ஒரே நாளில் வெளியாகும் சசிகுமாரின் இரண்டு படங்கள் சசிகுமார் நடித்துள்ள 'ராஜவம்சம்’ மற்றும் ’கொம்பு வச்ச சிங்கம்டா’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே தேதியில் வெளியாகும் என அறிவித்துள்ளனர். நடிகர் எம்.சசிகுமார் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் ’கொம்பு வச்ச சிங்கம்டா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை இந்திர குமார் என்பவர் தயாரித்துள்ளார். இதற்கான அனைத்து வேலைகளும் முடிவடைந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் வெளியீட்டுக்காக காத்திருக்கின்றது. அதேபோல் சசிகுமார் நடித்துள்ள மற்றொரு படமான ’ராஜவம்சம்’ திரைப்படமும் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. இந்தப் படத்தை கோடியில் ஒருவன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ராஜா தயாரித்துள்ளார். இதில் ’கொம்பு வச்ச சிங்கம்டா’ திரைப்படம் நவம்பர் 26 ஆம் தேதி வெளியாகும் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ’ராஜவம்சம்’ திரைப்படமும் அதே தேதியில் வெளியாகிறது என இன்று அறிவித்துள்ளனர். இதற்கு இரண்டு தயாரிப்பாளர்களுக்கு இடையேயான பிரச்னையே காரணம் எனக் கூறப்படுகிறது. இருந்தபோதிலும் ஒரு நடிகரின் இரண்டு படங்கள், ஒரே நாளில் வெளியானால் நிச்சயம் தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சினிமா துறையினர் கூறுகின்றனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

சசிகுமார் நடித்துள்ள 'ராஜவம்சம்’ மற்றும் ’கொம்பு வச்ச சிங்கம்டா’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே தேதியில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
நடிகர் எம்.சசிகுமார் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் ’கொம்பு வச்ச சிங்கம்டா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை இந்திர குமார் என்பவர் தயாரித்துள்ளார். இதற்கான அனைத்து வேலைகளும் முடிவடைந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் வெளியீட்டுக்காக காத்திருக்கின்றது. அதேபோல் சசிகுமார் நடித்துள்ள மற்றொரு படமான ’ராஜவம்சம்’ திரைப்படமும் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.

இந்தப் படத்தை கோடியில் ஒருவன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ராஜா தயாரித்துள்ளார். இதில் ’கொம்பு வச்ச சிங்கம்டா’ திரைப்படம் நவம்பர் 26 ஆம் தேதி வெளியாகும் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ’ராஜவம்சம்’ திரைப்படமும் அதே தேதியில் வெளியாகிறது என இன்று அறிவித்துள்ளனர்.

இதற்கு இரண்டு தயாரிப்பாளர்களுக்கு இடையேயான பிரச்னையே காரணம் எனக் கூறப்படுகிறது. இருந்தபோதிலும் ஒரு நடிகரின் இரண்டு படங்கள், ஒரே நாளில் வெளியானால் நிச்சயம் தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சினிமா துறையினர் கூறுகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3jRr0BA
via IFTTT
Comments
Post a Comment