Posts

Showing posts from March, 2022

தனுஷின் ‘வாத்தி’ படத்தில் இணைந்த ‘அசுரன்’ பட பிரபலம் - வெளியான தகவல் நடிகர் தனுஷின் ‘வாத்தி’ படத்தில், கருணாஸின் மகன் கென் கருணாஸ் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ‘தோழி ப்ரேமா’, 'மிஸ்டர் மஜ்னு', ‘ரங் தே’ உள்ளிட்டப் படங்களை இயக்கிய வெங்கட் அட்லுரி இயக்கத்தில், தனுஷ் நடித்து வரும் படம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் எடுக்கப்படுகிறது. தமிழில் ‘வாத்தி’ என்றும், தெலுங்கில் ‘சார்’ என்றும் பெயரிடப்பட்டு எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் ‘வாத்தி’ படத்தில் நடிகர் தனுஷுடன், நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏயுமான கருணாஸின் மகன், கென் கருணாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு முன்னதாக வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘அசுரன்’ படத்தில், தனுஷின் இளைய மகனாக நடித்திருந்தார் கென் கருணாஸ். இந்தப்படத்தில் கென் கருணாஸின் நடிப்பு பாராட்டுக்களை பெற்றிருந்தது. தற்போது ‘வாத்தி’ படத்தின் மூலம் இரண்டாவது முறையாக நடிகர் தனுஷுடன், கென் கருணாஸ் இணைந்துள்ளார். நடிகர் தனுஷ் ‘வாத்தி’ படம் மட்டுமின்றி, செல்வராகவனின் ‘நானே வருவேன்’, மித்ரன் ஜவஹரின் ‘திருச்சிற்றம்பலம்’ ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
நடிகர் தனுஷின் ‘வாத்தி’ படத்தில், கருணாஸின் மகன் கென் கருணாஸ் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ‘தோழி ப்ரேமா’, 'மிஸ்டர் மஜ்னு', ‘ரங் தே’ உள்ளிட்டப் படங்களை இயக்கிய வெங்கட் அட்லுரி இயக்கத்தில், தனுஷ் நடித்து வரும் படம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் எடுக்கப்படுகிறது. தமிழில் ‘வாத்தி’ என்றும், தெலுங்கில் ‘சார்’ என்றும் பெயரிடப்பட்டு எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் ‘வாத்தி’ படத்தில் நடிகர் தனுஷுடன், நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏயுமான கருணாஸின் மகன், கென் கருணாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு முன்னதாக வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘அசுரன்’ படத்தில், தனுஷின் இளைய மகனாக நடித்திருந்தார் கென் கருணாஸ். இந்தப்படத்தில் கென் கருணாஸின் நடிப்பு பாராட்டுக்களை பெற்றிருந்தது. தற்போது ‘வாத்தி’ படத்தின் மூலம் இரண்டாவது மு...

‘மன்மத லீலை’ முதல் ’செஃல்பி’ வரை: இந்தவாரம் வெளியாகும் திரைப்படங்கள்! இயக்குநர் வெங்கட் பிரபுவின் ‘மன்மத லீலை’ முதல் ஜி.வி பிரகாஷின் ‘செல்ஃபி’ வரை இந்தவாரம் சில திரைப்படங்கள் வெளியாகின்றன. ’மன்மத லீலை’ ’மாநாடு’ வெற்றிக்குப்பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதால் ‘மன்மத லீலை’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன. குறிப்பாக, படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதால் ஏகோபித்த வெய்ட்டிங்கில் காத்திருக்கிறார்கள் வெங்கட் பிரபு ரசிகர்கள். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் பாய்லர் போல் ரசிகர்களின் மனதை சூடாக்கியது. அசோக் செல்வன் நாயகனாக நடித்துள்ள இப்படத்திற்கு வெங்கட் பிரபுவின் உதவி இயக்குநர் மணிவண்ணன் கதையை எழுதியுள்ளார். வெங்கட் பிரபுவின் 10-வது படமாக உருவாகியுள்ள ’மன்மத லீலை’ நாளை ஏப்ரல் 1 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. ’இடியட்’ கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ‘பார்ட்டி’ படத்திற்குப்பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியாகும் படம் ‘இடியட்’. ‘தில்லுக்கு துட்டு’, ‘தில்லுக்கு துட்டு 2’ என பேய் படங்களாக இயக்கிய ராம் பாலா இயக்குகிறார்.  நிக்கி கல்ராணி நாயகியாக நடித்துள்ள இப்படத்தினை வழக்கமாக நகைச்சுவை ப்ளஸ் பேய் கதைக்களத்திலேயே உருவாக்கி ஹாட்ரிக் வெற்றி கொடுக்க காத்திருக்கிறார் ராம் பாலா. விக்ரம் செல்வா இசையமைத்துள்ள இப்படத்தினை சித்தார்த் ரவிபதி தயாரித்துள்ளார். நாளை ஏப்ரல் 1 ஆம் தேதி ‘இடியட்’ தியேட்டர்களில் வெளியாகிறது. ’செல்ஃபி’ ’ஜெயில்’ படத்திற்குப் பிறகு ஜி.வி பிரகாஷ் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் முதல் படம் ‘செல்ஃபி’. முக்கிய கதாபாத்திரத்தில் கெளதம் மேனன் நடித்துள்ள இப்படத்தில் வர்ஷா பொல்லம்மா நாயகியாக நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையைத்துள்ளார். சபரீஷ் தயாரித்துள்ளார். அறிமுக இயக்குநர் மதிமாறன் இயக்கியிருக்கிறார். ஜி,வி பிரகாஷ் ப்ளஸ் கெளதம் மேனன் நடித்திருந்தாலும் மதிமாறன் இயக்குநர் வெற்றி மாறனின் உதவி இயக்குநர் என்பதால், இப்படத்தையும் சினிமா ரசிகர்கள் உற்றுநோக்கிக் காத்திருக்கிறார்கள்.  இதேபோல், மலேஷியாவில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘பூச்சாண்டி வரான்’ மற்றும் ‘மார்பியஸ்’ உள்ளிட்டப் படங்களும் நாளை வெளியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
இயக்குநர் வெங்கட் பிரபுவின் ‘மன்மத லீலை’ முதல் ஜி.வி பிரகாஷின் ‘செல்ஃபி’ வரை இந்தவாரம் சில திரைப்படங்கள் வெளியாகின்றன. ’மன்மத லீலை’ ’மாநாடு’ வெற்றிக்குப்பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதால் ‘மன்மத லீலை’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன. குறிப்பாக, படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதால் ஏகோபித்த வெய்ட்டிங்கில் காத்திருக்கிறார்கள் வெங்கட் பிரபு ரசிகர்கள். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் பாய்லர் போல் ரசிகர்களின் மனதை சூடாக்கியது. அசோக் செல்வன் நாயகனாக நடித்துள்ள இப்படத்திற்கு வெங்கட் பிரபுவின் உதவி இயக்குநர் மணிவண்ணன் கதையை எழுதியுள்ளார். வெங்கட் பிரபுவின் 10-வது படமாக உருவாகியுள்ள ’மன்மத லீலை’ நாளை ஏப்ரல் 1 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. ’இடியட்’ கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ‘பார்ட்டி’ படத்திற்குப்பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியாகும் படம் ‘இடியட்’. ‘தில்லுக்கு துட்டு’, ‘தில்லுக்கு துட்டு 2’ என பேய் படங்களாக இயக்கிய ராம் பாலா இயக்குகிறார்.  நிக்கி கல்ராணி நாயகியாக நடித்துள்ள இப்படத்தினை வழக்கமாக நக...

‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தால் அதிருப்தி? - ஆலியா பட் விளக்கம் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் குறைவான நேரமே வெளியான காட்சிகளால் பாலிவுட் நடிகை ஆலியா பட், அப்செட்டில் இருப்பதாக தகவல் வெளியானநிலையில், அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் விளக்கம் அளித்துள்ளார். ‘பாகுபலி’யின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படத்தை மெகா பட்ஜெட்டில் 3டி மற்றும் 2டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கியிருந்தார் எஸ்.எஸ். ராஜமௌலி.  1920-ம் ஆண்டு காலக்கட்டத்தில், ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய தெலுங்கு மாநிலத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களான, அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட உருவான கற்பனைக் கதைதான் ‘ரத்தம் ரணம் ரௌத்தரம்’ எனப்படும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம். இந்தப் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன், ரே ஸ்டீவன்சன், ஒலிவியா மோரிஸ், சமுத்திரகனி, ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டிருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு, மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே, ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் கடந்த 25-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. படம் வெளியான முதல்நாளில் மட்டும், மொத்தம் ரூ. 257.15 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது. தொடர்ந்து இந்தப்படம் வசூல் வேட்டை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், ஆலியா பட்டிற்கு தென்னிந்திய திரையுலகில் 'ஆர்.ஆர்.ஆர்.' முதல் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. ராம் சரணின் காதலியாக சீதா கதாபாத்திரத்தில் ஆலியா பட் நடித்திருந்தார். ஆனால், 3 மணி நேரத்துக்கும் அதிகமான காட்சிகளைக் கொண்ட படத்தில், ஆலியா பட் தொடர்பான காட்சிகள் சொற்ப நிமிடங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தது, அவருடைய ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால், ஆலியா பட் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்த ‘ஆர்.ஆர்.ஆர்.’ படம் தொடர்பான அனைத்து பதிவுகளையும் நீக்கிவிட்டார் என்றும், இயக்குநர் ராஜமௌலியை பின்தொடர்பவர்கள் பட்டியலில் இருந்தும் நீக்கியுள்ளார் என்றும், அதே நேரத்தில், நடிகர் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரை, அவர் இன்னும் பின்தொடர்கிறார் எனவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆலியா பட் விளக்கமளித்துள்ளார். அதில், “படக்குழு மீது உள்ள அதிருப்தியால், ‘ஆர்.ஆர்.ஆர்.’ படம் தொடர்பான பதிவுகளை, எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நான் நீக்கிவிட்டதாக தகவல்கள் பரவியதை அறிந்தேன். இன்ஸ்டாகிராமில் தற்செயலாக நடக்கும் விஷயங்களை வைத்து, அனுமானத்தின் பேரில் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று அனைவரையும் நான் மனதார கேட்டுக்கொள்கிறேன். சீரற்ற முறையில் இருக்கும் எனது இன்ஸ்டாகிராம் பதிவுகளை, நான் எப்போதும் அடிக்கடி சீரமைத்துக்கொண்டே இருப்பேன். ‘ஆர்.ஆர்.ஆர்.’ போன்ற பிரம்மாண்டப் படங்களில், நானும் நடித்துள்ளேன் என்பதை நினைத்து, எப்போதும் பெருமைப்படுகிறேன். சீதா கதாபாத்திரத்தில் நடிப்பதை நான் மிகவும் விரும்பினேன். ராஜமௌலி சார் இயக்கிய முறை எனக்குப் பிடித்திருந்தது. தாரக் மற்றும் சரண் ஆகியோருடன் பணிபுரிந்தது எனக்குப் பிடித்திருந்தது. இந்தப் படத்தில் நடந்த சின்ன சின்ன விஷயங்கள்கூட, எனக்கு சிறப்பான அனுபவத்தை கொடுத்தது. நான் கவலைப்படுவதற்கும், இந்த விஷயங்களை தெளிவுப்படுத்துவதற்கும் ஒரே காரணம் என்னவெனில், ராஜமௌலி மற்றும் படக்குழுவினர், இந்த அழகான படத்தை உயிர்ப்பிக்க பல ஆண்டுகளாக, தங்களது ஆற்றலையும், முயற்சியையும் கொடுத்து உழைத்துள்ளனர். அதனால் இந்தப் படத்தைப் பற்றியும், இந்தப் படத்தில் எனது அனுபவத்தை பற்றி வரும் தவறான தகவல்கள் அனைத்தையும் மறுக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் குறைவான நேரமே வெளியான காட்சிகளால் பாலிவுட் நடிகை ஆலியா பட், அப்செட்டில் இருப்பதாக தகவல் வெளியானநிலையில், அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் விளக்கம் அளித்துள்ளார். ‘பாகுபலி’ யின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படத்தை மெகா பட்ஜெட்டில் 3டி மற்றும் 2டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கியிருந்தார் எஸ்.எஸ். ராஜமௌலி.  1920-ம் ஆண்டு காலக்கட்டத்தில், ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய தெலுங்கு மாநிலத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களான, அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட உருவான கற்பனைக் கதைதான் ‘ரத்தம் ரணம் ரௌத்தரம்’ எனப்படும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம். இந்தப் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன், ரே ஸ்டீவன்சன், ஒலிவியா மோரிஸ், சமுத்திரகனி, ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டிருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு, மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே, ‘ஆர்...

’கடைசியில் விஜய்’: ‘பீஸ்ட்’ புகைப்படங்களை ஒவ்வொன்றாக இறக்கி தெறிக்கவிடும் படக்குழு! ’பீஸ்ட்’ படத்தின் புதிய புகைப்படத்தினைப் பகிர்ந்துள்ளது படக்குழு. ’கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ வெற்றிக்குப்பிறகு விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தினை இயக்கி முடித்துள்ளார் நெல்சன் திலீப்குமார். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ’பீஸ்ட்’ வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி தியேட்டர்களில் உலகம் முழுக்க வெளியாகவுள்ளது. இப்படத்தின் ’அரபிக்குத்து’, ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடல்கள் வைரல் ஹிட் அடித்துள்ளன. தமிழில் இப்படத்தினை, உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸும் தெலுங்கில் ’விஜய் 66’ தயாரிப்பாளர் தில் ராஜுவும் கைப்பற்றியுள்ளனர். வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி மாலை 6 மணிக்கு ‘பீஸ்ட்’ ட்ரெய்லர் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ‘பீஸ்ட்’ வெளியாக இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில், விஜய் மற்றும் படக்குழுவினரின் கவனம் ஈர்க்கும் புகைப்படங்களை ஒவ்வொன்றாக வெளியிட்டு ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்து வருகிறது தயாரிப்பு நிறுவனம். அப்படித்தான், மால் போல் இருக்கும் இடத்தில் பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், சதீஷ், சிவா அரவிந்த், அருண் அலேக்சாண்டர் உள்ளிட்டோர் வரிசையாக ஒளிந்துகொண்டு பார்க்க அவர்களுக்குப் பின்னால் கடைசியில் விஜய் நின்றிருக்கும் புதிய படத்தைப் பகிர்ந்து ’ட்ரெய்லருக்காக நாங்களும் காத்திருக்கிறோம்’ என்று அப்டேட் செய்திருக்கிறார்கள் . இதுவரை படக்குழுவினர் ‘பீஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகெண்ட் லுக் தவிர்த்து ஐந்தாறு புகைப்படங்களைத்தான் வெளியிட்டுள்ளார்கள். தற்போது, படம் வெளியாக இரண்டு வாரங்களே உள்ளதால் படக்குழுவினர் பல தரமான புகைப்படங்களை இன்னும் இறக்குவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
’பீஸ்ட்’ படத்தின் புதிய புகைப்படத்தினைப் பகிர்ந்துள்ளது படக்குழு. ’கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ வெற்றிக்குப்பிறகு விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தினை இயக்கி முடித்துள்ளார் நெல்சன் திலீப்குமார். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ’பீஸ்ட்’ வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி தியேட்டர்களில் உலகம் முழுக்க வெளியாகவுள்ளது. இப்படத்தின் ’அரபிக்குத்து’, ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடல்கள் வைரல் ஹிட் அடித்துள்ளன. தமிழில் இப்படத்தினை, உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸும் தெலுங்கில் ’விஜய் 66’ தயாரிப்பாளர் தில் ராஜுவும் கைப்பற்றியுள்ளனர். வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி மாலை 6 மணிக்கு ‘பீஸ்ட்’ ட்ரெய்லர் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ‘பீஸ்ட்’ வெளியாக இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில், விஜய் மற்றும் படக்குழுவினரின் கவனம் ஈர்க்கும் புகைப்படங்களை ஒவ்வொன்றாக வெளியிட்டு ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்து வருகிறது தயாரிப்பு நிறுவனம். அப்படித்தான், மால் போல் இருக்கும் இடத்தில் பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், சதீஷ், சிவா அரவிந்த், அருண் அலேக்சாண்டர் உள்ள...

‘கேஜிஎஃப் 2’ படத்தின் ரன்னிங் டைம், சென்சார் குறித்து வெளியான தகவல் ‘கேஜிஎஃப்: சாப்டர் 2’ படத்தின் தணிக்கை சான்றிதழ் மற்றும் ரன்னிங் நேரம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். நடிகர் யாஷ் நடிப்பில், இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், கடந்த 2018-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான திரைப்படம் ‘கேஜிஎஃப்: சாப்டர் 1’. வசூலிலும் சாதனை புரிந்தநிலையில், இந்தக் கூட்டணி ‘கேஜிஎஃப்: சாப்டர் 2’ படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக, குறிப்பாக பான் இந்தியா படமாக உருவாக்கி வந்தது. கொரோனா காலமாக படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டு வந்தநிலையில், வரும் ஏப்ரல் 14-ம் தேதி ‘கேஜிஎஃப்: சாப்டர் 2’ படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படமும் முதல்பாகத்தைவிட வசூலில் பெரும் சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ‘கேஜிஎஃப்: சாப்டர் 2’ படத்தின் தணிக்கை சான்றிதழ் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, பீரியட் ஆக்சன் படமான இப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ரன்னிங் நேரத்தைப் பொறுத்தவரை 2 மணி நேரம் 48 நிமிடங்கள் மற்றும் 06 விநாடிகளை இந்தப்படம் கொண்டுள்ளது. ‘கேஜிஎஃப்: சாப்டர் 1’ படம், 2 மணி நேரம் 35 நிமிடங்களைக் கொண்டிருந்த நிலையில், இரண்டாம் பாகம் சுமார் 13 நிமிடங்கள் கூடுதலாக உள்ளது. ‘கேஜிஎஃப்: சாப்டர் 2’ படத்தில் சஞ்சய் தத், ரவீணா தாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், ஆனந்த் நாக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
‘கேஜிஎஃப்: சாப்டர் 2’ படத்தின் தணிக்கை சான்றிதழ் மற்றும் ரன்னிங் நேரம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். நடிகர் யாஷ் நடிப்பில், இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், கடந்த 2018-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான திரைப்படம் ‘கேஜிஎஃப்: சாப்டர் 1’. வசூலிலும் சாதனை புரிந்தநிலையில், இந்தக் கூட்டணி ‘கேஜிஎஃப்: சாப்டர் 2’ படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக, குறிப்பாக பான் இந்தியா படமாக உருவாக்கி வந்தது. கொரோனா காலமாக படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டு வந்தநிலையில், வரும் ஏப்ரல் 14-ம் தேதி ‘கேஜிஎஃப்: சாப்டர் 2’ படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படமும் முதல்பாகத்தைவிட வசூலில் பெரும் சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ‘கேஜிஎஃப்: சாப்டர் 2’ படத்தின் தணிக்கை சான்றிதழ் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, பீரியட் ஆக்சன் படமான இப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ரன்னிங் நேரத்தைப் பொறுத்தவரை 2 மணி நேரம் 48 நிமிடங்கள் மற்றும் 06 விநாடிகளை இந்தப்படம் கொண்டுள்ளது.  ‘கேஜிஎஃப்: சாப்டர் 1’ படம், 2 மணி நேரம் 35 நிமிடங...

இரண்டு ஓடிடி தளங்களில் வெளியாகும் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’: ரிலீஸ் தேதி அறிவிப்பு நடிகர் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ இரண்டு ஓடிடி தளங்களில் வெளியாகிறது. 'ஜெய் பீம்’ வெற்றிக்குப்பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ கடந்த மார்ச் 10 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. நாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். இமான் இசையமைத்திருக்கிறார். சத்யராஜ், வினய், சரண்யா பொன்வண்ணன், சூரி, புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்குப்பிறகு தியேட்டரில் வெளியான சூர்யா படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திற்கு இருந்தது. அதனை  நிறைவேற்றும் விதமாகவே சூர்யா ரசிகர்கள் இதயங்களில் இடம்பிடித்து பாராட்டுக்களைக் குவித்தது. குறிப்பாக, பெண்ணியவாதிகள் ’எதற்கும் துணிந்தவன்’ பெண்களுக்கு எதற்கும் துணியும் துணிச்சலைக் கொடுத்தது என்று கொண்டாடினார்கள். அதேசமயம், சினிமா விமர்சகர்கள் இப்படம் தங்களை ஈர்க்கவில்லை என்று கலவனையான விமர்சங்களையும் கொடுத்தனர். ‘ஜெய் பீம்’ படத்திற்கு வந்த எதிர்ப்பால் பல மாவட்டங்களில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திற்கு பகீரங்கமாகவே மிரட்டல்கள் வந்தன. இதனால், பல தியேட்டர்கள் கூட்டம் இல்லாமல் காட்சியளித்தது. ஆனால், அவர்களால் ஓடிடியில் காண்பவர்களை தடை செய்ய முடியாது அல்லவா? என்று கொண்டாடக் காத்திருக்கிறார்கள் சூர்யா ரசிகர்கள். சூப்பர்/சுமார் என்று விமர்சனங்கள் வந்தாலும் ஆண்களுக்கும் சமூகத்திற்கும் நல்ல விஷயங்களைக் கொடுத்திருக்கிறோம் என்றே பேட்டிகளில் குறிப்பிட்டு வந்தனர் படக்குழுவினர்.  இந்த நிலையில், ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் ஓடிடி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் கைப்பற்றியிருந்தது. அதேபோல, ‘எதற்கும் துணிவந்தவன்’ சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்திலும் நெட்ஃப்ளிக்ஸிலும் வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி வெளியாகிறது. இதனை சன் நெக்ஸ்ட் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இன்னும் நெட்ஃப்ளிக்ஸில் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
நடிகர் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ இரண்டு ஓடிடி தளங்களில் வெளியாகிறது. 'ஜெய் பீம்’ வெற்றிக்குப்பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ கடந்த மார்ச் 10 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. நாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். இமான் இசையமைத்திருக்கிறார். சத்யராஜ், வினய், சரண்யா பொன்வண்ணன், சூரி, புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்குப்பிறகு தியேட்டரில் வெளியான சூர்யா படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திற்கு இருந்தது. அதனை  நிறைவேற்றும் விதமாகவே சூர்யா ரசிகர்கள் இதயங்களில் இடம்பிடித்து பாராட்டுக்களைக் குவித்தது. குறிப்பாக, பெண்ணியவாதிகள் ’எதற்கும் துணிந்தவன்’ பெண்களுக்கு எதற்கும் துணியும் துணிச்சலைக் கொடுத்தது என்று கொண்டாடினார்கள். அதேசமயம், சினிமா விமர்சகர்கள் இப்படம் தங்களை ஈர்க்கவில்லை என்று கலவனையான விமர்சங்களையும் கொடுத்தனர். ‘ஜெய் பீம்’ படத்திற்கு வந்த எதிர்ப்பால் பல மாவட்டங்களில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திற்கு பகீரங்கமாகவே மிரட்டல்கள் வந்தன. இதனால், பல தியேட்டர்கள் கூட்டம...

பல உண்மைகளை மறைத்துள்ளார் சிவகார்த்திகேயன் - ஞானவேல் ராஜா பதில் மனு பல உண்மைகளை மறைத்து நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பதில் மனு தாக்கல் செய்துள்ளார். மிஸ்டர் லோக்கல் படத்திற்காக தமக்கு பேசப்பட்ட சம்பளத்தில் நிலுவையில் உள்ள 4 கோடி ரூபாய் சம்பளத்தை வழங்க தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு உத்தரவிடக்கோரி நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஞானவேல்ராஜா தயாரித்து வரும் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ரிபெல், விக்ரம் நடிக்கும் சீயான் 61, சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிக்கும் பத்து தல ஆகிய படங்களில் மேற்கொண்டு முதலீடுகளை செய்வதற்கும், திரையரங்க வெளியீடு மற்றும் ஓடிடி வெளியீடு ஆகியவற்றின் விநியோக உரிமைகளை உறுதி செய்வதற்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பதற்காக ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு 10 லட்சம் ரூபாய் முன்பணமாக கொடுக்கப்பட்டு 2013ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டதாகவும்,  படம் எடுக்க முடியாத நிலையில், மீண்டும் 2018ம் ஆண்டு புது ஒப்பந்தம் போடப்பட்டு சிவகார்த்திகேயனுக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு 12 கோடியே 78 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் மிஸ்டர் லோக்கல் படத்தின் கதை தனக்கு பிடிக்கவில்லை எனவும், அந்த படத்தின் இயக்குநராக ராஜேஷ் தான் வேண்டுமென சிவகார்த்திகேயன் கட்டாயப்படுத்தியதால் தான் அந்த படம் தயாரிக்கப்பட்டதாகவும், அந்த படத்தால் தமக்கு 20 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளார். வரிகளுடன் சேர்த்து மீதம் 2 கோடியே 40லட்சம் ரூபாயை  வழங்க வேண்டுமென நடிகர் சிவகார்த்திகேயன், இரக்கமின்றி தனக்கு அழுத்தம் தந்ததாகவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியுள்ளார். மிஸ்டர் லோக்கல் படத்தில் ஏற்பட்ட நஷ்டத்திற்காக விநியோகஸ்தர்கள் தரப்பில் நெருக்கடி கொடுத்த நிலையில், 2 கோடியே 40 லட்சம் தர வேண்டாம் எனவும், வினியோகஸ்தர்களை  பிரச்னையில் சிக்க வைத்து விட வேண்டாம் என  சிவகார்த்திகேயன்  கூறியதாகவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பதில்மனுவில் தெரிவித்துள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு பின்னர், உண்மை தகவல்களை மறைத்து  தற்போது  நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்துள்ள மனுவை  அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கோரியுள்ளார். ஞானவேல்ராஜா தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் மூலம் பதில் மனு தாக்கல் செய்யப்பட்ட இந்த  வழக்கின் விசாரணையை ஏப்ரல் 7ஆம் தேதிக்கு நீதிபதி எம்.சுந்தர் தள்ளிவைத்துள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
பல உண்மைகளை மறைத்து நடிகர் சிவகார்த்திகேயன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பதில் மனு தாக்கல் செய்துள்ளார். மிஸ்டர் லோக்கல் படத்திற்காக தமக்கு பேசப்பட்ட சம்பளத்தில் நிலுவையில் உள்ள 4 கோடி ரூபாய் சம்பளத்தை வழங்க தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு உத்தரவிடக்கோரி நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஞானவேல்ராஜா தயாரித்து வரும் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ரிபெல், விக்ரம் நடிக்கும் சீயான் 61, சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிக்கும் பத்து தல ஆகிய படங்களில் மேற்கொண்டு முதலீடுகளை செய்வதற்கும், திரையரங்க வெளியீடு மற்றும் ஓடிடி வெளியீடு ஆகியவற்றின் விநியோக உரிமைகளை உறுதி செய்வதற்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பதற்காக ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு 10 லட்சம் ரூபாய் முன்பணமாக கொடுக்கப்பட்டு 2013ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்...

