வாசனை போன்ற படத்தையும் பாரதிராஜா எடுத்தார். இதை எப்படி புரிந்துகொள்ள வேண்டும் என்றால், ஒரு திரைப்படத்தை உருவாக்குவதில் இரண்டுவிதமான அம்சங்கள் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒன்று அந்த கலைப்படைப்பை உருவாக்குகின்ற இயக்குநரின் வாழ்வியல். மற்றொன்று அவர் வாழ்ந்த காலத்தில் தாக்கம் செலுத்திய கருத்தாக்கம். அதனால், தன்னுடைய வாழ்வியலின் தாக்கும் பாரதிராஜாவின் படங்களில் இருக்கும். அதேபோல் அன்றைய காலகட்டத்தின் கருத்துக்களின் தாக்கமும் இருக்கும்.  அந்த வகையில் தேவர் மகன் ஏற்படுத்திய தாக்கம் கமல்ஹாசன் நடிப்பில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததுதான் தேவர் மகன். தேவர் மகன் படம் இல்லையென்றால் நிச்சயம் பருத்திவீரன் இல்லை என்றே சொல்லலாம். தேவர் மகன் படத்திற்கு பிறகு முக்குலத்தோர் சமுதாயத்திலிருந்து கமல்ஹாசனுக்கு என்று பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது. அதனை பருத்திவீரன் படத்தின் முதல் திருவிழா காட்சிகளிலேயே பார்க்கலாம். சரி, தேவர் மகன் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது என்று பார்க்கலாம். பரதன் இயக்கி இருந்தாலும் தேவர் மகன் முழுக்க முழுக்க கமல்ஹாசன் கதை, திரைக்கதையில் உருவான திரைப்படம். திரைமொழியில் மிக அட்டகாசமான உச்சத்தை தொட்ட படம். கதையின் தொடக்கத்தில் சக்திவேலாக வரும் கமல்ஹாசன் படத்தின் முடிவில் சக்திவேல் தேவராக மாறிவிடுவார். தேவர் மகன் என்ற பெயரில் நிச்சயமாக பிரச்னை இல்லை. வெறும் பெயரினால் பெரிய தாக்கம் ஏற்பட்டு விடாது. ஒரு கதையை எந்த விதத்தில் அணுகுகிறோம். தான் பிறந்த மண்ணிற்கு எதாவது செய்ய வேண்டும்; அந்த மக்களின் உழைப்பினால் தான் சக்திவேலால் படிக்க முடிந்தது என்பதை சிவாஜி கதாபாத்திரம் உணர்த்தும் விதம் உண்மையில் அற்புதம். அதாவது இப்படி காட்டுமிராண்டித்தனமாக சண்டையிட்டுக் கொள்வதை விட்டுவிட்டு பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்பதுதான் படம் சொல்ல வரும் கதை. ஆனால், இதில் எந்த இடத்தில் சிக்கல் என்றால் சாதியை உயர்ந்த இடத்தில் வைத்துக்கொண்டு ’போற்றிப்பாடடி பொண்ணே’ என்ற பாடலையும் போட்டுவிட்டு எப்படி அந்த பிரச்னையை சரி செய்ய முடியும். அந்த உலகத்திற்கு போனால் நீங்களும் கடைசியில் கொலைகாரர் ஆவீர்கள் என்றே சக்திவேல் கதாபாத்திரம் சொல்கிறது. அதாவது, சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணம் கதை எழுதிய கமல்ஹாசனுக்கு இருந்தாலும் சாதிய தன்மையை ஒருவிதமாக குளோரிபை செய்யும் தன்மை படம் நெடுக இருக்கிறது. ஏழை மக்களுக்காக சக்திவேல் கதாபாத்திரம் நிற்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அந்த கதாபாத்திரம் என்னவாக இருந்து அதனை செய்கிறது என்பது தான் சிக்கலாக இருக்கிறது. சக்திவேலின் தந்தையான சிவாஜி கதாபாத்திரம் அதே ஊரில் வாழ்ந்து அதே ஊரிலேயே உயிரை விட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட கதாபாத்திரம். அவரது கேரக்டரில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால், சக்திவேலின் கதாபாத்திரம் ஒரு புரட்டகனிஸ்ட் கதாபாத்திரம். அந்த ஊருக்கு எதையாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறான். கடைசியில் அவனயும் கொலைகாரன் ஆக்கிவிட்டது. இந்த மாற்றங்களை ஒவ்வொரு அங்குலமாக கமல் சொல்லியிருப்பார். திரைமொழியாக அவ்வளவு அற்புதமான படைப்பு. ஆனால், அதுவும் கனவே ஆனது என்பதுதான் பிரச்னை. தேவர் மகன் திரைப்படத்தின் தாக்கம் அதன் பிறகு பலரையும் அதுபோன்ற கதையை தேர்ந்தெடுக்க உந்தித் தள்ளியது. பருத்திவீரனின் தாக்கம் எப்படி இருந்தது? தேவர் மகன் போன்ற படங்களின் தொடர்ச்சியே பருத்திவீரன். பருத்திவீரன் படத்தின் சிக்கல் என்னவென்றால் பருத்திவீரனை எல்லோரும் கொண்டாடினார்கள். முத்தழகுவையும் எல்லோரும் உச்சி முகர்ந்து கொண்டாடினார்கள். ஆனால், பருத்திவீரன், முத்தழகு மரணங்களுக்காக பெரிய அளவில் வருத்தப்படவேயில்லை. முத்தழகு எதனால் இறந்து போனாள்? அதற்கு காரணமான சூழலை யாரும் வெறுக்கவே இல்லை. பரிதாபப்பட்டார்கள், ஆனால், அது எதனால் என்பதைவிட காதலர்கள் சேராமல் போய்விட்டார்களே என்பதில் இருந்த வருத்தம்தான். முத்தழகின் வாழ்க்கை பருத்திவீரனால் காவு வாங்கப்பட்டது. பருத்திவீரனின் வாழ்க்கை கழுவ சேர்வையால் பலிகடா ஆக்கப்பட்டது. கழுவ சேர்வையின் வாழ்க்கை சமுதாயத்தின் சாதிய கண்ணோட்டத்தால் பலிகடா ஆனது என்பது பெரிய அளவில் புரிந்து கொள்ளப்படவில்லை. பருத்திவீரன் கதாபாத்திரத்தின் தாக்கம் பல இளைஞர்களின் மனதில் ஆழமாக வேரூன்றியது. உண்மையில் பருத்திவீரன் ஒரு சீரிழவு கதாபாத்திரம். ஜெயிலுக்கு போவதை, குடிப்பதை, பெரியவர்களிடம் லந்து செய்வதை ஊக்குவிக்கும் தன்மை மேலோங்கியது. தேவர் மகன் படத்தில் சக்திவேலிடம் இருந்த ஒருவித புரட்டகனிஸ்ட் தன்மை இதில் சுத்தமாக இல்லை. உண்மையில் பருத்திவீரனில் பருத்திவீரனின் தந்தை மருதுவின் கதாபாத்திரமும், அவருக்கு மனைவியாக வருபவரின் கதாபாத்திரமுமே சிறப்பானதாக இருந்தது. சாதியம் கடந்து விஸ்வாசமாக இருந்தார் மருது. சாராயம் காய்ச்சும் தொழிலே வேண்டாம், விவசாயம் செய்யலாம் என்ற முடிவை எடுத்து அதனை நோக்கி தன்னுடைய கணவரை கொண்டு சென்றார் மருதுவின் மனைவி. அது நிச்சயம் நல்ல திருப்பம். விவசாயத்திற்கு மாறியது. ஆனால், பருத்திவீரனும், செவ்வாழையும் என்ன வேலை செய்து வாழ்ந்தார்கள் என்றே கடைசிவரை சொல்லவில்லை. அவர்கள் எந்த நேரமும் குடித்துக் கொண்டும் சீட்டாடிக் கொண்டும் இருக்கிறார்கள். இதில் பெண்களுடான தகாத உறவு வேறு. இவையெல்லாவற்றையும் தாண்டி பருத்திவீரன் இறுதியில் பெண்ணின் காதலால் மாறிவிடுகிறான் என்றாலும், அது அழுத்தமாக எல்லோருடைய மனதிலும் பதிந்ததா? என்பது சந்தேகமே. பருத்திவீரன் வழியில் மதயானைக் கூட்டம் தேவர் மகன் படத்தில் சிந்தனையை தூண்டும் பல நல்ல காட்சிகளும், வசனங்களும் இடம்பெற்றிருந்தது. அது கதையாசிரியர் கமலின் இண்டெட்டை வெளிப்படுத்தியது. பருத்திவீரனின் அது குறைவாக இருந்தது. மதயானைக் கூட்டத்தில் அவர் மிகவும் குறைவானதாகவே இருந்தது. விக்ரம் சுகுமாரன் இயக்கிய மதயானைக் கூட்டம் படத்திலும் அந்த சமுதாயத்தில் நிலவி வரும் முரட்டுத் தனங்களாலும் வாழ்வியல் சிக்கலாலும் ஒரு இளைஞர் எப்படி தன்னுடைய உயிரை விடுகிறான் கொலை செய்யப்படுகிறான். அந்த கொலையை எப்படி பெருமிதமாக நினைக்கிறார்கள் என்பதை மிகவும் யதார்த்தமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர். நல்ல கதை அம்சம் கொண்ட படம் தான். ஆனாலும், மேற்சொன்ன சிக்கல்கள் அதிகமாகவே இருக்கிறது. அதாவது நாம் ஒரு சாதிய பெருமிதத்தை குளோரிபை செய்துகொண்டே அதற்கு எதிரான மனநிலையை உருவாக்கிவிடமுடியாது. அதற்கு மதயானைக் கூட்டம் போன்ற படங்கள் ஓர் உதாரணம். எப்படிதான் படம் எடுக்க வேண்டும்? சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை போன்ற படங்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஒரு சமுதாயத்தின் வாழ்வியலை காட்சிப்படுத்தினாலும், அந்த படம் சொல்லும் செய்தியில் முற்போக்கான அம்சம். அதாவது அவனது வாழ்வியலை செம்மைப்படுத்தும் அம்சங்களின் தாக்கம் அதிக அளவில் இருக்க வேண்டும். சமுதாயத்தில் ஏழை மக்களுக்கு தொண்டு ஆற்ற வேண்டும், படிப்பின் முக்கியம் ஆகியவற்றை லீட் செய்ய வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் பருத்திவீரன் போன்ற படங்களின் தாக்கம் எதிர்வினையாகவே முடியும். இறுதியாக, பருத்திவீரன் திரைப்படம் திரைமொழியில் புதிய உச்சத்தை தொட்டது என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. யுவனின் இசையும், அமீரின் உலகத்தரம் வாய்ந்த காட்சிப்படுத்திய விதமும் நம்மை எல்லோரையும் ஆட்கொண்டுவிட்டது என்பதில் ஐயமில்லை. ஆனால், சினிமா என்பது காலம் கடந்து நிறகக்கூடியது. அதனை மனதில் வைத்து படங்களை இயக்க வேண்டும். அதுவும் சாதி ரீதியாக ஒரு சமுதாயத்தின் வாழ்வியலை சொல்லும் போது மிகவும் நுட்பான அணுகுமுறையுடன் எதிர்கொள்ள வேண்டும். படத்தின் தாக்கத்திற்கும் அதன் இயக்குநரே பொறுப்பு. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
சினிமா என்பது மனிதர்களுடைய எண்ணங்களை, கனவுகளை ஒரு கலைப் படைப்பாக உருவாக்குவது மட்டுமல்ல. அது, சமுதாயத்தில் மாற்றங்களை உருவாக்கவும், மனிதர்களின் சிந்தனையை வளர்க்கவும் செய்யும். அந்த அளவிற்கு நவீன காலத்தில் மற்ற எல்லா கலைகளை காட்டிலும் சினிமாவின் தாக்கம் அதிக அளவில் சமுதாயத்தில் இருந்து வருகிறது. ஆனால், சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு அம்சம் என்ற அளவிலேயே பெரும்பாலும் புரிந்து கொள்ளப்படுகிறது. அதனால்தான் ஒரு திரைப்படம் குறித்த விமர்சனங்கள் எழும்போது ’ஏன் ஒரு பொழுதுபோக்கு சினிமாவுக்கு இப்படி எதிர்வினை ஆற்றுகிறார்கள்?’ என்று பலரும் கூறுகிறார்கள். அது அப்படி அல்ல. கலை வடிவங்களே ஒரு மனிதனுக்கு அவனை தாண்டிய உலகின் பரந்த பார்வையை எடுத்துக்காட்டுகிறது. பரந்து விரிந்த இந்த உலகமானது ஒரு மனிதனுக்கு சினிமா போன்ற கலைப்படைப்புகளின் வழியேதான் பெரும்பாலும் அறிமுகம் ஆகிறது. அதனால், ஒரு சினிமா என்பதை வெறுமனே பொழுதுபோக்கு அம்சம் என்று புறந்தள்ளி விட முடியாது. இந்த கட்டுரையில் நாம் பருத்திவீரன் படம் குறித்துதான் ஓர் ஆய்வு மேற்கொள்ளப் போகிறோம். தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு பென்ச் மார்க் திரைப்படமாக பரு...

