‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’: ரிலீஸில் துவங்கிய சர்ச்சை முதல் நடாவ் கருத்து வரை-என்னதான் பிரச்னை? இந்தியாவில் ஜம்மு - காஷ்மீர் நிலப்பகுதி என்றாலே காலங்காலமாக சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்ததில்லை. அதேபோல், அங்கு 1980 முதல் 1990-களில் நடந்ததாகக் கூறப்படும், காஷ்மீர் பண்டிட்கள் வெளியேற்றம் மற்றும் படுகொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் திட்டமிட்டப்படி வெளியாவதில் எழுந்த சட்டப்பூர்வ சிக்கல், இன்று இஸ்ரேல் நாட்டு தூதர் மன்னிப்பு கேட்கும் வரை சர்ச்சைகளாகவே சென்றுள்ளது. சொல்லப்போனால் ஒரு வருடத்திற்குள் பல்வேறு வகையான சர்ச்சைகளை இந்தப் படம் சந்தித்துள்ளது. இதுகுறித்து இங்குக் காணலாம். விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில், பிரபல பாலிவுட் நடிகர்களான அனுபவம் கெர், மிதுன் சக்ரவர்த்தி, பல்லவி ஜோஷி, தர்ஷன் குமார் ஆகியோர் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தேஜ் நாரயண் அபிஷேக் அகர்வால், விவேக் அக்னி ஹோத்ரி, அவரது மனைவி பல்லவி ஜோஷி ஆகியோர் தயாரித்திருந்த இந்தப் படத்தை ஜி ஸ்டூடியோஸ் வெளியிட்டு இருந்தது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, 340 கோடி ரூபாய் வசூலை அள்ளியது. இந்தப் படம் கடந்த வந்த பாதை குறித்துப் பார்க்கலாம். Movie #TheKashmirFiles is heart-wrenching narration of the pain, suffering, struggle, and trauma faced by Kashmiri Hindus in the 90s. This needs to be watched by maximum people, hence we have decided to make it a tax-free in the state of Madhya Pradesh. — Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) March 13, 2022 1. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘ஏ’ (18+) சான்றிதழ் வழங்கியிருந்தது. இதேபோல் ரத்தம் தெறிக்கும் வன்முறை சம்பவங்கள் இருப்பதாகக் கூறி, பிரிட்டன் (15+), ஆஸ்திரேலியா (18+), நியூசிலாந்து (18+) சான்றிதழ்கள் வழங்கின. 2. இந்தப் படத்தை சிங்கப்பூரில் வெளியிட அந்நாட்டு திரைப்பட தணிக்கை வாரிய அதிகாரிகள், சிங்கப்பூர் உள்துறை அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியப் பின்னர் தடை விதித்தனர். இஸ்லாமியர்கள் பற்றி ஒருதலைப்பட்சமாக காட்டப்பட்டிருப்பதாக கூறி இந்தப் படத்தை வெளியிடுவதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்திருந்தனர். 3. பட வெளியீட்டிற்கு முன்னதாக, ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் ட்ரெயிலரில் காஷ்மீரில் வாழ்ந்த இந்து பண்டிட்களை, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொலை செய்வதாக காட்சிகள் வெளியானதால் சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து, இந்தப் படத்திற்கு தடைக் கோரி உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரால் பொதுநல வழக்கு ஒன்று மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட நிலையில், அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 4. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் பிரிமீயர் ஷோவைப் பார்த்த மறைந்த இந்திய விமானப் படை அதிகாரி ரவி கண்ணாவின் மனைவி நிர்மல் கண்ணா, படக்குழுவிடம் தனது கணவரை உண்மைக்குப் புறம்பாக காட்டியுள்ளதாக குற்றஞ்சாட்டியிருந்தார். தனது கணவரின் தியாகத்தை தவறாக சித்தரித்து காட்டப்பட்டதை நீக்குமாறு அவரது மனைவி நிர்மல் கண்ணா வலியுறுத்தியும் படக்குழு செவிமடுக்காததால், ஜம்மு மாவட்ட நீதிமன்றத்தை அவர் நாடியிருந்தார். ஆனால், மறைந்த விமானப் படை அதிகாரி ரவி கண்ணாவின் காட்சிகளை காட்சிப்படுத்த மட்டும் தடை விதித்த நீதிமன்றம், படத்தை வெளியிட தடை விதிக்கவில்லை. இதனால் படம் திட்டமிட்டப்படி மார்ச் 11-ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 5. முதலில் இந்தப் படத்திற்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் தடை விதிக்கப்பட்ட நிலையில், பின்னர் காட்சிகள் எதுவும் நீக்கப்படாமல், அந்தத் தடை சில நாட்களிலேயே விலக்கிக் கொள்ளப்பட்டது. 6. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தைப் பார்த்த பிரதமர் மோடி, படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். மேலும் படத்தின் மீதான எதிர்மறை விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த அவர், உண்மையை அப்படியே கூறியிருப்பதாகவும் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் தெரிவித்திருந்தனர். 7. 90-களில் காஷ்மீரைச் சேர்ந்த இந்து மக்கள் எதிர்கொண்ட துயர சம்பவங்களை அப்படியே கண்முன் கொண்டு வந்துள்ளதாகக் கூறி, பாஜக ஆளும் மாநிலங்களான ஹரியானா, குஜராத், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, கோவா, திரிபுரா, உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பீகார், இமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்தப் படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. .@BJP4TamilNadu cordially invite’s all for the special screening of #KashmirFiles in Rohini Silver Screens, Chennai on 16th March at 5:30 pm This important movie on one of the dark time in our nations history deserves our attention! To reserve your seats: +91 96001 19674 pic.twitter.com/Q1fbeF9tyu — K.Annamalai (@annamalai_k) March 14, 2022 8. மேலும் பல பாஜக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாநில நிர்வாகிகள் படத்தைப் பார்க்க ரசிகர்களை வலியுறுத்தி வந்தனர். மத்தியப் பிரதேசத்தில் ஒருபடி மேலேபோய், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தைப் பார்க்க மாநில காவல்துறையினருக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அரசே உத்தரவிட்டது. 9. பாலிவுட்டில் இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றநிலையில், தென்னிந்தியாவில் கர்நாடகாவைத் தவிர மற்ற மாநிலங்களில் ரசிகர்களை பெரிதாக இந்தப் படம் கவரவில்லை. எனினும், மாநில தலைவர்கள் படத்தை பார்ப்பதற்கு சிறப்புக் காட்சிகளும் ஏற்பாடு செய்திருந்தனர். தமிழகத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சென்னை ரோகினி சில்வர் ஸ்கிரீன்ஸில் இந்தப் படம் திரையிடப்பட உள்ளதாக அறிவித்து ட்வீட் செய்திருந்தார். 10. தமிழக பா.ஜ.கவைச் சேர்ந்த ஹெச்.ராஜா, “‘Kashmir files’ என்கிற இந்திப் படம் பார்த்தேன். இது சினிமா அல்ல, ஆவணம், சரித்திரம் என்றே கூற வேண்டும். 1990-ல் ஃபரூக் அப்துல்லா தலைமையிலான ஆட்சியில் இந்துக்களுக்கு எதிரான கொலை வன்முறை, 5,00,000-க்கும் மேற்பட்ட இந்துக்கள் காஷ்மீரைவிட்டு விரட்டியடிக்கப்பட்டது ஆகியவற்றைத் தத்ரூபமாகக் காண முடிகிறது" எனக் கருத்து தெரிவித்திருந்தார். 11. பாலிவுட் சினிமா இதுவரை செய்த பாவங்கள் அனைத்தையும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் சுத்தம் செய்துள்ளதாக பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்திருந்தார். 12.‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தைப் பார்க்க மக்கள் அதிக அளவில் திரையரங்குகளுக்கு வருவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தெரிவித்திருந்தார். 13. இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் உங்களின் இதயத்தைக் கசக்கிப் பிழியும் என்றும், அதனால் காஷ்மீர் இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கும் வகையில், நீங்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். फिल्म 'द कश्मीर फाइल्स' देखने के लिए #MadhyaPradesh के पुलिसकर्मियों को अवकाश दिया जाएगा। पुलिसकर्मियों को अवकाश देने के लिए डीजीपी श्री सुधीर सक्सेना जी को निर्देश दिए हैं।#TheKashmirFiles @DGP_MP pic.twitter.com/q8UoAupyrv — Dr Narottam Mishra (@drnarottammisra) March 14, 2022 14. அதேநேரத்தில் கேரள காங்கிரஸ் கமிட்டி, ‘#Kashmir_Files Vs Truth’ எனும் தலைப்பில் ஒன்பது எதிர்க் கருத்துகளைத் தனது ட்விட்டரில் வெளியிட்டிருந்தது. குறிப்பாக 1990-களில் காஷ்மீர் இந்துக்கள் வெளியேற்றப்பட்டபோது, பாஜக ஆதரவு தந்த வி.பி. சிங் ஆட்சி மத்தியில் இருந்தது என்றும், அதுகுறித்து பாஜக எதுவும் ஆளும் அரசுக்கு தெரிவிக்கவில்லை என்றும் ட்வீட் செய்திருந்தது. இதற்கு இந்தப் படத்தில் ‘புஷ்கர் நாத்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்த அனுபம் கெர், கொஞ்சம் கூட யோசிக்காமல் அபத்தமான கருத்துக்களை கேரள காங்கிரஸ் கூறுகிறது என பதிலடி தந்திருந்தார். 15. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் எடுக்க முடியுமென்றால், ‘லக்கீம்பூர் ஃபைல்ஸ்’ படத்தையும் எடுக்க முடியும் என்று உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்திருந்தார். ஏனெனில், வேளாண் சீர்திருத்த சட்டத்துக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது பாஜக மத்திய இணை அமைச்சரின் மகன் கார் மோதியதில் 4 விவசாயிகள், ஒரு செய்தியாளர் கொல்லப்பட்டதை அவர் சுட்டிக்காட்டும் வகையில் அவ்வாறு பேசியிருந்தார். 16. இந்தப் படத்தில் அளவுக்கு அதிகமான பொய்கள் முன்வைக்கப்படுவதாக ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா குற்றஞ்சாட்டியிருந்தார். 17. எதிர்வரும் குஜராத், ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காகவே ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை பாஜக பயன்படுத்தி வருவதாக சிவசேனா கட்சியின் மூத்தத் தலைவரும், எம்.பியுமான சஞ்சய் ராவத் புகார் தெரிவித்திருந்தார். 18. இந்தப் படம் ஒரு திட்டமிட்ட பிரச்சாரத் திரைப்படம் என்று இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’வின் முன்னாள் தலைவர் ஏ.எஸ். துலாத் குற்றஞ்சாட்டியிருந்தார். After all the balancing & being neutral & good human being talks.... #SaiPallavi ended up comparing Ki11!ngs of innocent #KashmiriPandits with Ki11!ngs of cow smugglers. What an absolute ldlOT!!! pic.twitter.com/cx9d8jfTNF — Incognito (@Incognito_qfs) June 14, 2022 19.கர்நாடகா மாநிலத்தில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் ‘ஜேம்ஸ்’ திரைப்படம் ஓடும் திரையரங்குகளில் அந்தப் படத்தை நிறுத்திவிட்டு ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை திரையிடுமாறு பாஜகவினர் வற்புறுத்துவதாக அம்மாநில காங்கிரஜ் எதிர்கட்சித் தலைவர் சித்தராமையா விமர்சனம் செய்திருந்தார். 20. இந்தப் படத்திற்கு வரி விலக்கு கோரி, டெல்லி சட்டப்பேரவையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்ஜெட் கூட்டத் தொடரில் குறுக்கிட்டபோது, ‘அந்தப் படத்தை யூட்யூப்பில் போடுங்கள், அனைவரும் பார்க்க இலவசமாக கிடைக்கும்’ என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அவர் வீட்டு முன்பு போராட்டம் நடைபெற்றது. 21. காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் மீண்டும் நிகழ்வதற்கு ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படமே காரணம் என அம்மாநில முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக் கட்சித் தலைவருமான மெகபூபா முஃப்தி காட்டம் தெரிவித்திருந்தார். 22. #KashmirFilesMovie, #Islamophobia உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் இரண்டு தரப்பிலிருந்தும் ட்விட்டர் டிரெண்டிங் செய்யப்பட்டு வந்தன. 23. காஷ்மீரில் பண்டிட்டுகளின் படுகொலைக்கும், பசுவுக்காக மனிதர்கள் தாக்கப்படுவதற்கும், எந்த வித்தியாசமும் இல்லை என தென்னிந்திய நடிகை சாய் பல்லவி கூறியதற்கு, பஜ்ரங் தள் சார்பில் காவல்நிலையத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளிக்கப்பட்டது. இதேபோல், பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மாவும் இந்தப் படத்தை வமர்சித்திருந்தார். 24. கடைசியாக நேற்று கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் இந்தப் படம் வெறுப்புணர்வை தூண்டும் விதமாக தயாரிக்கப்பட்ட மோசமான திரைப்படம் என்று சர்வதேச திரைப்பட போட்டிக் குழுவின் தலைவரும், இஸ்ரேல் நாட்டின் இயக்குநருமான நடாவ் லாபிட் கருத்துத் தெரிவித்துள்ளார். 25. நடாவ் லாபிட்டின் கருத்துக்கு, இயக்குநர் விவேக் அக்னி ஹோத்ரி, அவரின் மனைவியும், நடிகையுமான பல்லவி ஜோஷி, நடிகர் அனுபவர் கெர் பதிலடி கொடுத்துள்ளனர். மேலும் நடாவ் லாபிட்டின் கருத்துக்கு, தேர்வுக் குழு விளக்கம் அளித்துள்ள நிலையில், இந்தியாவுக்கான இஸ்ரேல் நாட்டு தூதர் வருத்தம் தெரிவித்துள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

