‘சந்திரமுகி 2’ படத்தில் கங்கனா ரனாவத்? - என்ன கதாபாத்திரம்?... வெளியான தகவல்! ‘சந்திரமுகி 2’ படத்தில் ஜோதிகா நடித்த கதாபாத்திரத்தில், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கவுள்ளதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களை மிகவும் கவர்ந்த ‘மணிச்சித்ரதாழ்’ திரைப்படத்தை, இயக்குநர் பி. வாசு தமிழில் ‘சந்திரமுகி’ என்றப் பெயரில் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர், வினீத், விஜயகுமார், ஷீலா, கே.ஆர். விஜயா, மாளவிகா ஆகியோர் நடித்திருந்தனர். கடந்த 2005-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்புப் பெற்று சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இதையடுத்து சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தின் சீக்குவல் உருவாகி வரும் நிலையில், ஜோதிகா நடித்த கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். வடிவேலு, ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க விறுவிறுப்பாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கங்கனா ரனாவத் டிசம்பர் மாதம் முதல் படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் சிறிய இடைவேளை எடுத்துக்கொள்ளும் கங்கனா, அதன்பிறகு மீண்டும் ஜனவரியில் படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் படப்பிடிப்பும் நிறைவடைய உள்ளதாக சொல்லப்படுகிறது. ‘சந்திரமுகி 2’ படத்திற்கு மரகதமணி இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

‘சந்திரமுகி 2’ படத்தில் ஜோதிகா நடித்த கதாபாத்திரத்தில், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கவுள்ளதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களை மிகவும் கவர்ந்த ‘மணிச்சித்ரதாழ்’ திரைப்படத்தை, இயக்குநர் பி. வாசு தமிழில் ‘சந்திரமுகி’ என்றப் பெயரில் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர், வினீத், விஜயகுமார், ஷீலா, கே.ஆர். விஜயா, மாளவிகா ஆகியோர் நடித்திருந்தனர். கடந்த 2005-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்புப் பெற்று சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.
இதையடுத்து சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தின் சீக்குவல் உருவாகி வரும் நிலையில், ஜோதிகா நடித்த கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். வடிவேலு, ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க விறுவிறுப்பாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கங்கனா ரனாவத் டிசம்பர் மாதம் முதல் படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் சிறிய இடைவேளை எடுத்துக்கொள்ளும் கங்கனா, அதன்பிறகு மீண்டும் ஜனவரியில் படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் படப்பிடிப்பும் நிறைவடைய உள்ளதாக சொல்லப்படுகிறது. ‘சந்திரமுகி 2’ படத்திற்கு மரகதமணி இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/CwXvth8
via IFTTT
Comments
Post a Comment