ராமராஜனின் ‘சாமானியன்’ படத்தை வெளியிட தடைக்கோரிய வழக்கு - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு நடிகர் ராமராஜன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சாமானியன்’ படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர்கள் ராமராஜன், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடிப்பில் எக்ஸட்ரா எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம், ‘சாமானியன்’ என்கிற பெயரில் படமெடுத்துள்ளனர். இந்தப் படத்தை ராஹேஷ் என்பவர் இயக்கி, இளையராஜா இசை அமைத்துள்ளார். 2022ஆம் ஆண்டு அக்டோபரில் படப்பிடிப்பு துவங்கியிருந்தது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை பார்த்துவிட்டு ஆர்ட் அடிக்ட் என்கிற நிறுவனத்தின் உரிமையாளரான வியன் ஆர்மான் எனவர் ‘சாமானியன்’ என்கிற பெயரில் படத்தை வெளியிடுவதை தடுக்கக் கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த 2012-ம் ஆண்டில் படத்தின் தலைப்பை பதிவுசெய்து தொடர்ந்து புதுப்பித்து வருவதாகவும், அதே பெயரில் படத்தை வெளியிடுவது காப்புரிமையை மீறிய செயல் என்பதால் ‘சாமானியன்’ என்கிற தலைப்பில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, எக்ஸட்ரா நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, தாங்களும் அந்தப் படத்தின் தலைப்பை பதிவுசெய்து, அது ஏப்ரல் மாதம் வரை செல்லுபடியாகும் என்பதால் இந்த தலைப்பை பயன்படுத்தியதில் தவறில்லை என வாதிட்டனர். படத்திற்கு 5 கோடி ரூபாயும், விளம்பரத்திற்காக ஒரு கோடி ரூபாயும் செலவழிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்தார். படத் தலைப்பிற்கு காப்புரிமை கேட்க முடியாது என்பதால், வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் எனவும் அவர் வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
நடிகர் ராமராஜன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சாமானியன்’ படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர்கள் ராமராஜன், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடிப்பில் எக்ஸட்ரா எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம், ‘சாமானியன்’ என்கிற பெயரில் படமெடுத்துள்ளனர். இந்தப் படத்தை ராஹேஷ் என்பவர் இயக்கி, இளையராஜா இசை அமைத்துள்ளார். 2022ஆம் ஆண்டு அக்டோபரில் படப்பிடிப்பு துவங்கியிருந்தது. இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை பார்த்துவிட்டு ஆர்ட் அடிக்ட் என்கிற நிறுவனத்தின் உரிமையாளரான வியன் ஆர்மான் எனவர் ‘சாமானியன்’ என்கிற பெயரில் படத்தை வெளியிடுவதை தடுக்கக் கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த 2012-ம் ஆண்டில் படத்தின் தலைப்பை பதிவுசெய்து தொடர்ந்து புதுப்பித்து வருவதாகவும், அதே பெயரில் படத்தை வெளியிடுவது காப்புரிமையை மீறிய செயல் என்பதால் ‘சாமானியன்’ என்கிற தலைப்பில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, எக்ஸட்ரா நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, தாங்க...

பிரதீப் ரங்கநாதனை இயக்கும் விக்னேஷ் சிவன்? - வெளியான தகவல்! தனது அடுத்தப் படத்தில் இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் மற்றும் விஜய் சேதுபதியை வைத்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘கோமாளி’ படத்தைத் தொடர்ந்து ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில், பிரதீப் ரங்கநாதன் இயக்கி தயாரித்திருந்தப் படம் ‘லவ் டுடே’. இளைஞர்கள் மற்றும் 2K கிட்ஸ்களை கவரும் வகையில் உருவான இந்தத் திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் சுமார் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் 100 கோடி ரூபாய் வசூலைப் பெற்று சாதனைப் படைத்தது. சமீபத்தில் இந்தப் படத்தின் 100-வது நாள் விழாவும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் வகையில் கதை சொன்னதாகவும், அதற்கு அவர் ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இயக்குநர் விக்னேஷ் சிவன், அஜித்தின் ‘ஏகே62’ படத்தை இயக்குவதாக லைகா அறிவித்த நிலையில் சில காரணங்களால் அந்தப் படத்தை இயக்குவதிலிருந்து விலகியதாகக் கூறப்படும் நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
தனது அடுத்தப் படத்தில் இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் மற்றும் விஜய் சேதுபதியை வைத்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘கோமாளி’ படத்தைத் தொடர்ந்து ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில், பிரதீப் ரங்கநாதன் இயக்கி தயாரித்திருந்தப் படம் ‘லவ் டுடே’. இளைஞர்கள் மற்றும் 2K கிட்ஸ்களை கவரும் வகையில் உருவான இந்தத் திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் சுமார் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் 100 கோடி ரூபாய் வசூலைப் பெற்று சாதனைப் படைத்தது. சமீபத்தில் இந்தப் படத்தின் 100-வது நாள் விழாவும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் வகையில் கதை சொன்னதாகவும், அதற்கு அவர் ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இயக்குநர் விக்னேஷ் சிவன், அஜித்தின் ‘ஏகே62’ படத்தை இயக்குவதாக லைகா அறிவித்த நிலையில் சில காரணங்களால் அந்தப் படத்தை இயக்குவதிலிருந...

எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குநராக அறிமுகமாகும் ‘வடக்கன்’ படப்பிடிப்பு துவக்கம் பிரபல பதிப்பாளர் வேடியப்பன் தயாரிக்க, முன்னணி எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் 'வடக்கன்' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. டிஸ்கவரி புக் பேலஸ் நிறுவனர் மற்றும் பதிப்பாளர் வேடியப்பனின் டிஸ்கவரி சினிமாஸ் தயாரிப்பில், சினிமா பேலஸ் வழங்கும் 'வடக்கன்' திரைப்படத்தை முன்னணி எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குகிறார். முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது. 'எம்டன் மகன்', 'வெண்ணிலா கபடி குழு’, ‘நான் மகான் அல்ல', 'பாண்டிய நாடு' உள்ளிட்ட படங்களின் வசனகர்த்தாவும், 'அழகர்சாமியின் குதிரை' திரைப்படத்தின் கதாசிரியருமான பாஸ்கர் சக்தி, 'வடக்கன்' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். படம் குறித்து வேடியப்பன் கூறுகையில், "இன்று அதிகமாக பேசப்படும் ஒரு விஷயத்தை பற்றிய கதை இது. இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் பாஸ்கர் சக்தி சிறந்த வசனகர்த்தா விருது பெற்றவர். பல்வேறு தொலைக்காட்சி தொடர்களுக்கும், பல வெற்றி படங்களுக்கும் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார். இப்படத்தில் புதுமுக நடிகர்களான குங்குமராஜ் மற்றும் வைரமாலா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்கிறார்கள். மற்ற கதாபாத்திரங்களில் தோன்றுபவர்கள் அனைவரும் மண்ணின் மக்களாக இருப்பார்கள். முன்னணி ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்" என்றார். 'வடக்கன்' படம் குறித்து பாஸ்கர் சக்தி கூறுகையில், "எழுத்தாளனாக எனது பணியை துவங்கினேன். பின்பு பத்திரிகையாளனாக, அதன் பிறகு மிகச்சிறந்த தொலைக்காட்சி தொடர்களின் வசனகர்த்தாவாக, திரைப்படங்களின் வசனகர்த்தாவாக, திரைக்கதை ஆசிரியராக பணியாற்றியுள்ளேன். தற்போது முதன்முறையாக ஒரு இயக்குநராக 'வடக்கன்' மூலமாக எனது திரைப் பயணத்தை தொடர்கிறேன். எனக்கு உறுதுணையாக எனது நீண்ட நாள் நண்பர் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வருடன் இந்த படத்தில் பணியாற்றுவதில் மகிழ்ச்சி. இருபது வருடங்களாக நாடகத் துறையில் பயிற்சி பெற்ற குங்குமராஜ் இந்த கதையின் நாயகனாக நடிக்கிறார். கதையின் நாயகியான வைரமாலா, தேனி மண்ணின் மனம் சார்ந்த பெண் ஆவார். பாரதிராஜா அவர்களின் கண்டுபிடிப்பு அவர். இந்த காலகட்டத்திற்கு தேவையான ஒரு முக்கியமான விஷயத்தை இப்படம் பேசுகிறது. படம் சிறப்பாக உருவாகி மிகுந்த வரவேற்பை பெறும் என்று கதையின் மீது நம்பிக்கை கொன்டு இந்தப் படத்தை துவங்கியுள்ளோம்" என்று அவர் தெரிவித்தார். இந்தப் படத்தில் மேலும் ஒரு சிறப்பம்சமாக 'sync sound', அதாவது நேரடி ஒலிப்பதிவு செய்யப்படுகிறது. சமீபத்தில் வெளியான 'தலைக்கூத்தல்' திரைப்படத்தில் நேரடி ஒலிப்பதிவு செய்த ராஜேஷ் சசீந்திரன் இப்படத்திலும் பணியாற்றுகிறார். கர்நாடக இசைக் கலைஞர் எஸ். ஜெ. ஜனனி இசையமைக்க, ரமேஷ் வைத்யா இப்படத்திற்கு பாடல்கள் எழுதியுள்ளார். கலை இயக்குநராக காத்து மற்றும் படத்தொகுப்பாளராக நாகூரான் பணியாற்றுகிறார்கள். இப்படத்தில் மக்கள் தொடர்பு பணிகளை நிகில் முருகன் மேற்கொள்கிறார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
பிரபல பதிப்பாளர் வேடியப்பன் தயாரிக்க, முன்னணி எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கும் 'வடக்கன்' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. டிஸ்கவரி புக் பேலஸ் நிறுவனர் மற்றும் பதிப்பாளர் வேடியப்பனின் டிஸ்கவரி சினிமாஸ் தயாரிப்பில், சினிமா பேலஸ் வழங்கும் 'வடக்கன்' திரைப்படத்தை முன்னணி எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குகிறார். முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது. 'எம்டன் மகன்', 'வெண்ணிலா கபடி குழு’, ‘நான் மகான் அல்ல', 'பாண்டிய நாடு' உள்ளிட்ட படங்களின் வசனகர்த்தாவும், 'அழகர்சாமியின் குதிரை' திரைப்படத்தின் கதாசிரியருமான பாஸ்கர் சக்தி, 'வடக்கன்' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். படம் குறித்து வேடியப்பன் கூறுகையில், "இன்று அதிகமாக பேசப்படும் ஒரு விஷயத்தை பற்றிய கதை இது. இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் பாஸ்கர் சக்தி சிறந்த வசனகர்த்தா விருது பெற்றவர். பல்வேறு தொலைக்காட்சி தொடர்களுக்கும், பல வெற்றி படங்களுக்கும் திரைக்கதை மற்றும்...

‘வாரிசு’ முதல் ‘மைக்கேல்’ வரை - இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸும்! ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகின்றன. எந்த தளத்தில், எந்தப் படம், எப்போது வெளியாகிறது என்பதைத் தொகுத்து உங்களுக்கு வழங்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம். இந்த வாரம் வெளியாகும் படைப்புகள்: திரையரங்கு (Theatre) 1.Thugs (தமிழ்) - பிப். 24 2. சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் (தமிழ்) - பிப். 24 3. வெள்ளிமலை (தமிழ்) - பிப். 24 4. குற்றம் புரிந்தால் (தமிழ்) - பிப். 24 5. Ntikkakkakkoru Premondarnn (மலையாளம்) - பிப். 24 6. Selfiee (இந்தி) - பிப். 24 7. Marlowe (ஆங்கிலம்) - பிப். 24 8. Missing (ஆங்கிலம்) - பிப். 24 9. Cocaine Bear (ஆங்கிலம்) - பிப். 24 ஓ.டி.டி. (OTT) 1. Mary Me Again (அராபிக்), நெட்ஃப்ளிக்ஸ் - பிப். 20 2. The Strays (ஆங்கிலம்), நெட்ஃப்ளிக்ஸ் - பிப். 22 3. Call Me Chihiro (ஜப்பான்), நெட்ஃப்ளிக்ஸ் - பிப். 23 4. Vaalvi (மராத்தி), ஜீ5 - பிப். 24 5.We Have a Ghost (ஆங்கிலம்), நெட்ஃப்ளிக்ஸ் - பிப். 24 குறும்படம் (Short Film) 1. Madhuri (இந்தி), ஹாட்ஸ்டார் - பிப். 21 2. Sulochana (இந்தி), ஹாட்ஸ்டார் - பிப். 21 ஷோ (Show) 1. Sommore: Queen Chandelier (ஆங்கிலம்), நெட்ஃப்ளிக்ஸ் - பிப். 21 2. Kathleen Madigan: Hunting Bigfoot (ஆங்கிலம்), ப்ரைம் - பிப். 21 டாக்குமெண்ட்ரி (Documentary) 1. All Quiet on the Western Front (ஆங்கிலம்), நெட்ஃப்ளிக்ஸ் - பிப். 20 2. Murdaugh Murders: A Southern Scandal (ஆங்கிலம்), நெட்ஃப்ளிக்ஸ் - பிப். 22 3. Formula 1 Drive To Survive (ஆங்கிலம்), நெட்ஃப்ளிக்ஸ் - பிப். 24 சீரிஸ் (Series) 1. The Company You Keep (ஆங்கிலம்), ஹாட்ஸ்டார் - பிப். 20 2. SK Sir Ki Class (இந்தி), யூட்யூப் - பிப். 21 3. Triptych (ஸ்பானீஷ்), நெட்ஃப்ளிக்ஸ் - பிப். 22 4. Outer Banks S3 (ஆங்கிலம்), நெட்ஃப்ளிக்ஸ் - பிப். 23 5. இரு துருவம் சீசன் 2 (தமிழ்), சோனி லைவ் - பிப். 24 6. Puli Meka (தெலுங்கு), ஜீ5 - பிப். 24 7. Potluck Season 2 (இந்தி), சோனிலைவ் - பிப். 24 திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகான ஓ.டி.டி. (Post Theatrical Digital Streaming) 1. Thankam (மலையாளம்), ப்ரைம் - பிப். 20 2. வாரிசு (தமிழ்), ப்ரைம் - பிப். 22 3. Veera Simha Reddy (தெலுங்கு), ஹாட்ஸ்டார் - பிப். 23 4. Nanpakal Nerathu Mayakkam (மலையாளம்), நெட்ஃப்ளிக்ஸ் - பிப். 23 5. Kranti (கன்னடம்), ப்ரைம் - பிப். 23 6. மைக்கேல் (தமிழ்), ஆஹா - பிப். 24 Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகின்றன. எந்த தளத்தில், எந்தப் படம், எப்போது வெளியாகிறது என்பதைத் தொகுத்து உங்களுக்கு வழங்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம். இந்த வாரம் வெளியாகும் படைப்புகள்: திரையரங்கு (Theatre) 1.Thugs (தமிழ்) - பிப். 24 2. சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் (தமிழ்) - பிப். 24 3. வெள்ளிமலை (தமிழ்) - பிப். 24 4. குற்றம் புரிந்தால் (தமிழ்) - பிப். 24 5. Ntikkakkakkoru Premondarnn (மலையாளம்) - பிப். 24 6. Selfiee (இந்தி) - பிப். 24 7. Marlowe (ஆங்கிலம்) - பிப். 24 8. Missing (ஆங்கிலம்) - பிப். 24 9. Cocaine Bear (ஆங்கிலம்) - பிப். 24 ஓ.டி.டி. (OTT) 1. Mary Me Again (அராபிக்), நெட்ஃப்ளிக்ஸ் - பிப். 20 2. The Strays (ஆங்கிலம்), நெட்ஃப்ளிக்ஸ் - பிப். 22 3. Call Me Chihiro (ஜப்பான்), நெட்ஃப்ளிக்ஸ் - பிப். 23 4. Vaalvi (மராத்தி), ஜீ5 - பிப். 24 5.We Have a Ghost (ஆங்கிலம்), நெட்ஃப்ளிக்ஸ் - பிப். 24 குறும்படம் (Short Film) 1. Madhuri (இந்தி), ஹாட்ஸ்டார் - பிப். 21 2...

‘என்னைக்குமே ஒரே சூப்பர் ஸ்டார் அவர் மட்டும்தான்.. ஆனால்’ - மிர்ச்சி சிவா மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள "சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்" படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் நடிகர் மிர்ச்சி சிவா, பாடகர் மனோ, அஞ்சு குரியன், ஷாரா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர். மிர்ச்சி சிவா பேசியபோது பாடல்கள் மிகவும் புதுமையாக, அருமையாக இருந்தது, அதற்கு இசையமைப்பாளருக்கு வாழ்த்துகள் என்றும், இந்த பாடலுக்கு நான் நடனம் ஆடும்போது ஆயிரம் பேர் என்னை பார்த்தனர் என்றார். 26,000 பாடல்களுக்கு மேல் பாடிய பாடகர் மனோவை படப்பிப்பு நாட்கள் முழுவதும் அவரை பாட சொல்லி கேட்டுக்கொண்டே இருப்பேன் என கூறிய அவர், எனக்காக எனக்கு பிடித்த செண்பகமே பாடலை இப்போது பாட கேட்டு கொள்கிறேன் என்று நடிகர் சிவா சொல்ல, உடனே மேடையில் செண்பகமே பாடலை பாடினார் பாடகர் மனோ. தொடர்ந்து செய்தியர்களின் கேள்விக்கு பதிலளித்த சிவா, “சூப்பர் ஸ்டார் பிரச்சனை தமிழ்நாடு, இந்தியா, இந்த உலகம் சம்பந்தப்பட்ட பிரச்சனை. அகில உலக சூப்பர் ஸ்டார் என்பது கேலக்ஸிகளை கடந்து Black Hole (பிளாக் ஹோல் ) கிட்டே போய்ட்டோம். நமக்கு போட்டியே கிடையாது” என்று அகில உலக சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். “பட்டத்திற்கு நம்ம ஆசைப்படுவது கிடையாது. அவர்களே கொடுப்பது. பிரபு தேவாவை கூட கேட்பதில்லை, இன்றும் எங்கு சென்றாலும் இரண்டு ஸ்டெப் என்னை தான் போட சொல்கிறார்கள். என்றைக்குமே ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிதான். அகில உலக சூப்பர் ஸ்டார் நம்மதான். ஹீரோயினையே பார்க்காமல் பண்ணிய படம் இதுதான். படத்தில் மேகா ஆகாஷை பார்க்கவே இல்லை. தினசரி பட ஷூட்டிங் போது கேட்பேன். அவர் போர்ஷன் வேறு, என் போர்ஷன் வேறு, அதனால் கடைசி வரை அவரை பார்க்கவே இல்லை. இயக்குனர் ராம் இயக்கத்தில் அடுத்து நடிக்க உள்ளேன். தற்போது ராமின் படத்தில் நடிகையின் போர்ஷன் எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் பட ஷூட்டிங்கில் இணைய உள்ளேன். ராம் இயக்கத்தில் படம் வெளிவரும் போது அகில உலக சூப்பர் ஸ்டார் என போட வேண்டாம் என நானே சொல்லி விடுவேன். கிரிக்கெட் மேல் அதிகம் காதல் உள்ளது. CCL ஆட்டத்தில் அதனால் தான் கலந்து கொண்டேன். இவர் சினிமா கலைஞர், கிரிக்கெட் வீரர் இல்லை என்பது கிரிக்கெட் பந்துக்கு தெரியாது. பந்தில் அடி வாங்கியுள்ளேன். ‘தமிழ்ப்படம் 3’ இயக்க அனைத்து இயக்குனர்களிடம் பேச வேண்டும். ‘அவதார்’, ‘கேஜிஎஃப்’ போன்ற படங்கள் வேறு வந்துள்ளது. ரோஹித் சர்மாவுடன் அவரைப் போல் என்னை ஒப்பிட்டு மீம் போடுகிறார்கள். என்னால் ரோஹித் சர்மா போல் கிரிக்கெட் ஆட முடியாது. என்னைப் போல் அவரால் டான்ஸ் ஆட முடியாது” என்றார். பாடகர் மனோ பேசுகையில், வெற்றி நிச்சயம் இது வீர சத்தியம் என பாடி படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். ‘சிங்காரவேலன்’ படத்திற்கு பிறகு இளையராஜா தன்னை அழைத்து ‘நடிக்க போனால், உனக்காக பாடல் காத்திருக்காது’ எனக் கூறியதாகவும், அதனால் அதற்கு பிறகு அதன் பக்கமே செல்லவில்லை என்றும் அவர் தெரிவித்தார். தற்போது மீண்டும் இந்த படத்தில் நடித்துள்ளேன் அனைவருக்கும் நன்றி என்றார். “சிவாவிற்கு Positive எனர்ஜி அதிகம் அதை அனைவருக்கும் கொடுப்பார் அவருக்கும் நன்றி. மேலும் கொரோனாவிற்கு பிறகு அநேக கச்சேரிகள் இருந்தது, அதற்கு நான் போக வேண்டும் என கேட்டுக்கொண்டபோது எனக்காக படைப்பிப்பு நாட்களை மாற்றி அமைத்து கொடுத்தனர்” என்றார். மேலும் இந்த நிகழ்வில் மறைந்த நடிகர் மயில்சாமிக்காக மௌன அஞ்சலி செலுத்தினர் "சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்" படக்குழுவினர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள "சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்" படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் நடிகர் மிர்ச்சி சிவா, பாடகர் மனோ, அஞ்சு குரியன், ஷாரா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர். மிர்ச்சி சிவா பேசியபோது பாடல்கள் மிகவும் புதுமையாக, அருமையாக இருந்தது, அதற்கு இசையமைப்பாளருக்கு வாழ்த்துகள் என்றும், இந்த பாடலுக்கு நான் நடனம் ஆடும்போது ஆயிரம் பேர் என்னை பார்த்தனர் என்றார். 26,000 பாடல்களுக்கு மேல் பாடிய பாடகர் மனோவை படப்பிப்பு நாட்கள் முழுவதும் அவரை பாட சொல்லி கேட்டுக்கொண்டே இருப்பேன் என கூறிய அவர், எனக்காக எனக்கு பிடித்த செண்பகமே பாடலை இப்போது பாட கேட்டு கொள்கிறேன் என்று நடிகர் சிவா சொல்ல, உடனே மேடையில் செண்பகமே பாடலை பாடினார் பாடகர் மனோ. தொடர்ந்து செய்தியர்களின் கேள்விக்கு பதிலளித்த சிவா, “சூப்பர் ஸ்டார் பிரச்சனை தமிழ்நாடு, இந்தியா, இந்த உலகம் சம்பந்தப்பட்ட பிரச்சனை. அகில உலக சூப்பர் ஸ்டார் என்பது கேலக்ஸிகளை கடந்து Black Hole (பிளாக் ஹோல் ) கிட்டே போய்ட்டோம். நமக்கு போட்டியே கிடை...

பிரபல டிவி தொகுப்பாளினி திடீரென காலமானார்.. சோகத்தில் ரசிகர்கள், திரைத்துறையினர்! இந்திய திரைத்துறை பிரபலங்கள் பலரின் மறைவுச் செய்தி கடந்த ஓரிரு மாதங்களாக ரசிகர்களின் செவிகளில் ஒலித்தபடி இருக்கிறது. தென்னிந்திய திரையுலக ஜாம்பவானாக இருந்த கே.விஸ்வநாத் தொடங்கி, வாணி ஜெயராம், டி.பி.கஜேந்திரன் மற்றும் மயில்சாமி ஆகியோரது மறைவு திரைத்துறையினர், ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் தற்போது பிரபல மலையாள தொகுப்பாளினியின் மறைவு செய்தியும் வெளியாகியிருக்கிறது. தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்து மலையாள சினிமாவுக்குள் காமெடி நடிகையாக உலா வந்த சுபி சுரேஷ் உடல்நலக் குறைவால் காலமானார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு வயது 41. கல்லீரல் தொற்று காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அண்மை நாட்களாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் சுபி சுரேஷ். நிமோனியா பாதிப்பும் ஏற்பட்டதால் சிகிச்சை பலனளிக்காமல் சுபி சுரேஷ் இன்று உயிரிழந்தார். இவரது மறைவுச் செய்தி மலையாள சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை ரசிகர்கள் மற்றும் பிரபலங்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. யார் இந்த சுபி சுரேஷ்? மிமிக்ரி கலைஞராக தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கிய சுபி சுரேஷ், மலையாளர் டிவி சேனலில் ஒளிபரப்பான சினிமாலா என்ற நிகழ்ச்சி மூலம் கேரள மக்களின் இல்லங்களில் நுழைந்து பிரபலமானார். இந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்த வரவேற்பால் சினிமாவுக்குள்ளும் நுழைந்த சுபி, ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ், கங்கனா சிம்மாசனம் உள்ளிட்ட பல படங்களில் காமெடி ரோலிலும் கலக்கியிருந்தார். சினிமாலா நிகழ்ச்சியை போல குழந்தைகளுக்கான குட்டி பட்டாளம் என்ற நிகழ்ச்சியையும் தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் தொகுத்து வழங்கினார் சுபி. குழந்தைகளோடு சுபி அளவலாவியது நேயர்களை பெரிதும் கவர்ந்தது. அதன் பின்னர் சமையல் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கிய சுபி சினிமாவுக்கு சென்ற பிறகு, 2018ல் மீண்டும் லேபர் ரூம் என்ற நிகழ்ச்சிக்கும் தொகுப்பாளினியாக இருந்தார். இப்படியாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்த சுபி சுரேஷ் மறைந்தார் என்ற செய்தி வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
இந்திய திரைத்துறை பிரபலங்கள் பலரின் மறைவுச் செய்தி கடந்த ஓரிரு மாதங்களாக ரசிகர்களின் செவிகளில் ஒலித்தபடி இருக்கிறது. தென்னிந்திய திரையுலக ஜாம்பவானாக இருந்த கே.விஸ்வநாத் தொடங்கி, வாணி ஜெயராம், டி.பி.கஜேந்திரன் மற்றும் மயில்சாமி ஆகியோரது மறைவு திரைத்துறையினர், ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் தற்போது பிரபல மலையாள தொகுப்பாளினியின் மறைவு செய்தியும் வெளியாகியிருக்கிறது. தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்து மலையாள சினிமாவுக்குள் காமெடி நடிகையாக உலா வந்த சுபி சுரேஷ் உடல்நலக் குறைவால் காலமானார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு வயது 41. கல்லீரல் தொற்று காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அண்மை நாட்களாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் சுபி சுரேஷ். நிமோனியா பாதிப்பும் ஏற்பட்டதால் சிகிச்சை பலனளிக்காமல் சுபி சுரேஷ் இன்று உயிரிழந்தார். இவரது மறைவுச் செய்தி மலையாள சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை ரசிகர்கள் மற்றும் பிரபலங்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. யார் இந்த சுபி சுரேஷ்? மிமிக்ரி கலைஞராக தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கிய சுபி சு...

விக்ரம் - பா.ரஞ்சித்தின் 'தங்கலான்' படத்தில் இணைந்த பிரிட்டிஷ் நடிகர்! யார் இவர்? விக்ரமின் ‘தங்கலான்’ படத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த நடிகர்  பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரமின் 61-வது படமாக ‘தங்கலான்’ படம் உருவாகி வருகிறது. ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில், கர்நாடகாவில் உள்ள கோலர் தங்க சுரங்கத்தில் வேலைப் பார்த்த தமிழர்கள் பட்ட துயரத்தின் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி வருகிறது. இதற்காக நடிகர் விக்ரம் தன்னுடைய தோற்றத்தை மாற்றிக் கொண்டுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது கோலார் தங்க சுரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தப் படத்தில் வேட்டைக்காரன் கதாபாத்திரத்தில் ஆங்கிலேய நடிகர் டேனியல் கால்ட்டாகிரோன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நடிகர் டேனியல் கால்ட்டாகிரோன் ‘தங்கலான்’ படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படத்தை, படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. Welcoming the huntsman @DanCaltagirone to the sets of #Thangalaan and social media @Thangalaan @chiyaan @beemji @kegvraja @StudioGreen2 @officialneelam @parvatweets @MalavikaM_ @PasupathyMasi @thehari___ @gvprakash @Lovekeegam @kishorkumardop @EditorSelva pic.twitter.com/etzTw8Iulc — Studio Green (@StudioGreen2) February 21, 2023 ‘The Beach’, ‘Lara Croft Tomb Raider: The Cradle of Life’, ஆஸ்கர் விருதுவென்ற ‘The Pianist’ உள்ளிட்டப் படங்களின் மூலம் நடிகர் டேனியல் கால்ட்டாகிரோன் உலகளவில் பிரபாலனவர். மேலும் ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் அவர் நடித்துள்ளார். ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் உடன் இணைந்து, இந்தப் படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது. ஜி.வி. பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். ‘தங்கலான்’ படத்தில் விக்ரமுடன், மாளவிகா மோகனன், பார்வதி திருவொத்து, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். “A true warrior fights not because he hates what is in front of him, but because he loves what is behind him.” – G.K. Chesterton From the sets of #Thangalaan @Thangalaan @chiyaan @beemji @kegvraja @StudioGreen2 @officialneelam pic.twitter.com/gF93rIoHUX — Daniel Caltagirone (@DanCaltagirone) February 21, 2023 Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

பாலிவுட் பாய்காட் கலாசாரத்தை ஓரங்கட்டிய பதான் - 27 நாட்களில் ரூ.1000 கோடி வசூல்! தடைகளைமீறி ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்படம் 1000 கோடி ரூபாய் வசூலித்து இந்திய அளவில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளது. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ஷாருக்கான் நடித்துள்ள ‘பதான்’ திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 25-ம் தேதி வெளியானது. சுமார் 5 வருடங்களுக்குப் பிறகு (ஹீரோவாக) ஷாருக்கானின் ‘பதான்’ படம் வெளியாவதால் ஆரம்பத்திலேயே இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி வந்தது. மேலும், இந்தப் படத்தின் ‘பேஷ்ரங்’ பாடலில் உள்ள வரிகள் மற்றும் தீபிகா படுகோனே உடையில் காவி நிறம் ஆகியவற்றால் சர்ச்சை எழுந்து அதுவே படத்திற்கு பெரிய ப்ரமோஷனாகவும் அமைந்ததாலும், கடந்த 2 வருடங்களாக பாலிவுட்டில் ‘BoycottBollywood’ ட்ரெண்ட் வேறு இருந்து வந்ததால், இந்தப் படத்தின் வசூல் எப்படி இருக்கும் என பாலிவுட் திரையுலகினர் காத்திருந்தனர். இந்நிலையில், எல்லாத்தையும் முறியடித்து சுமார் 27 நாட்களில் இந்தப் படம் 1000 கோடி ரூபாய் வசூலித்து சாதனைப் படைத்துள்ளது. இதனைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து உலகம் முழுவதும் வெளிவந்து 1000 கோடி ரூபாய் வசூலித்தப் படங்களில் 5வது இடத்தை ‘பதான்’ திரைப்படம் பிடித்துள்ளது. 2016-ம் ஆண்டு வெளியான அமீர்கானின் ‘தங்கல்’ திரைப்படம் 2112 கோடி ரூபாயுடன் முதலிடத்திலும், ராஜமௌலியின் ‘பாகுபலி 2’ 1811 கோடி ரூபாயுடன் இரண்டாவது இடத்திலும், ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் 1217 கோடி ரூபாயுடன் மூன்றாவது இடத்திலும், யஷ்ஷின் ‘கே.ஜி.எஃப் 2’ திரைப்படம் 1198 கோடி ரூபாயுடன் 4-வது இடத்திலும் உள்ளன. #Pathaan hits 1000 crores worldwide  Book your tickets here: https://t.co/SD17p6x9HI | https://t.co/VkhFng6vBj Celebrate #Pathaan with #YRF50 only at a big screen near you, in Hindi, Tamil and Telugu. pic.twitter.com/CshkhHkZbd — Yash Raj Films (@yrf) February 21, 2023 மேலும், இந்தியாவில் மட்டுமான வசூலில், அமீர்கானின் ‘தங்கல்’ படத்தை ‘பதான்’ திரைப்படம் முந்தியுள்ளது. ‘பதான்’ திரைப்படம் 623 கோடி ரூபாய் பெற்றுள்ள நிலையில், இந்தியாவில் ‘தங்கல்’ திரைப்படம் இந்தியில் 538 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருந்தது. தற்போதும் திரையரங்குகளில் ‘பதான்’ திரைப்படம் நன்றாக ஓடிக் கொண்டிருப்பதால், மேலும் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
தடைகளைமீறி ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்படம் 1000 கோடி ரூபாய் வசூலித்து இந்திய அளவில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளது. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ஷாருக்கான் நடித்துள்ள ‘பதான்’ திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 25-ம் தேதி வெளியானது. சுமார் 5 வருடங்களுக்குப் பிறகு (ஹீரோவாக) ஷாருக்கானின் ‘பதான்’ படம் வெளியாவதால் ஆரம்பத்திலேயே இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி வந்தது. மேலும், இந்தப் படத்தின் ‘பேஷ்ரங்’ பாடலில் உள்ள வரிகள் மற்றும் தீபிகா படுகோனே உடையில் காவி நிறம் ஆகியவற்றால் சர்ச்சை எழுந்து அதுவே படத்திற்கு பெரிய ப்ரமோஷனாகவும் அமைந்ததாலும், கடந்த 2 வருடங்களாக பாலிவுட்டில் ‘BoycottBollywood’ ட்ரெண்ட் வேறு இருந்து வந்ததால், இந்தப் படத்தின் வசூல் எப்படி இருக்கும் என பாலிவுட் திரையுலகினர் காத்திருந்தனர். இந்நிலையில், எல்லாத்தையும் முறியடித்து சுமார் 27 நாட்களில் இந்தப் படம் 1000 கோடி ரூபாய் வசூலித்து சாதனைப் படைத்துள்ளது. இதனைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து உலகம் முழுவதும் வெளிவந்து 1000 கோடி ரூபாய் வசூலித்தப் படங்...

