"Titanic Rise ஆகி பார்த்ததில்லையே?"- கலையரசனின் 'டைட்டானிக்' ரிலீஸ் தேதி அறிவிப்பு கலையரசன் நடித்துள்ள ‘டைட்டானிக்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது படக்குழு. நடிகர் கலையரசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘குதிரைவால்’ கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அடுத்ததாக, ‘டைட்டானிக்’, இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கியுள்ள ’நட்சத்திரம் நகர்கிறது’ உள்ளிட்டப் படங்கள் கலையரசன் நடிப்பில் வெளியீட்டிற்குத் தயாராய் உள்ளன. இதில், சில வருடங்களாக தயாரிப்பில் உள்ள ‘டைட்டானிக்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தினை ஜானகிராமன் இயக்க சி.வி குமார் தயாரித்துள்ளார். ‘கயல்’ ஆனந்தி, காளி வெங்கட், காயத்ரி, மதுமிதா, ஆஷ்னா உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். மூன்று காதல்களை மையப்படுத்திய இக்கதை சென்னை, கொடைக்கானல், பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டுல்ளது. இப்படத்தின் இயக்குநர் ஜானகிராமன் இயக்குநர் சுதா கொங்கராவின் உதவி இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், படத்தின் வெளியீட்டுத் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு. ’டைட்டானிக்’ வரும் ஜூன் 24 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

கலையரசன் நடித்துள்ள ‘டைட்டானிக்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது படக்குழு.
நடிகர் கலையரசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘குதிரைவால்’ கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அடுத்ததாக, ‘டைட்டானிக்’, இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கியுள்ள ’நட்சத்திரம் நகர்கிறது’ உள்ளிட்டப் படங்கள் கலையரசன் நடிப்பில் வெளியீட்டிற்குத் தயாராய் உள்ளன. இதில், சில வருடங்களாக தயாரிப்பில் உள்ள ‘டைட்டானிக்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
இப்படத்தினை ஜானகிராமன் இயக்க சி.வி குமார் தயாரித்துள்ளார். ‘கயல்’ ஆனந்தி, காளி வெங்கட், காயத்ரி, மதுமிதா, ஆஷ்னா உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். மூன்று காதல்களை மையப்படுத்திய இக்கதை சென்னை, கொடைக்கானல், பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டுல்ளது. இப்படத்தின் இயக்குநர் ஜானகிராமன் இயக்குநர் சுதா கொங்கராவின் உதவி இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், படத்தின் வெளியீட்டுத் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு. ’டைட்டானிக்’ வரும் ஜூன் 24 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/UNR4q7X
via IFTTT
Comments
Post a Comment