இளையதலைமுறை அம்மாக்கள் போற்றப்படவேண்டியவர்களா ?
இளையதலைமுறை அம்மாக்கள் போற்றப்படவேண்டியவர்களா? பாசம் அன்பு என்ற பெயரில் வளர்ந்த குழந்தைகளுக்கு இன்னமும் சோறுஊட்டிகொண்டுதான் இருக்கிறார்கள் வயதுக்கு வந்த பெண்குழந்தைகளுக்கு இன்னமும் சுயமாக துணிதுவைக்க தெரியாது ஆண்குழந்தைகள் சாப்பிட்ட தட்டைகூட கழுவி வைக்கமாட்டார்கள் என்று பெண்கள் சொல்வதுதான் வேடிக்கையாக இருக்கிறது எந்த தாய் தன் மகனை கழுவ சொல்கிறாள் அப்படியே கழுவினாலும் நீ ஆம்பளை கழுவாதே என்றுதான் சொல்கிறார்கள் குழந்தை வளர்ப்பது என்பது ஒரு குறிப்பிட்ட வயதுவரை அம்மாவை சார்ந்ததுதான் ஏன் ஆண்களுக்கு பங்கு இல்லியா என்றால் அப்படி ஒரு கூட்டத்தை உருவாக்கியதும் பெண்கள்தான் இணையதளத்தில் பெண்களுக்கான சமூகநீதி பெண்விடுதலை உடைகள் சுதந்திரம் பற்றி பெண்கள் எழுதும்போதெல்லாம் அதை எதிர்ப்பது நக்கல் பன்னுவது வக்கீரமாக பெண்குறியை சொல்லி கேவலமாக பதிவு போடுவது என்று பார்த்தால் 99%இளையதலைமுறை ஆண்கள்தான் இவர்கள் அம்மாக்கள் நிச்சயமாக ஓரளவு படித்தவர்களாக...