சைலண்ட்டாக நடந்து முடிந்த ‘ஏகே 62’ படப்பூஜை? - இவர்தான் வில்லனா? அறிவிப்பில் தாமதம் ஏன்? நடிகர் அஜித்தின் ‘ஏகே 62’ படப் பூஜை நேற்று சைலண்ட்டாக நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம். சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியான திரைப்படம் ‘துணிவு’. இந்தப் படம் அஜித்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல கம்பேக் படமாக அமைந்துள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அஜித்தின் 62-வது படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க, லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பதாக அறிவிப்பு வெளியான நிலையில், பல்வேறு காரணங்களால் அந்தப் படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தின் பயோவிலிருந்து அஜித் புகைப்படம் மற்றும் ‘ஏகே62’ என குறிப்பிட்டதை நீக்கிவிட்டார். இதனால் விக்னேஷ் சிவன் ‘ஏகே 62’ படத்திலிருந்து வெளியேறியதை சூசகமாக கூறியுள்ளதாக செய்திகள் பரவி வந்த நிலையில், அடுத்ததாக அஜித் படத்தை இயக்கப்போவதாக வெளியான லிஸ்ட்டில் விஷ்ணுவர்தன், வெங்கட் பிரபு, மகிழ் திருமேனி ஆகிய இயக்குநர்களின் பெயர்கள் சமூகவலைத்தளங்களில் அடிப்பட்டன. இதில் இயக்குநர் மகிழ் திருமேனி சொன்ன கதை பிடித்துவிட்டதாகவும், அஜித் அவரையே தேர்வு செய்துவிட்டதாகவும் செய்திகள் உலா வந்த நிலையில் தற்போது லேட்டஸ்ட்டாக, எளிமையாகவும், சைலண்ட் ஆகவும் அஜித்தின் ‘ஏகே 62’ படத்தின் பூஜை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘ஏகே 62’ படத்தில் அனிருத் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. லைகா புரொடக்ஷ்ன்ஸ் தயாரிக்க உள்ளதாக கூறப்படும் இந்தப் படத்தில் அஜித்திற்கு வில்லனாக அருண் விஜய் அல்லது அருள்நிதி ஆகிய இருவரில் ஒருவர் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் அருண் விஜய் ஏற்கனவே கௌதம் வாசுதேவ் மேனனின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்திற்கு நண்பனாகவும், வில்லனாகவும் அருண் விஜய் மிரட்டியிருந்தார். ‘ஏகே 62’ படத்தில் ஒருவேளை இணைந்தால், அஜித் - அருண் விஜய் இணையும் இரண்டாவது படமாக அது அமையும். மேலும், அருண் விஜய், மகிழ் திருமேனியின் ‘தடையறத் தாக்க’ படத்திலும், ‘தடம்’ படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளதால், கூடுதல் பலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்கிரிப்டில் கூடுதல் ஆக்ஷன் காட்சிகள் சேர்க்க அஜித் வலியுறுத்தியுள்ளதாகவும், அதனால் மீண்டும் கதை எழுதுவதில் தாதமம் ஆகி வருவதால், மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் அல்லது இறுதியில் டைட்டிலுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும், அப்போது படப்பிடிப்பு துவங்கி அடுத்த ஆண்டு 2024 பொங்கலை முன்னிட்டு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ் திருமேனியை ட்ரெண்டாக்கி வருகின்றனர். அத்துடன் 'Done Channel' என்ற பிரபலங்களுக்கான மக்கள் தொடர்பு  நிறுவனம், இயக்குநர் மகிழ் திருமேனிக்கு எந்த சமூகவலைத்தளம் கணக்கும் இல்லையென்றும், அதனால் ரசிகர்களின் போலியான கணக்குகளை துவங்கி அவரது பெயரில் எந்த போஸ்ட்டுகளும் பதிவுசெய்ய வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளது. இதனையும் அஜித் ரசிகர்கள் 'Code word accepted' என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.  Code word accepted — ֆʊʀʏǟ  (@Rascal_AK) February 21, 2023 Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
நடிகர் அஜித்தின் ‘ஏகே 62’ படப் பூஜை நேற்று சைலண்ட்டாக நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம். சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியான திரைப்படம் ‘துணிவு’. இந்தப் படம் அஜித்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல கம்பேக் படமாக அமைந்துள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அஜித்தின் 62-வது படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க, லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பதாக அறிவிப்பு வெளியான நிலையில், பல்வேறு காரணங்களால் அந்தப் படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தின் பயோவிலிருந்து அஜித் புகைப்படம் மற்றும் ‘ஏகே62’ என குறிப்பிட்டதை நீக்கிவிட்டார். இதனால் விக்னேஷ் சிவன் ‘ஏகே 62’ படத்திலிருந்து வெளியேறியதை சூசகமாக கூறியுள்ளதாக செய்திகள் பரவி வந்த நிலையில், அடுத்ததாக அஜித் படத்தை இயக்கப்போவதாக வெளியான லிஸ்ட்டில் விஷ்ணுவர்தன், வெங்க...