"பிக்பாஸில் திருநங்கைக்கு வாய்ப்பு அளித்தது மிகவும் வரவேற்கத்தக்கது; ஆனால்?"- ஆரி பேட்டி ” ’பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் திருநங்கைக்கு வாய்ப்பு அளித்தது வரவேற்கத்தக்கது” என்று நடிகர் ஆரி பேசியுள்ளார். பூந்தமல்லியில் சொல் விளையாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நடிகர் ஆரி கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், ”பள்ளிகள் திறப்பது சந்தோஷமாக உள்ளது. குழந்தைகள் உற்சாகமாக பள்ளிக்குச் செல்வது முக்கியம். இரண்டு ஆண்டுகளாக மாணவர்கள் இழந்ததை மீண்டும் பெற்றுள்ளார்கள். அதேபோல, தியேட்டர்களை 100 சதவீத பார்வையாளர்களுடன் முழுமையாக திறப்பது சந்தோஷமாக உள்ளது. நாம் பாதுகாப்பாக இருந்தால் மீண்டும் ஒரு ஊரடங்கை தவிர்க்கலாம். வசதி, வாய்ப்பு இல்லாதவர்களுக்கு கல்வி தேடிச் சென்று கற்றுக் கொள்ளும் சூழல் இருந்த நிலையில் ’இல்லம் தேடி கல்வி’ நல்ல விஷயம், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பெரிய வாய்ப்பாக இருக்கும்” என்றவர், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் திருநங்கைக்கு வாய்ப்பளித்தது குறித்து வரவேற்று பேசியுள்ளார். ”பிக்பாஸ் நிகழ்ச்சியில் திருநங்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து வாய்ப்பளித்தது மிகவும் வரவேற்கத்தக்கது. ஆனால், திருநங்கை வெளியேற்றப்பட்டதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. சான்றிதழில்கூட ஆண், பெண் என உள்ளது. மூன்றாம் பாலினம் என்பது இல்லை. அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என்றார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

” ’பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் திருநங்கைக்கு வாய்ப்பு அளித்தது வரவேற்கத்தக்கது” என்று நடிகர் ஆரி பேசியுள்ளார்.
பூந்தமல்லியில் சொல் விளையாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நடிகர் ஆரி கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,
”பள்ளிகள் திறப்பது சந்தோஷமாக உள்ளது. குழந்தைகள் உற்சாகமாக பள்ளிக்குச் செல்வது முக்கியம். இரண்டு ஆண்டுகளாக மாணவர்கள் இழந்ததை மீண்டும் பெற்றுள்ளார்கள். அதேபோல, தியேட்டர்களை 100 சதவீத பார்வையாளர்களுடன் முழுமையாக திறப்பது சந்தோஷமாக உள்ளது. நாம் பாதுகாப்பாக இருந்தால் மீண்டும் ஒரு ஊரடங்கை தவிர்க்கலாம்.
வசதி, வாய்ப்பு இல்லாதவர்களுக்கு கல்வி தேடிச் சென்று கற்றுக் கொள்ளும் சூழல் இருந்த நிலையில் ’இல்லம் தேடி கல்வி’ நல்ல விஷயம், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பெரிய வாய்ப்பாக இருக்கும்” என்றவர், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் திருநங்கைக்கு வாய்ப்பளித்தது குறித்து வரவேற்று பேசியுள்ளார்.

”பிக்பாஸ் நிகழ்ச்சியில் திருநங்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து வாய்ப்பளித்தது மிகவும் வரவேற்கத்தக்கது. ஆனால், திருநங்கை வெளியேற்றப்பட்டதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. சான்றிதழில்கூட ஆண், பெண் என உள்ளது. மூன்றாம் பாலினம் என்பது இல்லை. அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3muWhfa
via IFTTT
Comments
Post a Comment