Posts

Showing posts from May, 2022

'உயிரின் உயிரே பிரிந்துவிட்டாயே- பாடகர் கேகே மறைவுக்கு ஹாரிஸ் முதல் யுவன் வரை இரங்கல் மாரடைப்பால் உயிரிழந்த பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்திற்கு பிரதமர் மோடி, இசையமைப்பாளர்கள் ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா உட்பட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் (எ) கே.கே மாரடைப்பால் நேற்று நள்ளிரவில் காலமானார். கொல்கத்தாவில் இசை நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அவர், நிகழ்ச்சிக்குப்பின் அறைக்குச் சென்றபோது உயிர்பிரிந்தது. பாடகர் கே.கே. மரணத்திற்கு பிரதமர் மோடி மற்றும் திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அனைத்து வயதினரையும் கவர்ந்த அவரது பாடல்கள் பல உணர்ச்சிகளை பிரதிபலித்ததாக குறிப்பிட்டுள்ளார். Saddened by the untimely demise of noted singer Krishnakumar Kunnath popularly known as KK. His songs reflected a wide range of emotions as struck a chord with people of all age groups. We will always remember him through his songs. Condolences to his family and fans. Om Shanti. — Narendra Modi (@narendramodi) May 31, 2022 என் “உயிரின் உயிரே” பிரிந்து விட்டதாக ஹாரிஸ் ஜெயராஜ் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். “என் “உயிரின் உயிரே” மறைந்தது. லெஜண்ட் படத்தில் கடைசியாக அவர் பாடிய பாடலான “கொஞ்சி கொஞ்சி” பாடலை உலகமே புகழ்ந்து கொண்டிருக்கும் போது, இப்படியொரு அதிர்ச்சியான செய்தியைக் கேட்டு நான் முற்றிலும் உடைந்து போயிருக்கிறேன், அவருடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று ஹாரிஸ் குறிப்பிட்டுள்ளார். My “Uyirin Uyire” passed away. RIP Singer KK. What a shocking news to hear when the whole world is praising his last song “Konji Konji”. I am completely shattered and my condolences to his family and friends. @jdjeryofficial @thinkmusicindia @SonyMusicSouth — Harris Jayaraj (@Jharrisjayaraj) May 31, 2022 இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் “சித்து மூஸ் வாலாவை தொடர்ந்து இப்போது கே.கே! நம் நாட்டின் இசை சமூகத்திற்கு இது ஒரு சோகமான வாரம். வாழ்க்கை கணிக்க முடியாதது & அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்று தெரியாதது. உங்களை மிஸ் செய்கிறோம் கேகே.” என்று தனது இரங்கலை தெரிவித்துள்ளார். It’s been a sad week for the music community of our Country with Sidhu Moose Wala & now KK. Life is unpredictable & we never know what the next minute holds, you will be missed KK — Raja yuvan (@thisisysr) May 31, 2022 இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது இரங்கல் பதிவில், “இளைப்பாருங்கள் நண்பரே. இது பயங்கரமான இழப்பு. கே.கே.யின் மாயாஜாலக் குரலும் இசையும் என்றென்றும் நம்மிடையே எதிரொலிக்கும்.” என்று குறிப்பிட்டுள்ளார். Rest in Peace my friend. Such a terrible loss. KK’s magical voice and music will resonate with us forever. pic.twitter.com/O6HUOTfUQH — Santhosh Narayanan (@Music_Santhosh) May 31, 2022 இதே போன்று பல்வேறு தலைவர்களும், திரைபிரபலங்களும் பாடகர் கே. கே.-வின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரின் ஏராளமான ரசிகர்கள், சமூக வலைதளத்தில் கே.கே.வின் பாடல்களை பதிவிட்டு, தங்களது சோகத்தை வெளிபடுத்தி வருகின்றனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
மாரடைப்பால் உயிரிழந்த பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்திற்கு பிரதமர் மோடி, இசையமைப்பாளர்கள் ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா உட்பட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் (எ) கே.கே மாரடைப்பால் நேற்று நள்ளிரவில் காலமானார். கொல்கத்தாவில் இசை நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அவர், நிகழ்ச்சிக்குப்பின் அறைக்குச் சென்றபோது உயிர்பிரிந்தது. பாடகர் கே.கே. மரணத்திற்கு பிரதமர் மோடி மற்றும் திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அனைத்து வயதினரையும் கவர்ந்த அவரது பாடல்கள் பல உணர்ச்சிகளை பிரதிபலித்ததாக குறிப்பிட்டுள்ளார். Saddened by the untimely demise of noted singer Krishnakumar Kunnath popularly known as KK. His songs reflected a wide range of emotions as struck a chord with people of all age groups. We will always remember him through his songs. Condolences to his family and fans. Om Shanti. — Narendra Modi (@narendramodi) May 31, 2022 என் “உயிரின் உயிரே” பிரிந்து விட்டதாக ஹாரிஸ் ஜெயரா...

இறுதி மூச்சு வரை பாடல்... காலமானார் காதல் பாடல்களுக்கு உயிர் கொடுத்த பாடகர் கே.கே. பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் (எ) கே.கே மாரடைப்பால் நேற்று நள்ளிரவில் காலமானார். கொல்கத்தாவில் இசை நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அவர், நிகழ்ச்சிக்குப்பின் அறைக்குச் சென்றபோது உயிர்பிரிந்தது. பாடகர் கே.கே. மரணத்திற்கு பிரதமர் மோடி மற்றும் திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். அவருக்கு வயது 53. தமிழ் சினிமாவில் 50-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய கே.கே. டெல்லியில் வசித்து வந்த மலையாள குடும்பத்தில் பிறந்தவர். திரைப்படங்களில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் முன்பே 3,500-க்கும் மேற்பட்ட ஜிங்க்கிள்ஸ் (Jingles) எனப்படும் விளம்பர பாடல்களை பாடியுள்ளார். இவரின் குரல் வளத்தை கண்டறிந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், காதல் தேசம் திரைப்படத்தில் "கல்லூரிச் சாலை" மற்றும் "ஹலோ டாக்டர்" பாடல்களை பாடும் வாய்ப்பை வழங்கினார். இது தான் கே.கே. திரையில் பாடிய முதல் பாடல்களாக கருதப்படுகிறது. 90'S கிட்ஸ்களின் மனம் கவர்ந்த பல பாடல்களுக்கு குரல் கொடுத்தவர் கே.கே! மின்சார கனவு திரைப்படத்தில் 'ஸ்டராபெர்ரி கண்ணே’, உயிரோடு உயிராக திரைப்படத்தில் 'பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்’, செல்லமே திரைப்படத்தில் 'காதலிக்கும் ஆசையில்லை’, காக்க காக்க திரைப்படத்தில் 'உயிரின் உயிரே’, 7ஜி ரெயின்போ காலனியில் 'நினைத்து நினைத்து பார்த்தேன்’, காவலன் திரைப்படத்தில் 'பட்டாம்பூச்சி கூப்பிடும் போது’, மன்மதன் திரைப்படத்தில் 'காதல் வளர்த்தேன்’ உள்ளிட்ட பல்வேறு காதல் பாடல்களுக்கு இவரின் குரலே உயிர் கொடுத்தது. மெல்லிசை காதல் பாடல் மட்டுமின்றி, ரெட் படத்தில் 'ஒல்லிகுச்சி உடம்புகாரி’, எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி திரைப்படத்தில் 'வச்சிக்க வச்சிக்க வா இடுப்புல’, அந்நியன் திரைப்படத்தில் 'அண்டங்காக்கா கொண்டக்காரி’, கில்லி படத்தில் ‘அப்படிப்போடு போடு’ என அதிரடியான காதல் பாடல்களும் கே.கே.வின் தனித்த குரலால் மேலும் அழகானது. இப்படியாக 90'S கிட்ஸ்களின் காதல் பாடல்களுக்கு உயிர் கொடுத்த கே.கே.-வின் குரல் அதிரடி காதல் பாடல்களையும் தனித்த குரலால் அழகாக்கியவர் கே.கே. மேலும் 1999-ம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக கே.கே. பாடல் பாடியுள்ளார். மண்ணைவிட்டு மறைந்தாலும், இசை பிரியர்களின் பேவரிட் ஹிட் லிஸ்டில் இடம்பெற்றிருந்த பாடல்களின் வாயிலாக கே.கே. வும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பெறுவார். சுவாசிப்பதை போன்று பாடுவதை நேசித்த கே.கே., தனது இறுதி மூச்சு வரை பாடலை பாடியப்படி வாழ்ந்துள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற கல்லூரி கலாச்சார விழாவில் இசை நிகழ்ச்சிக்குப் பிறகு, அறைக்கு சென்ற அவர் மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அனைத்து வயதினரையும் கவர்ந்த அவரது பாடல்கள் பல உணர்ச்சிகளை பிரதிபலித்ததாக குறிப்பிட்டுள்ளார். ’என் உயிரே உயிரே பிரிந்து விட்டதாக உணர்கிறேன்’ என இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதே போன்று பல்வேறு தலைவர்களும், திரைபிரபலங்களும் பாடகர் கே. கே.-வின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரின் ஏராளமான ரசிகர்கள், சமூக வலைதளத்தில் கே.கே.வின் பாடல்களை பதிவிட்டு, தங்களது சோகத்தை வெளிபடுத்தி வருகின்றனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் (எ) கே.கே மாரடைப்பால் நேற்று நள்ளிரவில் காலமானார். கொல்கத்தாவில் இசை நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அவர், நிகழ்ச்சிக்குப்பின் அறைக்குச் சென்றபோது உயிர்பிரிந்தது. பாடகர் கே.கே. மரணத்திற்கு பிரதமர் மோடி மற்றும் திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். அவருக்கு வயது 53. தமிழ் சினிமாவில் 50-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய கே.கே. டெல்லியில் வசித்து வந்த மலையாள குடும்பத்தில் பிறந்தவர். திரைப்படங்களில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் முன்பே 3,500-க்கும் மேற்பட்ட ஜிங்க்கிள்ஸ் (Jingles) எனப்படும் விளம்பர பாடல்களை பாடியுள்ளார். இவரின் குரல் வளத்தை கண்டறிந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், காதல் தேசம் திரைப்படத்தில் "கல்லூரிச் சாலை" மற்றும் "ஹலோ டாக்டர்" பாடல்களை பாடும் வாய்ப்பை வழங்கினார். இது தான் கே.கே. திரையில் பாடிய முதல் பாடல்களாக கருதப்படுகிறது. 90'S கிட்ஸ்களின் மனம் கவர்ந்த பல பாடல்களுக்கு குரல் கொடுத்தவர் கே.கே!  மின்சார கனவு திரைப்படத்தில் 'ஸ்டராபெர்ரி கண்ணே’, உயிரோடு உயிராக திரைப்படத்தில் 'பூவுக்கெல்லாம் சிறகு மு...

‘மாநாடு’ ஒட்டுமொத்த வசூல் இதுதான் - 5 மாதங்களுக்குப் பிறகு வெளியிட்ட தயாரிப்பாளர் நடிகர் சிம்பின் நடிப்பில் பிளாக் பஸ்டர் படமாக அமைந்த ‘மாநாடு’ படத்தின் வசூல் குறித்த தகவலை, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி இயக்கத்தில், சிம்புவின் நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘மாநாடு’. டைம் லூப் திரைக்கதையில் உருவான இந்தப் படம் ரசிர்களுக்கு புரியும் வகையில் காட்சிகள் இருந்ததால், பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. பல சர்ச்சைகளில் சிக்கித் தவித்த நடிகர் சிம்புவிற்கு இந்தப் படம் மிகப்பெரிய கம்பேக் கொடுத்தது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே. சூர்யா, இயக்குநர் எஸ்.ஏ. சந்திர சேகர், பிரேம்ஜி அமரன், ஒய்.ஜி.மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா, வாகை சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதில் வில்லனாக நடிகர் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படத்தின் ஒளிப்பதிவு பணியை ரிச்சர்டு எம் நாதன் மேற்கொண்டிருந்தார். பிரவீன் கே.எல். படத்தொகுப்பை கவனித்து இருந்தார். இந்தப் படத்தின் வசூல் ரூ.100 கோடியை கடந்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் படத்தின் உண்மையான வசூல் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில், ‘மாநாடு’ திரைப்படம் ஒட்டுமொத்தமாக 117 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், இந்தாண்டின் மெகா பிளாக் பஸ்டர் என்றும் தெரிவித்துள்ளதுடன், சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்பட பலருக்கு நன்றி தெரிவித்துள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
நடிகர் சிம்பின் நடிப்பில் பிளாக் பஸ்டர் படமாக அமைந்த ‘மாநாடு’ படத்தின் வசூல் குறித்த தகவலை, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி இயக்கத்தில், சிம்புவின் நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘மாநாடு’. டைம் லூப் திரைக்கதையில் உருவான இந்தப் படம் ரசிர்களுக்கு புரியும் வகையில் காட்சிகள் இருந்ததால், பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. பல சர்ச்சைகளில் சிக்கித் தவித்த நடிகர் சிம்புவிற்கு இந்தப் படம் மிகப்பெரிய கம்பேக் கொடுத்தது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே. சூர்யா, இயக்குநர் எஸ்.ஏ. சந்திர சேகர், பிரேம்ஜி அமரன், ஒய்.ஜி.மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா, வாகை சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதில் வில்லனாக நடிகர் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படத்தின் ஒளிப்பதிவு பணியை ரிச்சர்டு எம் நாதன் மேற்கொண்டிருந்தார். பிரவீன் கே.எல். படத்தொகுப்பை கவ...

ஹரியுடன் இணையும் ஜெயம் ரவி? இயக்குநர் ஹரி - ஜெயம் ரவி இணைகின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஹரி அருண் விஜய்யை வைத்து ‘யானை’ படத்தை இயக்கி முடித்துள்ளார். யோகி பாபு, சினேகன், ராதிகா,கங்கை அமரன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வில்லனாக ‘கேஜிஎஃப்’ புகழ் கருடா ராம் நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து. வரும் ஜூன் 17 ஆம் தேதி ‘யானை’ வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இயக்குநர் ஹரி நடிகர் ஜெயம் ரவிக்கு கதை சொல்லியதாகவும் அடுத்ததாக ஜெயம் ரவி ஹரி இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் விரைவில் ’பொன்னியின் செல்வன்’, ‘அகிலன்’ வெளியாகவுள்ளது. அகமது இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். இப்படங்களை முடித்தப்பிறகு ஹரியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த ‘அருவா’ எப்போதுவேண்டுமென்றாலும் தொடங்கப்படலாம் என்று ஹரி கூறியுள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
இயக்குநர் ஹரி - ஜெயம் ரவி இணைகின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஹரி அருண் விஜய்யை வைத்து ‘யானை’ படத்தை இயக்கி முடித்துள்ளார். யோகி பாபு, சினேகன், ராதிகா,கங்கை அமரன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வில்லனாக ‘கேஜிஎஃப்’ புகழ் கருடா ராம் நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து. வரும் ஜூன் 17 ஆம் தேதி ‘யானை’ வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இயக்குநர் ஹரி நடிகர் ஜெயம் ரவிக்கு கதை சொல்லியதாகவும் அடுத்ததாக ஜெயம் ரவி ஹரி இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் விரைவில் ’பொன்னியின் செல்வன்’, ‘அகிலன்’ வெளியாகவுள்ளது. அகமது இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். இப்படங்களை முடித்தப்பிறகு ஹரியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த ‘அருவா’ எப்போதுவேண்டுமென்றாலும் தொடங்கப்படலாம் என்று ஹரி கூறியுள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | L...

துபாயில் துஷாரா விஜயன்: ஸ்கை டைவிங் செய்து அசத்தல் துபாயில் நடிகை துஷாரா விஜயன் ஸ்கை டைவிங் செய்த புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளன. ’சார்பட்டா பரம்பரை’ படத்தின் மூலம் தமிழக இளைஞர்களின் இதயங்களை வாரிக்கொண்டார் நடிகை துஷாரா விஜயன். ‘எனக்கு மாரியம்மா மாதிரி ஒரு மனைவி அமைய மாட்டாளா’ என்கிற அளவுக்கு ரசிகர்கள் கொண்டாடினார்கள். அந்தளவுக்கு யதார்த்தமான நடிப்பால் பாராட்டுக்களைக் குவித்தார் துஷாரா. தற்போது, பா ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’, வசந்தபாலனின் ‘அநீதி’ உள்ளிட்டப் படங்களில் நாயகியாக நடித்து வரும் துஷாரா விஜயன் துபாய் சென்றுள்ளார். அங்கு வானத்தில் சாகச விளையாட்டு எனப்படும் ஸ்கை டைவிங்கை பயமில்லாமல் விமானத்தில் இருந்து குதித்து தனது உடம்பில் மாரியம்மாவே புகுந்த மாதிரி வானத்தில் பறந்துள்ளார். இதுகுறித்து அவர் பேசும்போது, ”வானத்திலிருந்து பூமியைப் பார்ப்பது சொர்கத்தைப் பார்ப்பது போன்ற ஒரு உலக அனுபவம். உடல், மனம், மற்றும் ஆன்மாவிற்கு ஒரு முழுமையான புத்துணர்ச்சி கிடைத்தது. இவ்வளவு அழகான வழிகாட்டியாக இருந்ததற்காக எனது பயிற்றுனர்கள் குழுவிற்கு நன்றி. ஒவ்வொரு நொடியும் சொர்க்கத்தின் தருணங்களை உணர்ந்தேன், தரையிறங்கும்போது முழுமையான அமைதியை உணர்ந்தேன்” என்று மகிழ்ச்சியுடன் தனது அனுபவங்களையும் பகிர்ந்திருக்கிறார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
துபாயில் நடிகை துஷாரா விஜயன் ஸ்கை டைவிங் செய்த புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளன. ’சார்பட்டா பரம்பரை’ படத்தின் மூலம் தமிழக இளைஞர்களின் இதயங்களை வாரிக்கொண்டார் நடிகை துஷாரா விஜயன். ‘எனக்கு மாரியம்மா மாதிரி ஒரு மனைவி அமைய மாட்டாளா’ என்கிற அளவுக்கு ரசிகர்கள் கொண்டாடினார்கள். அந்தளவுக்கு யதார்த்தமான நடிப்பால் பாராட்டுக்களைக் குவித்தார் துஷாரா. தற்போது, பா ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’, வசந்தபாலனின் ‘அநீதி’ உள்ளிட்டப் படங்களில் நாயகியாக நடித்து வரும் துஷாரா விஜயன் துபாய் சென்றுள்ளார். அங்கு வானத்தில் சாகச விளையாட்டு எனப்படும் ஸ்கை டைவிங்கை பயமில்லாமல் விமானத்தில் இருந்து குதித்து தனது உடம்பில் மாரியம்மாவே புகுந்த மாதிரி வானத்தில் பறந்துள்ளார். இதுகுறித்து அவர் பேசும்போது, ”வானத்திலிருந்து பூமியைப் பார்ப்பது சொர்கத்தைப் பார்ப்பது போன்ற ஒரு உலக அனுபவம். உடல், மனம், மற்றும் ஆன்மாவிற்கு ஒரு முழுமையான புத்துணர்ச்சி கிடைத்தது. இவ்வளவு அழகான வழிகாட்டியாக இருந்ததற்காக எனது பயிற்றுனர்கள் குழுவிற்கு நன்றி. ஒவ்வொரு நொடியும் சொர்க்கத்தின் தருணங்களை உணர்ந்தேன், தரையிறங்கும்போது முழுமையான அமைதியை...

”கமல், ரஜினி படம் ஒரே நாளில் வெளியானது; ஆனால்” -‘விக்ரம்’ அனுபவம் பகிரும் வசந்தபாலன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் வரும் ஜூன் 3 ஆம் தேதி வெளியாவதையொட்டி ’விக்ரம் 1’ பார்த்த அனுபவம் பகிர்ந்துள்ளார் இயக்குநர் வசந்தபாலன். " பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போது ’விக்ரம்’ படம் விருதுநகர் அப்சராவில் வெளியானது. அதே நாளில் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த விடுதலை திரைப்படமும் வெளியானது. அன்று நான் தீவிரமான கமல் ரசிகனாக இருந்தேன். எம்ஜிஆர் ரசிகனாக இருந்து ’பில்லா’ படம் பார்த்து ரஜினி ரசிகனாக மாறி , மெல்ல வாசிப்பு பழக்கம் அதிகமானபோது கமலின் தீவிர ரசிகனாக மாறியிருந்தேன். அந்தக் கால கட்டத்தில் பலரும் என்னைப்போல தான். குமுதத்தில் சுஜாதா அவர்கள் 'விக்ரம்' கதையை தொடர்கதையாக எழுதி வெளியானபோதே தொடர்ந்து வாசித்து வந்தேன். தமிழ்வாணனை வாசித்தப்போது ஏற்பட்ட துப்பு துலக்கும் கதை ருசி இதிலும் கிடைத்தது. திரை வெளியீட்டுக்கு முன்பே பாடல்கள் வெளியாகி பெரும் வெற்றியடைந்திருந்தது பாட்டு புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு வனிதாமணி வனமோகினி என்று பாடிக் கொண்டே வார்த்தைகளில் கிறங்கி விக்ரம் என்ற முதல் டிஜிட்டல் லோகோவில் மயங்கி கிடந்த காலம். விக்ரம் படம் வெளியான அன்று காலை முதல் இரண்டு காட்சிகளுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. மதியம் 4/30 மணி காட்சிக்காக பெண்கள் கவுண்டரில் மதியம் 1 மணிக்கு சென்று அந்த வரிசையில் மத்'தியானம்', வெக்கை, புழுக்கம், பசி, தாகம் என பல உணர்வுகளுடன் காத்திருந்து கனவோடு டிக்கெட் கவுண்டரில் கை நுழைத்து திரையரங்க குடிதண்ணீர் குழாயில் அடிபிடி சண்டை செய்து தண்ணீர் குடித்து பசியாறி இளைப்பாற வெள்ளித்திரைக்கு எதிரே முதல் வரிசையில் என்ன படம் பார்க்கிறோமுன்னு தெரியாமல் மொத்த படத்தில் எங்கெல்லாம் தலைவன் வருகிறாரோ அங்கெல்லாம் கத்தி விசிலடித்து துண்டு பேப்பர்களை பறக்க விட்டு படம் பார்த்து விக்ரம் விக்ரம் என்று கத்தியபடி திரையரங்கை விட்டு வெளியே வரும்போது இரவாகிருந்தது. பசி காண்டாமிருகம் போல என் முன் எழுந்து நின்றது. மெதுவாக வீடு திரும்பும் போது விருதுநகர் முழுக்க விக்ரம், விடுதலை என்ற இரண்டு பெயர்களையும் மாறி மாறி உச்சரித் தவண்ணம் இருந்தது. எங்கள் தெருவில் நிற்கும் வேப்பமரம் காத்தடிக்கும்போது உதிர்க்கும் வேப்பம்பழத்தை வாயில் போடும் போது என் ஜோடி மஞ்சக்குருவி பாடல் இனிக்கத் துவங்கியது. படத்தின் துவக்கத்தில் டிஜிட்டல் டைட்டில் வரத்துவங்கியது தமிழ் சினிமாவிற்கு புதியது. டைட்டில் பாடல் விக்ரம் விக்ரம் பாடலும் காட்சி அமைப்பு ஜேம்ஸ் பாண்ட் பாணியில் இருக்கும். காக்கி சட்டையில் தகடு தகடு என கலக்கிய சத்யராஜ் வில்லன் என்பது படத்திற்கு கூடுதல் பலம். சுஜாதா தொடர்கதையில் இருந்தது என்ன திரைப்படத்தில் இல்லை என்று யோசித்து கொண்டிருந்தேன். ஒன்று நிச்சயம் பள்ளிப்பருவ மாணவனை அன்று ஆச்சரியத்தில் ஆழ்த்திய கமல் இத்தனை வருடத்தில் விடாது அந்த விடயத்தை விக்ரம் 2 ட்ரைலர் வரை தக்க வைத்திருக்கிறார். வாழ்த்துகள் கமல் சார்” என்று குறிப்பிட்டுள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் வரும் ஜூன் 3 ஆம் தேதி வெளியாவதையொட்டி ’விக்ரம் 1’ பார்த்த அனுபவம் பகிர்ந்துள்ளார் இயக்குநர் வசந்தபாலன். " பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போது ’விக்ரம்’ படம் விருதுநகர் அப்சராவில் வெளியானது. அதே நாளில் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த விடுதலை திரைப்படமும் வெளியானது. அன்று நான் தீவிரமான கமல் ரசிகனாக இருந்தேன். எம்ஜிஆர் ரசிகனாக இருந்து ’பில்லா’ படம் பார்த்து ரஜினி ரசிகனாக மாறி , மெல்ல வாசிப்பு பழக்கம் அதிகமானபோது கமலின் தீவிர ரசிகனாக மாறியிருந்தேன். அந்தக் கால கட்டத்தில் பலரும் என்னைப்போல தான். குமுதத்தில் சுஜாதா அவர்கள் 'விக்ரம்' கதையை தொடர்கதையாக எழுதி வெளியானபோதே தொடர்ந்து வாசித்து வந்தேன். தமிழ்வாணனை வாசித்தப்போது ஏற்பட்ட துப்பு துலக்கும் கதை ருசி இதிலும் கிடைத்தது. திரை வெளியீட்டுக்கு முன்பே பாடல்கள் வெளியாகி பெரும் வெற்றியடைந்திருந்தது பாட்டு புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு வனிதாமணி வனமோகினி என்று பாடிக் கொண்டே வார்த்தைகளில் கிறங்கி விக்ரம் என்ற முதல் டிஜிட்டல் லோகோவில் மயங்கி கிடந்த காலம். விக்ரம் படம்...

நானி - நஸ்ரியாவின் ‘அடடே சுந்தரா’: ட்ரெய்லர் அப்டேட்டை கொடுத்த படக்குழு நானி - நஸ்ரியாவின் ‘அடடே சுந்தரா’ படத்தின் ட்ரெய்லர் அப்டேட்டை கொடுத்திருக்கிறது படக்குழு. ‘ஷ்யாம் சிங்கா ராய்’ வெற்றிக்குப் பிறகு நானி ‘தசரா’, ‘அடடே சுந்தரா’ உள்ளிட்டப் படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இதில், ‘அடடே சுந்தரா’வில் திருமணத்திற்குப்பிறகு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார் நடிகை நஸ்ரியா. கடந்த 2014-ஆம் ஆண்டு ஃபகத் ஃபாசிலை காதலித்து திருமணம் செய்துகொண்டவர் படங்களில் நடிக்காமல் ’வரதன்’, ’கும்ப்ளங்கி நைட்ஸ்’ உள்ளிட்டப் படங்களை மட்டுமே தயாரிக்க செய்தார். கடைசியாக ஃபகத் ஃபாசிலுடன் ’ட்ரான்ஸ்’ படத்தில் மட்டுமே தலைகாட்டியிருந்தார். இந்நிலையில், நஸ்ரியா முதன்முறையாக தெலுங்கு படத்தில் நானிக்கு ஜோடியாக ’அடடே சுந்தரா’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் திரைப்படம் தெலுங்கில் உருவாக்கப்பட்டு தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் `அண்டி சுந்தரானிகி’ என்ற பெயரிலும் தமிழில் ‘அடடே சுந்தரா’ என்ற பெயரிலும் வெளியாகவுள்ளது. நஸ்ரியாவின் ரீ என்ட்ரி படம் என்பதால் தியேட்டர்களில் மாஸ் என்ட்ரி கொடுக்க காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளைக் கிளப்பியுள்ள ‘அடடே சுந்தரா’ வரும் ஜூன் 10 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. இதனையொட்டி வரும் ஜூன் 2 ஆம் தேதி படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
நானி - நஸ்ரியாவின் ‘அடடே சுந்தரா’ படத்தின் ட்ரெய்லர் அப்டேட்டை கொடுத்திருக்கிறது படக்குழு. ‘ஷ்யாம் சிங்கா ராய்’ வெற்றிக்குப் பிறகு நானி ‘தசரா’, ‘அடடே சுந்தரா’ உள்ளிட்டப் படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இதில், ‘அடடே சுந்தரா’வில் திருமணத்திற்குப்பிறகு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார் நடிகை நஸ்ரியா. கடந்த 2014-ஆம் ஆண்டு ஃபகத் ஃபாசிலை காதலித்து திருமணம் செய்துகொண்டவர் படங்களில் நடிக்காமல் ’வரதன்’, ’கும்ப்ளங்கி நைட்ஸ்’ உள்ளிட்டப் படங்களை மட்டுமே தயாரிக்க செய்தார். கடைசியாக ஃபகத் ஃபாசிலுடன் ’ட்ரான்ஸ்’ படத்தில் மட்டுமே தலைகாட்டியிருந்தார். இந்நிலையில், நஸ்ரியா முதன்முறையாக தெலுங்கு படத்தில் நானிக்கு ஜோடியாக ’அடடே சுந்தரா’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் திரைப்படம் தெலுங்கில் உருவாக்கப்பட்டு தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் `அண்டி சுந்தரானிகி’ என்ற பெயரிலும் தமிழில் ‘அடடே சுந்தரா’ என்ற பெயரிலும் வெளியாகவுள்ளது. நஸ்ரியாவின் ரீ என்ட்ரி படம் என்பதால் தியேட்டர்களில் மாஸ் என்ட்ரி கொடுக்க காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். ஏகப...

ஓடிடியில் வெளியாகும் ‘டான்’ - ரிலீஸ் தேதி அறிவிப்பு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ’டான்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு. அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா அருள்மோகன், சிவாங்கி, பாலசரவணன் உள்ளிட்டோர் நடித்த ’டான்’ திரைப்படம் கடந்த 13-ஆம் தேதி வெளியானது. சூப்பர்/ சுமார் என்று கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ‘டாக்டர்’ படம் போலவே வசூலில் ‘டான்’ என்பதை நிரூபித்துள்ளார் சிவகார்த்திகேயன். அப்பா-மகன் செண்டிமெண்ட் ஒர்க்கவுட் ஆகியுள்ளது என்பதற்கு இப்போதும் டானுக்கு படையெடுக்கும் மக்களே சாட்சி. ‘டாக்டர்’ போலவே ’டான்’ படமும் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது என்று சமீபத்தில் படக்குழு அறிவித்தது. தமிழகத்தில் சுமார் 500-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. முதல் நாள் தமிழகத்தில் 8 கோடியே 60 லட்ச ரூபாய் வசூல் செய்தது. அதைத்தொடர்ந்து இரண்டாம் நாளில் 10 கோடியே 30 லட்சம் ரூபாயும், மூன்றாம் நாளில் 11 கோடியே 18 லட்சம் ரூபாயும் வசூல் செய்தது. படம் வெளியாகி 12 நாட்களில் ரூ.100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக படக்குழு தெரிவித்திருந்தது. ’டான்’ படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் கைப்பற்றியிருந்தது. இந்த நிலையில், படம் வெளியாகி 29 நாட்கள் கழித்து வரும் ஜூன் 10 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் என்று நெட்ஃப்ளிக்ஸ் தளம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ’டான்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு. அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா அருள்மோகன், சிவாங்கி, பாலசரவணன் உள்ளிட்டோர் நடித்த ’டான்’ திரைப்படம் கடந்த 13-ஆம் தேதி வெளியானது. சூப்பர்/ சுமார் என்று கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ‘டாக்டர்’ படம் போலவே வசூலில் ‘டான்’ என்பதை நிரூபித்துள்ளார் சிவகார்த்திகேயன். அப்பா-மகன் செண்டிமெண்ட் ஒர்க்கவுட் ஆகியுள்ளது என்பதற்கு இப்போதும் டானுக்கு படையெடுக்கும் மக்களே சாட்சி. ‘டாக்டர்’ போலவே ’டான்’ படமும் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது என்று சமீபத்தில் படக்குழு அறிவித்தது. தமிழகத்தில் சுமார் 500-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. முதல் நாள் தமிழகத்தில் 8 கோடியே 60 லட்ச ரூபாய் வசூல் செய்தது. அதைத்தொடர்ந்து இரண்டாம் நாளில் 10 கோடியே 30 லட்சம் ரூபாயும், மூன்றாம் நாளில் 11 கோடியே 18 லட்சம் ரூபாயும் வசூல் செய்தது. படம் வெளியாகி 12 நாட்களில் ரூ.100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக படக்குழு தெரிவித்திருந்தது. ’டான்’ ப...

"Titanic Rise ஆகி பார்த்ததில்லையே?"- கலையரசனின் 'டைட்டானிக்' ரிலீஸ் தேதி அறிவிப்பு கலையரசன் நடித்துள்ள ‘டைட்டானிக்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது படக்குழு. நடிகர் கலையரசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘குதிரைவால்’ கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அடுத்ததாக, ‘டைட்டானிக்’, இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கியுள்ள ’நட்சத்திரம் நகர்கிறது’ உள்ளிட்டப் படங்கள் கலையரசன் நடிப்பில் வெளியீட்டிற்குத் தயாராய் உள்ளன. இதில், சில வருடங்களாக தயாரிப்பில் உள்ள ‘டைட்டானிக்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தினை ஜானகிராமன் இயக்க சி.வி குமார் தயாரித்துள்ளார். ‘கயல்’ ஆனந்தி, காளி வெங்கட், காயத்ரி, மதுமிதா, ஆஷ்னா உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். மூன்று காதல்களை மையப்படுத்திய இக்கதை சென்னை, கொடைக்கானல், பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டுல்ளது. இப்படத்தின் இயக்குநர் ஜானகிராமன் இயக்குநர் சுதா கொங்கராவின் உதவி இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், படத்தின் வெளியீட்டுத் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு. ’டைட்டானிக்’ வரும் ஜூன் 24 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
கலையரசன் நடித்துள்ள ‘டைட்டானிக்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது படக்குழு. நடிகர் கலையரசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘குதிரைவால்’ கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அடுத்ததாக, ‘டைட்டானிக்’, இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கியுள்ள ’நட்சத்திரம் நகர்கிறது’ உள்ளிட்டப் படங்கள் கலையரசன் நடிப்பில் வெளியீட்டிற்குத் தயாராய் உள்ளன. இதில், சில வருடங்களாக தயாரிப்பில் உள்ள ‘டைட்டானிக்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தினை ஜானகிராமன் இயக்க சி.வி குமார் தயாரித்துள்ளார். ‘கயல்’ ஆனந்தி, காளி வெங்கட், காயத்ரி, மதுமிதா, ஆஷ்னா உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். மூன்று காதல்களை மையப்படுத்திய இக்கதை சென்னை, கொடைக்கானல், பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டுல்ளது. இப்படத்தின் இயக்குநர் ஜானகிராமன் இயக்குநர் சுதா கொங்கராவின் உதவி இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், படத்தின் வெளியீட்டுத் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு. ’டைட்டானிக்’ வரும் ஜூன் 24 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என்று அறிவித்துள்ள...

ரிலீசுக்கு முன்பே 200 கோடி ரூபாய் வியாபாரம்? - மாஸ் சம்பவத்திற்கு தயாராகும் ‘விக்ரம்’ படம் பட வெளியீட்டுக்கு முன்பாகவே 200 கோடி ரூபாய்-க்கும் மேல் ‘விக்ரம்’ படம் வியாபாரம் புரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி, சூர்யா, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன், ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், ஷான்வி ஸ்ரீவஸ்தவா ஆகிய மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது. ஏற்கெனவே இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், கிளிம்ப்ஸ் காட்சிகள், ‘பத்தல பத்தல’ பாடல் முதல் சிங்கிள் ஆகியவை வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வருகிற வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகிறது. கமலின் நடிப்பில் 4 ஆண்டுகளுக்குப் பின் வெளியாகவுள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் படம் வெளியாவதற்கு இன்னும் ஒருசில தினங்களே உள்ளதால், எங்கு காணினும் ‘விக்ரம்’ படத்தின் புரமோஷன்களே கண்களில் தென்படுகின்றன. நேற்று முதல் படத்திற்கான முன்பதிவும் துவங்கியுள்ளது. இந்நிலையில், பட வெளியீட்டுக்கு முன்பாகவே 200 கோடி ரூபாய்-க்கும் மேல் ‘விக்ரம்’ படம் வியாபாரம் புரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல மொழிகளில் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமம் ஆகியவற்றால் 200 கோடிக்கு ரூபாய்-க்கும் மேல் வியாபாரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விக்ரம் படக்குழு தற்போது மகிழ்ச்சியில் உள்ளது. மேலும் 'விக்ரம்' படத்தின் சேட்டிலைட் உரிமையை விஜய் டிவியும், ஓடிடி வெளியீட்டு உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரும் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
பட வெளியீட்டுக்கு முன்பாகவே 200 கோடி ரூபாய்-க்கும் மேல் ‘விக்ரம்’ படம் வியாபாரம் புரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி, சூர்யா, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன், ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், ஷான்வி ஸ்ரீவஸ்தவா ஆகிய மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது. ஏற்கெனவே இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், கிளிம்ப்ஸ் காட்சிகள், ‘பத்தல பத்தல’ பாடல் முதல் சிங்கிள் ஆகியவை வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வருகிற வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகிறது. கமலின் நடிப்பில் 4 ஆண்டுகளுக்குப் பின் வெளியாகவுள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் படம் வெளியாவதற்கு இன்னும் ஒருசில தினங்களே உள்ளதால், எங்கு காணினும் ‘விக்ரம்’ படத்தின் புரமோஷன்களே கண்களில் தென்படுகின்றன. நேற்று முதல் படத்திற்கான முன்பதிவும் துவங்கியுள்ளது. இந்நிலையில், பட வெளியீட்டுக்கு முன்பாகவே 200 கோடி ரூபாய்-க்கும் மேல...

லிங்குசாமியின் ‘தி வாரியர்’: படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ’தி வாரியர்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ’சண்டக்கோழி 2’ படத்திற்குப் பின்னர் ராம் பொத்தினேனி நடிப்பில் தமிழ், தெலுங்கில் உருவாகும் படத்தினை இயக்கி முடித்துள்ளார் லிங்குசாமி.  கீர்த்தி ஷெட்டி நாயகியாகவும் ஆதி வில்லனாகவும் மற்றும் நதியா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். பிருந்தா சாரதி வசனங்கள் எழுத தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். வரும் ஜூலை 14-ஆம் தேதி வாரியர் திரைப்படம் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ‘புல்லட்’ முதல் பாடம் வெளியாகி இன்ஸ்டா ரீல்ஸில் வைரல் ஹிட் அடித்துள்ளது. ராம் பொத்தினேனி போலீஸாக நடிக்கும் முதல் படம் இது. சமீபத்தில் வெளியான டீசரில் அவரின் போலீஸ் கெட்டப் ஆக்‌ஷன் காட்சிகளும் பிருந்தா சாரதியின் வசனங்களும் படத்திற்கு பிரம்மாண்டத்தைக் கொடுத்திருக்கின்றன. உடல் மொழியாலேயே மிரட்டியிருந்தார் நடிகர் ஆதி. இந்த நிலையில்’தி வாரியர்’ படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. இதனை உற்சாகமுடன் படக்குழு புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
லிங்குசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ’தி வாரியர்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ’சண்டக்கோழி 2’ படத்திற்குப் பின்னர் ராம் பொத்தினேனி நடிப்பில் தமிழ், தெலுங்கில் உருவாகும் படத்தினை இயக்கி முடித்துள்ளார் லிங்குசாமி.  கீர்த்தி ஷெட்டி நாயகியாகவும் ஆதி வில்லனாகவும் மற்றும் நதியா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். பிருந்தா சாரதி வசனங்கள் எழுத தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். வரும் ஜூலை 14-ஆம் தேதி வாரியர் திரைப்படம் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ‘புல்லட்’ முதல் பாடம் வெளியாகி இன்ஸ்டா ரீல்ஸில் வைரல் ஹிட் அடித்துள்ளது. ராம் பொத்தினேனி போலீஸாக நடிக்கும் முதல் படம் இது. சமீபத்தில் வெளியான டீசரில் அவரின் போலீஸ் கெட்டப் ஆக்‌ஷன் காட்சிகளும் பிருந்தா சாரதியின் வசனங்களும் படத்திற்கு பிரம்மாண்டத்தைக் கொடுத்திருக்கின்றன. உடல் மொழியாலேயே மிரட்டியிருந்தார் நடிகர் ஆதி. இந்த நிலையில்’தி வாரியர்’ படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. இதனை உற்சாகமுடன் படக்குழு புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Lates...

’‘எடுக்கற சார்...அவதாரம் எடுக்குற’’ - வெளியானது ’தி லெஜண்ட்’ திரைப்பட ட்ரெய்லர் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் கதாநாயகனாக உருவெடுத்துள்ள ‘ தி லெஜண்ட்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ’தி லெஜண்ட்’ படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழா இன்று மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா, ராய் லட்சுமி, ஷ்ரதா ஸ்ரீநாத், யாஷிகா ஆனந்த், டிம்பிள் ஹயாதி, ஸ்ரீ லீலா, நுபுர் சனான், ஊர்வசி ரௌதாலா ஆகியோர் கலந்துகொண்டனர். பிரம்மாண்டமாக உலகமே ஆச்சர்யப்படுகிற பெரிய சைன்டிஸ்ட் நீங்க... என்று தொடங்குகிறது ட்ரெய்லர். இதன்மூலம் ’தி லெஜண்ட்’ விஞ்ஞானி கதாநாயகனாக இந்த படத்தில் நடித்துள்ளார் என்று தெரிகிறது. ஒரு பெரிய விஞ்ஞானி சிறிய கிராமத்திற்குச் சென்று அங்குள்ள மக்களுக்கு தன்னுடைய படிப்பும் அறிவும் பயன்படவேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் எல்லாப் படங்களிலும் ஹீரோக்களுக்கு எதிரிகள் இருப்பதைப்போல் இந்த படத்திலும் விஞ்ஞானி சரவணனுக்கும் எதிரிகள் இருக்கின்றனர். அவர்கள் சரவணனை எமோஷனல் தாக்குதலுக்கு ஆளாக்க அவரால் இந்திய விஞ்ஞானிகளுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. இது ட்ரெய்லரின் முதல் பாதி. இரண்டாம் பாதியில் நாசரின் ஊக்கப்படுத்துதலுக்குப் பிறகு ‘எடுக்கற சார்...அவதாரம் எடுக்குற’ என்ற வசனத்தோடு சாஃப்ட் சைன்டிஸ்ட் ஆக்‌ஷன் ஹீரோவாக அவதாரம் எடுக்கிறார். ’இந்த முறை நான் அடிக்கற அடி மரண அடியாத்தான் இருக்கும்’என்று அடிக்கிற அடியில், ’சரவணன் the most dangerous scientist' என்று வில்லன்களை கதறவிடுகிறார். சேரை தூக்கி அடிக்கும் வேகத்தைப் பார்த்து ’லெஜண்ட் சார் நீங்க’ என்று பாராட்டைப் பெறுவதுடன், ‘ இவங்க எல்லாரும் என்மேல வெச்சிருக்க நம்பிக்கைதான் என்னோட பலம்; அந்த நம்பிக்கை ஒருநாளும் வீண்போகாது’ என்று முடிகிறது. ட்ரெய்லரிலேயே பிரம்மாண்டத்தை வீசியிருக்கிறார் தி லெஜண்ட். மேலும் முதல் மற்றும் இரண்டாம் பாக கதைகள் என்னவாக இருக்கும் என்பதையும் யூகிக்கவைக்கிறது ட்ரெய்லர். சிட்டி ரோபோவை பார்த்ததுபோன்ற சாயலை கொண்டுவந்திருக்கிறார் ’தி லெஜண்ட்’. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக உள்ள இந்த படம் நிறைய மாஸ் மொமன்ட்கள் உள்ளடக்கியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் கதாநாயகனாக உருவெடுத்துள்ள ‘ தி லெஜண்ட்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ’தி லெஜண்ட்’ படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழா இன்று மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா, ராய் லட்சுமி, ஷ்ரதா ஸ்ரீநாத், யாஷிகா ஆனந்த், டிம்பிள் ஹயாதி, ஸ்ரீ லீலா, நுபுர் சனான், ஊர்வசி ரௌதாலா ஆகியோர் கலந்துகொண்டனர். பிரம்மாண்டமாக  உலகமே ஆச்சர்யப்படுகிற பெரிய சைன்டிஸ்ட் நீங்க... என்று தொடங்குகிறது ட்ரெய்லர். இதன்மூலம் ’தி லெஜண்ட்’ விஞ்ஞானி கதாநாயகனாக இந்த படத்தில் நடித்துள்ளார் என்று தெரிகிறது. ஒரு பெரிய விஞ்ஞானி சிறிய கிராமத்திற்குச் சென்று அங்குள்ள மக்களுக்கு தன்னுடைய படிப்பும் அறிவும் பயன்படவேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் எல்லாப் படங்களிலும் ஹீரோக்களுக்கு எதிரிகள் இருப்பதைப்போல் இந்த படத்திலும் விஞ்ஞானி சரவணனுக்கும் எதிரிகள் இருக்கின்றனர். அவர்கள் சரவணனை எமோஷனல் தாக்குதலுக்கு ஆளாக்க அவரால் இந்திய விஞ்ஞானிகளுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. இது ட்ரெய்லரின் முதல் ...

நாமக்கல்: விபத்தில் உயிரிழந்த ரசிகர் - நேரில் சென்று ஆறுதல் கூறி நடிகர் சூர்யா அஞ்சலி விபத்தில் உயிரிழந்த ரசிகரின் குடும்பத்திற்கு நடிகர் சூர்யா நேரில் ஆறுதல் கூறி ரசிகரின் உருவ படத்திற்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார். நாமக்கல் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் (25). இவருக்கு திருமணமாகி ராதிகா என்ற மனைவியும் 2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி நாமக்கல் துறையூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது நாமக்கல் காவல் நிலையம் அருகே சாலையின் வளைவில் திரும்பும்போது லாரி ஒன்று இவர் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜெகதீஷ் ஆன்புலன்ஸ் மூலம் சேலத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்நிலையில், உயிரிழந்த ஜெகதீஷ், நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகராக இருந்து வருவதோடு, 15 வருடமாக மன்ற பணியாற்றி வந்துள்ளார். இதையடுத்து உயிரிழந்த ரசிகரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக, நாமக்கல் மேட்டுத் தெருவில் உள்ள அவரது இல்லத்திற்கு நேற்று வந்த நடிகர் சூர்யா, உயிரிழந்த ஜெகதீஷின் மனைவி ராதிகா மற்றும் அவரது உறவினர்களுக்கு கண் கலங்கியவாறு ஆறுதல் தெரிவித்து ஜெகதீஷின் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்து உயிரிழந்த ஜெகதீஷின் மனைவி ராதிகா கூறுகையில், உடன்பிறந்த சகோதரர் போன்று நேற்று நடிகர் சூர்யா ஆறுதல் தெரிவித்தார். சூரியா அவர்கள் வருவதை எதிர் பார்க்கவில்லை;. குழந்தையின் நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும் ரசிகர் மன்றத்தின் சார்பில் அனைத்து உதவிகளையும் செய்வதாக அவர் வாக்குறுதி அளித்தார். மேலும் தனது குழந்தையின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு தனக்கு ஏதாவது வேலை ஏற்பாடு செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தேன் அதனை நிறைவேற்றித் தருவதாக நடிகர் சூர்யா தெரிவித்ததாக ராதிகா கண் கலங்கியபடி கூறினார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
விபத்தில் உயிரிழந்த ரசிகரின் குடும்பத்திற்கு நடிகர் சூர்யா நேரில் ஆறுதல் கூறி ரசிகரின் உருவ படத்திற்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார். நாமக்கல் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் (25). இவருக்கு திருமணமாகி ராதிகா என்ற மனைவியும் 2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி நாமக்கல் துறையூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது நாமக்கல் காவல் நிலையம் அருகே சாலையின் வளைவில் திரும்பும்போது லாரி ஒன்று இவர் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜெகதீஷ் ஆன்புலன்ஸ் மூலம் சேலத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்நிலையில், உயிரிழந்த ஜெகதீஷ், நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகராக இருந்து வருவதோடு, 15 வருடமாக மன்ற பணியாற்றி வந்துள்ளார். இதையடுத்து உயிரிழந்த ரசிகரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக, நாமக்கல் மேட்டுத் தெருவில் உள்ள அவரது இல்லத்திற்கு நேற்று வந்த நடிகர் சூர்யா, உயிரிழந்த ஜெகதீஷின் மனைவி ராதிகா மற்றும் அவரது உறவினர்களுக்கு கண் கலங்கியவாறு ஆறுதல் தெரிவித்...

இன்று வெளியாகிறது “தி லெஜண்ட்” படத்தின் இசை, ட்ரெய்லர்! சென்னையில் பிரம்மாண்ட விழா தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் முதன் முறையாக மிகுந்த பொருட்செலவில் மிக பிரமாண்டமான முறையில் பன்மொழி பான் இந்தியா படம் ஒன்றை தயாரித்து வருகின்றனர். “தி லெஜன்ட்” என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் கதாநாயகனாக லெஜண்ட் சரவணன் நடிக்கிறார். எமோஷன், ஆக்ஷன், காதல், காமெடி என அனைத்தும் ஒருங்கிணைந்த பான் இந்தியா படமாக 5 மொழிகளில் வெளியாகவுள்ளது லெஜண்ட் சரவணன் நடிக்கும் “தி லெஜண்ட்”. ஜேடி-ஜெர்ரி ஆகியோர் படத்தின் கதை திரைக்கதையை எழுதி இயக்குகியுள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த இப்படத்தின் முதல் லிரிக்கல் பாடல் “மொசலோ மொசலு -வை பிரபல இயக்குநர்கள் மணிரத்னம், ராஜமெளலி மற்றும் சுகுமார் வெளியிட்ட நிலையில், ஒரு கோடிக்கும் அதிகமான பார்வைகளை கடந்து ஹிட் அடித்துள்ளது. அதைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாடலான “வாடி வாசல்” சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் அதுவும் ஒரு கோடி பார்வைகளை கடந்து ரசிக்கப்பட்டு வருகிறது. “ஜனரஞ்சக கலைஞன்”, “சின்னக் கலைவாணர்” என அனைவராலும் பாராட்டப்பட்ட விவேக் கடைசியாக நடித்த படம் இதுவாகும். ஒரு அன்பான எளிய மனிதன் தனது புத்திசாலித்தனத்தாலும், முயற்சியாலும், வலிமையாலும் அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி ‘ஒரு லெஜண்டாக’ எப்படி உருவாகிறான் என்பதே படத்தின் மையக்கதையாகும். இதையும் படிங்க... 'நான் ஜோஸ் பட்லரின் மனைவி அல்ல' - சக வீரரின் மனைவி பகிர்ந்த சுவராஸ்யம் இதையடுத்து “தி லெஜண்ட்” படத்தின் பிரமாண்ட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் இன்று நடைபெறவுள்ளது. படத்தில் பணியாற்றிய நட்சத்திரங்களோடு பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா, நுபுர் சனோன், ஷ்ரத்தா ஶ்ரீநாத், ஶ்ரீ லீலா, டிம்பிள் ஹயாதி, ராய் லட்சுமி, ஊர்வசி ரவுத்தலா உள்ளிட்ட முன்னணி பான் இந்திய நடிகைகள் பங்கேற்க உள்ளனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் முதன் முறையாக மிகுந்த பொருட்செலவில் மிக பிரமாண்டமான முறையில் பன்மொழி பான் இந்தியா படம் ஒன்றை தயாரித்து வருகின்றனர். “தி லெஜன்ட்” என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் கதாநாயகனாக லெஜண்ட் சரவணன் நடிக்கிறார். எமோஷன், ஆக்ஷன், காதல், காமெடி என அனைத்தும் ஒருங்கிணைந்த பான் இந்தியா படமாக 5 மொழிகளில் வெளியாகவுள்ளது லெஜண்ட் சரவணன் நடிக்கும் “தி லெஜண்ட்”. ஜேடி-ஜெர்ரி ஆகியோர் படத்தின் கதை திரைக்கதையை எழுதி இயக்குகியுள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த இப்படத்தின் முதல் லிரிக்கல் பாடல் “மொசலோ மொசலு -வை பிரபல இயக்குநர்கள் மணிரத்னம், ராஜமெளலி மற்றும் சுகுமார் வெளியிட்ட நிலையில், ஒரு கோடிக்கும் அதிகமான பார்வைகளை கடந்து ஹிட் அடித்துள்ளது. அதைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாடலான “வாடி வாசல்” சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் அதுவும் ஒரு கோடி பார்வைகளை கடந்து ரசிக்கப்பட்டு வருகிறது. “ஜனரஞ்சக கலைஞன்”, “சின்னக் கலைவாணர்” என அனைவராலும் பாராட்டப்பட்ட விவேக் கடைசியாக நடித்த படம் இதுவாகும். ஒரு அன்பான எளிய மனிதன் தனது புத்திசாலித்தனத்தாலும், முயற்சியாலும், ...

ஆத்தாடி.. எந்தப் பக்கம் திரும்புனாலும் விக்ரம் பட புரமோஷனா இருக்கு! தொடங்கியது புக்கிங் சில்லுனு ஒரு காதல் படத்தில் இடம்பெற்ற வடிவேலு காமெடி காட்சியின் படத்துடன் சோஷியல் மீடியாவில் ஒரு பதிவு ஒன்று வலம் வருகிறது. விக்ரம் படத்தோடு புரமோஷன் எந்த அளவிற்கு நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு அந்தப் பதிவு சிறந்த உதாரணம். சில்லுனு ஒரு காதல் படத்தில் ’உங்க அப்பாவை யாரெல்லாம் அடிச்சிருக்காங்க’ என வடிவேலு மனைவி அவர்களின் பிள்ளைகளிடம் கேட்க ஊரில் இருக்க எல்லாரு பேரையும் சொல்லிகிட்டே இருப்பாங்க பசங்க. அப்படித்தான் விக்ரம் தொடர்பாக யூடியூப்பில் அவ்வளவு பேர் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஒரு படத்தில் பணியாற்றிய உதவி இயக்குநர்கள் படத்தின் புரமோஷனில் இந்த அளவிற்கு பங்கேற்பது இதுதான் முதல்முறையாக இருக்கும்.  தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கமல்ஹாசனின் 'விக்ரம்' திரைப்படத்துக்கான டிக்கெட் புக்கிங் இன்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, ஃபகத் ஃபாசில் ஆகியோரின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் 'விக்ரம்'. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை 'ரெட் ஜெயன்ட்' நிறுவனம் வெளியிடுகிறது. லோகேஷ் கனகராஜ் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய சூப்பர் ஹிட் திரைப்படங்களை லோகேஷ் கனகராஜ் கொடுத்திருப்பதால், அவரது அடுத்த படைப்பான 'விக்ரம்' திரைப்படம் மீது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், கமல்ஹாசன் ஒரு பிராஜெக்டில் இருந்தால் அதில் அவரது மெனக்கெடலும், பங்களிப்பும் கணிசமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். இதுவும் விக்ரம் திரைபடத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் கூட்டியிருக்கிறது. இந்நிலையில், விக்ரம் திரைப்படம் நாடு முழுவதும் திரையரங்குகளில் வரும் 3-ம் தேதி வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு இதற்கான டிக்கெட் புக்கிங் இன்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது ஒருபுறம் இருக்க, 'விக்ரம்'படத்திற்கான பிரமோஷனும் வேற லெவலில் செய்யப்பட்டு வருகிறது. கிராமம் முதல் நகரம் வரை எங்கு பார்த்தாலும் 'விக்ரம்' பட பேனர்களே பெரும்பாலும் தென்படுகின்றன. பல இடங்களில் தண்ணீர் பாட்டில்களில் 'விக்ரம்' திரைப்படத்தின் போஸ்டர்கள் அச்சிடப்பட்டுள்ளன. நகரங்களில் உள்ள பெரிய மால்களில் விக்ரம் பட ட்ரெய்லர்கள் ஒளி பரப்பாகிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு திரும்பும் திசையெல்லாம் 'விக்ரம்' பட பிரமோஷன்கள் களைக்கட்டி வருகின்றன. அதேபோல, சமூக வலைதளங்களிலும் இந்த திரைப்படத்தை ப்ரமோட் செய்யும் வகையிலான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. உதாரணமாக, பஞ்சத்தந்திரம் திரைப்படத்தில் கமல், ஜெயராம், யூ.கி. சேது, ரமேஷ் அரவிந்த் ஆகியோர் கான்ஃபெரன்ஸ் காலில் பேசும் காட்சியை அப்படியே 'விக்ரம்' பட பிரமோஷனுக்காக அவர்கள் புதிதாக மாற்றியமைத்துள்ளனர். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. இதனிடையே, மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் நடிகர் மோகன் லாலுடன் கமல்ஹாசன் கலந்துகொண்டு 'விக்ரம்' திரைப்படம் குறித்து பேசியுள்ளார். இவ்வாறு நாடெங்கிலும் அனைவரும் 'விக்ரம்' திரைப்படம் பற்றி பேசும் அளவுக்கு அதன் பிரமோஷன் இருப்பதாக சினிமா ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். பல்வேறு மொழிகளில் படம் வெளியாவதால் ஒவ்வொரு மாநிலத்திற்கும் கமல்ஹாசன் நேரடியாக சென்று புரமோஷன் பணியில் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். இந்தியாவை தாண்டி மலேசியாவிலும் விக்ரம் பட புரமோஷனை செய்து முடித்துள்ளார் உலக நாயகன். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
சில்லுனு ஒரு காதல் படத்தில் இடம்பெற்ற வடிவேலு காமெடி காட்சியின் படத்துடன் சோஷியல் மீடியாவில் ஒரு பதிவு ஒன்று வலம் வருகிறது. விக்ரம் படத்தோடு புரமோஷன் எந்த அளவிற்கு நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு அந்தப் பதிவு சிறந்த உதாரணம். சில்லுனு ஒரு காதல் படத்தில் ’உங்க அப்பாவை யாரெல்லாம் அடிச்சிருக்காங்க’ என வடிவேலு மனைவி அவர்களின் பிள்ளைகளிடம் கேட்க ஊரில் இருக்க எல்லாரு பேரையும் சொல்லிகிட்டே இருப்பாங்க பசங்க. அப்படித்தான் விக்ரம் தொடர்பாக யூடியூப்பில் அவ்வளவு பேர் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஒரு படத்தில் பணியாற்றிய உதவி இயக்குநர்கள் படத்தின் புரமோஷனில் இந்த அளவிற்கு பங்கேற்பது இதுதான் முதல்முறையாக இருக்கும்.  தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கமல்ஹாசனின் 'விக்ரம்' திரைப்படத்துக்கான டிக்கெட் புக்கிங் இன்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, ஃபகத் ஃபாசில் ஆகியோரின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் 'விக்ரம்'. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை 'ரெட்...

இணையத்தில் வைரலாகும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண அழைப்பிதழ்! நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில், அவர்களின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவுக்கு அவரது காதலன் விக்னேஷ் சிவனுடன், வருகிற ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிம்புவின் போடா போடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதையடுத்து 2015-ம் ஆண்டு அவர் இயக்கிய 'நானும் ரவுடி தான்’ படத்தின் போது, நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்த நிலையில், தற்போது திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இருவருக்கும் ஜூன் 9-ஆம் தேதி திருப்பதியில் வைத்து திருமணம் நடைபெறும் என்று முதற்கட்ட தகவல் வெளியான நிலையில், தற்போது திருமண இடத்தை அவர்கள் மாற்றி வைத்துள்ளனர். தொடர்புடைய செய்தி: நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் குலதெய்வம் கோயிலில் சாமி தரிசனம் அதன்படி சென்னை, மகாபலிபுரத்தில் இருவரின் திருமணமும் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்களின் திருமண அழைப்பிதழ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. திருமண அழைப்பிதழ், வீடியோ வடிவிலும் வெளியாகி உள்ளது. அதுவும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில், அவர்களின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவுக்கு அவரது காதலன் விக்னேஷ் சிவனுடன், வருகிற ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிம்புவின் போடா போடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதையடுத்து 2015-ம் ஆண்டு அவர் இயக்கிய 'நானும் ரவுடி தான்’ படத்தின் போது, நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்த நிலையில், தற்போது திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இருவருக்கும் ஜூன் 9-ஆம் தேதி திருப்பதியில் வைத்து திருமணம் நடைபெறும் என்று முதற்கட்ட தகவல் வெளியான நிலையில், தற்போது திருமண இடத்தை அவர்கள் மாற்றி வைத்துள்ளனர். தொடர்புடைய செய்தி:  நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் குலதெய்வம் கோயிலில் சாமி தரிசனம் அதன்படி சென்னை, மகாபலிபுரத்தில் இருவரின் திருமணமும் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இந்நி...

8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை! பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்து வெளியாகியுள்ள ‘தாகத்’ திரைப்படத்தின் 8-வது நாளில், 20 டிக்கெட்டுகள் விற்பனையாகி ரூ. 4,420 மட்டுமே வசூலாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். குறிப்பாக கொரோனா காலக் கட்டத்தில் பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலைக்குப் பிறகு, பாலிவுட் திரைப்பட உலகில் வாரிசு ஆதிக்கம் பற்றி இவர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் இந்திய அளவில் வைரலானது. அதன்பிறகு, மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா - காங்கிரஸ் கூட்டணியை விமர்சித்தது, மொழி சர்ச்சையில் தேசிய மொழியாக சமஸ்கிருதம் இருக்கலாம் என்ற கூறியது என எண்ணற்ற சர்ச்சைகளுக்கு வித்திட்டு வருகிறார். சர்ச்சைகளுக்கு இடையே கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டும் கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். இவர் நடிப்பில், கடந்த 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘தாகத்’. அதிரடி ஆக்ஷன் நிறைந்த படமாக உருவாகியிருந்த இந்தப் படத்தை ரஸ்னீஷ் ராசி காய் இயக்கியிருந்தார். 80 முதல் 90 கோடி ரூபாய் வரையிலான பட்ஜெட்டில் உருவான இந்தப் படத்தில் அர்ஜூன் ராம்பல், திவ்யா தத்தா, சஸ்வதா சாட்டர்ஜி ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்களை பெரிதளவில் ஈர்க்காததால், இந்தத்திரைப்படம் வெளியாகி 8 நாள்களில் 3 கோடி ரூபாய் கூட வசூலிக்கவில்லை. குறிப்பாக 8-வது நாளில் இந்திய அளவில் 20 டிக்கெட்டுகள் மட்டுமே விற்று 4,420 ரூபாய் வருவாய் மட்டுமே ஈட்டியுள்ளது திரையுலகை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனால், தயாரிப்பாளர்கள் கடும் நஷ்டமடைந்துள்ளநிலையில், ஓடிடி தளத்தில்கூட வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்கள் தவித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நெட்டிசன்கள், மீம் மூலம் கங்கனா ரனாவத்தை ட்விட்டரில் கலாய்த்து வருகின்றனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்து வெளியாகியுள்ள ‘தாகத்’ திரைப்படத்தின் 8-வது நாளில், 20 டிக்கெட்டுகள் விற்பனையாகி ரூ. 4,420 மட்டுமே வசூலாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். குறிப்பாக கொரோனா காலக் கட்டத்தில் பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலைக்குப் பிறகு, பாலிவுட் திரைப்பட உலகில் வாரிசு ஆதிக்கம் பற்றி இவர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் இந்திய அளவில் வைரலானது. அதன்பிறகு, மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா - காங்கிரஸ் கூட்டணியை விமர்சித்தது, மொழி சர்ச்சையில் தேசிய மொழியாக சமஸ்கிருதம் இருக்கலாம் என்ற கூறியது என எண்ணற்ற சர்ச்சைகளுக்கு வித்திட்டு வருகிறார். சர்ச்சைகளுக்கு இடையே கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டும் கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். இவர் நடிப்பில், கடந்த 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘தாகத்’. அதிரடி ஆக்ஷன் நிறைந்த படமாக உருவாகியிருந்த இந்தப் படத்தை ரஸ்னீஷ் ராசி காய் இயக்கியிருந்தார். 80 முதல் 90 கோடி ரூபாய் வரையிலான பட்ஜெட்டில் உருவான இந்தப் படத்தில் அர...

‘ஹாரர் திரைப்படங்களில் நடிக்க தயங்கினேன்’ - ‘13’ பட செய்தியாளர் சந்திப்பில் ஜி.வி.பிரகாஷ் ஹாரர் திரைப்படங்களில் நடிக்க தயங்கியதாக இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார், கவுதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடித்துள்ள ‘13’ என்ற திரைப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார், இயக்குநர் விவேக், தயாரிப்பாளர் நந்தகோபால் மற்றும் திரைப்படத்தின் நாயகிகள் கலந்து கொண்டனர். ‘13’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம் ஹாரர் கிரைம் திரில்லர் வகையில் எடுக்கப்பட்டு இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர். அதேபோல் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் பேசும் பொழுது, தன்னுடைய முதல் படமான ‘டார்லிங்’ ஹாரர் வகையில் எடுக்கப்பட்டிருந்தது. அதற்குப்பிறகு ஹாரர் திரைப்படங்களை நடிப்பதை தவிர்த்து விட்டேன். தற்போதைய சூழலில் வாரம் ஒரு ஹாரர் திரைப்படம் வெளியாகிறது. அவை அனைத்தும் கிளிஷேவ் வகையில் உள்ளன. எனவே தயாரிப்பாளர் கதை கேட்க வலியுறுத்தியபோது, ஹாரர் திரைப்படங்களில் நடிப்பதில்லை, குறிப்பாக ஹாரர் காமெடி திரைப் படங்களில் நடிக்கவே மாட்டேன் என்று கூறினேன் என தெரிவித்தார். ஆனால் இந்தக் கதையை கேட்டப் பிறகு உடனடியாக நடிக்க சம்மதம் தெரிவித்து நடித்தேன். அந்த அளவுக்கு கதை சுவாரஸ்யமாக இருந்தது என தெரிவித்தார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது. ஜி.வி. பிரகாஷ் கடைசியாக ‘ஐங்கரன்’ என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
ஹாரர் திரைப்படங்களில் நடிக்க தயங்கியதாக இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார், கவுதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடித்துள்ள ‘13’ என்ற திரைப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார், இயக்குநர் விவேக், தயாரிப்பாளர் நந்தகோபால் மற்றும் திரைப்படத்தின் நாயகிகள் கலந்து கொண்டனர். ‘13’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம் ஹாரர் கிரைம் திரில்லர் வகையில் எடுக்கப்பட்டு இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர். அதேபோல் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் பேசும் பொழுது, தன்னுடைய முதல் படமான ‘டார்லிங்’ ஹாரர் வகையில் எடுக்கப்பட்டிருந்தது. அதற்குப்பிறகு ஹாரர் திரைப்படங்களை நடிப்பதை தவிர்த்து விட்டேன். தற்போதைய சூழலில் வாரம் ஒரு ஹாரர் திரைப்படம் வெளியாகிறது. அவை அனைத்தும் கிளிஷேவ் வகையில் உள்ளன. எனவே தயாரிப்பாளர் கதை கேட்க வலியுறுத்தியபோது, ஹாரர் திரைப்படங்களில் நடிப்பதில்லை, குறிப்பாக ஹாரர் காமெடி திரைப் படங்களில் நடிக்கவே மாட்டேன் என்று கூறினேன் என தெரிவித்தார். ஆனால் இந்தக் கதையை கேட்டப் பிறகு உடனடியாக...

வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி? என்பதுகளில் பிறந்தவர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்த நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள புகைப்படம், அவரது ரசிகர்கள் பலருக்கு அதிர்ச்சியையும், சிலருக்கு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 80-களில் தமிழ் சினிமா ரசிகர்களை கட்டி வைத்திருந்த நடிகை குஷ்பு, நதியா ஆகியோர் பல ஆண்டுகளுக்கு பின்னரும் அதே இளமை தோற்றத்துடனே இருந்து வந்தனர். கொரோனாவுக்கு பிறகு உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கிய நடிகை குஷ்பு, அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். உடல் மெலிந்த அவரது புகைப்படங்களை கண்டு அவருக்கு உடல்நல பாதிப்பா? என பலர் விமர்சித்து வந்தனர். இந்நிலையில், 20 கிலோ எடையை குறைத்ததாகவும், தமது உடல்நலம் குறித்து விசாரித்தவர்களுக்கு நன்றி எனவும் கூறி கடந்த ஆண்டு இறுதியில் விமர்சனங்களுக்கு பதில் அளித்து இருந்தார். இந்நிலையில், தமது ட்விட்டர் பக்கத்தில் குஷ்பு வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளத்தில் மீண்டும் பேசு பொருளாகியுள்ளது. சிலர் குஷ்பூவின் புதிய கெட்டப்-க்கு ஆதரவு தெரிவிக்க, பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். உருவக் கேலிக்கு உள்ளான பிரபலங்கள் குறித்த தொகுப்பை பார்க்கலாம்... இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் நகைச்சுவை என்ற பெயரில் உருவ கேலிகள் அதிகரித்து சமுதாயத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. திரைக்கு வெளியேயும் இப்படி உருவக் கேலிக்கு ஆளானவர்களைச் சொல்ல முடியும். உயரம் குறைந்தவர் என சூர்யாவும், ஒல்லியான தேகத்தால் தனுஷும் உருவக் கேலிக்கு ஆளாகியுள்ளனர். நடிகைகளில் உடல் எடை காரணமாக ஸ்ரீப்ரியா, குஷ்பு, ஹன்சிகா, சமீரா ரெட்டி, சனுஷா, சுவாதி, வித்யுலேகா, பிரியங்கா போன்றோரும், நிறம் காரணமாக குணச்சித்திர நடிகை தீபாவும், உருவம் காரணமாக யோகி பாபு, வரலட்சுமி சரத்குமார், தொலைக்காட்சித் தொகுப்பாளர் மணிமேகலையும் கிண்டலுக்கு ஆளாகியுள்ளனர். உலக அழகி ஐஸ்வர்யா ராயையும் உருவக் கேலி விட்டுவைக்கவில்லை என்பதுதான் யதார்த்தமான உண்மை. குண்டாக இருப்பதால் உருவ கேலிக்கு ஆளான குஷ்பு தற்போது உடல் இளைத்து காணப்பட்டாலும், இந்த வயதில் இது தேவையா என்றும் சிலர் விமர்சிப்பது நிச்சயம் நகைச்சுவையல்ல. உருவக் கேலியை சட்டரீதியாக எதிர்கொள்ள இருக்கும் வாய்ப்புகள் குறித்த தகவல்களை பார்க்கலாம். பெண்களை உருவக் கேலி செய்தால், ஐபிசி 509-வது பிரிவு, ஐபிசி 294-வது பிரிவு, ஐபிசி 354-வது பிரிவு உதவுகிறது. இதேபோல் பெண்களை ஆபாசமாக பேசுவது, இழிவாக நடப்பது, ஈவ் டீசிங் செய்தால், ஐபிசி 509-வது பிரிவு, ஐபிசி 294-வது பிரிவு உதவுகிறது. அலுவலகங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு ஐபிசி 354-வது பிரிவு உதவுகிறது. மேலும் விரிவான பல தகவல்களை நியூஸ் 360 டிகிரி வீடியோவில் முழுமையாகக் காணலாம். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
என்பதுகளில் பிறந்தவர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்த நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள புகைப்படம், அவரது ரசிகர்கள் பலருக்கு அதிர்ச்சியையும், சிலருக்கு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 80-களில் தமிழ் சினிமா ரசிகர்களை கட்டி வைத்திருந்த நடிகை குஷ்பு, நதியா ஆகியோர் பல ஆண்டுகளுக்கு பின்னரும் அதே இளமை தோற்றத்துடனே இருந்து வந்தனர். கொரோனாவுக்கு பிறகு உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கிய நடிகை குஷ்பு, அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். உடல் மெலிந்த அவரது புகைப்படங்களை கண்டு அவருக்கு உடல்நல பாதிப்பா? என பலர் விமர்சித்து வந்தனர். இந்நிலையில், 20 கிலோ எடையை குறைத்ததாகவும், தமது உடல்நலம் குறித்து விசாரித்தவர்களுக்கு நன்றி எனவும் கூறி கடந்த ஆண்டு இறுதியில் விமர்சனங்களுக்கு பதில் அளித்து இருந்தார். இந்நிலையில், தமது ட்விட்டர் பக்கத்தில் குஷ்பு வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளத்தில் மீண்டும் பேசு பொருளாகியுள்ளது. சிலர் குஷ்பூவின் புதிய கெட்டப்-க்கு ஆதரவு தெரிவிக்க, பலர் விமர்சனங்களை முன்வைத்து...