இந்தியாவில் ஜம்மு - காஷ்மீர் நிலப்பகுதி என்றாலே காலங்காலமாக சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்ததில்லை. அதேபோல், அங்கு 1980 முதல் 1990-களில் நடந்ததாகக் கூறப்படும், காஷ்மீர் பண்டிட்கள் வெளியேற்றம் மற்றும் படுகொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் திட்டமிட்டப்படி வெளியாவதில் எழுந்த சட்டப்பூர்வ சிக்கல், இன்று இஸ்ரேல் நாட்டு தூதர் மன்னிப்பு கேட்கும் வரை சர்ச்சைகளாகவே சென்றுள்ளது. சொல்லப்போனால் ஒரு வருடத்திற்குள் பல்வேறு வகையான சர்ச்சைகளை இந்தப் படம் சந்தித்துள்ளது. இதுகுறித்து இங்குக் காணலாம்.

விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில், பிரபல பாலிவுட் நடிகர்களான அனுபவம் கெர், மிதுன் சக்ரவர்த்தி, பல்லவி ஜோஷி, தர்ஷன் குமார் ஆகியோர் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தேஜ் நாரயண் அபிஷேக் அகர்வால், விவேக் அக்னி ஹோத்ரி, அவரது மனைவி பல்லவி ஜோஷி ஆகியோர் தயாரித்திருந்த இந்தப் படத்தை ஜி ஸ்டூடியோஸ் வெளியிட்டு இருந்தது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, 340 கோடி ரூபாய் வசூலை அள்ளியது. இந்தப் படம் கடந்த வந்த பாதை குறித்துப் பார்க்கலாம்.

1. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘ஏ’ (18+) சான்றிதழ் வழங்கியிருந்தது. இதேபோல் ரத்தம் தெறிக்கும் வன்முறை சம்பவங்கள் இருப்பதாகக் கூறி, பிரிட்டன் (15+), ஆஸ்திரேலியா (18+), நியூசிலாந்து (18+) சான்றிதழ்கள் வழங்கின.

2. இந்தப் படத்தை சிங்கப்பூரில் வெளியிட அந்நாட்டு திரைப்பட தணிக்கை வாரிய அதிகாரிகள், சிங்கப்பூர் உள்துறை அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியப் பின்னர் தடை விதித்தனர். இஸ்லாமியர்கள் பற்றி ஒருதலைப்பட்சமாக காட்டப்பட்டிருப்பதாக கூறி இந்தப் படத்தை வெளியிடுவதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்திருந்தனர்.

3. பட வெளியீட்டிற்கு முன்னதாக, ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் ட்ரெயிலரில் காஷ்மீரில் வாழ்ந்த இந்து பண்டிட்களை, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொலை செய்வதாக காட்சிகள் வெளியானதால் சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து, இந்தப் படத்திற்கு தடைக் கோரி உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரால் பொதுநல வழக்கு ஒன்று மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட நிலையில், அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

4. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் பிரிமீயர் ஷோவைப் பார்த்த மறைந்த இந்திய விமானப் படை அதிகாரி ரவி கண்ணாவின் மனைவி நிர்மல் கண்ணா, படக்குழுவிடம் தனது கணவரை உண்மைக்குப் புறம்பாக காட்டியுள்ளதாக குற்றஞ்சாட்டியிருந்தார். தனது கணவரின் தியாகத்தை தவறாக சித்தரித்து காட்டப்பட்டதை நீக்குமாறு அவரது மனைவி நிர்மல் கண்ணா வலியுறுத்தியும் படக்குழு செவிமடுக்காததால், ஜம்மு மாவட்ட நீதிமன்றத்தை அவர் நாடியிருந்தார். ஆனால், மறைந்த விமானப் படை அதிகாரி ரவி கண்ணாவின் காட்சிகளை காட்சிப்படுத்த மட்டும் தடை விதித்த நீதிமன்றம், படத்தை வெளியிட தடை விதிக்கவில்லை. இதனால் படம் திட்டமிட்டப்படி மார்ச் 11-ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

5. முதலில் இந்தப் படத்திற்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் தடை விதிக்கப்பட்ட நிலையில், பின்னர் காட்சிகள் எதுவும் நீக்கப்படாமல், அந்தத் தடை சில நாட்களிலேயே விலக்கிக் கொள்ளப்பட்டது.

6. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தைப் பார்த்த பிரதமர் மோடி, படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். மேலும் படத்தின் மீதான எதிர்மறை விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த அவர், உண்மையை அப்படியே கூறியிருப்பதாகவும் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் தெரிவித்திருந்தனர்.

7. 90-களில் காஷ்மீரைச் சேர்ந்த இந்து மக்கள் எதிர்கொண்ட துயர சம்பவங்களை அப்படியே கண்முன் கொண்டு வந்துள்ளதாகக் கூறி, பாஜக ஆளும் மாநிலங்களான ஹரியானா, குஜராத், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, கோவா, திரிபுரா, உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பீகார், இமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்தப் படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது.

8. மேலும் பல பாஜக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாநில நிர்வாகிகள் படத்தைப் பார்க்க ரசிகர்களை வலியுறுத்தி வந்தனர். மத்தியப் பிரதேசத்தில் ஒருபடி மேலேபோய், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தைப் பார்க்க மாநில காவல்துறையினருக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அரசே உத்தரவிட்டது.

9. பாலிவுட்டில் இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றநிலையில், தென்னிந்தியாவில் கர்நாடகாவைத் தவிர மற்ற மாநிலங்களில் ரசிகர்களை பெரிதாக இந்தப் படம் கவரவில்லை. எனினும், மாநில தலைவர்கள் படத்தை பார்ப்பதற்கு சிறப்புக் காட்சிகளும் ஏற்பாடு செய்திருந்தனர். தமிழகத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சென்னை ரோகினி சில்வர் ஸ்கிரீன்ஸில் இந்தப் படம் திரையிடப்பட உள்ளதாக அறிவித்து ட்வீட் செய்திருந்தார்.

10. தமிழக பா.ஜ.கவைச் சேர்ந்த ஹெச்.ராஜா, “‘Kashmir files’ என்கிற இந்திப் படம் பார்த்தேன். இது சினிமா அல்ல, ஆவணம், சரித்திரம் என்றே கூற வேண்டும். 1990-ல் ஃபரூக் அப்துல்லா தலைமையிலான ஆட்சியில் இந்துக்களுக்கு எதிரான கொலை வன்முறை, 5,00,000-க்கும் மேற்பட்ட இந்துக்கள் காஷ்மீரைவிட்டு விரட்டியடிக்கப்பட்டது ஆகியவற்றைத் தத்ரூபமாகக் காண முடிகிறது" எனக் கருத்து தெரிவித்திருந்தார்.

11. பாலிவுட் சினிமா இதுவரை செய்த பாவங்கள் அனைத்தையும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் சுத்தம் செய்துள்ளதாக பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்திருந்தார்.

12.‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தைப் பார்க்க மக்கள் அதிக அளவில் திரையரங்குகளுக்கு வருவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தெரிவித்திருந்தார்.

13. இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் உங்களின் இதயத்தைக் கசக்கிப் பிழியும் என்றும், அதனால் காஷ்மீர் இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கும் வகையில், நீங்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

14. அதேநேரத்தில் கேரள காங்கிரஸ் கமிட்டி, ‘#Kashmir_Files Vs Truth’ எனும் தலைப்பில் ஒன்பது எதிர்க் கருத்துகளைத் தனது ட்விட்டரில் வெளியிட்டிருந்தது. குறிப்பாக 1990-களில் காஷ்மீர் இந்துக்கள் வெளியேற்றப்பட்டபோது, பாஜக ஆதரவு தந்த வி.பி. சிங் ஆட்சி மத்தியில் இருந்தது என்றும், அதுகுறித்து பாஜக எதுவும் ஆளும் அரசுக்கு தெரிவிக்கவில்லை என்றும் ட்வீட் செய்திருந்தது. இதற்கு இந்தப் படத்தில் ‘புஷ்கர் நாத்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்த அனுபம் கெர், கொஞ்சம் கூட யோசிக்காமல் அபத்தமான கருத்துக்களை கேரள காங்கிரஸ் கூறுகிறது என பதிலடி தந்திருந்தார்.

15. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் எடுக்க முடியுமென்றால், ‘லக்கீம்பூர் ஃபைல்ஸ்’ படத்தையும் எடுக்க முடியும் என்று உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்திருந்தார். ஏனெனில், வேளாண் சீர்திருத்த சட்டத்துக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது பாஜக மத்திய இணை அமைச்சரின் மகன் கார் மோதியதில் 4 விவசாயிகள், ஒரு செய்தியாளர் கொல்லப்பட்டதை அவர் சுட்டிக்காட்டும் வகையில் அவ்வாறு பேசியிருந்தார்.

16. இந்தப் படத்தில் அளவுக்கு அதிகமான பொய்கள் முன்வைக்கப்படுவதாக ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா குற்றஞ்சாட்டியிருந்தார்.

17. எதிர்வரும் குஜராத், ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காகவே ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை பாஜக பயன்படுத்தி வருவதாக சிவசேனா கட்சியின் மூத்தத் தலைவரும், எம்.பியுமான சஞ்சய் ராவத் புகார் தெரிவித்திருந்தார்.

18. இந்தப் படம் ஒரு திட்டமிட்ட பிரச்சாரத் திரைப்படம் என்று இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’வின் முன்னாள் தலைவர் ஏ.எஸ். துலாத் குற்றஞ்சாட்டியிருந்தார்.

19.கர்நாடகா மாநிலத்தில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் ‘ஜேம்ஸ்’ திரைப்படம் ஓடும் திரையரங்குகளில் அந்தப் படத்தை நிறுத்திவிட்டு ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை திரையிடுமாறு பாஜகவினர் வற்புறுத்துவதாக அம்மாநில காங்கிரஜ் எதிர்கட்சித் தலைவர் சித்தராமையா விமர்சனம் செய்திருந்தார்.

20. இந்தப் படத்திற்கு வரி விலக்கு கோரி, டெல்லி சட்டப்பேரவையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்ஜெட் கூட்டத் தொடரில் குறுக்கிட்டபோது, ‘அந்தப் படத்தை யூட்யூப்பில் போடுங்கள், அனைவரும் பார்க்க இலவசமாக கிடைக்கும்’ என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அவர் வீட்டு முன்பு போராட்டம் நடைபெற்றது.

image

21. காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் மீண்டும் நிகழ்வதற்கு ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படமே காரணம் என அம்மாநில முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக் கட்சித் தலைவருமான மெகபூபா முஃப்தி காட்டம் தெரிவித்திருந்தார்.

22. #KashmirFilesMovie, #Islamophobia உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் இரண்டு தரப்பிலிருந்தும் ட்விட்டர் டிரெண்டிங் செய்யப்பட்டு வந்தன.

23. காஷ்மீரில் பண்டிட்டுகளின் படுகொலைக்கும், பசுவுக்காக மனிதர்கள் தாக்கப்படுவதற்கும், எந்த வித்தியாசமும் இல்லை என தென்னிந்திய நடிகை சாய் பல்லவி கூறியதற்கு, பஜ்ரங் தள் சார்பில் காவல்நிலையத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளிக்கப்பட்டது. இதேபோல், பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மாவும் இந்தப் படத்தை வமர்சித்திருந்தார்.

24. கடைசியாக நேற்று கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் இந்தப் படம் வெறுப்புணர்வை தூண்டும் விதமாக தயாரிக்கப்பட்ட மோசமான திரைப்படம் என்று சர்வதேச திரைப்பட போட்டிக் குழுவின் தலைவரும், இஸ்ரேல் நாட்டின் இயக்குநருமான நடாவ் லாபிட் கருத்துத் தெரிவித்துள்ளார்.

25. நடாவ் லாபிட்டின் கருத்துக்கு, இயக்குநர் விவேக் அக்னி ஹோத்ரி, அவரின் மனைவியும், நடிகையுமான பல்லவி ஜோஷி, நடிகர் அனுபவர் கெர் பதிலடி கொடுத்துள்ளனர். மேலும் நடாவ் லாபிட்டின் கருத்துக்கு, தேர்வுக் குழு விளக்கம் அளித்துள்ள நிலையில், இந்தியாவுக்கான இஸ்ரேல் நாட்டு தூதர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/YGegXs6
via IFTTT

Comments

Popular posts from this blog

‘யோகி பாபுக்காக ஒரு கதை எடுக்க வேண்டும் என்று ஆசை’ -‘பொம்மை நாயகி’ விழாவில் மாரி செல்வராஜ் பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகிபாபு நடித்துள்ள ‘பொம்மை நாயகி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் இன்று நடைபெற்றது. பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யாழி ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘பொம்மை நாயகி’. சிறுமி ஸ்ரீமதி, யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஷான். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள படத்தின் பாடல்களை ‘தெருக்குரல்’ அறிவு எழுதியிருக்கிறார். இந்த விழாவில் அறிமுக இயக்குநர் ஷான் பேசுகையில், “இந்தக் கதை எழுதி முடித்ததும் யாரிடமும் சொல்ல வில்லை. நீண்ட நாட்களாக இந்தக் கதையை வைத்து கொண்டே இருந்தேன். படம் பண்ணினால் நீளம் புரொடக்ஷனில் தான் பண்ண வேண்டும் என்று தீர்க்கமாக இருந்தேன். கதையைப் படித்து கதையில் இருந்த நம்பிக்கையால் இந்தப் படம் எடுக்க முடிந்தது. ‘பரியேறும் பெருமாள்’ படம் பார்த்து யோகி பாபு நடித்தால் எப்படி இருக்கும் என்ற நினைத்தேன். எதார்த்தமான மனிதன் சந்திக்கும் பிரச்சினைகளை எதிர்கொள்ளுவது தான் இந்த படம். எல்லோரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் இது” என்று தெரிவித்தார். இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், “இயக்குநர் இந்த கதையை தான் எடுப்பேன் என்று உறுதியாக இருந்து எடுத்து முடித்தவர். யார் இந்தக் கதையில் நடித்தால் சரி வரும் என்று தேர்வு செய்து பொருத்தமாக எடுத்துள்ளார். நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம் முக்கியமான நபர்கள் வெளி வந்துள்ளனர். ‘வாழை’ படம் முதன் முதலில் நான் எழுதிய கதை. அதை எப்போது எடுப்பேன் என்று எதிர்பார்த்து கொண்டு இருந்தேன். தற்போது அந்தப் படத்தை முடித்து விட்டேன். அடுத்து நான் நீலம் புரொடக்ஷனில் தான் படம் பண்ண போகிறேன். பிற்போக்குத்தனமான ஒரு படத்தை எடுக்க மாட்டேன் என்பது என் கொள்கை. நான் தப்பான படங்களை எடுக்க மாட்டேன். நிஜ கதைகளை உருவாக்கும் போதே இவர்கள் இந்த கதையை தயாரிப்பார்கள் என்ற நிச்சயம் உண்டானால் அது தான் தமிழ் சினிமாவின் வெற்றி. ‘பொம்மை நாயகி’ ஒரு பேரலையாய் அமையும். பெரிய இயக்குனர்கள் அனைவருக்கும் யோகி பாபுவிற்காக கதை எடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும், எனக்கும் அந்த ஆசை உள்ளது” என்று கூறினார். நடிகர் ஜி.எம். குமார் பேசுகையில், “இங்கே நான் வந்ததற்கு காரணம் கதை தான். யோகி பாபு உடன் என்னோட மூணாவது படம். ‘கர்ணன்’ படத்தில் மாரியிடம் யோகி பாபுவால் திட்டு வாங்கினேன். இயக்குநர் பா. ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’ மற்றும் ‘சார்பட்டா பரம்பரை’ படங்களை பார்த்து அசந்து போனேன்” என்று தெரிவித்தார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

நடிகர் மயில்சாமி உடலுக்கு பிரேத பரிசோதனை இல்லை... ஏன்? நடிகர் மயில்சாமிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். சென்னை சாலிகிராமத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தவர் தமிழ் திரைப்பட காமெடி நடிகர் மயில்சாமி. தமிழ் திரைப்படங்களில் சிறந்த காமெடி நடிகராக வலம் வந்த மயில்சாமிக்கு இன்று காலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை அவரது உறவினர்கள் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மயில்சாமி வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மயில்சாமி இறந்த செய்தி கேட்டு அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த போரூர் போலீசார் உயிரிழந்த மயில்சாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மயில்சாமி உயிரிழப்புக்கு காரணம் மாரடைப்பா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரித்து வந்தனர். பின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் மயில்சாமி உடல் பிரேத பரிசோதனை செய்யவில்லை என சொல்லப்பட்டுள்ளது. அதன் பின்னணியாக, அவருக்கு மாரடைப்பு உறுதியானதை மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவர் ஏற்கனவே இதயம் சம்பந்தமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனது உறுதியானது. இறப்புக்கான காரணம் உறுதியானதால், அவரது உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை என்றும் இன்னும் சிறிது நேரத்தில் அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளன. நடிகர் மயில்சாமியின் உயிரிழப்பு தமிழ் திரை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

விஜய்.. கமல்ஹாசன் அடுத்தது?: முன்னணி நடிகர்களின் படங்களைக் கைப்பற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தினை ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. நடிகர் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ படங்களைத் தயாரிப்பதோடு முன்னணி நடிகர்களின் படங்களையும் கைப்பற்றி வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்’, பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’, ராஜமெளலியின் ( ‘ஆர்ஆர்ஆர்’ மூன்று இடங்களில் மட்டும்) உள்ளிட்டப் படங்களை கைப்பற்றி வெளியிட்டது. வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகும் விஜய்யின் ‘பீஸ்ட்’, ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படங்களின் தமிழக ரெட் ஜெயன்ட் மூவிஸ்தான் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் தமிழக உரிமையையும் கைப்பற்றியுள்ளதகாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவிருக்கிறார்கள். ‘விக்ரம்’ வரும் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகிறது. அன்றுதான் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்துவரும் ‘மாமன்னன்’ படத்தினை ரெட் ஜெயன்ட் தான் தயாரிக்கிறது. இதற்கு முன்னதாக, தமிழ் சினிமாவில் ஹாட்ரிக் வெற்றி கொடுத்த இயக்குநர்களில் லோகேஷ் கனகராஜும் ஒருவர். அவரின் ’மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் அடித்து வசூலைக் குவித்ததால் இயக்குநர் நான்காவதாக கமல்ஹாசனை இயக்கும் ‘விக்ரம்’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. கோரோனா சூழலிலும் மக்களை தியேட்டர் நோக்கி வரவைத்தது ‘மாஸ்டர்’. அதன் வெற்றிக்குப்பிறகு விஜய் சேதுபதி - அனிருத்துடன் மீண்டும் ’விக்ரம்’மில் கைக்கோர்த்துள்ளார் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் இப்படத்தில் ஃபகத் ஃபாசிலும் நடிப்பதால் மலையாள ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். காளிதாஸ் ஜெயராம், நரேன், ’பிக்பாஸ்’ ஷிவானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM