’‘எடுக்கற சார்...அவதாரம் எடுக்குற’’ - வெளியானது ’தி லெஜண்ட்’ திரைப்பட ட்ரெய்லர் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் கதாநாயகனாக உருவெடுத்துள்ள ‘ தி லெஜண்ட்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ’தி லெஜண்ட்’ படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழா இன்று மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா, ராய் லட்சுமி, ஷ்ரதா ஸ்ரீநாத், யாஷிகா ஆனந்த், டிம்பிள் ஹயாதி, ஸ்ரீ லீலா, நுபுர் சனான், ஊர்வசி ரௌதாலா ஆகியோர் கலந்துகொண்டனர். பிரம்மாண்டமாக உலகமே ஆச்சர்யப்படுகிற பெரிய சைன்டிஸ்ட் நீங்க... என்று தொடங்குகிறது ட்ரெய்லர். இதன்மூலம் ’தி லெஜண்ட்’ விஞ்ஞானி கதாநாயகனாக இந்த படத்தில் நடித்துள்ளார் என்று தெரிகிறது. ஒரு பெரிய விஞ்ஞானி சிறிய கிராமத்திற்குச் சென்று அங்குள்ள மக்களுக்கு தன்னுடைய படிப்பும் அறிவும் பயன்படவேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் எல்லாப் படங்களிலும் ஹீரோக்களுக்கு எதிரிகள் இருப்பதைப்போல் இந்த படத்திலும் விஞ்ஞானி சரவணனுக்கும் எதிரிகள் இருக்கின்றனர். அவர்கள் சரவணனை எமோஷனல் தாக்குதலுக்கு ஆளாக்க அவரால் இந்திய விஞ்ஞானிகளுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. இது ட்ரெய்லரின் முதல் பாதி. இரண்டாம் பாதியில் நாசரின் ஊக்கப்படுத்துதலுக்குப் பிறகு ‘எடுக்கற சார்...அவதாரம் எடுக்குற’ என்ற வசனத்தோடு சாஃப்ட் சைன்டிஸ்ட் ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுக்கிறார். ’இந்த முறை நான் அடிக்கற அடி மரண அடியாத்தான் இருக்கும்’என்று அடிக்கிற அடியில், ’சரவணன் the most dangerous scientist' என்று வில்லன்களை கதறவிடுகிறார். சேரை தூக்கி அடிக்கும் வேகத்தைப் பார்த்து ’லெஜண்ட் சார் நீங்க’ என்று பாராட்டைப் பெறுவதுடன், ‘ இவங்க எல்லாரும் என்மேல வெச்சிருக்க நம்பிக்கைதான் என்னோட பலம்; அந்த நம்பிக்கை ஒருநாளும் வீண்போகாது’ என்று முடிகிறது. ட்ரெய்லரிலேயே பிரம்மாண்டத்தை வீசியிருக்கிறார் தி லெஜண்ட். மேலும் முதல் மற்றும் இரண்டாம் பாக கதைகள் என்னவாக இருக்கும் என்பதையும் யூகிக்கவைக்கிறது ட்ரெய்லர். சிட்டி ரோபோவை பார்த்ததுபோன்ற சாயலை கொண்டுவந்திருக்கிறார் ’தி லெஜண்ட்’. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக உள்ள இந்த படம் நிறைய மாஸ் மொமன்ட்கள் உள்ளடக்கியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் கதாநாயகனாக உருவெடுத்துள்ள ‘ தி லெஜண்ட்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
’தி லெஜண்ட்’ படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழா இன்று மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா, ராய் லட்சுமி, ஷ்ரதா ஸ்ரீநாத், யாஷிகா ஆனந்த், டிம்பிள் ஹயாதி, ஸ்ரீ லீலா, நுபுர் சனான், ஊர்வசி ரௌதாலா ஆகியோர் கலந்துகொண்டனர். பிரம்மாண்டமாக உலகமே ஆச்சர்யப்படுகிற பெரிய சைன்டிஸ்ட் நீங்க... என்று தொடங்குகிறது ட்ரெய்லர். இதன்மூலம் ’தி லெஜண்ட்’ விஞ்ஞானி கதாநாயகனாக இந்த படத்தில் நடித்துள்ளார் என்று தெரிகிறது.

ஒரு பெரிய விஞ்ஞானி சிறிய கிராமத்திற்குச் சென்று அங்குள்ள மக்களுக்கு தன்னுடைய படிப்பும் அறிவும் பயன்படவேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் எல்லாப் படங்களிலும் ஹீரோக்களுக்கு எதிரிகள் இருப்பதைப்போல் இந்த படத்திலும் விஞ்ஞானி சரவணனுக்கும் எதிரிகள் இருக்கின்றனர். அவர்கள் சரவணனை எமோஷனல் தாக்குதலுக்கு ஆளாக்க அவரால் இந்திய விஞ்ஞானிகளுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. இது ட்ரெய்லரின் முதல் பாதி.

இரண்டாம் பாதியில் நாசரின் ஊக்கப்படுத்துதலுக்குப் பிறகு ‘எடுக்கற சார்...அவதாரம் எடுக்குற’ என்ற வசனத்தோடு சாஃப்ட் சைன்டிஸ்ட் ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுக்கிறார். ’இந்த முறை நான் அடிக்கற அடி மரண அடியாத்தான் இருக்கும்’என்று அடிக்கிற அடியில், ’சரவணன் the most dangerous scientist' என்று வில்லன்களை கதறவிடுகிறார். சேரை தூக்கி அடிக்கும் வேகத்தைப் பார்த்து ’லெஜண்ட் சார் நீங்க’ என்று பாராட்டைப் பெறுவதுடன், ‘ இவங்க எல்லாரும் என்மேல வெச்சிருக்க நம்பிக்கைதான் என்னோட பலம்; அந்த நம்பிக்கை ஒருநாளும் வீண்போகாது’ என்று முடிகிறது. ட்ரெய்லரிலேயே பிரம்மாண்டத்தை வீசியிருக்கிறார் தி லெஜண்ட். மேலும் முதல் மற்றும் இரண்டாம் பாக கதைகள் என்னவாக இருக்கும் என்பதையும் யூகிக்கவைக்கிறது ட்ரெய்லர். சிட்டி ரோபோவை பார்த்ததுபோன்ற சாயலை கொண்டுவந்திருக்கிறார் ’தி லெஜண்ட்’.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக உள்ள இந்த படம் நிறைய மாஸ் மொமன்ட்கள் உள்ளடக்கியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/MQd04zW
via IFTTT
Comments
Post a Comment