தரமணி: எம்ஜிஆர் திரைப்பட கல்லூரி திரையரங்கில் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து தரமணியில் எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் திரையரங்கு மேற்கூரை விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தரமணியில் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இன்று காலை கல்லூரி வளாகத்தில் உள்ள ஆர்.ஆர்.திரையரங்கில் மாணவர்களால் திரையிடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக மாணவர்கள் ஒன்றுகூடியிருந்த நிலையில், 10.30 மணியளவில் தெர்மாகோலால் அமைக்கப்பட்டிருந்த ஃபால் சீலிங் எனப்படும் மேற்கூரை பிய்த்துக் கொண்டு கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. திரையின் அருகில் அது விழுந்ததால், மாணவர்கள் ஆசிரியர்கள் என யாருக்கும் எவ்வித அசம்பாவிதமும் நிகழவில்லை. இதனையடுத்து திரையிடல் நிறுத்தப்பட்டது. மேலும் கல்லூரியில் அடிப்படை வசதிகளை சீரமைத்து தரவும், நிரந்தர முதல்வரை நியமிக்க வேண்டும் எனவும் மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த போலீசார், எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் பயிற்சி நிறுவனத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

தரமணியில் எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் திரையரங்கு மேற்கூரை விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தரமணியில் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இன்று காலை கல்லூரி வளாகத்தில் உள்ள ஆர்.ஆர்.திரையரங்கில் மாணவர்களால் திரையிடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்காக மாணவர்கள் ஒன்றுகூடியிருந்த நிலையில், 10.30 மணியளவில் தெர்மாகோலால் அமைக்கப்பட்டிருந்த ஃபால் சீலிங் எனப்படும் மேற்கூரை பிய்த்துக் கொண்டு கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. திரையின் அருகில் அது விழுந்ததால், மாணவர்கள் ஆசிரியர்கள் என யாருக்கும் எவ்வித அசம்பாவிதமும் நிகழவில்லை. இதனையடுத்து திரையிடல் நிறுத்தப்பட்டது.

மேலும் கல்லூரியில் அடிப்படை வசதிகளை சீரமைத்து தரவும், நிரந்தர முதல்வரை நியமிக்க வேண்டும் எனவும் மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த போலீசார், எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் பயிற்சி நிறுவனத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/WPrcozm
via IFTTT
Comments
Post a Comment