Posts

Showing posts from September, 2022

சம்பளத்தை உடனே கொடு: போராட்டத்தில் ஈடுபட்ட சினிமா துணை நடிகர்களால் பரபரப்பு காரைக்குடி அருகே சினிமா படப்பிடிப்பில் பங்கேற்ற துணை நடிகர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை எனக்குக் கூறி போராட்டம் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பள்ளத்தூர் பங்களாவில் ,நடிகர் அருள்நிதியின் 'மூர்க்கன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில், நடிப்பதற்காக, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து துணை நடிகர்கள் அழைத்து வரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த பத்து நாட்களுக்கு மேலாக சினிமா படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், துணை நடிகர்களுக்கான ஊதியத்தை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 200க்கும் மேற்பட்ட துணை நடிகர்கள், அங்கு நின்ற படக்குழுவினரின் வாகனத்தை சிறைபிடித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து சினிமா படக்குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, துணை நடிகர்களுக்கு சம்பளம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டதை அடுத்து அங்கிருந்து துணை நடிகர்கள் அமைதியாக கலைந்து சென்றனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
காரைக்குடி அருகே சினிமா படப்பிடிப்பில் பங்கேற்ற துணை நடிகர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை எனக்குக் கூறி போராட்டம் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பள்ளத்தூர் பங்களாவில் ,நடிகர் அருள்நிதியின் 'மூர்க்கன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில், நடிப்பதற்காக, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து துணை நடிகர்கள் அழைத்து வரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த பத்து நாட்களுக்கு மேலாக சினிமா படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், துணை நடிகர்களுக்கான ஊதியத்தை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 200க்கும் மேற்பட்ட துணை நடிகர்கள், அங்கு நின்ற படக்குழுவினரின் வாகனத்தை சிறைபிடித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து சினிமா படக்குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, துணை நடிகர்களுக்கு சம்பளம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டதை அடுத்து அங்கிருந்து துணை நடிகர்கள் அமைதியாக கலைந்து சென்றனர். Source : WWW.PUT...

PS 1: 'மணிரத்னம் தவிர வேறு யாரும் இதை பண்ண முடியாது' -ஜெயம் ரவி, கார்த்திக் சுப்புராஜ் 'பொன்னியின் செல்வன்' படம் குறித்து நடிகர் ஜெயம் ரவி, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சொன்ன கருத்துக்களை இந்த வீடியோவில் காணலாம்.. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
'பொன்னியின் செல்வன்' படம் குறித்து நடிகர் ஜெயம் ரவி, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சொன்ன கருத்துக்களை இந்த வீடியோவில் காணலாம்.. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/Yweras5 via IFTTT

“வெந்து தணிந்தது காடு Vs நானே வருவேன்”.. இரண்டு படங்களுக்கு இடையே இவ்வளவு ஒற்றுமைகளா?! மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘நானே வருவேன்’ படம் நேற்று ரிலீஸ் ஆகியுள்ளது. கிட்டத்தட்ட ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம்போன்று ஒருவிதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரையில் நாம் ‘நானே வருவேன்’ படத்தை பற்றி பேசப்போவதில்லை. ‘நானே வருவேன்’ படத்திற்கும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம். என்ன.. ‘நானே வருவேன்’.. ‘வெந்து தணிந்தது காடு’ படங்களுக்கு இடையே ஒற்றுமையா?.. ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா!. நிச்சயம் இருக்கத்தானே செய்யும். ஏனெனில் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் மிகவும் யதார்த்தமான கேங்ஸ்டர் திரைப்படம். ஆனால், ‘நானே வருவேன்’ திரைப்படமோ ஒரு விதமான சைக்கோ த்ரில்லர், ஹாரர் வகை திரைப்படம். இந்த இரண்டு படங்களுக்கு இடையில் எப்படி ஒற்றுமை இருக்க முடியும் என்ற கேள்வி எழுவது இயல்பான ஒன்றுதான். இந்த கட்டுரையில் நாம் பார்க்கப் போவது, இரண்டு படங்களின் கதையைப் பற்றி அல்ல. படம் எப்படி இருந்தது? அதில் பாசிடிவ் என்ன? நெகட்டிவ் என்ன? இந்த விஷயங்கள் இரு படங்களுக்கும் இடையே அவ்வளவு ஒற்றுமை இருக்கிறது. கதையாக பார்த்தால் ‘ஆளவந்தான்’ போன்ற படங்களுடன் ஒப்பிடலாம். மூன்று லெஜண்ட்களின் காம்போ!! இரண்டு படங்களிலும் மூவர் கூட்டணி தான் அதிகபட்ச எதிர்பார்ப்புக்கு காரணமாக இருந்தது. கவுதம் வாசுதேவ் மேனன் + சிலம்பரசன் + ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் ஒரு மேஜிக் செய்திருந்தது. ‘வெந்து தணிந்தது காடு’ படத்திலும் அந்த மேஜிக் தொடரும் என்பது இந்த மூவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. அதேபோல், செல்வராகவன் + தனுஷ் + யுவன் சங்கர் ராஜா கூட்டணி ‘துள்ளுவதோ இளமை’, ‘காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’ படங்களில் நம்மையெல்லாம் மிரட்டி இருந்தது. இந்த மூவரும் சேர்ந்தாலே ஒரு வித மேஜிக் நிகழும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. மாஸ் இண்டர்வெல்! ‘வெந்து தணிந்தது காடு’, ‘நானே வருவேன்’ இரண்டு படங்களிலும் இண்டர்வெல் சீன் செம்ம மாஸ் ஆக இருக்கும். ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் சிலம்பரசனுக்கு சூப்பரான சண்டைக்காட்சி வைத்திருப்பார்கள். சிலம்பரசன் துப்பாக்கி எடுத்த அந்த நொடியில் தியேட்டரில் விசில் பறந்தது. அதேபோல், ‘நானே வருவேன்’ படத்திலும் இண்டர்வெல் காட்சி தெறியாக இருந்தது. கதிர் என்ற பெயரை ஒரு தனுஷின் மகள் சொன்னதுமே மற்றொரு தனுஷ் எண்ட்ரி கொடுக்கிறார். அப்போது ரசிகர்களின் கரவொலியால் திரையரங்கமே அதிர்ந்தது. இரண்டு படங்களிலும் இண்டர்வெல் சீன் வரை படம் ஒருவிதமாக பிடிமானம் கொடுக்காமல் சென்று கொண்டே இருக்கும். சீன்கள் நன்றாக இருக்கும். ஆனால், படம் எதை நோக்கி போகிறது என்பதை இணைக்கும் பெரிய சீன்கள் இருக்காது. அதனால், அந்த இண்டர்வெல் சீன் மிரட்டலாக அமைந்தது. மோசமான செகண்ட் பார்ட்! இரண்டு படங்களிலும் முதல் பாதி ஏற்படுத்திய எதிர்பாப்பை பூர்த்தி செய்யவில்லை. முதல் பாதியில் வந்தக் காட்சிகளுக்கு வலு சேர்க்க வேண்டியதே இரண்டாம் பாதியில் வரும் காட்சிகள்தான். இரண்டாம் பாதி சொதப்பியது முதல் பாதியில் நன்றாக இருந்ததாக பீல் பண்ணியதை கூட நினைவில் வைத்துக் கொள்ள முடியாமல் ஆக்கிவிட்டது. இரண்டுப் படங்களிலும் இரண்டாம் பாதியில் ரொம்பவே வீக்கான காட்சிகள் அதிகம் இடம்பெற்றன. ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் சிம்பு டான் ஆக உருவாவதை ஜஸ்டிபை செய்யும் அளவிற்கு காட்சிகள் இடம்பெறவில்லை. சில சீரியஸான காட்சிகள் கூட காமடி ஆகிவிட்டது. அதேபோல், ‘நானே வருவேன்’ படத்தில் கதிர் கதாபாத்திரம் வரும் காட்சிகள் தெறிவிடுகின்றன. ஆனால், பின்னணியில் காரணங்கள் வலுவாக இல்லை. குறிப்பாக தன்னிடம் வம்பிழுத்த மூவரை அவர் கொலை செய்கிறார். அதுதான் முக்கியமான காட்சி. ஏனெனில் அவரது மகன் அந்த கொலைகளை பார்த்துவிடுவார். கதிர் கதாபாத்திரம் எதற்காக கொலை செய்கிறார் என்பதற்கு வலுவான காரணம் இல்லாததால் அந்த கதாபாத்திரம் மீது உருவான ஈர்ப்பு நீடிக்கவில்லை. அதிருப்தியை கொடுத்த க்ளைமேக்ஸ்! ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இரண்டாம் படத்திற்கு லீட் கொடுக்க வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாக சில காட்சிகளை வைத்து கௌதம் மேனன் முடித்து இருப்பார். அந்த க்ளைமேக்ஸ் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கவில்லை. இரண்டாம் பாதியில் பெரும்பாலான காட்சிகள் ஒட்டாத நிலையில், க்ளைமேக்ஸ் நச்சென்று இருந்திருந்தால் நெகட்டிவ் எல்லாம் கூட பாசிட்டிவ் ஆகியிருக்கும். அதேபோல் ‘நானே வருவேன்’ படத்திலும் இரண்டு தனுஷ் கதாபாத்திரங்களுக்கும் இடையிலான சண்டை காட்சி அவ்வளவு வலுவாக இல்லை. ஒரு தனுஷ் கதாபாத்திரம் குறுக்கே வந்து கத்தி குத்து வாங்குவது, ஒரு தனுஷை மற்றொரு தனுஷ் தள்ளிக் கொண்டு மலை உச்சியில் இருந்து பள்ளத்தில் வீழ்வது, அதில் ஒருவர் மட்டும் மேலே வருவது என எல்லாமே அதர பழைய காட்சிகள். ரொம்பவுமே வொர்ஸ் க்ளைமேக்ஸ். கிட்டதட்ட ‘காதல் கொண்டேன்’ படத்தை போன்ற ஒரு சூழல் தான் ‘நானே வந்தேன்’ படத்தில். ‘காதல் கொண்டேன்’ க்ளைமேக்ஸ் காட்சியில் தனுஷ் இறக்கும் போது நமக்கு அந்த எமோஷனை அழகாக கடத்தி இருப்பார்கள். நடிப்பில் மிரட்டிய ஹீரோ.. இசை அசத்திய இசையமைப்பாளர்! ‘வெந்து தணிந்தது காடு’ மற்றும் ‘நானே வருவேன்’ இரண்டு படங்களையும் தாங்கி நின்றது ஹீரோவின் நடிப்பும், பின்னணி இசையும் தான். ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை தன்னுடைய நடிப்பால் தோளில் சுமந்தார் சிம்பு. காட்சி அமைப்பு சரியில்லா விட்டாலும் சிம்புவின் அசுரத்தனமான நடிப்புக்காகவே அந்த காட்சி நம்மை ரசிக்கவைத்தது. அதேபோல், ‘நானே வருவேன்’ படத்தில் தனுஷ் நடிப்பில் மிரட்டி இருந்தது. அதுவும் கதிர் கதாபாத்திரத்தில் அவ்வளவு ரியாக்‌ஷன்ஸ் இருக்கும். தன்னுடைய மகளுக்கு நேரும் துயரை எண்ணி வருத்தப்படும் அப்பாவாகவும் நம்மை கலங்க வைத்து இருப்பார். ஆனால், தனுஷும், சிம்புவும் நடிப்பில் வெரைட்டி காட்ட தயாராக இருந்து அதற்கான ஸ்கோப் படத்தில் இல்லை. இரண்டு படங்களிலும் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் யுவன் சங்கர் ராஜா பின்னணி இசையால் மிரட்டி இருப்பார்கள். பாடல்கள் நன்றாக இருந்தாலும் அதனைக் காட்டிலும் பின்னணி இசையால் காட்சிகளுக்கு உயிரூட்டி இருப்பார்கள். ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் வரும் ‘ஓஹஹோ..” என வரும் ஹம்மிங் எதோ ஒரு உணர்வை நமக்கு கொடுக்கும். ‘நானே வருவேன்’ படத்தில் ஹீரோவே பின்னணி இசைதான். படத்தின் உணர்வை அதாவது ஹாரர் பீலிங்கை நம்மை உணரவைத்து முதல் பாதியில் சீட் நுனியில் உட்கார வைத்திருப்பார். பின்னர் கதிர் கதாபாத்திரத்திற்கான வீரா தீரா பின்னணி இசை படத்திலும் மிரட்டலாக இருக்கும். இயக்குநர்களின் டச் எங்கே? ‘வெந்து தணிந்தது காடு’, ‘நானே வருவேன்’ இரண்டு படங்களிலும் முறையே இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் செல்வராகவனின் டச் குறைவாகவே இருந்தது. அதாவது முந்தைய படங்களில் அவர்களுக்கு இருந்த ட்ரேட் மார்க் சம்பவங்கள் இந்த படங்களில் இல்லை. அதேபோல், ஸ்கிரீன் பிளேவில் இயக்குநர் பெரிதாக அக்கறை காட்டவில்லை. ஒரு இயக்குநராக காட்சிகளை எலிவேட் செய்து அதில் ஒரு மேஜிக் செய்வது அவர்களின் கடைமை. ஆனால், இரு இயக்குநர்களும் அதனை செய்ய தவறிவிட்டனர். இரண்டு படங்களிலும் இரண்டாம் பாதியில் காட்சிகளில் ஒரு டெப்தும் இல்லை. மிகவும் மேலோட்டமான காட்சிகளாகவே இருந்தது. தன்னுடைய வழக்கமான ஜானரில் ‘வெந்து தணிந்தது காடு’ இருக்காது என்று கௌதம் மேனன் தெரிவித்துவிட்ட போதும், ஒரு இயக்குநராக காட்சிகளை டீட்டைல் செய்து ஆழமான உணர்வுகளோடு மேக் செய்ய வேண்டுமல்லவா. அதனை தான் ஏன் செய்யவில்லை என்று தெரியவில்லை. ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் பல டான்கள் வருகிறார்கள் ஆனால் ஒருவரையும் பார்த்தால் நமக்கு பயம் வரவில்லை. ஹீரோயினுக்கு இருக்கும் துயரமான சூழலும் நம் மனதை தொடவில்லை. இதெல்லாம் இயக்குநர்களின் கைகளில் தான் இருக்கிறது. அதேபோல் தான் ‘நானே வருவேன்’ படத்திலும் பழைய செல்வராகவனை காணவில்லை. சில காட்சிகளிலும் அந்த டச் இருந்தது. குறிப்பாக இண்டர்வெல் காட்சியில் தனுஷ் மகளை காட்டும் போது. அவர் முழுவதுமாக மற்றொரு கேரக்டரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை அழகாக காட்டி இருப்பார். அதுவே படம் முழுக்க இருந்திருந்தால் படம் டெரராக வந்திருக்கும். இரண்டு படங்களுமே நன்றாக செட் ஆகியிருக்கும். கதையும் நமக்கு நெருக்கமாக வந்திருக்கும். ஆனால், டெப்த் அதிகம் இல்லாததால் இப்படி வீணடித்து விட்டார்களே என்ற எண்ணம் வந்துவிடுகிறது. ஆனால், இரண்டு படங்களுமே ஒருவித புது முயற்சிதான். ‘நானே வருவேன்’ ஒரு விதமான டிபிக்கல் ஹாரர் படம். ‘வெந்து தணிந்தது காடு’ ஒருவித ரியலிஸ்டிக் படம். இரண்டிலும் ஹீரோயிசம் மிகக் குறைவு. அது உண்மையில் வரவேற்கத்தக்கதே. ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துவிட்டார்கள். அதேபோல், ‘நானே வருவேன்’ படத்திலும் க்ளைமேக்ஸில் இரண்டாம் பாகத்திற்கான டுவிஸ்ட் வைத்தே முடித்திருக்கிறார்கள். இரண்டு படங்களுக்கும் இரண்டாம் பாகம் வரும் போது எப்படி உருவாக்கி இருக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘நானே வருவேன்’ படம் நேற்று ரிலீஸ் ஆகியுள்ளது. கிட்டத்தட்ட ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம்போன்று ஒருவிதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரையில் நாம் ‘நானே வருவேன்’ படத்தை பற்றி பேசப்போவதில்லை. ‘நானே வருவேன்’ படத்திற்கும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம். என்ன.. ‘நானே வருவேன்’.. ‘வெந்து தணிந்தது காடு’ படங்களுக்கு இடையே ஒற்றுமையா?.. ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா!. நிச்சயம் இருக்கத்தானே செய்யும். ஏனெனில் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் மிகவும் யதார்த்தமான கேங்ஸ்டர் திரைப்படம். ஆனால், ‘நானே வருவேன்’ திரைப்படமோ ஒரு விதமான சைக்கோ த்ரில்லர், ஹாரர் வகை திரைப்படம். இந்த இரண்டு படங்களுக்கு இடையில் எப்படி ஒற்றுமை இருக்க முடியும் என்ற கேள்வி எழுவது இயல்பான ஒன்றுதான். இந்த கட்டுரையில் நாம் பார்க்கப் போவது, இரண்டு படங்களின் கதையைப் பற்றி அல்ல. படம் எப்படி இருந்தது? அதில் பாசிடிவ் என்ன? நெகட்டிவ் என்ன? இந்த விஷயங்கள் இரு படங்களுக்கும் இடையே அவ்வளவு ஒற்றுமை இருக்கிறது. ...

சூர்யா முதல் மடோன் அஸ்வின் வரை.. குடியரசுத் தலைவரிடம் தேசிய விருது பெற்ற தமிழ் பிரபலங்கள்! டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 68-வது தேசிய விருதுகளுக்கு தேர்வான பிரபலங்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கி கௌரவித்தார். ஆண்டுதோறும் இந்தியாவில் பல்வேறு மொழிகளில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் அதில் பணிபுரிந்த கலைஞர்களை கௌரவப்படுத்தும் வகையில் மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் திரைப்பட விழா இயக்குநரகம் தேசிய விருதினை அறிவிக்கும். ஆனால் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக தேசிய விருதுகள் தாமதமாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் 2020-ம் ஆண்டு பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த மாதம் ஜூலை 22-ம் தேதி டெல்லியில் அறிவிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு, டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று விருதுகளை வழங்கி கௌரவித்தார். இதில் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் சூர்யா, சூரரைப் போற்று படத்திற்காக பெற்றுக்கொண்டார். அவருடன் அவரது மனைவி ஜோதிகாவும் விழாவில் கலந்துகொண்டார். இதேபோல் சிறந்த நடிகைக்கான விருதை அபர்ணா பாலமுரளி (சூரரைப் போற்று) பெற்றுக்கொண்டார். சிறந்த பின்னணி இசைக்காக ஜி.வி.பிரகாஷ் குமார் (சூரரைப் போற்று), சிறந்த திரைக்கதைக்கான விருதை ஷாலின் உஷா நாயர், சுதா கொங்கரா (சூரரைப் போற்று) மற்றும் மடோன் அஸ்வின் (மண்டேலா) பெற்றுக்கொண்டனர். அத்துடன் சிறந்த வசனகர்த்தா மற்றும் அறிமுக இயக்குநருக்கான இந்திரா காந்தி விருதும் மடோன் அஸ்வினுக்கு வழங்கப்பட்டது. சிறந்த திரைப்படமாக தேர்வாகிய ‘சூரரைப்போற்று’ படத்தினை தயாரித்த 2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பாக ஜோதிகா பெற்றுக்கொண்டார். மேலும், வசந்த் இயக்கத்தில் வெளியான ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்தில் சிவரஞ்சனியாக நடித்த லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி சிறந்த துணை நடிகைக்கான விருதை பெற்றுக் கொண்டார். தமிழில் சிறந்த படமாக ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படம் தேர்வாகியதை அடுத்து அந்தப் படத்துக்கும் விருது வழங்கப்பட்டது. ‘Tanhaji: The Unsung Hero’ என்ற படத்தில் நடித்ததற்காக அஜய் தேவ்கான் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுக்கொண்டார். அத்துடன் ‘அய்யப்பனும் கோஷியும்’ என்ற மலையாளப் படத்தில் நடித்த பிஜூ மேனன் சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்றுக்கொண்டார். இதேபோல் இந்தப் படத்தில் பாடிய பழங்குடியினர் பாடகி நஞ்சியம்மாவுக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான விருது வழங்கப்பட்டது. அவருக்கு அரங்கமே எழுந்து நின்று கரகோஷம் எழுப்பியது.  அல்லு அர்ஜூனின் ‘ஆலோ வைகுந்தபுரம்லோ’ படத்திற்கான சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை தமன் பெற்றுக்கொண்டார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 68-வது தேசிய விருதுகளுக்கு தேர்வான பிரபலங்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கி கௌரவித்தார். ஆண்டுதோறும் இந்தியாவில் பல்வேறு மொழிகளில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் அதில் பணிபுரிந்த கலைஞர்களை கௌரவப்படுத்தும் வகையில் மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் திரைப்பட விழா இயக்குநரகம் தேசிய விருதினை அறிவிக்கும். ஆனால் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக தேசிய விருதுகள் தாமதமாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் 2020-ம் ஆண்டு பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த மாதம் ஜூலை 22-ம் தேதி டெல்லியில் அறிவிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு, டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று விருதுகளை வழங்கி கௌரவித்தார். இதில் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் சூர்யா, சூரரைப் போற்று படத்திற்காக பெற்றுக்கொண்டார். அவருடன் அவரது மனைவி ஜோதிகாவும் விழாவில் கலந்துகொண்டார். இதேபோல் சிறந்த நடிகைக்கான விருதை அபர்ணா பாலமுரளி (சூரரைப் போற்று) பெற்றுக்கொண்டார். சி...

‘போன ஜென்மத்தில் நான் சோழனாக ஏதும் பிறந்திருப்பனா என தெரியவில்லை’ - இயக்குநர் பார்த்திபன் தொடர்ந்து சோழர்கள் தொடர்பான கதாபாத்தரங்களே வருவதால், போன ஜென்மத்தில் தான் சோழனாக ஏதும் பிறந்திருப்பனா என்று தெரியவில்லை என நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இன்று வெளியானதையொட்டி, தஞ்சாவூர் பெரிய கோயிலில் நடிகர் பார்த்திபன் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோயில் அருகில் உள்ள இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில், “தஞ்சை மண்ணிற்கு என்னுடைய வணக்கம். ராஜராஜ சோழனின் பெருமையை சொல்லி நம்மால் மாளாது. ஆயிரம் ஆண்டுகளாக சொல்லி வருகிறோம் ராஜராஜன் செய்த சாதனைகளை. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அப்படியே நிலைத்து நிற்கும். இந்தப் பெரிய கோயிலை பார்க்கும்போது அவர்கள் எவ்வாறு ரசனையோடு வாழ்ந்து இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அதே ரசனையோடு தான் இந்த ‘பொன்னியின் செல்வன்’ இருக்கும். இந்தப் ‘பொன்னியின் செல்வனை’ நாம் கொண்டாட வேண்டியது, பாராட்ட வேண்டியது இந்த தஞ்சை மண்ணில் தான். இது ஒரு பான் (PAN) இந்தியா படம். அதனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்திற்கு சென்று உள்ளார்கள். இதில் நடித்த - நடிகர் அனைவரும் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்குப் பிறகு இதுபோல் வாய்ப்பு அமைந்துள்ளது. போன ஜென்மத்தில் நான் சோழனாக ஏதும் பிறந்திருப்பனா என்று தெரியவில்லை. இதுபோன்று வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. மக்கள் அனைவரும் ‘இரவின் நிழலுக்கு’ ஆஸ்கார் விருது கிடைக்குமா என கேட்கிறார்கள். அதுவே எனக்கு ஆஸ்கார் கிடைத்தது போல் இருப்பதாகவும். இந்தியாவிலிருந்து சென்ற தமிழ் படமான ‘இரவின் நிழலுக்கு’ ஆஸ்கர் விருது கிடைக்க வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தித்ததாகவும் தெரிவித்தார். இதுபோல் படங்கள் தொடர்ந்து செய்வதற்கு பாராட்டுகளும் உந்துதல் தான் காரணம். ‘பொன்னியின் செல்வனுக்கு’ பிரமாதமான வரவேற்பு கிடைத்துள்ளது. வட இந்தியாவில் ‘பாகுபலி’ போன்ற படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. ‘பொன்னியின் செல்வன்’ மூலம் தமிழுக்கும் அந்தப் பெயர் கிடைக்கும்” அவர் தெரிவித்தார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
தொடர்ந்து சோழர்கள் தொடர்பான கதாபாத்தரங்களே வருவதால், போன ஜென்மத்தில் தான் சோழனாக ஏதும் பிறந்திருப்பனா என்று தெரியவில்லை என நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இன்று வெளியானதையொட்டி, தஞ்சாவூர் பெரிய கோயிலில் நடிகர் பார்த்திபன் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோயில் அருகில் உள்ள இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில், “தஞ்சை மண்ணிற்கு என்னுடைய வணக்கம். ராஜராஜ சோழனின் பெருமையை சொல்லி நம்மால் மாளாது. ஆயிரம் ஆண்டுகளாக சொல்லி வருகிறோம் ராஜராஜன் செய்த சாதனைகளை. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அப்படியே நிலைத்து நிற்கும். இந்தப் பெரிய கோயிலை பார்க்கும்போது அவர்கள் எவ்வாறு ரசனையோடு வாழ்ந்து இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அதே ரசனையோடு தான் இந்த ‘பொன்னியின் செல்வன்’ இருக்கும். இந்தப் ‘பொன்னியின் செல்வனை’ நாம் கொண்டாட வேண்டியது, பாராட்ட வேண்டியது இந்த தஞ்சை மண்ணில் தான். இது ஒரு பான் (PAN) இந்தியா படம். அதனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்திற்கு சென்று உள்ளார்கள். இதில் நடித்த - நடிகர் அனைவரும் ச...

PS1 - நினைத்ததை சாதித்திருக்கிறாரா மணிரத்னம்? #PTReview கல்கியின் பொன்னியின் செல்வன் கதைக்கு, திரை வடிவத்தைக் கொடுத்திருக்கிறார் மணிரத்னம். அரியணைக்கான போர், சூழ்ச்சியால் நிகழும் குழப்பங்கள், வஞ்சத்தால் நிகழ்த்தப்படும் சூழ்ச்சிகள், உறவு, காதல், நட்பு, பகை என அனைத்தும்தான் பொன்னியின் செல்வன். அதை கூடிய வரை உயிர்ப்புடன் திரைக்குக் கடத்தியிருக்கிறார். ராஷ்ட்ரகூடத்தில் போர் வெற்றிக்குப் பின் ஆதித்த கரிகாலன் (விக்ரம்), தன் நண்பன் வந்தியத்தேவனிடம் (கார்த்தி) ஒரு பொறுப்பை ஒப்படைக்கிறார். சோழ சாம்ராஜ்யத்துக்கு எதிரான சதித் திட்டம் ஒன்று கடம்பூர் மாளிகையில் தீட்டப்படுகிறது. அது என்னவென அறிந்து தன் தந்தை சுந்தரச்சோழரிடமும் (பிரகாஷ் ராஜ்), தங்கை குந்தவையிடமும் (த்ரிஷா) சொல்ல வேண்டும் என்பதுதான் அந்த பொறுப்பு. அதை ஏற்கும் வந்தியத்தேவன் பயணப்படுவதில் தொடங்குகிறது படம். கடம்பூர் சம்புவரையர் மாளிகை, தஞ்சை கோட்டை, பழையரை, இலங்கை என நீள்கிறது அவனது பயணம். ஒரு பக்கம் சோழ சாம்ராஜ்யத்தை சரிக்க நந்தினி (ஐஸ்வர்யா ராய்) போடும் திட்டங்கள், பதவி ஆசையால் மதுராந்தகன் (ரகுமான்) பழுவேட்டரையர் (சரத்குமார்) மற்றும் குறுநில மன்னர்களின் சதி, இன்னொரு பக்கம் எப்படியாவது இந்த ஆபத்துகளில் இருந்து நாட்டைக் காக்க குந்தவை (த்ரிஷா) எடுக்கும் முடிவுகள் என நீள்கிறது பொன்னியின் செல்வன் முதல் பாகம். இந்திய சினிமாவின் ஜாம்பவான் இயக்குநர்கள் பலருமே தங்கள் ஆதர்சமாக மணிரத்னம் என்கிற பெயரை ஏன் சொல்கிறார்கள் என்பதற்கு இந்தப் படம் விடை சொல்லியிருக்கிறது. தமிழகத்தின் ஆல்டைம் ஃபேவரைட்டான ஒரு புத்தகத்தின் காட்சிகளை திரைக்கு கடத்துவது, அதன் ஆதார உணர்ச்சிகளை கெடுத்துவிடாமல் எடுத்திருப்பது, இதன் கூடவே தன் வழக்கமான முத்திரை எல்லாவற்றையும் ஒரு சேர சிறப்பாக கொண்டு வந்திருக்கிறார். ஆதித்த கரிகாலன் - நந்தினியின் காதல், நந்தினிக்கு சோழ சாம்ராஜ்யத்தின் மீது ஏற்படும் விரோதம், அதன் பின் விளைவுகளாக நடக்கும் சம்பவங்கள் என்பதை மையப்புள்ளியாக எடுத்துக் கொண்டது, யுத்த களத்தில் ஆரம்பிக்கும் கதை மீண்டும் ஒரு யுத்தத்தை நோக்கி செல்வது என திரைக்கதை சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. படத்தின் உரையாடல்களும் அதற்கேற்ப வடிவமைக்கப்பட்டிருந்தது. சில காட்சிகள் அமைக்கப்பட்டிருந்த விதத்தில் மணிரத்னத்தின் சிக்னேச்சர் ஸ்டைல் தெரிந்தது. குறிப்பாக ஆதித்த கரிகாலன், நந்தினியுடனான காதலைப் பற்றி விவரிக்கும் காட்சி மிக அற்புதமாக எடுக்கப்பட்டிருந்தது. அந்தக் காட்சியில் விக்ரம் தன் தனித்துவ நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். நந்தினி - குந்தவை தஞ்சைக் கோட்டையில் சந்தித்துக் கொள்ளும் காட்சி கிட்டத்தட்ட ஒரு போர்க் களத்தை பிரதிபலிப்பது போலவும், இருவரும் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் தாக்கிக் கொள்வதைப் போல எடுக்கப்பட்டிருந்ததும் அட்டகாசம். இப்படி படம் நெடுக சில காட்சிகள் மணிரத்னத்தின் மேக்கிங்கை கவனிக்க வைக்கிறது. நடிகர்களாக பலரும் நம்மைக் கவர்கிறார்கள். நந்தினி பாத்திரத்தில் வரும் ஐஸ்வர்யா ராய், தன் அழகினால் பழுவேட்டரையரை பலவீனமாக்குவது, அரியணையை நெஞ்சுக்குள் தீ எரியும் உணர்வுடன் பார்ப்பது, குந்தவையிடம் பேசும் போது மனதிற்குள் வெறுப்பையும், வெளியில் அதை மறைத்தும் நடந்து கொள்வது என வரும் காட்சி ஒவ்வொன்றிலும் சிறப்பு. வந்தியத்தேவனாக பெண்களிடம் வழிந்து பேசுவது, ஆழ்வார்கடியன் நம்பியை கிண்டலடிப்பது என கார்த்தி வரும் காட்சிகள் ஆர்வமாகப் பார்க்க வைக்கிறது. பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் சரத்குமார் கம்பீரமாக வந்து செல்கிறார். இந்தக் கதைக்குள் எக்கச்சக்கமான கதாபாத்திரங்கள் இருப்பதால், அந்தந்த கதாபாத்திரத்திற்கு என இருக்கும் சிறப்பான காட்சிகள் பலவும் படமாக மாற்றும்போது குறைந்துள்ளது. எனவே அதன் விளைவாக சில கதாபாத்திரங்கள் சட்டென வந்து செல்கிற அளவே இருக்கிறது. பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, அஷ்வின் எனப் பலரது பாத்திரங்கள் அப்படி படக்கென வந்து போகிறது. ரவிவர்மனின் ஒளிப்பதிவு படத்தின் அழகைக் கூட்ட மிக அழுத்தமாக உழைத்திருக்கிறது. போர்களக் காட்சிகள், அரண்மனை காட்சிகள், ஆகியவற்றில் பிரம்மாண்டத்தைக் காட்டிலும் இயல்பான ஒரு தன்மையைக் கொடுத்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு மிக நேர்த்தியாக அமைந்திருந்தது. குறிப்பாக நந்தினியை மீண்டும் கரிகாலன் சந்திக்கும் காட்சியின் காட்சிக் கோர்வை மிக கச்சிதமாக இருந்தது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கெனவே பெரிய ஹிட். பாடலை, படத்தில் எவ்வளவு சுருக்கமாக பயன்படுத்த முடியுமோ அந்த அளவில் பயன்படுத்தியிருக்கிறார்கள். பின்னணி இசை உணர்வு சார்ந்த காட்சிகளை அழகாக அமைந்திருந்தாலும், சில இடங்களில் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்ற உணர்வு தோன்றியது. அந்த காலகட்டத்தைப் பிரதிபலிக்க ரியல் லொகேஷன், செட் சிஜி என மூன்றிலும் முயன்றிருக்கிறார்கள். ஆனால், சிஜி சம்பந்தப்பட்ட பல காட்சிகள் இன்னும் நேர்த்தியாக இருந்திருக்கலாம். கப்பலில் நடக்கும் சண்டைக் காட்சிகள் எல்லாம் மிகவும் சுமாரான விதத்தில் சிஜி அமைக்கப்பட்டிருந்தது. கூடவே படம் தமிழின் முதல் ஐமாக்ஸ் திரைப்படம் என்ற டேகுடன் வெளியாகியிருக்கிறது. ஆனால், ஐமாக்ஸ் திரையில் பார்த்தே ஆக வேண்டும் என்ற அளவிற்கு எதுவும் இல்லை. நல்ல ப்ரொஜக்‌ஷன் உள்ள திரையங்கில் என்ன விஷுவல் ட்ரீட் கிடைக்குமோ அதுவேதான் ஐமாக்ஸிலும் கிடைத்தது. இந்த படத்தின் மிகப்பெரிய சவாலே, எல்லோருக்கும் மேலோட்டமாகவாவது தெரிந்த ஒரு கதை, அதை எந்த அளவு பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமாக சொல்லப் போகிறோம் என்பதுதான். அந்த விதத்தில் முடிந்த வரை சுவாரஸ்யம் சேர்த்திருக்கிறார். ஆனால், எந்தக் காட்சிகள் விரிவாக இருக்க வேண்டும் என்கிற தெளிவு இன்னும் கொஞ்சம் இருந்திருக்கலாம் எனத் தோன்றியது. வானில் தோன்றியிருக்கும் வால் நட்சத்திரம், சோழ சாம்ராஜ்யத்திலிருந்து ஒரு இரத்த பலி கேட்கிறது என கமலின் வாய்ஸ் ஓவரில் தொடங்கி நகரும் கதையில் சொல்லாமல் விட்ட இடங்களை நம்மால் உணர முடிகிறது. பாண்டியர்களுக்கான பகை உட்பட சரிவர சொல்லப்படாத சில விஷயங்களும் இருக்கின்றன. இது போன்ற குறைகள் இருந்தாலும், தமிழில் முக்கியமான முயற்சியாக பொன்னியின் செல்வனை தாராளமாக சொல்லலாம். காரணம், ஏற்கனவே தெரிந்த ஒரு கதையை புதிதாக கேட்பதுபோல ஆச்சர்யத்துடன் ஆடியன்ஸை உட்கார வைத்தது. அதற்குள்ளே அடுத்த பாகத்திற்கான ஆவலுக்கும் விதை போட்டது என நினைத்ததை சாதித்திருக்கிறார் மணிரத்னம். - ஜான்சன் Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
கல்கியின் பொன்னியின் செல்வன் கதைக்கு, திரை வடிவத்தைக் கொடுத்திருக்கிறார் மணிரத்னம். அரியணைக்கான போர், சூழ்ச்சியால் நிகழும் குழப்பங்கள், வஞ்சத்தால் நிகழ்த்தப்படும் சூழ்ச்சிகள், உறவு, காதல், நட்பு, பகை என அனைத்தும்தான் பொன்னியின் செல்வன். அதை கூடிய வரை உயிர்ப்புடன் திரைக்குக் கடத்தியிருக்கிறார். ராஷ்ட்ரகூடத்தில் போர் வெற்றிக்குப் பின் ஆதித்த கரிகாலன் (விக்ரம்), தன் நண்பன் வந்தியத்தேவனிடம் (கார்த்தி) ஒரு பொறுப்பை ஒப்படைக்கிறார். சோழ சாம்ராஜ்யத்துக்கு எதிரான சதித் திட்டம் ஒன்று கடம்பூர் மாளிகையில் தீட்டப்படுகிறது. அது என்னவென அறிந்து தன் தந்தை சுந்தரச்சோழரிடமும் (பிரகாஷ் ராஜ்), தங்கை குந்தவையிடமும் (த்ரிஷா) சொல்ல வேண்டும் என்பதுதான் அந்த பொறுப்பு. அதை ஏற்கும் வந்தியத்தேவன் பயணப்படுவதில் தொடங்குகிறது படம். கடம்பூர் சம்புவரையர் மாளிகை, தஞ்சை கோட்டை, பழையரை, இலங்கை என நீள்கிறது அவனது பயணம். ஒரு பக்கம் சோழ சாம்ராஜ்யத்தை சரிக்க நந்தினி (ஐஸ்வர்யா ராய்) போடும் திட்டங்கள், பதவி ஆசையால் மதுராந்தகன் (ரகுமான்) பழுவேட்டரையர் (சரத்குமார்) மற்றும் குறுநில மன்னர்களின் சதி, இன்னொரு பக்கம் எப்படியாவது...

``தியேட்டரிலிருந்தபடி படத்தை சிறு சிறு வீடியோக்களாக எடுத்து பரப்புகின்றனர்”- ஜிவிஎம் வேதனை “நிறைய உழைத்து, பணம் செலவிட்டு திரைப்படங்களை எடுக்கும் நிலையில், செல்போனில் அதை வீடியோ எடுத்து சிலர் சமூக வலைதளங்களில் படக்காட்சியை பதிவிடுகின்றனர். இது வேதனை அளிக்கிறது” என இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் பேசியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கௌதம் வாசுதேவ் மேனன் அண்மையில் திரைக்கு வந்த 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் 'மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே ' பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறித்து பேசினார். அப்போது அவர், “ஒரு பெண்ணின் மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் அந்த பாடல் அமைந்திருந்தபோதும், ஒரு பெண் மட்டும் தனியாக நின்று நடனமாடும் பாடலாக இல்லாமல், ஆண்களும் இடம்பெறும் வகையில் அந்த பாடலை எடுக்க முடிவு செய்தோம். அதனால் சிறிய அறையில் 40 ஆண்களும் இணைந்து நடனமாடும் வகையில் அந்த பாடலை எடுத்தோம். வழக்கமான முறையிலேயே சிந்திக்காமல் மாற்றி சிந்தித்து படைப்புகளை உருவாக்க வேண்டும்” என்றார். மேலும் பேசுகையில், “திரையரங்குகளில் திரைப்படம் பார்ப்போர் 15 - 20 விநாடிகள்வரை திரைப்படத்தின் காட்சியை படம் படித்து அதை சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். அது தவறு. படம் பார்க்க திரையரங்கம் வருபவர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்த நினைத்தால் திரையரங்கில் இருந்தவாறு புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொள்ளலாம். அது தவறில்லை. ஆனால் படக் காட்சியை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது தவறான செயல். ஏனென்றால் ஒரு திரைப்படம் எடுக்க நாங்கள் நிறைய உழைப்பை, நிறைய நேரத்தை, நிறைய பணத்தை செலவிடுகிறோம். அதை வீணாக்கும் வகையில் அலைபேசயில் சிலர் படக் காட்சியை பதிவிட்டு சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர்” என்று கூறினார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
“நிறைய உழைத்து, பணம் செலவிட்டு திரைப்படங்களை எடுக்கும் நிலையில், செல்போனில் அதை வீடியோ எடுத்து சிலர் சமூக வலைதளங்களில் படக்காட்சியை பதிவிடுகின்றனர். இது வேதனை அளிக்கிறது” என இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் பேசியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கௌதம் வாசுதேவ் மேனன் அண்மையில் திரைக்கு வந்த 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் 'மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே ' பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறித்து பேசினார். அப்போது அவர்,  “ ஒரு பெண்ணின் மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் அந்த பாடல் அமைந்திருந்தபோதும், ஒரு பெண் மட்டும் தனியாக நின்று நடனமாடும் பாடலாக இல்லாமல், ஆண்களும் இடம்பெறும் வகையில் அந்த பாடலை எடுக்க முடிவு செய்தோம். அதனால் சிறிய அறையில் 40 ஆண்களும் இணைந்து நடனமாடும் வகையில் அந்த பாடலை எடுத்தோம். வழக்கமான முறையிலேயே சிந்திக்காமல் மாற்றி சிந்தித்து படைப்புகளை உருவாக்க வேண்டும்” என்றார். மேலும் பேசுகையில்,  “ திர...

ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு - தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் `பொன்னியின் செல்வன்- பாகம் 1’ இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இரு பாகங்களாக உருவாகியுள்ளது. நடிகர்கள் ஜெயம்ரவி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், விக்ரம் பிரபு, நடிகைகள் ஐஷ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லக்ஷ்மி, சோபிதா என பலரும் நடிக்கும் இப்படத்தின் முதல் பாகம், இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு நேற்று மதியம் சென்னை லீலா பேலஸில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் நடிகர் விக்ரம், ஜெயம்ரவி, பார்த்திபன், விக்ரம் பிரபு, நடிகை த்ரிஷா, ஐஸ்வர்ய லக்ஷ்மி, சோபிதா ஆகியோர் கலந்து கொண்டனர். படம் வெளியாவது பற்றியும், படத்திற்கான ப்ரமோஷன்களுக்காக சென்று வந்த பயணம் பற்றியும் இந்த நிகழ்வில் அனைவரும் பகிர்ந்து கொண்டார். நிகழ்வில் பேசிய ஜெயம் ரவி, "நாளை (இன்று) படம் ரிலீஸ் ஆகிற டென்ஷன் இருக்கிறது. ஆனால், எங்கள் உழைப்பை மக்கள் பார்க்கப் போகிறார்கள் என்ற சந்தோஷத்துடன் இருக்கிறோம். எல்லா ஊர்களுக்கும் சென்று வந்தது நல்ல அனுபவமாக இருந்தது. எல்லா நகரங்களிலும் அவர்களின் பாரம்பரியத்தோடு எங்களை வரவேற்றார்கள். இந்தப் படத்தின் மூலம் கல்கி அவர்களின் ஆன்மா சாந்தி அடையும். மேலும் மணி சார் கனவு, தமிழ்மக்களின் கனவு நாளை நனவாகப் போகிறது" என்றார். நடிகை ஐஸ்வர்ய லக்ஷ்மி பேசுகையில், “இந்தப் படத்தில் நடித்த ஒவ்வொரு நாளும் பல விஷயங்கள் கற்றுக் கொண்டேன். இத்தனை நடிகர்களுடன் இணைந்து நடித்த அனுபவமும் சிறப்பானது. இந்தப் படம் எவ்வளவு பெரிய வெற்றியடைய வேண்டும் என்றால், இப்படி ஒரு வெற்றியை இதற்கு முன் யாரும் பார்த்தே இருக்கக் கூடாது. அந்த அளவு ஹிட் ஆக வேண்டும்" என்றார். அவரைத் தொடர்ந்து த்ரிஷா பேசுகையில், "இந்த சோழா டூரின் போது என்னுடைய தோற்றம் சிறப்பாக இருந்தது என பலரும் பாராட்டினார்கள். அதற்கு காரணம் எனது குழு. அவர்களுக்கு நன்றி. இந்தப் படத்தின் ப்ரமோஷன் பணிகளை சென்னையில் தான் துவங்கினோம். இப்போது மறுபடி சென்னையிலேயே முடித்திருக்கிறோம். பொதுவாக ஒரு பட வெளியீட்டுக்கு முன்பு எந்த டென்ஷனும் இருக்காது. ஆனால் இந்தப் படத்தில் எனக்கு சின்ன டென்ஷன் இருக்கிறது. கூடவே நான் எந்தப் படத்திற்கும் இந்த அளவிற்கு ப்ரமோஷன் செய்ததில்லை. படத்தை பற்றி இவ்வளவு பேசியதில்லை. ஆனால் இந்தப் படத்தில் அதெல்லாம் நடந்திருக்கிறது. நாளை உங்களைப் போலவே நாங்களும் படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம்" என்றார். நடிகர் பார்த்திபன் பேசுகையில், “ ‘நானே வருவேன்' என அடம்பிடித்து இந்த நிகழ்வுக்கு வந்தேன். முதலில் இந்த நிகழ்வுக்கு வரும்படி அழைத்த போது தஞ்சாவூர் செல்லும் வேலை இருந்ததால் முடியாது எனச் சொன்னேன். ஆனால் பின்பு கலந்து கொள்ள வேண்டும் எனத் தோன்றியது. அதனால் அடம்பிடித்து இந்த நிகழ்வுக்கு வந்திருக்கிறேன். ஏனென்றால் இப்படியான பிரமாதமான மேடையை எங்காவது இதற்குப் பார்க்க முடியுமா? கிட்டத்தட்ட ஆறு வாரங்களுக்கு மேல் இந்த ஆராவாரம் இருக்கும் என நம்பலாம். ஏனென்றால் இந்த அளவுக்கு எந்தப் படத்திற்கும் டிக்கெட் டிமாண்ட் இருந்ததில்லை. இப்படிப்பட்ட படத்தில் எனக்கும் ஒரு சிரிய பாத்திரம் கொடுத்த இயக்குநர் மணிரத்னம் அவர்களுக்கு நன்றி. மற்றபடி நாளை தஞ்சாவூர் கிளம்புகிறேன். அங்கு சென்று பொன்னியின் செல்வன் பார்க்கப் போகிறேன்" என்றார். படம் வெளியான நிலையில், சமூக ஊடகங்களில் பலரும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 2023-ம் ஆண்டில் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இரு பாகங்களாக உருவாகியுள்ளது. நடிகர்கள் ஜெயம்ரவி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், விக்ரம் பிரபு, நடிகைகள் ஐஷ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லக்ஷ்மி, சோபிதா என பலரும் நடிக்கும் இப்படத்தின் முதல் பாகம், இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு நேற்று மதியம் சென்னை லீலா பேலஸில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் நடிகர் விக்ரம், ஜெயம்ரவி, பார்த்திபன், விக்ரம் பிரபு, நடிகை த்ரிஷா, ஐஸ்வர்ய லக்ஷ்மி, சோபிதா ஆகியோர் கலந்து கொண்டனர். படம் வெளியாவது பற்றியும், படத்திற்கான ப்ரமோஷன்களுக்காக சென்று வந்த பயணம் பற்றியும் இந்த நிகழ்வில் அனைவரும் பகிர்ந்து கொண்டார். நிகழ்வில் பேசிய ஜெயம் ரவி, "நாளை (இன்று) படம் ரிலீஸ் ஆகிற டென்ஷன் இருக்கிறது. ஆனால், எங்கள் உழைப்பை மக்கள் பார்க்கப் போகிறார்கள் என்ற சந்தோஷத்துடன் இருக்கிறோம். எல்லா ஊர்களுக்கும் சென்று வந்தது நல்ல அனுபவமாக இருந்தது. எல்லா நகரங்களிலும் அவர்களின் பாரம்பரியத்தோடு எங்களை வரவேற்றார்கள். இந்தப் படத்தின் மூலம் கல்கி அவர்களின் ஆன்மா சாந்தி அட...

‘நான் எந்தப் படத்திற்கும் இந்த அளவிற்கு புரமோஷன் செய்ததில்லை’ - நடிகை த்ரிஷா மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இரு பாகங்களாக உருவாகியுள்ளது. நாளை படத்தின் முதல் பாகம் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு இன்று மதியம் சென்னை லீலா பேலஸில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகை ஷோபிதா கூறுகையில், “இந்தப் படத்தின் ஒரு அங்கமாக இருப்பது எனக்கு பெரிய பெருமை. சரித்திர கால உடைகள் அணிந்து நடித்தது, நடனமாடியது எல்லாம் எப்போதும் நீங்க நினைவுகளாக இருக்கும்" என்று குறிப்பிட்டார். நடிகை ஐஸ்வர்ய லக்ஷ்மி பேசும்போது, “இந்தப் படத்தில் நடித்த ஒவ்வொரு நாளும் பல விஷயங்கள் கற்றுக் கொண்டேன். இத்தனை நடிகர்களுடன் இணைந்து நடித்த அனுபவமும் சிறப்பானது. இந்தப் படம் எவ்வளவு பெரிய வெற்றியடைய வேண்டும் என்றால், இப்படி ஒரு வெற்றியை இதற்கு முன் யாரும் பார்த்தே இருக்கக் கூடாது. அந்த அளவு ஹிட் ஆக வேண்டும்" என்று தெரிவித்தார். நடிகை த்ரிஷா பேசுகையில், “இந்த சோழா டூரின் போது என்னுடைய தோற்றம் சிறப்பாக இருந்தது என பலரும் பாராட்டினார்கள். அதற்கு காரணம் எனது குழு. அவர்களுக்கு நன்றி. இந்தப் படத்தின் ப்ரமோஷன் பணிகளை சென்னையில் தான் துவங்கினோம். இப்போது மறுபடி சென்னையிலேயே முடித்திருக்கிறோம். பொதுவாக ஒரு பட வெளியீட்டுக்கு முன்பு எந்த டென்ஷனும் இருக்காது. ஆனால் இந்தப் படத்தில் எனக்கு சின்ன டென்ஷன் இருக்கிறது. கூடவே நான் எந்தப் படத்திற்கும் இந்த அளவிற்கு ப்ரமோஷன் செய்ததில்லை. படத்தை பற்றி இவ்வளவு பேசியதில்லை. ஆனால் இந்தப் படத்தில் அதெல்லாம் நடந்திருக்கிறது. நாளை உங்களைப் போலவே நாங்களும் படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம்" இவ்வாறு அவர் குறிப்பிட்டார். நடிகர் பார்த்திபன் பேசும்போது, “ 'நானே வருவேன்' என அடம்பிடித்து இந்த நிகழ்வுக்கு வந்தேன். முதலில் இந்த நிகழ்வுக்கு வரும்படி அழைத்த போது தஞ்சாவூர் செல்லும் வேலை இருந்ததால் முடியாது எனச் சொன்னேன். ஆனால் பின்பு கலந்து கொள்ள வேண்டும் எனத் தோன்றியது. அதனால் அடம்பிடித்து இந்த நிகழ்வுக்கு வந்திருக்கிறேன். ஏனென்றால் இப்படியான பிரமாதமான மேடையை எங்காவது பார்க்க முடியுமா? கிட்டத்தட்ட ஆறு வாரங்களுக்கு மேல் இந்த ஆராவாரம் இருக்கும் என நம்பலாம். ஏனென்றால் இந்த அளவுக்கு எந்தப் படத்திற்கும் டிக்கெட் டிமாண்ட் இருந்ததில்லை. இப்படிப்பட்ட படத்தில் எனக்கும் ஒரு சிறிய பாத்திரம் கொடுத்த இயக்குநர் மணிரத்னம் அவர்களுக்கு நன்றி. மற்றபடி நாளை தஞ்சாவூர் கிளம்புகிறேன். அங்கு சென்று ‘பொன்னியின் செல்வன்’ பார்க்கப் போகிறேன்" இவ்வாறு அவர் தெரிவித்தார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இரு பாகங்களாக உருவாகியுள்ளது. நாளை படத்தின் முதல் பாகம் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு இன்று மதியம் சென்னை லீலா பேலஸில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகை ஷோபிதா கூறுகையில், “இந்தப் படத்தின் ஒரு அங்கமாக இருப்பது எனக்கு பெரிய பெருமை. சரித்திர கால உடைகள் அணிந்து நடித்தது, நடனமாடியது எல்லாம் எப்போதும் நீங்க நினைவுகளாக இருக்கும்" என்று குறிப்பிட்டார். நடிகை ஐஸ்வர்ய லக்ஷ்மி பேசும்போது, “இந்தப் படத்தில் நடித்த ஒவ்வொரு நாளும் பல விஷயங்கள் கற்றுக் கொண்டேன். இத்தனை நடிகர்களுடன் இணைந்து நடித்த அனுபவமும் சிறப்பானது. இந்தப் படம் எவ்வளவு பெரிய வெற்றியடைய வேண்டும் என்றால், இப்படி ஒரு வெற்றியை இதற்கு முன் யாரும் பார்த்தே இருக்கக் கூடாது. அந்த அளவு ஹிட் ஆக வேண்டும்" என்று தெரிவித்தார். நடிகை த்ரிஷா பேசுகையில், “இந்த சோழா டூரின் போது என்னுடைய தோற்றம் சிறப்பாக இருந்தது என பலரும் பாராட்டினார்கள். அதற்கு காரணம் எனது குழு. அவர்களுக்கு நன்றி. இந்தப் படத்தின் ப்ரமோஷன் பணிகளை சென்னையில் தான் துவங்கினோம். இப்போது மறுபடி ச...

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் மூலம் கல்கியின் ஆன்மா சாந்தியடையும் - நடிகர் ஜெயம் ரவி மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இரு பாகங்களாக உருவாகியுள்ளது. நாளை படத்தின் முதல் பாகம் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு இன்று மதியம் சென்னை லீலா பேலஸில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகர் விக்ரம், ஜெயம் ரவி, பார்த்திபன், விக்ரம் பிரபு, நடிகை த்ரிஷா, ஐஸ்வர்ய லக்ஷ்மி, சோபிதா ஆகியோர் கலந்து கொண்டனர். நாளை படம் வெளியாவது பற்றியும், படத்திற்கான ப்ரமோஷன்களுக்காக சென்று வந்த பயணம் பற்றியும் இந் நிகழ்வில் படக்குழுவினர் பகிர்ந்து கொண்டனர். நிகழ்வில் பேசிய ஜெயம் ரவி, "நாளை படம் ரிலீஸ் ஆகிற டென்ஷன் இருக்கிறது. ஆனால், எங்கள் உழைப்பை மக்கள் பார்க்கப் போகிறார்கள் என்ற சந்தோஷத்துடன் இருக்கிறோம். எல்லா ஊர்களுக்கும் சென்று வந்தது நல்ல அனுபவமாக இருந்தது. எல்லா நகரங்களிலும் அவர்களின் பாரம்பரியத்தோடு எங்களை வரவேற்றார்கள். இந்தப் படத்தின் மூலம் கல்கி அவர்களின் ஆன்மா சாந்தி அடையும். மேலும் மணி சார் கனவு, தமிழ் மக்களின் கனவு நாளை நனவாகப் போகிறது" என்று தெரிவித்தார். விக்ரம் பேசுகையில், "கிளாடியேட்டர், ப்ரேவ் ஹார்ட் போன்ற ஹிஸ்டாரிக்கல் கதைக் களத்தில் நடிக்க வேண்டும் என்பது நெடுநாள் கனவு. நான் மிகவும் விரும்பிய ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிக்க நான் தேர்வானது மிக சந்தோஷமாக இருக்கிறது. எல்லோரின் நினைவிலும் உள்ள பாத்திரத்தில் நடிக்கிறோம் என்ற பயம் இருந்தது. ஆனால் மணி சாரும் அவரது குழுவும் அந்தப் பயத்தை எனக்கு உடைத்தார்கள். முன்பே ‘பிதாமகன்’ படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்தேன். மேலும் சில படங்களில் இன்னொரு நட்சத்திரத்துடன் இணைந்து நடித்திருக்கிறேன். ஆனால் இந்த மாதிரி பல ஸ்டார்களுடன் இணைந்து நடித்ததில்லை. இதுவே மிகப் புதுமையான அனுபவமாக இருந்தது. நாளை ‘விக்ரம் வேதா’ படமும் ரிலீஸ் ஆகிறது. புஷ்கர் காயத்ரி தமிழில் ஹிட்டான அவர்களுடைய படத்தை இந்திக்கும் கொண்டு சென்று சேர்த்திருக்கிறார்கள். அவர்களுக்கும் என் வாழ்த்துகள்" என்று தெரிவித்தார். நடிகர் விக்ரம் பிரபு பேசுகையில், “இந்தப் படத்தில் நடிக்க மணிரத்னம் என்னை அழைத்த நாளில் இருந்தே மகிழ்ச்சி. நான் வியந்து பார்த்த பலருடன் இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். பொதுவாக ஒரு இயக்குநருக்கு அவரின் படம் ஒரு குழந்தைப் போல. அந்தக் குழந்தையை நாளை எல்லோரும் கொஞ்சப் போகிறார்கள். நாங்களும் ரசிகர்களைப் போல படத்தைப் பார்க்க காத்திருக்கிறோம்” என்று கூறினார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இரு பாகங்களாக உருவாகியுள்ளது. நாளை படத்தின் முதல் பாகம் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு இன்று மதியம் சென்னை லீலா பேலஸில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகர் விக்ரம், ஜெயம் ரவி, பார்த்திபன், விக்ரம் பிரபு, நடிகை த்ரிஷா, ஐஸ்வர்ய லக்ஷ்மி, சோபிதா ஆகியோர் கலந்து கொண்டனர். நாளை படம் வெளியாவது பற்றியும், படத்திற்கான ப்ரமோஷன்களுக்காக சென்று வந்த பயணம் பற்றியும் இந் நிகழ்வில் படக்குழுவினர் பகிர்ந்து கொண்டனர். நிகழ்வில் பேசிய ஜெயம் ரவி, "நாளை படம் ரிலீஸ் ஆகிற டென்ஷன் இருக்கிறது. ஆனால், எங்கள் உழைப்பை மக்கள் பார்க்கப் போகிறார்கள் என்ற சந்தோஷத்துடன் இருக்கிறோம். எல்லா ஊர்களுக்கும் சென்று வந்தது நல்ல அனுபவமாக இருந்தது. எல்லா நகரங்களிலும் அவர்களின் பாரம்பரியத்தோடு எங்களை வரவேற்றார்கள். இந்தப் படத்தின் மூலம் கல்கி அவர்களின் ஆன்மா சாந்தி அடையும். மேலும் மணி சார் கனவு, தமிழ் மக்களின் கனவு நாளை நனவாகப் போகிறது" என்று தெரிவித்தார். விக்ரம் பேசுகையில், "கிளாடியேட்டர், ப்ரேவ் ஹார்ட் போன்ற ஹிஸ்டாரிக்கல் கதைக் களத்த...

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை நாடு முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இந்தப் படத்தை அரசு மற்றும் தனியாரின் இணையத்தள சேவை நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாக 2,405 இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டுமென பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, மிகுந்த பொருட் செலவில் படத்தை வெளியிட உள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டால் பெருத்த நஷ்டம் ஏற்படும் என்றும், திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் வாதிட்டார். இதையடுத்து, ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்தும், அவ்வாறு வெளியிடுவதை இணையதள சேவை நிறுவனங்கள் தடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை நாடு முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இந்தப் படத்தை அரசு மற்றும் தனியாரின் இணையத்தள சேவை நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாக 2,405 இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டுமென பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, மிகுந்த பொருட் செலவில் படத்தை வெளியிட உள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டால் பெருத்த நஷ்டம் ஏற்படும் என்றும், திரை கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் வாதிட்டார். இதையடுத்து, ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்தும், அவ்வாறு வெளியிடுவதை இணையதள சேவை நிறுவனங்கள் தடுக்கவும் ந...

ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படம் கசிவு! ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து நடிகர் ரஜினிகாந்த்தின் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. ‘அண்ணாத்தே’ படத்தைத் தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ‘ஜெயிலர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலை, எண்ணூர் உள்ளிட்ட இடங்களிலும், ஆதித்யராம் ஃபிலிம் சிட்டியில் செட் அமைக்கப்பட்டும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், நடிகர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ பட கெட்டப்பில் நடந்து வருவது போன்றும், ரசிகர்களை பார்த்து கையசைப்பது போன்றும் உள்ளது. இந்தப் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, கன்னட நடிகர் ஷிவ்ராஜ் குமார், விநாயகன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்து வருகின்றனர். அண்மைக்காலமாகவே படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினருக்கு தெரியாமல் எடுக்கப்படும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருவது வழக்கமாகி வருகிறது. நடிகர் விஜயின் ‘வாரிசு’ படப்பிடிப்பு புகைப்படங்களும், அஜித்தின் ‘துணிவு’ படப்பிடிப்பு புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின. இதேபோல் சூர்யா - சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகிவரும் ‘சூர்யா 42’ திரைப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியான நிலையில், இதுபோன்ற புகைப்படங்களை பகிர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என படக்குழுவினர் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து நடிகர் ரஜினிகாந்த்தின் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. ‘அண்ணாத்தே’ படத்தைத் தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ‘ஜெயிலர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலை, எண்ணூர் உள்ளிட்ட இடங்களிலும், ஆதித்யராம் ஃபிலிம் சிட்டியில் செட் அமைக்கப்பட்டும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், நடிகர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ பட கெட்டப்பில் நடந்து வருவது போன்றும், ரசிகர்களை பார்த்து கையசைப்பது போன்றும் உள்ளது. இந்தப் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, கன்னட நடிகர் ஷிவ்ராஜ் குமார், விநாயகன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்து வருகின்றனர். அண்மைக்காலமாகவே படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினருக்கு தெரியாமல் எடுக்கப்படும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருவது வழக்கம...

நானே வருவேன்: தனுஷ் கட்-அவுட்க்கு பீர் அபிஷேகம் செய்த புதுச்சேரி ரசிகர்கள் நடிகர் தனுஷ் நடித்த நானே வருவேன் திரைப்படத்தை வரவேற்கும் வகையில், புதுச்சேரியில் தனுஷ் கட் அவுட்டுக்கு பீர் அபிஷேகம் செய்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நடிகர் தனுஷ் நடித்து இன்று திரைக்கு வந்துள்ள 'நானே வருவேன்' திரைப்படம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் உள்ள தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி காமராஜ் சாலையில் உள்ள திரையரங்கில் நானே வருவேன் திரைப்படத்தின் காலை காட்சி ரசிகர்கள் காட்சியாக திரையிடப்பட்டது. முன்னதாக புதுச்சேரி தனுஷ் ரசிகர்கள் அவருடைய பேனருக்கு மாலை அணிவித்து பூக்களை தூவி, பட்டாசுகள் வெடித்ததோடு கட் அவுட்டுக்கு பீர் அபிஷேகம் செய்தும், கையில் கற்பூரம் ஏற்றியும் படத்திற்கு வரவேற்பு அளித்தனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
நடிகர் தனுஷ் நடித்த நானே வருவேன் திரைப்படத்தை வரவேற்கும் வகையில், புதுச்சேரியில் தனுஷ் கட் அவுட்டுக்கு பீர் அபிஷேகம் செய்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நடிகர் தனுஷ் நடித்து இன்று திரைக்கு வந்துள்ள 'நானே வருவேன்' திரைப்படம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் உள்ள தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி காமராஜ் சாலையில் உள்ள திரையரங்கில் நானே வருவேன் திரைப்படத்தின் காலை காட்சி ரசிகர்கள் காட்சியாக திரையிடப்பட்டது. முன்னதாக புதுச்சேரி தனுஷ் ரசிகர்கள் அவருடைய பேனருக்கு மாலை அணிவித்து பூக்களை தூவி, பட்டாசுகள் வெடித்ததோடு கட் அவுட்டுக்கு பீர் அபிஷேகம் செய்தும், கையில் கற்பூரம் ஏற்றியும் படத்திற்கு வரவேற்பு அளித்தனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/j9WZST2 via IFTTT

`நானும் இன்னும் படத்தை பார்க்கலை... உங்ககூடத்தான் பார்க்கப்போறேன்’- நடிகர் கார்த்தி மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன் படம்.  இப்படத்தில் நடிகர் கார்த்தி வந்தியத்தேவன் என்ற முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் முதல் செப் 30ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் நடிகர் கார்த்தி நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். நிகழ்வில் பேசிய கார்த்தி "இப்போதுதான் விருமன் படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்து பொன்னியின் செல்வன் வெளியாகவுள்ளது. கடந்த சில நாட்களாக படத்தை மற்ற நகரங்களிலும் சென்று சேர்க்கும் விதமாக ப்ரமோஷனுக்காக சென்றிருந்தோம். தொடர்ச்சியாக படத்தைப் பற்றி சொல்லி சொல்லி, இப்போது அவர்களும் பொன்னியின் செல்வன் என்ற பெயரை தெளிவாக உச்சரிக்கிறார்கள். கேட்கவே மகிழ்ச்சியாக இருந்தது. கூடவே விக்ரம், ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ரஹ்மான், மணிரத்னம் என மிகப்பெரிய திறமையாளர்களுடன் பயணித்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. படத்திற்கான டிக்கெட் புக்கிங்கைப் பார்க்கும் போதே படத்தைப் பற்றிய ஆர்வம் மக்களிடம் எந்த அளவு உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. சமீபத்தில் ஒரு நண்பர் ரயிலில் தான் சென்ற போது, அங்கு பலரும் பொன்னியின் செல்வன் புத்தகத்தை வாசிக்கிறார்கள் என்று புகைப்படத்தை அனுப்பி வைத்தார். பொன்னியின் செல்வன் புத்தகத்தின் சேல்ஸ் இன்னும் அதிகரித்திருக்கிறது. வாசிக்கும் பழக்கமும் அதிகமாகியிருக்கிறது. சிலர் ஆடியோ புத்தகமாக, பொன்னியின் செல்வனைக் கேட்க துவங்கியிருக்கிறார்கள். இதெல்லாம் சந்தோஷமாக இருக்கிறது. மணிரத்னம் சார் முதல் முறையாக ஒரு பீரியட் படத்தை எடுத்திருக்கிறார். இதன் காட்சிகளுக்கு என எந்த ரெஃபரன்ஸூம் கிடையாது. அப்போதைய காலம் எப்படி இருந்திருக்கும் என்பதை எல்லாம் ஆய்வு செய்து படத்தில் கொண்டு வந்திருக்கிறார். அப்புறம், நீங்கள் எல்லோரும் படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறீர்கள் எனத் தெரியும். அதே ஆர்வத்துடன் நானும் இருக்கிறேன். ஏனென்றால் நானும் படத்தை இன்னும் பார்க்கவில்லை. இது என்னுடைய திரைப் பயணத்தில் மிக முக்கியமான படமாக இருக்கும். என்னதான் உலகம் முழுக்க படத்தை பற்றி கொண்டு சேர்த்தாலும், படத்தின் வெளியீட்டுக்கு முன் நம்ம ஊரில் பத்திரிகையாளர்களை சந்திக்க விரும்பினேன். அதனால் தான் இந்த உடனடி சந்திப்பு. ஆனால் அது ரிலீஸூக்கு இவ்வளவு நெருக்கத்தில் அமையும் என எதிர்பார்க்கவில்லை.  இதற்கு அடுத்ததாக தீபாவளிக்கு என் நடிப்பில் சர்தார் படம் வருகிறது. அதுவும் முற்றிலும் வேறொரு வகையில் உருவாகியிருக்கிறது. எனக்கு ஓய்வே இல்லை என்று மட்டும் புரிகிறது. தொடர்ந்து நல்ல படங்களைக் கொடுக்க ஓடிக் கொண்டே இருப்பேன்" என்றார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன் படம்.  இப்படத்தில் நடிகர் கார்த்தி வந்தியத்தேவன் என்ற முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் முதல் செப் 30ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் நடிகர் கார்த்தி நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். நிகழ்வில் பேசிய கார்த்தி "இப்போதுதான் விருமன் படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்து பொன்னியின் செல்வன் வெளியாகவுள்ளது. கடந்த சில நாட்களாக படத்தை மற்ற நகரங்களிலும் சென்று சேர்க்கும் விதமாக ப்ரமோஷனுக்காக சென்றிருந்தோம். தொடர்ச்சியாக படத்தைப் பற்றி சொல்லி சொல்லி, இப்போது அவர்களும் பொன்னியின் செல்வன் என்ற பெயரை தெளிவாக உச்சரிக்கிறார்கள். கேட்கவே மகிழ்ச்சியாக இருந்தது. கூடவே விக்ரம், ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ரஹ்மான், மணிரத்னம் என மிகப்பெரிய திறமையாளர்களுடன் பயணித்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. படத்திற்கான டிக்கெட் புக்கிங்கைப் பார்க்கும் போதே படத்தைப் பற்றிய ஆர்வம் மக்களிடம் எந்த அளவு உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. சமீபத்தில் ஒரு நண்பர் ர...

பரியனுக்கு புரிந்தது ஜோவுக்கு எப்படி புரியாமலேயே போகும்!! பரியேறும் பெருமாள் ஓர் ரிவைண்ட் ஒரு குளத்தில் கல்லை எறிந்த பின்னர் சிறிது அங்கு சலனத்தை உண்டாக்கிவிட்டு பின்னர் மீண்டும் அதே நிலைக்கு வந்துவிடும். அப்படித்தான் பரியேறும் பெருமாள் திரைப்படமும் பார்த்தவர்களின் மனங்களில் படிந்திருந்த சாதி எனும் நீர்க்குளத்தில் கல்லை விட்டெறிந்தது. கலையால் வடிக்கப்பட்ட அந்த கல்லின் தாக்கம் படம் பார்த்தவர்களின் மனதில் நிச்சயம் சில நாட்களாக குடிகொண்டிருந்திருக்கும். சாதி எனும் அன்பை கொல்லும் அரக்கனுக்கு எதிராய் கேள்விக்கணைகளை தொடுத்திருக்கும். பலரையும் நிச்சயம் சிந்திக்க வைத்திருக்கும். ஒரு பிரசார நெடியில் இல்லாமல், உணர்த்தும் வகையில் படம் உருவாக்கப்பட்டிருந்தது தான் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம். அதற்கு முன்பு பா.ரஞ்சித் எடுத்திருந்த படங்களில் இந்த உணர்த்துதல் இல்லாமல் இருந்ததாகவும், ஒரு கலைப்படைப்பாக சில விமர்சனங்களை சந்திக்க செய்திருந்தது. இயக்குநர் மாரி செல்வராஜ் தன்னுடைய முதல் படத்திலேயே ஒரு திரைப்படமாக, தான் சொல்ல வந்ததை க்ளியர் அண்டு க்ளியராக பேசியிருப்பார். இந்தப் படத்தை பெரிய அளவில் பலரும் கொண்டாடி தீர்த்தார்கள். படம் வெளியான தருணத்தில் விமர்சன ரீதியாகவும் அப்படியொரு பாராட்டினை பெற்றது. படம் வெளியாகி நான்கு வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், இன்னும் இந்த படம் குறித்து விவாதிக்க ஏதேனும் இருக்கா? என்ற கேள்வி எழலாம். ஆம், நிச்சயம் இருக்கிறது. படம் குறித்து பல விஷயங்கள் இருக்கிறது என்றாலும் பரியனுக்குள் இருக்கும் தயக்கம் என்ற விஷயத்தை மட்டும் இங்கு எடுத்துக் கொள்ளலாம். பரியன் - ஜோ - ஆனந்த்.. இந்த மூவரும் முழு புரிதலுக்கு ஏன் வர முடியவில்லை. அதற்கு எது காரணம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். தன்னை அவமானப்படுத்திய ஜோவின் சகோதரன் உள்ளிட்டவர்களை பரியன் கண்மூடித்தனமாக தாக்க முயற்சிப்பான். பின்னர், இந்த பிரச்சனை பரியனின் நண்பன் ஆனந்த்துக்கு (யோகி பாபு) தெரியவந்து அங்கு வந்து சேருவான். என்ன நடந்தது என்று பரியனிடம் விசாரிப்பான். ’என்ன காரணத்திற்காக நீ அவங்கள அடிச்சணு சொல்லு நானும் அடிக்கிறேன்’ என்று சொல்வான் ஆனந்த். ஆனால், பரியனோ தன்னுடைய மவுனத்தை கலைக்காமல் பிடிவாதமாக இருப்பான். பரியன் ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என்று ஜோவுக்கு குழப்பமாகவே இருக்கும். பரியனுக்கு நடக்கும் எந்த பிரச்சனையும் சாதிய ரீதியான அவமானங்களும் ஜோவுக்கு தெரியவே இல்லை. ஆனால், அவருக்கு வயது 18. நெல்லையில் பிறந்து வளர்ந்த ஜோவுக்கு வெளி உலகத்தை பற்றிய எவ்வித புரிதலுமே இல்லை. பரியனுக்கு நடப்பது குறித்து பரஸ்பரம் யோகிபாபுக்கு முழு புரிதல் இல்லை. இது சற்றே விநோதமாகவே இருக்கும். இது எப்படி சாத்தியம் என்றே தெரியவில்லை. ஒரு விவாதத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே கலைப்படைப்புகளை உருவாக்குவதாக சொல்லிவிட்டு தன் கதாபாத்திரங்களை கொஞ்சமும் கூட விவாதிக்க விடாமல் ஏன் இயக்குநர் கையாண்டார். சாதியை கடந்து நண்பர்கள் இருப்பதில்லையா?. வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்த நண்பர்கள் ஒன்றிணைந்து ஒருவருக்கு ஒருவர் தங்களுடைய பிரச்சனைகளுக்காக நிற்க மாட்டார்களா?. அதுவும் எப்பொழுதும் கூடவே இருக்கும் எல்லையற்ற அன்பை பொழியும் அவர்களுக்கு எப்படி புரியாமல் போகும்? மீண்டும் மீண்டும் எங்கள் வலி யாருக்கும் புரியவில்லை என்ற தொனியிலே தலித் படைப்பாளர்கள் சிலரது குரல்கள் ஒலிக்கிறதா?. இது ஒருவகையில் அவநம்பிக்கையின் வெளிப்பாடுதானே. இரு மனங்கள் உறவுகொள்ள துவங்கும் தொடக்க நிலையில் புரிய வாய்ப்பு இல்லைதான். அது நட்போ, காதலோ எதுவாக இருந்தாலும், நாட்கள் செல்ல செல்ல புரிதல் ஏற்பட ஏற்பட ஒருவரை பற்றி ஒருவருக்கு தெரியாத விஷயங்கள் உண்மையில் மிகவும் குறைவாகவே இருக்கும். அதுவே உண்மையான உறவின் வெளிப்பாடு. ஆனால், பரியனுக்கும் ஜோவுக்கு இடையில் நீண்ட இடைவெளி கடைசி வரை இருந்துகொண்டே இருக்கிறது. அதற்கு பரியன் காரணமா? அல்லது ஜோவின் அறியாமையா?. அன்புக்கு எது தடையாக இருக்கிறதோ அதனை அந்த மனங்கள் இணைந்துதானே போராட வேண்டும். அதைவிடுத்து தனித்தே மனத்திற்குள் ஒரு போராட்டத்தை பரியன் நிகழ்த்திக்கொண்டே இருப்பது அதும் க்ளைமேக்ஸ் வரை எப்படி நியாயமாக இருக்க முடியும். அவர்கள் நெல்லையின் கிராமங்களில் வளர்ந்தவர்கள்தானே. அவர்களுக்கு சமூகத்தின் யதார்த்த சூழல் எப்படி புரியாமல் போகும். ஒருவேளை பள்ளிப் படிப்பு வரை கூட புரியாமல் போகலாம். கல்லூரி காலம் என்பது எல்லாவற்றையும் சற்றே மெச்சூரிட்டியான தன்மையுடன் அணுகும் பருவம், உலகை அறிந்து கொள்வதற்காக வாய்ப்புகள் அதிகம் உள்ள காலம். அந்த தருணத்தில் நண்பரோ, காதலியோ யாராக இருந்தாலும் ஒற்றைப் புள்ளியில் ஒரு புரிதலுக்கு ஏன் வர முடியவில்லை? அதற்கான விவாதத்தை மூவருக்கு இடையில் கூட நிகழ்த்தாமல் தவிர்த்தது ஏனோ? சாதி என்பது தேவையில்லாமல் நாம் தூக்கி சுமக்கும் சுமைதான். அதை விட்டு ஒழிக்க எல்லா தரப்பில் இருந்தும் மனிதர்கள் முன்வந்து கொண்டே தான் இருக்கிறார்கள். அதற்கு எதிராக தொடர்ந்து போராட்ட களத்திலும் இருக்கிறார்கள். நெல்லை மண்ணை பற்றி சொல்லவே தேவையில்லை. பலரும் அந்த மண்ணில் இருந்து புயலாய் புறப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை மட்டும் சேர்ந்தவர்கள் அல்ல. இந்த புரிதல் மிகவும் முக்கியமான ஒன்று. அதாவது பாதிக்கப்பட்டவன் பேசினால் தான் பிரச்சனையை தெளிவாக பேச முடியும் என்ற வாதம் மிகவும் அபத்தமானது அல்லவா? ஏனெனில் இந்த திரைப்படம் வெளியான தருணத்தில் மாரி செல்வராஜால் தான் இப்படியொரு படத்தை உண்மைக்கு நெருக்கமாக எடுக்க முடியும் என்று முன்னணி இயக்குநர்கள் பலரும் கருத்து தெரிவித்து இருந்தார்கள். பாதிப்பை உணர்வதற்கும் அதை கலைப்படைப்பாக உருவாக்குவதற்கும் அதே சமுதாயத்தில் பிறந்திருக்க வேண்டும் என்ற எந்த நிர்பந்தமும் கிடையாது. ஒரு அநீதியை கொடுமையை உணர்வதற்கு நல்ல மனிதராக இருந்தாலே போதுமானது. உண்மையின் பக்கம் நின்று பேச வேண்டும் என்பதே அதற்கான நிபந்தனை. ஏனெனில் பரியன் கதாபாத்திரத்தில் ஏதோ ஒருவித ரிசர்வ்டு தன்மை இருக்கிறது. பரியன் கதாபாத்திரத்தை பொருத்தவரை ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். என்னதான் அது யதார்த்தத்திற்கு நெருக்கமான கதாபாத்திரமாக இருந்தாலும் அது இயக்குநர் உருவாக்கியதே. அதன் ஒவ்வொரு அசைவும் இயக்குநரின் புரிதல்தான். பரியனை எல்லோரின் மனதுடனும் கலக்கவிட வேண்டும். அதற்கு இயக்குநரே தடையாக இருக்கிறார் என்றே தோன்றுகிறது. அந்த மனங்கள் கூடிதான் சாதி எனும் தீய சக்தியை எதிர்க்க வேண்டும். பரியன்கள் ஒருபோதும் தனிமைப்பட்டு விடக்கூடாது. அது மேலும் ஆபத்திலேதான் முடியும். பரியனின் வலி ஜோவுக்கும் ஆனந்திற்கும் நிச்சயம் புரியும் என்று முதலில் இயக்குநர் நம்ப வேண்டும். மற்றவை அதன் இயக்க போக்கில் நடக்கும். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
ஒரு குளத்தில் கல்லை எறிந்த பின்னர் சிறிது அங்கு சலனத்தை உண்டாக்கிவிட்டு பின்னர் மீண்டும் அதே நிலைக்கு வந்துவிடும். அப்படித்தான் பரியேறும் பெருமாள் திரைப்படமும் பார்த்தவர்களின் மனங்களில் படிந்திருந்த சாதி எனும் நீர்க்குளத்தில் கல்லை விட்டெறிந்தது. கலையால் வடிக்கப்பட்ட அந்த கல்லின் தாக்கம் படம் பார்த்தவர்களின் மனதில் நிச்சயம் சில நாட்களாக குடிகொண்டிருந்திருக்கும். சாதி எனும் அன்பை கொல்லும் அரக்கனுக்கு எதிராய் கேள்விக்கணைகளை தொடுத்திருக்கும். பலரையும் நிச்சயம் சிந்திக்க வைத்திருக்கும். ஒரு பிரசார நெடியில் இல்லாமல், உணர்த்தும் வகையில் படம் உருவாக்கப்பட்டிருந்தது தான் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம். அதற்கு முன்பு பா.ரஞ்சித் எடுத்திருந்த படங்களில் இந்த உணர்த்துதல் இல்லாமல் இருந்ததாகவும், ஒரு கலைப்படைப்பாக சில விமர்சனங்களை சந்திக்க செய்திருந்தது. இயக்குநர் மாரி செல்வராஜ் தன்னுடைய முதல் படத்திலேயே ஒரு திரைப்படமாக, தான் சொல்ல வந்ததை க்ளியர் அண்டு க்ளியராக பேசியிருப்பார். இந்தப் படத்தை பெரிய அளவில் பலரும் கொண்டாடி தீர்த்தார்கள். படம் வெளியான தருணத்தில் விமர்சன ரீதியாகவும் அப்படியொரு பார...