‘தி பவர் ஆஃப் தி டாக்’ - ஆண்மை மீது வைக்கப்பட்ட விமர்சனம் சிறந்த இயக்குனருக்கான பிரிவில் ஆஸ்கர் விருதைப் பெற்றிருக்கும் ‘தி பவர் ஆஃப் தி டாக்’, கௌபாய்கள் திரியும் அமெரிக்க வெஸ்டன் வகை கதையாகும். ஒரு துப்பாக்கித் தோட்டா வெடிக்கும் சத்தம் இல்லாத கௌபாய் திரைப்படம் இது. வெடிச்சத்தமோ, குதிரை மனிதர்கள் மோதும் ரத்தக்களரியோ இல்லாத அதேவேளையில், வன்முறைக்குப் பின் இயங்கும் ஆண்மையும், வீரசாகசமும் எவ்வளவு நோய்க்கூறானது என்பதை அழுத்தமாக ‘தி பவர் ஆப் தி டாக்’ மூலம் திரையில் படைத்து, பெண் இயக்குனர் ஜேன் காம்பியன் ஆஸ்கர் பரிசையும் வென்றிருக்கிறார். 1994-ம் ஆண்டு ‘தி பியானிஸ்ட்’ திரைப்படத்துக்காக திரைக்கதைப் பிரிவில் ஆஸ்கர் வென்றவர் ஜேன். வெஸ்டர்ன் திரைப்படங்களுக்கே உரித்தான மலைகளின் பின்னணியில் நெடிதாக நீண்டிருக்கும் மேய்ச்சல் நிலப்பகுதியில், பர்பேங்க் குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் பில் மற்றும் ஜார்ஜின் கதை இது. சென்ற நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்தில் நிகழ்கிறது. பில் மற்றும் ஜார்ஜ் இருவரும் தங்கள் பெற்றோர்கள் அளித்த பண்ணையை ஒரு பழைய மாளிகையில் தங்கி நிர்வகிக்கிறார்கள். குதிரைகளைப் பழக்கி, காளைகளைக் காயடிப்பதில் பில் வல்லவனாகவும் இரக்கமற்ற தீரனாகவும் இருக்கிறான். வெஸ்டர்ன் வகைமையில் சிறந்த எத்தனையோ திரைப்படங்களைப் பார்த்திருந்தாலும் இயக்குனர் ஜேன் காம்பியன் நமக்குப் பரிச்சயமான அதே நிலப்பரப்பை, தனிமையான மலைகளை கழுகுப் பார்வை கொண்ட ஷாட்கள் மற்றும் நுட்பமான கவனத்துடன் வித்தியாசமாக காண்பிக்கிறார். நியூசிலாந்து நாட்டிலுள்ள சினிமா அதிகம் பார்க்காத நிலப்பரப்புகளில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. புழுதியைக் கிளப்பும் கால்நடைகள், முழுக்க முழுக்க ஆண்களின் சத்தமும் உற்சாகமும் நிறைந்த பண்ணைச் சூழல் வழியாக நமக்கு படம் அறிமுகமாகிறது. முரட்டுத் தம்பி மற்றும் மென்மையான அண்ணனின் கதையாகத் தொடங்கும் இந்த கௌபாய் கதையில் அண்ணனின் வாழ்வில் வரும் ஒரு பெண் திருப்புமுனையை ஏற்படுத்துகிறாள். ஒரு பயணத்தின் நடுவில் இரவில் தங்கிய விடுதியில் விதவை ரோஸின் மீது காதல் கொண்ட ஜார்ஜ் அவளைத் திருமணம் செய்து கொள்கிறான். அண்ணனின் பணத்துக்காகவே ரோஸ் வந்திருப்பதாக நினைத்து பில் அவளுக்கு உளவியல் ரீதியான தொந்தரவுகளைத் தரத் தொடங்குகிறான். ஜார்ஜின் அதீதமான நேசத்தையும் மீறி மைத்துனன் பில் கொடுக்கும் தொந்தரவுகளால் மனம்நொந்து குடிநோயாளியாக மாறுகிறாள் ரோஸ். வளரிளம் பருவத்தில் உள்ள ரோஸின் மகனான பீட்டரை, அவனது பெண்தன்மையைக் காரணமாக்கி பில் கடுமையாக நடத்துகிறான். பிராணிகளின் உடலைக் கீறிச் சோதிப்பதில் ஆர்வம் கொண்ட சிறுவன் பீட்டர் படிப்படியாக பில்லின் மனம் கவர்கிறான். ஒருகட்டத்தில் பில், குதிரைகளைப் பழக்குவதற்கு பீட்டரைப் பயிற்றுவிக்கிறான். தனது தாயை மீளாத துயரத்துக்குள்ளாக்கிய பில்லையே கடைசியில் கொல்கிறான் சிறுவன் பீட்டர். அமெரிக்காவின் வன்மையான இயற்கையையும், பூர்வ குடிகளையும் அடக்கி தங்களது ஆண்மைத்துவத்தைப் பெருமிதமாக கொண்டு அழித்தே இன்று நாம் காணும் ஒரு வல்லரசு நாட்டை கௌபாய்கள் படைத்தார்கள். அந்த இயற்கையைக் ஆதிக்கம் செய்து ஆள்வதில் அவர்கள் கொண்ட பெருமிதம் மற்றும் மட்டில்லாத கவர்ச்சியைக் காண்பிக்கும் விதமாகவே இதுவரையிலான வெஸ்டர்ன் திரைப்படங்கள் இருந்திருக்கின்றன. தனது வாழ்க்கைக்காக இயற்கையை, உயிர்களை, சக மனிதர்களை, பூர்வ குடிகளை அழிப்பதற்குப் பின்னாலுள்ள மனோபாவம் மீது ‘தி பவர் ஆஃப் தி டாக்’ மூலமாக பெரும் விமர்சனத்தை வைத்திருக்கிறார் இயக்குனர். பெண்தன்மை கொண்ட பீட்டர், தன் தாய்க்கு நடந்த அநியாயமான துயரத்துக்குப் பொறுப்பேற்று, ஆண் என்ற பெருமிதத்தையே அணியாக்கி நெஞ்சு நிமிர்த்தித் திரியும் பில்லைக் கொல்கிறான். பில்லைக் கொல்வதற்கு அவன் பயன்படுத்தும் ஆயுதம் இறந்த மாட்டின் தோல். ஆந்திராக்ஸ் நோய்க்கிருமி வந்த மாட்டுத் தோலை, பில்லுக்கு அவன் அறியாமல் கயிறு நூற்பதற்குக் கொடுத்துதான் அந்தக் கொலை புரியப்படுகிறது. திரைப்படத்தின் ஆரம்பக் காட்சிகளிலேயே முகத்தில் எந்தச் சலனமும் இல்லாமல் பில், ஒரு மாட்டின் விதைப்பைகளை அறுக்கும் காட்சி நமக்குக் காண்பிக்கப்படுகிறது. ஆண்மையும் ஆண் என்று கொள்ளும் பெருமையும் எத்தனை பலவீனமான கற்பிதம் என்பதை பில்லின் இளம்பருவத்துக் கதையிலிருந்து வலுவாகக் கட்டியிருக்கிறார் இயக்குனர். பில்லின் தனிமையும், அமைதிகொள்ளாத அகக்கொந்தளிப்பும் காண்பிக்கப்படும் அந்த நதிக்கரைக் காட்சி ஓவியம் போலப் படைக்கப்பட்டிருக்கிறது. பெண்மை கொள்ளாத ஆண்மை எத்தனை தனிமையானது, நிர்க்கதியானது என்பதை ஒரு வெஸ்டர்ன் கதைநிலப்பரப்பிலிருந்து சொல்லியிருப்பதன் மூலம் சாதாரண பழிவாங்கும் கதையென்ற அடையாளத்திலிருந்து உயர்ந்துவிடுகிறது இந்தப் படைப்பு. கவித்துவமும் பிரமாண்டமும் நிறைந்த ஆரி வேக்னரின் ஒளிப்பதிவும், ஜானி க்ரீன்வுட்டின் இசையும் ‘தி பவர் ஆப் தி டாக்’ படைப்புக்கு வலுசேர்ப்பவை. நேசத்துக்குரிய கணவன், அன்னியமான இடத்துக்கு தனது இரண்டாவது திருமணத்திற்காக அழைத்துவரப்பட்ட மகன், நிஷ்டூரமான மைத்துன் ஆகியோருக்கு இடையே நிர்கதியாக அல்லாடும் ரோஸாக நடித்த கிர்ஸ்டன் டன்ஸ்ட், பில் கதாபாத்திரத்தில் நடித்த பெனடிக்ட் கும்பர்பேட்ச் ஆகியோருக்கும் சிறந்த நடிப்புக்கான ஆஸ்கர் எதிர்பார்க்கப்பட்டது. பெண்தன்மை கொண்ட பீட்டராக ‘சிஸ்ஸி’ என்று கேலி செய்யப்பட்டு, பில்லிடம் நெருங்கி அவனது வித்தைகளைக் கற்று, கற்றுத் தந்தவனுக்கே மரணத்தைத் தரும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கோடி ஸ்மித் மெக்பீக்கும் ஆஸ்கர் கிடைக்கும் என்று ஆரூடம் கூறப்பட்டது. என்ன நடக்கிறது என்று துலங்காத மர்மத்தை க்ளைமாக்ஸ் வரை தக்கவைத்திருப்பது அத்தனை சாதாரணமானதல்ல. நிதானமாக, கொஞ்சம் கூடுதலாக அவகாசம் எடுத்துக் கொண்டு அந்த மர்மத்தை நிகழ்த்துவதில் ஜேன் கேம்பியன் வெற்றிகண்டிருக்கிறார். -ஷங்கர் ராமசுப்ரமணியன் Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

சிறந்த இயக்குனருக்கான பிரிவில் ஆஸ்கர் விருதைப் பெற்றிருக்கும் ‘தி பவர் ஆஃப் தி டாக்’, கௌபாய்கள் திரியும் அமெரிக்க வெஸ்டன் வகை கதையாகும்.

ஒரு துப்பாக்கித் தோட்டா வெடிக்கும் சத்தம் இல்லாத கௌபாய் திரைப்படம் இது. வெடிச்சத்தமோ, குதிரை மனிதர்கள் மோதும் ரத்தக்களரியோ இல்லாத அதேவேளையில், வன்முறைக்குப் பின் இயங்கும் ஆண்மையும், வீரசாகசமும் எவ்வளவு நோய்க்கூறானது என்பதை அழுத்தமாக ‘தி பவர் ஆப் தி டாக்’ மூலம் திரையில் படைத்து, பெண் இயக்குனர் ஜேன் காம்பியன் ஆஸ்கர் பரிசையும் வென்றிருக்கிறார்.

1994-ம் ஆண்டு ‘தி பியானிஸ்ட்’ திரைப்படத்துக்காக திரைக்கதைப் பிரிவில் ஆஸ்கர் வென்றவர் ஜேன். வெஸ்டர்ன் திரைப்படங்களுக்கே உரித்தான மலைகளின் பின்னணியில் நெடிதாக நீண்டிருக்கும் மேய்ச்சல் நிலப்பகுதியில், பர்பேங்க் குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் பில் மற்றும் ஜார்ஜின் கதை இது.

image

சென்ற நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்தில் நிகழ்கிறது. பில் மற்றும் ஜார்ஜ் இருவரும் தங்கள் பெற்றோர்கள் அளித்த பண்ணையை ஒரு பழைய மாளிகையில் தங்கி நிர்வகிக்கிறார்கள். குதிரைகளைப் பழக்கி, காளைகளைக் காயடிப்பதில் பில் வல்லவனாகவும் இரக்கமற்ற தீரனாகவும் இருக்கிறான்.

வெஸ்டர்ன் வகைமையில் சிறந்த எத்தனையோ திரைப்படங்களைப் பார்த்திருந்தாலும் இயக்குனர் ஜேன் காம்பியன் நமக்குப் பரிச்சயமான அதே நிலப்பரப்பை, தனிமையான மலைகளை கழுகுப் பார்வை கொண்ட ஷாட்கள் மற்றும் நுட்பமான கவனத்துடன் வித்தியாசமாக காண்பிக்கிறார். நியூசிலாந்து நாட்டிலுள்ள சினிமா அதிகம் பார்க்காத நிலப்பரப்புகளில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

புழுதியைக் கிளப்பும் கால்நடைகள், முழுக்க முழுக்க ஆண்களின் சத்தமும் உற்சாகமும் நிறைந்த பண்ணைச் சூழல் வழியாக நமக்கு படம் அறிமுகமாகிறது. முரட்டுத் தம்பி மற்றும் மென்மையான அண்ணனின் கதையாகத் தொடங்கும் இந்த கௌபாய் கதையில் அண்ணனின் வாழ்வில் வரும் ஒரு பெண் திருப்புமுனையை ஏற்படுத்துகிறாள். ஒரு பயணத்தின் நடுவில் இரவில் தங்கிய விடுதியில் விதவை ரோஸின் மீது காதல் கொண்ட ஜார்ஜ் அவளைத் திருமணம் செய்து கொள்கிறான்.

image

அண்ணனின் பணத்துக்காகவே ரோஸ் வந்திருப்பதாக நினைத்து பில் அவளுக்கு உளவியல் ரீதியான தொந்தரவுகளைத் தரத் தொடங்குகிறான். ஜார்ஜின் அதீதமான நேசத்தையும் மீறி மைத்துனன் பில் கொடுக்கும் தொந்தரவுகளால் மனம்நொந்து குடிநோயாளியாக மாறுகிறாள் ரோஸ். வளரிளம் பருவத்தில் உள்ள ரோஸின் மகனான பீட்டரை, அவனது பெண்தன்மையைக் காரணமாக்கி பில் கடுமையாக நடத்துகிறான்.

பிராணிகளின் உடலைக் கீறிச் சோதிப்பதில் ஆர்வம் கொண்ட சிறுவன் பீட்டர் படிப்படியாக பில்லின் மனம் கவர்கிறான். ஒருகட்டத்தில் பில்,
குதிரைகளைப் பழக்குவதற்கு பீட்டரைப் பயிற்றுவிக்கிறான். தனது தாயை மீளாத துயரத்துக்குள்ளாக்கிய பில்லையே கடைசியில் கொல்கிறான் சிறுவன் பீட்டர்.

image

அமெரிக்காவின் வன்மையான இயற்கையையும், பூர்வ குடிகளையும் அடக்கி தங்களது ஆண்மைத்துவத்தைப் பெருமிதமாக கொண்டு அழித்தே இன்று நாம் காணும் ஒரு வல்லரசு நாட்டை கௌபாய்கள் படைத்தார்கள். அந்த இயற்கையைக் ஆதிக்கம் செய்து ஆள்வதில் அவர்கள் கொண்ட பெருமிதம் மற்றும் மட்டில்லாத கவர்ச்சியைக் காண்பிக்கும் விதமாகவே இதுவரையிலான வெஸ்டர்ன் திரைப்படங்கள் இருந்திருக்கின்றன.

தனது வாழ்க்கைக்காக இயற்கையை, உயிர்களை, சக மனிதர்களை, பூர்வ குடிகளை அழிப்பதற்குப் பின்னாலுள்ள மனோபாவம் மீது ‘தி பவர் ஆஃப் தி டாக்’ மூலமாக பெரும் விமர்சனத்தை வைத்திருக்கிறார் இயக்குனர். பெண்தன்மை கொண்ட பீட்டர், தன் தாய்க்கு நடந்த அநியாயமான துயரத்துக்குப் பொறுப்பேற்று, ஆண் என்ற பெருமிதத்தையே அணியாக்கி நெஞ்சு நிமிர்த்தித் திரியும் பில்லைக் கொல்கிறான்.

image

பில்லைக் கொல்வதற்கு அவன் பயன்படுத்தும் ஆயுதம் இறந்த மாட்டின் தோல். ஆந்திராக்ஸ் நோய்க்கிருமி வந்த மாட்டுத் தோலை, பில்லுக்கு அவன் அறியாமல் கயிறு நூற்பதற்குக் கொடுத்துதான் அந்தக் கொலை புரியப்படுகிறது. திரைப்படத்தின் ஆரம்பக் காட்சிகளிலேயே முகத்தில் எந்தச் சலனமும் இல்லாமல் பில், ஒரு மாட்டின் விதைப்பைகளை அறுக்கும் காட்சி நமக்குக் காண்பிக்கப்படுகிறது.

ஆண்மையும் ஆண் என்று கொள்ளும் பெருமையும் எத்தனை பலவீனமான கற்பிதம் என்பதை பில்லின் இளம்பருவத்துக் கதையிலிருந்து வலுவாகக் கட்டியிருக்கிறார் இயக்குனர். பில்லின் தனிமையும், அமைதிகொள்ளாத அகக்கொந்தளிப்பும் காண்பிக்கப்படும் அந்த நதிக்கரைக் காட்சி ஓவியம்
போலப் படைக்கப்பட்டிருக்கிறது.

பெண்மை கொள்ளாத ஆண்மை எத்தனை தனிமையானது, நிர்க்கதியானது என்பதை ஒரு வெஸ்டர்ன் கதைநிலப்பரப்பிலிருந்து சொல்லியிருப்பதன் மூலம் சாதாரண பழிவாங்கும் கதையென்ற அடையாளத்திலிருந்து உயர்ந்துவிடுகிறது இந்தப் படைப்பு. கவித்துவமும் பிரமாண்டமும் நிறைந்த ஆரி வேக்னரின் ஒளிப்பதிவும், ஜானி க்ரீன்வுட்டின் இசையும் ‘தி பவர் ஆப் தி டாக்’ படைப்புக்கு வலுசேர்ப்பவை.

image

நேசத்துக்குரிய கணவன், அன்னியமான இடத்துக்கு தனது இரண்டாவது திருமணத்திற்காக அழைத்துவரப்பட்ட மகன், நிஷ்டூரமான மைத்துன் ஆகியோருக்கு இடையே நிர்கதியாக அல்லாடும் ரோஸாக நடித்த கிர்ஸ்டன் டன்ஸ்ட், பில் கதாபாத்திரத்தில் நடித்த பெனடிக்ட் கும்பர்பேட்ச் ஆகியோருக்கும் சிறந்த நடிப்புக்கான ஆஸ்கர் எதிர்பார்க்கப்பட்டது.

பெண்தன்மை கொண்ட பீட்டராக ‘சிஸ்ஸி’ என்று கேலி செய்யப்பட்டு, பில்லிடம் நெருங்கி அவனது வித்தைகளைக் கற்று, கற்றுத் தந்தவனுக்கே மரணத்தைத் தரும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கோடி ஸ்மித் மெக்பீக்கும் ஆஸ்கர் கிடைக்கும் என்று ஆரூடம் கூறப்பட்டது. என்ன நடக்கிறது என்று துலங்காத மர்மத்தை க்ளைமாக்ஸ் வரை தக்கவைத்திருப்பது அத்தனை சாதாரணமானதல்ல. நிதானமாக, கொஞ்சம் கூடுதலாக அவகாசம் எடுத்துக் கொண்டு அந்த மர்மத்தை நிகழ்த்துவதில் ஜேன் கேம்பியன் வெற்றிகண்டிருக்கிறார்.

-ஷங்கர் ராமசுப்ரமணியன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/Lf4sM3W
via IFTTT

Comments

Popular posts from this blog

‘யோகி பாபுக்காக ஒரு கதை எடுக்க வேண்டும் என்று ஆசை’ -‘பொம்மை நாயகி’ விழாவில் மாரி செல்வராஜ் பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகிபாபு நடித்துள்ள ‘பொம்மை நாயகி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் இன்று நடைபெற்றது. பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘பொம்மை நாயகி’. சிறுமி ஸ்ரீமதி, யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஷான். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள படத்தின் பாடல்களை ‘தெருக்குரல்’ அறிவு எழுதியிருக்கிறார். இந்த விழாவில் அறிமுக இயக்குநர் ஷான் பேசுகையில், “இந்தக் கதை எழுதி முடித்ததும் யாரிடமும் சொல்ல வில்லை. நீண்ட நாட்களாக இந்தக் கதையை வைத்து கொண்டே இருந்தேன். படம் பண்ணினால் நீளம் புரொடக்ஷனில் தான் பண்ண வேண்டும் என்று தீர்க்கமாக இருந்தேன். கதையைப் படித்து கதையில் இருந்த நம்பிக்கையால் இந்தப் படம் எடுக்க முடிந்தது. ‘பரியேறும் பெருமாள்’ படம் பார்த்து யோகி பாபு நடித்தால் எப்படி இருக்கும் என்ற நினைத்தேன். எதார்த்தமான மனிதன் சந்திக்கும் பிரச்சினைகளை எதிர்கொள்ளுவது தான் இந்த படம். எல்லோரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் இது” என்று தெரிவித்தார். இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், “இயக்குநர் இந்த கதையை தான் எடுப்பேன் என்று உறுதியாக இருந்து எடுத்து முடித்தவர். யார் இந்தக் கதையில் நடித்தால் சரி வரும் என்று தேர்வு செய்து பொருத்தமாக எடுத்துள்ளார். நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம் முக்கியமான நபர்கள் வெளி வந்துள்ளனர். ‘வாழை’ படம் முதன் முதலில் நான் எழுதிய கதை. அதை எப்போது எடுப்பேன் என்று எதிர்பார்த்து கொண்டு இருந்தேன். தற்போது அந்தப் படத்தை முடித்து விட்டேன். அடுத்து நான் நீலம் புரொடக்ஷனில் தான் படம் பண்ண போகிறேன். பிற்போக்குத்தனமான ஒரு படத்தை எடுக்க மாட்டேன் என்பது என் கொள்கை. நான் தப்பான படங்களை எடுக்க மாட்டேன். நிஜ கதைகளை உருவாக்கும் போதே இவர்கள் இந்த கதையை தயாரிப்பார்கள் என்ற நிச்சயம் உண்டானால் அது தான் தமிழ் சினிமாவின் வெற்றி. ‘பொம்மை நாயகி’ ஒரு பேரலையாய் அமையும். பெரிய இயக்குனர்கள் அனைவருக்கும் யோகி பாபுவிற்காக கதை எடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும், எனக்கும் அந்த ஆசை உள்ளது” என்று கூறினார். நடிகர் ஜி.எம். குமார் பேசுகையில், “இங்கே நான் வந்ததற்கு காரணம் கதை தான். யோகி பாபு உடன் என்னோட மூணாவது படம். ‘கர்ணன்’ படத்தில் மாரியிடம் யோகி பாபுவால் திட்டு வாங்கினேன். இயக்குநர் பா. ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’ மற்றும் ‘சார்பட்டா பரம்பரை’ படங்களை பார்த்து அசந்து போனேன்” என்று தெரிவித்தார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

நடிகர் மயில்சாமி உடலுக்கு பிரேத பரிசோதனை இல்லை... ஏன்? நடிகர் மயில்சாமிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். சென்னை சாலிகிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தவர் தமிழ் திரைப்பட காமெடி நடிகர் மயில்சாமி. தமிழ் திரைப்படங்களில் சிறந்த காமெடி நடிகராக வலம் வந்த மயில்சாமிக்கு இன்று காலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை அவரது உறவினர்கள் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மயில்சாமி வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மயில்சாமி இறந்த செய்தி கேட்டு அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த போரூர் போலீசார் உயிரிழந்த மயில்சாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மயில்சாமி உயிரிழப்புக்கு காரணம் மாரடைப்பா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரித்து வந்தனர். பின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் மயில்சாமி உடல் பிரேத பரிசோதனை செய்யவில்லை என சொல்லப்பட்டுள்ளது. அதன் பின்னணியாக, அவருக்கு மாரடைப்பு உறுதியானதை மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவர் ஏற்கனவே இதயம் சம்பந்தமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனது உறுதியானது. இறப்புக்கான காரணம் உறுதியானதால், அவரது உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை என்றும் இன்னும் சிறிது நேரத்தில் அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளன. நடிகர் மயில்சாமியின் உயிரிழப்பு தமிழ் திரை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

விஜய்.. கமல்ஹாசன் அடுத்தது?: முன்னணி நடிகர்களின் படங்களைக் கைப்பற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தினை ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. நடிகர் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ படங்களைத் தயாரிப்பதோடு முன்னணி நடிகர்களின் படங்களையும் கைப்பற்றி வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்’, பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’, ராஜமெளலியின் ( ‘ஆர்ஆர்ஆர்’ மூன்று இடங்களில் மட்டும்) உள்ளிட்டப் படங்களை கைப்பற்றி வெளியிட்டது. வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகும் விஜய்யின் ‘பீஸ்ட்’, ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படங்களின் தமிழக ரெட் ஜெயன்ட் மூவிஸ்தான் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் தமிழக உரிமையையும் கைப்பற்றியுள்ளதகாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவிருக்கிறார்கள். ‘விக்ரம்’ வரும் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகிறது. அன்றுதான் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்துவரும் ‘மாமன்னன்’ படத்தினை ரெட் ஜெயன்ட் தான் தயாரிக்கிறது. இதற்கு முன்னதாக, தமிழ் சினிமாவில் ஹாட்ரிக் வெற்றி கொடுத்த இயக்குநர்களில் லோகேஷ் கனகராஜும் ஒருவர். அவரின் ’மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் அடித்து வசூலைக் குவித்ததால் இயக்குநர் நான்காவதாக கமல்ஹாசனை இயக்கும் ‘விக்ரம்’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. கோரோனா சூழலிலும் மக்களை தியேட்டர் நோக்கி வரவைத்தது ‘மாஸ்டர்’. அதன் வெற்றிக்குப்பிறகு விஜய் சேதுபதி - அனிருத்துடன் மீண்டும் ’விக்ரம்’மில் கைக்கோர்த்துள்ளார் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் இப்படத்தில் ஃபகத் ஃபாசிலும் நடிப்பதால் மலையாள ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். காளிதாஸ் ஜெயராம், நரேன், ’பிக்பாஸ்’ ஷிவானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM