‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’: மீண்டும் இந்திய அரசியலை சர்ச்சைக்கு தள்ளிய நடாவ் லாபிட் கருத்து! கோவா திரைப்பட விழாவில் இஸ்ரேலிய இயக்குநர் "காஷ்மீர் ஃபைல்ஸ்" திரைப்படம் குறித்து பேசிய பேச்சுக்கு இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்தத் திரைப்படத்தில் நடித்த நடிகர் அனுபம் கேர் உள்ளிட்ட பிறர் கருத்துக்கள் என்ன... ? என்பது குறித்து இந்தத் தொகுப்பில் பார்போம். 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் கடந்த 20-ந் தேதி தொடங்கி, மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த விழாவில் 79 நாடுகளை சேர்ந்த 280 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்த விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் பேசிய பட தேர்வு குழு மற்றும் விழா தலைவருமான நடாவ் லாபிட், “ ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்ட இழிவான திரைப்படம். பிரச்சாரப் பாணியில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தோம் என்று கூறியிருந்தார். இந்தக் கருத்து தற்போது விவாதத்திற்கு உள்ளாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து, ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அனுபம் கெர், பிரபல ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “காஷ்மீர் பண்டிதர்களின் வெளியேற்றம் உண்மையான நிகழ்வாக இருந்தால், நான் வணங்கும் கடவுள் நடாவ் லாபிட்டுக்கு நல்ல புத்தியை கொடுக்கட்டும், இந்த அறிக்கை திட்டமிட்டே வெளியிடப்பட்டுள்ளது போல எனக்கு தெரிகிறது. இதில் நடாவ் லாபிட் ஒரு கருவியாக செயல்பட்டுள்ளார் என்பதை நினைக்கும் போது வெட்கக்கேடாக உள்ளது. இந்த அறிக்கையின் மூலம் படுகொலையின் துயரங்களை அவர் வேதனைப்படுத்தியுள்ளார். அவர் சுய திருப்திக்காக இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடக்கூடாது” என்று அனுபம் கேர் அந்தப் பேட்டியில் கூறியிருந்தார். அதேபோல இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவோர் கிலோன், நடுவரின் கருத்தை வன்மையாக கண்டித்துள்ளார். அதில், IFFI கோவாவில் நடுவர்கள் குழுவின் தலைவராக இருப்பதற்கான இந்திய அழைப்பையும், அவர்கள் உங்களுக்கு அளித்த நம்பிக்கை, மரியாதை மற்றும் அன்பான விருந்தோம்பலையும் நீங்கள் மிக மோசமான முறையில் துஷ்பிரயோகம் செய்துள்ளீர்கள் என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில், IFFI நடுவர் குழு உறுப்பினர் சுதிப்தோ சென் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ் குறித்த நடாவ் லாபிட்டின் கருத்து, முற்றிலும் அவரது தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்துள்ளார்.  இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகியவை நடாவ் லாபிட்டின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. முன்னதாக , காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக இருந்த சிவசேனாவை சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி, லாபிட்டின் கருத்தை ஆதரித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "காஷ்மீரி பண்டிட்டுகளுக்கான நீதிக்கான ஒரு முக்கியமான பிரச்சினை, பிரச்சாரத்தின் பலிபீடத்தில் பலி கொடுக்கப்பட்டது. இது அவசியம் கேட்க வேண்டிய பகுதி" என்று தெரிவித்துள்ளார். சிவசேனாவின் முக்கிய தலைவரான சஞ்சய் ராவத்தும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். அதில் , “ தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்பது உண்மைதான். ஒரு தரப்பினர் மற்றொரு கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்தனர். ஒரு கட்சியும், அரசும் விளம்பரத்தில் மும்முரமாக இருந்தது. ஆனால் இந்தப் படத்திற்குப் பிறகு காஷ்மீரில் அதிகபட்ச கொலைகள் நடந்தன. காஷ்மீர் பண்டிட்கள், பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர்" என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ரிஸ்வான் அர்ஷாத் கூறுகையில், "இது பாஜகவால் விளம்பரப்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்ட திரைப்படம், உண்மையில் என்ன நடந்தது என்பதற்கு எந்த உண்மைத் தொடர்பும் இல்லை. இது ஒரு பிரச்சாரம்” என்று தெரிவித்துள்ளார் பாஜக தலைவர் அமித் மாளவியா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ் குறித்த சக நாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர் நடாவ் லாபிட்டின் விமர்சனத்திற்கு இஸ்ரேலின் தூதர் பதில் அளித்துள்ளார். நீண்ட காலமாக, மக்கள் படுகொலையை மறுத்து, பிரச்சாரம் என்று அழைத்தனர், தற்போது காஷ்மீர் ஃபைல்ஸ் குறித்து சர்ச்சையாகும் கருத்தை போல” என்று கூறியுள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

கோவா திரைப்பட விழாவில் இஸ்ரேலிய இயக்குநர் "காஷ்மீர் ஃபைல்ஸ்" திரைப்படம் குறித்து பேசிய பேச்சுக்கு இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்தத் திரைப்படத்தில் நடித்த நடிகர் அனுபம் கேர் உள்ளிட்ட பிறர் கருத்துக்கள் என்ன... ? என்பது குறித்து இந்தத் தொகுப்பில் பார்போம்.

53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் கடந்த 20-ந் தேதி தொடங்கி, மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த விழாவில் 79 நாடுகளை சேர்ந்த 280 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்த விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் பேசிய பட தேர்வு குழு மற்றும் விழா தலைவருமான நடாவ் லாபிட், “ ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்ட இழிவான திரைப்படம். பிரச்சாரப் பாணியில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தோம் என்று கூறியிருந்தார். இந்தக் கருத்து தற்போது விவாதத்திற்கு உள்ளாகி உள்ளது.

இதனைத் தொடர்ந்து, ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அனுபம் கெர், பிரபல ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “காஷ்மீர் பண்டிதர்களின் வெளியேற்றம் உண்மையான நிகழ்வாக இருந்தால், நான் வணங்கும் கடவுள் நடாவ் லாபிட்டுக்கு நல்ல புத்தியை கொடுக்கட்டும், இந்த அறிக்கை திட்டமிட்டே வெளியிடப்பட்டுள்ளது போல எனக்கு தெரிகிறது. இதில் நடாவ் லாபிட் ஒரு கருவியாக செயல்பட்டுள்ளார் என்பதை நினைக்கும் போது வெட்கக்கேடாக உள்ளது. இந்த அறிக்கையின் மூலம் படுகொலையின் துயரங்களை அவர் வேதனைப்படுத்தியுள்ளார். அவர் சுய திருப்திக்காக இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடக்கூடாது” என்று அனுபம் கேர் அந்தப் பேட்டியில் கூறியிருந்தார்.

image

அதேபோல இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவோர் கிலோன், நடுவரின் கருத்தை வன்மையாக கண்டித்துள்ளார். அதில், IFFI கோவாவில் நடுவர்கள் குழுவின் தலைவராக இருப்பதற்கான இந்திய அழைப்பையும், அவர்கள் உங்களுக்கு அளித்த நம்பிக்கை, மரியாதை மற்றும் அன்பான விருந்தோம்பலையும் நீங்கள் மிக மோசமான முறையில் துஷ்பிரயோகம் செய்துள்ளீர்கள் என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில், IFFI நடுவர் குழு உறுப்பினர் சுதிப்தோ சென் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ் குறித்த நடாவ் லாபிட்டின் கருத்து, முற்றிலும் அவரது தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்துள்ளார். 

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகியவை நடாவ் லாபிட்டின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. முன்னதாக , காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக இருந்த சிவசேனாவை சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி, லாபிட்டின் கருத்தை ஆதரித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "காஷ்மீரி பண்டிட்டுகளுக்கான நீதிக்கான ஒரு முக்கியமான பிரச்சினை, பிரச்சாரத்தின் பலிபீடத்தில் பலி கொடுக்கப்பட்டது. இது அவசியம் கேட்க வேண்டிய பகுதி" என்று தெரிவித்துள்ளார்.

image

சிவசேனாவின் முக்கிய தலைவரான சஞ்சய் ராவத்தும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். அதில் , “ தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்பது உண்மைதான். ஒரு தரப்பினர் மற்றொரு கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்தனர். ஒரு கட்சியும், அரசும் விளம்பரத்தில் மும்முரமாக இருந்தது. ஆனால் இந்தப் படத்திற்குப் பிறகு காஷ்மீரில் அதிகபட்ச கொலைகள் நடந்தன. காஷ்மீர் பண்டிட்கள், பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர்" என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ரிஸ்வான் அர்ஷாத் கூறுகையில், "இது பாஜகவால் விளம்பரப்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்ட திரைப்படம், உண்மையில் என்ன நடந்தது என்பதற்கு எந்த உண்மைத் தொடர்பும் இல்லை. இது ஒரு பிரச்சாரம்” என்று தெரிவித்துள்ளார்

பாஜக தலைவர் அமித் மாளவியா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ் குறித்த சக நாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர் நடாவ் லாபிட்டின் விமர்சனத்திற்கு இஸ்ரேலின் தூதர் பதில் அளித்துள்ளார். நீண்ட காலமாக, மக்கள் படுகொலையை மறுத்து, பிரச்சாரம் என்று அழைத்தனர், தற்போது காஷ்மீர் ஃபைல்ஸ் குறித்து சர்ச்சையாகும் கருத்தை போல” என்று கூறியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/LxPgHXT
via IFTTT

Comments

Popular posts from this blog

‘யோகி பாபுக்காக ஒரு கதை எடுக்க வேண்டும் என்று ஆசை’ -‘பொம்மை நாயகி’ விழாவில் மாரி செல்வராஜ் பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகிபாபு நடித்துள்ள ‘பொம்மை நாயகி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் இன்று நடைபெற்றது. பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘பொம்மை நாயகி’. சிறுமி ஸ்ரீமதி, யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஷான். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள படத்தின் பாடல்களை ‘தெருக்குரல்’ அறிவு எழுதியிருக்கிறார். இந்த விழாவில் அறிமுக இயக்குநர் ஷான் பேசுகையில், “இந்தக் கதை எழுதி முடித்ததும் யாரிடமும் சொல்ல வில்லை. நீண்ட நாட்களாக இந்தக் கதையை வைத்து கொண்டே இருந்தேன். படம் பண்ணினால் நீளம் புரொடக்ஷனில் தான் பண்ண வேண்டும் என்று தீர்க்கமாக இருந்தேன். கதையைப் படித்து கதையில் இருந்த நம்பிக்கையால் இந்தப் படம் எடுக்க முடிந்தது. ‘பரியேறும் பெருமாள்’ படம் பார்த்து யோகி பாபு நடித்தால் எப்படி இருக்கும் என்ற நினைத்தேன். எதார்த்தமான மனிதன் சந்திக்கும் பிரச்சினைகளை எதிர்கொள்ளுவது தான் இந்த படம். எல்லோரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் இது” என்று தெரிவித்தார். இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், “இயக்குநர் இந்த கதையை தான் எடுப்பேன் என்று உறுதியாக இருந்து எடுத்து முடித்தவர். யார் இந்தக் கதையில் நடித்தால் சரி வரும் என்று தேர்வு செய்து பொருத்தமாக எடுத்துள்ளார். நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம் முக்கியமான நபர்கள் வெளி வந்துள்ளனர். ‘வாழை’ படம் முதன் முதலில் நான் எழுதிய கதை. அதை எப்போது எடுப்பேன் என்று எதிர்பார்த்து கொண்டு இருந்தேன். தற்போது அந்தப் படத்தை முடித்து விட்டேன். அடுத்து நான் நீலம் புரொடக்ஷனில் தான் படம் பண்ண போகிறேன். பிற்போக்குத்தனமான ஒரு படத்தை எடுக்க மாட்டேன் என்பது என் கொள்கை. நான் தப்பான படங்களை எடுக்க மாட்டேன். நிஜ கதைகளை உருவாக்கும் போதே இவர்கள் இந்த கதையை தயாரிப்பார்கள் என்ற நிச்சயம் உண்டானால் அது தான் தமிழ் சினிமாவின் வெற்றி. ‘பொம்மை நாயகி’ ஒரு பேரலையாய் அமையும். பெரிய இயக்குனர்கள் அனைவருக்கும் யோகி பாபுவிற்காக கதை எடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும், எனக்கும் அந்த ஆசை உள்ளது” என்று கூறினார். நடிகர் ஜி.எம். குமார் பேசுகையில், “இங்கே நான் வந்ததற்கு காரணம் கதை தான். யோகி பாபு உடன் என்னோட மூணாவது படம். ‘கர்ணன்’ படத்தில் மாரியிடம் யோகி பாபுவால் திட்டு வாங்கினேன். இயக்குநர் பா. ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’ மற்றும் ‘சார்பட்டா பரம்பரை’ படங்களை பார்த்து அசந்து போனேன்” என்று தெரிவித்தார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

நடிகர் மயில்சாமி உடலுக்கு பிரேத பரிசோதனை இல்லை... ஏன்? நடிகர் மயில்சாமிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். சென்னை சாலிகிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தவர் தமிழ் திரைப்பட காமெடி நடிகர் மயில்சாமி. தமிழ் திரைப்படங்களில் சிறந்த காமெடி நடிகராக வலம் வந்த மயில்சாமிக்கு இன்று காலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை அவரது உறவினர்கள் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மயில்சாமி வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மயில்சாமி இறந்த செய்தி கேட்டு அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த போரூர் போலீசார் உயிரிழந்த மயில்சாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மயில்சாமி உயிரிழப்புக்கு காரணம் மாரடைப்பா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரித்து வந்தனர். பின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் மயில்சாமி உடல் பிரேத பரிசோதனை செய்யவில்லை என சொல்லப்பட்டுள்ளது. அதன் பின்னணியாக, அவருக்கு மாரடைப்பு உறுதியானதை மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவர் ஏற்கனவே இதயம் சம்பந்தமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனது உறுதியானது. இறப்புக்கான காரணம் உறுதியானதால், அவரது உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை என்றும் இன்னும் சிறிது நேரத்தில் அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளன. நடிகர் மயில்சாமியின் உயிரிழப்பு தமிழ் திரை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

விஜய்.. கமல்ஹாசன் அடுத்தது?: முன்னணி நடிகர்களின் படங்களைக் கைப்பற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தினை ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. நடிகர் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ படங்களைத் தயாரிப்பதோடு முன்னணி நடிகர்களின் படங்களையும் கைப்பற்றி வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்’, பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’, ராஜமெளலியின் ( ‘ஆர்ஆர்ஆர்’ மூன்று இடங்களில் மட்டும்) உள்ளிட்டப் படங்களை கைப்பற்றி வெளியிட்டது. வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகும் விஜய்யின் ‘பீஸ்ட்’, ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படங்களின் தமிழக ரெட் ஜெயன்ட் மூவிஸ்தான் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் தமிழக உரிமையையும் கைப்பற்றியுள்ளதகாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவிருக்கிறார்கள். ‘விக்ரம்’ வரும் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகிறது. அன்றுதான் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்துவரும் ‘மாமன்னன்’ படத்தினை ரெட் ஜெயன்ட் தான் தயாரிக்கிறது. இதற்கு முன்னதாக, தமிழ் சினிமாவில் ஹாட்ரிக் வெற்றி கொடுத்த இயக்குநர்களில் லோகேஷ் கனகராஜும் ஒருவர். அவரின் ’மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் அடித்து வசூலைக் குவித்ததால் இயக்குநர் நான்காவதாக கமல்ஹாசனை இயக்கும் ‘விக்ரம்’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. கோரோனா சூழலிலும் மக்களை தியேட்டர் நோக்கி வரவைத்தது ‘மாஸ்டர்’. அதன் வெற்றிக்குப்பிறகு விஜய் சேதுபதி - அனிருத்துடன் மீண்டும் ’விக்ரம்’மில் கைக்கோர்த்துள்ளார் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் இப்படத்தில் ஃபகத் ஃபாசிலும் நடிப்பதால் மலையாள ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். காளிதாஸ் ஜெயராம், நரேன், ’பிக்பாஸ்’ ஷிவானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM