PS1 - நினைத்ததை சாதித்திருக்கிறாரா மணிரத்னம்? #PTReview கல்கியின் பொன்னியின் செல்வன் கதைக்கு, திரை வடிவத்தைக் கொடுத்திருக்கிறார் மணிரத்னம். அரியணைக்கான போர், சூழ்ச்சியால் நிகழும் குழப்பங்கள், வஞ்சத்தால் நிகழ்த்தப்படும் சூழ்ச்சிகள், உறவு, காதல், நட்பு, பகை என அனைத்தும்தான் பொன்னியின் செல்வன். அதை கூடிய வரை உயிர்ப்புடன் திரைக்குக் கடத்தியிருக்கிறார். ராஷ்ட்ரகூடத்தில் போர் வெற்றிக்குப் பின் ஆதித்த கரிகாலன் (விக்ரம்), தன் நண்பன் வந்தியத்தேவனிடம் (கார்த்தி) ஒரு பொறுப்பை ஒப்படைக்கிறார். சோழ சாம்ராஜ்யத்துக்கு எதிரான சதித் திட்டம் ஒன்று கடம்பூர் மாளிகையில் தீட்டப்படுகிறது. அது என்னவென அறிந்து தன் தந்தை சுந்தரச்சோழரிடமும் (பிரகாஷ் ராஜ்), தங்கை குந்தவையிடமும் (த்ரிஷா) சொல்ல வேண்டும் என்பதுதான் அந்த பொறுப்பு. அதை ஏற்கும் வந்தியத்தேவன் பயணப்படுவதில் தொடங்குகிறது படம். கடம்பூர் சம்புவரையர் மாளிகை, தஞ்சை கோட்டை, பழையரை, இலங்கை என நீள்கிறது அவனது பயணம். ஒரு பக்கம் சோழ சாம்ராஜ்யத்தை சரிக்க நந்தினி (ஐஸ்வர்யா ராய்) போடும் திட்டங்கள், பதவி ஆசையால் மதுராந்தகன் (ரகுமான்) பழுவேட்டரையர் (சரத்குமார்) மற்றும் குறுநில மன்னர்களின் சதி, இன்னொரு பக்கம் எப்படியாவது இந்த ஆபத்துகளில் இருந்து நாட்டைக் காக்க குந்தவை (த்ரிஷா) எடுக்கும் முடிவுகள் என நீள்கிறது பொன்னியின் செல்வன் முதல் பாகம். இந்திய சினிமாவின் ஜாம்பவான் இயக்குநர்கள் பலருமே தங்கள் ஆதர்சமாக மணிரத்னம் என்கிற பெயரை ஏன் சொல்கிறார்கள் என்பதற்கு இந்தப் படம் விடை சொல்லியிருக்கிறது. தமிழகத்தின் ஆல்டைம் ஃபேவரைட்டான ஒரு புத்தகத்தின் காட்சிகளை திரைக்கு கடத்துவது, அதன் ஆதார உணர்ச்சிகளை கெடுத்துவிடாமல் எடுத்திருப்பது, இதன் கூடவே தன் வழக்கமான முத்திரை எல்லாவற்றையும் ஒரு சேர சிறப்பாக கொண்டு வந்திருக்கிறார். ஆதித்த கரிகாலன் - நந்தினியின் காதல், நந்தினிக்கு சோழ சாம்ராஜ்யத்தின் மீது ஏற்படும் விரோதம், அதன் பின் விளைவுகளாக நடக்கும் சம்பவங்கள் என்பதை மையப்புள்ளியாக எடுத்துக் கொண்டது, யுத்த களத்தில் ஆரம்பிக்கும் கதை மீண்டும் ஒரு யுத்தத்தை நோக்கி செல்வது என திரைக்கதை சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. படத்தின் உரையாடல்களும் அதற்கேற்ப வடிவமைக்கப்பட்டிருந்தது. சில காட்சிகள் அமைக்கப்பட்டிருந்த விதத்தில் மணிரத்னத்தின் சிக்னேச்சர் ஸ்டைல் தெரிந்தது. குறிப்பாக ஆதித்த கரிகாலன், நந்தினியுடனான காதலைப் பற்றி விவரிக்கும் காட்சி மிக அற்புதமாக எடுக்கப்பட்டிருந்தது. அந்தக் காட்சியில் விக்ரம் தன் தனித்துவ நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். நந்தினி - குந்தவை தஞ்சைக் கோட்டையில் சந்தித்துக் கொள்ளும் காட்சி கிட்டத்தட்ட ஒரு போர்க் களத்தை பிரதிபலிப்பது போலவும், இருவரும் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் தாக்கிக் கொள்வதைப் போல எடுக்கப்பட்டிருந்ததும் அட்டகாசம். இப்படி படம் நெடுக சில காட்சிகள் மணிரத்னத்தின் மேக்கிங்கை கவனிக்க வைக்கிறது. நடிகர்களாக பலரும் நம்மைக் கவர்கிறார்கள். நந்தினி பாத்திரத்தில் வரும் ஐஸ்வர்யா ராய், தன் அழகினால் பழுவேட்டரையரை பலவீனமாக்குவது, அரியணையை நெஞ்சுக்குள் தீ எரியும் உணர்வுடன் பார்ப்பது, குந்தவையிடம் பேசும் போது மனதிற்குள் வெறுப்பையும், வெளியில் அதை மறைத்தும் நடந்து கொள்வது என வரும் காட்சி ஒவ்வொன்றிலும் சிறப்பு. வந்தியத்தேவனாக பெண்களிடம் வழிந்து பேசுவது, ஆழ்வார்கடியன் நம்பியை கிண்டலடிப்பது என கார்த்தி வரும் காட்சிகள் ஆர்வமாகப் பார்க்க வைக்கிறது. பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் சரத்குமார் கம்பீரமாக வந்து செல்கிறார். இந்தக் கதைக்குள் எக்கச்சக்கமான கதாபாத்திரங்கள் இருப்பதால், அந்தந்த கதாபாத்திரத்திற்கு என இருக்கும் சிறப்பான காட்சிகள் பலவும் படமாக மாற்றும்போது குறைந்துள்ளது. எனவே அதன் விளைவாக சில கதாபாத்திரங்கள் சட்டென வந்து செல்கிற அளவே இருக்கிறது. பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, அஷ்வின் எனப் பலரது பாத்திரங்கள் அப்படி படக்கென வந்து போகிறது. ரவிவர்மனின் ஒளிப்பதிவு படத்தின் அழகைக் கூட்ட மிக அழுத்தமாக உழைத்திருக்கிறது. போர்களக் காட்சிகள், அரண்மனை காட்சிகள், ஆகியவற்றில் பிரம்மாண்டத்தைக் காட்டிலும் இயல்பான ஒரு தன்மையைக் கொடுத்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு மிக நேர்த்தியாக அமைந்திருந்தது. குறிப்பாக நந்தினியை மீண்டும் கரிகாலன் சந்திக்கும் காட்சியின் காட்சிக் கோர்வை மிக கச்சிதமாக இருந்தது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கெனவே பெரிய ஹிட். பாடலை, படத்தில் எவ்வளவு சுருக்கமாக பயன்படுத்த முடியுமோ அந்த அளவில் பயன்படுத்தியிருக்கிறார்கள். பின்னணி இசை உணர்வு சார்ந்த காட்சிகளை அழகாக அமைந்திருந்தாலும், சில இடங்களில் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்ற உணர்வு தோன்றியது. அந்த காலகட்டத்தைப் பிரதிபலிக்க ரியல் லொகேஷன், செட் சிஜி என மூன்றிலும் முயன்றிருக்கிறார்கள். ஆனால், சிஜி சம்பந்தப்பட்ட பல காட்சிகள் இன்னும் நேர்த்தியாக இருந்திருக்கலாம். கப்பலில் நடக்கும் சண்டைக் காட்சிகள் எல்லாம் மிகவும் சுமாரான விதத்தில் சிஜி அமைக்கப்பட்டிருந்தது. கூடவே படம் தமிழின் முதல் ஐமாக்ஸ் திரைப்படம் என்ற டேகுடன் வெளியாகியிருக்கிறது. ஆனால், ஐமாக்ஸ் திரையில் பார்த்தே ஆக வேண்டும் என்ற அளவிற்கு எதுவும் இல்லை. நல்ல ப்ரொஜக்‌ஷன் உள்ள திரையங்கில் என்ன விஷுவல் ட்ரீட் கிடைக்குமோ அதுவேதான் ஐமாக்ஸிலும் கிடைத்தது. இந்த படத்தின் மிகப்பெரிய சவாலே, எல்லோருக்கும் மேலோட்டமாகவாவது தெரிந்த ஒரு கதை, அதை எந்த அளவு பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமாக சொல்லப் போகிறோம் என்பதுதான். அந்த விதத்தில் முடிந்த வரை சுவாரஸ்யம் சேர்த்திருக்கிறார். ஆனால், எந்தக் காட்சிகள் விரிவாக இருக்க வேண்டும் என்கிற தெளிவு இன்னும் கொஞ்சம் இருந்திருக்கலாம் எனத் தோன்றியது. வானில் தோன்றியிருக்கும் வால் நட்சத்திரம், சோழ சாம்ராஜ்யத்திலிருந்து ஒரு இரத்த பலி கேட்கிறது என கமலின் வாய்ஸ் ஓவரில் தொடங்கி நகரும் கதையில் சொல்லாமல் விட்ட இடங்களை நம்மால் உணர முடிகிறது. பாண்டியர்களுக்கான பகை உட்பட சரிவர சொல்லப்படாத சில விஷயங்களும் இருக்கின்றன. இது போன்ற குறைகள் இருந்தாலும், தமிழில் முக்கியமான முயற்சியாக பொன்னியின் செல்வனை தாராளமாக சொல்லலாம். காரணம், ஏற்கனவே தெரிந்த ஒரு கதையை புதிதாக கேட்பதுபோல ஆச்சர்யத்துடன் ஆடியன்ஸை உட்கார வைத்தது. அதற்குள்ளே அடுத்த பாகத்திற்கான ஆவலுக்கும் விதை போட்டது என நினைத்ததை சாதித்திருக்கிறார் மணிரத்னம். - ஜான்சன் Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

கல்கியின் பொன்னியின் செல்வன் கதைக்கு, திரை வடிவத்தைக் கொடுத்திருக்கிறார் மணிரத்னம். அரியணைக்கான போர், சூழ்ச்சியால் நிகழும் குழப்பங்கள், வஞ்சத்தால் நிகழ்த்தப்படும் சூழ்ச்சிகள், உறவு, காதல், நட்பு, பகை என அனைத்தும்தான் பொன்னியின் செல்வன். அதை கூடிய வரை உயிர்ப்புடன் திரைக்குக் கடத்தியிருக்கிறார்.

ராஷ்ட்ரகூடத்தில் போர் வெற்றிக்குப் பின் ஆதித்த கரிகாலன் (விக்ரம்), தன் நண்பன் வந்தியத்தேவனிடம் (கார்த்தி) ஒரு பொறுப்பை ஒப்படைக்கிறார். சோழ சாம்ராஜ்யத்துக்கு எதிரான சதித் திட்டம் ஒன்று கடம்பூர் மாளிகையில் தீட்டப்படுகிறது. அது என்னவென அறிந்து தன் தந்தை சுந்தரச்சோழரிடமும் (பிரகாஷ் ராஜ்), தங்கை குந்தவையிடமும் (த்ரிஷா) சொல்ல வேண்டும் என்பதுதான் அந்த பொறுப்பு. அதை ஏற்கும் வந்தியத்தேவன் பயணப்படுவதில் தொடங்குகிறது படம்.

image

கடம்பூர் சம்புவரையர் மாளிகை, தஞ்சை கோட்டை, பழையரை, இலங்கை என நீள்கிறது அவனது பயணம். ஒரு பக்கம் சோழ சாம்ராஜ்யத்தை சரிக்க நந்தினி (ஐஸ்வர்யா ராய்) போடும் திட்டங்கள், பதவி ஆசையால் மதுராந்தகன் (ரகுமான்) பழுவேட்டரையர் (சரத்குமார்) மற்றும் குறுநில மன்னர்களின் சதி, இன்னொரு பக்கம் எப்படியாவது இந்த ஆபத்துகளில் இருந்து நாட்டைக் காக்க குந்தவை (த்ரிஷா) எடுக்கும் முடிவுகள் என நீள்கிறது பொன்னியின் செல்வன் முதல் பாகம்.

image

இந்திய சினிமாவின் ஜாம்பவான் இயக்குநர்கள் பலருமே தங்கள் ஆதர்சமாக மணிரத்னம் என்கிற பெயரை ஏன் சொல்கிறார்கள் என்பதற்கு இந்தப் படம் விடை சொல்லியிருக்கிறது. தமிழகத்தின் ஆல்டைம் ஃபேவரைட்டான ஒரு புத்தகத்தின் காட்சிகளை திரைக்கு கடத்துவது, அதன் ஆதார உணர்ச்சிகளை கெடுத்துவிடாமல் எடுத்திருப்பது, இதன் கூடவே தன் வழக்கமான முத்திரை எல்லாவற்றையும் ஒரு சேர சிறப்பாக கொண்டு வந்திருக்கிறார்.

ஆதித்த கரிகாலன் - நந்தினியின் காதல், நந்தினிக்கு சோழ சாம்ராஜ்யத்தின் மீது ஏற்படும் விரோதம், அதன் பின் விளைவுகளாக நடக்கும் சம்பவங்கள் என்பதை மையப்புள்ளியாக எடுத்துக் கொண்டது, யுத்த களத்தில் ஆரம்பிக்கும் கதை மீண்டும் ஒரு யுத்தத்தை நோக்கி செல்வது என திரைக்கதை சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. படத்தின் உரையாடல்களும் அதற்கேற்ப வடிவமைக்கப்பட்டிருந்தது.

வரலாற்றை உலுக்கிய ஆதித்த கரிகாலன் கொலை! ஆயிரம் ஆண்டுகளாக அவிழாத மர்ம முடிச்சு! | Chola prince Aditha Karikalan killed! A mystery that has not been revealed for a thousand years ...

சில காட்சிகள் அமைக்கப்பட்டிருந்த விதத்தில் மணிரத்னத்தின் சிக்னேச்சர் ஸ்டைல் தெரிந்தது. குறிப்பாக ஆதித்த கரிகாலன், நந்தினியுடனான காதலைப் பற்றி விவரிக்கும் காட்சி மிக அற்புதமாக எடுக்கப்பட்டிருந்தது. அந்தக் காட்சியில் விக்ரம் தன் தனித்துவ நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். நந்தினி - குந்தவை தஞ்சைக் கோட்டையில் சந்தித்துக் கொள்ளும் காட்சி கிட்டத்தட்ட ஒரு போர்க் களத்தை பிரதிபலிப்பது போலவும், இருவரும் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் தாக்கிக் கொள்வதைப் போல எடுக்கப்பட்டிருந்ததும் அட்டகாசம். இப்படி படம் நெடுக சில காட்சிகள் மணிரத்னத்தின் மேக்கிங்கை கவனிக்க வைக்கிறது.image

நடிகர்களாக பலரும் நம்மைக் கவர்கிறார்கள். நந்தினி பாத்திரத்தில் வரும் ஐஸ்வர்யா ராய், தன் அழகினால் பழுவேட்டரையரை பலவீனமாக்குவது, அரியணையை நெஞ்சுக்குள் தீ எரியும் உணர்வுடன் பார்ப்பது, குந்தவையிடம் பேசும் போது மனதிற்குள் வெறுப்பையும், வெளியில் அதை மறைத்தும் நடந்து கொள்வது என வரும் காட்சி ஒவ்வொன்றிலும் சிறப்பு.

image

வந்தியத்தேவனாக பெண்களிடம் வழிந்து பேசுவது, ஆழ்வார்கடியன் நம்பியை கிண்டலடிப்பது என கார்த்தி வரும் காட்சிகள் ஆர்வமாகப் பார்க்க வைக்கிறது. பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் சரத்குமார் கம்பீரமாக வந்து செல்கிறார்.

இந்தக் கதைக்குள் எக்கச்சக்கமான கதாபாத்திரங்கள் இருப்பதால், அந்தந்த கதாபாத்திரத்திற்கு என இருக்கும் சிறப்பான காட்சிகள் பலவும் படமாக மாற்றும்போது குறைந்துள்ளது. எனவே அதன் விளைவாக சில கதாபாத்திரங்கள் சட்டென வந்து செல்கிற அளவே இருக்கிறது. பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, அஷ்வின் எனப் பலரது பாத்திரங்கள் அப்படி படக்கென வந்து போகிறது.

image

ரவிவர்மனின் ஒளிப்பதிவு படத்தின் அழகைக் கூட்ட மிக அழுத்தமாக உழைத்திருக்கிறது. போர்களக் காட்சிகள், அரண்மனை காட்சிகள், ஆகியவற்றில் பிரம்மாண்டத்தைக் காட்டிலும் இயல்பான ஒரு தன்மையைக் கொடுத்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு மிக நேர்த்தியாக அமைந்திருந்தது. குறிப்பாக நந்தினியை மீண்டும் கரிகாலன் சந்திக்கும் காட்சியின் காட்சிக் கோர்வை மிக கச்சிதமாக இருந்தது.

image

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கெனவே பெரிய ஹிட். பாடலை, படத்தில் எவ்வளவு சுருக்கமாக பயன்படுத்த முடியுமோ அந்த அளவில் பயன்படுத்தியிருக்கிறார்கள். பின்னணி இசை உணர்வு சார்ந்த காட்சிகளை அழகாக அமைந்திருந்தாலும், சில இடங்களில் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்ற உணர்வு தோன்றியது.

அந்த காலகட்டத்தைப் பிரதிபலிக்க ரியல் லொகேஷன், செட் சிஜி என மூன்றிலும் முயன்றிருக்கிறார்கள். ஆனால், சிஜி சம்பந்தப்பட்ட பல காட்சிகள் இன்னும் நேர்த்தியாக இருந்திருக்கலாம். கப்பலில் நடக்கும் சண்டைக் காட்சிகள் எல்லாம் மிகவும் சுமாரான விதத்தில் சிஜி அமைக்கப்பட்டிருந்தது. கூடவே படம் தமிழின் முதல் ஐமாக்ஸ் திரைப்படம் என்ற டேகுடன் வெளியாகியிருக்கிறது. ஆனால், ஐமாக்ஸ் திரையில் பார்த்தே ஆக வேண்டும் என்ற அளவிற்கு எதுவும் இல்லை. நல்ல ப்ரொஜக்‌ஷன் உள்ள திரையங்கில் என்ன விஷுவல் ட்ரீட் கிடைக்குமோ அதுவேதான் ஐமாக்ஸிலும் கிடைத்தது.

image

இந்த படத்தின் மிகப்பெரிய சவாலே, எல்லோருக்கும் மேலோட்டமாகவாவது தெரிந்த ஒரு கதை, அதை எந்த அளவு பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமாக சொல்லப் போகிறோம் என்பதுதான். அந்த விதத்தில் முடிந்த வரை சுவாரஸ்யம் சேர்த்திருக்கிறார். ஆனால், எந்தக் காட்சிகள் விரிவாக இருக்க வேண்டும் என்கிற தெளிவு இன்னும் கொஞ்சம் இருந்திருக்கலாம் எனத் தோன்றியது. வானில் தோன்றியிருக்கும் வால் நட்சத்திரம், சோழ சாம்ராஜ்யத்திலிருந்து ஒரு இரத்த பலி கேட்கிறது என கமலின் வாய்ஸ் ஓவரில் தொடங்கி நகரும் கதையில் சொல்லாமல் விட்ட இடங்களை நம்மால் உணர முடிகிறது. பாண்டியர்களுக்கான பகை உட்பட சரிவர சொல்லப்படாத சில விஷயங்களும் இருக்கின்றன. இது போன்ற குறைகள் இருந்தாலும், தமிழில் முக்கியமான முயற்சியாக பொன்னியின் செல்வனை தாராளமாக சொல்லலாம்.

காரணம், ஏற்கனவே தெரிந்த ஒரு கதையை புதிதாக கேட்பதுபோல ஆச்சர்யத்துடன் ஆடியன்ஸை உட்கார வைத்தது. அதற்குள்ளே அடுத்த பாகத்திற்கான ஆவலுக்கும் விதை போட்டது என நினைத்ததை சாதித்திருக்கிறார் மணிரத்னம்.

- ஜான்சன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/1BX2xNJ
via IFTTT

Comments

Popular posts from this blog

‘யோகி பாபுக்காக ஒரு கதை எடுக்க வேண்டும் என்று ஆசை’ -‘பொம்மை நாயகி’ விழாவில் மாரி செல்வராஜ் பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகிபாபு நடித்துள்ள ‘பொம்மை நாயகி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் இன்று நடைபெற்றது. பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘பொம்மை நாயகி’. சிறுமி ஸ்ரீமதி, யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஷான். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள படத்தின் பாடல்களை ‘தெருக்குரல்’ அறிவு எழுதியிருக்கிறார். இந்த விழாவில் அறிமுக இயக்குநர் ஷான் பேசுகையில், “இந்தக் கதை எழுதி முடித்ததும் யாரிடமும் சொல்ல வில்லை. நீண்ட நாட்களாக இந்தக் கதையை வைத்து கொண்டே இருந்தேன். படம் பண்ணினால் நீளம் புரொடக்ஷனில் தான் பண்ண வேண்டும் என்று தீர்க்கமாக இருந்தேன். கதையைப் படித்து கதையில் இருந்த நம்பிக்கையால் இந்தப் படம் எடுக்க முடிந்தது. ‘பரியேறும் பெருமாள்’ படம் பார்த்து யோகி பாபு நடித்தால் எப்படி இருக்கும் என்ற நினைத்தேன். எதார்த்தமான மனிதன் சந்திக்கும் பிரச்சினைகளை எதிர்கொள்ளுவது தான் இந்த படம். எல்லோரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் இது” என்று தெரிவித்தார். இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், “இயக்குநர் இந்த கதையை தான் எடுப்பேன் என்று உறுதியாக இருந்து எடுத்து முடித்தவர். யார் இந்தக் கதையில் நடித்தால் சரி வரும் என்று தேர்வு செய்து பொருத்தமாக எடுத்துள்ளார். நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம் முக்கியமான நபர்கள் வெளி வந்துள்ளனர். ‘வாழை’ படம் முதன் முதலில் நான் எழுதிய கதை. அதை எப்போது எடுப்பேன் என்று எதிர்பார்த்து கொண்டு இருந்தேன். தற்போது அந்தப் படத்தை முடித்து விட்டேன். அடுத்து நான் நீலம் புரொடக்ஷனில் தான் படம் பண்ண போகிறேன். பிற்போக்குத்தனமான ஒரு படத்தை எடுக்க மாட்டேன் என்பது என் கொள்கை. நான் தப்பான படங்களை எடுக்க மாட்டேன். நிஜ கதைகளை உருவாக்கும் போதே இவர்கள் இந்த கதையை தயாரிப்பார்கள் என்ற நிச்சயம் உண்டானால் அது தான் தமிழ் சினிமாவின் வெற்றி. ‘பொம்மை நாயகி’ ஒரு பேரலையாய் அமையும். பெரிய இயக்குனர்கள் அனைவருக்கும் யோகி பாபுவிற்காக கதை எடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும், எனக்கும் அந்த ஆசை உள்ளது” என்று கூறினார். நடிகர் ஜி.எம். குமார் பேசுகையில், “இங்கே நான் வந்ததற்கு காரணம் கதை தான். யோகி பாபு உடன் என்னோட மூணாவது படம். ‘கர்ணன்’ படத்தில் மாரியிடம் யோகி பாபுவால் திட்டு வாங்கினேன். இயக்குநர் பா. ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’ மற்றும் ‘சார்பட்டா பரம்பரை’ படங்களை பார்த்து அசந்து போனேன்” என்று தெரிவித்தார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

நடிகர் மயில்சாமி உடலுக்கு பிரேத பரிசோதனை இல்லை... ஏன்? நடிகர் மயில்சாமிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். சென்னை சாலிகிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தவர் தமிழ் திரைப்பட காமெடி நடிகர் மயில்சாமி. தமிழ் திரைப்படங்களில் சிறந்த காமெடி நடிகராக வலம் வந்த மயில்சாமிக்கு இன்று காலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை அவரது உறவினர்கள் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மயில்சாமி வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மயில்சாமி இறந்த செய்தி கேட்டு அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த போரூர் போலீசார் உயிரிழந்த மயில்சாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மயில்சாமி உயிரிழப்புக்கு காரணம் மாரடைப்பா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரித்து வந்தனர். பின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் மயில்சாமி உடல் பிரேத பரிசோதனை செய்யவில்லை என சொல்லப்பட்டுள்ளது. அதன் பின்னணியாக, அவருக்கு மாரடைப்பு உறுதியானதை மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவர் ஏற்கனவே இதயம் சம்பந்தமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனது உறுதியானது. இறப்புக்கான காரணம் உறுதியானதால், அவரது உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை என்றும் இன்னும் சிறிது நேரத்தில் அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளன. நடிகர் மயில்சாமியின் உயிரிழப்பு தமிழ் திரை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

விஜய்.. கமல்ஹாசன் அடுத்தது?: முன்னணி நடிகர்களின் படங்களைக் கைப்பற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தினை ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. நடிகர் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ படங்களைத் தயாரிப்பதோடு முன்னணி நடிகர்களின் படங்களையும் கைப்பற்றி வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்’, பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’, ராஜமெளலியின் ( ‘ஆர்ஆர்ஆர்’ மூன்று இடங்களில் மட்டும்) உள்ளிட்டப் படங்களை கைப்பற்றி வெளியிட்டது. வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகும் விஜய்யின் ‘பீஸ்ட்’, ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படங்களின் தமிழக ரெட் ஜெயன்ட் மூவிஸ்தான் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் தமிழக உரிமையையும் கைப்பற்றியுள்ளதகாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவிருக்கிறார்கள். ‘விக்ரம்’ வரும் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகிறது. அன்றுதான் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்துவரும் ‘மாமன்னன்’ படத்தினை ரெட் ஜெயன்ட் தான் தயாரிக்கிறது. இதற்கு முன்னதாக, தமிழ் சினிமாவில் ஹாட்ரிக் வெற்றி கொடுத்த இயக்குநர்களில் லோகேஷ் கனகராஜும் ஒருவர். அவரின் ’மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் அடித்து வசூலைக் குவித்ததால் இயக்குநர் நான்காவதாக கமல்ஹாசனை இயக்கும் ‘விக்ரம்’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. கோரோனா சூழலிலும் மக்களை தியேட்டர் நோக்கி வரவைத்தது ‘மாஸ்டர்’. அதன் வெற்றிக்குப்பிறகு விஜய் சேதுபதி - அனிருத்துடன் மீண்டும் ’விக்ரம்’மில் கைக்கோர்த்துள்ளார் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் இப்படத்தில் ஃபகத் ஃபாசிலும் நடிப்பதால் மலையாள ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். காளிதாஸ் ஜெயராம், நரேன், ’பிக்பாஸ்’ ஷிவானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM