மிரட்டும் பிஜிஎம்! மாமன்னன் க்ளிம்ஸ் உடன் உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ரஹ்மான்! தமிழ் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தரும் தமிழக சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் 47வது பிறந்த நாள் இன்று. இதனையொட்டி, அவருக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சியினர் என பல தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. அந்த வகையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, அவர் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் படத்தின் சில காட்சிகளை கொண்ட வீடியோவையும் வெளியிட்டிருக்கிறார். முதல் முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உதயநிதி நடிக்கும் மாமன்னன் படத்தில் வடிவேலு, ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். மாமன்னன் படத்தின் ஷூட்டிங் வேலைகள் முடிந்திருப்பதால் விரைவில் பிற வேலைகள் முடிக்கப்படும் படம் திரையில் வெளியாக இருக்கிறது. Happy birthday @Udhaystalin and glad to be a part of #mamannan @mari_selvaraj #Vadivelu pic.twitter.com/596ECuGS44 — A.R.Rahman (@arrahman) November 27, 2022 இப்படி இருக்கையில், உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளான இன்று படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டிருக்கிறார். அதில், தீப்புகைக்கு முன் உதயநிதி ஸ்டாலின் கையில் வாளுடன் தோன்றுவதை காணலாம். இந்த க்ளிம்ப்ஸ் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் எகிற வைத்திருக்கிறது என்பதே வீடியோ வைரலானதின் மூலம் அறிய முடிகிறது. முன்னதாக, வைகைப்புயல் வடிவேலுவின் கதாப்பாத்திரம்தான் மாமன்னன் என்ற படத்தின் தலைப்புக்கு உரியவர் என உதயநிதியும், மாரி செல்வராஜும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

தமிழ் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தரும் தமிழக சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் 47வது பிறந்த நாள் இன்று. இதனையொட்டி, அவருக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சியினர் என பல தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
அந்த வகையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, அவர் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் படத்தின் சில காட்சிகளை கொண்ட வீடியோவையும் வெளியிட்டிருக்கிறார்.
முதல் முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உதயநிதி நடிக்கும் மாமன்னன் படத்தில் வடிவேலு, ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். மாமன்னன் படத்தின் ஷூட்டிங் வேலைகள் முடிந்திருப்பதால் விரைவில் பிற வேலைகள் முடிக்கப்படும் படம் திரையில் வெளியாக இருக்கிறது.
Happy birthday @Udhaystalin and glad to be a part of #mamannan @mari_selvaraj #Vadivelu pic.twitter.com/596ECuGS44
— A.R.Rahman (@arrahman) November 27, 2022
இப்படி இருக்கையில், உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளான இன்று படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டிருக்கிறார். அதில், தீப்புகைக்கு முன் உதயநிதி ஸ்டாலின் கையில் வாளுடன் தோன்றுவதை காணலாம். இந்த க்ளிம்ப்ஸ் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் எகிற வைத்திருக்கிறது என்பதே வீடியோ வைரலானதின் மூலம் அறிய முடிகிறது.
முன்னதாக, வைகைப்புயல் வடிவேலுவின் கதாப்பாத்திரம்தான் மாமன்னன் என்ற படத்தின் தலைப்புக்கு உரியவர் என உதயநிதியும், மாரி செல்வராஜும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/1TFBYzh
via IFTTT
Comments
Post a Comment