Posts

Showing posts from October, 2021

ஜேம்ஸ்பாண்டு கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகர் ஹென்றி கேவில் பெயர் பரிசீலனை ஜேம்ஸ்பாண்டு கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதற்காக பிரபல நடிகர் ஹென்றி கேவில் பெயரும் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மை நேம் ஈஸ் பாண்ட்.ஜேம்ஸ் பாண்ட், உலகெங்கும் உள்ள திரைப்பட ரசிகர்களை மயக்கிய மந்திரச்சொல் இது, பிரிட்டன் உளவுத்துறையின் எம்ஐ6இல் பணிபுரிபவர்தான் ரகசிய ஏஜென்ட் என உருவாக்கப்பட்டதுதான் கற்பனை கதாபாத்திரமான ஜேம்ஸ்பாண்ட். உலகை ஈர்த்த இந்த கதாபாத்திரத்தை பிரபல எழுத்தாளர் இயான் ஃப்ளெமிங் 1953ஆம் ஆண்டு உருவாக்கினார். இக்கதாபாத்திரத்தை வெவ்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு நடிகர்கள் ஏற்று நடித்த போதிலும் ஷான் கானரி, ரோஜர் மூர் உள்ளிட்ட சிலரே புகழ் பெற்றனர். இறுதியாக இந்தாண்டு வெளியான 25ஆவது ஜேம்ஸ்பாண்டு படமான நோ டைம் டு டை படத்தில் டேனியல் கிரெய்க் நடித்தார். இதன் பின் அடுத்த ஜேம்ஸ்பாண்டு படத்தில் புதிய நடிகரை அப்பாத்திரத்தில் நடிக்க வைக்க தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இத்ரிஸ் எல்பா , டாம் ஹார்டி, ரிச்சர்ட் மேடன் , மைக்கேல் ஃபாஸ்பெண்டர் , டேனியல் கலுயா என 5 பேரின் பெயர் பரிசீலனையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இவ்வரிசையில் மற்றொரு பிரபல நடிகர் ஹென்றி கேவில் பெயரும் சேர்ந்துள்ளது. சில படங்களில் சூப்பர் மேன் வேடத்தில் நடித்தவர் ஹென்றி கேவில். கேசினோ ராயல் படத்தில் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்க ஹென்றி கேவில்லின் பெயர் பரிசீலனையில் இருந்தது. ஆனால் அந்த வாய்ப்பு டேனியல் கிரெய்க்கிற்கு போய்விட்டது. தனது தோற்றத்தை சரி செய்து கொண்டு மீண்டும் ஜேம்ஸ்பாண்டு வேடத்தை ஏற்பேன் என அப்போது உறுதிபட கூறியிருந்தார் கேவில். இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு முறை ஹென்றி கேவில் பெயர் ஜேம்ஸ் பாண்டு கதாபாத்திரத்திற்கு அடிபடுகிறது. திரைப்பட ரசிகர்கள் பலரும் ஜேம்ஸ்பாண்டு பாத்திரத்திற்கு ஹென்றி கேவில் பொருத்தமாக இருப்பார் என ட்விட் செய்ய தொடங்கிவிட்டனர். எனினும் ஜேம்ஸ் பாண்டாக நடிக்கும் அதிர்ஷ்டம் யாருக்கு கிடைக்கும் என்பது அடுத்தாண்டுதான் தெரியும். அந்த அதிர்ஷ்டக்காரர் யார் என்பதை ஜேம்ஸ்பாண்டு படத்தின் தயாரிப்பாளர் பார்பரா புரோக்கோலி முடிவு செய்வார். இதனைப்படிக்க...3 நாட்களுக்கு மிக கனமழை - 5 நாட்களுக்கு கனமழை: தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
ஜேம்ஸ்பாண்டு கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதற்காக பிரபல நடிகர் ஹென்றி கேவில் பெயரும் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மை நேம் ஈஸ் பாண்ட்.ஜேம்ஸ் பாண்ட், உலகெங்கும் உள்ள திரைப்பட ரசிகர்களை மயக்கிய மந்திரச்சொல் இது, பிரிட்டன் உளவுத்துறையின் எம்ஐ6இல் பணிபுரிபவர்தான் ரகசிய ஏஜென்ட் என உருவாக்கப்பட்டதுதான் கற்பனை கதாபாத்திரமான ஜேம்ஸ்பாண்ட். உலகை ஈர்த்த இந்த கதாபாத்திரத்தை பிரபல எழுத்தாளர் இயான் ஃப்ளெமிங் 1953ஆம் ஆண்டு உருவாக்கினார். இக்கதாபாத்திரத்தை வெவ்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு நடிகர்கள் ஏற்று நடித்த போதிலும் ஷான் கானரி, ரோஜர் மூர் உள்ளிட்ட சிலரே புகழ் பெற்றனர். இறுதியாக இந்தாண்டு வெளியான 25ஆவது ஜேம்ஸ்பாண்டு படமான நோ டைம் டு டை படத்தில் டேனியல் கிரெய்க் நடித்தார். இதன் பின் அடுத்த ஜேம்ஸ்பாண்டு படத்தில் புதிய நடிகரை அப்பாத்திரத்தில் நடிக்க வைக்க தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இத்ரிஸ் எல்பா , டாம் ஹார்டி, ரிச்சர்ட் மேடன் , மைக்கேல் ஃபாஸ்பெண்டர் , டேனியல் கலுயா என 5 பேரின் பெயர் பரிசீலனையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இவ்வரிசையில் மற்றொரு பிரபல நடிகர் ஹென்றி ...

புனித் ராஜ்குமாரின் மரண செய்தியை கேட்டு ரசிகர் மாரடைப்பால் உயிரிழப்பு கன்னட நட்சத்திர நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் உயிரிழந்த செய்தியை கேட்ட அவரது ரசிகர் ஒருவர், நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். கர்நாடக மாநிலம், சாம்ராஜநகர் மாவட்டத்தில் உள்ள மரூர் கிராமத்தைச் சேர்ந்த புனித் ராஜ்குமாரின் தீவிர ரசிகர் பரசுராம் தேவம்மன்வார் என்பவர், அவரின் மரண செய்தியை கேட்ட அதிர்ச்சியில் நேற்று இரவு 11 மணியளவில் மாரடைப்பால் உயிரிழந்தார். நேற்று காலை நடிகர் புனித்துக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. அதன்பின்னர் அவர் பெங்களூரில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. இதனைப்படிக்க...மாரடைப்பு ஏற்படுவது ஏன்? எப்படி தவிர்க்கலாம்? - நிபுணர்கள் விளக்கம்  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
கன்னட நட்சத்திர நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் உயிரிழந்த செய்தியை கேட்ட அவரது ரசிகர் ஒருவர், நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். கர்நாடக மாநிலம் , சா ம் ராஜநகர் மாவட்டத்தில் உள்ள மரூர் கிராமத்தைச் சேர்ந்த புனித் ராஜ்குமாரின் தீவிர ரசிகர் பரசுராம் தேவம்மன்வார் என்பவர், அவரின் மரண செய்தியை கேட்ட அதிர்ச்சியில் நேற்று இரவு 11 மணியளவில் மாரடைப்பால் உயிரிழந்தார். நேற்று காலை நடிக ர் புனித்து க்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.   அத ன்பின்னர் அவர் பெங்களூரில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டு சிகிச்சை பலனின்றி இறந்தார் . அவரின் உடல் பொதுமக்கள் அஞ்சலி க்காக பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் வைக்கப் பட்டுள்ளது.   நாளை அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. இதனைப்படிக்க... மாரடைப்பு ஏற்படுவது ஏன்? எப்படி தவிர்க்கலாம்? - நிபுணர்கள் விளக்கம்  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3CzVtLO via IFTTT

திட்டமிட்டபடி வெளியாகிறது விஷால் - ஆர்யாவின் எனிமி திரைப்படம் விஷால் - ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி திரைப்படத்திற்கான திரையரங்குகள் கிடைத்து வருகின்றன என திரையரங்க உரிமையாளர்கள் கூறுகின்றனர். ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் - ஆர்யா இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் எனிமி. இந்த திரைப்படத்தை வினோத் என்பவர் தயாரித்திருக்கிறார். தீபாவளிக்கு திரைக்கு வரும் இந்த திரைப்படத்திற்கு சில நாட்களுக்கு முன்பு திரையரங்கு கிடைப்பதில் சிக்கல் உள்ளது என தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, தமிழகத்தின் பல வினியோக பகுதிகளில் எனிமி திரைப்படத்திற்கு திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன என திரைத்துறையினர் கூறுகின்றனர். அதேபோல் இன்னும் சில ஏரியாக்களில் மட்டும் திரையரங்குகளை எனிமி திரைப்படத்திற்கு இறுதி செய்ய வேண்டியுள்ளது. அந்த வேலைகளும் திங்கட்கிழமை முடிந்துவிடும் என தெரிவிக்கின்றனர். இதனால் எனிமி திரைப்படம் திட்டமிட்டபடி தீபாவளியன்று வெளியாகிறது. இந்த படம் தமிழகம் தவிர தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட இடங்களிலும் வெளியாகிறது. அதேபோல் ஹிந்தியில் ஒரு வாரத்திற்குப் பிறகு வெளியாகும் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். - செந்தில்ராஜா  பொது இடங்களில் குப்பைகள் கொட்டுபவர்களுக்கு அபராதம்: சென்னை மாநகராட்சி   Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
விஷால் - ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி திரைப்படத்திற்கான திரையரங்குகள் கிடைத்து வருகின்றன என திரையரங்க உரிமையாளர்கள் கூறுகின்றனர். ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் - ஆர்யா இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் எனிமி. இந்த திரைப்படத்தை வினோத் என்பவர் தயாரித்திருக்கிறார். தீபாவளிக்கு திரைக்கு வரும் இந்த திரைப்படத்திற்கு சில நாட்களுக்கு முன்பு திரையரங்கு கிடைப்பதில் சிக்கல் உள்ளது என தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, தமிழகத்தின் பல வினியோக பகுதிகளில் எனிமி திரைப்படத்திற்கு திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன என திரைத்துறையினர் கூறுகின்றனர். அதேபோல் இன்னும் சில ஏரியாக்களில் மட்டும் திரையரங்குகளை எனிமி திரைப்படத்திற்கு இறுதி செய்ய வேண்டியுள்ளது. அந்த வேலைகளும் திங்கட்கிழமை முடிந்துவிடும் என தெரிவிக்கின்றனர். இதனால் எனிமி திரைப்படம் திட்டமிட்டபடி தீபாவளியன்று வெளியாகிறது. இந்த படம் தமிழகம் தவிர தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட இடங்களிலும் வெளியாகிறது. அதேபோல் ஹிந்தியில் ஒரு வாரத்திற்குப் பிறகு வெளியாகும் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். - ச...

புனித் ராஜ்குமார் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய சினிமா பிரபலங்கள்! நடிகர் புனித் ராஜ்குமார் உடலுக்கு நடிகர் நடிகர்கள் சிரஞ்சீவி, பிரபுதேவா, அர்ஜுன் உள்ளிட்டவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். 46 வயதான பிரபல கன்னட நடிகர் புனித ராஜ்குமார், நேற்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதனையொட்டி, அவரது உடல் பொதுமக்களும் திரைத்துறையினரும் அஞ்சலி செலுத்த காண்டிவரா மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, ஜூனியர் என்.டி.ஆர், பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், ராணா டகுபதி உள்ளிட்ட தெலுங்கு நடிகர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். நடிகர் பிரபுதேவா, அர்ஜுன் உள்ளிட்ட தமிழ் நடிகர்களும் அஞ்சலி செலுத்தினார்கள். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
நடிகர் புனித் ராஜ்குமார் உடலுக்கு நடிகர் நடிகர்கள் சிரஞ்சீவி, பிரபுதேவா, அர்ஜுன் உள்ளிட்டவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். 46 வயதான பிரபல கன்னட நடிகர் புனித ராஜ்குமார், நேற்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதனையொட்டி, அவரது உடல் பொதுமக்களும் திரைத்துறையினரும் அஞ்சலி செலுத்த காண்டிவரா மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, ஜூனியர் என்.டி.ஆர், பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், ராணா டகுபதி உள்ளிட்ட தெலுங்கு நடிகர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். நடிகர் பிரபுதேவா, அர்ஜுன் உள்ளிட்ட தமிழ் நடிகர்களும் அஞ்சலி செலுத்தினார்கள். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3nK5JLm via IFTTT

ஒரே நாளில் வெளியாகும் சசிகுமாரின் இரண்டு படங்கள் சசிகுமார் நடித்துள்ள 'ராஜவம்சம்’ மற்றும் ’கொம்பு வச்ச சிங்கம்டா’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே தேதியில் வெளியாகும் என அறிவித்துள்ளனர். நடிகர் எம்.சசிகுமார் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் ’கொம்பு வச்ச சிங்கம்டா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை இந்திர குமார் என்பவர் தயாரித்துள்ளார். இதற்கான அனைத்து வேலைகளும் முடிவடைந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் வெளியீட்டுக்காக காத்திருக்கின்றது. அதேபோல் சசிகுமார் நடித்துள்ள மற்றொரு படமான ’ராஜவம்சம்’ திரைப்படமும் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. இந்தப் படத்தை கோடியில் ஒருவன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ராஜா தயாரித்துள்ளார். இதில் ’கொம்பு வச்ச சிங்கம்டா’ திரைப்படம் நவம்பர் 26 ஆம் தேதி வெளியாகும் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ’ராஜவம்சம்’ திரைப்படமும் அதே தேதியில் வெளியாகிறது என இன்று அறிவித்துள்ளனர். இதற்கு இரண்டு தயாரிப்பாளர்களுக்கு இடையேயான பிரச்னையே காரணம் எனக் கூறப்படுகிறது. இருந்தபோதிலும் ஒரு நடிகரின் இரண்டு படங்கள், ஒரே நாளில் வெளியானால் நிச்சயம் தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சினிமா துறையினர் கூறுகின்றனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
சசிகுமார் நடித்துள்ள 'ராஜவம்சம்’ மற்றும் ’கொம்பு வச்ச சிங்கம்டா’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே தேதியில் வெளியாகும் என அறிவித்துள்ளனர். நடிகர் எம்.சசிகுமார் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் ’கொம்பு வச்ச சிங்கம்டா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை இந்திர குமார் என்பவர் தயாரித்துள்ளார். இதற்கான அனைத்து வேலைகளும் முடிவடைந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் வெளியீட்டுக்காக காத்திருக்கின்றது. அதேபோல் சசிகுமார் நடித்துள்ள மற்றொரு படமான ’ராஜவம்சம்’ திரைப்படமும் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. இந்தப் படத்தை கோடியில் ஒருவன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ராஜா தயாரித்துள்ளார். இதில் ’கொம்பு வச்ச சிங்கம்டா’ திரைப்படம் நவம்பர் 26 ஆம் தேதி வெளியாகும் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ’ராஜவம்சம்’ திரைப்படமும் அதே தேதியில் வெளியாகிறது என இன்று அறிவித்துள்ளனர். இதற்கு இரண்டு தயாரிப்பாளர்களுக்கு இடையேயான பிரச்னையே காரணம் எனக் கூறப்படுகிறது. இருந்தபோதிலும் ஒரு நடிகரின் இரண்டு படங்கள், ஒரே நாளில் வெளியானால் நிச்சயம் தயாரிப்பாளர்களுக்கு ...

கவனம் ஈர்த்த ‘டாக்டர்’ படத்தின் ‘சோ பேபி’ பாடல் வீடியோ வெளியீடு நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ படத்தின் ‘சோ பேபி’ பாடல் வீடியோ வெளியாகி இருக்கிறது. கடந்த 9 ஆம் தேதி நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ படத்தின் ‘சோ பேபி’ பாடல் வீடியோ நேற்று வெளியாயாவதாக இருந்தது. சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் பாடிய இப்பாடலின் ஆடியோ ஏற்கெனவே வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. ஆனால், கன்னட சினிமா சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மறைவால் பாடல் வெளியீட்டை ஒத்தி வைத்தது படக்குழு. இந்த நிலையில் தற்போது ‘சோ பேபி’ பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. கடந்த வாரம் ‘செல்லம்மா’ பாடல் யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தையும் இதுவரை 11 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ படத்தின் ‘சோ பேபி’ பாடல் வீடியோ வெளியாகி இருக்கிறது. கடந்த 9 ஆம் தேதி நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ படத்தின் ‘சோ பேபி’ பாடல் வீடியோ நேற்று வெளியாயாவதாக இருந்தது. சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் பாடிய இப்பாடலின் ஆடியோ ஏற்கெனவே வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. ஆனால், கன்னட சினிமா சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மறைவால் பாடல் வெளியீட்டை ஒத்தி வைத்தது படக்குழு. இந்த நிலையில் தற்போது ‘சோ பேபி’ பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. கடந்த வாரம் ‘செல்லம்மா’ பாடல் யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தையும் இதுவரை 11 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3pNgWgN via IFTTT

"பிக்பாஸில் திருநங்கைக்கு வாய்ப்பு அளித்தது மிகவும் வரவேற்கத்தக்கது; ஆனால்?"- ஆரி பேட்டி ” ’பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் திருநங்கைக்கு வாய்ப்பு அளித்தது வரவேற்கத்தக்கது” என்று நடிகர் ஆரி பேசியுள்ளார். பூந்தமல்லியில் சொல் விளையாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நடிகர் ஆரி கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், ”பள்ளிகள் திறப்பது சந்தோஷமாக உள்ளது. குழந்தைகள் உற்சாகமாக பள்ளிக்குச் செல்வது முக்கியம். இரண்டு ஆண்டுகளாக மாணவர்கள் இழந்ததை மீண்டும் பெற்றுள்ளார்கள். அதேபோல, தியேட்டர்களை 100 சதவீத பார்வையாளர்களுடன் முழுமையாக திறப்பது சந்தோஷமாக உள்ளது. நாம் பாதுகாப்பாக இருந்தால் மீண்டும் ஒரு ஊரடங்கை தவிர்க்கலாம். வசதி, வாய்ப்பு இல்லாதவர்களுக்கு கல்வி தேடிச் சென்று கற்றுக் கொள்ளும் சூழல் இருந்த நிலையில் ’இல்லம் தேடி கல்வி’ நல்ல விஷயம், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பெரிய வாய்ப்பாக இருக்கும்” என்றவர், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் திருநங்கைக்கு வாய்ப்பளித்தது குறித்து வரவேற்று பேசியுள்ளார். ”பிக்பாஸ் நிகழ்ச்சியில் திருநங்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து வாய்ப்பளித்தது மிகவும் வரவேற்கத்தக்கது. ஆனால், திருநங்கை வெளியேற்றப்பட்டதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. சான்றிதழில்கூட ஆண், பெண் என உள்ளது. மூன்றாம் பாலினம் என்பது இல்லை. அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என்றார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
” ’பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் திருநங்கைக்கு வாய்ப்பு அளித்தது வரவேற்கத்தக்கது” என்று நடிகர் ஆரி பேசியுள்ளார். பூந்தமல்லியில் சொல் விளையாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நடிகர் ஆரி கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், ”பள்ளிகள் திறப்பது சந்தோஷமாக உள்ளது. குழந்தைகள் உற்சாகமாக பள்ளிக்குச் செல்வது முக்கியம். இரண்டு ஆண்டுகளாக மாணவர்கள் இழந்ததை மீண்டும் பெற்றுள்ளார்கள். அதேபோல, தியேட்டர்களை 100 சதவீத பார்வையாளர்களுடன் முழுமையாக திறப்பது சந்தோஷமாக உள்ளது. நாம் பாதுகாப்பாக இருந்தால் மீண்டும் ஒரு ஊரடங்கை தவிர்க்கலாம். வசதி, வாய்ப்பு இல்லாதவர்களுக்கு கல்வி தேடிச் சென்று கற்றுக் கொள்ளும் சூழல் இருந்த நிலையில் ’இல்லம் தேடி கல்வி’ நல்ல விஷயம், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பெரிய வாய்ப்பாக இருக்கும்” என்றவர், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் திருநங்கைக்கு வாய்ப்பளித்தது குறித்து வரவேற்று பேசியுள்ளார். ”பிக்பாஸ் நிகழ்ச்சியில் திருநங்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து வாய்ப்பளித்தது மிகவும் வரவேற்கத்தக்கது. ஆனால், திருநங்கை வெளிய...

100 கோடி வசூலை நெருங்கும் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ 100 கோடி ரூபாய் வசூலை நெருங்கிக்கொண்டிருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘ஹீரோ’ படத்திற்குப் பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘டாக்டர்’ படத்தில் நடித்திருந்தார். கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட் அடித்து தற்போதுவரை ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. பிரியங்கா அருள்மோகன் ஹீரோயினாக நடித்துள்ளார்.யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, தீபா, அர்ச்சனா உள்ளிட்டோர் நடிப்பில் கவனம் ஈர்த்தார்கள். கடந்த 27 ஆம் தேதி கேரளாவிலும் டாக்டர் வெளியிடப்பட்டது. அங்கும் தற்போது ஹவுஸ்ஃபுல்லாக ஓடி வெளியான இரண்டே நாளில் 66 லட்சம் வசூலைக் குவித்துள்ளது. இந்த நிலையில், ‘டாக்டர்’ உலகம் முழுக்க வசூலில் 100 கோடியை நெருங்கிக்கொண்டிருக்கிறது என்றும் தற்போதுவரை 96 கோடி ரூபாய் உலகம் முழுக்க வசூல் செய்துள்ளது என்றும் சொல்லப்படுகிறது. தமிழகத்தில் மட்டுமே 68 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ 100 கோடி ரூபாய் வசூலை நெருங்கிக்கொண்டிருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘ஹீரோ’ படத்திற்குப் பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘டாக்டர்’ படத்தில் நடித்திருந்தார். கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட் அடித்து தற்போதுவரை ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. பிரியங்கா அருள்மோகன் ஹீரோயினாக நடித்துள்ளார்.யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, தீபா, அர்ச்சனா உள்ளிட்டோர் நடிப்பில் கவனம் ஈர்த்தார்கள். கடந்த 27 ஆம் தேதி கேரளாவிலும் டாக்டர் வெளியிடப்பட்டது. அங்கும் தற்போது ஹவுஸ்ஃபுல்லாக ஓடி வெளியான இரண்டே நாளில் 66 லட்சம் வசூலைக் குவித்துள்ளது. இந்த நிலையில், ‘டாக்டர்’ உலகம் முழுக்க வசூலில் 100 கோடியை நெருங்கிக்கொண்டிருக்கிறது என்றும் தற்போதுவரை 96 கோடி ரூபாய் உலகம் முழுக்க வசூல் செய்துள்ளது என்றும் சொல்லப்படுகிறது. தமிழகத்தில் மட்டுமே 68 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Ta...

’ரோஜா’ சீரியல் அக்‌ஷயாவுக்கு கொரோனா தொற்று உறுதி சீரியல் நடிகை அக்‌ஷயாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் ’ரோஜா’. நாயகியாக பிரியங்கா நல்காரி, வில்லியாக விஜே அக்‌ஷயா நடித்து வருகின்றனர். டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பால் மிரட்டி வருபவர் விஜே அக்‌ஷயா. இவருக்கு தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்திருக்கிறார். அதில்,” எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். ஆனால், நான் கொரோனா தடுப்பூசி போட்டப்பின்பும் துரதிஷ்டவசமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தயவு செய்து வெளியில் செல்வதை தவிருங்கள். மாஸ்க் அணியுங்கள். விரைவில் மீண்டு வருவேன். எனக்காக பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள்” என்று கூறியிருக்கிறார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
சீரியல் நடிகை அக்‌ஷயாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் ’ரோஜா’. நாயகியாக பிரியங்கா நல்காரி, வில்லியாக விஜே அக்‌ஷயா நடித்து வருகின்றனர். டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பால் மிரட்டி வருபவர் விஜே அக்‌ஷயா. இவருக்கு தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்திருக்கிறார். அதில்,” எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். ஆனால், நான் கொரோனா தடுப்பூசி போட்டப்பின்பும் துரதிஷ்டவசமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தயவு செய்து வெளியில் செல்வதை தவிருங்கள். மாஸ்க் அணியுங்கள். விரைவில் மீண்டு வருவேன். எனக்காக பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள்” என்று கூறியிருக்கிறார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3BnBZIU via IFTTT

தாம்பரத்தில் நடைபெறும் கமல்ஹாசனின் ’விக்ரம்’ படப்பிடிப்பு கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படப்பிடிப்பு தாம்பரத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த வருடம் கமல்ஹாசனின் பிறந்தநாளின்போது கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இணையும் ‘விக்ரம்’ படத்தின் அறிவிப்பும் தலைப்பும் வெளியானது. கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கடந்த ஜூலை மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து இரண்டு வாரங்கள் படக்குழுவிற்கு பிரேக் விடப்பட்டது. இந்த நிலையில், ‘விக்ரம்’ படத்தின் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பை நடத்த சென்னை எழும்பூரில் உள்ள காவல் அருங்காட்சியகத்தில் அக்டோபர் 26, 27 ஆம் தேதி படக்குழு சார்பில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு, கமிஷ்னர் அலுவலகம் கொரோனா விதிமுறைகளைக்கூறி அனுமதி மறுத்துள்ளது”. இந்த நிலையில், ‘விக்ரம்’ படப்பிடிப்பு தற்போது சென்னை தாம்பரம் அருகேயுள்ள சாய்ராம் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. கல்லூரியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசன் இருக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படப்பிடிப்பு தாம்பரத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த வருடம் கமல்ஹாசனின் பிறந்தநாளின்போது கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இணையும் ‘விக்ரம்’ படத்தின் அறிவிப்பும் தலைப்பும் வெளியானது. கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கடந்த ஜூலை மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து இரண்டு வாரங்கள் படக்குழுவிற்கு பிரேக் விடப்பட்டது. இந்த நிலையில், ‘விக்ரம்’ படத்தின் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பை நடத்த சென்னை எழும்பூரில் உள்ள காவல் அருங்காட்சியகத்தில் அக்டோபர் 26, 27 ஆம் தேதி படக்குழு சார்பில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு, கமிஷ்னர் அலுவலகம் கொரோனா விதிமுறைகளைக்கூறி அனுமதி மறுத்துள்ளது”. இந்த நிலையில், ‘விக்ரம்’ படப்பிடிப்பு தற்போது சென்னை தாம்பரம் அருகேயுள்ள சாய்ராம் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. கல்லூரியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசன் இருக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM ...

’சார்பட்டா’ படத்திற்காக பாக்ஸிங் கற்ற ஆர்யா என்னை அடி வெளுத்துவிட்டான்’- விஷால் ’சார்பட்டா’ படத்திற்காக பாக்ஸிங் கற்ற ஆர்யா என்னை அடி வெலுத்துவிட்டான்’என்று நடிகர் விஷால் கூறியிருக்கிறார். தீபாவளிக்கு விஷால் ஆர்யா நடிப்பில் த்ரில்லர் திரைப்படமாக ’எனிமி’ வெளியாகிறது. படவெளியீட்டை ஒட்டி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் விஷால்,ஆர்யா, மிருணாளினி, இயக்குநர் ஆனந்த் சங்கர், கருணாகரன், தயாரிப்பாளர் வினோத்குமார் கலந்து கொண்டனர் இந்நிகழ்வில் விஷால் பேசும்போது, “எனிமி தீபாவளிக்கு வருகிறது. ஒவ்வொரு நாளும் நான் வீட்டுக்கு சந்தோஷமாக போகிறேன் என்றால் அதற்கு தயாரிப்பாளர் வினோத்குமார்தான் காரணம். எனக்கு ஒரு நல்ல ஒரு தயாரிப்பாளர் கிடைத்துள்ளார். அவர் பணத்தை மனதில் வைத்து படத்தை தயாரிக்கவில்லை. அவர் நினைத்திருந்தால் இந்த படத்தை ஓடிடி க்கு பெரிய விலைக்கு விற்றிருக்கலாம். ஆனால் ரசிகர்கள் தியேட்டரில் ரசிக்க வேண்டுமென படத்தை தியேட்டருக்கு கொண்டுவந்ததற்கே அவரை வணங்க வேண்டும். அவருடன் அடுத்து ஒரு படத்திலும் இணைகிறேன். ஆனந்த் சங்கர் ஈகோ இல்லாத ஒரு மனிதர். அவர் முதலில் என்னிடம் கதை சொன்னபோது இந்தக்கதையில் ஜாமி ( ஆர்யா) இருந்தால் நன்றாக இருக்கும், அவரது பாத்திரத்தை இன்னும் வலுவாக்கினால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன். அற்புதமான திரைக்கதையுடன் வந்தார். அவரது கற்பனை தான் இந்தப்படம். ஆர்யாவிடம்.. உலகமே அழியப்போகிறது என்று சொன்னால், அசராமல் இரு சைக்கிளிங் முடித்து விட்டு வருகிறேன் என்று சொல்வார். எதையும் சீரியஸாக எடுத்து கொள்ள மாட்டார். இப்போது என்ன வென்று தெரியவில்லை திடீரென நன்றாக நடிக்க ஆரம்பித்து விட்டார். இந்தப்படத்தில் ஒரு சண்டைக்காட்சியில் நடிக்கும் போது, அப்போது தான் சர்பாட்டா நடித்துவிட்டு வந்தார். உண்மையிலேயே பாக்ஸிங் கற்றுக்கொண்டு வந்து என்னை அடி வெளுத்து விட்டான். ஏற்கனவே அவருடன் அவன் இவன் செய்திருக்கிறேன் இந்தப்படமும் சூப்பராக இருக்கும். இன்னும் 10 வருடம் கழித்து பார்க்கும் போதும் இதே நள ரசனையோடு இருக்கும். அவருடன் இணைந்து மீண்டும் படம் செய்ய காத்திருக்கிறேன். மிருணாளினி ஆல்வேஸ் வெல்கம். நன்றாக நடித்திருக்கிறார். அடுத்தமுறை, தயக்கமில்லாமல் நீங்கள் நடிக்கலாம். கருணாகரன் உடன் நடிக்கும்போது சிரிக்காமல் இருக்க முடியாது. அவர் நடிக்கும் போது நானும் மிருளானியும் சிரித்து கொண்டே இருப்போம். 600 தியேட்டருக்கு மேல் தெலுங்கானா ஆந்திராவில் இப்படம் வெளியாகபோகிறது. மிக பிரமாண்டமாக இப்படம் வெளியாகவுள்ளது நீங்கள் திரையில் ரசித்து பார்க்கும் படமாக இப்படம் இருக்கும். படத்தில் முதல் பத்து நிமிடங்கள் நானும் ஆர்யாவும் இருக்க மாட்டோம் இரண்டு சின்ன பையன்கள் நடித்திருக்கிறார்கள் அவர்களிடம் நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அட்டகாசமாக நடித்துள்ளார்கள்” என்று உற்சாகமுடன் கூறியிருக்கிறார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
’சார்பட்டா’ படத்திற்காக பாக்ஸிங் கற்ற ஆர்யா என்னை அடி வெலுத்துவிட்டான்’என்று நடிகர் விஷால் கூறியிருக்கிறார். தீபாவளிக்கு விஷால் ஆர்யா நடிப்பில் த்ரில்லர் திரைப்படமாக ’எனிமி’ வெளியாகிறது. படவெளியீட்டை ஒட்டி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் விஷால்,ஆர்யா, மிருணாளினி, இயக்குநர் ஆனந்த் சங்கர், கருணாகரன், தயாரிப்பாளர் வினோத்குமார் கலந்து கொண்டனர் இந்நிகழ்வில் விஷால் பேசும்போது, “எனிமி தீபாவளிக்கு வருகிறது. ஒவ்வொரு நாளும் நான் வீட்டுக்கு சந்தோஷமாக போகிறேன் என்றால் அதற்கு தயாரிப்பாளர் வினோத்குமார்தான் காரணம். எனக்கு ஒரு நல்ல ஒரு தயாரிப்பாளர் கிடைத்துள்ளார். அவர் பணத்தை மனதில் வைத்து படத்தை தயாரிக்கவில்லை. அவர் நினைத்திருந்தால் இந்த படத்தை ஓடிடி க்கு பெரிய விலைக்கு விற்றிருக்கலாம். ஆனால் ரசிகர்கள் தியேட்டரில் ரசிக்க வேண்டுமென படத்தை தியேட்டருக்கு கொண்டுவந்ததற்கே அவரை வணங்க வேண்டும். அவருடன் அடுத்து ஒரு படத்திலும் இணைகிறேன். ஆனந்த் சங்கர் ஈகோ இல்லாத ஒரு மனிதர். அவர் முதலில் என்னிடம் கதை சொன்னபோது இந்தக்கதையில் ஜாமி ( ஆர்யா) இருந்தால் நன்றாக இருக்கும், அவரது பாத்திரத்தை இன்னும் வலுவாக்கினால் ந...

வெற்றிமாறனின் ‘விடுதலை’: இளையராஜா இசையில் பாடல் பாடியுள்ள தனுஷ் வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தில் தனுஷ் ஒரு பாடல் பாடியிருக்கிறார். ’அசுரன்’ பட வெற்றிக்குப் பிறகு, வெற்றிமாறன், பாவக்கதைகள் படத்தில் இடம்பெற்ற நான்கு பாகங்களில் ஒன்றான ‘ஓர் இரவு’ என்ற கதையை இயக்கி இருந்தார்.அதன்பிறகு, தற்போது ஜெயமோகனின் ’துணைவன்’ சிறுகதையை எடுத்து சூரியை வைத்து ’விடுதலை’ படத்தினை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில், சூரியுடன் விஜய் சேதுபதியும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இளையராஜா இசையமைக்க, எல்ரெட் குமார் தயாரித்துள்ளார்.பிரகாஷ் ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் படப்பிடிப்பை முடித்த கையோடு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படத்தின் தலைப்பையும் வெளியிட்டது படக்குழு. இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது, ”’விடுதலை’ படத்தில் தனுஷ் ஒரு பாடல் பாடியிருக்கிறார். அவருக்கு, நான்கு மணிநேரம் இளையராஜா சார் சொல்லிக்கொடுத்து பாட வைத்தார் . தனுஷ் கொஞ்சம் கூட டயர்ட் ஆகல” கூறியுள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தில் தனுஷ் ஒரு பாடல் பாடியிருக்கிறார். ’அசுரன்’ பட வெற்றிக்குப் பிறகு, வெற்றிமாறன், பாவக்கதைகள் படத்தில் இடம்பெற்ற நான்கு பாகங்களில் ஒன்றான ‘ஓர் இரவு’ என்ற கதையை இயக்கி இருந்தார்.அதன்பிறகு, தற்போது ஜெயமோகனின் ’துணைவன்’ சிறுகதையை எடுத்து சூரியை வைத்து ’விடுதலை’ படத்தினை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில், சூரியுடன் விஜய் சேதுபதியும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இளையராஜா இசையமைக்க, எல்ரெட் குமார் தயாரித்துள்ளார்.பிரகாஷ் ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் படப்பிடிப்பை முடித்த கையோடு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படத்தின் தலைப்பையும் வெளியிட்டது படக்குழு. இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது, ”’விடுதலை’ படத்தில் தனுஷ் ஒரு பாடல் பாடியிருக்கிறார். அவருக்கு, நான்கு மணிநேரம் இளையராஜா சார் சொல்லிக்கொடுத்து பாட வைத்தார் . தனுஷ் கொஞ்சம் கூட டயர்ட் ஆகல” கூறியுள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil...

நவம்பர் 1-ல் வெளியாகும் ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ கிளிம்ப்ஸ் ராஜமெளலியின் ’ஆர்ஆர்ஆர்’ படத்தின் கிளிம்ப்ஸ் வரும் நவம்பர் 1-ஆம் தேதி வெளியாகிறது. ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ராஜமௌலி இயக்கியுள்ள 'ஆர்ஆர்ஆர்' படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியா பட், பிரகாஷ் ராஜ் நடிப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. வரும் அக்டோபர் 13-ஆம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தது படக்குழு. ஆனால், தியேட்டர்கள் திறக்கப்படாததால் ‘ஆர்ஆர்ஆர்’ படம் வரும் ஜனவரி 7-ஆம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியாகிறது என்று படக்குழு சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. இந்த நிலையில், படத்தின் முன்னோட்ட வீடியோ எனப்படம் கிளிம்ப்ஸ் வரும் நவம்பர் 1 ஆம் தேதி 11 மணிக்கு வெளியாகிறது என்று படக்குழு அறிவித்துள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
ராஜமெளலியின் ’ஆர்ஆர்ஆர்’ படத்தின் கிளிம்ப்ஸ் வரும் நவம்பர் 1-ஆம் தேதி வெளியாகிறது. ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ராஜமௌலி இயக்கியுள்ள 'ஆர்ஆர்ஆர்' படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியா பட், பிரகாஷ் ராஜ் நடிப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. வரும் அக்டோபர் 13-ஆம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தது படக்குழு. ஆனால், தியேட்டர்கள் திறக்கப்படாததால் ‘ஆர்ஆர்ஆர்’ படம் வரும் ஜனவரி 7-ஆம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியாகிறது என்று படக்குழு சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. இந்த நிலையில், படத்தின் முன்னோட்ட வீடியோ எனப்படம் கிளிம்ப்ஸ் வரும் நவம்பர் 1 ஆம் தேதி 11 மணிக்கு வெளியாகிறது என்று படக்குழு அறிவித்துள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2Y2tPbo via IFTTT

"திரையரங்கில்தான் எனிமி படத்தை வெளியிட வேண்டும் என தயாரிப்பாளர் விரும்பினார்" - விஷால் எனிமி திரைப்படத்தை தயாரிப்பாளர் நினைத்திருந்தால் ஓ.டி.டி தளத்தில் வெளியிட்டு லாபம் பார்த்திருக்கலாம். ஆனால் திரையரங்கில் தான் வெளியிட வேண்டும் என்பதில் தயாரிப்பாளர் உறுதியாக இருந்தார் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.  விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ள திரைப்படம் எனிமி. இந்தப் படத்தை வினோத் என்பவர் தயாரித்துள்ளார். இதற்கான  செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் விஷால், ஆர்யா, மிருணாளினி ரவி, கருணாகரன் கலை இயக்குனர் ராமலிங்கம் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். அதில் பேசிய நடிகர் ஆர்யா, "அவன் இவன் திரைப்படத்திற்கு பிறகு நாங்கள் இருவரும் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படத்தில் இரண்டு கதாபாத்திரங்களும் வலிமை வாய்ந்ததாக இருக்கும். சண்டைக்காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார். அவரைத் தொடர்ந்து பேசிய விஷால், “எனிமி திரைப்படத்தை நேரடியாக ஓ.டி.டியில் வெளியிட்டு பெரும் லாபம் எடுத்து இருக்கலாம். ஆனால், இந்தப் படத்தை ரசிகர்கள் திரையரங்கில் தான் பார்க்க வேண்டும். எனவே திரையரங்கில் தான் வெளியிடுவேன் என உறுதியாக காத்திருந்தார். எனிமி திரைப்படம் சிறப்பான முறையில் உருவாகியுள்ளது. இயக்குனர் திரை வாழ்வில் மட்டுமல்லாமல் என்னுடைய திரை வாழ்விலும் எனிமி சிறந்த படமாக இருக்கும். படத்திற்கு பின்னணி இசை அமைத்துள்ள சாம்.சி.எஸ் சிறப்பான இசையை கொடுத்திருக்கிறார். ஆக்ஷன் திரில்லர் வகையில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக திரையரங்குகளில் வெளியாகும்” எனத் தெரிவித்தார். இதையும் படிக்கலாம் : டி20 உலகக் கோப்பை : பனி பொழிவினால் திசை மாறுகிறதா அணிகளின் வெற்றி வாய்ப்பு? - ஓர் அலசல் Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
எனிமி திரைப்படத்தை தயாரிப்பாளர் நினைத்திருந்தால் ஓ.டி.டி தளத்தில் வெளியிட்டு லாபம் பார்த்திருக்கலாம். ஆனால் திரையரங்கில் தான் வெளியிட வேண்டும் என்பதில் தயாரிப்பாளர் உறுதியாக இருந்தார் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.  விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ள திரைப்படம் எனிமி. இந்தப் படத்தை வினோத் என்பவர் தயாரித்துள்ளார். இதற்கான  செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் விஷால், ஆர்யா, மிருணாளினி ரவி, கருணாகரன் கலை இயக்குனர் ராமலிங்கம் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். அதில் பேசிய நடிகர் ஆர்யா, "அவன் இவன் திரைப்படத்திற்கு பிறகு நாங்கள் இருவரும் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படத்தில் இரண்டு கதாபாத்திரங்களும் வலிமை வாய்ந்ததாக இருக்கும். சண்டைக்காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார். அவரைத் தொடர்ந்து பேசிய விஷால், “எனிமி திரைப்படத்தை நேரடியாக ஓ.டி.டியில் வெளியிட்டு பெரும் லாபம் எடுத்து இருக்கலாம். ஆனால், இந்தப் படத்தை ரசிகர்கள் திரையரங்கில் தான் பார்க்க வேண்டும். எனவே திரையரங்கில் தான் வெளியிடுவேன் என உறுதியாக காத்...

புனித் ராஜ்குமார் மறைவால் ‘சோ பேபி’ பாடல் வெளியீட்டை தள்ளிவைத்த சிவகார்த்திகேயன் கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவால் நடிகர் சிவகார்த்திகேயன் ‘டாக்டர்’ படத்தின் ‘சோ பேபி’ பாடல் வீடியோ வெளியீட்டை தள்ளி வைத்துள்ளார். மாரடைப்புக் காரணமாக பெங்களுருவில் உள்ள விக்ரம் தனியார் மத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த புனித் ராஜ்குமார் மாரடைப்பால் இன்று உயிரிழந்தார். இந்த நிலையில் கடந்த 9 ஆம் தேதி வெளியான ‘டாக்டர்’ படத்தின் ‘சோ பேபி’ பாடலின் வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாவதாக இருந்தது. சிவகார்த்திகேயன் எழுதிய இப்பாடலின் ஆடியோ ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இன்னும் வீடியோ பாடல் வெளியாகவில்லை. கடந்த வாரம் ‘செல்லம்மா’ பாடல் வெளியான நிலையில், இன்று வெளியிட அறிவித்தது படக்குழு. ஆனால், புனித் ராஜ்குமார் மறைவால் பாடல் வெளியீட்டை தள்ளிவைத்து அறிவித்திருக்கிறது படக்குழு. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவால் நடிகர் சிவகார்த்திகேயன் ‘டாக்டர்’ படத்தின் ‘சோ பேபி’ பாடல் வீடியோ வெளியீட்டை தள்ளி வைத்துள்ளார். மாரடைப்புக் காரணமாக பெங்களுருவில் உள்ள விக்ரம் தனியார் மத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த புனித் ராஜ்குமார் மாரடைப்பால் இன்று உயிரிழந்தார். இந்த நிலையில் கடந்த 9 ஆம் தேதி வெளியான ‘டாக்டர்’ படத்தின் ‘சோ பேபி’ பாடலின் வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாவதாக இருந்தது. சிவகார்த்திகேயன் எழுதிய இப்பாடலின் ஆடியோ ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இன்னும் வீடியோ பாடல் வெளியாகவில்லை. கடந்த வாரம் ‘செல்லம்மா’ பாடல் வெளியான நிலையில், இன்று வெளியிட அறிவித்தது படக்குழு. ஆனால், புனித் ராஜ்குமார் மறைவால் பாடல் வெளியீட்டை தள்ளிவைத்து அறிவித்திருக்கிறது படக்குழு. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3jQyjJU via IFTTT

ஆர்யன் கான் பிணையில் வெளிவர ஷூரிட்டி கொடுத்த ஷாருக்கான் பட கதாநாயகி! ஆர்யன் கான் பிணையில் வெளிவர ஷூரிட்டி கொடுத்துள்ளார் நடிகர் ஷாருக்கானின் கதாநாயகி இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் ஷாருக்கான். இவரது மகன் ஆர்யன் கான் அண்மையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சுமார் 22 நாட்கள் சிறைவாசம் இருந்த அவரை பிணையில் கொண்டு வர உதவியுள்ளார் ஷாருக்கான் உடன் ஆரம்ப காலங்களில் கதாநாயகியாக நடித்த ஜூஹி சாவ்லா.  ஆர்யன் கானுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம் ஒரு லட்ச ரூபாய் ரொக்கத்தை செலுத்துமாறு பணித்துள்ளது. அதை அவர் செலுத்த தவறினால் அதற்கு தான் பொறுப்பு என்பதற்கான உத்தரவாதத்தை நீதிமன்றத்தில் ஆஜராகி, உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டு  ஏற்றுக் கொண்டுள்ளார் ஜூஹி சாவ்லா.  “இதில் முக்கியமானது என்னவென்றால் ஆர்யன் கான் வீட்டுக்கு திரும்புவது தான்” எனத் தெரிவித்துள்ளார் நடிகை ஜூஹி சாவ்லா.  கடந்த 2-ஆம் தேதி அன்று சொகுசு கப்பலில் போதை மருந்து இருந்த விவகாரத்தில் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். இந்த கைது மற்றும் வழக்கு நடவடிக்கையை ஒட்டுமொத்த இந்தியாவும் கூர்ந்து கவனித்து வந்தது.  இதையும் படிக்கலாம் : டி20 உலகக் கோப்பை : பனி பொழிவினால் திசை மாறுகிறதா அணிகளின் வெற்றி வாய்ப்பு? - ஓர் அலசல் Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Image
ஆர்யன் கான் பிணையில் வெளிவர ஷூரிட்டி கொடுத்துள்ளார் நடிகர் ஷாருக்கானின் கதாநாயகி இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் ஷாருக்கான். இவரது மகன் ஆர்யன் கான் அண்மையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சுமார் 22 நாட்கள் சிறைவாசம் இருந்த அவரை பிணையில் கொண்டு வர உதவியுள்ளார் ஷாருக்கான் உடன் ஆரம்ப காலங்களில் கதாநாயகியாக நடித்த ஜூஹி சாவ்லா.  ஆர்யன் கானுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம் ஒரு லட்ச ரூபாய் ரொக்கத்தை செலுத்துமாறு பணித்துள்ளது. அதை அவர் செலுத்த தவறினால் அதற்கு தான் பொறுப்பு என்பதற்கான உத்தரவாதத்தை நீதிமன்றத்தில் ஆஜராகி, உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டு  ஏற்றுக் கொண்டுள்ளார் ஜூஹி சாவ்லா.  “இதில் முக்கியமானது என்னவென்றால் ஆர்யன் கான் வீட்டுக்கு திரும்புவது தான்” எனத் தெரிவித்துள்ளார் நடிகை ஜூஹி சாவ்லா.  கடந்த 2-ஆம் தேதி அன்று சொகுசு கப்பலில் போதை மருந்து இருந்த விவகாரத்தில் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். இந்த கைது மற்றும் வழக்கு நடவடிக்கையை ஒட்டுமொத்த இந்தியாவும் கூர்ந்து கவனித்து வந்தது. ...