விஜயின் ’பீஸ்ட்’ படத்தின் அடுத்த அப்டேட்? - நெல்சன் பகிர்ந்த ட்வீட் நடிகர் விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' படத்தின் ட்ரெய்லர் அல்லது டீசர் வெளியாகலாம் உள்ளிட்ட ஏதாவது ஒரு அப்டேட் நாளை வெளியாகலாம் என அப்படத்தின் இயக்குநர் நெல்சனின் ட்வீட் மூலம் தெரியவந்துள்ளன. ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ ஆகிய வெற்றிப் படங்களுக்குப் பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் படம் ‘பீஸ்ட்’. இந்தப் படத்தில், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜயை வைத்து இயக்கி வருவதால் எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் சாக்கோ, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில், ஏப்ரல் 13-ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. ‘பீஸ்ட்’ படத்திற்கு யு/ஏ தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திலிருந்து இரண்டு பாடல்கள் மட்டுமே வெளியாகிய நிலையில், படம் வெளியாக இன்னும் 15 நாட்களே உள்ளது. இதனால் ‘பீஸ்ட்’ படத்தின் டீசர் அல்லது ட்ரெயிலர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் கேட்கத் துவங்கியுள்ளனர். இந்நிலையில், இந்தப் படத்தின் இயக்குநர் நெல்சன், தனது ட்விட்டர் பக்கத்தில் ‘நாளை...’ என்று மட்டும் பதிவு செய்தள்ளதால், நாளை என்ன அப்டேட் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். மேலும், படத்தின் ட்ரெய்லரை வெளியிட வேண்டும் என்று நெல்சனுக்கு, ரசிகர்கள் கோரிக்கைகள் வைக்கத் தொடங்கியுள்ளனர். ‘கேஜிஎஃப் 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியானதைக் குறிப்பிட்டு, ரசிகர்கள் இந்தக் கோரிக்கையை வைத்து வருகின்றனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

நடிகர் விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' படத்தின் ட்ரெய்லர் அல்லது டீசர் வெளியாகலாம் உள்ளிட்ட ஏதாவது ஒரு அப்டேட் நாளை வெளியாகலாம் என அப்படத்தின் இயக்குநர் நெல்சனின் ட்வீட் மூலம் தெரியவந்துள்ளன.
‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ ஆகிய வெற்றிப் படங்களுக்குப் பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் படம் ‘பீஸ்ட்’. இந்தப் படத்தில், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜயை வைத்து இயக்கி வருவதால் எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது.
இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் சாக்கோ, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில், ஏப்ரல் 13-ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.
‘பீஸ்ட்’ படத்திற்கு யு/ஏ தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திலிருந்து இரண்டு பாடல்கள் மட்டுமே வெளியாகிய நிலையில், படம் வெளியாக இன்னும் 15 நாட்களே உள்ளது. இதனால் ‘பீஸ்ட்’ படத்தின் டீசர் அல்லது ட்ரெயிலர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் கேட்கத் துவங்கியுள்ளனர்.
இந்நிலையில், இந்தப் படத்தின் இயக்குநர் நெல்சன், தனது ட்விட்டர் பக்கத்தில் ‘நாளை...’ என்று மட்டும் பதிவு செய்தள்ளதால், நாளை என்ன அப்டேட் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். மேலும், படத்தின் ட்ரெய்லரை வெளியிட வேண்டும் என்று நெல்சனுக்கு, ரசிகர்கள் கோரிக்கைகள் வைக்கத் தொடங்கியுள்ளனர். ‘கேஜிஎஃப் 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியானதைக் குறிப்பிட்டு, ரசிகர்கள் இந்தக் கோரிக்கையை வைத்து வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/DrnQkF9
via IFTTT
Comments
Post a Comment