பரியனுக்கு புரிந்தது ஜோவுக்கு எப்படி புரியாமலேயே போகும்!! பரியேறும் பெருமாள் ஓர் ரிவைண்ட் ஒரு குளத்தில் கல்லை எறிந்த பின்னர் சிறிது அங்கு சலனத்தை உண்டாக்கிவிட்டு பின்னர் மீண்டும் அதே நிலைக்கு வந்துவிடும். அப்படித்தான் பரியேறும் பெருமாள் திரைப்படமும் பார்த்தவர்களின் மனங்களில் படிந்திருந்த சாதி எனும் நீர்க்குளத்தில் கல்லை விட்டெறிந்தது. கலையால் வடிக்கப்பட்ட அந்த கல்லின் தாக்கம் படம் பார்த்தவர்களின் மனதில் நிச்சயம் சில நாட்களாக குடிகொண்டிருந்திருக்கும். சாதி எனும் அன்பை கொல்லும் அரக்கனுக்கு எதிராய் கேள்விக்கணைகளை தொடுத்திருக்கும். பலரையும் நிச்சயம் சிந்திக்க வைத்திருக்கும். ஒரு பிரசார நெடியில் இல்லாமல், உணர்த்தும் வகையில் படம் உருவாக்கப்பட்டிருந்தது தான் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம். அதற்கு முன்பு பா.ரஞ்சித் எடுத்திருந்த படங்களில் இந்த உணர்த்துதல் இல்லாமல் இருந்ததாகவும், ஒரு கலைப்படைப்பாக சில விமர்சனங்களை சந்திக்க செய்திருந்தது. இயக்குநர் மாரி செல்வராஜ் தன்னுடைய முதல் படத்திலேயே ஒரு திரைப்படமாக, தான் சொல்ல வந்ததை க்ளியர் அண்டு க்ளியராக பேசியிருப்பார். இந்தப் படத்தை பெரிய அளவில் பலரும் கொண்டாடி தீர்த்தார்கள். படம் வெளியான தருணத்தில் விமர்சன ரீதியாகவும் அப்படியொரு பாராட்டினை பெற்றது. படம் வெளியாகி நான்கு வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், இன்னும் இந்த படம் குறித்து விவாதிக்க ஏதேனும் இருக்கா? என்ற கேள்வி எழலாம். ஆம், நிச்சயம் இருக்கிறது. படம் குறித்து பல விஷயங்கள் இருக்கிறது என்றாலும் பரியனுக்குள் இருக்கும் தயக்கம் என்ற விஷயத்தை மட்டும் இங்கு எடுத்துக் கொள்ளலாம். பரியன் - ஜோ - ஆனந்த்.. இந்த மூவரும் முழு புரிதலுக்கு ஏன் வர முடியவில்லை. அதற்கு எது காரணம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். தன்னை அவமானப்படுத்திய ஜோவின் சகோதரன் உள்ளிட்டவர்களை பரியன் கண்மூடித்தனமாக தாக்க முயற்சிப்பான். பின்னர், இந்த பிரச்சனை பரியனின் நண்பன் ஆனந்த்துக்கு (யோகி பாபு) தெரியவந்து அங்கு வந்து சேருவான். என்ன நடந்தது என்று பரியனிடம் விசாரிப்பான். ’என்ன காரணத்திற்காக நீ அவங்கள அடிச்சணு சொல்லு நானும் அடிக்கிறேன்’ என்று சொல்வான் ஆனந்த். ஆனால், பரியனோ தன்னுடைய மவுனத்தை கலைக்காமல் பிடிவாதமாக இருப்பான். பரியன் ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என்று ஜோவுக்கு குழப்பமாகவே இருக்கும். பரியனுக்கு நடக்கும் எந்த பிரச்சனையும் சாதிய ரீதியான அவமானங்களும் ஜோவுக்கு தெரியவே இல்லை. ஆனால், அவருக்கு வயது 18. நெல்லையில் பிறந்து வளர்ந்த ஜோவுக்கு வெளி உலகத்தை பற்றிய எவ்வித புரிதலுமே இல்லை. பரியனுக்கு நடப்பது குறித்து பரஸ்பரம் யோகிபாபுக்கு முழு புரிதல் இல்லை. இது சற்றே விநோதமாகவே இருக்கும். இது எப்படி சாத்தியம் என்றே தெரியவில்லை. ஒரு விவாதத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே கலைப்படைப்புகளை உருவாக்குவதாக சொல்லிவிட்டு தன் கதாபாத்திரங்களை கொஞ்சமும் கூட விவாதிக்க விடாமல் ஏன் இயக்குநர் கையாண்டார். சாதியை கடந்து நண்பர்கள் இருப்பதில்லையா?. வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்த நண்பர்கள் ஒன்றிணைந்து ஒருவருக்கு ஒருவர் தங்களுடைய பிரச்சனைகளுக்காக நிற்க மாட்டார்களா?. அதுவும் எப்பொழுதும் கூடவே இருக்கும் எல்லையற்ற அன்பை பொழியும் அவர்களுக்கு எப்படி புரியாமல் போகும்? மீண்டும் மீண்டும் எங்கள் வலி யாருக்கும் புரியவில்லை என்ற தொனியிலே தலித் படைப்பாளர்கள் சிலரது குரல்கள் ஒலிக்கிறதா?. இது ஒருவகையில் அவநம்பிக்கையின் வெளிப்பாடுதானே. இரு மனங்கள் உறவுகொள்ள துவங்கும் தொடக்க நிலையில் புரிய வாய்ப்பு இல்லைதான். அது நட்போ, காதலோ எதுவாக இருந்தாலும், நாட்கள் செல்ல செல்ல புரிதல் ஏற்பட ஏற்பட ஒருவரை பற்றி ஒருவருக்கு தெரியாத விஷயங்கள் உண்மையில் மிகவும் குறைவாகவே இருக்கும். அதுவே உண்மையான உறவின் வெளிப்பாடு. ஆனால், பரியனுக்கும் ஜோவுக்கு இடையில் நீண்ட இடைவெளி கடைசி வரை இருந்துகொண்டே இருக்கிறது. அதற்கு பரியன் காரணமா? அல்லது ஜோவின் அறியாமையா?. அன்புக்கு எது தடையாக இருக்கிறதோ அதனை அந்த மனங்கள் இணைந்துதானே போராட வேண்டும். அதைவிடுத்து தனித்தே மனத்திற்குள் ஒரு போராட்டத்தை பரியன் நிகழ்த்திக்கொண்டே இருப்பது அதும் க்ளைமேக்ஸ் வரை எப்படி நியாயமாக இருக்க முடியும். அவர்கள் நெல்லையின் கிராமங்களில் வளர்ந்தவர்கள்தானே. அவர்களுக்கு சமூகத்தின் யதார்த்த சூழல் எப்படி புரியாமல் போகும். ஒருவேளை பள்ளிப் படிப்பு வரை கூட புரியாமல் போகலாம். கல்லூரி காலம் என்பது எல்லாவற்றையும் சற்றே மெச்சூரிட்டியான தன்மையுடன் அணுகும் பருவம், உலகை அறிந்து கொள்வதற்காக வாய்ப்புகள் அதிகம் உள்ள காலம். அந்த தருணத்தில் நண்பரோ, காதலியோ யாராக இருந்தாலும் ஒற்றைப் புள்ளியில் ஒரு புரிதலுக்கு ஏன் வர முடியவில்லை? அதற்கான விவாதத்தை மூவருக்கு இடையில் கூட நிகழ்த்தாமல் தவிர்த்தது ஏனோ? சாதி என்பது தேவையில்லாமல் நாம் தூக்கி சுமக்கும் சுமைதான். அதை விட்டு ஒழிக்க எல்லா தரப்பில் இருந்தும் மனிதர்கள் முன்வந்து கொண்டே தான் இருக்கிறார்கள். அதற்கு எதிராக தொடர்ந்து போராட்ட களத்திலும் இருக்கிறார்கள். நெல்லை மண்ணை பற்றி சொல்லவே தேவையில்லை. பலரும் அந்த மண்ணில் இருந்து புயலாய் புறப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை மட்டும் சேர்ந்தவர்கள் அல்ல. இந்த புரிதல் மிகவும் முக்கியமான ஒன்று. அதாவது பாதிக்கப்பட்டவன் பேசினால் தான் பிரச்சனையை தெளிவாக பேச முடியும் என்ற வாதம் மிகவும் அபத்தமானது அல்லவா? ஏனெனில் இந்த திரைப்படம் வெளியான தருணத்தில் மாரி செல்வராஜால் தான் இப்படியொரு படத்தை உண்மைக்கு நெருக்கமாக எடுக்க முடியும் என்று முன்னணி இயக்குநர்கள் பலரும் கருத்து தெரிவித்து இருந்தார்கள். பாதிப்பை உணர்வதற்கும் அதை கலைப்படைப்பாக உருவாக்குவதற்கும் அதே சமுதாயத்தில் பிறந்திருக்க வேண்டும் என்ற எந்த நிர்பந்தமும் கிடையாது. ஒரு அநீதியை கொடுமையை உணர்வதற்கு நல்ல மனிதராக இருந்தாலே போதுமானது. உண்மையின் பக்கம் நின்று பேச வேண்டும் என்பதே அதற்கான நிபந்தனை. ஏனெனில் பரியன் கதாபாத்திரத்தில் ஏதோ ஒருவித ரிசர்வ்டு தன்மை இருக்கிறது. பரியன் கதாபாத்திரத்தை பொருத்தவரை ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். என்னதான் அது யதார்த்தத்திற்கு நெருக்கமான கதாபாத்திரமாக இருந்தாலும் அது இயக்குநர் உருவாக்கியதே. அதன் ஒவ்வொரு அசைவும் இயக்குநரின் புரிதல்தான். பரியனை எல்லோரின் மனதுடனும் கலக்கவிட வேண்டும். அதற்கு இயக்குநரே தடையாக இருக்கிறார் என்றே தோன்றுகிறது. அந்த மனங்கள் கூடிதான் சாதி எனும் தீய சக்தியை எதிர்க்க வேண்டும். பரியன்கள் ஒருபோதும் தனிமைப்பட்டு விடக்கூடாது. அது மேலும் ஆபத்திலேதான் முடியும். பரியனின் வலி ஜோவுக்கும் ஆனந்திற்கும் நிச்சயம் புரியும் என்று முதலில் இயக்குநர் நம்ப வேண்டும். மற்றவை அதன் இயக்க போக்கில் நடக்கும். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

ஒரு குளத்தில் கல்லை எறிந்த பின்னர் சிறிது அங்கு சலனத்தை உண்டாக்கிவிட்டு பின்னர் மீண்டும் அதே நிலைக்கு வந்துவிடும். அப்படித்தான் பரியேறும் பெருமாள் திரைப்படமும் பார்த்தவர்களின் மனங்களில் படிந்திருந்த சாதி எனும் நீர்க்குளத்தில் கல்லை விட்டெறிந்தது. கலையால் வடிக்கப்பட்ட அந்த கல்லின் தாக்கம் படம் பார்த்தவர்களின் மனதில் நிச்சயம் சில நாட்களாக குடிகொண்டிருந்திருக்கும். சாதி எனும் அன்பை கொல்லும் அரக்கனுக்கு எதிராய் கேள்விக்கணைகளை தொடுத்திருக்கும். பலரையும் நிச்சயம் சிந்திக்க வைத்திருக்கும்.

ஒரு பிரசார நெடியில் இல்லாமல், உணர்த்தும் வகையில் படம் உருவாக்கப்பட்டிருந்தது தான் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம். அதற்கு முன்பு பா.ரஞ்சித் எடுத்திருந்த படங்களில் இந்த உணர்த்துதல் இல்லாமல் இருந்ததாகவும், ஒரு கலைப்படைப்பாக சில விமர்சனங்களை சந்திக்க செய்திருந்தது. இயக்குநர் மாரி செல்வராஜ் தன்னுடைய முதல் படத்திலேயே ஒரு திரைப்படமாக, தான் சொல்ல வந்ததை க்ளியர் அண்டு க்ளியராக பேசியிருப்பார். இந்தப் படத்தை பெரிய அளவில் பலரும் கொண்டாடி தீர்த்தார்கள். படம் வெளியான தருணத்தில் விமர்சன ரீதியாகவும் அப்படியொரு பாராட்டினை பெற்றது. படம் வெளியாகி நான்கு வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், இன்னும் இந்த படம் குறித்து விவாதிக்க ஏதேனும் இருக்கா? என்ற கேள்வி எழலாம். ஆம், நிச்சயம் இருக்கிறது. படம் குறித்து பல விஷயங்கள் இருக்கிறது என்றாலும் பரியனுக்குள் இருக்கும் தயக்கம் என்ற விஷயத்தை மட்டும் இங்கு எடுத்துக் கொள்ளலாம். பரியன் - ஜோ - ஆனந்த்.. இந்த மூவரும் முழு புரிதலுக்கு ஏன் வர முடியவில்லை. அதற்கு எது காரணம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

image

தன்னை அவமானப்படுத்திய ஜோவின் சகோதரன் உள்ளிட்டவர்களை பரியன் கண்மூடித்தனமாக தாக்க முயற்சிப்பான். பின்னர், இந்த பிரச்சனை பரியனின் நண்பன் ஆனந்த்துக்கு (யோகி பாபு) தெரியவந்து அங்கு வந்து சேருவான். என்ன நடந்தது என்று பரியனிடம் விசாரிப்பான். ’என்ன காரணத்திற்காக நீ அவங்கள அடிச்சணு சொல்லு நானும் அடிக்கிறேன்’ என்று சொல்வான் ஆனந்த். ஆனால், பரியனோ தன்னுடைய மவுனத்தை கலைக்காமல் பிடிவாதமாக இருப்பான். பரியன் ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என்று ஜோவுக்கு குழப்பமாகவே இருக்கும். பரியனுக்கு நடக்கும் எந்த பிரச்சனையும் சாதிய ரீதியான அவமானங்களும் ஜோவுக்கு தெரியவே இல்லை. ஆனால், அவருக்கு வயது 18. நெல்லையில் பிறந்து வளர்ந்த ஜோவுக்கு வெளி உலகத்தை பற்றிய எவ்வித புரிதலுமே இல்லை. பரியனுக்கு நடப்பது குறித்து பரஸ்பரம் யோகிபாபுக்கு முழு புரிதல் இல்லை. இது சற்றே விநோதமாகவே இருக்கும். இது எப்படி சாத்தியம் என்றே தெரியவில்லை.

image

ஒரு விவாதத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே கலைப்படைப்புகளை உருவாக்குவதாக சொல்லிவிட்டு தன் கதாபாத்திரங்களை கொஞ்சமும் கூட விவாதிக்க விடாமல் ஏன் இயக்குநர் கையாண்டார். சாதியை கடந்து நண்பர்கள் இருப்பதில்லையா?. வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்த நண்பர்கள் ஒன்றிணைந்து ஒருவருக்கு ஒருவர் தங்களுடைய பிரச்சனைகளுக்காக நிற்க மாட்டார்களா?. அதுவும் எப்பொழுதும் கூடவே இருக்கும் எல்லையற்ற அன்பை பொழியும் அவர்களுக்கு எப்படி புரியாமல் போகும்?

மீண்டும் மீண்டும் எங்கள் வலி யாருக்கும் புரியவில்லை என்ற தொனியிலே தலித் படைப்பாளர்கள் சிலரது குரல்கள் ஒலிக்கிறதா?. இது ஒருவகையில் அவநம்பிக்கையின் வெளிப்பாடுதானே. இரு மனங்கள் உறவுகொள்ள துவங்கும் தொடக்க நிலையில் புரிய வாய்ப்பு இல்லைதான். அது நட்போ, காதலோ எதுவாக இருந்தாலும், நாட்கள் செல்ல செல்ல புரிதல் ஏற்பட ஏற்பட ஒருவரை பற்றி ஒருவருக்கு தெரியாத விஷயங்கள் உண்மையில் மிகவும் குறைவாகவே இருக்கும். அதுவே உண்மையான உறவின் வெளிப்பாடு. ஆனால், பரியனுக்கும் ஜோவுக்கு இடையில் நீண்ட இடைவெளி கடைசி வரை இருந்துகொண்டே இருக்கிறது. அதற்கு பரியன் காரணமா? அல்லது ஜோவின் அறியாமையா?.

image

அன்புக்கு எது தடையாக இருக்கிறதோ அதனை அந்த மனங்கள் இணைந்துதானே போராட வேண்டும். அதைவிடுத்து தனித்தே மனத்திற்குள் ஒரு போராட்டத்தை பரியன் நிகழ்த்திக்கொண்டே இருப்பது அதும் க்ளைமேக்ஸ் வரை எப்படி நியாயமாக இருக்க முடியும். அவர்கள் நெல்லையின் கிராமங்களில் வளர்ந்தவர்கள்தானே. அவர்களுக்கு சமூகத்தின் யதார்த்த சூழல் எப்படி புரியாமல் போகும். ஒருவேளை பள்ளிப் படிப்பு வரை கூட புரியாமல் போகலாம். கல்லூரி காலம் என்பது எல்லாவற்றையும் சற்றே மெச்சூரிட்டியான தன்மையுடன் அணுகும் பருவம், உலகை அறிந்து கொள்வதற்காக வாய்ப்புகள் அதிகம் உள்ள காலம். அந்த தருணத்தில் நண்பரோ, காதலியோ யாராக இருந்தாலும் ஒற்றைப் புள்ளியில் ஒரு புரிதலுக்கு ஏன் வர முடியவில்லை? அதற்கான விவாதத்தை மூவருக்கு இடையில் கூட நிகழ்த்தாமல் தவிர்த்தது ஏனோ?

image

சாதி என்பது தேவையில்லாமல் நாம் தூக்கி சுமக்கும் சுமைதான். அதை விட்டு ஒழிக்க எல்லா தரப்பில் இருந்தும் மனிதர்கள் முன்வந்து கொண்டே தான் இருக்கிறார்கள். அதற்கு எதிராக தொடர்ந்து போராட்ட களத்திலும் இருக்கிறார்கள். நெல்லை மண்ணை பற்றி சொல்லவே தேவையில்லை. பலரும் அந்த மண்ணில் இருந்து புயலாய் புறப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை மட்டும் சேர்ந்தவர்கள் அல்ல. இந்த புரிதல் மிகவும் முக்கியமான ஒன்று. அதாவது பாதிக்கப்பட்டவன் பேசினால் தான் பிரச்சனையை தெளிவாக பேச முடியும் என்ற வாதம் மிகவும் அபத்தமானது அல்லவா? ஏனெனில் இந்த திரைப்படம் வெளியான தருணத்தில் மாரி செல்வராஜால் தான் இப்படியொரு படத்தை உண்மைக்கு நெருக்கமாக எடுக்க முடியும் என்று முன்னணி இயக்குநர்கள் பலரும் கருத்து தெரிவித்து இருந்தார்கள். பாதிப்பை உணர்வதற்கும் அதை கலைப்படைப்பாக உருவாக்குவதற்கும் அதே சமுதாயத்தில் பிறந்திருக்க வேண்டும் என்ற எந்த நிர்பந்தமும் கிடையாது. ஒரு அநீதியை கொடுமையை உணர்வதற்கு நல்ல மனிதராக இருந்தாலே போதுமானது. உண்மையின் பக்கம் நின்று பேச வேண்டும் என்பதே அதற்கான நிபந்தனை. ஏனெனில் பரியன் கதாபாத்திரத்தில் ஏதோ ஒருவித ரிசர்வ்டு தன்மை இருக்கிறது.

image

பரியன் கதாபாத்திரத்தை பொருத்தவரை ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். என்னதான் அது யதார்த்தத்திற்கு நெருக்கமான கதாபாத்திரமாக இருந்தாலும் அது இயக்குநர் உருவாக்கியதே. அதன் ஒவ்வொரு அசைவும் இயக்குநரின் புரிதல்தான். பரியனை எல்லோரின் மனதுடனும் கலக்கவிட வேண்டும். அதற்கு இயக்குநரே தடையாக இருக்கிறார் என்றே தோன்றுகிறது. அந்த மனங்கள் கூடிதான் சாதி எனும் தீய சக்தியை எதிர்க்க வேண்டும். பரியன்கள் ஒருபோதும் தனிமைப்பட்டு விடக்கூடாது. அது மேலும் ஆபத்திலேதான் முடியும். பரியனின் வலி ஜோவுக்கும் ஆனந்திற்கும் நிச்சயம் புரியும் என்று முதலில் இயக்குநர் நம்ப வேண்டும். மற்றவை அதன் இயக்க போக்கில் நடக்கும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/mCAW4oJ
via IFTTT

Comments

Popular posts from this blog

‘யோகி பாபுக்காக ஒரு கதை எடுக்க வேண்டும் என்று ஆசை’ -‘பொம்மை நாயகி’ விழாவில் மாரி செல்வராஜ் பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகிபாபு நடித்துள்ள ‘பொம்மை நாயகி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் இன்று நடைபெற்றது. பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘பொம்மை நாயகி’. சிறுமி ஸ்ரீமதி, யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஷான். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள படத்தின் பாடல்களை ‘தெருக்குரல்’ அறிவு எழுதியிருக்கிறார். இந்த விழாவில் அறிமுக இயக்குநர் ஷான் பேசுகையில், “இந்தக் கதை எழுதி முடித்ததும் யாரிடமும் சொல்ல வில்லை. நீண்ட நாட்களாக இந்தக் கதையை வைத்து கொண்டே இருந்தேன். படம் பண்ணினால் நீளம் புரொடக்ஷனில் தான் பண்ண வேண்டும் என்று தீர்க்கமாக இருந்தேன். கதையைப் படித்து கதையில் இருந்த நம்பிக்கையால் இந்தப் படம் எடுக்க முடிந்தது. ‘பரியேறும் பெருமாள்’ படம் பார்த்து யோகி பாபு நடித்தால் எப்படி இருக்கும் என்ற நினைத்தேன். எதார்த்தமான மனிதன் சந்திக்கும் பிரச்சினைகளை எதிர்கொள்ளுவது தான் இந்த படம். எல்லோரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் இது” என்று தெரிவித்தார். இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், “இயக்குநர் இந்த கதையை தான் எடுப்பேன் என்று உறுதியாக இருந்து எடுத்து முடித்தவர். யார் இந்தக் கதையில் நடித்தால் சரி வரும் என்று தேர்வு செய்து பொருத்தமாக எடுத்துள்ளார். நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம் முக்கியமான நபர்கள் வெளி வந்துள்ளனர். ‘வாழை’ படம் முதன் முதலில் நான் எழுதிய கதை. அதை எப்போது எடுப்பேன் என்று எதிர்பார்த்து கொண்டு இருந்தேன். தற்போது அந்தப் படத்தை முடித்து விட்டேன். அடுத்து நான் நீலம் புரொடக்ஷனில் தான் படம் பண்ண போகிறேன். பிற்போக்குத்தனமான ஒரு படத்தை எடுக்க மாட்டேன் என்பது என் கொள்கை. நான் தப்பான படங்களை எடுக்க மாட்டேன். நிஜ கதைகளை உருவாக்கும் போதே இவர்கள் இந்த கதையை தயாரிப்பார்கள் என்ற நிச்சயம் உண்டானால் அது தான் தமிழ் சினிமாவின் வெற்றி. ‘பொம்மை நாயகி’ ஒரு பேரலையாய் அமையும். பெரிய இயக்குனர்கள் அனைவருக்கும் யோகி பாபுவிற்காக கதை எடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும், எனக்கும் அந்த ஆசை உள்ளது” என்று கூறினார். நடிகர் ஜி.எம். குமார் பேசுகையில், “இங்கே நான் வந்ததற்கு காரணம் கதை தான். யோகி பாபு உடன் என்னோட மூணாவது படம். ‘கர்ணன்’ படத்தில் மாரியிடம் யோகி பாபுவால் திட்டு வாங்கினேன். இயக்குநர் பா. ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’ மற்றும் ‘சார்பட்டா பரம்பரை’ படங்களை பார்த்து அசந்து போனேன்” என்று தெரிவித்தார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

நடிகர் மயில்சாமி உடலுக்கு பிரேத பரிசோதனை இல்லை... ஏன்? நடிகர் மயில்சாமிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். சென்னை சாலிகிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தவர் தமிழ் திரைப்பட காமெடி நடிகர் மயில்சாமி. தமிழ் திரைப்படங்களில் சிறந்த காமெடி நடிகராக வலம் வந்த மயில்சாமிக்கு இன்று காலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை அவரது உறவினர்கள் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மயில்சாமி வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மயில்சாமி இறந்த செய்தி கேட்டு அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த போரூர் போலீசார் உயிரிழந்த மயில்சாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மயில்சாமி உயிரிழப்புக்கு காரணம் மாரடைப்பா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரித்து வந்தனர். பின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் மயில்சாமி உடல் பிரேத பரிசோதனை செய்யவில்லை என சொல்லப்பட்டுள்ளது. அதன் பின்னணியாக, அவருக்கு மாரடைப்பு உறுதியானதை மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவர் ஏற்கனவே இதயம் சம்பந்தமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனது உறுதியானது. இறப்புக்கான காரணம் உறுதியானதால், அவரது உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை என்றும் இன்னும் சிறிது நேரத்தில் அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளன. நடிகர் மயில்சாமியின் உயிரிழப்பு தமிழ் திரை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

விஜய்.. கமல்ஹாசன் அடுத்தது?: முன்னணி நடிகர்களின் படங்களைக் கைப்பற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தினை ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. நடிகர் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ படங்களைத் தயாரிப்பதோடு முன்னணி நடிகர்களின் படங்களையும் கைப்பற்றி வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்’, பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’, ராஜமெளலியின் ( ‘ஆர்ஆர்ஆர்’ மூன்று இடங்களில் மட்டும்) உள்ளிட்டப் படங்களை கைப்பற்றி வெளியிட்டது. வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகும் விஜய்யின் ‘பீஸ்ட்’, ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படங்களின் தமிழக ரெட் ஜெயன்ட் மூவிஸ்தான் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் தமிழக உரிமையையும் கைப்பற்றியுள்ளதகாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவிருக்கிறார்கள். ‘விக்ரம்’ வரும் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகிறது. அன்றுதான் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்துவரும் ‘மாமன்னன்’ படத்தினை ரெட் ஜெயன்ட் தான் தயாரிக்கிறது. இதற்கு முன்னதாக, தமிழ் சினிமாவில் ஹாட்ரிக் வெற்றி கொடுத்த இயக்குநர்களில் லோகேஷ் கனகராஜும் ஒருவர். அவரின் ’மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் அடித்து வசூலைக் குவித்ததால் இயக்குநர் நான்காவதாக கமல்ஹாசனை இயக்கும் ‘விக்ரம்’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. கோரோனா சூழலிலும் மக்களை தியேட்டர் நோக்கி வரவைத்தது ‘மாஸ்டர்’. அதன் வெற்றிக்குப்பிறகு விஜய் சேதுபதி - அனிருத்துடன் மீண்டும் ’விக்ரம்’மில் கைக்கோர்த்துள்ளார் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் இப்படத்தில் ஃபகத் ஃபாசிலும் நடிப்பதால் மலையாள ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். காளிதாஸ் ஜெயராம், நரேன், ’பிக்பாஸ்’ ஷிவானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM