‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’: நடாவ் லாபிட் கருத்தை கண்டித்த இஸ்ரேல் தூதர் - நடுவர் குழு விளக்கம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் குறித்து நடாவ் லாபிட் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், "இதுபோன்ற கருத்துக்களை, நான் சந்தேகத்திற்கு இடமின்றி வன்மையாகக் கண்டிக்கிறேன்" என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவோர் கிலோன் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் கடந்த 20-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற நிறைவு விழாவில் பேசிய இஸ்ரேலிய திரைப்பட இயக்குநரும், இந்திய சர்வதேச திரைப்பட விழா வின் நடுவர் குழுவை சேர்ந்தவருமான நடாவ் லாபிட், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் வெறுப்புணர்வைத் தூண்டும் மோசமான பிரச்சார படம் என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்தக் கருத்து படக்குழுவினரிடையே அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அப்படத்தில் நடித்த அனுபவம் கெர், நடாவ் லாபிட்டின் கருத்து வெட்கக் கேடானது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவோர் கிலோன், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த போட்டியின் தேர்வு குழு தலைவர் நடாவ் லாபிட்டை விமர்சனம் செய்துள்ளார். அதில், “நடாவ் லாபிட்டுக்கு ஒரு திறந்த மடல். இதை என் இந்திய சகோதர சகோதரிகளும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதால், நான் ஹீப்ருவில் எழுதவில்லை. இந்தக் கடிதம் சற்று நீளம் என்பதால் அதன் சாராம்சத்தை முதலில் கூறிவிடுகிறேன். நீங்கள் வெட்கப்பட வேண்டும். அது ஏன் என்பதற்கான காரணங்கள் இதோ: இந்திய கலாசாரம், "விருந்தாளி" என்பவர் கடவுள் போன்றவர் எனக் கூறுகிறது. சர்வதேச திரைப்பட விழாவில் விருது தேர்வுக் குழுவில் பங்கேற்குமாறு இந்தியா உங்களுக்கு விடுத்த அழைப்பையும் உங்கள் மீது வைக்கப்பட்ட நம்பிக்கை, மரியாதை, விருந்தோம்பல் ஆகியவற்றைத் தவறாகப் பயன்படுத்தி விட்டீர்கள். An open letter to #NadavLapid following his criticism of #KashmirFiles. It’s not in Hebrew because I wanted our Indian brothers and sisters to be able to understand. It is also relatively long so I’ll give you the bottom line first. YOU SHOULD BE ASHAMED. Here’s why: pic.twitter.com/8YpSQGMXIR — Naor Gilon (@NaorGilon) November 29, 2022 இஸ்ரேல் மீதான இந்தியாவின் அன்பை கொண்டாடவே ஒரு இஸ்ரேலியராக உங்களையும் தூதராக அழைத்தார்கள் என்று நினைக்கிறேன். உங்கள் நடத்தையை நியாயப்படுத்த வேண்டுமென்ற உங்கள் தேவையை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால், அதற்குப் பிறகு நானும், அமைச்சரும் மேடையில், 'நாங்கள் ஒரே மாதிரியான எதிரியோடு சண்டையிட்டு மோசமான சுற்றுப்புறத்தில் வசிப்பதால், நம் நாடுகளுக்கு இடையே ஒற்றுமை இருக்கிறது எனப் பேசிக்கொண்டோம்’. இரு நாடுகளுக்கிடையே உள்ள ஒற்றுமை, நெருக்கம் குறித்து நாங்கள் பேசினோம். இஸ்ரேல் உயர் தொழில்நுட்ப தேசம் என்பதைப் பற்றியும், அமைச்சர் இஸ்ரேலுக்கு வருகை தருவது குறித்தும் இதைத் திரைப்படத் துறையுடன் இணைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் பேசினார். நாங்கள் இந்தியத் திரைப்படங்களைப் பார்த்து வளர்ந்தவர்கள் என்பதைப் பற்றிப் பேசினேன். மேலும், மிகப்பெரிய திரைப்பட கலாச்சாரம் கொண்ட இந்தியா இஸ்ரேலிய திரைப்படங்களையும் பார்க்கும்போது நாம் மிகவும் பணிவோடு இருக்க வேண்டும் என்றும் கூறினேன். நான் ஒன்றும் திரைப்பட வல்லுநர் இல்லை. ஆனால், வரலாற்று நிகழ்வுகளை ஆழமாகப் படிப்பதற்கு முன்பு அவற்றைப் பற்றிப் பேசுவது உணர்ச்சியற்ற, ஆணவமான நடத்தை என்பதை நான் அறிவேன். மேலும் அவை இந்தியாவில் வெளிப்படையான வடுவாக உள்ளன. அதில் சம்பந்தப்பட்ட பலர் இன்னும் இருக்கிறார்கள், அதற்கான விலையை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் பேசியதற்கு இந்தியாவிலிருந்து வரும் எதிர்வினைகள், யூத இனப்படுகொலை குறித்த திரைப்படங்கள் போன்றவற்றின் மீது சந்தேகம் எழுப்பப்படுவதற்கு, யூத இனப்படுகொலையில் இருந்து தப்பியவரின் மகனாக, நான் மனதளவில் மிகவும் காயமடைந்துள்ளேன். இதுபோன்ற கருத்துக்களை நான் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறேன். இதை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. இது நிச்சயமாக காஷ்மீர் பிரச்சினையின் மீதான உணர்வைக் காட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் குறித்த நடாவ் லாபிட்டின் கருத்து, 'முற்றிலும் அவரது தனிப்பட்ட கருத்து' என்று IFFI நடுவர் குழு உறுப்பினர் சுதிப்தோ சென் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தேசிய திரைப்பட விழாவின் நடுவர் குழு உறுப்பினர் சுதிப்தோ சென் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், IFFI 2022 ஜூரி தலைவர் நடாவ் லாபிட், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தைப் பற்றி நிறைவு விழா மேடையில் அவர் பேசியது முற்றிலும் அவருடைய தனிப்பட்ட கருத்து. அதிகாரப்பூர்வ பத்திரிகையாளர் சந்திப்பின்போது, இத்திரைப்படத்தை விமர்சித்து, பிடித்திருக்கிறது அல்லது பிடிக்கவில்லை என நடுவர்கள் குழுவினரால் சுட்டி காட்டப்படவில்லை. ஒரு திரைப்படத்தின் தொழில்நுட்ப, அழகியல் தரம் மற்றும் சமூக-கலாச்சார பொருத்தம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு திரைப்படங்களை தேர்ந்தெடுப்பதற்காக நடுவர்களாக நாங்கள் நியமிக்கப்பட்டுள்ளோம். எந்தவொரு திரைப்படத்திலும் நாங்கள் எந்தவிதமான அரசியல் கருத்துக்களிலும் ஈடுபட மாட்டோம், அப்படி செய்யப்பட்டால், அது முற்றிலும் தனிப்பட்ட கருத்து. அதற்கும் தேர்வு குழுவிற்கும் எந்த தொடர்பும் இல்லை” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் குறித்து நடாவ் லாபிட் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், "இதுபோன்ற கருத்துக்களை, நான் சந்தேகத்திற்கு இடமின்றி வன்மையாகக் கண்டிக்கிறேன்" என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவோர் கிலோன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் கடந்த 20-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற நிறைவு விழாவில் பேசிய இஸ்ரேலிய திரைப்பட இயக்குநரும், இந்திய சர்வதேச திரைப்பட விழா வின் நடுவர் குழுவை சேர்ந்தவருமான நடாவ் லாபிட், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் வெறுப்புணர்வைத் தூண்டும் மோசமான பிரச்சார படம் என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்தக் கருத்து படக்குழுவினரிடையே அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அப்படத்தில் நடித்த அனுபவம் கெர், நடாவ் லாபிட்டின் கருத்து வெட்கக் கேடானது என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவோர் கிலோன், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த போட்டியின் தேர்வு குழு தலைவர் நடாவ் லாபிட்டை விமர்சனம் செய்துள்ளார். அதில், “நடாவ் லாபிட்டுக்கு ஒரு திறந்த மடல். இதை என் இந்திய சகோதர சகோதரிகளும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதால், நான் ஹீப்ருவில் எழுதவில்லை. இந்தக் கடிதம் சற்று நீளம் என்பதால் அதன் சாராம்சத்தை முதலில் கூறிவிடுகிறேன். நீங்கள் வெட்கப்பட வேண்டும். அது ஏன் என்பதற்கான காரணங்கள் இதோ:

