விஜய்யின் ‘வாரிசு’க்காக சிம்பு குரலில் பாடல்? -ஆடியோ வெளியீட்டு விழா குறித்து கசிந்த தகவல் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வாரிசு’ படத்தில், நடிகர் சிம்பு ஒருப் பாடலை பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில் இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்த தகவலும் கசிந்துள்ளது. தெலுங்கு இயக்குநரான வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘வாரிசு’. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராகி வரும் இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளதாக படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்துள்ளனர். இதனால் இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகின்றது. இதையடுத்து, தற்போதிலிருந்து புரமோஷன் பணிகளை படக்குழுவினர் துவங்கியுள்ள நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்னதாக இந்தப் படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’ பாடல் யூட்யூப்பில் வெளியாகி 66 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வரவேற்பைப் பெற்று வருகிறது. நடிகர் விஜய் மற்றும் மானசி இந்தப் பாடலை பாடியுள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். மேலும் இந்தப் படத்தின் 2-வது பாடல் விரைவில் வெளியாகவுள்ளதாக இசையமைப்பாளர் தமன், ஏற்கனவே சூசகமாக தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், இந்தப் படத்தில் நடிகர் சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் பாடல் வருகிற டிசம்பர் மாதம் 2-வது வாரத்தில் யூட்யூப் தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விஜய் மற்றும் சிம்பு ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் சென்னையில் வரும் டிசம்பர் 23-ம் தேதி இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 8 ஆண்டுகளுக்குப் பின்னர் பொங்கலையொட்டி அஜித்-விஜய் படங்கள் நேரடியாக மோத உள்ளன. அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ திரைப்படம் பொங்கலையொட்டி திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. Buzz is that the next #Varisu single will be a massy number for #thalapathy which is said have been sung by #STR Let’s wait and watch!!! . .#vijay #illayathalapathy #thalapathy #varisu #STR #simbu #kollywood #kollywoodcinema pic.twitter.com/D2EEXQmazO — SIIMA (@siima) November 25, 2022 Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வாரிசு’ படத்தில், நடிகர் சிம்பு ஒருப் பாடலை பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில் இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்த தகவலும் கசிந்துள்ளது.
தெலுங்கு இயக்குநரான வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘வாரிசு’. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராகி வரும் இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளதாக படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்துள்ளனர். இதனால் இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகின்றது. இதையடுத்து, தற்போதிலிருந்து புரமோஷன் பணிகளை படக்குழுவினர் துவங்கியுள்ள நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்னதாக இந்தப் படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’ பாடல் யூட்யூப்பில் வெளியாகி 66 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வரவேற்பைப் பெற்று வருகிறது. நடிகர் விஜய் மற்றும் மானசி இந்தப் பாடலை பாடியுள்ளனர். தமன் இசையமைத்துள்ளார்.

மேலும் இந்தப் படத்தின் 2-வது பாடல் விரைவில் வெளியாகவுள்ளதாக இசையமைப்பாளர் தமன், ஏற்கனவே சூசகமாக தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், இந்தப் படத்தில் நடிகர் சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் பாடல் வருகிற டிசம்பர் மாதம் 2-வது வாரத்தில் யூட்யூப் தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விஜய் மற்றும் சிம்பு ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் சென்னையில் வரும் டிசம்பர் 23-ம் தேதி இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 8 ஆண்டுகளுக்குப் பின்னர் பொங்கலையொட்டி அஜித்-விஜய் படங்கள் நேரடியாக மோத உள்ளன. அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ திரைப்படம் பொங்கலையொட்டி திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
Buzz is that the next #Varisu single will be a massy number for #thalapathy which is said have been sung by #STR
— SIIMA (@siima) November 25, 2022
Let’s wait and watch!!!
.
.#vijay #illayathalapathy #thalapathy #varisu #STR #simbu #kollywood #kollywoodcinema pic.twitter.com/D2EEXQmazO
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/4f5ImrW
via IFTTT
Comments
Post a Comment