'சின்ன படங்களுக்கு மக்கள் வர தயங்குகிறார்கள்' - 'டாணாக்காரன்' பட தயாரிப்பாளர் பெரிய படங்களை தவிர சின்ன படங்களுக்கு மக்கள் வரமுடியாத சூழல் உள்ளது, கொரோனாவுக்கு பிறகு சின்ன படங்களுக்கு மக்கள் வர தயங்குகிறார்கள் என்று டாணாக்காரன் பட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறியுள்ளார் விக்ரம் பிரபு நடிப்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் அறிமுக இயக்குனர் தமிழ் இயக்கியுள்ள டாணாக்காரன் திரைப்படம் வரும் 8ஆம் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது. இந்நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய இயக்குனர் தமிழ் , டாணாக்காரன் படத்தில்  காவலர்களின் பயிற்சி முகாமில் நடைபெறக்கூடிய உண்மை சம்பவங்களை படமாக்கி இருப்பதாக கூறினர். குறிப்பாக, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடந்த நிகழ்வுகளை ஆய்வு செய்து படமாக்கியிருப்பதாக தமிழ் தெரிவித்தார்.  அத்துடன் காவலர்கள் மீதான மக்கள் பார்வையை மாற்ற இந்த படம் ஒரு தொடக்கமாகவும்,  விவாதத்தை தொடங்கி வைக்கும் படமாகவும் இருக்கும் என கூறினார். தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இந்தப் படத்தை மொழிகளை கடந்து அனைத்து மாநில மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என நினைத்தோம். அத்துடன் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு, பெரிய படங்களுக்கு மட்டும் செல்ல மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர், சிறிய படங்களுக்கு வருவதை தவிர்க்கின்றனர், இது கடந்த ஆறுமாதமாக நிகழ்கிறது. இதன் காரணமாகவே டாணாக்காரன் படத்தை ஓ.டி.டி மூலம் மக்களை கொண்டு சேர்க்க வேண்டும் என நினைத்தோம் என கூறினார். அதேபோல் இந்தப் படம் காவலர்கள் மீது பரிதாபம் கலந்த மரியாதையை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
பெரிய படங்களை தவிர சின்ன படங்களுக்கு மக்கள் வரமுடியாத சூழல் உள்ளது, கொரோனாவுக்கு பிறகு சின்ன படங்களுக்கு மக்கள் வர தயங்குகிறார்கள் என்று டாணாக்காரன் பட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறியுள்ளார் விக்ரம் பிரபு நடிப்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் அறிமுக இயக்குனர் தமிழ் இயக்கியுள்ள டாணாக்காரன் திரைப்படம் வரும் 8ஆம் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது. இந்நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய இயக்குனர் தமிழ் , டாணாக்காரன் படத்தில்  காவலர்களின் பயிற்சி முகாமில் நடைபெறக்கூடிய உண்மை சம்பவங்களை படமாக்கி இருப்பதாக கூறினர். குறிப்பாக, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடந்த நிகழ்வுகளை ஆய்வு செய்து படமாக்கியிருப்பதாக தமிழ் தெரிவித்தார்.  அத்துடன் காவலர்கள் மீதான மக்கள் பார்வையை மாற்ற இந்த படம் ஒரு தொடக்கமாகவும்,  விவாதத்தை தொடங்கி வைக்கும் படமாகவும் இருக்கும் என கூறினார். தொடர்ந்து பேசிய தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இந்தப் படத்தை மொழிகளை கடந்து அனைத்து மாநில மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என நினைத்தோம். அத்துடன் கொரோனா காலகட்டத்திற்கு பி...

விஜய்.. கமல்ஹாசன் அடுத்தது?: முன்னணி நடிகர்களின் படங்களைக் கைப்பற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தினை ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. நடிகர் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ படங்களைத் தயாரிப்பதோடு முன்னணி நடிகர்களின் படங்களையும் கைப்பற்றி வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்’, பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’, ராஜமெளலியின் ( ‘ஆர்ஆர்ஆர்’ மூன்று இடங்களில் மட்டும்) உள்ளிட்டப் படங்களை கைப்பற்றி வெளியிட்டது. வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகும் விஜய்யின் ‘பீஸ்ட்’, ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படங்களின் தமிழக ரெட் ஜெயன்ட் மூவிஸ்தான் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் தமிழக உரிமையையும் கைப்பற்றியுள்ளதகாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவிருக்கிறார்கள். ‘விக்ரம்’ வரும் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகிறது. அன்றுதான் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்துவரும் ‘மாமன்னன்’ படத்தினை ரெட் ஜெயன்ட் தான் தயாரிக்கிறது. இதற்கு முன்னதாக, தமிழ் சினிமாவில் ஹாட்ரிக் வெற்றி கொடுத்த இயக்குநர்களில் லோகேஷ் கனகராஜும் ஒருவர். அவரின் ’மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் அடித்து வசூலைக் குவித்ததால் இயக்குநர் நான்காவதாக கமல்ஹாசனை இயக்கும் ‘விக்ரம்’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. கோரோனா சூழலிலும் மக்களை தியேட்டர் நோக்கி வரவைத்தது ‘மாஸ்டர்’. அதன் வெற்றிக்குப்பிறகு விஜய் சேதுபதி - அனிருத்துடன் மீண்டும் ’விக்ரம்’மில் கைக்கோர்த்துள்ளார் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் இப்படத்தில் ஃபகத் ஃபாசிலும் நடிப்பதால் மலையாள ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். காளிதாஸ் ஜெயராம், நரேன், ’பிக்பாஸ்’ ஷிவானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தினை ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. நடிகர் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ படங்களைத் தயாரிப்பதோடு முன்னணி நடிகர்களின் படங்களையும் கைப்பற்றி வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்’, பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’, ராஜமெளலியின் ( ‘ஆர்ஆர்ஆர்’ மூன்று இடங்களில் மட்டும்) உள்ளிட்டப் படங்களை கைப்பற்றி வெளியிட்டது. வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகும் விஜய்யின் ‘பீஸ்ட்’, ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படங்களின் தமிழக ரெட் ஜெயன்ட் மூவிஸ்தான் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் தமிழக உரிமையையும் கைப்பற்றியுள்ளதகாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவிருக்கிறார்கள். ‘விக்ரம்’ வரும் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகிறது. அன்றுதான் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்துவரும் ‘மாமன்னன்’ படத்...

’நடிப்புடன் சேர்ந்து, இந்த வேலையையும் நடிகர் யாஷ் செய்தார்’ - இயக்குநர் அளித்த தகவல் ‘கேஜிஎஃப்: சாப்டர் 2’ திரைப்படத்தில் கதாநாயகன் யாஷ், தனது கதாபாத்திரத்திற்கான பெரும்பாலான வசனங்களை அவரே சொந்தமாக எழுதியதாக, இயக்குநர் பிரசாந்த் நீல் தெரிவித்துள்ளார். நடிகர் யாஷ் நடிப்பில், இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், கடந்த 2018-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான திரைப்படம் ‘கேஜிஎஃப்: சாப்டர் 1’. இந்தத் திரைப்படத்தின் பிரம்மாண்டம் கன்னட திரையுலகை மட்டுமின்றி, ஒட்டுமொத்த சினிமா உலகையே திரும்பி பார்க்க வைத்தது. இந்தப் படத்தில் ராக்கி கதாபாத்திரத்தில் நடிகர் யாஷின் நடிப்பு மிகப் பெரிய அளவில் பேசப்பட்டதுடன், அவருக்கு பான் இந்தியா அளவில் ரசிகர்களை உருவாக்கிக் கொடுத்தது. வசூலிலும் சாதனை புரிந்தநிலையில், இந்தக் கூட்டணி ‘கேஜிஎஃப்: சாப்டர் 2’ படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக, குறிப்பாக பான் இந்தியா படமாக உருவாக்கி வந்தது. கொரோனா காலமாக படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டு வந்தநிலையில், வரும் ஏப்ரல் 14-ம் தேதி ‘கேஜிஎஃப்: சாப்டர் 2’ படம் திரையரங்குகளில் வெளியாகிறது. ‘ராதே ஷ்யாம்’, ‘ஆர்.ஆர்.ஆர்.’ போன்ற படங்களைப் போல், இந்தப் படத்திற்கும் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதற்கிடையில், கடந்த 27-ம் தேதி ‘கேஜிஎஃப்: சாப்டர் 2’ படத்தின் ட்ரெயிலர் பிரம்மாண்டாக வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனிடையே, ‘கேஜிஎஃப்: சாப்டர் 2’ படத்தில், தனது கதாபாத்திரத்தின் பெரும்பாலான வசனங்களை நடிகர் யாஷ் சொந்தமாக எழுதியுள்ளதாக, இயக்குநர் பிரசாந்த் நீல் தெரிவித்துள்ளார். சொல்லப்போனால், ராக்கி காதாபாத்திரமாகவே மாறி, அற்கான வசனங்களை அவர் செதுக்கியுள்ளார் என்றும் பிரசாந்த் நீல் கூறியுள்ளார். ‘கேஜிஎஃப்: சாப்டர் 2’ படத்தின் ட்ரெயிலர் யூ- ட்யூப்பில் சாதனை புரிந்து வரும் நிலையில், ட்ரெயிலரில் நடிகர் யாஷ் அறிமுகமாகும் காட்சி மற்றும் "வன்முறை... வன்முறை... வன்முறை, எனக்குப் பிடிக்கவில்லை, வன்முறையை தவிர்க்கிறேன்.... ஆனால், வன்முறைக்கு என்னைப் பிடித்துள்ளது, என்னால் தவிர்க்க முடியாது" என்ற டயலாக் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. தற்போது அந்த டயாலாக்கை வைத்து, “சாதனை... சாதனை... சாதனை..., ராக்கி சாதனையை விரும்பவில்லை, சாதனையை தவிர்க்கிறார், ஆனால், சாதனைக்கு ராக்கியை பிடித்துள்ளது, அதனை அவரால் தவிர்க்க முடியாது. மொத்தமாக 24 மணிநேரத்தில் 109+ மில்லியன் பார்வையாளர்கள், கன்னடத்தில் 18 மில்லியன் பார்வையாளர்கள், தெலுங்கில் 20 மில்லியன் பார்வையாளர்கள், இந்தியில் 51 மில்லியன் பார்வையாளர்கள், தமிழில் 12 மில்லியன் பார்வையாளர்கள், மலையாளத்தில் 8 மில்லியன் பார்வையாளர்கள்” என்று படக்குழு குறிப்பிட்டுள்ளது. ‘கேஜிஎஃப்: சாப்டர் 2’ படத்தில் சஞ்சய் தத், ரவீணா தாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், ஆனந்த் நாக் உள்ளிட்ட பல நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் பிராசாந்த் நீல் அடுத்ததாக, பிரபாஸை வைத்து ‘சலார்’ படத்தை இயக்கி வருகிறார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
‘கேஜிஎஃப்: சாப்டர் 2’ திரைப்படத்தில் கதாநாயகன் யாஷ், தனது கதாபாத்திரத்திற்கான பெரும்பாலான வசனங்களை அவரே சொந்தமாக எழுதியதாக, இயக்குநர் பிரசாந்த் நீல் தெரிவித்துள்ளார். நடிகர் யாஷ் நடிப்பில், இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், கடந்த 2018-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான திரைப்படம் ‘கேஜிஎஃப்: சாப்டர் 1’. இந்தத் திரைப்படத்தின் பிரம்மாண்டம் கன்னட திரையுலகை மட்டுமின்றி, ஒட்டுமொத்த சினிமா உலகையே திரும்பி பார்க்க வைத்தது. இந்தப் படத்தில் ராக்கி கதாபாத்திரத்தில் நடிகர் யாஷின் நடிப்பு மிகப் பெரிய அளவில் பேசப்பட்டதுடன், அவருக்கு பான் இந்தியா அளவில் ரசிகர்களை உருவாக்கிக் கொடுத்தது. வசூலிலும் சாதனை புரிந்தநிலையில், இந்தக் கூட்டணி ‘கேஜிஎஃப்: சாப்டர் 2’ படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக, குறிப்பாக பான் இந்தியா படமாக உருவாக்கி வந்தது. கொரோனா காலமாக படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டு வந்தநிலையில், வரும் ஏப்ரல் 14-ம் தேதி ‘கேஜிஎஃப்: சாப்டர் 2’ படம் திரையரங்குகளில் வெளியாகிறது. ‘ராதே ஷ்யாம்’, ‘ஆர்.ஆர்.ஆர்.’ போன்ற படங்களைப் போல், இந்தப் படத்திற்கும் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வரு...

மகளின் வரவேற்பு நிகழ்ச்சி - தன்னை அறிமுகப்படுத்தியவரை முதல் ஆளாக அழைத்த இயக்குநர் ஷங்கர் தனது மகள் ஐஸ்வர்யா சங்கரின் திருமண வரவேற்பு விழா, சென்னையில் மே மாதம் நடைபெறுவதை முன்னிட்டு, பல்வேறு பிரபலங்களை இயக்குனர் ஷங்கர் சந்தித்து வரவேற்பு அழைப்பிதழ் வழங்கி வருகின்றார். கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில், ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடிப்பில் கடந்த 1993-ம் ஆண்டு வெளியாகி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றப் படம் ‘ஜென்டில்மேன்’. இந்தப் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமானவர் ஷங்கர். இதனைத் தொடர்ந்து, ‘காதலன்’, ’முதல்வன்’, ’இந்தியன்’, ’எந்திரன்’, ’அந்நியன்’ உள்பட பல வெற்றிப் படங்களை பிரம்மாண்ட முறையில் தந்து, தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநராக தற்போது வலம் வருகிறார் இயக்குநர் ஷங்கர். இவரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும், கிரிக்கெட் வீரர் ரோஹித் என்பவருக்கும், கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி, உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தியிருந்தார். அப்போது கொரோனா 2-வது அலை காரணமாக, திரையுலக பிரபலங்களை, இயக்குநர் ஷங்கர் அழைக்கவில்லை. இதையடுத்து தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் விளக்கப்பட்டு இருப்பதால், மே 1-ம் தேதி, ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில், ஐஸ்வர்யா சங்கரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த, இயக்குநர் ஷங்கரின் குடும்பம் திட்டமிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, முதல்கட்டமாக தன்னை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனை சந்தித்து, இயக்குநர் ஷங்கர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வரவேற்பு அழைப்பிதழ் வழங்கி ஆசி பெற்றனர். இவரைத் தொடர்ந்து சினிமா துறையின் நட்சத்திரங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களை நேரில் சந்தித்து, அழைப்பிதழ் வழங்கி, இயக்குநர் ஷங்கர் அழைத்து வருகிறார். ஷங்கரின் இளைய மகள் மருத்துவரான அதிதி ஷங்கர், நடிகர் கார்த்தியின் ‘விருமன்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இதேபோல், பல ஆண்டுகளுக்குப் பிறகு, கே.டி.குஞ்சுமோன் ‘ஜென்டில்மேன் 2’ படத்தை தயாரிக்க உள்ளார். இந்தப் படத்தில், மலையாள நடிகை நயன்தாரா சக்கரவர்த்தி கதாநாயகியாக நடிக்கிறார். எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். இந்தப் படத்தில் கதாநாயகர், இயக்குநர் உள்பட தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இயக்குநர் ஷங்கருக்கும், கே.டி. குஞ்சுமோனுக்கும் இடையே, ஒரு படத்தை இயக்கியபோது ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாகவே, அடுத்தடுத்து அவர்கள் கூட்டணி இணைந்து படம் எடுக்கவில்லை என்று கூறப்பட்டுவந்தநிலையில், தற்போது தன்னை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரிடம், மகளின் திருமண வரவேற்பு அழைப்பிதழை வழங்கி, ஆசி வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
தனது மகள் ஐஸ்வர்யா சங்கரின் திருமண வரவேற்பு விழா, சென்னையில் மே மாதம் நடைபெறுவதை முன்னிட்டு, பல்வேறு பிரபலங்களை இயக்குனர் ஷங்கர் சந்தித்து வரவேற்பு அழைப்பிதழ் வழங்கி வருகின்றார். கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில், ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடிப்பில் கடந்த 1993-ம் ஆண்டு வெளியாகி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றப் படம் ‘ஜென்டில்மேன்’. இந்தப் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமானவர் ஷங்கர். இதனைத் தொடர்ந்து, ‘காதலன்’, ’முதல்வன்’, ’இந்தியன்’, ’எந்திரன்’, ’அந்நியன்’ உள்பட பல வெற்றிப் படங்களை பிரம்மாண்ட முறையில் தந்து, தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநராக தற்போது வலம் வருகிறார் இயக்குநர் ஷங்கர். இவரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும், கிரிக்கெட் வீரர் ரோஹித் என்பவருக்கும், கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி, உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தியிருந்தார். அப்போது கொரோனா 2-வது அலை காரணமாக, திரையுலக பிரபலங்களை, இயக்குநர் ஷங்கர் அழைக்கவில்லை. இதையடுத்து தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் விளக்கப்பட்டு இருப்பதால், மே 1-ம் தேதி, ராம...

பாலிவுட் படங்களை ஓரங்கட்டி சாதனை புரிந்த 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படம் பாலிவுட் படங்களான ‘கங்குபாய் கத்தியவாடி’ மற்றும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படங்களை காட்டிலும், ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் இந்திப் பதிப்பு, 5 நாட்களிலேயே 100 கோடி ரூபாய் வசூலித்து சாதனை புரிந்துள்ளது. ’பாகுபலி’யின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படத்தை மெகா பட்ஜெட்டில் 3டி மற்றும் 2டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கியிருந்தார் எஸ்.எஸ். ராஜமௌலி.  1920-ம் ஆண்டு காலக்கட்டத்தில், ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய தெலுங்கு மாநிலத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களான, அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட உருவான கற்பனைக் கதைதான் ‘ரத்தம் ரணம் ரௌத்தரம்’ எனப்படும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம். இந்தப் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன், ரே ஸ்டீவன்சன், ஒலிவியா மோரிஸ், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டிருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு, மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே, ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் கடந்த 25-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்தப் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையும் பெற்றாலும், படத்தின் பிரம்மாண்டத்தை பிரபலங்கள், ரசிகர்கள், விமர்சகர்கள் என பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இதனால் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் முதல்நாளில் மட்டும், மொத்தம் ரூ. 257.15 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், பாலிவுட் படங்களான ஆலியா பட்டின் ‘கங்குபாய் கத்தியவாடி’ மற்றும் விவேக் அக்னிஹோத்ரியின் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் 100 கோடி ரூபாய் வசூல் சாதனையை, 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படத்தின் இந்தி பதிப்பு முறியடித்துள்ளது. ‘கங்குபாய் கத்தியவாடி’ படம் 13 நாட்களிலும், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் 8 நாட்களிலும் 100 கோடி ரூபாய் வசூலித்தநிலையில், 5 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது எஸ்.எஸ். ராஜமௌலியின் 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படம். ‘பாகுபலி: தி பிகினிங்’, ‘பாகுபலி: தி கன்குளுஷன்’, ‘2.0’ மற்றும் ‘புஷ்பா’ திரைப்படத்திற்குப் பிறகு இந்தி பாக்ஸ் ஆபிஸ் சாதனையில் இணைந்துள்ள 5-வது தென்னிந்தியப் படம் 'ஆர்.ஆர்.ஆர்.' என்பது குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
பாலிவுட் படங்களான ‘ கங்குபாய் கத்தியவாடி’  மற்றும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படங்களை காட்டிலும், ‘ ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் இந்திப் பதிப்பு, 5 நாட்களிலேயே 100 கோடி ரூபாய்  வசூலித்து சாதனை புரிந்துள்ளது. ’பாகுபலி’ யின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படத்தை மெகா பட்ஜெட்டில் 3டி மற்றும் 2டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கியிருந்தார் எஸ்.எஸ். ராஜமௌலி.  1920-ம் ஆண்டு காலக்கட்டத்தில், ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய தெலுங்கு மாநிலத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களான, அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட உருவான கற்பனைக் கதைதான் ‘ரத்தம் ரணம் ரௌத்தரம்’ எனப்படும் ‘ ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம். இந்தப் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன், ரே ஸ்டீவன்சன், ஒலிவியா மோரிஸ், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டிருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு, மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே,  ‘ ஆர்...

'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்திற்கு வரிவிலக்கு அளித்தது புதுச்சேரி அரசு 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு அளித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் உருவான 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு ஏற்கனவே ஹரியானா, மத்திய பிரதேசம், திரிபுரா, கோவா, கர்நாடகா, உத்தராகண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் வரிச்சலுகை வழங்கியுள்ளது. இந்த நிலையில், புதுச்சேரி அரசும் 'காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்திற்கு வரிச்சலுகை அளித்துள்ளது. வரிச்சலுகை வழங்க வேண்டும் என்று பாஜகவினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அதனை ஏற்று புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. 1990களில் காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்துக்கள் குறித்த உண்மை சம்பவத்தை தழுவிய கதையம்சம் கொண்ட திரைப்படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. இந்த திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் வெளியான நிலையில் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரிக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் ‘Y’ பிரிவு பாதுகாப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ‘Y’ பிரிவு பாதுகாப்பின் கீழ் வரும் அவருக்கு 8 காவல் அதிகாரிகள் பாதுகாப்பாக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் இரண்டு கமாண்டோ படையினரும் அடங்குவர் என சொல்லப்பட்டுள்ளது. பிரதமர் மோடி உட்பட பலரும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில் காங்கிரஸ் இந்த படத்தை கடுமையாக விமர்சித்து வருகிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு அளித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் உருவான 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு ஏற்கனவே ஹரியானா, மத்திய பிரதேசம், திரிபுரா, கோவா, கர்நாடகா, உத்தராகண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் வரிச்சலுகை வழங்கியுள்ளது. இந்த நிலையில், புதுச்சேரி அரசும் 'காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்திற்கு வரிச்சலுகை அளித்துள்ளது. வரிச்சலுகை வழங்க வேண்டும் என்று பாஜகவினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அதனை ஏற்று புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. 1990களில் காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்துக்கள் குறித்த உண்மை சம்பவத்தை தழுவிய கதையம்சம் கொண்ட திரைப்படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. இந்த திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் வெளியான நிலையில் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரிக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் ‘Y’ பிரிவு பாதுகாப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ‘Y’ பிரிவு பாதுகாப்பி...

புதிய சாதனை படைத்துள்ள கேஜிஎஃப்-2 ட்ரெய்லர் கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் 109 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இந்திய அளவில் திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள கே.ஜி.எஃப். - 2 திரைப்படத்தின் ட்ரெய்லர், ஞாயிறன்று மாலை வெளியானது. அதிரடிக் காட்சிகள் கொண்ட அந்த ட்ரெய்லரைப் பார்த்த ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகியுள்ள இந்த ட்ரெய்லர் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதாவது, ட்ரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் அனைத்து மொழிகளையும் சேர்த்து 109 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இதுவரை வெளியான இந்திய திரைப்பட டிரைலர்களில் அதிக பார்வையாளர்களை கடந்த திரைப்படம் என்ற  புதிய சாதனையை கே.ஜி.எஃப். - 2 நிகழ்த்தியுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் 109 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இந்திய அளவில் திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள கே.ஜி.எஃப். - 2 திரைப்படத்தின் ட்ரெய்லர், ஞாயிறன்று மாலை வெளியானது. அதிரடிக் காட்சிகள் கொண்ட அந்த ட்ரெய்லரைப் பார்த்த ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகியுள்ள இந்த ட்ரெய்லர் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதாவது, ட்ரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் அனைத்து மொழிகளையும் சேர்த்து 109 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இதுவரை வெளியான இந்திய திரைப்பட டிரைலர்களில் அதிக பார்வையாளர்களை கடந்த திரைப்படம் என்ற  புதிய சாதனையை கே.ஜி.எஃப். - 2 நிகழ்த்தியுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/sRnz3xa via IFTTT

‘சூர்யா 41’ படத்தில் இணைந்த மற்றொரு நடிகை நடிகர் சூர்யாவின் 41-வது படத்தில், மலையாள திரையுலகைச் சேர்ந்த நடிகை மமிதா பைஜூ இணைந்துள்ளார். நந்தா, பிதாமகன் படங்களுக்குப்பிறகு 18 வருடங்கள் ஆனநிலையில், 3-வது முறையாக நடிகர் சூர்யா - இயக்குநர் பாலா கூட்டணி இணைந்துள்ளனர். ‘சூர்யா 41’ என்று தற்காலிமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் கன்னியாகுமரியில் துவங்கியுள்ளது. நடிகர் சூர்யா, ஜோதிகாவின் ‘2டி’ எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தில் இசையமைப்பாளராக ஜி.வி பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நாயகியாக ‘உப்பெனா’ புகழ் கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்தின் மூலம் கீர்த்தி ஷெட்டி, தமிழில் அறிமுகமாகிறார். இந்நிலையில் இந்தப் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக மலையாள நடிகையான மமிதா பைஜூ என்பவர் தமிழுக்கு அறிமுகமாகிறார். கடந்த 2017-ல் 'ஹனி பீ 2' படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமான இவர், 'ஆப்ரேஷன் ஜாவா', 'கோ கோ' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக இவர் சோனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து, கடந்த ஜனவரி மாதம் வெளியான 'சூப்பர் சரண்யா' படம் மாபெரும் வெற்றிபெற்றது. இதையடுத்து சூர்யாவின் 41-வது படத்தில் இரண்டாவது கதாநாயகியாக இணைந்துள்ளார். Happy to have the charming and talented @mamitha_baiju on board for #Suriya41!@Suriya_offl #DirBala #Jyotika @gvprakash @rajsekarpandian #Balasubramaniem @IamKrithiShetty @editorsuriya #Mayapandi pic.twitter.com/Ojdid9bpA4 — 2D Entertainment (@2D_ENTPVTLTD) March 28, 2022 Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
நடிகர் சூர்யாவின் 41-வது படத்தில், மலையாள திரையுலகைச் சேர்ந்த நடிகை மமிதா பைஜூ இணைந்துள்ளார். நந்தா, பிதாமகன் படங்களுக்குப்பிறகு 18 வருடங்கள் ஆனநிலையில், 3-வது முறையாக நடிகர் சூர்யா - இயக்குநர் பாலா கூட்டணி இணைந்துள்ளனர். ‘சூர்யா 41’ என்று தற்காலிமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் கன்னியாகுமரியில் துவங்கியுள்ளது. நடிகர் சூர்யா, ஜோதிகாவின் ‘2டி’ எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தில் இசையமைப்பாளராக ஜி.வி பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நாயகியாக ‘உப்பெனா’ புகழ் கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்தின் மூலம் கீர்த்தி ஷெட்டி, தமிழில் அறிமுகமாகிறார். இந்நிலையில் இந்தப் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக மலையாள நடிகையான மமிதா பைஜூ என்பவர் தமிழுக்கு அறிமுகமாகிறார். கடந்த 2017-ல் ' ஹனி பீ 2' படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமான இவர், ' ஆப்ரேஷன் ஜாவா', 'கோ கோ' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக இவர் சோனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து, கடந்த ஜனவரி மாதம் வெளி...

விஜயின் ’பீஸ்ட்’ படத்தின் அடுத்த அப்டேட்? - நெல்சன் பகிர்ந்த ட்வீட் நடிகர் விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' படத்தின் ட்ரெய்லர் அல்லது டீசர் வெளியாகலாம் உள்ளிட்ட ஏதாவது ஒரு அப்டேட் நாளை வெளியாகலாம் என அப்படத்தின் இயக்குநர் நெல்சனின் ட்வீட் மூலம் தெரியவந்துள்ளன. ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ ஆகிய வெற்றிப் படங்களுக்குப் பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் படம் ‘பீஸ்ட்’. இந்தப் படத்தில், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜயை வைத்து இயக்கி வருவதால் எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் சாக்கோ, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இந்தப் படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில், ஏப்ரல் 13-ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. ‘பீஸ்ட்’ படத்திற்கு யு/ஏ தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திலிருந்து இரண்டு பாடல்கள் மட்டுமே வெளியாகிய நிலையில், படம் வெளியாக இன்னும் 15 நாட்களே உள்ளது. இதனால் ‘பீஸ்ட்’ படத்தின் டீசர் அல்லது ட்ரெயிலர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் கேட்கத் துவங்கியுள்ளனர். இந்நிலையில், இந்தப் படத்தின் இயக்குநர் நெல்சன், தனது ட்விட்டர் பக்கத்தில் ‘நாளை...’ என்று மட்டும் பதிவு செய்தள்ளதால், நாளை என்ன அப்டேட் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். மேலும், படத்தின் ட்ரெய்லரை வெளியிட வேண்டும் என்று நெல்சனுக்கு, ரசிகர்கள் கோரிக்கைகள் வைக்கத் தொடங்கியுள்ளனர். ‘கேஜிஎஃப் 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியானதைக் குறிப்பிட்டு, ரசிகர்கள் இந்தக் கோரிக்கையை வைத்து வருகின்றனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
நடிகர் விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' படத்தின் ட்ரெய்லர் அல்லது டீசர் வெளியாகலாம் உள்ளிட்ட ஏதாவது ஒரு அப்டேட் நாளை வெளியாகலாம் என அப்படத்தின் இயக்குநர் நெல்சனின் ட்வீட் மூலம் தெரியவந்துள்ளன. ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ ஆகிய வெற்றிப் படங்களுக்குப் பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் படம் ‘பீஸ்ட்’. இந்தப் படத்தில், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜயை வைத்து இயக்கி வருவதால் எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் சாக்கோ, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இந்தப் படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில், ஏப்ரல் 13-ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. ‘பீஸ்ட்’ படத்திற்கு யு/ஏ தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திலிருந்து இரண்டு பாடல்கள் மட்டுமே வெளியாகிய நிலையில், படம் வெளியாக இன்னும் 15 நாட்களே உள்ளது. இதனால் ‘பீஸ்ட்’ படத்தின் டீசர் அல்லது ட்ரெயிலர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் கேட்கத் துவங்கியுள்ளனர். இந்நிலையில், இந்...

கைவிடப்பட்ட கனவுப் படத்தை மீண்டும் இயக்கும் தனுஷ்? - வெளியான தகவல் நடிகர் தனுஷின் இயக்கத்தில் இரண்டாவதாக உருவாகி வந்த திரைப்படம் கைவிடப்பட்டதாகக் கூறப்பட்டநிலையில், அந்தப் படத்தை தனுஷ் மீண்டும் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், பாடல்கள் எழுதுவது, படங்கள் தயாரிப்பது போன்றவற்றின் மூலமும் தனது திறமைகளை நிருபித்து வந்தார். இதையடுத்து கடந்த 2017-ல், 'ப. பாண்டி' படத்தின் மூலம் இயக்குநராக நடிகர் தனுஷ் அறிமுகமானார். இந்தப் படத்தில், ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, சாயா சிங், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்தப் படம் வசூல்ரீதியாகவும், விமர்சனரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து நடிகர் தனுஷ் சுதந்திரத்துக்கு முந்தைய காலக்கட்டத்தை மையமாக கொண்டு, இரண்டாவதாக ஒரு படம் இயக்கி வருவதாகவும் கூறப்பட்டது. பின்னர் தனது கனவுப் படமான அந்தப் படத்தை நடிகர் தனுஷ் கைவிட்டதாக கூறப்பட்டநிலையில், பல படங்களில் தனுஷ் நடித்து வருவதாலேயே, அந்தப் படம் ஒத்திவைக்கப்பட்டதாக தயாரிப்பு தரப்பு தெரிவித்தது. இந்நிலையில், நடிகர் தனுஷ் அந்தப் படத்தை மீண்டும் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு 'நான் ருத்ரன்' என பெயரிடப்பட்டிருப்பதாகவும், தற்காலிகமாக ‘டிடி2’ என பெயரிப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் அதிதி ராவ் ஹைதரி மற்றும் நாகார்ஜுனா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சரத்குமார், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைக்க, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, பிரசன்ன ஜிகே படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர். தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தை தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிக்க உள்ளதாக தெரிகிறது. இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருடம் இந்தப் படம் குறித்து நாகர்ஜுனா பேசுகையில், ‘இது ஒரு குறிப்பிட்ட காலத்து வரலாற்று கதை. இந்தப் படத்தில் வரும் எனது கதாபாத்திரம் எனக்கு கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. ஏனென்றால் நான் நடித்துள்ள படங்களில் இதுவரை செய்யாத ஒன்றை, இந்தப் படத்தில் செய்துள்ளேன். 600 ஆண்டுகளுக்கு பின்னோக்கி செல்லும் கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். இது ஒரு சுவாரஸ்யமான கதாபாத்திரம்" என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
நடிகர் தனுஷின் இயக்கத்தில் இரண்டாவதாக உருவாகி வந்த திரைப்படம் கைவிடப்பட்டதாகக் கூறப்பட்டநிலையில், அந்தப் படத்தை தனுஷ் மீண்டும் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், பாடல்கள் எழுதுவது, படங்கள் தயாரிப்பது போன்றவற்றின் மூலமும் தனது திறமைகளை நிருபித்து வந்தார். இதையடுத்து கடந்த 2017-ல், 'ப. பாண்டி' படத்தின் மூலம் இயக்குநராக நடிகர் தனுஷ் அறிமுகமானார். இந்தப் படத்தில், ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, சாயா சிங், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்தப் படம் வசூல்ரீதியாகவும், விமர்சனரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து நடிகர் தனுஷ் சுதந்திரத்துக்கு முந்தைய காலக்கட்டத்தை மையமாக கொண்டு, இரண்டாவதாக ஒரு படம் இயக்கி வருவதாகவும் கூறப்பட்டது. பின்னர் தனது கனவுப் படமான அந்தப் படத்தை நடிகர் தனுஷ் கைவிட்டதாக கூறப்பட்டநிலையில், பல படங்களில் தனுஷ் நடித்து வருவதாலேயே, அந்தப் படம் ஒத்திவைக்கப்பட்டதாக தயாரிப்பு தரப்பு தெரிவித்தது. இந்நிலையில், நடிகர் தனுஷ் அந்தப் படத்தை மீண்டும் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்...

‘தி பவர் ஆஃப் தி டாக்’ - ஆண்மை மீது வைக்கப்பட்ட விமர்சனம் சிறந்த இயக்குனருக்கான பிரிவில் ஆஸ்கர் விருதைப் பெற்றிருக்கும் ‘தி பவர் ஆஃப் தி டாக்’, கௌபாய்கள் திரியும் அமெரிக்க வெஸ்டன் வகை கதையாகும். ஒரு துப்பாக்கித் தோட்டா வெடிக்கும் சத்தம் இல்லாத கௌபாய் திரைப்படம் இது. வெடிச்சத்தமோ, குதிரை மனிதர்கள் மோதும் ரத்தக்களரியோ இல்லாத அதேவேளையில், வன்முறைக்குப் பின் இயங்கும் ஆண்மையும், வீரசாகசமும் எவ்வளவு நோய்க்கூறானது என்பதை அழுத்தமாக ‘தி பவர் ஆப் தி டாக்’ மூலம் திரையில் படைத்து, பெண் இயக்குனர் ஜேன் காம்பியன் ஆஸ்கர் பரிசையும் வென்றிருக்கிறார். 1994-ம் ஆண்டு ‘தி பியானிஸ்ட்’ திரைப்படத்துக்காக திரைக்கதைப் பிரிவில் ஆஸ்கர் வென்றவர் ஜேன். வெஸ்டர்ன் திரைப்படங்களுக்கே உரித்தான மலைகளின் பின்னணியில் நெடிதாக நீண்டிருக்கும் மேய்ச்சல் நிலப்பகுதியில், பர்பேங்க் குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் பில் மற்றும் ஜார்ஜின் கதை இது. சென்ற நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்தில் நிகழ்கிறது. பில் மற்றும் ஜார்ஜ் இருவரும் தங்கள் பெற்றோர்கள் அளித்த பண்ணையை ஒரு பழைய மாளிகையில் தங்கி நிர்வகிக்கிறார்கள். குதிரைகளைப் பழக்கி, காளைகளைக் காயடிப்பதில் பில் வல்லவனாகவும் இரக்கமற்ற தீரனாகவும் இருக்கிறான். வெஸ்டர்ன் வகைமையில் சிறந்த எத்தனையோ திரைப்படங்களைப் பார்த்திருந்தாலும் இயக்குனர் ஜேன் காம்பியன் நமக்குப் பரிச்சயமான அதே நிலப்பரப்பை, தனிமையான மலைகளை கழுகுப் பார்வை கொண்ட ஷாட்கள் மற்றும் நுட்பமான கவனத்துடன் வித்தியாசமாக காண்பிக்கிறார். நியூசிலாந்து நாட்டிலுள்ள சினிமா அதிகம் பார்க்காத நிலப்பரப்புகளில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. புழுதியைக் கிளப்பும் கால்நடைகள், முழுக்க முழுக்க ஆண்களின் சத்தமும் உற்சாகமும் நிறைந்த பண்ணைச் சூழல் வழியாக நமக்கு படம் அறிமுகமாகிறது. முரட்டுத் தம்பி மற்றும் மென்மையான அண்ணனின் கதையாகத் தொடங்கும் இந்த கௌபாய் கதையில் அண்ணனின் வாழ்வில் வரும் ஒரு பெண் திருப்புமுனையை ஏற்படுத்துகிறாள். ஒரு பயணத்தின் நடுவில் இரவில் தங்கிய விடுதியில் விதவை ரோஸின் மீது காதல் கொண்ட ஜார்ஜ் அவளைத் திருமணம் செய்து கொள்கிறான். அண்ணனின் பணத்துக்காகவே ரோஸ் வந்திருப்பதாக நினைத்து பில் அவளுக்கு உளவியல் ரீதியான தொந்தரவுகளைத் தரத் தொடங்குகிறான். ஜார்ஜின் அதீதமான நேசத்தையும் மீறி மைத்துனன் பில் கொடுக்கும் தொந்தரவுகளால் மனம்நொந்து குடிநோயாளியாக மாறுகிறாள் ரோஸ். வளரிளம் பருவத்தில் உள்ள ரோஸின் மகனான பீட்டரை, அவனது பெண்தன்மையைக் காரணமாக்கி பில் கடுமையாக நடத்துகிறான். பிராணிகளின் உடலைக் கீறிச் சோதிப்பதில் ஆர்வம் கொண்ட சிறுவன் பீட்டர் படிப்படியாக பில்லின் மனம் கவர்கிறான். ஒருகட்டத்தில் பில், குதிரைகளைப் பழக்குவதற்கு பீட்டரைப் பயிற்றுவிக்கிறான். தனது தாயை மீளாத துயரத்துக்குள்ளாக்கிய பில்லையே கடைசியில் கொல்கிறான் சிறுவன் பீட்டர். அமெரிக்காவின் வன்மையான இயற்கையையும், பூர்வ குடிகளையும் அடக்கி தங்களது ஆண்மைத்துவத்தைப் பெருமிதமாக கொண்டு அழித்தே இன்று நாம் காணும் ஒரு வல்லரசு நாட்டை கௌபாய்கள் படைத்தார்கள். அந்த இயற்கையைக் ஆதிக்கம் செய்து ஆள்வதில் அவர்கள் கொண்ட பெருமிதம் மற்றும் மட்டில்லாத கவர்ச்சியைக் காண்பிக்கும் விதமாகவே இதுவரையிலான வெஸ்டர்ன் திரைப்படங்கள் இருந்திருக்கின்றன. தனது வாழ்க்கைக்காக இயற்கையை, உயிர்களை, சக மனிதர்களை, பூர்வ குடிகளை அழிப்பதற்குப் பின்னாலுள்ள மனோபாவம் மீது ‘தி பவர் ஆஃப் தி டாக்’ மூலமாக பெரும் விமர்சனத்தை வைத்திருக்கிறார் இயக்குனர். பெண்தன்மை கொண்ட பீட்டர், தன் தாய்க்கு நடந்த அநியாயமான துயரத்துக்குப் பொறுப்பேற்று, ஆண் என்ற பெருமிதத்தையே அணியாக்கி நெஞ்சு நிமிர்த்தித் திரியும் பில்லைக் கொல்கிறான். பில்லைக் கொல்வதற்கு அவன் பயன்படுத்தும் ஆயுதம் இறந்த மாட்டின் தோல். ஆந்திராக்ஸ் நோய்க்கிருமி வந்த மாட்டுத் தோலை, பில்லுக்கு அவன் அறியாமல் கயிறு நூற்பதற்குக் கொடுத்துதான் அந்தக் கொலை புரியப்படுகிறது. திரைப்படத்தின் ஆரம்பக் காட்சிகளிலேயே முகத்தில் எந்தச் சலனமும் இல்லாமல் பில், ஒரு மாட்டின் விதைப்பைகளை அறுக்கும் காட்சி நமக்குக் காண்பிக்கப்படுகிறது. ஆண்மையும் ஆண் என்று கொள்ளும் பெருமையும் எத்தனை பலவீனமான கற்பிதம் என்பதை பில்லின் இளம்பருவத்துக் கதையிலிருந்து வலுவாகக் கட்டியிருக்கிறார் இயக்குனர். பில்லின் தனிமையும், அமைதிகொள்ளாத அகக்கொந்தளிப்பும் காண்பிக்கப்படும் அந்த நதிக்கரைக் காட்சி ஓவியம் போலப் படைக்கப்பட்டிருக்கிறது. பெண்மை கொள்ளாத ஆண்மை எத்தனை தனிமையானது, நிர்க்கதியானது என்பதை ஒரு வெஸ்டர்ன் கதைநிலப்பரப்பிலிருந்து சொல்லியிருப்பதன் மூலம் சாதாரண பழிவாங்கும் கதையென்ற அடையாளத்திலிருந்து உயர்ந்துவிடுகிறது இந்தப் படைப்பு. கவித்துவமும் பிரமாண்டமும் நிறைந்த ஆரி வேக்னரின் ஒளிப்பதிவும், ஜானி க்ரீன்வுட்டின் இசையும் ‘தி பவர் ஆப் தி டாக்’ படைப்புக்கு வலுசேர்ப்பவை. நேசத்துக்குரிய கணவன், அன்னியமான இடத்துக்கு தனது இரண்டாவது திருமணத்திற்காக அழைத்துவரப்பட்ட மகன், நிஷ்டூரமான மைத்துன் ஆகியோருக்கு இடையே நிர்கதியாக அல்லாடும் ரோஸாக நடித்த கிர்ஸ்டன் டன்ஸ்ட், பில் கதாபாத்திரத்தில் நடித்த பெனடிக்ட் கும்பர்பேட்ச் ஆகியோருக்கும் சிறந்த நடிப்புக்கான ஆஸ்கர் எதிர்பார்க்கப்பட்டது. பெண்தன்மை கொண்ட பீட்டராக ‘சிஸ்ஸி’ என்று கேலி செய்யப்பட்டு, பில்லிடம் நெருங்கி அவனது வித்தைகளைக் கற்று, கற்றுத் தந்தவனுக்கே மரணத்தைத் தரும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கோடி ஸ்மித் மெக்பீக்கும் ஆஸ்கர் கிடைக்கும் என்று ஆரூடம் கூறப்பட்டது. என்ன நடக்கிறது என்று துலங்காத மர்மத்தை க்ளைமாக்ஸ் வரை தக்கவைத்திருப்பது அத்தனை சாதாரணமானதல்ல. நிதானமாக, கொஞ்சம் கூடுதலாக அவகாசம் எடுத்துக் கொண்டு அந்த மர்மத்தை நிகழ்த்துவதில் ஜேன் கேம்பியன் வெற்றிகண்டிருக்கிறார். -ஷங்கர் ராமசுப்ரமணியன் Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
சிறந்த இயக்குனருக்கான பிரிவில் ஆஸ்கர் விருதைப் பெற்றிருக்கும் ‘தி பவர் ஆஃப் தி டாக்’, கௌபாய்கள் திரியும் அமெரிக்க வெஸ்டன் வகை கதையாகும். ஒரு துப்பாக்கித் தோட்டா வெடிக்கும் சத்தம் இல்லாத கௌபாய் திரைப்படம் இது. வெடிச்சத்தமோ, குதிரை மனிதர்கள் மோதும் ரத்தக்களரியோ இல்லாத அதேவேளையில், வன்முறைக்குப் பின் இயங்கும் ஆண்மையும், வீரசாகசமும் எவ்வளவு நோய்க்கூறானது என்பதை அழுத்தமாக ‘தி பவர் ஆப் தி டாக்’ மூலம் திரையில் படைத்து, பெண் இயக்குனர் ஜேன் காம்பியன் ஆஸ்கர் பரிசையும் வென்றிருக்கிறார். 1994-ம் ஆண்டு ‘தி பியானிஸ்ட்’ திரைப்படத்துக்காக திரைக்கதைப் பிரிவில் ஆஸ்கர் வென்றவர் ஜேன். வெஸ்டர்ன் திரைப்படங்களுக்கே உரித்தான மலைகளின் பின்னணியில் நெடிதாக நீண்டிருக்கும் மேய்ச்சல் நிலப்பகுதியில், பர்பேங்க் குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் பில் மற்றும் ஜார்ஜின் கதை இது. சென்ற நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்தில் நிகழ்கிறது. பில் மற்றும் ஜார்ஜ் இருவரும் தங்கள் பெற்றோர்கள் அளித்த பண்ணையை ஒரு பழைய மாளிகையில் தங்கி நிர்வகிக்கிறார்கள். குதிரைகளைப் பழக்கி, காளைகளைக் காயடிப்பதில் பில் வல்லவனாகவும் இரக்க...