இந்திய கலாசாரம், "விருந்தாளி" என்பவர் கடவுள் போன்றவர் எனக் கூறுகிறது. சர்வதேச திரைப்பட விழாவில் விருது தேர்வுக் குழுவில் பங்கேற்குமாறு இந்தியா உங்களுக்கு விடுத்த அழைப்பையும் உங்கள் மீது வைக்கப்பட்ட நம்பிக்கை, மரியாதை, விருந்தோம்பல் ஆகியவற்றைத் தவறாகப் பயன்படுத்தி விட்டீர்கள்.

இஸ்ரேல் மீதான இந்தியாவின் அன்பை கொண்டாடவே ஒரு இஸ்ரேலியராக உங்களையும் தூதராக அழைத்தார்கள் என்று நினைக்கிறேன். உங்கள் நடத்தையை நியாயப்படுத்த வேண்டுமென்ற உங்கள் தேவையை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால், அதற்குப் பிறகு நானும், அமைச்சரும் மேடையில், 'நாங்கள் ஒரே மாதிரியான எதிரியோடு சண்டையிட்டு மோசமான சுற்றுப்புறத்தில் வசிப்பதால், நம் நாடுகளுக்கு இடையே ஒற்றுமை இருக்கிறது எனப் பேசிக்கொண்டோம்’.

இரு நாடுகளுக்கிடையே உள்ள ஒற்றுமை, நெருக்கம் குறித்து நாங்கள் பேசினோம். இஸ்ரேல் உயர் தொழில்நுட்ப தேசம் என்பதைப் பற்றியும், அமைச்சர் இஸ்ரேலுக்கு வருகை தருவது குறித்தும் இதைத் திரைப்படத் துறையுடன் இணைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் பேசினார். நாங்கள் இந்தியத் திரைப்படங்களைப் பார்த்து வளர்ந்தவர்கள் என்பதைப் பற்றிப் பேசினேன். மேலும், மிகப்பெரிய திரைப்பட கலாச்சாரம் கொண்ட இந்தியா இஸ்ரேலிய திரைப்படங்களையும் பார்க்கும்போது நாம் மிகவும் பணிவோடு இருக்க வேண்டும் என்றும் கூறினேன். நான் ஒன்றும் திரைப்பட வல்லுநர் இல்லை. ஆனால், வரலாற்று நிகழ்வுகளை ஆழமாகப் படிப்பதற்கு முன்பு அவற்றைப் பற்றிப் பேசுவது உணர்ச்சியற்ற, ஆணவமான நடத்தை என்பதை நான் அறிவேன்.

மேலும் அவை இந்தியாவில் வெளிப்படையான வடுவாக உள்ளன. அதில் சம்பந்தப்பட்ட பலர் இன்னும் இருக்கிறார்கள், அதற்கான விலையை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் பேசியதற்கு இந்தியாவிலிருந்து வரும் எதிர்வினைகள், யூத இனப்படுகொலை குறித்த திரைப்படங்கள் போன்றவற்றின் மீது சந்தேகம் எழுப்பப்படுவதற்கு, யூத இனப்படுகொலையில் இருந்து தப்பியவரின் மகனாக, நான் மனதளவில் மிகவும் காயமடைந்துள்ளேன்.

இதுபோன்ற கருத்துக்களை நான் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறேன். இதை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. இது நிச்சயமாக காஷ்மீர் பிரச்சினையின் மீதான உணர்வைக் காட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

image

இதற்கிடையில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் குறித்த நடாவ் லாபிட்டின் கருத்து, 'முற்றிலும் அவரது தனிப்பட்ட கருத்து' என்று IFFI நடுவர் குழு உறுப்பினர் சுதிப்தோ சென் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தேசிய திரைப்பட விழாவின் நடுவர் குழு உறுப்பினர் சுதிப்தோ சென் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், IFFI 2022 ஜூரி தலைவர் நடாவ் லாபிட், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தைப் பற்றி நிறைவு விழா மேடையில் அவர் பேசியது முற்றிலும் அவருடைய தனிப்பட்ட கருத்து.

அதிகாரப்பூர்வ பத்திரிகையாளர் சந்திப்பின்போது, இத்திரைப்படத்தை விமர்சித்து, பிடித்திருக்கிறது அல்லது பிடிக்கவில்லை என நடுவர்கள் குழுவினரால் சுட்டி காட்டப்படவில்லை. ஒரு திரைப்படத்தின் தொழில்நுட்ப, அழகியல் தரம் மற்றும் சமூக-கலாச்சார பொருத்தம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு திரைப்படங்களை தேர்ந்தெடுப்பதற்காக நடுவர்களாக நாங்கள் நியமிக்கப்பட்டுள்ளோம்.

எந்தவொரு திரைப்படத்திலும் நாங்கள் எந்தவிதமான அரசியல் கருத்துக்களிலும் ஈடுபட மாட்டோம், அப்படி செய்யப்பட்டால், அது முற்றிலும் தனிப்பட்ட கருத்து. அதற்கும் தேர்வு குழுவிற்கும் எந்த தொடர்பும் இல்லை” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/QcwuplL
via IFTTT

Comments

Popular posts from this blog

‘யோகி பாபுக்காக ஒரு கதை எடுக்க வேண்டும் என்று ஆசை’ -‘பொம்மை நாயகி’ விழாவில் மாரி செல்வராஜ் பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகிபாபு நடித்துள்ள ‘பொம்மை நாயகி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் இன்று நடைபெற்றது. பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘பொம்மை நாயகி’. சிறுமி ஸ்ரீமதி, யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஷான். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள படத்தின் பாடல்களை ‘தெருக்குரல்’ அறிவு எழுதியிருக்கிறார். இந்த விழாவில் அறிமுக இயக்குநர் ஷான் பேசுகையில், “இந்தக் கதை எழுதி முடித்ததும் யாரிடமும் சொல்ல வில்லை. நீண்ட நாட்களாக இந்தக் கதையை வைத்து கொண்டே இருந்தேன். படம் பண்ணினால் நீளம் புரொடக்ஷனில் தான் பண்ண வேண்டும் என்று தீர்க்கமாக இருந்தேன். கதையைப் படித்து கதையில் இருந்த நம்பிக்கையால் இந்தப் படம் எடுக்க முடிந்தது. ‘பரியேறும் பெருமாள்’ படம் பார்த்து யோகி பாபு நடித்தால் எப்படி இருக்கும் என்ற நினைத்தேன். எதார்த்தமான மனிதன் சந்திக்கும் பிரச்சினைகளை எதிர்கொள்ளுவது தான் இந்த படம். எல்லோரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் இது” என்று தெரிவித்தார். இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், “இயக்குநர் இந்த கதையை தான் எடுப்பேன் என்று உறுதியாக இருந்து எடுத்து முடித்தவர். யார் இந்தக் கதையில் நடித்தால் சரி வரும் என்று தேர்வு செய்து பொருத்தமாக எடுத்துள்ளார். நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம் முக்கியமான நபர்கள் வெளி வந்துள்ளனர். ‘வாழை’ படம் முதன் முதலில் நான் எழுதிய கதை. அதை எப்போது எடுப்பேன் என்று எதிர்பார்த்து கொண்டு இருந்தேன். தற்போது அந்தப் படத்தை முடித்து விட்டேன். அடுத்து நான் நீலம் புரொடக்ஷனில் தான் படம் பண்ண போகிறேன். பிற்போக்குத்தனமான ஒரு படத்தை எடுக்க மாட்டேன் என்பது என் கொள்கை. நான் தப்பான படங்களை எடுக்க மாட்டேன். நிஜ கதைகளை உருவாக்கும் போதே இவர்கள் இந்த கதையை தயாரிப்பார்கள் என்ற நிச்சயம் உண்டானால் அது தான் தமிழ் சினிமாவின் வெற்றி. ‘பொம்மை நாயகி’ ஒரு பேரலையாய் அமையும். பெரிய இயக்குனர்கள் அனைவருக்கும் யோகி பாபுவிற்காக கதை எடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும், எனக்கும் அந்த ஆசை உள்ளது” என்று கூறினார். நடிகர் ஜி.எம். குமார் பேசுகையில், “இங்கே நான் வந்ததற்கு காரணம் கதை தான். யோகி பாபு உடன் என்னோட மூணாவது படம். ‘கர்ணன்’ படத்தில் மாரியிடம் யோகி பாபுவால் திட்டு வாங்கினேன். இயக்குநர் பா. ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’ மற்றும் ‘சார்பட்டா பரம்பரை’ படங்களை பார்த்து அசந்து போனேன்” என்று தெரிவித்தார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

நடிகர் மயில்சாமி உடலுக்கு பிரேத பரிசோதனை இல்லை... ஏன்? நடிகர் மயில்சாமிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். சென்னை சாலிகிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தவர் தமிழ் திரைப்பட காமெடி நடிகர் மயில்சாமி. தமிழ் திரைப்படங்களில் சிறந்த காமெடி நடிகராக வலம் வந்த மயில்சாமிக்கு இன்று காலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை அவரது உறவினர்கள் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மயில்சாமி வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மயில்சாமி இறந்த செய்தி கேட்டு அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த போரூர் போலீசார் உயிரிழந்த மயில்சாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மயில்சாமி உயிரிழப்புக்கு காரணம் மாரடைப்பா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரித்து வந்தனர். பின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் மயில்சாமி உடல் பிரேத பரிசோதனை செய்யவில்லை என சொல்லப்பட்டுள்ளது. அதன் பின்னணியாக, அவருக்கு மாரடைப்பு உறுதியானதை மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவர் ஏற்கனவே இதயம் சம்பந்தமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனது உறுதியானது. இறப்புக்கான காரணம் உறுதியானதால், அவரது உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை என்றும் இன்னும் சிறிது நேரத்தில் அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளன. நடிகர் மயில்சாமியின் உயிரிழப்பு தமிழ் திரை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

விஜய்.. கமல்ஹாசன் அடுத்தது?: முன்னணி நடிகர்களின் படங்களைக் கைப்பற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தினை ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. நடிகர் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ படங்களைத் தயாரிப்பதோடு முன்னணி நடிகர்களின் படங்களையும் கைப்பற்றி வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்’, பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’, ராஜமெளலியின் ( ‘ஆர்ஆர்ஆர்’ மூன்று இடங்களில் மட்டும்) உள்ளிட்டப் படங்களை கைப்பற்றி வெளியிட்டது. வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகும் விஜய்யின் ‘பீஸ்ட்’, ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படங்களின் தமிழக ரெட் ஜெயன்ட் மூவிஸ்தான் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் தமிழக உரிமையையும் கைப்பற்றியுள்ளதகாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவிருக்கிறார்கள். ‘விக்ரம்’ வரும் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகிறது. அன்றுதான் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்துவரும் ‘மாமன்னன்’ படத்தினை ரெட் ஜெயன்ட் தான் தயாரிக்கிறது. இதற்கு முன்னதாக, தமிழ் சினிமாவில் ஹாட்ரிக் வெற்றி கொடுத்த இயக்குநர்களில் லோகேஷ் கனகராஜும் ஒருவர். அவரின் ’மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் அடித்து வசூலைக் குவித்ததால் இயக்குநர் நான்காவதாக கமல்ஹாசனை இயக்கும் ‘விக்ரம்’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. கோரோனா சூழலிலும் மக்களை தியேட்டர் நோக்கி வரவைத்தது ‘மாஸ்டர்’. அதன் வெற்றிக்குப்பிறகு விஜய் சேதுபதி - அனிருத்துடன் மீண்டும் ’விக்ரம்’மில் கைக்கோர்த்துள்ளார் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் இப்படத்தில் ஃபகத் ஃபாசிலும் நடிப்பதால் மலையாள ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். காளிதாஸ் ஜெயராம், நரேன், ’பிக்பாஸ்’ ஷிவானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM